Friday, April 01, 2011

487. WHY I AM NOT A MUSLIM? ... 10

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9

இப்பதிவு: 10

*




Image and video hosting by TinyPic






CHAPTER 5


THE KORAN... 
தொடர்ச்சி .. 3

குரானின் கோட்பாடுகள்:
பல கடவுள் தத்துவத்திலிருந்து ஏக இறைத் தத்துவம் பரிணமித்தது. அது போலவே, ஏக இறைத்தத்துவத்திலிருந்து அதிலும் மேம்பட்ட கடவுள் மறுப்பு பரிணமிக்குமா எனபதை ஆசிரியர் விவாதிக்கிறார். 
polytheism --> monotheism --> agnosticism --atheism ..?

ஏக இறைத் தத்துவத்திலும் மூட நம்பிக்கைகளுக்குக் குறைவில்லை. 
ஏக இறைத் தத்துவம் தீவிரமாக மற்ற மதங்களை எதிர்த்து நிற்கும்.
Gore Vidal:  பழங்காலத்தில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டிலிருந்து மனித நலனுக்கு எதிரான மூன்று மதங்கள் - யூதம், கிறித்துவம், இஸ்லாம் - பிறந்தன. வானத்திலிருந்து இவர்களின் கடவுள்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; கடவுள் எல்லா வல்லமையும் உடைய நம் தந்தை; இந்த வானக் கடவுள் - sky-god - மிகவும் பொறாமை பிடித்தவர். அவருக்கு முழு ஒப்படைப்பு, கீழ்ப்படிதல் அத்தியாவசிய தேவை. (116)

Jann, Jinn, Shaitans, Ifrits and Marids - இந்த 5 வகை ஆன்மீக உயிர்களைப் பற்றி குரான் பேசுகிறது. (வேடிக்கையான உறவு முறைகள் ... கற்பனைகள் ...  (117)

குரானில் கடவுளைப் பற்றிய எந்த தத்துவமும் சொல்லப்படவில்லை. கடவுள் என்பதை வெறும் நம்பிக்கையாக மட்டும் பார்க்கிறது. (118)

Dictionary of Islam: மத.நல்லிணக்கம் என்பதேஇல்லை. சிலைகளை  ஆராதிப்பவர்களுக்கு மரணம் அல்லது மத மாற்றம் என்ற இரண்டில் ஒன்றே விதி.

Schopenhauer கிறித்துவமும் இஸ்லாமும் மனித குலத்திற்குக் கொடுத்த கொடூரங்களைச் சிந்திக்கச் சொல்கிறார். முக்கியமாக, இந்தியாவில் இந்த இரு மதங்களும் - முதலில் முகமதியர்கள், இரண்டாவதாக கிறித்துவர்கள் - மனித குலத்தின் முதல் புனிதமான ( !! ) மதத்தினருக்குக் கொடுத்த அக்கிரமங்களைப் பற்றி கூறுகிறார்.இவர்களால் அழிக்கப்பட்டகோவில்களும் கடவுளர்  சிலைகளும் இன்றும் கூட அவர்களது ஏக இறைத்தத்துவத்தின் அடையாளங்களாக நிற்கின்றன. முகமது கஜினி, சகோதரர்களைக் கொன்ற ஒளரங்கஜேப் -- இவர்கள் அடையாளங்களாக நிற்கின்றனர்.(120)
இஸ்லாமில் கடவுள் என்ற தத்துவம்:
கடவுள் சர்வ வல்லமையுடையவர் என்பதுவும், மனிதனின் செயல்கள் அனைத்தும் கடவுளின் எண்ணத்துக்கு உட்பட்டவையே; மனிதனுக்கு என்று தனிக் குணம் - free will of his own - இல்லை என்பதுவும் குரானில் சொல்லப்படுகின்றன. (121)

Antony Flew:
மனிதனின் வாழ்வில் அவன் செய்யும் தவறுகளுக்கும், அதற்காக அவனுக்காகக் காத்திருக்கும் வரையறையில்லா தண்டனைக்கும் பெரும்  இடைவெளி உண்டு. குரானில் சொல்லப்படும் (பைபிளிலும் இதே கதையே! ) நரகம் மிகவும் பயங்கரமான ஒன்று; காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள், கஷ்டப்படுத்தி மகிழும் தன்மை எல்லாம் ஒருங்கே உள்ளன. 

