Thursday, July 02, 2009

320. ஒரு சின்ன அச்சம்



ஒரு வழியாக எங்கள் ஊரில் (மதுரை) பல ஆண்டுகளாகக் கட்டுமானமின்றி இருந்த தொடர்வண்டிப் பாதைக்கு மேலான சாலைப் பாலம் ஒன்று இப்போது தீவிரக் கட்டுமானத்தில் உள்ளது; மகிழ்ச்சிதான். சீக்கிரமாக இந்த செல்லூர்ப் பாலம் முடிந்தால் என்னைப் போல் நித்தமும் இருமுறையோ நான்கு முறையோ இந்தப் பாலத்தைக் கடக்கும் என் போன்றோருக்கு நிம்மதிதான்.

வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆற்றின் ஓரத்தில் சாலை ஓரத்தில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று தோண்டி வேலை நடந்து வருகிறது. அதை வேடிக்கைப் பார்க்கவே முதலில் சில நாட்களாகப் பெருங்கூட்டம் கூடி இருந்தது. நான் சிகப்புக் கோடிட்டிருக்கும் இடத்தில் ஒரு வெடிப்பு கூட உள்ளது.

அதோடு சாலையில் மேல் பகுதியில் எந்தவித தடுப்போ, எச்சரிக்கைகளோ இல்லாமல் "பா" வென்று சாலை இருக்கிறது. நான் மஞ்சள் வண்ணத்தில் வட்டமிட்டுள்ள இடம் எந்த வித பாதுகாப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் திறந்த சாலையாகவே உள்ளது. அதைத் தாண்டும்போது சின்ன அச்சம்தான். அதில் ஏதேனும் தற்காப்பு ஏற்பாடுகள் இருந்தாலே நல்லது. ஆனால் வேலை நடத்துவோருக்கோ, காவல் துறைக்கோ, மாநகராட்சிக்கோ அது தோன்றாதது கொஞ்சம் வேதனைதான்.

என்னால் முடிந்த அளவு இரு முறை இதற்காக முயற்சித்தேன். இதுவரை பயனேதுமில்லை. யாராவது கண் திறந்தால் நல்லது ....



10 comments:

சுந்தர் said...

சீக்கிரமா கண்ணை தொறங்கப்பா !

வால்பையன் said...

அஞ்சாநெஞ்சம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டார்!

ஒரே ஒரு பெட்டி மட்டும் வீட்டுக்கு அனுப்பி வையுங்க!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரிதான், தருமி அய்யா வீட்டுக்கு ஆட்டோ வரப் போவுது .

வடுவூர் குமார் said...

இதைப் பார்த்ததும் சமீபத்தில் சீனாவில் ஒரு கட்டிடம் அப்படியே சீட்டு கட்டு மாதிரி விழுந்ததை பார்த்து ஞாபகம் வந்தது.படம் என்னிடம் இருக்கு ஆனா எழுத தான் நேரம் இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட பகுதி மழை பெய்தாலோ அல்லது சாலையில் அதிக போக்குவரத்து ஏற்பட்டாலோ சரியும் ஆபாயம் அதிகம்.கூடிய விரைவில் ஏதாவது செய்தால் நல்லது தான்.
சமீபத்தில் மதுரை வந்த போது உங்கள் ஞாபகம் இருந்தது ஆனால் கால நேரம் சரியாக அமையவில்லை.மதுரை படங்கள் கூடிய விரைவில் போடுகிறேன்.

வடுவூர் குமார் said...

சின்ன அச்சம் அல்ல “பெரிய அச்சம்” தான்.
கொடைக்கானல் பயங்கரம் என்று ஒரு பதிவு போட்டு அந்த நகராட்சிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் பதில் வந்தது “அது” அவர்கள் நகராட்சியில் இல்லை என்று. :-)

வடுவூர் குமார் said...

மதுரையில் முதல் முறையாக “கல்யாணத்துக்கு” போஸ்டர் பார்த்ததும் அசந்திட்டேன்.
உங்கள் படத்தில் அதுவும் உள்ளதை பார்த்ததும் ஞாபகம் வந்தது.

Unknown said...

கண்கெட்டபிற‌கு சூரிய நமஸ்காரம் என்பது நமது நிர்வாகத்தின் எழுதபாடத சட்டம் ஏதாவது நடந்தால்தான்,பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்வார்கள்

பீர் | Peer said...

நானும் அவ்வப்போது நினைப்பதுண்டு், ஏன் இந்த பாலம் மட்டும் இன்னும் முடிக்கப்படாமலேயே இருக்கிறதென்று.
இப்போது வேலை நடக்கிறதென்றால்... எல்லாம் அண்ணன் அருளோ? ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.

தருமி said...

நல்ல வேளை. நேற்று செல்லும்போது பார்த்தேன். நான் மஞ்சள் கோடிட்டிருந்த பகுதியில் இப்போது சில மணல் மூடைகளை வைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தவர்களுக்கு நன்றி.

mkalagiri.comலும் தொடர்பு கொண்டேன்!

வோட்டாண்டி said...

than muyarchiyil satrum manam thalaradha vikramadhithan...

Post a Comment