*
Argentina 2 : 1 Bosnia and Herzegovina
*
இத்துனூண்டு நாடு. மக்கள் தொகை எங்க மதுரையை விட கொஞ்சம் பெரிது. ஆனா என்ன போடு போடுது ...!
*
அர்ஜெண்டினா விளையாடுதுன்னா உடனே பாத்திற வேண்டியது தானேன்னு உட்கார்ந்தேன். எதிரி நாடு பற்றி ஒன்றும் தெரியாது.சின்ன நாடுன்னு நினச்சு உட்கார்ந்தால், கடுகு சிறுசு; காரம் பெருசு அப்டின்ற மாதிரி இருந்தது. என்னை அறியாமலே ஆட்டம் நடக்க நடக்க நான் அந்த நாட்டின் அனுதாபியாக மாறியிருந்தேன்!
விளையாட்டு ஆரம்பத்திலேயே மெஸ்ஸி அடித்த பந்தைக் காப்பதில் நடந்த குழப்பத்தில் ரோஜோ என்ற போஸ்னிய வீரரின் கால்பட்டு சேம் சைட் கோல் ஒன்று போஸ்னியாவிற்கு விழுந்தது. அது என்ன இந்த உலகக் கோப்பையில் சேம் சைட் கோல் நிறைய விழுகிறதே என்று நினைத்துக் கொண்டேன். இந்த கோலினாலோ என்னவோ போஸ்னியா மிகத் தீவிரமாக விளையாடியது.
ஆட்டத்தின் இறுதியில் ball possession இரு நாடுகளுக்கும் நடுவில் 60-40 என்று இருந்ததாகப் போட்டிருந்தது. அர்ஜெண்டினா 60% என்றால் போஸ்னியா 40%. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் நிச்சயமாக இது அப்படியே மாறி இருந்திருக்க வேண்டும்; அப்பாதியில் பந்து அர்ஜெண்டினாவின் கோல் பக்கமே இருந்தது. விளையாட்டும் தீவிரமாக இருந்தது.
65வது நிமிடத்தில் மெஸ்ஸி தன் பக்கம் இருந்த பந்தை எடுத்து நேரே ஒரு கோல் அடித்தார். அதன் பின் ஆட்டம் இரு பக்கமும் மாறி மாறி நடந்தன. அர்ஜெண்டினா தீவிரமாக விளையாடியும் பயனின்றி, விளையாட்டு முடியும் நேரத்தில் போஸ்னியா ஒரு கோல் போட்டது.
2 : 1 என்ற கணக்கில் போஸ்னியா தோற்றது. என்றாலும் அது அடுத்து தன் குழுவில் உள்ள ஈராக், நைஜீரியாவுடன் மோதுவதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை விதைத்துள்ளது.
*
போஸ்னியா பற்றி சில விவரங்கள்:
area 51,197 km2 ;
population 3,871,643 ... அட ... எங்க மதுரையை விட இரண்டரை மடங்கு அதிகம் (madruai - 1,462,420)!!!
Bordered by Croatia to the north, west and south, Serbia to the east, The Ottomans brought Islam to the region. 48%
After World War II, the country was granted full republic status in a newly formed Yugoslav Federation.
Today, the country maintains high literacy, life expectancy and education levels and is one of the most frequently visited countries in the region, It is projected to have the third highest tourism growth rate in the world between 1995 and 2020.
On 4 February 2014, the anti-government protests dubbed the Bosnian Spring, name taken from the Arab Spring
*
No comments:
Post a Comment