*
முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை
*
கிறித்துவ புனிதர்களுக்கெல்லாம் மனதில் எவ்வித கேள்விகளோ குழப்பங்களோ வருவதில்லை என்று பலரும் நினப்பதுண்டு.
Francis de Sales என்ற புனிதர் போன்றவர்களுக்கு இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் இப்புனிதர் தன் வாழ்வுக் குறிப்பில் வாழ்நாளில் 15 நிமிடங்களுக்கு மேல் கடவுளை நினையாத நேரமில்லை என்கிறார். ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை. பல புனிதர்களுக்கே சமயங்களைப் பற்றிய பல கேள்விகள் எழுவதுண்டு. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த St. John of the Cross என்ற கார்மலைட் சபை சார்ந்த குருவானவர் Dark Night of the Soul என்ற ஒரு mystic poem ஒன்றை எழுதியுள்ளார். ஒரு ஆன்மா தன் உடலை விட்டு கடவுளை நோக்கிச் செய்யும் ஒரு பயணம் என்பதான கவிதை . கடவுளை நோக்கிச் செல்லும் இப்பயணம் எத்தனை துன்பம் நிறைந்த பாதை; அதனை ஆன்ம தைரியத்தோடு எதிர்கொண்டு கடவுளை அடைய வேண்டும் என்பதே அந்தக் கவிதையின் பொருள். இப்பயணத்தில் பல சலனங்கள், கேள்விகள் எல்லாமே ஏற்படுவதுண்டு.
St. John of the Cross என்பவரோடு, மேலும் St. Thérèse of Lisieuss - சிறு மலர் என்று அழைக்கப்படும் கன்னியாஸ்திரி, St. Thomas Aquinas போன்றவர்களும் இத்தகைய கடுமையான பாதையைக் கடந்து சென்றவர்களே.
St. Thérèse of Lisieuss வாழ்வில் 'எந்த அளவு நான் இருளில் அமிழ்ந்திருக்கிறேன் என்று நீங்கள் அறிந்தால் …' என்று தன் சகோதர கன்னியாஸ்த்ரிகளிடம் சொன்னதும், மரணத்திற்குப் பின் என்னதான் காத்திருக்கிறது என்ற அவரது வினாவும் அவரது வாழ்வில் நடந்த பெரிய விஷயங்கள்.
அன்னை தெரஸா ஏறத்தாழ 1959-லிருந்து அவரது கடைசிக் காலமான 1997 வரையிலும் கடவுளைப்பற்றிய சில கேள்விகளோடு வாழ்ந்திருக்கிறார். அவருடைய பக்தியையும். அந்த பக்தியால் அவர் செய்து வந்த தியாகங்களையும் உலகமே அறியும். ஆனால் அத்தகைய அன்னை தன் மதத்தைப் பற்றியே கேள்விகள் எழுப்புவது யாருக்குமே ஓர் ஆச்சரியமான விஷயமாகவே இருக்கும்.
இதில் கத்தோலிக்க திருச்சபையின் நடவடிக்கைகள் எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கின்றன. பொதுவாக எம்மதமும் தன்னை கேள்வி கேட்பவர்களை வெளிக்கொணர ஆசைப்படுவதில்லை. முடிந்த வரை அந்த கேள்விகள் வெளியே வராமல் வைத்திருக்கவே ஆசைப்படுவதுண்டு. அன்னை தன் கடிதங்கள் தன் காலத்திற்குப் பின் எரிக்கப்பட வேண்டும் என்று கூறிய பின்னும் எப்படி அவைகளை எரிக்காது, பாதுகாத்து, அவைகளை உலகமே அறியும் வண்ணம் ஏன் நூலாக வெளியிட்டுள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. (பின்னூட்டக்காரர் ஒருவர் முந்திய பதிவுகளில் சொன்னது போல்) அன்னையின் சமாதி அருகிலேயே அவரது இறைமறுப்புக் கேள்விகளை கற்களில் பொறித்து வைத்திருப்பதும் இன்னும் மிகப்பெரிய ஆச்சரியமே. இதையும் தாண்டி அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கவும் திருச்சபை விரைந்து செயல்படுவதும் மகிழ்ச்சியையே அளிக்கின்றன.
