*
*
“Why Atheism will replace religion என்ற நூலை எழுதிய Nigel Barber வரும் எதிர்காலத்தில் – 2040-களில் - மத
நம்பிக்கையாளர்கள் சிறுபான்மையராக ஆகி விடுவார்கள் என்று எழுதியுள்ளார். நூலாசிரியர்
ஒரு சிறந்த மனோதத்துவர். 137 நாடுகளில்
நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் மேல் கொண்ட மதிப்பீடுகள் இவை.
மதங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பொருளாதார மேன்மை, வீழ்ச்சி
இவைகளோடு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதுகிறார். மத நம்பிக்கையற்றவர்களின்
விழுக்காடு வளர்ந்த நாடுகளில் மிகவும் அதிகமாக இருக்கும். எந்த நாடுகளில் மக்கள்
நல்வாழ்வு சிறந்து உள்ளதோ அங்கு இவர்களின் எண்ணிக்கை அதிகம். எந்த நாட்டில்
மக்களின் வருமானம் சீரான ஒன்றாக உள்ளதோ அங்கு மதநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை
மிகக் குறைவாக இருக்கும்.
இந்த உலகில் மக்களுக்கு தங்களது சமூகத்தில் தேவையானவைகள்
கிடைக்கும் போது அவர்கள் மனத்தில் தெய்வீக நம்பிக்கைகள் வழக்கொழிந்து போகின்றன.
அவரின் கருத்துக்கள் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளேன்:
மானிடர்களின் பாதுகாப்பற்ற நிலை, அவர்களது நிம்மதியின்மை இவைகளே
மதங்களின் பரிணாம வளர்ச்சிக்கான காரணங்கள்.
மக்கள் எப்போது தங்கள் தேவைகளைப் பெற்று சுகமான வாழ்க்கை
வாழ்கிறார்களோ, எப்போது அவர்களின் பொருளாதாரமும், ஆரோக்கியமும் நல்ல நிலையில் உள்ளதோ
அப்போது அவர்கள் தங்கள் தெய்வீக நம்பிக்கைகளைப் புறந்தள்ளி விடுகிறார்கள்.
முகநூல்கள் கூட மதங்களை மெல்ல கொன்று வருகின்றன. ஏனெனில் இங்கு மனிதனின்
புதிய, சுய ஏக்கங்களுக்கான பதில்கள் கிடைத்து விடுகின்றன.
Sub-Saharan Africa பகுதிகளில் கடவுள் மறுப்பு என்று ஏதுமில்லை.
ஐரோப்பாவில் பெருமளவில்
கடவுள் மறுப்பாளர்கள் உண்டு.
ஸ்வீடனில் 64 விழுக்காடு
கடவுள் மறுப்பாளர்கள்.
டென்மார்க்கில் 48 விழுக்காடு
கடவுள் மறுப்பாளர்கள்.
பிரஞ்சு நாட்டில் 44 விழுக்காடு
கடவுள் மறுப்பாளர்கள்.
ஜெர்மனியில் 42 விழுக்காடு
கடவுள் மறுப்பாளர்கள்.
ஜப்பான்,
ஸ்வீடன் போன்ற வசதியான நாடுகளில் மக்கள் மதங்களிலிருந்து விலகி மதச் சார்பற்று
உள்ளார்கள்.
NIGEL BARBER |
No comments:
Post a Comment