*
ரஷ்யா - பெல்ஜியம்
இரண்டு நாடுகளும் ஆட ஆரம்பித்தன. எந்த நாட்டை நாம் தூக்கிப் பிடிக்கலாம் என்று யோசித்தேன். இந்த யோசனை பல நாடுகள் விளையாடும்போது வருவது தான். அது என்னமோ தெரியவில்லை .. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விடும்.
அட ..ப்ரேசில்லா ... ’நம்ம’ பீலே நாடாச்சே .. இப்படி ஒரு அன்பு வந்து விடும். இந்த நாட்டிற்குத்தான் எப்போதும் முதலிடம்.
சரியா .. தப்பா..? தெரியாது!
அட அர்ஜென்டினாவா? இது நம்ம குண்டு மரடோனா நாடாச்சே. இப்படி ஒரு அன்பு வந்து விடும். இந்த நாட்டிற்குத்தான் எப்போதும் இரண்டாமிடம்.
சரியா .. தப்பா..? தெரியாது!மூன்றே மூன்று அணிகள் - ஜப்பான், கொரியா, ஈரான். நம்ம ‘திசை’யைச் சேர்ந்த நாடுகளா? இதில் ஒரு பாசம் வந்து விடுகிறது.
சரியா .. தப்பா..? தெரியாது!
எந்த நாட்டு அணியில் கருப்புக் கலர் அதிகமோ ... அவங்க மேலேயும் ஒரு ’இது’ வந்துருது.
சரியா .. தப்பா..? தெரியாது!
ரஷ்யா - பெல்ஜியம் ஒரு காலத்தில் கம்யூ. நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசாகி விட்டதே என்று ரஷ்யா பற்றி எண்ணியதுண்டு. இப்போது அது இல்லை. பெல்ஜியம் - நிறைய கருப்புக் கலர் கண்ணில் பட்டது. அதைவிட ஒரிஜி - பெல்ஜியத்திற்கு கோல் அடித்த ’சின்னப் பையன்’ substitute ஆக இருந்து மைதானத்திற்குள் நுழையும் போது பார்த்ததுமே குழந்தைப் பையனைப் பார்த்ததும் பிடித்தது. hair style-ம் வித்தியாசமாக இருந்தது.அதோடு பெல்ஜியம் நம்ம புகைப்பட நண்பர் ஒச்சப்பன் என்ற HENK -ன் ஊராச்சே அப்டின்னும் ஒரு நினைப்பு. அதனால் பெல்ஜியம் நம்ம கட்சியானது.
இது சரியா .. தப்பா..? தெரியாது!
யோவ்! அப்ப நீ விளையாடுற விளையாட்டை வைத்து ஏதாவது ஒரு டீமை தூக்கிப் பிடிக்காமல், இது மாதிரி சின்னச் சின்ன காரணங்களுக்காக - தோலின் நிறம், எந்த திசைக்காரன். நண்பன் இருக்கும் ஊர் ... இப்படி காரணங்களுக்காகவா ஒரு நாட்டை விரும்புவது. அவங்க விளையாடுற விளையாட்டை வைத்து மதிப்பீடு செய்வதில்லையா? -- இப்படி நீங்கள் கேட்டால் ‘ஙே’ என்று தான் முழிக்க வேண்டும்; இல்லையானால் இன்னொரு பதில் சொல்லிக் கொள்ளலாம்.
உலகக் கோப்பைக்கு வர்ர அளவிற்கு விளையாட்டுத் திறன் உள்ள நாடுகள் தான் வருகின்றன. ஆகவே எல்லா நாடுகளும் நன்றாகவே விளையாடுகிறார்கள். முதல் ஆட்டத்தில் கூட நம்ம ப்ரேசில் விளையடினாலும் க்ரோஷியா முதல் கால் மணி நேரம் நன்றாக ஆடியதால் அந்தக் கட்சியைத்தான் பிடித்தது. அதே போல் அர்ஜென்டினா - .Bosnia and Herzegovina ஆட்டத்தில் சின்ன நாடு தான் பிடிச்சிது. இது மாதிரி ஆட்டம் பார்த்தும் ‘சைடு’ எடுக்கலாம். அந்த மாதிரி காரணம் இல்லைன்னா மேற்சொன்ன காரணங்களில் ஏதாவது ஒன்றைப் பிடிச்சுக்க வேண்டியது தான்.
இது சரியா .. தப்பா..? தெரியாது!