"எனக்காக இதைச் செய்வாயா?" என்று ஏசு தன்னிடம் 1946-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி பேசியதை முழுமையாக நம்புகிறார் அன்னை. அதன் விளைவே அவர் புதிய சபை ஒன்றை ஆரம்பித்து தன்னை முழுமையாக ஏழைகளுக்கு நிம்மதியான இறுதிக் காலத்தைத் தரும் சேவையை ஆரம்பித்தார்.
இறைமறுப்பாளர்கள் இத்தகைய புனிதர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தங்களுக்கான சான்றுகளாக எடுத்துக் கொள்ள முடியும். இப்படிப்பட்ட புனிதர்களுக்கே இத்தகைய கேள்விகள் தோன்றியுள்ளதே என்று சொல்லி, தங்கள் கட்சியை வலியுறுத்த முடியும். வேறு 'போட்டி' மதத்தினரோ 'பார்! எங்கள் மதத்துக்காரர்கள் யாருக்கும் இந்த ஐயம் ஏற்படுவதில்லை; அதனாலேயே எங்கள் மதமே சரி' என்று மார்தட்டிக்கொள்ளகூட முடியும். 'அன்னைக்கு ஏசுவில் நம்பிக்கையில்லையென்றால், அதற்கான காரணம் எங்க கொள்கைகள் படி ஏசு ஒரு கடவுளல்ல; அதையே அன்னை சொல்கிறார்' என்றும் சொல்லலாம். இப்படியெல்லாம் இருந்திருந்தும் புனிதர்களான இவர்களின் இத்தகைய கேள்விகளை வெளிப்படையாக கொண்டு வந்தமைக்காக, அவர்களது உள் மன உளைச்சலை வெளிப்படையாகக் கொண்டு வந்தமைக்காக கத்தோலிக்க திருச்சபை மீது எனக்கொரு மரியாதை.
St John of the Cross, அன்னை இருவருமே தங்கள் வாழ்க்கையில் சில கடுமையான நிகழ்வுகளுக்கு ஆளாகியுள்ளார்கள். முதல்வர் அவரது சீர்திருத்தக் கருத்துக்களுக்காக தன் சபைக்காரர்களாலேயே தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அன்னையின் சமூக வாழ்க்கையோ வாழ்வின் அத்தனை கொடூரங்களையும் மிக அருகில் இருந்து, பார்த்து, அனுபவித்து வாழ்ந்தவர். மூப்பிலும் பிணியிலும் கஷ்டப்பட்ட ஏழை எளிய வறிய மக்களின் இறுதி நாட்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் அவர். ஆகவே துன்பங்களோடு, துன்பங்களுக்கு மத்தியில் தன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தவர். மனித வாழ்வின் அவலத்தைப் பார்த்த அவருக்கு சில அடிப்படைக் கேள்விகள் வரலாம். சுற்றியுள்ள சோகம் அவரையும் empathy என்ற நிலைக்குக் கொண்டுவந்து, அதன் மூலம் பல கேள்விகள் வந்திருக்கலாம். அந்த சோகமே அவரை மேலும் மேலும் சோகத்திற்குள் ஆழமாக இறக்கியிருக்கலாம். She would have reflected all that in her mind / 'soul'(?) கடவுள், படைப்புகள், வாழ்க்கை, இறப்பிற்கு பின் ... போன்ற பல கேள்விகள் எழுந்திருக்க வேண்டும்.
இந்த கேள்விகளை நாம் சிறுபிள்ளையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்ட சமய நினைவுகளை முற்றிலும் கழற்றிவிட்டு, திறந்த மனத்தோடு பார்த்தால் ... மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதைத்தான் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும். இந்த மனநிலைக்கு வந்து விட்டதாக இறை மறுப்பாளர்களுக்கு நிச்சயமாகத் தோன்றும்.
அடுத்த இடுகை: அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... என் பார்வையில் ....5
மற்றைய இடுகைகள்:
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை
*
கிறித்துவ புனிதர்களுக்கெல்லாம் மனதில் எவ்வித கேள்விகளோ குழப்பங்களோ வருவதில்லை என்று பலரும் நினப்பதுண்டு.
