Saturday, February 22, 2014

718. பாலு மகேந்திரா






*
*




எத்தனை வருஷம் ஆச்சோ .. நினைவில்லை ... ’பல்லவி அனு பல்லவி’ என்ற படம் என்று நினைக்கிறேன். படம் பார்க்க சிறிது தாமதமாகப் போனேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ‘கெட்ட வார்த்தை’ வர்ர அளவிற்கு அழகான படப்பிடிப்பு பார்த்தேன். அந்தி நேரம் ஒன்றில், நீர்க் கரை அருகே இருவர் நடக்க, அவர்களின் நிழல் தண்ணீரில் தெரிய ... அடடா என்றிருந்தது. யாரடா இவன், இப்படி படம் எடுத்திருக்கிறான் என்று நினைத்து, இடைவேளையில் வெளியே வந்து ஒளிப்பதிவாளர் பெயரைப் பார்த்தேன். பாலு மகேந்திரா. ஏற்கெனவே அவரைப் பற்றித் தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எல்லாம் மகிழ்ச்சியாக மாறியது.

புகைப்படம் என்றால் அப்போது ரகு ராய் என்றும், சினிமா என்றால் பாலு மகேந்திரா என்றும் மாணவர்களிடம் சொல்லித் திரிந்த காலம் அது. 1985-ல் மாணவர்களோடு பெங்களூரு சென்ற போது .. அதென்ன .. லால் பார்க் என்று நினைக்கிறேன். அந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த போது சில மாணவர்கள் ஓடி வந்து, ‘சார்.. உங்க குரு படம் எடுத்துக்கிட்டு இருக்கிறார்’ என்றார்கள். பாலு மகேந்திரா ஏதோ ஒரு படத்திற்கு ஒளிப்பதிவாளராக படம் எடுத்துக் கொண்டிருந்தார்; காத்திருந்தோம். ஒரு ‘பிரேக்’கில் அவரிடம் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு, அவரோடு என் மாணவர்களும் நானுமாய் நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டோம். (படம் எங்கேயோ வைத்திருக்கிறேன். இப்போது தேடி எடுக்க முடியவில்லை.  )

எல்லோரும் அவரைப் பற்றி எழுதிக் குவித்த போதெல்லாம் பல நாளாய் மனதிற்குள் இருந்து நெருடிக்கொண்டிருந்த ஒன்று மீண்டும் மீண்டும் மனதிற்குள் இருந்து எட்டிப் பார்த்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் யாத்ரா. அதில் இருந்த திரைக்கதை அப்படி ஒரு அழகு. ஒரே இடம். திரும்பத் திரும்ப வரும். அதன் அருகாமை நமக்குப் பிடித்து விட்டு, அதனோடு ஒன்றி விடுவோம். அழியாத கோலங்களில் டைட்டில் வரும் போது இருட்டாக முதலில் தெரிந்த ஒரு இடம் மெல்ல மெல்ல வெளிச்சம் தெரிய, ஒரு ஓடை அதன் அருகே வெள்ளைப் பூவுடனிருக்கும் நாணல் புற்கள் ... டைட்டில் எழுத்துகளை யார் பார்த்தது. எழுத்துக்களின் வழியே தெரிந்த அந்த கவிதைகளை மட்டுமே காண முடியும். இப்படியெல்லாம் அவரை ரசித்த எனக்கு எல்லோராலும் புகழப்படும் மூன்றாம் பிறை படம் மட்டும் ஒரு எரிச்சலைத் தான் தந்தது. இருந்தாலும் அதை மனதுக்குள் வைத்து இறுகப் பூட்டி வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவர் மறைவுக்குப் பின்னும் அந்தப் படம் பற்றிய அரிய பெரிய உண்மைகளையும், உன்னதத்தையும் பேசும் போது உள்ளிருந்த எரிச்சல் மீண்டும் தலை காட்ட .... இன்று அதை வெளியே கொட்டி விடுவோம் என்று நினைத்தேன்.