Gibb
மனிதன் எப்போதும் கடவுள் மேலுள்ள பயத்தோடு வாழவேண்டும். கடவுளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொண்டிருக்க வேண்டும். இதுவே குரானில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை சொல்லியுள்ள பாடம். (127)
கடவுளின் குறைபாடுகள்:
கடவுள் மிகவும் நல்லவர்; வல்லவர்; நன்மை தருபவர் என்றெல்லாம் சொல்லி விட்டு, அவர் ஒரு எரிச்சலடையும் கொடுங்கோலனாக, திமிரும் குணம் படைத்த மனிதர்களைத் தடுக்க முடியாதவராக, கோபக்காரராக, பெருமை பிடித்தவராக, பொறாமை பிடித்தவராக காண்பிக்கப் படுகிறார்.
அவர் எல்லாம் வல்லவர்;  அப்படியாயின் அவருக்கு எதற்கு மனித குலம்? எல்லா வல்லமையும் உடையவர்; ஆயினும் அவர் எதற்காக மனிதனின் உதவியை நாடுகிறார்? இப்படிப்பட்ட கடவுள் அரேபிய நாட்டிலுள்ள ஒரு அடையாளம் இல்லாத வியாபாரி ஒருவரை ஏன் தேர்ந்தெடுத்து, அதுவும் அவரையே கடைசி நபியாக்க வேண்டும்?   எல்லாம் வல்ல கடவுளுக்கு  தான் படைத்த மனிதன் தன்னைப் போற்றி புகழ வேண்டும் என்றும, தினமும் தன்னை ஐந்து முறை தொழ வேண்டும் என்றும் என்ன தேவை? இப்படி தன்னைத் தொழுதேற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த நினைவு ஒரு நல்ல பண்பேயில்லை; ஆனால் அதுவே எல்லாம் வல்ல கடவுளின் ஆவல்! (128)

Palgrave :
குரானில் சொல்லப்பட்டுள்ள கடவுளைப் பற்றிக் கூறுகிறார்: கடவுள் தன் கையில் மணலெடுத்து பாதியை நரகத்தில் வீசி விடுகிறார் (These to eternal fire and I care not;); அடுத்த பாதி சுவனத்தில் (These to eternal to paradise, I care not.) எறிகிறார். இப்படியாயின், எல்லாமே முதலிலேயே, கடவுளாலேயே முடிவு செய்யப்பட்டுள்ளதா? ( .. adequate idea of predestination, or, to give it a truer name, pre-damnation, ... )
ஒரு மனிதனை எக்காலமும் அணையா நெருப்பில், சிவந்து நிற்கும் இரும்புக் கனலில், நீராக ஓடும் நெருப்பில்  விட்டெறிகிறார். அடுத்து ஒருவனை மகிழ்ச்சி நிரம்பிய, என்றும் தணியாத காமச்சூழலுக்குள் நாற்பது கன்னிப் பெண்களின் நடுவில் விடுகிறார். எல்லாம் அவரது முடிவு! He wills it!

முகமது கடவுளின் தூதன்:
The Age of Reason என்ற நூலில் Thomas Paine: தோரா - கடவுளிடமிருந்து மோஸேவிற்கு - நேருக்கு நேர் - முகம் பார்த்து.  விவிலியம் - தெய்வீக அழைப்பு.  குரான் - கடவுளிடமிருந்து -  ஜிப்ரேல் மூலமாக.
இந்த ஒவ்வொரு மதமும் அடுத்த மதக்காரர்களின் நம்பிக்கைகளை நம்புவதில்லை; நான் இந்த மூன்று மதங்களையுமே நம்பவில்லை.. 

