*
தருமி கேக்குறது தருமிக்கு நியாயமா இருக்கு. ஆனால் நீங்க என்ன சொல்லுவீங்களோ தெரியவில்லை.
தப்புன்னா திருத்துங்க. திருத்திக்கிறேன் …… திருந்திக்கிறேன்.
1. அரசு போடுற சட்டம் ஒழுங்கானதாக, நடைமுறைக்குத் தோதாக இருக்கவேண்டும்.
மக்கள் கட்டாயம் அதைப் பின்பற்ற வேண்டும்; பின்பற்ற வைக்கப்பட வேண்டும்.
பின்பற்றாதவர்களை சட்டம் கண்ணை மூடிக்கொண்டு தண்டிக்க வேண்டும்.
இது தானே சரி.
ஏன் நம்ம நாட்ல மட்டும் இல்லாத கோணங்கித்தனம்?!
2. முதலில் சொல்லியபடிதானே ”நீதியரசர்கள்” (இப்படி சொல்ல வெட்கமாக இருக்கிறது!) நடந்தாக வேண்டும். பின் எப்படி நீதிக்குப் புறம்பாக stay கொடுக்க வேண்டும்?
நாலு மாடின்னா நாலுதான். மேலே வந்தால் இடி.
இதைத் தவிர வேறு எது சரியான தீர்ப்பாக முடியும்?
(பழைய பதிவும் பின்னூட்டமும் நினைவுக்கு வந்தது: pleasant stay hotel விவகாரத்தில் அனுமதியின்றி அதிகப்படியாக ஒரு மாடி (floor) கட்டியிருப்பதாக ருசுப்படுத்தப்பட்டு, அதனால் கோர்ட் ஒரு மாடியை இடிக்க வேண்டுமென்று தீர்ப்பு வருகிறது. அதற்கு அடுத்த வந்த கேஸ் நினைவிருக்கிறதா? அப்படி இடிக்கவேண்டுமானால் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று ஒரு மனு. வேடிக்கையாயில்லை - வழக்கை இழுத்தடிக்க இப்படி ஒரு யோசனை.
எனக்கு ஒரு ஆசை - நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் - அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று. )
3. ”நீதியரசர்கள்”தான் இப்படி என்றால் நம் வழக்கறிஞர்கள் (இப்படி சொல்லவும் வெட்கமாக இருக்கிறது!) எப்படி ஏழு மாடிக்கு காசு வாங்கிக்கொண்டு வழக்காடலாம்? வழக்காடுவதால் நியாயங்கள் கொலை செய்யப்படலாமா?
(வழக்குரைஞர்களின் வேலைதான் என்ன? 2+2 = 4 என்று சொல்லலாம். … ஆனால் 2+2 = 6 என்றும் (காசு வாங்கிக் கொண்டால்) சொல்ல முடியுமா?)
4. நல்ல அதிகாரிகள் சிலர் ஒழுங்கு மீறிய கட்டிடங்களைத் திறக்க அனுமதிப்பதில்லை. எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பெரிய மளிகை. வண்டிகள் நிறுத்த இடம் விடவில்லை. அதிகாரி தடுத்தார். அவர் பதவி மாறினார். கடை திறந்து விட்டது. ஜோலி முடிந்தது. பாவம் அந்த அதிகாரி.
(நானெல்லாம் அப்படி ஒரு அதிகாரியாக இருந்திருந்தால் வயத்தெரிச்சலிலேயே சின்ன வயசிலேயே போய் சேர்ந்திருப்பேன்!)
இப்போது ஆற்றுக்கு வெகு அருகில் ஒரு பெரிய கட்டிடம் பாலத்தை ஒட்டி. அதிகாரி தடுத்திருக்கிறார். கட்டிடம் இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. என்று திறக்கப்படுமோ எந்த ஊழல் அதிகாரியால் என்று தெரியவில்லை.
என்ன சட்டமோ … என்ன நீதியோ? என்ன வழக்குரைஞர்களோ?/ வழக்கறிஞர்களோ? என்ன வழக்குகளோ?
ஒண்ணும் புரியலைங்க ……
*
நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிய பதிவு ஒன்று நன்றாக இருந்தது. வாசித்துப் பாருங்களேன் ….
*
14 comments:
மயில் வாகனம் தீர்ப்புலயே நாட்ல நீதி செத்து போச்சு
??
மயிலு
கண்ணிரு
பிரம்மச்சாரி
தீர்ப்பு
ஒண்ணும் புரியலேன்னா சிவனேன்னு (இயேசுவேன்னு) இருக்கணும்.
புரியாத பல விஷயங்களுக்குப் பெயர் போனதுதானே நம் அரசும் நீதியும் செயல்பாடுகளும்
இரண்டாவதில் சொன்ன நீதி போல் அனைத்திலும் இருந்தால் சரி... (!)
உங்க கேள்விகள் சரி.
மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டு விட்டது ஐயா
நினைவில் கொள்ள வேண்டிய முதலாவதும், முக்கியமானதுமான அம்சம்...