St. John of Cross |
St. THOMAS AQUINAS |
St. THRESE OF LISIEUSS - சிறு மலர் |

12 comments:
//மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதையும் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும். இந்த மனநிலைக்கு வந்து விட்டதாக இறை மறுப்பாளர்களுக்கு நிச்சயமாகத் தோன்றும்.//
உண்மைத்தான்.. நானும் அப்படித்தான் கருதுகிறேன்.
// வேறு 'போட்டி' மதத்தினரோ 'பார்! எங்கள் மதத்துக்காரர்கள் யாருக்கும் இந்த ஐயம் ஏற்படுவதில்லை; அதனாலேயே எங்கள் மதமே சரி' என்று மார்தட்டிக்கொள்ளகூட முடியும்.//
அப்படி செஞ்சா very weak argument
//மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதைத்தான் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும்//
மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா. :-)
mika arumaiyaana pathivu..
( mannikkavum tamil font velai seyyalai )
புனிதர்களான இவர்களின் இத்தகைய கேள்விகளை வெளிப்படையாக கொண்டு வந்தமைக்காக, அவர்களது உள் மன உளைச்சலை வெளிப்படையாகக் கொண்டு வந்தமைக்காக கத்தோலிக்க திருச்சபை மீது எனக்கொரு மரியாதை. //
Nijamthaan
//மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா//
மதம், ஆத்மா, ஆன்மா ... இப்படி பேசுறதுதான் ஆன்மீகமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் இவைகளைத் தாண்டி நான் அடுத்தவனுக்கு யாராக இருக்கிறேன் என்பதே ஆன்மீகமா தோணுது.
மதத்துல ஆன்மிகம் இல்லேன்னு சொல்றீங்களா. :-)//
ஆன்மீகத்துக்கான ஒரு வழி மட்டுமே மதம்..
ஆன்மீகம் அடைய மதம் மட்டுமே வழியல்ல...
மதமின்றியும் ஆன்மீகவாதியாக இருக்கலாம்..
// இந்த கேள்விகளை நாம் சிறுபிள்ளையிலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்ட சமய நினைவுகளை முற்றிலும் கழற்றிவிட்டு, திறந்த மனத்தோடு பார்த்தால் ... மதங்களை விட்டு மேலே செல்ல முடியும். இதைத்தான் ஆன்மீகம் என்றே சொல்ல வேண்டும். இந்த மனநிலைக்கு வந்து விட்டதாக இறை மறுப்பாளர்களுக்கு நிச்சயமாகத் தோன்றும்..//
துறவிகளுக்கு மதத்தின் மீது பற்று இருந்தால் அது துறவுக்கு ஏற்குமா?.மத்ததையும் கட்ப்பதுதான் துறவு அன்னை மிக சரியாகவே தன் பயணத்தை தொடர்ந்து முடித்துள்ளார்
//மதத்ததையும் கடப்பதுதான் துறவு //
புதிய பார்வை ...
//இவைகளைத் தாண்டி நான் அடுத்தவனுக்கு யாராக இருக்கிறேன் என்பதே ஆன்மீகமா தோணுது.//
நாம் அடுத்தவனுக்கு யாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க ,தோன்றுவிக்க மதங்கள் அவசியம் தேவை . அவை நம் பிறப்பில் நிர்ணயிக்கப்படுவதைத் தான் என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல கிறிஸ்துவ மதம் மெல்ல மெல்ல பள்ளிகள் வாயிலாக நம்மை அறியாமலே (பரிமாண வளர்ச்சி போல)வளர்க்கப்படுவது தான் அபத்தம். முஸ்லிம்களைப் போலவும் தன் மதம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும்,அவர்கள் பிற மதம் தழுவுவதால் முற்றிலும் விலக்கப்படுதலும் , ஒதுக்கப்படுதலும் ,பிற மதம் தழுவுதலை தடுப்பதாக இருப்பதாலும் அதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இந்து மதம் அனைத்து மதங்களை தன்னகத்தே கொண்டு அனைவரையும் ஈர்க்கப்பார்ப்பதாலும் புறக்கணிக்கவே தோன்றும்.( இவை அனைத்தும் காட்டுமிராண்டித்தனமாக மதக்கொள்கையாளர்களால் வற்புறுத்திக் கடைப்பிடிக்காச் செய்வதாலும், பயமுறுத்தப்படுவதாலும் உண்மையான மதத்தை மறந்து , கட்டாயப்படுத்தப்படுகிறோம்.அதனாலே ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததாக மட்டுமே படுகிறது) ஆனால், மனிதன் சுயமாக தன் கிராம கோவிலைப்போன்று(வழித்தோன்றல்,மூதையர், தன்குடும்பத்தில் இறந்த நல்ல மனிதர், தான் பயப்படும் ஒரு உருவம், தன்னைப் பாதுகாக்கும் ஒரு சக்தி, ) வணங்கும் போது ,ஒரு கட்டுப்பாடுடன் மனநிறைவு கொண்ட நல்லவானாக உருவாக்க முடியும். அதனால் தான் கிராமத்தான் என நாம் சொல்லுகிறேம்.வெள்ள மனசு என வெளிப்படையாக கூறுகிறோம். கிராமங்கள் கட்டுப்பாடுடன் காண முடிகிறது.