இஸ்லாமியர்கள் மறுப்பது போலன்றி முகமது கடவுளை நேருக்கு  நேர்  பார்த்திருக்கிறார். ஆதாரம்: 53: 2-18. மற்ற நேரங்களில் ஜிப்ரேலை மட்டும் பார்க்கிறார். ஆனால் தான் பார்த்தது கடவுள் / ஜிப்ரேல் என்பது எப்படி முகமதுவிற்குத் தெரியும்? முகமதே மனத்தளவில் தவறாக புரிந்து கொண்டிருக்கக் கூடாதா? கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லும் பலரை மன நோயாளிகளாகத்தான் நாம் காண்கிறோம்.
(You talk to God, you're religious. 
God talks to you, you're psychotic.”Doris Egan )

(நூலாசிரியர் இதன்பின் கிறித்துவ, இஸ்லாமிய கோட்பாடுகள், ‘தெய்வப்பிறவிகள்’, படைப்பு , பரிணாமம் பற்றிப் பேசுகிறார். இவைகளிலிருந்து சிறு குறிப்புகள் மட்டும் கொடுத்துள்ளேன்.)

ஆபிரஹாமும் இஸ்மவேலும்  இணைந்து காபாவைக் கட்டியதாக ஒரு நம்பிக்கை இஸ்லாமியருக்கு. ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் - பழங்காலக் குறிப்புகள், கட்டிட அமைப்பு, வரலாற்றுக் குறிப்புகள் - இதுவரை இல்லை.  Snouck Hurgronje முகமது அரேபிய தொடர்பைக் காண்பிப்பதற்காக இந்தக் கதையைச் சொல்லியிருக்க வேண்டும். இந்த காபா அரேபிய வரலாறு, மதங்கள் இவற்றோடு தொடர்புடையதாக இருந்து வந்துள்ளது. (131)


உலகம் படைக்கப்பட்டது எட்டு நாட்களிலா (சுரா 41)? அல்லது ஆறு நாட்களிலா (சுரா 50)?

சுர 77:22-ல் மனிதன் விந்திலிருந்து உண்டாக்கப்பட்டான் என்கிறது. சுரா 21:31,  25;26.  24;44 - இவைகளில் மற்ற பொருட்கள் போல் ’முதல் நீரிலிருந்து’ 
 படைக்கப்பட்டான் என்கிறது.


Ascha :ஒவ்வொரு முறை ஏதேனும் புதிய கண்டுபிடிப்பு நடக்கும்போது இஸ்லாமியர் தங்கள் குரானுக்குள் செல்கிறார்கள் - அதில் இதைப் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.


குரானில் வரும் பல வசனங்கள் உறுதியற்றதாகவும், மிகத் தவறாகவும் உள்ளன. படைப்பு எத்தனை நாட்கள் என்பது ஒரு கேள்வி - ஆறு நாட்களா / எட்டு நாட்களா? சூரியன் படைக்கப்படுவதற்கு முன் ஏது ‘பகல்’? எல்லாம் படைக்கப்படுவதற்கு முன் அல்லாவின் அரியணை ‘நீரில்’ மிதந்தது என்றால் நீர் அப்போது எங்கேயிருந்தது?


எத்தனை முயன்றாலும் பைபிள், குரான் வசனங்கள் ‘படைப்பு’ பற்றி சரியாகச் சொன்னதாகச் சொல்ல முடியாது. (137)

விபத்துகள் - அதிசயங்கள் :
7:56 - மழை - கடவுளின் அடையாளம். ஆனால் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம்... எப்படி இவை வருகின்றன? 57:22 - எல்லாமே சுவனத்திலுள்ள ’முதல் புத்தகத்தில்’ எழுதப்பட்டவைதான். இத்தகைய விபத்துகளில் விபச்சாரத்தில் ஈடுபடுவோர் தப்பிக்கவும், பக்திமான்கள் அகப்பட்டுக் கொள்ளவும் நடப்பது ஏன்?


Hospers :   கடவுளின் அதிசயங்கள் எங்கோ எப்போதோ நடப்பதற்குக் காரணம் என்ன? அப்படி நடப்பதென்றால் பொதுவாக, பலரும் காணும் நிகழ்வுகளாக நடக்கலாமே! போர்ச்சுகல் கிராமம் ஒன்றில் மூன்று படிக்காத சிறுவர்களுக்கு பாத்திமா மாதா காட்சி கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இது நடந்தது 1917. அப்போது முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காட்சி கொடுப்பதற்குப் பதில் நடந்து கொண்டிருந்த உலகப் போர் ஆரம்பிக்காமலோ, ஆரம்பித்த உலகப் போர் முடிவடையவோ மாதா முயற்சித்திருக்கலாமே! (144)


இதன்பின்  நூலில் ஏசுவும், கிறித்துவமும் பேசப்படுகின்றன.