படம் நன்றாக இருந்தது. எப்போதுமே மயில் ஸ்ரீதேவி அப்டின்னா அப்போதும் இப்போதும் பிடிக்காது. இந்தப் படத்தில் அவரின் நடிப்பு ஒன்றும் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஒரு மன நோயாளிக்கு இப்படியெல்லாமா நடக்கும் என்ற நினைப்பு வேறு. அதனால் இப்பட்த்தின் கதாநாயகியோடு ஒட்ட முடியாது போனது. கதாநாயகனாக கமல் மிக நன்றாகச் செய்திருந்தார். தலையில் பானையைச் சுமந்து கொண்டு கதாநாயகிக்காக முதலில் கூத்தடிப்பது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசியில் கதாநாயகி முழுமையாகக் குணமடைந்து விடுகிறாள். ரயில் ஏறிப் பயணப்படுகிறாள். கதாநாயகன் ஓடி வருகிறான். அவளிடம் பேச முயல்கிறான். அவளோ இப்போது முழுமையான குணமடைந்த சாதாரணப் பெண். அவள் முன்னால் குரங்கு போல் ஆடினால், அவள் காசுதான் தருவாள். அவளிடம் கதாநாயகன் ‘பேச’ வேண்டும். நீ எப்படி இருந்தாய்; நான் என்ன செய்தேன் என்றெல்லாம் கூறாமல் கூத்தடிதத்தைப் பார்க்கும் போது எனக்கு – கூத்தடிக்க வைத்த இயக்குனர், கூத்தடித்த நடிகர், இதை உச்சுக் கொட்டிப் பார்த்த ரசிகர்கள் என்று எல்லோர் மீதும் எரிச்சல் மட்டுமே வந்தது. அறிவுக்குப் பொருத்தமில்லாத அந்தக் காட்சியே மனதில் நின்று போனது. அப்படத்தை யாரும் பாராட்டும் போது எனக்கென்னவோ எரிச்சல் தான் மனதில் எழுந்தது. Emotional-ஆகக் காட்டவேண்டுமென்பதற்காக sensible-ஆக அதைக் காட்டக் கூடாதா?

எப்படியோ பாலு மகேந்திராவின் வீடு போன்ற படங்களின் சிறப்பும், கதை நேரங்களில் வந்த தொலைக்காட்சி படைப்புகளும் நிறைவைத் தருபவை. ஆனால் மூன்றாம் பிறையின் இறுதிக் காட்சி ....? stupid என்றே தோன்றுகிறது. ஆனால் பொதுவாக நம் ரசிகப் பெருமக்கள் இது போன்ற .... தனமான காட்சிகளுக்கு நன்றாகவே கை தட்டுகிறார்கள்.

மேலும், சில உதாரணங்கள் –

’முதல் மரியாதை’ நல்ல படம். ஆனால் ஒரு ஆணின் கட்டை விரலைத் துண்டாகக் கடித்து எடுத்து விடுவாளாம். ... அதுவும் சாவோடு தண்ணீருக்குள் போராடும் ஒரு பெண் ... கடவுளே! (இது ஒரு கதையிலிருந்து சுட்டது என்று பின்னால் சொன்னார்கள். காப்பியடிக்கும் போது கூட சரியானதை காப்பி அடிக்கக் கூடாதா?)

 ’புத்தம் புது அர்த்தங்கள்’ இப்படி ஒரு நல்ல தலைப்பு. ஆனால் கதை மகா நொண்டிக் கதை. கதை இறுதியில் காலின்றி, கோலூன்றி மிக மட்டமான மனிதன் வருகிறான்; காற்றில் கோல்கள் பறந்து விடுகின்றன. எந்த மனிதத் தன்மையில்லாத அவனை கதாநாயகி தோள் கொடுத்துத் தாங்கி .... அட போங்கப்பா ...!

‘அந்த ஏழு நாட்கள்’ – கடைசி சீனை எப்படி வைப்பது என்று மூன்று பெரும் இயக்குனர்கள் ஒன்றாக இருந்து யோசித்து ... கல்யாணம் ஆவதற்கு முன் இருந்த அந்தப் பெண் வேண்டும் என்று தாலியை மய்யமாக வைத்து கதாநாயகன் மறுத்து விடுவான். Too many directors spoil the movie என்றானது. (எங்கள் ஊரில் சந்திரபாபு திருமணத்திற்குப் பிறகு மிக நல்ல மனிதராக நடந்திருப்பதும் நினைவுக்கு வந்தது.)

இதையெல்லாம் கேட்டால் ‘படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது’ன்னு சொல்லும் தமிழ்ச் சாதி ரசிகர்கள் நிறைய உண்டு நம்மைச் சுற்றி ....