உச்ச நீதிமன்றத்திற்கோ, உயர்நீதிமன்றத்திற்கோ நேரடியாக நீதிபதிகளை செய்வதற்கு அறிவியல்பூர்வமான நடைமுறைகள் நம்நாட்டில் இல்லை. கொலீஜியம் முறை என்ற சர்ச்சைக்குரிய முறையில் மூத்த நீதிபதிகளின் பரிந்துரையில் இந்த நியமனங்கள் ரகசியமாக நடைபெறுகின்றன. லாபி செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த முறையில் நீதிபதியாக முடியும்.
அனுமதியை மீறி கட்டிடம் கட்டப்படுவதை தடுக்க தேவையான சட்டங்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளை தண்டிக்க இந்த சட்டம் போதுமானதாக இல்லை.
அனுமதியை மீறி கட்டிய கட்டிடத்தை இடிக்கும் உத்தரவு திட்டமிட்டே பல்வேறு ஓட்டைகளுடன் இருக்கும். இதற்கு தடை உத்தரவு கொடுப்பதைத் தவிர நீதிபதிக்கு வேறு வழி இருக்காது. இந்த தடையை நீக்கி கட்டிடத்தை இடிப்பது அரசின் கடமை. வெளியே சொல்ல முடியாத காரணங்களுக்காக இந்த கடமையை அரசும், அரசு அதிகாரிகளும் மறந்து விடுவார்கள்.
தடை விதித்த நீதிபதிகளுக்கும், வழக்கை விட்டுக்கொடுத்த அரசு வழக்கறிஞர்களுக்கும் இருக்கும் பல்வேறு வேலைப்பளுவில் இதையெல்லாம் நினைவு வைத்துக்கொள்ள முடியுமா? (அரசு வழக்கறிஞரின் முதல் தகுதியே, அவரது மனசாட்சி என்ற ஒன்றை ஓய்வில் வைப்பதுதான்)
முறையின்றி கட்டிடம் கட்டுபவரின் வழக்கறிஞரின் நேர்மை குறித்த கேள்விகளையா கேட்டீர்கள்? சமூகத்தின் எந்தத் துறையினரிடமும் இல்லாத நேர்மையை வழக்கறிஞர்களிடம் மட்டும் எதிர்பார்ப்பது உங்களுக்கே நகைச்சுவையாக தோன்றவில்லையா?
அதெல்லாம் இருக்கட்டும்... ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார்... தனிகட்சியா... பாஜகவில் சேருவாரா... தல அஜித்தும் அரசியலுக்கு வருவதாக சொன்னார்களே.... தளபதி என்ன நினைக்கிறார்...!
சுந்தரராஜன்
பதில் சொல்ல வந்தமைக்காக முதலில் பெரும் வணக்கமும் நன்றியும்.
// சமூகத்தின் எந்தத் துறையினரிடமும் இல்லாத நேர்மையை// .... இல்லை நிச்ச்யமாக இல்லை. எல்லோரிடமும் அதை எதிர்பார்க்கிறேன். இப்பதிவு நீதி பொறுத்தது என்பதால் மட்டும் நீதியரசர்கள், வக்கீல்கள் என்று கேட்டுள்ளேன். என் பல (பழைய) பதிவுகளே அதற்கு அத்தாட்சி. காசுக்கு வினாத்தாள் விற்கும் ஆசிரியர்களைப் பற்றி மிக மிக மட்டமாகவே கூட கூறியுள்ளேன். அதிலாவது ஒளிவு மறைவு உண்டு. உங்கள் தொழிலில் நிச்சயமாக பல வழக்குகளில் எது சரி எது தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும். அத்தகைய வழக்குகளில் தப்பான பக்கம் நின்று “ஆடும்” ஒரு ”நல்ல” (அவர் ஒரு நன்கு பணமும் சம்பாதிக்குமளவிற்கு நல்ல வக்கீல் என்று கொள்வோ) வக்கீல் ஏன் தவறான் அணிக்கு காசு வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் கேள்வி
//ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார்... // ... இது 2.0 படத்துக்காக போடும் வேடம். சீக்கிரம் கலைந்து, அடுத்த படத்திற்கு வேறு ஒரு சீன் போடுவார்.
// தனிகட்சியா.// பாலு ஊத்திருவாங்கன்னு அவருக்குத் தெரியாதா என்ன?
//பாஜகவில் சேருவாரா.// கர்நாடகாவிற்கு குடியைக் கிளப்பிட்டு போனா சேருவார்.
// தல அஜித்தும் அரசியலுக்கு வருவதாக சொன்னார்களே.// நல்ல மனுஷனா தெரியிறார். கொஞ்சம் unique personality. இப்படியேஇருந்துட்டு போகட்டும்.
//தளபதி என்ன நினைக்கிறார்...!// அவரு பாவம். “ஒண்ணுமே தெரியாத” ஆளு. இதெல்லாம் அவுக அப்பா போட்ற வெத்து வேட்டு.
சுந்தரராஜன்
நீங்க மைனஸ் ஓட்டு போடலையே!!!
Post a Comment