*
சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் மதுரையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடானது. "இதை செய்யணும் அதை செய்யணும் என்று வெறுமனே பேசிக் கொண்டும், பதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பதொடும் நில்லாமல் இந்த சமூகத்துக்கு நாமும் உருப்புடியாய் ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்யலாம்?" என்பதே அந்த சந்திப்பின் சாராம்சமாக இருந்தது.
அந்த சூழ்நிலையில்தான் ஜெர்மனியில் இருக்கும் நண்பர் குமார் எங்களைத் தொடர்பு கொண்டார். சென்னையில் நடைபெற்ற டாக்டர். ஷாலினியின் குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கத்தை மதுரையில் நடத்தினால் என்ன என்பது அவருடைய எண்ணம். அதை நண்பர்களிடம் சொன்னபோது எல்லோரும் ஒத்த கருத்தோடு இதை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக.. மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31-01-10) இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.
இன்றைய சமூக சூழலில் இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் சிறு குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பாலியல் பலாத்காரங்களும் ஒன்று. மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த காமவெறியன், சிதைக்கப்பட்டு புதரில் கிடந்த குழந்தை என்று திரும்பிய பக்கம் எல்லாம் காணக் கிடைக்கும் செய்திகள் நம்மை பயம் கொள்ள செய்வதாக இருக்கின்றன. ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லாக் குழந்தைகள் மீதும் இத்தகைய பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தனக்கு நடப்பது என்ன என்று தெரியாமலேயே சீரழிக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்? இதனால் குழந்தைகள் உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தம் குழந்தைகளை பாதுகாக்கும் கடமை பெற்றோருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் தான் உண்டு. இத்தகைய நச்சு சூழலில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பிரச்சினைகளை நாம் எப்படி எதிர்கொள்வது? எது நல்ல தொடுகை என்றும் எது கெட்ட தொடுகை என்றும் குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது? இது போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசுவதே இந்தக் கருத்தரங்கத்தின் நோக்கம். குழந்தைகள் மனநலம் பற்றியும், அவர்களை அணுகும் முறை பற்றியும் டாக்டர்.ஷாலினி உரையாற்ற இருக்கிறார். நம்முடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான கேள்வி நேரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் : 31.01.2010 ஞாயிறு
காலம் : மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை
இடம் : அமெரிக்கன் கல்லூரி ( செமினார் ஹால் )
கருத்தரங்க ஆய்வர் : மன நல மருத்துவர் ஷாலினி
பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.சமூகத்துக்கு நம்மாலான ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் வடிவம்தான் இந்த சிறு முயற்சி. இதற்கு நண்பர்கள் அனைவரும் உங்களுடைய ஆதரவினைத் தர வேண்டும் என மதுரைப் பதிவர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மதுரையில் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன். THIS IS JUST THE BEGINNING.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விழையும் நண்பர்கள் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் வருகையை உறுதி செய்தால் மற்ற ஏற்பாடுகள் (போக்குவரத்து, சிற்றுண்டி) செய்வதற்கு வசதியாகஇருக்கும்.
அலைபேச:
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993
கார்த்திகைப்பாண்டியன் -9842171138
மின்னஞ்சல் தொடர்புக்கு:
dharumi2@gmail.com
sridharrangaraj@gmail.com
karthickpandian@gmail.com
தொடர்புடைய மற்ற இடுகைகள்:
ஸ்ரீதர்
பாலகுமார்
சீனா
நல்லதொரு முறையில் நிகழ்ச்சியை நடத்த உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம். வாருங்கள் நண்பர்களே.. சாதித்துக் காட்டுவோம்..!!!
=======================================================================
19. 01.10
மதுரைத் தமிழ் இணையப் பதிவாளர்கள் &
அமெரிக்கன் கல்லூரி
இணைந்து சென்னை மனநல மருத்துவர் ஷாலினி அவர்களால்
அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில்
“குழந்தை நலம் – GOOD TOUCH & BAD TOUCH”
என்ற தலைப்பில் 31-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணியிலிருந்து 7 மணி
வரை நடக்கும் பேச்சரங்கிற்கு உங்கள் பள்ளி/ கல்லூரியின் இளம் பெற்றோர்கள், ஆசிரியர்களை அழைக்கின்றோம். இந்த இரு தரப்பாருக்கும் கிடைக்கும் புதிய பார்வைகள் நம் குடும்பங்களுக்கும், சமூகத்திற்கும் மிக பயனளிப்பவையாக இருக்குமாதலால் தயவு கூர்ந்து உங்கள் பள்ளியின் / கல்லூரியின் பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் அமைப்பிலிருந்து வரக்கூடியவர்களின் பெயர்களும் எண்களும் கிடைத்தால் எங்களின் முன்னேற்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். இந்த தகவலை கீழேயுள்ள முகவரி மூலமோ, இணைய மடல் மூலமோ தெரிவிக்கவும்.
நன்றி.
அன்புடன்,
G.Sam George, (தருமி)
(Retd. Prof., The American College)
31. Chemparuthi Nagar,
Vilangudi, Madurai – 625 018
E-mail ids:
dharumi2@gmail.com
karthickpandian@gmail.com
sridharrangaraj@gmail.com
4 comments:
என்னைய மாதிரி சின்ன பசங்க எல்லாம் அதற்கு வரலாமா ஐயா?
வாழ்த்துகள்.
வாங்க வெற்றி
நன்றி ருத்ரன்
Post a Comment