Saturday, August 14, 2010

425. சிங்கப்பூர் -- மீண்டும் முதலில் இருந்து ....

*

முஸ்தபாவிலிருந்து கூப்பிடு தூரம் ...எங்கள் அறை
*
எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த  அறையிருந்த இடத்திற்கு Little India என்று பெயராம். 'தமிழ்நாட்டு'ப் புகழ்பெற்ற முஸ்தபா கடைக்கு மிக மிக அருகில்.  முஸ்த்பா கடை சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது. கடையை விரிவு படுத்தும்போது அதன் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் நடுவில் ஒரு ரோடு போகிறது அரசில் இருந்து அனுமதி பெற்று இரண்டு பகுதிகளையும் ஒரு பாலம் போல் ரோட்டுக்கு மேல் இணைத்திருக்கிறார்கள்.  24 மணி நேரமும் விற்பனைதான். எங்களின் முதல் நாளில், இரவு மணி 12.30 - 1.00 வரை அந்தக் கடைக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம்.  முஸ்தபா இன்னும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. புதிய கட்டிடம் ஒன்று இரண்டாம் பகுதியின் தொடர்பாக வளர்ந்து வருகிறது. அதோடு, முஸ்தபாவின் அடிப்பகுதியில் முடியும்படி ஒரு MRT  கட்ட அரசு ஆலோசித்ததாகவும், அதற்காக முஸ்தபாவிடம் ஒரு பகுதி பணம் கேட்டதாகவும், முஸ்தபா அதை மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி ...
நாங்களிருந்த அறை.   காலைச் சிற்றுண்டிக்குச் செல்ல வெளியே வந்தோம். நிஜமாலுமே அப்பகுதி  இந்திய, அதுவும் தமிழ்ச்சூழலோடு இருந்தது.
சரவணபவன், முருகன் இட்லி கடை, மதுரை மீனாக்ஷி பவன், ஆனந்த பவன் -- திரும்புமிடமெல்லாம் நம் ஊர் கடைகள். முதல் தடவை மட்டும் நம்மூரை மதிப்போமே என்ற பெரிய எண்ணத்தில் முருகனுக்குப் போனோம். தோசை .. பொங்கல் என்று போனது. இதற்குப் பின் இனி தமிழுணவைத் தவிர்க்க வேண்டுமென்று எடுத்திருந்த எங்கள் 'குறிக்கோளை' ஒரே ஒரு முறை தவற விட்டோம். மற்றபடி  அதன்பின்  எல்லாம் லோக்கல் சமாச்சாரங்கள்தான். அதுவும் நிறைய கடல் சமாச்சாரங்கள்.
Singapore Flier

மதியம் வரை முஸ்தபா ..  இன்னும் சில கடைகள் என்று சுற்றினோம். மதியம் முஸ்தபாவில் இருந்த cafeteria-வில் ஒரு பர்கர் & லெமன் டீ குடித்தோம். சிங்கப்பூரில் என் முதல் காதல் இந்த லெமன் டீயோடு ஆரம்பித்தது.
சிங்கையில் முதல் காதல்





மூன்றாவது நாளன்று slim tower mall-க்குப் பக்கத்திலிருந்த கடையில் குடித்த லெமன் டீ என் முதல் காதலை முழுவதுமாக முற்றிய காதலாக மாற்றியது. அதன் பின் அனேகமாக சிங்கையில் எங்கு போனாலும் லெமன் டீ தான் ... ஆனாலும் புத்திசாலித்தனமாக  மாலைகளில் என் காதலையெல்லாம ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டேன்!!


அன்று மாலை ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. அது முடிந்ததும் பக்கத்திலுள்ள MRT-க்கு வந்தோம். அழகான, மிக மிக சுத்தமான ரயில் நிலையங்கள், அதைவிட சுத்தமான ரயில்கள், மிக ஒழுக்கமான மக்களின் பழக்க வழக்கங்கள் ...
Sign Board inside the train. It just tells where you are and where do we go ...