*


 

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட போங்க சார்... தமிழ்ப்படம்ன்னா இப்படித்தான்...!

தருமி said...

//தமிழ்ப்படம்ன்னா இப்படித்தான்...! //

இதான் ... இதான் ...
:-(

Unknown said...

ரசிகர்கள் மனதில் இரக்கத்தை வரவழைத்து ,தலையில் மிளகரைப்பதுதான் தமிழ் சினிமா உத்தி !
த ம 2

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இதையெல்லாம் கேட்டால் ‘படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது’ன்னு சொல்லும் தமிழ்ச் சாதி ரசிகர்கள் நிறைய உண்டு நம்மைச் சுற்றி ....//
அதே அதே!
ஆனாலும் இவரை நினைத்தால் ஷோபா, மௌனிகா எல்லாம் நினைவில் வருகிறார்கள். இதை உங்களுடனே பகிர்கிறேன்.
மற்ற இடங்களில் "தர்ம அடி" தருவார்கள். அந்த அளவுக்கு அழுகிறாங்களாம்.

வவ்வால் said...

தருமிய்யா,

கடைசில நீங்களும் கச்சேரியில் கலந்துக்கிட்டிங்களா :-))

# பாலு மகேந்திராவின் கேமிரா "வேலைகள்" நன்றாக இருக்கும் ,மற்ற வேலைகள் "வீண் வேலைகள்" அவ்வ்!


//ஒரு மன நோயாளிக்கு இப்படியெல்லாமா நடக்கும் என்ற நினைப்பு வேறு.//

அம்னீசியா இல்லையா?

படம் தர்க்க ரீதியா ஒத்தே வராத ஒன்று, அந்தப்படம் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லாமே அப்படித்தான்.

மற்றப்பதிவுகளில் நிறைய அலசியாச்சு ,எனவே இதோடு முடிச்சுக்கிறேன் ,ரஜினி படத்தில் லாஜிக் இருக்கானு ,சண்டைக்கு "ரசிகர்கள்" வந்துடுவாங்க!

# முதலில் சிறுவனுடன் படத்தை பார்த்தேன் ,இப்போ பின்ப்பக்கமா பெரியவர் படம் மட்டும் இருக்கு, ஒரு சாயலில் பார்த்தால் முன்னாடி போகவிட்டு பின்னாடி பார்த்தால் தெரியும் உங்க "மறுபக்க" தோற்றம் போல இருக்குனு தனியா போட்டுக்கிட்டிங்களோ :-))

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழ்ப்படம்ன்னா இப்படித்தான்...!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

காரிகன் said...

தருமி சார்,
மூன்றாம் பிறையைப் பற்றிய உங்களின் எண்ணமும் எனது எண்ணமும் ஒன்றே. இதை நான் அமுதவன் தளத்தில் தெரிவித்துள்ளேன். மூன்றாம் பிறை ஒரு அபத்தக் களஞ்சியம் என்ற எனது கருத்தை நீங்களும் பிரதிபலிப்பது நான் மட்டுமே அப்படி எண்ணவில்லை என்பதை உறுதி செய்கிறது. நம் ரசிகர்களுக்கு இது போன்ற நாலாந்தர மனதை உடைக்கும் அழுகை நடிப்பே சிறந்தது என்ற ரசனை உண்டு.அதை பாலு சரியாக பயன்படுத்திக்கொண்டார் மூன்றாம் பிறையில். நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.

Ganesan said...

தருமி சார்,

//கூத்தடிக்க வைத்த இயக்குனர், கூத்தடித்த நடிகர், இதை உச்சுக் கொட்டிப் பார்த்த ரசிகர்கள் என்று எல்லோர் மீதும் எரிச்சல் மட்டுமே வந்தது. அறிவுக்குப் பொருத்தமில்லாத அந்தக் காட்சியே மனதில் நின்று போனது//

இப்போதுதான் சில நாட்கள் முன்பு, திரு பாலு மகேந்திரா மறைவு குறித்து கமலஹாசன் பகிர்ந்து கொண்ட நினைவுகளை rediff தளத்தில் போட்டிருந்தார்கள்.

http://www.rediff.com/movies/report/kamal-haasan-balu-mahendra-and-i-shared-a-very-close-relationship/20140214.htm

நீங்கள் திட்டிய காட்சியை பற்றி கமல் இவ்வாறு பெருமையாய் கூறியுள்ளார் :)

//The railway platform finale was partly my idea. Balu wanted a restrained finale where she drove off quietly. He was very minimalist in his approach. //
//Usually, directors are cautious about actors’ suggestions. But Balu who was very fixed in his ideas, loved the idea of my character going berserk on the railway platform.//

தருமி said...