 பய உணர்வு
Why I Am Not A Christian  என்ற தன் நூலில் Bertrand Russel  -- சமயங்கள்  முழுமையாக மனிதனின் பயத்தின் மேல் கட்டப்படுகின்றன. புரியாத ஒன்றின் மேலுள்ள பயம், தோல்வியின் மேலுள்ள பயம், மரணத்தின் மேலுள்ள பயம் -இந்த பயங்களே மனத்தின் ஆழத்தில் உள்ளன. இந்த பயமே கொடுமையின் பிறப்பிடமாகி விடுகிறது. இந்தக் கொடூரமும் மதமும் இணைந்தே செயல்படுகின்றன.


அழிவில்லா காலத்திற்கான தண்டனைகள் இரக்கமுள்ள, கனிவுள்ள, நல்லதே செய்யும் ஒரு கடவுளுக்கு எதிரானவை. அதுபோலவே ஒருவன் பிறக்கும் போதே அவன் மரணத்திற்குப் பின் போகுமிடம் சுவனமா, நரகமா என்பதும் கடவுளால் முன்பே தீர்ப்பிடப்படுகிறது. அப்படியானால், கடவுள் தன் படைப்புகளை இந்த நரகத்திற்காகவே படைத்துள்ளார் போலும்.(157)


குரானில் சொல்லப்படும் பல தண்டனைகள் மிகக் கொடூரமானவை. குரான் தோன்றிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் இவை; அதனால்தான் குரானில் இடம் பெற்றன என்று சொல்வதெல்லாம் மதிப்பற்ற வாதங்கள். கடவுளின் வார்த்தைகள் - எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும்.
5 : 38 - திருடனின் கையை காலை வெட்டு
5 : 33 - கடவுளையோ நபியையோ எதிர்ப்பவனை சிலுவையில் அறைந்து கொல்.
4 : 15 - வழி தவறிய பெண்களுக்கு சாகும் வரை வீட்டில் சிறை.
24 : 2-4 - முறையற்ற பாலியல் குற்றத்திற்கு நூறு சவுக்கடிகள்.

ஆனால் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமைச் சட்டத்தில் எந்த மனிதனையும் சித்திரவை செய்வது, மிகக் கடும் தண்டனை அளிப்பது, மனிதத் தன்மையற்ற கடும் தண்டனைகள் தருவது தடுக்கப்படுகிறது!(158)


குரானில் வரலாற்றுத் தவறுகள் :
சுரா 40 : 38 - ஹமான் பெர்சியன் அரசர் Ahasuerus-ன் அமைச்சர். ஆனால் குரானில் இவர் மோசஸ் காலத்து பெரோவாவின் அமைச்சராகச் சொல்கிறது.


ஏசுவின் தாயான மேரியும், மோசஸ்,ஆரோன் இவர்களின் சகோதரியான மேரியும் குரானில் குழப்பப்படுகிறது.

சுரா 2 : 249, 250 - இதில் வரும் ஜாலூத்தும், கிட்டியன்(Gideon in Judg.) 7:5ல் வருபவரும் குழப்பப்பட்டிருக்கிறார்கள்.

18 : 82 - மஹா அலெக்சாண்டரும் (Alexander the Great),  ரொமான்ஸ் அலெக்சாண்டரும் (Alexander of Romance) குழப்பபட்டிருக்கிறார்கள். குரானில் சொல்லப்படும் அலெக்சாண்டர் நிச்சயமாக ஒரு மெஸிடோனியாவைச் சேர்ந்த இஸ்லாமியன் இல்லை; அதோடு, அவர்களின் நம்பிக்கைப் படி அவன் ஆபிரஹாமின் காலத்தைச் சேர்ந்தவனும் இல்லை.  (159)

