*
அது .. இதுன்னு 8 வருஷம் முடிஞ்சி போச்சு - நான் பதிவராகி.
24.4.2005-ல் முதல் பதிவிட்டிருக்கிறேன். என்ன எழுதணும்னு அன்னைக்கும் தெரியலை; இன்னைக்கும் தெரியலை. ஆனால் இன்னும் விடாம எழுதிட்டு வந்திருக்கிறேன்.
பதிவுகள் போட்ட விவரம் இப்படி இருக்கு....
May (6)
► April (3)
► March (8)
► February (5)
► January (16)
► 2012 (78)
► 2011 (78)
► 2010 (105)
► 2009 (74)
► 2008 (43)
► 2007 (52)
► 2006 (67)
► 2005 (118)
ஆரம்பிச்ச வருஷம் ரொம்ப உன்னிப்பா இருந்திருப்பேன் போலும். 118 பதிவுகள். நிறைய சொந்தக் கதை சோகக் கதை எழுதியிருக்கிறேன். மதங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டேன். மதங்களைப் பற்றி எழுதினால் பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்? காட்ட சாட்டமாத்தான் இருந்தது.
2006 - இந்த ஆண்டும் கொஞ்சம் முக்கியமான ஆண்டாக இருந்திருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு எதிர்த்து நிறைய பதிவுகள்; அடுத்து என்னை நீதி மன்றத்திற்கு இழுப்பேன் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘இடப் பங்கீடு’ பற்றிய பதிவுகள்.
2007, 2008,2009 - வேகம் குறைந்த காலம் போல் தெரிகிறது.
2010 - இன்னும் கொஞ்சம் அதிகப் பதிவுகள்.
2011-லிருந்து பதிவுகள் குறைவு தான். (594-ம் எண்ணிக்கைக்குப் பிறகு பல மாதங்கள் மதங்கள் பற்றியேதும் இல்லை !!!)
பழைய பதிவுகளையும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் பார்த்தேன். ஒரு வேற்றுமை நன்கு தெரிந்தது. பழைய காலத்தில் பின்னூட்ட எண்ணிக்கைகள் அதிகம். இதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எழுதிய பதிவுகளின் ‘சூடு’ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து அப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் பொதுவாகவே பதிவுலகத்தில் அதிகம். ஆனால் இப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் எல்லோருக்குமே மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன்.
எண்ணிக்கைகளை விட பழைய பின்னூட்டங்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி. நிறைய பின்னூட்டங்கள் வெறுமனே ஒரு கருத்தைச் சொல்லிச் செல்வதற்குப் பதில் தனிப்பட்ட அன்பைப் பல பின்னூட்டங்களில் பார்க்க முடிந்தது. ஏதோ எழுதியிருக்கிறாய் .. நானும் ஏதாவது சொல்லிவிட்டுப் போகிறேன் என்றில்லாமல் எல்லாமே ஈரத்தோடு இருப்பதாகப் பட்டது. Many comments had a very personal touch. I could feel the warmth even when I read it now. மக்க்ள் நெருங்கியிருந்ததாகத் தோன்றுகிறது. பல சச்சரவுகள் இருந்தாலும் .. the stay was pleasant. அதுக்காக இப்போது மோசம்னு சொல்லலை. it is just neutral now! எல்லோரும் வர்ரோம் ... போறோம் அப்டின்றது மாதிரி.
அப்போ இருந்த நண்பர்களில் பலரை இப்போது ‘பார்க்கவே’ முடியவில்லை. போரடித்து ஒதுங்கி விட்டார்களா .. இல்லை.. வாழ்க்கையில் இன்னும் முக்கியமானவைகளில் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்து விட்டார்களா? சிலரை மீண்டும் இழுக்கக்கூட முயற்சித்தேன். அட .. போங்கய்யா .. பொழைக்கிற வழியைப் பார்க்கிறோம்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.
அன்றும் இன்றும் அதே இளமையை எழுத்துக்களில் தொடர்ந்து ஓட விடுவது நம்ம துளசி டீச்சர் மட்டும் தான் என்று நினைக்கின்றேன். கூடாமல் குறையாமல் தன் அனுபவங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் போல் நெடுநாட்களாக பதிவுலகில் நின்று நல்ல பதிவுகள் கொடுக்கும் பதிவர் வேறு யாராவது உள்ளார்களா? எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை.
