Sunday, February 28, 2010

381. சிவாஜி ...

*

எனக்கு இன்று நல்ல ஒரு ராசி!!


ஊர் சுற்றிவிட்டு வந்து தொலைக்காட்சி முன்னால உக்கார்ரேன். ரொம்ம்ம்ம்ப நாளா ரொம்ப ஆசைப்பட்டுக்கொண்டிருந்த சிவாஜியின் சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடக வசனத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பல்லாண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன். அந்தக் காலத்தில் அடிக்கடி ஆசைப்பட்டு கேட்ட வசனம் அது.



அவர் எழுதணும்; இவர் பேசணும் -- என்ற வசனம் எல்லோரும் சொல்லிச் சென்றது.

என்ன தமிழ் ... அதற்கு எப்படி சிவாஜி உயிர் கொடுத்தார் ... அதுவும் நாக்கைச் சுழற்றும் அந்தத் தங்கத் தமிழை ஒரே டேக்கில் தொடர்ந்து நவரசத்தோடு, உணர்வோடு பேசிய அந்த நடிகனின் பிரம்மாண்டம் ....

எப்படியெல்லாம் அவரைப் பயன்படுத்தத் தவறி விட்டோம் என்ற துக்கமும் அமிதாப்பின் இருப்பினால் பெரிதாகத் தோன்றியது.

அந்த நாடகம் முடிந்ததும் எல்லோரும் கை தட்டினார்கள். எனக்குக் கை கூப்பத்தான் தோன்றியது.

வாழி நீ சிவாஜி .........


*

இந்த நாடகம் இணையத்தில் கிடைத்தால் விவரம் சொல்லுங்கள்.


*

14 comments:

குட்டிபிசாசு said...

தருமி அவர்களே,

http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

பார்த்து மகிழவும்.

Jerry Eshananda said...

/எனக்கு இன்று நல்ல ஒரு ராசி!!
அப்ப ..பார்ட்டி ..எப்ப ...வைக்கிறீங்க..?

Thekkikattan|தெகா said...

//அப்ப ..பார்ட்டி ..எப்ப ...வைக்கிறீங்க..?// அதானே! எப்போ?? நானும்... நானும் :))

தருமி said...

கு.பி.,

ரொம்ப நன்றி. மூணுதடவை பாத்துட்டேன்.

நான்கு நிமிடம் தொடர்ந்து செல்கிறது அந்த நீண்ட வசனம் .......

ஜோ/Joe said...

வாழி நீ சிவாஜி!

ஜோ/Joe said...

http://video.yahoo.com/watch/7062223/18374399

அ.வெற்றிவேல் said...

சிவாஜியை நுணுக்கமாக ரசிக்கனும் என்றால் என்னோடுதான் அப்படத்தைப் பார்க்கணும் என்று என் நண்பர்கள் சொல்வார்கள்.சிவாஜி என்பதால் எல்லாவற்றையும் ரசிப்பவன் கிடையாது.அந்த உயர்ந்த மனிதன் பல் குத்தும் காட்சியை நீங்கள் குறிப்பிட்டு இருந்ததைப் படிக்கும் போது என் மாதிரி இன்னும் பல பேர் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டேன். வலைத்தளங்களில் சிவாஜியை ரசிப்பவர்கள் இருப்பது எனக்கு ஒரு ஆறுதல்..

Matangi Mawley said...

:D .. dharumi is one of my fav characters ever.. very close to my heart.. coz when i was in 1st std, i used to tell the entire dharumi portion of dialogues(i still do remember).. became very popular in my school bcoz of tht! whn i saw the name, i stranded into here!

ராஜ நடராஜன் said...

முகபாவங்களுக்கும்,ஸ்டைலுக்கும்,சிகரெட் புகையை நடிக்க விடறதுக்கும் இன்னும் ஒருத்தன் மறுபிறவி எடுக்கணும்.அவரை கவுரப்படுத்திய இடுகைக்கு நன்றி.

தருமி said...

//i stranded into here!//

keep doing now and then. thanks

தருமி said...

ஜோ, வெற்றிவேல், ராஜநடராஜன் ... இன்னும் எத்தனை எத்தனை நல்ல ரசிகர்கள் ... ம்ம்..
:(
மனதில் மீதி நிற்பது சோகமே...

தருமி said...

ஜெரி, தெக்ஸ்

எதுக்குப்பா எதுக்கு ...?!

ப.கந்தசாமி said...

உங்கள் ரசனை நன்றாக இருக்கிறது.

பராசக்தி படத்தை காலேஜுக்கு கட் அடுத்து மேட்னி ஷோ பார்த்த நாள் முதலாய் இன்று வரை சிவாஜியின் நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பு குறையவில்லை.

படத்தில இருப்பது நீங்களும் பேரக்குழந்தைகளுமா?

தருமி said...

//ராசக்தி படத்தை காலேஜுக்கு கட் அடுத்து மேட்னி ஷோ பார்த்த நாள் முதலாய்...//

அண்ணாச்சி,
அம்புட்டு பெரிய ஆளு நீங்க.. ஏதோ இந்தப் பக்கத்தில நாந்தான் பெரிய (அதாவது, ரொம்ப வயசான) ஆளுன்னு ஜு காமிச்சிக்கிட்டு இருந்தேன். மன்னிச்சிக்கங்க.

முப்பெரும் பேரப்பிள்ளைகள் ...

Post a Comment