குரானின் படிப்பினைகள் மனித மனத்தை, அதன் நியாய உணர்வுகளைக்  கீழாக்கும் நிலையையும், சமூக, அறிவியல், பண்பாட்டியல் இவைகளையும் கீழ்த்தரமாக்கும் தரத்தில்தான் உள்ளன. கடவுளின் வார்த்தைகள் என்பதை விடவும் இவை ஒரு இரக்கமுள்ள கடவுளின் பண்புக்கு ஒவ்வாத முரட்டு, காட்டுமிராண்டித் தனமான கொள்கைகளைத் தான் கொண்டிருக்கிறது. குரானின் வார்த்தைகளில் முகமதுவின் சேர்க்கை நிச்சயம் உண்டு என்பதை இதுவரை காண்பித்திருக்கிறோம். முகமது 7-ம் நூற்றாண்டின் பண்பாட்டைத் தான் காண்பிக்கிறார். ஆனால் இந்தப் பண்பாடுகள் இந்த நூற்றாண்டிற்கு நியாயமானதாக இல்லை.


சமயங்களும், சிறப்பாக இஸ்லாமும் :
சமயங்களைச் சாடுவது சரியில்லை; ஏனெனில் மனிதனை நல்லவனாக்குவது சமயங்களே. இப்படியெல்லாம் சொல்கிறார்கள்; ஆனால் நான் அப்படி எதையும் இதுவரை பார்க்கவில்லை - Bertrand Russel, Why I Am Not A Christian.

சமயங்கள் தவறாக இருக்கலாம்; ஆனால் அவை நம்மை நல்வழிப்படுத்த வந்த அமைப்புகள் - இப்படிச் சொல்வதும் ஒரு தவறு. ஏனெனில் இந்த சமயங்கள் மனித மனத்தைத் திரித்து, உள்ளும் புறமும் பொய்மையோடு இருக்க வைக்கிறது. அதையெல்லாம் விட முழுமையான உண்மைகளை நாம் உணர முடியாதபடி வைக்கின்றன. (161)


*




14 comments:

Anna said...

"இஸ்லாமியர்கள் மறுப்பது போலன்றி முகமது கடவுளை நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். ஆதாரம்: 53: 2-18. மற்ற நேரங்களில் ஜிப்ரேலை மட்டும் பார்க்கிறார். ஆனால் தான் பார்த்தது கடவுள் / ஜிப்ரேல் என்பது எப்படி முகமதுவிற்குத் தெரியும்? முகமதே மனத்தளவில் தவறாக புரிந்து கொண்டிருக்கக் கூடாதா? கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லும் பலரை மன நோயாளிகளாகத்தான் நாம் காண்கிறோம்."

நிச்சயமாக.
இந்த சந்திப்புக்களில் முகமது விபரிக்கும் அனுபவங்கள் Temporal Lobe Epilepsy இன் அறிகுறிகளிடன் ஒத்திருப்பதால் , முகமதிற்குக் கூட Temporal Lobe Epilepsy இருந்திருக்கலாமென சிலர் எண்ணுகின்றனர்.

"சூரியன் படைக்கப்படுவதற்கு முன் ஏது ‘பகல்’? "

:) I love the way this six year old thinks about this issue.

saarvaakan said...

/குரானில் வரலாற்றுத் தவறுகள் :/
பெரும்பாலும் வரலாற்று ஆதாரங்கள்,சம கால நிகழ்வுகள்,போன்றவற்ரை இம்மத வாதிகள் பேச மாட்டார்கள்.அப்படி பேசினாலும் இப்படி மழுப்பலாக இருக்கும்.
தோழர் செங்கொடி பதிவுகளில் இப்புத்தகத்தில் குறிப்பிட்ட பல விஷயங்களை விவாதம் நடந்துள்ளது.அதன் அடிப்படையில் இந்த வரலாற்று தவறுகளை மதவாதிகள் எப்படி சமாளிக்கிறார்கள்.

//சுரா 40 : 38 - ஹமான் பெர்சியன் அரசர் Ahasuerus-ன் அமைச்சர். ஆனால் குரானில் இவர் மோசஸ் காலத்து பெரோவாவின் அமைச்சராகச் சொல்கிறது.//

குரானில் இவர்தான் என்று பெயர் குறிப்பிரடபடவில்லை. ஆகவே இருவரும் வெவேறு ஆட்கள்.அவர் யாரென்பது எங்களுக்கு அவசியம் இல்லை.அவர் இவர் இல்லை

//ஏசுவின் தாயான மேரியும், மோசஸ்,ஆரோன் இவர்களின் சகோதரியான மேரியும் குரானில் குழப்பப்படுகிறது.//
19:28. “ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

ஹாரூனின்(ஆரோனின்) சகோதரியே என்றே குரான் விளிக்கிறது அதாவது ஹாரூனின்(ஆரோனின்) வந்தவர் இயேசுவின் தாய் மிர்யம்(மேரி,மரியாள்).இது எப்படி!!!