நெடுநாளாக ’காணாமல்’ போயிருந்த ஜிரா இப்போ வந்து அப்பப்போ எழுதுகிறார். ரொம்ப லேட்டஸ்ட்டா வந்தது $செல்வன். நிறைய எழுதியவர்.இப்போ இந்தியாவுக்கே / கோவைக்கே வந்திட்டார். இனிமே எப்டின்னு பார்க்கணும். இக்பால் செல்வனை வாசிக்கும்போதெல்லாம் இந்த செல்வன் எனக்கு நினைவில் வருவதுண்டு. என்ன காரணமோ தெரியவில்லை. வெளிநாட்டிலிருந்து உள்நாட்டு விஷயங்களில் காட்டிய நாட்டமோ என்னவோ தெரியவைல்லை.
பதிவுகளிலேயே இருவர் எழுத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களைப் பற்றி முன்பே பல முறை சொல்லியுள்ளேன். ஒருவர் இளவஞ்சி.
Oh! .. no .. not Agassi ..! |
இவரின் பல பதிவுகளில் முதல் பத்தியை சிரித்துக் கொண்டே படிக்க ஆரம்பிப்போம். ஆனால் பதிவை வாசித்து முடிக்கையில் கண்களில் கண்ணீர் இறங்கி ஓடும். என்ன கலையோ .. மனுஷனுக்கு மனச உருக்குற கலை கைவந்த கலை. நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கும். அந்த வகைப் பதிவுகளும் நிறைய எழுதியிருக்கிறார்.
மொட்டும் மலரும் |
நிழல்படங்கள் எடுப்பதிலும் வல்லவர். இன்னும் கோவிலுக்குப் போகும் காரைக்குடிப் பெண்களின் தலையில் இருந்த மல்லிகைச் சரப் படம் கண்முன் நிற்கிறது. இவரது கடைசிப் பதிவு: June 22, 2010
அடுத்தவர் செல்வநாயகி. இவரைப் பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது. காரணம் அவரின் தமிழ். ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அழகில் முக்குளித்து மிக்க அழகோடு பிறக்கும். அவரது கவிதை, உரைநடை .. எல்லாமே தனி அழகு. பின்னூட்டங்களில் கூட அவரின் தமிழ் நடைக்கு அழகுண்டு. இவரது பதிவுகள் பற்றிப் பேச, எழுத நல்ல தமிழ் வேண்டும். என்னிடம் அது இல்லை. ஆகவே ‘கழண்டு கொள்கிறேன்’!! இவரது கடைசிப் பதிவு - ஜூலை 13, 2012.
இவர்கள் இருவரும் அதிகம் எழுதாதது தமிழுக்கு இழப்பு.. Don't attach any trace of exaggeration to this. I MEAN it.
இன்னும் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.
பலருக்கு ஒரு நல்ல ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்த காசி ...
முதன் முதல் பதிவெழுத வந்த போது உதவிய மதி கந்த சாமி ...
தன் ஒரே ஒரு பதிவால் - இந்து மதம் பற்றிய பதிவு - பலர் மனத்தில் இடம் பிடித்த தங்க மணி ...அப்பதிவை பின்னாளில் நான் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் பதிவுகளையும் காணோம்.
கடும் பின்னூட்டம் மட்டும் இடும் சுடலை மாடன் ...
அறிவு சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுதும் பத்மா அரவிந்தன் ...
தமிழ் .. திராவிடம் என்று பதிவுலகில் முழங்கிய முத்து தமிழினி ..
அக்கரைச் சீமையில் இருந்து ஈழத்தமிழர் பற்றிய பல கட்டுரைகளும், நூல்களும் எழுதிய திரு ...
பாடப்புத்தகத்தில் வைக்கும் அளவிற்கு மிகத் தரமான கட்டுரைகள் - ஈழம், காஷ்மீர் போன்ற பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய கட்டுரைகள் - எழுதிய தமிழ் சசி ...
இதுவரை ஒரு பதிவை வாசித்து மிகச் சத்தம் போட்டு சிரித்தேனென்றால் அது வரவனையானின் பதிவுக்குத் தான்.
flash வைத்து பல புதிர் போட்டிகள் நடத்திய பெனாத்தல் சுரேஷ் ...
சுறுசுறுப்புக்கே பெயர் வாங்கிய பொன்ஸ் ...
