|
Thursday, November 03, 2011
533. Gaddafi - A dictator or a rebellion ?
*
*
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
i accept all these things... then why people not supporting him in last days....
தருமி,
நீங்க சொல்லி இருப்பது எல்லாம் உண்மையாக இருக்கலாம்,(40 ஆண்டு ஆட்சில இருக்க ஜனநாயகவாதியால முடியுமா?) ஆனால் எனக்கு ஒரு கேள்வி,இதே நேட்டோ நாடுகள் ஏன் மக்கள் உரிமைக்காக இலங்கையில் செயல்படவில்லை(அங்கே பெட்ரோல் இல்லை)
அப்புறம் நேட்டொ நாடுகளின் லிபியா செயல்பாடுகளை முன் உதாரணம் காட்டி நேட்டோ நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் ராசபக்சேக்கு எதிராக ஏன் அழுத்தம் கொடுக்க கூடாது. குறைந்த பட்சம் தீமையிலும் ஒரு நன்மை தானே!
அப்புறம் அமெரிக்கா தான் பெரிய ஜனநாயக சர்வாதிகாரினு தெரிந்தும் அங்கேயே ஒரு இணைய பெட்டிஷன் போட்டு அதுல கை எழுத்து போடலைனா தமிழன் இல்லைனு சொல்றாங்க, நானும் போய் கை நாட்டு போட்டேன். இதுக்கு பலன் எதுவும் இருக்குமா?
அப்புறம் நீங்க கூட ரொம்ப ராச தந்திரமா கிரிட்டிகலான மேட்டர்லாம் தவிர்த்து பதிவு போட்டு இருக்கிங்க...அப்போ நீங்க சனநாயகவாதி தான்!
உண்மை, ஹிட்லர் கூட மிகவும் அரிதான நல்ல விஷயங்கள் செய்திருப்பதாக படித்திருக்கிறேன்... யூதர்களை கொன்றது மட்டும் தான் ஹிட்லர் செய்த மிகப் பெரிய அநீதி... அதுவே அவனுக்கு சாவு மணி அடித்தது..
வணக்கம் அய்யா
நமது நண்பர்கள் சிலர் லிபியாவில் பணி புரிந்து போரின் போது திரும்பியவர்கள்.அவர்களிடம் உரையாடிய போது அறிந்த சில விவரங்கள்.
நடந்தது என்ன?
1.லிபியாவில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றனர்.இனக் குழு சார்ந்த பற்று,தேசியமே அதிகம்.
2.கடாஃபி சில இனக்குழுக்களை ஆதரித்தார்.சிலரை ஒது(டு)க்கி விட்டார்.எண்ணெய் வளத்தை நாட்டுடமை ஆக்கியது மேற்கத்திய நாடுகளை கோபப் படுத்தியது.
3.கடாஃபியை எதிர்த்தவர்களை எண்ணெய் வள சுரண்டல் கும்பல் ஊக்குவித்தது.
4.எதிர்த்தவர்களை ஈவு இரக்கம் இன்றி வேட்டையாடினார் கடாஃபி.
5. இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கடாஃபியால் ஒடுக்கப் பட்டனர். அவர்களும் இப்போரில் மேற்கத்திய அரசுகளால் கடாஃபிக்கு எதிரான போரில் பயன் படுத்தப் பட்டனர்.
6. கடாபி அழிக்கப்பட்டு மாற்று அரசு வந்து விட்டது.
****************
சரி இனி என நடக்கும்
1.லிபியா ஒரு இஸ்லாமிய அரசாக மாறும்.அதில் என்ன மனித உரிமை மீறல் நடந்தாலும் எண்ணெய் சுரண்டலுக்கு லிபிய அரசு ஒத்துழைக்கும் வரையில் கண்டு கொள்ள மாட்டார்கள். . (சுருக்கமாக் சொன்னால் சவுதி மாதிரி).
2..லிபியாவிற்கு பிறகு சிரியா, ஈரான்... என்று அனைத்து எண்ணெய் வள நாடுகளையும் சவுதி போல் நல்வழி படுத்தும் வரை மேற்கத்திய நாடுகளின் புனிதப் போர் தொடரும்(Crusades or Jihad?)!!!!!!!!!!!!!!!!!!