//18 : 82 - மஹா அலெக்சாண்டரும் (Alexander the Great), ரொமான்ஸ் அலெக்சாண்டரும் (Alexander of Romance) குழப்பபட்டிருக்கிறார்கள்.//

குரான் சொல்வது துல்கர்னைன்.ஆகவே இருவரும் வெவேறு ஆட்கள்.அவர் யாரென்பது எங்களுக்கு அவசியம் இல்லை.அவர் இவர் இல்லை.

//சுரா 2 : 249, 250 - இதில் வரும் ஜாலூத்தும், கிட்டியன்(Gideon in Judg.) 7:5ல் வருபவரும் குழப்பப்பட்டிருக்கிறார்கள்.//
தாலுத்(சவுல்) ஜாலுத்(கோலியாத்) உடன் போருக்கு சென்ற கதை கூறப்படுகின்ரது.தாவூத்(தாவிது,டேவிட்) கோலியாதை கொன்ற‌ கதை அனைவருக்கும் தெரியும்.இந்த தண்ணீர் குடிக்கும் விஷயம் மட்டும் கிதியோன் செய்தாக பைபிள் குறிப்பிடுவதை முரண்பாடாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கிதியோன் மட்டும்தன் தண்ணீர் குடிக்க வைப்பாரா,சவுல் மாட்டாரா என்று கேட்டு விடலாம்.

குரான் கோர்வையாக எழுதப்படாதாலும்,பலரது பேரை குறிபிடாததாலும்,குறிப்பிட்டாலும் இவர்தான் அவ்ர் என்று ஒரு பைபிள் ஆசாமியை கட்டுவார்களெ தவிர அவர்களுக்கும் இதில் குழப்பங்களும் சந்தேகமும் மட்டுமே உள்ளது. இன்னும் பலரது பெயர்,காலம்,இடம் சரியாக கணிக்கப்படவில்லை.

saarvaakan said...

//ஆபிரஹாமும் இஸ்மவேலும் இணைந்து காபாவைக் கட்டியதாக ஒரு நம்பிக்கை இஸ்லாமியருக்கு. ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் - பழங்காலக் குறிப்புகள், கட்டிட அமைப்பு, வரலாற்றுக் குறிப்புகள் - இதுவரை இல்லை. Snouck Hurgronje முகமது அரேபிய தொடர்பைக் காண்பிப்பதற்காக இந்தக் கதையைச் சொல்லியிருக்க வேண்டும். இந்த காபா அரேபிய வரலாறு, மதங்கள் இவற்றோடு தொடர்புடையதாக இருந்து வந்துள்ளது. (131)//

1. குரானில் இருந்து காஃபா என்பது மக்காவில் உள்ள்து என்பதை காட்ட முடியாது.
2. ஆபிரஹாம்,மோசஸ்,எகிப்தில் இருந்து பாலஸ்தீனம்,தெரிந்து கொள்லப்பட்ட மக்கள் என்ற பைபிள் கட்டுககதைகளையும் ஆதாரமின்றியே குரான் குறிப்பிடிவதால் மட்டுமே நம்புகின்றனர்.

3.ஹாஜர்(ஆகார்‍) என்பவர் எகிப்திய அடிமை பெண் என்று புஹாரி குறிபிடிகிறார்

4.பல காஃபாக்கள் இருந்து வந்துள்ளன. அவற்றின் முந்தைய பல சடங்குகள் இப்போதும் கடைப்பிடிக்கப் படுகின்ரன.மெக்கா காஃபாவைத் தவிர பிற காஃபாக்கள் அழிக்கப் பட்டன.

saarvaakan said...

//எத்தனை முயன்றாலும் பைபிள், குரான் வசனங்கள் ‘படைப்பு’ பற்றி சரியாகச் சொன்னதாகச் சொல்ல முடியாது. (137)//

எத்தனை முயன்றாலும் பைபிள், குரான் வசனங்கள் ‘படைப்பு’ பற்றி சொலவதை சரியாகச் புரிந்து கொள்ள‌ முடியாது. (137).

