Wednesday, March 01, 2006

136. ரத்தத்தின் ரத்தங்களுக்கு….

இதுவரை நீ யாரோ நான் யாரோ என்றிருந்தவர் எல்லாம் இன்று இப்போது உன்னை “உடன் பிறப்பே’ என்றழைக்கும் காரணம் தம்பிகாள் உங்கள் அனனவருக்குமே புரிந்திருக்குமே.

ஆம் தம்பி, இன்று உன் தயவு வேண்டியிருப்பதால் ஓடோடியும் வருகின்றனர். உன்னை சிங்கம் என்றும், சிறுத்தை என்றும் அழைக்கலாம் அவர்கள். உன்னை அப்படி நான் விலங்குகளோடு பொருத்துவேனோ? இல்லை தம்பி, இல்லை.



உனக்குத் தெரியாதா, பசப்பு வார்த்தைகள் பேசி, சிறு பிள்ளைக்கு நிலா காட்டுவது போல (எல்லாம் இந்த நிலாவால் வந்த வினைதான் )உனக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி உன்னைக் கானகத்தே இட்டுச் சென்று, உன் கையிலுள்ள ‘ஓட்டை’த் தட்டிப் பறிக்கப் பார்க்கும் தருக்கர் கூட்டம் உன்னைச் சுற்றியுள்ளதைப் புரிந்து கொண்டாயா? உன்னைத் ‘தம்பி’ என்றழைக்கும் தகுதி மட்டுமா எனக்கு, நாம் இந்நாள்வரை ஒன்றாய் கண்ட போர்கள் எத்தனை; நாம் வெட்டிச் சாய்த்த பதிவுகள் எத்தனை - எண்ணிப் பாரடா, என் தம்பி. இனியும் நம் கண்முன்னே விரிந்து கிடக்கும் இடுகைகளில் நாம் காண வேண்டிய சமர்கள் எத்தனை எத்தனை - எண்ணிக்கையிலடங்குமோ !



ஆசை வார்த்தைகளில் மயங்குபவன் இல்லை நீ. எனக்குத் தெரியும் அது. அதிரடி சலுகைகள் உன்னைச் சறுக்கச் செய்யாது. எனக்குத் தெரியும் அது. ஆயினும் தம்பி, ஒன்று சொல்வேன் உனக்கு…உன்மத்தர்கள், உண்மையைக் குழிதோண்டி புதைப்பவர்கள், வெறும் வார்த்தை ஜாலங்கள் காண்பிப்பவர்களைப் புரிந்து கொள்.



இப்போது நமக்குத் தேவை வெற்றி. அது உன் கையில். அண்ணன் நானிருக்க வேறெங்கு போட்டிடுவாய் அதை நீ.



தெரிந்திருந்தும் ஏனடா அண்ணன் கேட்கிறானே என்றுதானே யோசிக்கிறாய். நம் தமிழர் மரபுதானடா தம்பி அது. நனி நாகரீகத்தை இந்த உலகுக்குத் தந்த நம் தமிழ்த்தாய் கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்திடலாமோ - அந்த பண்பை, மரபைக் காப்பாற்றவே இந்த வேண்டுகோள்.



முரசொலி கேட்கிறதா தம்பி…கேள்..நன்றாகக் கேள்…உற்றுக் கேள் …இதோ அங்கே..http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html#comments விரைந்து வந்துவிடு அங்கே; போட்டுவிடு உடனே உன் ஓட்டை. (இங்கே ஏதாவது ஒரு திருக்குறளைப் போட்டுக் கொள், தம்பி!)







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 01 2006 01:05 am | Uncategorized | | edit this
20 Responses
selvan Says:
March 1st, 2006 at 1:12 am e
பார்ட்னர்,,

இதோ பொருத்தமான திருக்குறள்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

உங்கள் ரசிகர் படை மடை திறந்த வெள்ளம் போல் கிளம்பினால் அதை தடுப்பவர் யார்?வெற்றியை குவிக்க தம்பிமார் படை இருக்கிறது.தம்பி உடையான் படைக்கஞ்சான்.

கிளம்பட்டும் நமது மறவர் படை.தோள் தட்டி.இப்படை தோர்கின் எப்படை வெல்லும்?

குமரன் Says:
March 1st, 2006 at 1:16 am e
அருமையான பதிவு தருமி ஐயா…..