3.அவர்கள் மனித உரிமை மீறல்களை அனுமதிப்பதே நாளை இதனை சாக்காக வைத்து எண்ணெய் மறுக்கும் போது ஆக்கிரமிப்பு நடத்தவே என்று தெரியாமல் ஆட்சி நடத்தும் கன்வான்கள் இருக்கும் வரை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டாட்டமே!!
4,இபோது சவுதி புகழ் பாடும் பதிவர்கள் இருப்பது போல் லிபிய அரசு புகழ் பாடும் தமிழ் பதிவர்கள் தோன்றுவார்கள்.
5 .நம்மை மாதிரி சிலர் வேலையில்லாமல் இப்பதிவர்களுடன் விவாதித்து கொண்டிருப்போம்!!!!!!!.
விக்கிரமாதிதனும் வேதாளம் கதை போல்!!!!!!!!!!!!
17th reason - He was not allowed US corporates to swindle the Libiya's resources and Economy
எனக்கு இதில் சில விஷயங்கள் மிக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அதனால்தான் இங்கு பதிவிட்டேன்.
//லிபியா ஒரு இஸ்லாமிய அரசாக மாறும்.//
லிபியா மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகள் மிக அடிப்படைவாதிகளான ‘islamic brotherhood' கீழே வரப் போகிறது என்றுதான் எண்ணுகிறேன். அதன் பின் நிலைமை எப்படியிருக்கும் என்றும் எண்ணிப் பார்க்கிறேன்.
வேல்முருகன்
நீங்கள் சொன்னது போல் இது ஒரு எண்ணெய் யுத்தம் தான்.
முனிசாமி
எல்லாம் எண்ணெய் செய்யும் கோலம்!
வவ்வால்
எனது ‘ராஜ தந்திரம்’ என்ன என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்.
சூர்ய ஜீவா
நன்றி. சர்வாதிகரிகளின் முடிவுகள் பொதுவாக இப்படித்தான் போலும்.
//
லிபியா மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகள் மிக அடிப்படைவாதிகளான ‘islamic brotherhood' கீழே வரப் போகிறது என்றுதான் எண்ணுகிறேன்.//
சார்வாகன்
இப்போதுதான் கிலாபத் ஆட்சி என்னவென்று தெரிந்தது. அப்போது இப்படி வரப்போகும் அரசுகள் எல்லாமே கிலாபத் ஆட்சிதானோ?
வணக்கம் அய்யா
/அப்போது இப்படி வரப்போகும் அரசுகள் எல்லாமே கிலாபத் ஆட்சிதானோ?/
கிலாஃப(khilafa) என்னும் ஆட்சி முறை துருக்கியர்களால் சுமார் 600+(1299–1923)வருடங்களாக இருந்தது.அது முதல் உலக்ப் போரின் போது உடைத்து பல் நாடுகளக்கப் பட்டது.
http://en.wikipedia.org/wiki/Ottoman_Empire
மத்திய கிழக்கின் இப்போதைய ஆட்சியாளர்கள் அனைவருமே இப்போரில் பிரிட்டிஷாருக்கு உதவியவர்கள்தான். ஒரு வேளை மீண்டும் கிலாஃபா என்பது வரும் வாய்ப்பிற்கு மிக அதிக எதிரான நாடு சவுதி என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.
சவுதியை நம்ம ஆள்கள் சிலர் புகழ்கிறார்களே தவிர பல மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி ஆட்சியாளரை இஸ்லாமின் தலைமை பொறுப்பாளராக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.சவுதி ஆட்சிளார்கள் கிலாஃபாவை ஏற்றால் அவர்கள் ஆட்சி உரிமை போய் விடும்.ஆகவே வரவே வராது!!!!!!!!!!!!!
எண்ணெய் இன்னும் ஒரு அதிக பட்சம் 50 வருடம் அதன் பிறகு யாரும் மத்திய கிழக்கை கண்டு கொள்ள மாட்டார்கள்.அதன் பிறகு மத்திய கிழக்கில் உட்பூசல்கள் மிகுந்து மிகுந்த பொருளாதா ,அரசியல் பின்னடைவுகளை சந்திக்கும். அதிக பொருளாதார பலம் இல்லாமல் ஒரு பேரரசை கொள்கையின் அடிப்படையில் கட்டமைப்பது மிக கடினம்!!!!!!!
