***
***
ஏழு பதிவுகள்:
***
ஐரினியஸ் – யூதாஸின் நற்செய்தி
Gregor Wurst
எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட Codex Tchacos-ல் மொத்தம் நான்கு ஞானமரபு நூல்கள் இருந்தன. அவை: பேதுரு பிலிப்பிற்கு எழுதிய கடிதம்; (இது 1945ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட Nag Hammidi ஏடுகளிலும் இருந்தது.); Nag Hammidiல் இருந்த ஜேம்ஸின் வெளிப்பாடுகள்; யூதாஸின் நற்செய்தி; Book of Allogenes என்ற நூலின் சில பக்கங்கள். (121)
இந்த ஏடுகள் காப்டிக் மொழியில் இருந்தாலும் அவைகளின் மூலமும் காப்டிக் மொழியல்ல. கிரேக்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை என்று கருதப்படுகிறது. பிஷப் ஐரினியஸ் தன் நூலில் யூதாஸின் நற்செய்தி பற்றிக் குறிப்பிடுகிறார். (122)
ஐரினியஸ் தன் நூலில் ஞானமரபுக் கிறித்தவர்களைப் பற்றிப் பேசுகிறார்.
அவர் தன் நூலில் யூதாஸைப் பற்றி ’மற்றவர்கள் போலில்லாமல் யூதாஸ் முழுமையான உண்மையை அறிந்திருந்ததாகக் கூறப்பட்டவர்’ என்று கூறுகிறார்.
ஐரினியஸைப் பொருத்தவரை யூத வேத நூல்களில் குறிப்பிடப்படும் – Esau, Korah, the sodomites – என்பவர்கள் பழமைக் கிறித்துவர்களால் கெட்டவர்களாகவும், எதிராளிகளாகவும் கருதப்பட்டவர்கள். ஆனால் இவர்களே பெரும் கடவுளின் உண்மையான ஊழியர்கள் என்று ஞான மரபில் கூறப்படுபவர்கள். (123)
ஐந்தாம் நூற்றாண்டின் Theodoret of Chyrrus யூதாஸைப் பற்றிக் கூறும் போது அவர் அப்போஸ்தலர்களுக்குள் முதனமையானவர் என்று கூறுகிறார்.
மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த ஞான மரபினர் Cainites – காயினின் வழியினர் – என்று கிளமென்ட் அலெக்ஸாண்ட்ரியா போன்ற கிறித்துவ ஆசிரியர்களால் அழைக்கப்பட்டு வந்தனர்.(124)
ஐரினியஸின் எழுத்துகளிலிருந்து கானனைட்கள் யூதாஸின் காட்டிக் கொடுத்தலில் உள்ள மர்மத்தை ஆதரித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. (125)
35ம் பக்கத்தில் யூதாஸின் நற்செய்தியில் யூதாஸ் தோன்றுகிறார். அந்தக் காட்சியில் அவர் மட்டுமே சீடர்களில் ஏசுவை முழுமையாக அறிந்த ஒரே ஒருவராக்க் காட்சிப்படுத்தப் படுகிறார். அதோடு ‘ஏசு பார்பெலோவிலிருந்து வந்தவர்’ என்றும் கூறுகிறார். (128)
இதனாலேயே ஏசு அவரைத் தனியாக அழைத்து ‘தன் அரசின் மர்மங்களை’ விளக்குகிறார். (யூதாஸ் நற்செய்தி 35, 45)
யூதாஸிடம் மட்டுமே ஏசு ’எந்த தேவ தூதர்களாலும் கூட காணப்படாத, தன் பெரும், அகன்ற ராஜ்ஜியத்தைப் பற்றியும், எந்தப் பெயராலும் அழைக்கப்படாத அங்கேயுள்ள ஆன்மாவைப் பற்றியும்’ கூறுகிறார்.
மேலும், பிரபஞ்ச உண்மைகளையும், சின்னக் கடவுளர்களால் படைக்கப்பட்ட மனித குலத்தைப் பற்றியும் கூறுகிறார். (யூதாஸ் நற்செய்தி 52-55)
காப்டிக் ஏடுகளில் யூதாஸ் ‘எல்லா உண்மைகளையும் அறிந்தவர்’ என்று கூறப்படுகிறார். (57)
இறுதியாக யூதாஸ் ஒரு ஞான மரபினர்; அவர் இறுதியில் ஒரு ஒளிமயமான மேகத்திற்குள் ஏறி, அங்கிருந்து பெரும் கடவுளைக் காண்பார். (129)
யூதாஸின் வேலையே ஏசுவை அவரது உடம்பிலிருந்து விடுதலை செய்வது தான். (130)
யூதாஸ் நற்செய்தி எழுதப்பட்ட காலம் எது? கணிக்க மிகவும் கடினம். இந்த நற்செய்தியில் அப்போஸ்தலர்களின் நடவடிக்கையைப் பற்றிய குறிப்புள்ளது.
யூதாஸ் நற்செய்தியின் 36ம் பக்கத்தில் ஏசு யூதாஸிடம், ‘உனக்குப் பதிலாக வேறு ஒருவர் வருவார். மீண்டும் 12 அப்போஸ்தலர்களாக ஆகி கடவுளோடு ஒன்றி விடுவார்கள். அப்போஸ்தலர் நடவடிக்கையில் (1:15-26) யூதாஸிற்குப் பதிலாக மத்தியாஸ் என்பவர் இணைந்து மீண்டும் 12 அப்போஸ்தலர்கள் ஆகிறார்கள். (133)
கார்பன் டேட்டிங் முறையில் A.J.Tmothy Jull என்பவரால் அரிசோனா பல்கலையில் ஆராயப்பட்ட இந்த ஏடுகள் மூன்றாம் நூற்றாண்டின் கடைசி 3 மாதங்களில் என்று இவ்வேடுகளின் காலம் கண்டறியப்பட்டது. (134)
பழைய ஞான மரபுகளைப் பற்றிப் படிக்க இந்த ஏடுகள் மிகுந்து பயன்படும். சேத்தியன் ஞானமரபு பற்றிய அறிதலுக்கும் இது பயனளிக்கும். இந்தச் சேத்தியன் ஞான மரபு ஐரினியஸ் காலத்திற்கு முந்தியது என்பது வெளிப்படையாகிறது.
கிறித்துவத்தின் வரலாற்றறிவிற்கு இது பயனளிக்கும். (133)
*
No comments:
Post a Comment