ஆகவே, மதம் மனிதனை நல்வழிப்படுத்த அவசியம் தேவை, திணிக்கப்படாத வரையில்....
மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த தோன்றுவிக்கப்பட்டன.அவை பிறந்த இடங்களுக்கு ஏற்ப பரிமாண வளர்ச்சி அடைந்தன. ஆனால், அவை ஆதியில் கட்டாயமான ஒன்றாக இருந்திருக்கலாம்,அதானாலே அறிவியல் விரைவில் வளர்ந்து நம்மை ஒரு ஒளிமையமான காலத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால், மன்னர்கள் தம் நாட்டை விரிவுப்படுத்தும் போது, தன்னுடன் தன் மத்தையும் சேர்த்தே விரிவுபடுத்தினான். அதாவது காலணி ஆதிக்கத்தைப் போன்று , அவையும் விரவி, நாடுகள் பிடிக்கும் போது திணிக்கப்பட்டன. அவை தான் அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணமாக ஆயிற்று.
நம்மைப்போன்று விவாதம் அன்று இல்லை... அன்று தருமி இப்படி விவாதித்தால், தீன் லாகி முன் காலத்தில் வெட்டப்பட்டிருக்கலாம்.
கடவுள் மறுப்பு என்பதும் ஒரு வித ஆன்மீகமே... ஆம் ,அவர்கள் கடவுள் உண்டு என மறைமுகமாக ஒத்துக்க்கொள்வது தான் எதிர்ப்புக்கு காரணம். இருந்தால் தானே அது இல்லை இது எனக் கூற முடியும்.
மனிதனை நல்வழிப்படுத்த மட்டுமே , பயமுறுத்தல் இன்றி , ஒன்றை செய் என்றால் எவனும் செய்ய மாட்டான் ஆயிரம் கேள்வி கேட்பான், அதுவே பயத்தால், கடவுளின் பெயரால் சொல்லப்பட்டால் , உடனே செய்கிறேம். வருமானத்தில் ஒரு பங்கு , அன்னதானம், ஏழைக்களூக்கு கோவிலில், சர்ச்சில், மாசூதியில் உதவி. எங்கே தனியாக கேட்டுப்பாருங்கள் த்ருகிறாரா..? ஒருத்தனும் உதவ மாட்டான். அதற்கு மதம் தேவை. அதுவே ஆன்மிகம்.
அதனாலே ஆன்மீகம் என்பது மதம் சார்ந்ததாக மட்டுமே படுகிறது//
இல்லை..
ஆன்மீகம் என்பது தம்மையும் உலகையும் அறிதல்.. முழுமையான புரிதல்..
அதற்கு மதம் ஒரு பாடசாலை கல்வி மட்டுமே..
ஆன்மீகம் அறிவு போல..
உள்வாங்கி உணர்பவனுக்கே ஆன்மீகம்..
Religion may be a path to Spirituality...
Being religious doesn't mean one should possess spirituality..
மதமின்றியும் ஆன்மீகம் வளர்க்க முடியும்...
Post a Comment