திரும்பி வரும்போது சில மால்களைத் தாண்டி வந்தோம். மால்களுக்கு மிக அருகே food courts -- பெரிய வளாகங்களில் சாப்பாட்டு மேசைகள், நாற்காலிகள் .. சுற்றிலும் நிறைய கடைகள் ... எங்கு வேண்டுமோ அதை வாங்கி வந்து எங்காவது உட்கார்ந்து சாப்பிடலாம். அன்று சனிக்கிழமை வேறா .. கூட்டத்திற்கு குறைச்சலில்லை. மது எங்கு வேண்டுமானலும் அருந்தலாம். ஒவ்வொரு மேசை மீதும் வரிசையாக காலி பீர் பாட்டில்கள் அணிவகுத்து நின்றன.

இரவு மீண்டும் ஊர் சுற்றல். இரவு 1 மணிக்கு ஒரு வட இந்திய உணவகம்.  நண்பர் சசி ருசி பார்த்த இடம். அதனால் நல்ல சாப்பாடு. அதோடு புதியதாகப் பார்த்த guiness beer ... ரொம்ப density-ஆன பீர். density-யோடு சேர்த்து சுவையும் நலமே ..

இரண்டாம் நாள் மாலையிலிருந்து நண்பர் சசியின் வீட்டில் தங்கினோம். அன்பான உறவுகள். அதிலும் சசியின் மகனுக்கு கவின் என்ற அழகான பெயரை வைத்திருக்கிறார்.





ஆனால் அவனுக்கோ இன்னொரு பெயரில் ஒரு ஈர்ப்பு!




முதல் நாள் அவனோடு இருந்துவிட்டு நான் வெளியே போனபின் தன் அப்பாவிடம், 'எனக்கு ஏன் கவின் அப்டின்னு பெயர் வச்சீங்க; தருமின்ற பெயர் எவ்வளவு நல்லா இருக்கு' என்றானாம்.

மதுரக்கார பயல் இல்லையா? அதிலிருந்து நான் அவனை 'குட்டி தருமி' என்றே அழைத்து வருகிறேன்.


சிங்கை ம்க்களோடு தங்கியிருந்தது நேரடி அனுபவங்கள் பெற துணையாக இருந்தது. அந்த அனுபவங்களால் இரண்டாவது காதல் -- சிங்கையின் மீது -- ஆரம்பித்தது.

என் இரண்டாவது காதல் பற்றி அடுத்த பதிவு ..........



















20 comments:

வடுவூர் குமார் said...

slim tower Sim Lim Tower என்று இருக்கவேண்டும்.
என்ன தான் முஸ்தாபா முதலாளிக்கு விருதுகள் வழங்கி அரசாங்கம் கௌரவித்தாலும் சட்டம் என்று வரும் போது தயவு தாட்சண்யம் காட்டமாட்டார்கள் என்பதை சமீபத்தில் அவர்களுக்கு தண்டனை விதித்ததை காண்பிக்கிறது.
முஸ்தாபா கடை தொகுதிக்கு கீழே எம் ஆர் டி நிலயம் வர சாத்தியம் இல்லை ஆனால் ஏற்கனவே இருக்கும் நிலயத்தையும் இவர்கள் கடைதொகுதியையும் இணைக்கும் சுரங்கபாதை என்று இருக்கலாம்.

Unknown said...

//அதோடு புதியதாகப் பார்த்த guiness beer ... ரொம்ப density-ஆன பீர். density-யோடு சேர்த்து சுவையும் நலமே ..//

இந்த பியருக்கு நான் அடிமை ... சிங்கப்பூர், மலேசியா போனால் இதுதான் சாப்பிடுவேன் ... இதே போல் ABC என்றொரு பியர் இருக்கு அது சுமாராக இருக்கும் ...

ஜெகதீசன் said...

//
புதிய கட்டிடம் ஒன்று இரண்டாம் பகுதியின் தொடர்பாக வளர்ந்து வருகிறது. அதோடு, முஸ்தபாவின் அடிப்பகுதியில் முடியும்படி ஒரு MRT கட்ட அரசு ஆலோசித்ததாகவும், அதற்காக முஸ்தபாவிடம் ஒரு பகுதி பணம் கேட்டதாகவும், முஸ்தபா அதை மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி ...
//
புதிய தகவல்...

nagoreismail said...