/:ஒவ்வொரு முறை ஏதேனும் புதிய கண்டுபிடிப்பு நடக்கும்போது இஸ்லாமியர் தங்கள் குரானுக்குள் செல்கிறார்கள் - அதில் இதைப் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு./
இவர்களும் குரானில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்க்ள்.கொஞ்சம் அரபி புலமை இருந்தால் மொத்த அறிவியலும் எளிதாக கண்டு பிடிக்கப்படும்.இந்த வரலாறு,புவியியல் பாடத்தில் இறைவன் கொஞ்சம் வீக் அவ்வளதுதான்.

//உலகம் படைக்கப்பட்டது எட்டு நாட்களிலா (சுரா 41)? அல்லது ஆறு நாட்களிலா (சுரா 50)?//

ஆறுக்குள் எட்டு அடக்கம் அதாவது 8=4+2=2 என்று பார்க்காமல்
6=4+2(2) பார்த்தால் புரியும்.ஆகவே ஆறுதான் .

ஒரு திருத்தம் 6 நாட்கள் அல்ல .ஆறு காலங்கள்.ஏனெனில் பூமி தோன்றி பல காலங்கள் ஆகிவிட்டது.அதற்கு இணையாக காலங்கள் என்று மாற்றி விடலாம்.

http://saarvaakan.blogspot.com/2011/01/blog-post_11.html
//7:56 - மழை - கடவுளின் அடையாளம். ஆனால் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம்... எப்படி இவை வருகின்றன? 57:22 - எல்லாமே சுவனத்திலுள்ள ’முதல் புத்தகத்தில்’ எழுதப்பட்டவைதான். இத்தகைய விபத்துகளில் விபச்சாரத்தில் ஈடுபடுவோர் தப்பிக்கவும், பக்திமான்கள் அகப்பட்டுக் கொள்ளவும் நடப்பது ஏன்?//
ஆல் இன் ஆலில் இதற்கு ஒரு பதிவு வந்தது படியுங்கள்.
http://allinall2010.blogspot.com/2011/03/blog-post_16.html

saarvaakan said...

//ஏசுவின் தாயான மேரியும், மோசஸ்,ஆரோன் இவர்களின் சகோதரியான மேரியும் குரானில் குழப்பப்படுகிறது.//
19:28. “ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).

ஹாரூனின்(ஆரோனின்) சகோதரியே என்றே குரான் விளிக்கிறது அதாவது ஹாரூனின்(ஆரோனின்) வம்சத்தில் வந்தவர் இயேசுவின் தாய் மிர்யம்(மேரி,மரியாள்).இது எப்படி!!!

தருமி said...

The Analyst,
அந்த ஆறு வயசுப் ‘பய பிள்ளை’ பயங்கரம்!

எப்படி இந்த மாதிரி பதிவுகள் உங்கள் கண்களில் படுகிறதோ .. நன்றி

You talk to God, you're religious.
God talks to you, you're psychotic.” — Doris Egan
இந்த மேற்கோள் பார்த்திருக்கிறீர்களா?

தருமி said...

saarvaakan,
அடுத்த ஆளு பேசுறதுக்கே இடம் கொடுக்கலையே ..
:)

saarvaakan said...

உண்மையான இறை மறுப்பாளகளுக்கு சில புத்தகங்கள்

http://www.scribd.com/doc/23407214/atheist-universe

http://www.scribd.com/doc/19594932/Carl-Sagan-The-Dragons-of-Eden

suvanappiriyan said...

அனலைஸ்ட் அம்பிக்கு!

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103

இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

குர்ஆன் 4 :153

'தனது இறைவனின் பெரும் சான்றுகளை அங்கு அவர் கண்டார்'
குர்ஆன் 53:18

இவை எல்லாம் முகமது நபி இறைவனைக் காணவில்லை என்று தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இறைவனைப் பார்த்தார் அவருக்கு மனநோய் என்றெல்லாம் தத்துபித்தென்று உளறிக் கொட்டும் அனலைஸ்ட்டைத்தான் ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். உளறிக் கொட்டுபவருக்குப் பெயர் அனலைஸ்டாம். :-)

தருமி said...

