*
எதிர் வெளியீடு
2015 ஈரோடு புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு
மதங்களும் சில விவாதங்களும்
தருமி
பக்கம் 240
ரூ. 220
மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும்
பிறப்பினால் ஒரு மத்த்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பதே
இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே “கண்ணாடி” வழியே பார்த்து
தான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே “பாவம்” என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது
வழக்கம். ஒரு சிலருக்கு சில ஐயங்கள் ஏதேனும்
எழலாம். அவ்வப்போது தலை காட்டும் இந்த ஐயங்களை அவர்களது நம்பிக்கைகள் பொதுவாக ஆழப்
புதைத்து விடும். இந்த ஐயங்களின் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக
மாற்றியுள்ளார் நூலாசிரியர்.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத்
தன்மை, நாகரிகம் என்னும் உயர்பண்பு, அறிஞர்களுக்கே உரித்தான துணிவு, தங்கு தடையற்ற
நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.
*
10 comments:
வாழ்த்துக்கள் ஐயா
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றி
தம 1
முதலில் வந்த வெகு பாசிட்டிவான ஒரு பின்னூட்டம். மிக்க நன்றி தோழரே. கருத்துகளையும் பகிருங்கள்.
இவ்வாறான தலைப்புகளில் தாங்கள் வலைப்பூவில் கட்டுரைகள் பதிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். விரைவில் படிப்பேன். படித்துவிட்டு எழுதுவேன். வாழ்த்துக்கள்.
சார்
எங்கு உங்கள் புத்தகம் கிடைக்கும் என சொல்வீர்கள் என்றால் வாங்கிப் படிக்க வசதியாக இருக்கும் .
புத்தக வெளியீட்டிற்குப் பின் தகவல்கள் தருகிறேன்.
வாழ்த்துகள் சார்! தங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை தயவாய் தெரிவிக்கவும்...மிக்க நன்றி...
நான் உங்கள் புத்தகத்தைத் தேடிச் சென்று வாங்க சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் விற்றுத் தீர்ந்துவிடாதே? வலையில் படிப்பதை விட, ஆழமான தங்கள் கட்டுரைகளைப் புத்தக வடிவில் சாய்வாசனத்தில் அமர்ந்துகொண்டு படிக்கும்போதுதான் அவற்றின் மெய்ப்பொருளை முழுதுமாக உணரமுடியும் என்று நம்புகிறேன். - இராய செல்லப்பா
//....கட்டுரைகளைப் புத்தக வடிவில் சாய்வாசனத்தில் அமர்ந்துகொண்டு படிக்கும்போது....// அப்படி வாசிக்க வீட்டிற்கே வர வைத்து விடுவோம் ..........!
Post a Comment