Sam Says:
March 1st, 2006 at 1:31 am e
தருமி அவர்களே
நீங்க்ள் என்னை கண்டு கொள்ளவில்லை என்றாலும், நான், என் வாக்கைப் உங்களுக்கும்
செல்வனுக்கும் பதிவு செய்து விட்டேன்.
சாம்

daya Says:
March 1st, 2006 at 3:34 am e
இது என்ன விதமான போட்டின்னு இன்னும் சரியாக தெரியவில்லை. செல்வன் கேட்டுகொண்டதற்காகவும் எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிகை என்பதாலும் நிலாவின் பதிவில் மல்லிகை சின்னத்தில் குத்தியிருக்கிறேன்.

கவலைப்படாதீர்கள் தருமி! அந்த ‘நிலா’வையே சூடியுள்ளவன் வரம் தருவான்.

ஒரு விஷயம். ரத்தத்தின் ரத்தங்களுக்கான கடிதமும் உடன்பிறப்புக்கா எழுதிய மாதிரி இருக்கிறதே. குட்டி கதை சொல்லியிருக்க வேண்டாமோ?

சந்தோஷ் Says:
March 1st, 2006 at 3:57 am e
தருமி,
கலக்கல் கடிதம் போங்க. ஆனா Marketingல குமரன் முந்திட்டாரு. இது இத்தோட முடியுமா இல்ல சோடா பாட்டில், ஆசீட் வீச்சு, ஆட்டோ, சுமோ, அடியாள் அப்படின்னு போகுமா? ஏதோ பாத்து செய்யுங்க.

சந்தோஷத்துடன்
சந்தோஷ்.

நந்தன் Says:
March 1st, 2006 at 4:33 am e
போட்டேனுங்க, அப்புறம் தான் பார்தேன், தேர்தலே முடிஞ்தாம்லே

சிங். Says:
March 1st, 2006 at 4:52 am e
தருமி அய்யா வணக்கம் !. மன்னிக்க வேண்டுகிறேன். காலம் தாழ்ந்து தொகுதி பக்கம் வந்ததால் என்னுடைய ஓட்டும் செல்லா ஓட்டாகிவிட்டதே!
வருத்ததுடன்
சிங்.செயகுமார்

anbuanbu Says:
March 1st, 2006 at 5:31 am e
யப்பா
என்ன கலக்கல் கலக்கறாங்க
நிலா நல்லா இருங்க
இத்தனை பேர கெளப்பியிருக்கீங்க
நிஜ தேர்தல் தோத்தது போங்க

DRaj Says:
March 1st, 2006 at 6:29 am e
தங்கைகள் ஓட்டு உங்களுக்கு வேண்டாமா???

ஜோ Says:
March 1st, 2006 at 8:22 am e
அண்ணா,
தேர்தல் பிரச்சாரத்தை காலம் கடந்து தொடங்கிய உங்களைச் சொல்லுவதா?அல்லது தேர்தல் களத்தில் மின்னல் வேகத்தில் திட்டமிட்டு சுழன்ற நண்பர் குமரனைச் சொல்லுவதா?இம்முறை ஏற்கனவே குமரன் என் ஓட்டை தட்டிக்கொண்டு சென்று விட்டார்.ஆனால் இதயத்தில் உங்களுக்குள்ள இடம் பத்திரமாக இருக்கிறது.

Mathy Kandasamy Says:
March 1st, 2006 at 8:50 am e
//தங்கைகள் ஓட்டு உங்களுக்கு வேண்டாமா???//

//
தேர்தல் பிரச்சாரத்தை காலம் கடந்து தொடங்கிய உங்களைச் சொல்லுவதா?அல்லது தேர்தல் களத்தில் மின்னல் வேகத்தில் திட்டமிட்டு சுழன்ற நண்பர் குமரனைச் சொல்லுவதா?இம்முறை ஏற்கனவே குமரன் என் ஓட்டை தட்டிக்கொண்டு சென்று விட்டார்.//



//ஆனால் இதயத்தில் உங்களுக்குள்ள இடம் பத்திரமாக இருக்கிறது. //



-Mathy

selvan Says:
March 1st, 2006 at 8:51 am e
அன்பு ஜோ

எல்லாம் நேரம் செய்த பிழை.போட்டி அறிவிக்கப்பட்டபோது அமெரிக்க நேரம் இரவு.நான் கம்ப்யூட்டரை திறந்தபோது மணி காலை 10.போட்டி முடிய 4 மணிநேரமே இருந்தது.நடுவே ஆபீஸ் வேலை வேறு.