நன்றி
சார்வாகன்,
//சவுதி ஆட்சிளார்கள் கிலாஃபாவை ஏற்றால் அவர்கள் ஆட்சி உரிமை போய் விடும்.//
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் சுவனப்பிரியன் வேறு மாதிரி சொல்கிறார்.
//பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாபத் ஆட்சி அமையும். பிறகு இறைவன் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு கடினமான மன்னராட்சி அமையும். அதன் பிறகு அடக்கு முறை கொண்ட மன்னராட்சி அமையும். பிறகு இறைவன் நாடும்போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான். பிறகு நபித்துவ வழியில் கிலாபத் ஆட்சி அமையும் //
அரசியல் வழியா? நூல் வழியா? எது நடக்கும்?
1./பிறகு நபித்துவத்தின் வழியில் கிலாபத் ஆட்சி அமையும்/
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!!!!!!!!!!
கிலாஃபாவின் எல்லைகளை உலக வரை படத்தில் குறிக்கவும்!!!!!
2./பிறகு இறைவன் நாடும் போது உயர்த்த வேண்டிய தருணத்தில் அதை உயர்த்தி விடுவான்/
இன்னும் 50 வருடத்தில்( அல்லது எண்ணெய் தீர்ந்தவுடன்) சவுதியே ஒரு நாடாக இருக்காது என்பது என் கணிப்பு.
3./அரசியல் வழியா? நூல் வழியா? எது நடக்கும்? /
இதுவரை நடந்தது அனைத்துமே அரசியல் எனும் போது,அதுவே தொடரும்.
இன்னும் கொஞ்ச நாளில் சவுதிக்கு உதவுதாக காட்டி ஈரானை அமெரிக்கா ஆக்கிரமிக்கும். சவுதி ஆட்சியாளர்கள் அமெரிக்க நண்பனாக இருப்பதை மறைக்க போடும் வேடமே இந்த மத பிரச்சாரம்!!!!!.ஆகவே இந்த சவுதி பிரச்சாரகர்கள் சொல்வது எல்லாம் கண்டு கொள்ள அவசியமில்லை. சவுதி,மத்திய கிழக்கு அரசியல் பற்றி இத்தளத்தில் படியுங்கள்.
http://www.islamdaily.org/en/default.aspx
http://www.project-syndicate.org/
http://www.islamdaily.org/en/default.aspx -- பார்த்தால் எல்லாம் அரசியல் வழியாகத்தானிருக்கிறது. புத்தக வழி ஏதும் தெரியவில்லை.
தருமி அய்யா!
சும்மா பகிடிக்கு சொன்னேன் ராசதந்திரம்னு :-)) ஆனால் காடபியும் அழித்தொழிப்பு வேலை எல்லாம் செய்தார், ஆடம்பர செலவுகள் செய்தார் , எப்போதும் கன்னிப்பெண்களையே தனது மெய்காப்பாளர்களாக வைத்துக்கொண்டார் என பல செய்திகள் உலாவுது அதை விட்டுப்புட்டிங்களேனு தான் சொல்ல வந்தேன்.
உலகப்போலீஸ் அமெரிக்கா சட்டம் என் கையில் என சொல்வதை வேடிக்கை தான் பார்க்கணும்!
தருமி அய்யா,
//பார்த்தால் எல்லாம் அரசியல் வழியாகத்தானிருக்கிறது. புத்தக வழி ஏதும் தெரியவில்லை.//
நீங்களே இப்போ தான் இதப்பார்க்கிறிங்களா, ஒரு காலத்தில காஞ்சலா அய்லா கட்டுரைப்போட்டப்போ இத எல்லாம் தேடிப்படித்தேன். காலிஃப் ஆட்சி என்பது மதத்தலைவர் ஆட்சிதான் இப்போ அதுக்கு பொருளாதாரத்தில உயர்ந்த அரபு நாடுகள் போகாது, சார்வாகன் சொல்றாப்போல தான். ஆனால் ஒரு புனித தன்மை சேர்க்க நூல்வழினு நூல் விடுவாங்க!