நகைச்சுவை, மாமியார் கதை, கும்மிப் பதிவுகள் - என்று பலவற்றையும் கலந்து கட்டிய கண்மணி ...
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஒன்றை வைத்து எல்லோரையும் சிரிக்க வைத்த இளைஞர் குழாம் ...
வெண்பா மன்னன் & குறுக்கெழுத்துப் போட்டி என்று உலுக்கியெடுத்த இலவசக் கொத்தனார் ...
என்னை பெரியப்பா என்றழைத்துக் கொண்டிருந்த மருத்துவர் ராமநாதன் ...
சினிமாக்குள் நுழைய முயற்சித்த கதைகளையெல்லாம் எழுதிய வெளிகண்ட நாதர் ...
இனிமையான நட்போடு இருந்த நெல்லை சிவா ...
இந்து மதத்தினைப் பற்றி நிறைய எழுதிய நேசகுமார் ...
நல்ல கருத்துக்களைத் தரமில்லாத வார்த்தைகளால் தந்தமைக்காக தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட ஆரோக்கியம் ...
சமயத்தொடர்புள்ள பதிவுகளில் நாட்டம் காட்டிய வசந்தன் ...
என்னைத் தாத்தா என்றழைத்த மழை ஷ்ரேயா ...
'நல்லா இருங்கடே!!!' என்று எல்லோருக்கும் ஆசி வழங்கும் ஆசீப் மீரான்...
தனக்கென தனிவழி என்று வாழ்ந்து காட்டி இன்னும் என்னை மிகுந்த பிரமிப்பில் வைத்திருக்கும் ராமச்சந்திரன் உஷா ...
என்னோடு மதப் பதிவுகளில் வழக்கமாக ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னோடு வாதாடிய இஸ்லாமியப் பதிவர்களில் மிக மட்டமான ‘மனிதன்’ - பின் வந்த நல்லடியார் --> இறை நேசன் --> நண்பன் --> (இஸ்லாமியப் பதிவர்கள் அனைவரும் புனைப்பெயரில் மட்டுமே எழுதி வந்தபோது தன் சொந்தப் பெயரில் நான் சந்தித்த முதல் இஸ்லாமியப் பதிவர்) சுல்தான் போன்றவர்கள் ...
என் கருத்துக்களோடு பலமுறை ஒத்திருந்த inomeno
அடிக்கடி என்னோடு ‘சண்டை’ போட்ட வஜ்ரா ..., முகமூடி ...
மாற்றுக் கருத்துகளை அளித்த மதுரைக்காரர் கால்கரி சிவா ...
நிச்சயமாக இன்னும் பலர் உண்டு. இவர்களும் என் காணாமல் போன நண்பர்களின் பட்டியலில் உள்ளவர்கள் தான். காணாமல் போன இவர்களையெல்லாம் மீண்டும் பதிவுகளில் ‘பார்க்கும்’ நிலை வந்தால் மிக்க மகிழ்ச்சி.
*
26 comments:
சீனா ஐயா (வலைச்சரம்-blogintamil) அவர்கள் இந்தப் பகிர்வை காண வேண்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
ஒவ்வொரு பதிவுக்கு இணைப்பு கொடுத்து இருக்கலாமே?
திரும்பி பார் நன்றாக உள்ளது.
எட்டு வருட நிறைவுக்கு வாழ்த்துகள்!
பதிவுலகை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எழுத வர வேண்டும் என்பதே எனது ஆதங்கமும்.
ஜோதிஜி,
உங்கள் ஆலோசனைப்படி பலருக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறேன். (சிலருக்கு இன்னும் தெரியவில்லை!)
நன்றி அய்யா உங்கள் வலைப்பதிவு அறிவு உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது. தருமி என்ற பெயர் உங்கள் புனைவு பெயரா. என்னால் கண்டேபிடிக்க முடியாத பல வலைப்பூகள். அறிந்தேன். உங்களைபோலவே நானும் அவர்களின் பதிவுக்காக காத்து இருக்கிறேன். வேற என்ன செய்ய முடியும் ஆம இக்பால் செல்வனை காணமுடிய வில்லையே காணமல் போன பட்டியலில் சேர்ந்து விட்டாரா
பதிவுலகில் இருந்து அவர்கள் காணாமல் போய் இருக்கலாம் ஆனால் உங்கள் மனவுலகில் இன்றும் இருக்கிறார்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு பதிவு மீண்டும் எழுதினால் அதில் என் பெயரும் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்
//தருமி என்ற பெயர் உங்கள் புனைவு பெயரா.//
ஆம் .. என் இயற்பெயர் ... இங்கே வாசித்துக் கொள்ளுங்களேன்!.