எப்படியோ 8 பேர் எங்களுக்கு ஓட்டு போட்டார்கள்.அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி

pot'tea"kadai Says:
March 1st, 2006 at 9:00 am e
Once in a blue moon…once in a life time…
i tried to cast my vote. But i’ve been denied entry, ‘cos the time was up.
I call up the networking tigers(mohandoss - take it easy) to hack & takeover nila’s blog …

suresh - penathal Says:
March 1st, 2006 at 9:08 am e
தருமி,

உங்கள் பதிவு கொஞ்சம் லேட். இரண்டு பிரசாரப்பதிவுகளும் ஒரே நேரத்தில் வந்திருந்தால் இதற்குத்தான் என் ஓட்டை இட்டிருப்பென். ஆனால் இலவசம் முந்திக்கொண்டு, உங்கள் அணிக்கு என்றும் நீங்கா இதய இடத்தை (மட்டுமே) விட்டுச்சென்றுவிட்டதே.. அய்யகோ!

தருமி Says:
March 1st, 2006 at 9:08 am e
எல்லாம் நேரம் செய்த பிழை. - செல்வன்
“காலம் செய்த கோலமடி
‘நிலா’ செய்த பாவமடி”

வருத்தத்துடன் நண்பர் Says:
March 1st, 2006 at 11:00 am e
தருமி சார் நீங்ககூட இதுமாதிரி வேலையத்த கிம்மிக் வோட்டிங் கேம்ல ஈடுபடணுமா?

தருமி Says:
March 1st, 2006 at 1:30 pm e
வருத்தத்துடன் நண்பருக்கு,
உங்களுக்கு மட்டும் உடனே பதில்.
உங்க பின்னூட்டத்தில ஸ்மைலி போடறத வச்சு நீங்க ஒரு ஸ்போர்ட்டிவான ஆளுன்னு தெரியுது. இது ஒரு விளையாட்டுதானே. பாருங்க, எனக்கு செல்வனை அதிகமா முந்தி தெரியாது. இதே மாதிரி கொத்ஸின் sense of humour, gaming spirit இதெல்லாமே புதுசுதான். இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லையே?
‘நீங்க கூட’ என்பது என் வயதை வைத்துக் கேட்கப்பட்டது என்றால் என் பதில்: வயசென்ன இதில். இங்கு உடம்பா ஓடி உழைக்கிறது; மனசுதானே.அதையாவது முடிந்தவரை இளமையாக வைத்திருப்போமே.

Chandravathanaa Says:
March 1st, 2006 at 2:05 pm e
தருமி
உங்களுக்கு நான் போட்ட வாக்கு ஒரு சதப் பிரயோசனமில்லாமல் போய் விட்டது. என்ன செய்ய? நான் உங்கள் மெயிலைப் பார்த்த கையோடு போட்டேன். அதற்கு முன்னரே நிலா வாக்குச் சாவடியை மூடி விட்டார் என்பது தெரியாமல்.

என்றாலும் பரவாயில்லை. ஏதாவது எலக்சனில் நின்று பாருங்கள். வீடு வீடாய் போய் வேட்டி சட்டை கொடுக்கத் தேவையில்லை. இப்படி மின்னஞ்சல் வழியாவே வென்று விடுவீர்கள்.

மணியன் Says:
March 1st, 2006 at 2:06 pm e
ஐயா, தேர்தல் கமிஷனிடம் வாக்களிக்கும் நேரம் சரியில்லையென்று மனு கொடுங்கள். என்னைப் போன்ற நிறைய பேர் வாக்குசாவடியிலிருந்து ஒட்டு போடமுடியாமல் திரும்பியிருக்கிறார்கள்

Nila Says:
March 1st, 2006 at 2:25 pm e
//இது ஒரு விளையாட்டுதானே. பாருங்க, எனக்கு செல்வனை அதிகமா முந்தி தெரியாது. இதே மாதிரி கொத்ஸின் sense of humour, gaming spirit இதெல்லாமே புதுசுதான். இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லையே?
‘நீங்க கூட’ என்பது என் வயதை வைத்துக் கேட்கப்பட்டது என்றால் என் பதில்: வயசென்ன இதில். இங்கு உடம்பா ஓடி உழைக்கிறது; மனசுதானே.அதையாவது முடிந்தவரை இளமையாக வைத்திருப்போமே. //

தருமி
நச்சுன்னு அடிச்சீங்க. இதையேதான் நானும் மனசில நெனச்சுக்கிட்டிருந்தேன். இந்த விளையாட்டை விளையாட்டதான் தொடங்கினேன். ஆனா போட்டியாளர்களால இது ரொம்ப நல்லா வந்துச்சி. இதுக்கு ஒரு தனி பதிவு போடறேன்

உங்க பதிவு தூள். நல்ல கடிதம். நேத்து போட்ருந்தீங்கன்னா என் ஓட்டு உங்களுக்குத்தான். கொஞ்சம் லேட்டா போச்சு:-)

No comments:

Post a Comment