Bagawanjee KA

நன்றி

தருமி said...

யோகன், வவ்ஸ்,

//ஷோபா, மௌனிகா எல்லாம் நினைவில் வருகிறார்கள்.//
//மற்ற வேலைகள் "வீண் வேலைகள்" //

அதப் பத்தி எனக்கென்ன? எனக்கொண்ணும் வயித்தெரிச்சல் ஒண்ணும் இல்லை !!!

தருமி said...

வவ்ஸ்
//அம்னீசியா இல்லையா?’ //

அம்னீசியா இருக்கும். ஆனா இப்படி குழந்தையா ஆயிருவாங்களா?

ஆனாலும் கமல் எழுதியதை வைத்து பார்க்கும் போது அந்தக் ‘கண்றாவிக் காட்சி’ கமல் உபயம் போலும்.
எல்லாம் compromises தான்.

//ரஜினி படத்தில் லாஜிக் இருக்கானு ...//

ஆனாலும் நேற்று தற்செயலாக டிவியில் படையப்பா படத்தின் கடைசிக் காட்சியைப் பார்த்து “வியந்து போனேன்”! எப்படி நம் இயக்குனர்கள், படம் பார்க்கும் பக்தர்கள் இவ்வளவு ‘அடி முட்டாள்களாக” இருக்கிறார்கள் என்று தோன்றியது. அதுவும் மெஷின் கன் (!!!) வச்சு சுட்டுக்கிட்டு நீலாம்பரி வசனம் பேசியதும் அப்படியே சிலிர்த்து விட்டேன், போங்கள்!

தருமி said...

வவ்ஸ்
//பின்னாடி பார்த்தால் தெரியும் உங்க "மறுபக்க" தோற்றம் போல இருக்குனு..//

எனக்கும் கூட அப்படி தோணிச்சி. ஆனால், அவரு எம்புட்டு ஸ்லிம்மா தொப்பையில்லாமல் இருக்காரு. நீங்க சொன்ன இன்னொரு கேஸு செம கிழடு .. தொப்பையும் அதுவுமா ...?

தருமி said...

கரந்தை ஜெயக்குமார்,

இப்படியே உட்றக் கூடாதுல்ல ... யாராவது மண்டையில் தட்டிக்கிட்டு இருந்தா தானே சரியா வரும்.

தருமி said...

காரிகன்,
ஆனால் கமல் எழுதியிருந்ததைப் படிக்கும் போது குற்றவாளி கமல் அப்டின்னு தெரியுது. போனவரை விட்டு வ்டுவோம்.

தருமி said...

டிடி,
நன்றி.
மேலதிக விவரங்களுக்கும் நன்றி

தருமி said...

கணேசன்

இதிலிருந்து பாலு மகேந்திரா ஒரு நல்ல இயக்குனர் என்றும், கமல் ஒரு நல்ல (புத்தி கெட்ட மக்கள் மனதைப் புரிந்து கொண்ட) மக்கள் கலைஞன் என்றும் புரிகிறது !!!

Ganesan said...

//இதிலிருந்து பாலு மகேந்திரா ஒரு நல்ல இயக்குனர் என்றும், கமல் ஒரு நல்ல (புத்தி கெட்ட மக்கள் மனதைப் புரிந்து கொண்ட) மக்கள் கலைஞன் என்றும் புரிகிறது !!!//

கரெக்ட். பாலு அவர்களின் தவறு பிறர் பேச்சை கேட்டதுதான் என்பதை சுட்டவே கமல் பேட்டி பற்றிய பின்னூட்டத்தை இட்டேன்.

டிபிஆர்.ஜோசப் said...

நீங்க தமிழ்படம் பாக்கறதுக்கு லாயக் இல்லாத ஆளு போலருக்கு. லாஜிக்காவது ஒன்னாவது. அது பாலு மகேந்திரா படமானாலும் சரி அவரோட சிஷ்யன் பாலாவோட படமானாலும் சரி. லாஜிக்குன்னுல்லாம் நினைச்சிக்கிட்டு படம் பாக்கக் கூடாது.

Post a Comment