ஆனா எனக்கு என்னமோ அப்போ ஷியா , சன்னி சண்டை பெருசா தலை தூக்கும்னு தோணுது அப்போ தான் நரிக்கு நாட்டாமை கிடைக்கும்
ஒருத்தர் இறைவன் உயர்த்துவான்னு சொல்லிக்கிட்டே இருக்கார், அப்போ உடம்பு சரி இல்லைனா ஆஸ்பிட்டல் போகாம இறைவன் பார்த்துப்பான்னு குந்தி இருப்பாரா?
வவ்வால்
//காடபியும் அழித்தொழிப்பு வேலை எல்லாம் செய்தார், //
இதைப் பற்றியும் கூகுள் ஆண்டவர்ட்ட கேக்கணும்னு நினச்சேன்.
//உடம்பு சரி இல்லைனா ஆஸ்பிட்டல் போகாம ..//
சின்னப் பிள்ளைங்கல்லாம் ஏன்தான் இப்படியெல்லாம் இருக்கீங்களோ ..! கடவுள்தான் உங்களையெல்லாம் காப்பாத்தணும்!
தருமி அய்யா!
//சின்னப் பிள்ளைங்கல்லாம் ஏன்தான் இப்படியெல்லாம் இருக்கீங்களோ ..! கடவுள்தான் உங்களையெல்லாம் காப்பாத்தணும்!//
அஹம் பிரம்மாஸ்மீ! :-))
அப்புறம் நீங்களும் சின்னப்பிள்ளை தானே, அப்புறம் என்ன உங்களைனு பிரிவினைபேசிட்டு!
unrelated.
mile sur making is being shared here:
http://surveysan.blogspot.com/2011/11/blog-post.html
கடாஃப்பி ஒரு பொதுநல நாடு (welfare state) நடத்தியது உண்மைதான். ஆனால் லிபியாவில் யார் ஆட்சி செய்தாலும் அவ்வாறு இருந்திருக்கும்- காரணம் குறைந்த மக்கள் தொகை, அபரிதமான எண்ணை வளம்.
என்னத்தான் இருந்தாலும் மக்களுக்கு தலையாய தேவை, எல்லாத்துறைகளில் சுதந்திரம் (liberty in all spheres). அதவும் அரசியல் சுதந்திரம் முக்கியமானது.
ஒரு நாட்டு மக்களின் சுதந்திரத்தை யாராலும் அடக்கி வைக்க முடியாது. மக்கள் அந்த அடுக்குமுறைக்கு எதிராக கிளிர்த்துயெழுவார்கள். கடாஃப்பி தன் அரசியல் எதிரிகளை அடக்கியவிதம் கொடூரம். மேலும் அவர் அதிகாரம் செலுத்துவது எந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் என்றால், அது சர்வதிகாரத்தின் அடிப்படையில் தான் என்று பதில் வரும். மக்கள் அதிகாரம் இல்லை அவருக்கு.
இந்த கிளர்ச்சிக்கு முக்கியம் உரமாக இருப்பது, ஆட்சியாளர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஊழல்கள், மற்றும் மக்கள்பணத்தில் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்வது. இதையையும் கடாஃப்பி செய்தார்.
அதனால் கிளர்ச்சிக்கான சூழ்நிலைகள் இருந்து, அரபு கிளர்ச்சிகள், என்ற பொறியில் வெடித்து, அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளின் எண்ணை தேவை அரசியலால் NATO தலையிட்டு, கடாஃப்பிக்கு ஒரு முடிவு கட்டிவிட்டனர்.
தருமி சார்!
http://www.youtube.com/watch?v=GtCbTxS9UvU
இந்த யுடியூபில் வரும் இந்த பிராமணரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
//இந்த பிராமணரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். //
*நல்ல தாடி வைத்திருக்கிறார்.
*அவருக்கு நீலச்சட்டை பொருத்தமாயுள்ளது.
*சரளமாகப் பேசுகிறார்.