சரி... பெல்ஜியம் ஆட்டம் ரஷ்யாவை விட நன்றாகவே இருந்தது. ஆனாலும் ரஷ்யா அடித்த ஒரு கோல் விழாமல் போஸ்ட்டில் பட்டுப் போனது பாவம் தான். ஆயினும் நிறைய முயற்சிகள் பெல்ஜியத்திடமிருந்து வந்தன. அதில் சின்னப் பையன் ஒரிஜி அழகான ஒரு பந்தை வாங்கி, அழகாக கோலுக்குள் தட்டினான். ரஷ்யா ஆட்டம் முடிந்தது.
*****
அய்யா ... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ... !
நிறைய கேள்விகள் இருக்கு. ஒண்ணிரண்டு இப்போ ...
ஆட்ட வீரர்களை மாற்றும் போது அரைக் கடிகாரம் மாதிரி ஒன்று - புதிய டிசைன் - காண்பிக்கிறார்கள். அதில் வெளியே / உள்ளே வர வேண்டியவர்களின் எண்களைக் காண்பிக்கிறார்கள்.
இதில் வரும் எண்கள் எந்த ஆட்டக் குழுவினருக்கானது என்று எப்படி கண்டு பிடிப்பது? அக்’கடிகாரத்தில்’ எவ்வித பெயரும் இருப்பதில்லை. பின் எப்படி வீர்ர்களும், நடுவர்களும் அதனைக் கண்டு பிடிப்பார்கள்?
அடுத்து ...
அந்த போர்டின் தலைப்பில் 12 என்ற எண்ணும் அதற்கு முன்னும் பின்னும் கடிகாரத்தில் இருப்பது போல் (11 & 1) எண்கள் உள்ளன. அவை வெறும் அழகிற்குத்தானே?
*
6 comments:
சுவரசியமான பதிவு .
பிரேசில் அர்ஜென்டினாவில் எனக்கு எந்த தொடர்பும் கிடையா, உறவினரும் இல்லை அதனால் ஒரு துளி அன்பும் அந்த நாடுகள் மீது வருவதில்லை. ஜப்பான் கொரியா ஈரான் நம்ம திசையை சேர்ந்தவங்க என்றபடியா பாசம் உண்டு.
அவுஹ அவுஹ அணிக்கு ஒருத்தர் இந்த போர்டை ஏந்துற வேலையைப் பார்ப்பார்ங்க. அவுஹளோட சட்டையே (Each team) எந்த அணின்னு காட்டிக் கொடுக்குமே.
ஐயா உண்மை தெரிஞ்சிடுச்சா
தம 1
//அவுஹளோட சட்டையே (Each team) எந்த அணின்னு காட்டிக் கொடுக்குமே.//
அப்படியா சொல்லுதீய நெல்லைத் தமிழன். நீங்க சொல்ற வேலையா பாக்குறது நடுவர் குழுல்லா. மத்தவக .. மத்தவக எப்படி அதை எல்லாம் காமிப்பாக ...! எதுக்கும் இன்னைக்கு அவுக சட்டைய பார்த்திடுவோம்லா... சரியா?
// உண்மை தெரிஞ்சிடுச்சா//
தெரிஞ்சிடுச்சி கரந்தை ஜெயக்குமார்!
ஒண்ணுமில்ல ... லையன் அம்பயர் போர்டு வச்சிக்கிட்டு நிப்பாரு. அப்போ அவருக்குப் பக்கத்தில அடுத்த களம் இறங்கப் போற ஆளு நிப்பாரு. இம்புட்டு நேரம் சைடு பெஞ்சில இருந்திருப்பாரு. அவுக கோச் சொன்னதும் ரெடியா இப்படி வந்து நிப்பாரு. அவரைப் பார்த்துட்டா வெளியே வர வேண்டிய ஆளு வந்திருவாரு. அம்புட்டு தான்.
இந்த சின்ன விஷயம் கூட தெரியாம ஒரு ஆளு ரொம்ப வருஷமா இந்த விளையாட்டைப் பாத்துக்கிட்டே இருக்காரு. ஐயோ...! ஷேம் ... ஷேம் ... பப்பி ஷேம்!
/அந்த போர்டின் தலைப்பில் 12 என்ற எண்ணும் அதற்கு முன்னும் பின்னும் கடிகாரத்தில் இருப்பது போல் (11 & 1) எண்கள் உள்ளன. அவை வெறும் அழகிற்குத்தானே?//
Hublot அப்டின்னு ஒரு ஸ்விஸ் வாட்ச் கம்பெனி செஞ்ச போர்டு அது. அதாவது அந்த போர்டுக்கு ஸ்பான்சர் இந்தக் கம்பெனி. ரொம்ப விலை அதிகமான வாட்சுகள். அதனால் தான் வாட்ச் மாதிரி லுக் கிடைக்கிறது மாதிரி அந்த போர்டு டிசைன் பண்ணியிருப்பாங்க போலும்.
Post a Comment