//அடுத்த 10 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு பதிவு மீண்டும் எழுதினால் அதில் என் பெயரும் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்//
தொடர்ந்து எழுதினால் அதற்குத் தேவையேயில்லையே!
:-)
உள்ளேன் அய்யா! இம்முறை மதுரை வரும் போது சந்திக்கிறேன். :)
தருமி சார், எப்பொழுதாவது பதிவுப் போட்டுக் கொண்டுத்தான் இருக்கிறேன். சோம்பல் :-) பிறகு என் எழுது பெயர் ராமசந்திரன் உஷா.
2004ல் தானே, பீச்சில் நடந்த முதல் பிளாக்கர் மீட்டிங்கில்
நீங்க சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனது :-). வருடங்கள் ஓடுகின்றன.
தருமி,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தங்கமணியின் பதிவில்தான் ஒரு நீளமான பின்னூட்டம் 2006 ல் இரவில் கண்விழித்து எழுதியிருந்தேன். இங்கே அப்போது பெண்கள் பதிவு எழுதுவதை மட்டம் தட்டுவதெற்கென்றே ஒரு கூட்டமும், பிறகு எங்கே யாருக்கு எப்படியான பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுகிறோம் என்பதை மேற்பார்வை செய்து குழு விலக்கம் அல்லது சேர்ப்புச் செய்து அர்ச்சனைகள் வழங்கும் அன்பர் சேவையும் செழித்தே இருந்தன. அப்படியான சூழலில்தான் "இந்து மத்தை ஒழிக்காமல் சாதிகளை ஒழிப்பது எப்படி" என்ற தங்கமணியின் பதிவை ஆதரித்து ஒரு பெரிய பின்னூட்டம் எழுதினேன். அதற்கு அங்கே சிலர் என்மீதும் வசைமாரி பொழிந்து கொண்டிருக்கையில் நீங்கள் எங்கிருந்தோ வந்து என் பின்னூட்டத்திற்கு வாழ்த்துச் சொல்லியிருந்தீர்கள். இப்படியாக ஆரம்பித்த உங்களின் அன்பும், ஊக்குவிப்பும் இன்றும் தொடர்கிறது. இங்கே தொடராது இருப்பினும் எங்கோ எழுதிக் கொண்டிருப்பதற்கு நீங்கள் எல்லாம் தந்த ஊக்கமே காரணம். நன்றி.
நினைவில் இருக்கேனா!!!!!
நன்றீஸ் நன்றீஸ்.
எட்டுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
விட்டுட்டுப் போயிடாதீங்க ...
பயமா இருக்குமில்லெ:-))))
காசி சொல்றார்:
//சாம் சார் நல்லாருக்கீங்கள்ள?க்
இன்னும் நியாபகம் வெச்சு எம்பேரு, சுட்டியெல்லாம் போட்டுக் காமிச்சது பாக்க சந்தோசம்ங்க.
நல்லாருங்க.
Regards,
Kasi
Sent from my Android mobile. Excuse me for the brevity.//
//என் எழுது பெயர் ராமசந்திரன் உஷா.//
படுத்துக்கிட்டு போத்தினா என்ன ... போத்திக்கிட்டு படுத்தா என்ன .. அப்டின்னெல்லாம் கேக்கக் கூடாது. இல்லீங்களா?
இனிமே உஷா(மேடம்)ன்னு மட்டும் சொல்லிர்ரேன்.
மெரீனா பீச் நல்லா நினைவில் இருக்கு.
செல்வநாயகி,
அந்தப் பதிவைத் தேடி இதுவரை கிடைக்கவில்லை; அப்பதிவு பற்றிய தகவல் ஏதுமிருந்தால் கொடுக்கவும். அல்லது, தங்கமணியின் முகவரி கிடைத்தாலும் தாருங்கள்.
நீங்கள் சொன்ன context நினைவில் இல்லை.
//பயமா இருக்குமில்லெ:-))))//
துளசிக்குப் பயமா? ஹா... ஹா ..
