*
அருமையான ஆசிரியர்கள் கிடைத்தும் ஆங்கிலம் கைவரப்பெறாத துரதிர்ஷடசாலி நான்.எனக்கு Eng111,Eng 112க்கு ஆங்கில ஆசிரியர்கள்பேராசிரியர் DSL உம்,பேரா. ஐசக்கும் தான். முதுகலை தலைவராக .இருந்தும் இளங்கலை தலைவராக இருந்தாலும்,இருவரும் தமிழ்த்துறையின் இளங்கலை. முதலாமாண்டு இரு பருவங்களுக்கும் வந்து பெரும் ஆபத்பாந்தவர்களாக இருந்தனர். DSL என்று மானவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர். சாமுவேல்லாரன்ஸ் பேராசிரியர்களின் ,பேராசிரியர்களின் ,பேராசிரியர்.
அவர் வகுப்பறை நினைவுகளும்,கல்லூரி வகுப்பறைக்கு வெளியே பல பொழுதுகளும்.சீடுக்குமான உறவுகளும் நினைவு கூறத்தக்கவை
வகுப்பறை ஒன்றில் உங்கள் பெயர்களில் எத்தனை பேருடைய பெயர் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள். பலருடைய பெயர்களை தமிழ் பெயரல்ல என் நிராகரித்தார். வகுப்பு கலகலவும் காரசாரமாகவும் போனது. DSL சத்தமாக கூட பேச மாட்டார்.
சிரிப்பிலும்,எளிய கற்பித்தல் முறையிலும் வகுப்பை கட்டுகோப்பாக வைத்து இருப்பார். என் முறை வந்தது. என் பெயர். வகுப்பறையில் கார்த்தி மட்டும்தான். முதலாண்டில் முதல் பருவம். தமிழ் படிப்புனா என்ன என புரிபடாத காலம். தமிழ்பெயர். என வாதிட்டேன்.மாதம்.நட்சித்திரம்.தீபம் , முருகன். ஆண்டாண்டு காலமாக புழங்கி வருவது என்றெல்லாம் சொன்னேன். என் பெயர் தமிழ் பெயரல்ல என்பதை பொறுமையாக விளக்கினார். மேலும் உன் பெயர் இ விகுதியில் முடிவதால் தொல்காப்பிய்ற் விதிப்படி உன் பெயர் பெண்பாற் பெயர் என அதிர்ச்சியூட்டினார். கற்பிப்பதில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பார்.
சீடு துவங்கிய. போது கல்லூரி துணை முதல்வராக இருந்தார். மதுரை சீடு இன் முக்கிய வருகைதரு ஆசிரியராக விளங்கினார், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு உறசாகம் ஊட்டுவார். உன் ஆங்கிலத்தை மேம்படுத்தினால் உன் சமூகபணி செம்மையுறும் என்பார். உனக்கு சிறப்பு வகுப்பு எதாவது எடுக்கட்டுமா, சேர யாரிடமும் போய் படிக்கிறாயா.என் அன்போடு விசாரிப்பார், கல்லூரி நாடகங்கள்,light and sound ஷோக்கள் முடிந்த்தவுடன் கண்ணீர் கழியும் கண்களுடன் பாராட்டிவிட்டு விடைபெற மனமில்லாமல் விடைபெறுவார்.
பல முன்னேற துடித்த போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் ஆதர்சமாக இருந்தார். சீடு. ஐ மறு உருவாக்கம் செய்த போது தொலைப்பேசியில் மதுரை சீடுக்கு கீழ் to support and empower the underprivileged என்பது. சரியாக இருக்குமா சார். 2007 இல் ஓய்வு பெற்று இருந்தார். கார்த்தி புது பெயரில் ஆரம்பியேன்.இன்னும் உன்னால் சிறப்பாக பணிசெய்ய முடியும். என்றார். மறு முனையில் நான் அமைதியாக இருந்தேன். சரி உன் இஷ்டம் .அதனுடன் children and young people என்பதை சேர்த்துக்கோ. என்றார். ஒவ்வொருமுறையும் இதை சொல்லும்போதும் எழுதும் போதும் நினைவில் வருவார்,
இன்னொன்றும் நினைவில் வருகிறது. தமிழ் பேராசிரியர். சுவாமினாதன் அவர்கள் கற்றுகொள்ளதகும் பாடமாக என்ற தலைப்பில் DSL பற்றி அவரின் பணி நிறைவு ஒட்டி கல்லூரி ஆண்டு இதழில் எழுதிய கட்டுரையும் நான் மறக்க இயலா ஒன்று. உண்மையில் கற்று கொள்ள தகும் பாடமாக ஆசிரியர்கள் இன்று கல்லூரிகளில் இருக்கிறார்களா. என்ன?
பேராசிரியர். சாமுவேல் லாரன்சுக்கு என் புகழ் அஞ்சலி.
No comments:
Post a Comment