Welcome to Singapore

தருமி said...

//nagoreismail said...

Welcome to Singapore//

அட .. நான் எப்போ புறப்படணும்??!!

துளசி கோபால் said...

ஃபாரர்பார்க் ஸ்டேஷனில் இருந்து வந்தாலே முஸ்தாஃபா ரொம்பப் பக்கமாச்சே. எதுக்கு இன்னொரு ரயில் நிலையம்?

பச்சை மனுசன் வரும்போது வண்டிகள் எல்லாம் நிற்கும் என்பதால் பயப்படாமல் சாலையைக் கடந்து வரலாம்.

இந்தியாவில்தான் பச்சை மனுசன் வந்தால் இன்னும் அதிவேகமா நிறுத்தாமல், பாதசாரிகள்மேல் ஓட்டித்தள்ளிக்கிட்டுப் போவாங்க:(

பேசாம நீங்க கவினோடு பெயரை மாத்திக்கிட்டு இருக்கலாம்:-))))

துளசி கோபால் said...

சொல்ல விட்டுப்போச்சு.

முந்தி ஒரு காலத்துலே முஸ்தபாவிலேயே மாடியில் ஹொட்டேல் இருந்துச்சு. அங்கே தங்குவது வழக்கம். ஷாப்பிங் சுலபம் பாருங்க:-))))

தேவன் மாயம் said...

படங்கள் அருமை ! தொகுப்பும் பிரமாதம்!

தேவன் மாயம் said...

மீண்டும் ஆரம்பிக்கிறீர்களா? மறக்க விடமாட்டேங்கிறீகளே!

பாண்டித்துரை said...

அருமையான பதிவு.

ஆ.ஞானசேகரன் said...

படங்கள் அருமை ! தொகுப்பும் பிரமாதம்!

தருமி said...

//மறக்க விடமாட்டேங்கிறீகளே!//

மறக்கிறது மாதிரியா இருந்திச்சி .. மறக்கிறது மாதிரியா இருந்தாங்க ..?

தருமி said...

வடுவூர்,

//சமீபத்தில் அவர்களுக்கு தண்டனை விதித்ததை காண்பிக்கிறது.//

அந்த சுரங்கப்பாதை அமைக்க காசு தரலைன்னு அப்படி ஒரு தண்டமாமே ... அப்படியா?

தருமி said...

கே.ஆர்.பி.செந்தில்,

//சிங்கப்பூர், மலேசியா போனால் இதுதான் சாப்பிடுவேன் ... //

நானும் அப்படித்தான் !!!

தருமி said...

துளசி,
கவின் -- நல்ல பெயர்தான். ஆனால் "உலகம் பூரா' தருமின்னு தெரிஞ்சுபோச்சே!

தருமி said...

பாண்டித்துரை
ஞான சேகரன்

...... நன்றி

priyamudanprabu said...

தொடருங்க..........

வடுவூர் குமார் said...

தண்டனை அதற்காக இருக்காது என்றே நினைக்கிறேன்.ஊருக்கு வெளியே ஒரு இடத்தை குட்டவுன் என்று சொல்லி வாங்கி அதை பலருங்கு பங்கு போட்டு கொடுத்து அதிலும் சில்லரை வியாபாரம் செய்த காரணத்துக்கு தண்டனை-செய்தி தாளில் படிதத்து.

மதுரை சரவணன் said...

உங்களின் ஒவ்வொரு பகிர்வும் சிங்கை செல்லத் தூண்டுகிறது... வாழ்த்துக்கள்

தருமி said...

சரவணன்,
//உங்களின் ஒவ்வொரு பகிர்வும் சிங்கை செல்லத் தூண்டுகிறது... //

கைவசம் நல்ல கைடு இருக்கிறார். போனால் அழைத்துச் செல்லுங்கள்!!!!

Post a Comment