சுவனப்பிரியன்,
ஒருவேளை பிராமணர் எங்க மதத்துக்கு வந்துட்டாரே என்ற சந்தோஷத்தில் அனுப்பினீங்களோ? இருக்கலாம். நானும் converted from islam to christianity அப்டின்னு யூட்யூப்ல போட்டுப் பார்த்தேன். அதுவும் எக்கச்சக்கமா இருக்கே ... அதுல ஏதாவது உங்களுக்குக் கொடுத்துப் பார்க்கச் சொன்னா சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும் அப்டின்னு நினச்சி விட்டுட்டேன்.
நான் ஏற்கெனவே சொன்ன ஒன்று: தன் மதத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்த எவனும் மதம் மாறுவதில்லை. மாறும் மதத்தினையும் முழுவதுமாகப் புரிந்து கொள்வதில்லை.
இதே போன்றுதான் நீங்க கொடுத்த படத்தில் வர்ர இளைஞர். முதல் காரணம்: இந்து மதத் தத்துவங்களைப் பற்றி ஏதும் தெரியாமல், ராமாயணக் கதை, பிள்ளையார் கதை, சாமுண்டீஸ்வரி கதை என்றெல்லாம் சொல்லி அவைகளில் இந்து மதத்தைப் புரிந்து கொண்டதாகப் பேசுகிறார். பாவம் .. 13-16 வயது சின்னப் பையன்தானே! மதத் தத்துவங்கள், வேதங்கள் என்று கொஞ்சம் லெவல் ஏறி, அவைகளைப் பற்றிப் பேசியிருந்தால் அர்த்தம் நிறைந்ததாக இருந்திருக்கும்.
எப்படியோ நானும் அவரைப் போல்தான். அவர் சொன்னது: //When truth is reached, what is there to be in ignorance.//
பையனுடைய பாட்டியைப் பேச வைத்திருக்கலாம். she was more practical and knowledgeable.
தொடர்ச்சி ...
அந்த இளைஞர் கிறித்துவம் பற்றிப் பேசும்போது நல்ல ஒரு கேள்வி கேட்டார்: why should god send his son to this world?
எனக்கும் why should god send his prophet to this world? என்றுதான் தோன்றியது.
தொடரும் ...
என்னை மீண்டும் கிறித்துவத்திற்குள் கொண்டுவர பல கிறித்துவ மாணவ, மாணவியர், நண்பர்கள் முயற்சித்தது உண்டு; அதில் ஒருவர் 28 வயதிருக்கும்; நான் ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் சேர்ந்தார். நல்ல கதையெல்லாம் எனக்கு lunch time-ல் சொல்வார்: ஆண்களுக்கு ஒரு விலா எலும்பு குறைவு; ஆழமா ஒரு போர் போட்டு அதுக்குள்ளாற ஒருத்தர் ஒரு டேப் ரிக்கார்டரை அனுப்பினாராம். நரகத்தின் அழுகுரல் கேட்டது ...
தாங்க முடியாமல் எப்போது, எப்படி கிறித்துவரானீர்கள் என்று கேட்டேன். முதலாண்டு முதல் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை; அப்போது கிறித்துவனானேன். அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் என்றார்.
நீங்கள் 18 வயதில் கிறித்துவத்திற்குள் வருகிறீர்கள்; நான் 48 வயதில் வெளியே போகிறேன். எது matured ஆன, சரியான மாற்றமாக இருக்கும் என்றேன்.
அன்றிலிருந்து என்னை விட்டு விட்டார்.
இந்த இளைஞனும் அப்படித்தான் ...
read that article.
//every regime must know when to quit and every leader, .... must know that he cannot rule in perpetuity//
ரொம்ப நியாயமா இருக்கு!!!
Nice Read Dhurami Sir.... I read a good article on Lessons from Libya in which the author has said "But the greatest lesson from Libya is that every regime must know when to quit and every leader, democratic or dictatorial, benevolent or malevolent, must know that he or she cannot rule in perpetuity". Living in Africa for close to a decade I have observed this trait in most of the african leaders, they don't know when to quit until they are pushed down. If you are interested in the article the link is available at: http://allafrica.com/stories/201111030731.html
Post a Comment