சுவனப்பிரியன்,
//அனலைஸ்ட் அம்பிக்கு!//

இந்த அம்பி போன்ற சொற்களுக்கு இங்கு ஏதும் தேவையுள்ளதா? தவிர்த்து விடுங்கள். இது தேவையற்ற ஒரு வன்மத்தைத் தான் காண்பிக்கிறது.

தருமி said...

//நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் கட்டுரையாளர் எந்த அளவு விபரம் உள்ளவர் என்பதை

இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.//

பார்க்காமலா இருக்கப்போகிறோம். ஏற்கெனவே பார்த்து விட்டேன். உங்கள் கருத்து மட்டுமே சரி, அவைகளுக்கு எதிர் கருத்தே இருக்கக்கூடாது என்பது தெளிவாகிறது.

தருமி said...

//இறைவனைப் பார்த்தார் அவருக்கு மனநோய் என்றெல்லாம் தத்துபித்தென்று உளறிக் கொட்டும் //

இறைவனைப் பார்த்து, அதன் பின் ‘தத்துபித்து’ என்று முகமது கூறியிருந்தால் மனநோய் என்ற பிரச்சனை வராது. பிரச்சனை hallucination பற்றியது.

இது மாதிரி “நிறைய பேர்” கடவுளைப் பார்த்ததாகச் சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கும் முகமதுவிற்கும் என்ன வேற்றுமை?

Anna said...

சுவனப்பிரியன்,

சொன்ன கருத்தை முழுமையாக விளங்கி அதற்கு எதிர்க்கருத்துச் சொல்லாமல் கருத்துச்சொன்னவளைத்தாக்கி ஒரு பயனும் வரப்போவதில்லை.

முகமது கடவுளைப்பார்த்தாரா இல்லையா என்பதைப் பற்றியதல்ல எனது கருத்து. Angel Gabriel ஜப் பார்த்தேன் என்று சொல்வதும் அவருக்குக் கிடைத்த revelations கூட அதே hallucinations ற்குள் சேர்க்கலாம். இவையெல்லாம் உண்மையானவை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? electromagnetic fields ஆல் மூளையின் temporal lobe ஜத் தூண்டும் போது அநேகமானோருக்கு religious sensations ஜ ஆய்வுகூடத்திலேயே தூண்டலாம்.

இந்த BBC Horizon இன் God on the brain என்ற documentary ஜப் பார்த்தீர்களானால் தெரியும் என்னையும் விட அதிக மனநோயுள்ளவர்கள் எல்லாம் :), மற்றைய சில மதத்தலைவர்கள்/மதத்தை உருவாக்கியவர்கள் கூட இவ்வாறு TLE ஆல் பாதிக்கப்பட்டிருக்கலாமெனக் கருதுகின்றனர். But it is of course your right to dismiss it as crazy people talking.

yasir said...

//அவனைக் கண்கள் பார்க்காது,அவனோ கண்களைப் பார்க்கிறான்//

ஒரு கல்லோ கற்சிலையோ நம்மைப் பார்க்கிறது என்பதை எப்படி நிரூபிக்க முடியாதோ அது போல் கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்பதையும் நிரூபிக்க முடியாது. எதிரே ஒரு கல் அல்லது ஒரு சிலை இருக்கிறது என வைத்துக் கொள்வோம்,கண்கள் இருக்கும் நம்மால் அதை பார்க்க முடிகிறது என்பது உண்மையா? அல்லது கண்கள் இல்லாத ஒரு கற்சிலை நம்மை பார்க்கிறது என்பது உண்மையா? ஒரு தூதர் கடவுளை பார்க்க வேண்டும் என கேட்டதற்கு மலைகள் தெரித்தனவாம், உன்னை யார் அப்படி வரச்சொன்னது? அமைதியாக வரத் தெரியாதா?அல்லது வர முடியாதா? ஒரு கல்லுக்கு முன் நின்று வேண்டுவதற்கும் கற்பனையாக நினைத்துக் கொண்டு நீங்கள் வேண்டுகின்ற கடவுளுக்கும் என்ன பெரிய வேறுபாட்டை உணர்ந்தீர்கள்?

Post a Comment