Saturday, July 07, 2012

578. THE GNOSTIC GOSPELS ... 3

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 

*

II 

"ONE GOD, ONE BISHOP":

THE POLITICS OF MONOTHEISM



"வானத்தையும் பூமியையும் படைத்த எல்லாம் வல்ல ஏக இறைவனை நம்புகிறேன்”  -- கிறித்துவ நம்பிக்கைகளின் அடிப்படை இது. இந்தச் சொற்றொடரை மார்ஷியன் (Marcion) பழமைக் கிறித்துவர்களுக்காகவே (Orthodox Christians) அமைத்ததாகச் சொல்வதுண்டு. ஏனெனில், ஏசியா மைனரில் இருந்த மார்ஷியன் பழைய ஏற்பாட்டு கடவுளும், புதிய ஏற்பாட்டுக் கடவுளும் இரு வேறு நிலைப்பாடுகளில் இருப்பதாகக் கருதினார். முதல் கடவுள் நியாயத் தீர்ப்பிடும், கட்டளைகளைப் புறக்கணிப்புகளுக்குத் த்ண்டனை தரும் கடவுளாகவும், புதிய ஏற்பாட்டுக் கடவுள் மன்னிப்பையும், அன்பையும் தரும் தந்தையாகவும் இருப்பதாக உணர்கிறார். ஏனிப்படி மிகவும் ஆற்றல் மிக்க ஒரு கடவுள் மிகுந்த துன்பமும் துயரமும் நிறைந்த இந்த உலகைப் படைக்க வேண்டும்  என்ற கேள்வியால், இரு வகைக் கடவுள்கள் இருப்பதாக மார்ஷியன் கருதினார். பழமைக் கிறித்துவத்திற்கு வந்த அடுத்த சோதனை Gnostics.  அவர்களையும் பழமைக் கிறித்துவர்கள் 'Maricionites' என்றழைக்க ஆரம்பித்தனர். (29)

இன்றைய அறிஞர்கள் gnosticism இரட்டைக் கடவுள் என்பதோடு ஒட்டிப் போனதாக நினைக்கிறார்கள். (31)

நாக் ஹமாதியின் மூலம் Valentinian என்ற gnosticism அறிமுகப்படுத்தப் படுகிறது.  Irenaeus (180 A.D., Orthodox Bishop of Lyons),  என்பவர் Marcionites இரட்டைக் கடவுள் என்று மத அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டுகிறார்; ஆனால் Valentinians அதை அவர்கள் மறைபொருளாக வைத்திருந்தார்கள் என்கிறார்.(32)

இரண்டாம் நூற்றாண்டில் ஒரே கடவுள் என்ற அழுத்தமாகச் சொன்ன Orthodox christians  அதே நேரத்தில் ’ஒரே பிஷப்’ என்ற கொளகையிலும் அழுத்தமாக இருந்தனர். (34)

Clements (Bishop of Rome, 90 -100 A.D.) Bishop, Priests, Deacons என்ற இந்த மூவரும்தான் கடவுளின் அதிகாரத்தை இவ்வுலகில் பங்கு போடுபவர்கள்; இவர்களை மறுப்பவர்களுக்கு மரண தண்டனை என்று கூறியுள்ளார். இதை அவர் தனது கடிதம் ஒன்றில் நிலைப்படுத்தியுள்ளார். (34)

இவருக்குப் பிறகு Ignatius, Bishop, Antioch in Syria, என்பவர் ரோமிலிருந்து ஆயிரம் மைல்கள் தாண்டியிருந்தாலும் Clements போலவே தன் கருத்துக்களை எழுதியுள்ளார். ஏனைய கிறித்துவர்கள் கடவுளிடம் கீழ்ப்படிதல் போலவே Bishop-இடமும் அவர்கள் கீழ்ப்படிந்து இருக்கவேண்டுமென்கிறார். (35)

புனித பால் தன்னிடம் இருந்தோரில் ஆன்மீக விழிப்புணர்வோடு (Spiritual maturity) இருந்தவர்களிடம் மட்டும் ரகசியமாக தனக்குத் தெரிந்த பேருண்மைகளைத் தெரிவித்துள்ளார்.  கடவுளாகவும் தந்தையாகவும் கருத்தபடுபவர் உண்மையான கடவுளின் வடிவத்தில் வந்தவர்கள் என்றார். கடவுளை இரண்டாகப் பார்த்துள்ளார். ஆனால் Valentinus கடவுள் எல்லாம் வல்லவர்; அவரின் கீழ் இன்னொருவர் எல்லாவற்றையும் காத்து நிற்கிறார் என்கிறார்.

gnosis -உள்நோக்கு - கொண்டோர் யாராயினும் உள்நோக்கு கிடைப்பதற்கு முன்பு உண்மையான கடவுள் என்று மற்ற தெய்வத்தை வணங்குவர். ஆனால் gnosis -உள்நோக்கு - என்ற அருளைப் பெற்ற பின் அந்த சின்ன தெய்வத்தின் அடிமை ஆவதிலிருந்து தப்பித்து விடுவர். (37)

பழமைக் கிறித்துவர்கள் வேத ஊழியர்களையும் (clergy), பொதுநிலையினரையும் தனித்தனியே பிரித்து வைத்திருந்தனர். ஆனால்,  gnostic christians இந்த வேறுபாடுகளை மறுத்தனர். அவர்களுக்குள் எந்த வேற்றுமையையும் கண்டாரில்லை. (41)












  *

5 comments:

Anonymous said...

அருமையாக போகின்றது இத்தொடர் பதிவு !!! தொடருங்கள் சகோ .... !!!

தருமி said...

இக்பால் செல்வன்
எனக்கு ‘சகோ.’ வேண்டாமே, ப்ளீஸ்.

DEVAPRIYA said...

அருமையான புத்தகத்தை நல்ல முறையில் தரும் உங்கள் பணி தொடரட்டும்.

3,4 ம் நூற்றாண்டில் கிறிஸ்துவம் ரோமன் ஆட்சிக் கத்தியை பெற்றவுடன் சர்ச் ஏற்ற 27 புத்தகம் தவிர மீதி அத்தனை புத்தகங்களை அழித்தது. அதைமீறி புதைக்கப்பட்ட இந்த புத்தகங்கள் - புதிய ஏற்பாடு சர்ச் இயேசுவின் போதனைக்கு மாறான போதனை என்கிறது, இன்றுள்ள சர்ச் நம்பிக்கைகள் உண்மைக்கு மாறானவை- என சாடுகின்றது.

பவுல்- இயேசுவை சந்திக்காதவர். அவர் போதனையின் அடிப்படை ஆணிவேர் நம்பிக்கை- உலகம் அழியப் போகிறது என்பது தான். இதை இந்த இணைப்பில்
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_25.html

அதே போல் பழைய ஏற்பாட்டில் கர்த்தருக்கு மனைவி-கள் உண்டு இங்கே
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_08.html

Anonymous said...

மன்னிக்கவும் சகோதரன் என்று சொல்லி சொல்லி பழகிவிட்டது.. இனிமேல் சொல்ல மாட்டேன் ... !!! நன்றிகள் !!!

தருமி said...

என்ன செய்வது இக்பால். அந்த வார்த்தை கேட்டதும் ‘வாய்ச்சொல்லில் வீரரடி...’ என்பது மனதிற்குள் எனக்கு ஒலித்து விடுகிறது. அதனால் பிடிக்காது போயிற்று.

நன்றிகள்.

Post a Comment