அந்தப் பப்பு இங்கே வேகாதுங்க ...
//இங்கே தொடராது இருப்பினும் எங்கோ எழுதிக் கொண்டிருப்பதற்கு...//
இப்பக்கமும் தொடருங்கள், ப்ளீஸ்!
அல்லாம் அப்பப்போ எழுதிக்கினுதான் கீறோம். நீங்கதான் கண்டுக்கறதே இல்ல! அப்புறம் அல்லாரும் ட்விட்டராண்ட போய் குந்திக்கினோமுல்ல...
எட்டு வருடங்கள் நல்ல் எழுத்து எழுதியவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.உங்களுடன் சேர்த்து நினைப்பது,விக்டோரியா,ஓகை,ஞானம் சார்,இன்னும்நிறைய.மத்தவங்களை நீங்களே சொல்லிட்டீங்க:)
பழையன கழிதலும் ,புதியன புகுதலும்...... உங்களுக்குத் தெரியாததா.?
ஐயா, உங்க காணாமல் போன நண்பர்கள் பதிவு படிக்க நல்லாவே இருந்தது.
//$செல்வன். நிறைய எழுதியவர்.இப்போ இந்தியாவுக்கே / கோவைக்கே வந்திட்டார். இனிமே எப்டின்னு பார்க்கணும். இக்பால் செல்வனை வாசிக்கும்போதெல்லாம் இந்த செல்வன் எனக்கு நினைவில் வருவதுண்டு.//
ஐயா, இக்பால் செல்வன் பதிவுகள் காணாம போய்யுள்ளது. உங்களுக்கு இது பற்றிய தகவல் ஏதாவது தெரிந்தா தெரிவியுங்க. நன்றி.
எட்டு வருஷம்னா... செம லாங்க் பீரியட்தான். வாழ்த்துகள் சார்!
அருமையான நினைவலைகள்
ஜாவா பைக் ஓட்டியவரின் அனுபவகள், என்பீல்ட் ஓட்டியவரின் அனுபவங்களை படிக்கையில் சிரிக்கத்தான் தோன்றும்
நன்றி என்னையும் குறிப்பிடும்படி என் பதிவுகளில் ஆழ்ந்த கருத்துக்கள் இல்லையென்றாலும் நகைச்சுவை தங்களை ஈர்த்ததற்கு மகிழ்ச்சியே
எப்போதும் ஆரம்பம் அமர்க்களமாகவே இருக்கும் பின் சலித்துப் போக சில பல காரணங்கள்
நேரமின்மை வயது வாழ்வியல் சூழல்கள் காணாமல் போன நட்பு வட்டம் அனைத்துக்கும் மேலாக பெண் பதிவர்களுக்கு கிடைக்கும் மரியாதை!!
பதிவில் இல்லையென்றாலும் அந்த நாட்களின் நினைவு நினைவில் உண்டு
(முக்கிய குறிப்பு: எம்புட்டு நாள் தான் காமெடி பீஸாவே கும்மி அடிக்க முடியும் ஹி ஹி)
நன்றி என்னையும் குறிப்பிடும்படி என் பதிவுகளில் ஆழ்ந்த கருத்துக்கள் இல்லையென்றாலும் நகைச்சுவை தங்களை ஈர்த்ததற்கு மகிழ்ச்சியே
எப்போதும் ஆரம்பம் அமர்க்களமாகவே இருக்கும் பின் சலித்துப் போக சில பல காரணங்கள்
நேரமின்மை வயது வாழ்வியல் சூழல்கள் காணாமல் போன நட்பு வட்டம் அனைத்துக்கும் மேலாக பெண் பதிவர்களுக்கு கிடைக்கும் மரியாதை!!
பதிவில் இல்லையென்றாலும் அந்த நாட்களின் நினைவு நினைவில் உண்டு
(முக்கிய குறிப்பு: எம்புட்டு நாள் தான் காமெடி பீஸாவே கும்மி அடிக்க முடியும் ஹி ஹி)
//பெண் பதிவர்களுக்கு கிடைக்கும் மரியாதை!!//
வருந்துகிறேன்.
//எம்புட்டு நாள் தான் காமெடி பீஸாவே கும்மி அடிக்க முடியும்//
நல்ல கும்மி என்றால் நல்லது தானே.
Post a Comment