*
திரைப்படங்கள்
எடுக்கும் போது still photographyக்கு ஒருவரையும், making of the movie எடுப்பதற்கு
வேறொருவரையும் அமர்த்தி விடுவார்கள். மகாமுனி படத்தின் making of the movieக்கு மாணவ
நண்பன் பாபி ஜார்ஜ் பொறுப்பாக இருந்தார். பயங்கர landscape photographer என்று மட்டும்
நினைத்திருந்தேன். சிறப்பாக இந்தப் பொறுப்பையும் மிக மிக அழகாகச் செய்திருந்தார். அந்தப்
படத்தின் ஒரு பாகத்தை எனக்கு எடிட்டிங் செய்யும் போது நானும் அருகில் இருந்தேன். ’நொற
நாட்டியம் பிடித்த வேலை’ என்பார்கள் .. தெரியுமா? அத்தனை ஒண்ணுக்குள் ஒண்ணாக மிகவும்
intricate ஆன வேலையாகத் தோன்றியது. எடிட்டருக்கு முதல் பாடமே ஒரு மணி நேரத்தைத் தாண்டி
எடிட்டிங் மேஜையில் உட்காராமல் அவ்வப்போது ரெஸ்ட் எடுக்கணும் என்றார் அப்போது எடிட்டிங்
செய்து கொண்டிருந்த இளம் உதவி எடிட்டர். என்னிடம் துப்பரவாக இல்லாத நிறைய்ய்ய்ய நினைவாற்றல்
இருக்க வேண்டும். செதுக்கி சீர் தூக்கும் கடின வேலை.
அந்தந்த சினிமாவோடு
தொடர்புடையவர்களின் நேர்காணல்களும், படத்தின் முக்கிய சீன்களும் வைத்து making of
the movie தொகுக்கிறார்கள். அதற்காக என்னிடமும் என் மனதில் தோன்றுவதைப் பேச, ஜார்ஜ்
அவரது காமிரா முன் அமரச் செய்தார். இது போல் எடுக்கும் துண்டுப்படங்களை bytes என்று
அழைக்கிறார்கள். என்னுடைய bytes என்னிடம் கொடுத்து படம் வரும்வரை வெளியில் காண்பிக்காமல்
ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். பத்திரமாக வைத்திருந்தேன். ஒரே ஒரு ஜீவனுக்கு
மட்டும் ஒரே ஒரு தடவை காட்டினேன். இதோ இப்போது அவைகளை வெளியே எடுக்கலாமாம்.
நீங்களும் பாருங்கள்
...
காணொளி ஓடவில்லையென்றால் https://www.youtube.com/watch?v=lJa0S5asiBsே வாங்களேன் ...
காணொளி ஓடவில்லையென்றால் https://www.youtube.com/watch?v=lJa0S5asiBsே வாங்களேன் ...
**
1 comment:
உங்கள் அனுபவத்தை உங்கள் நடையில் பகிர்ந்த விதம் அருமை ஐயா. வாழ்த்துகள்.
Post a Comment