*
நேற்று மாலை புதிய தலைமுறையில் 2020ல் கலாமின் கனவு நனவாகுமா என்ற ஒரு கருத்தாடல். எல்லோரும் பேசினார்கள். பார்த்த பொழுது என் நீண்ட நாள் கேள்வி மீண்டும் மனதில் எழுந்தது. பேசியவர்களில் மிகவும் சிறப்பாகப் பேசியவர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்.
இந்தக் கட்சி மட்டும் தான் நம் மத்தியில் உள்ள கட்சிகளில் வித்தியாசமான ஒன்று. பதவி ஆசை, ஊழல் இப்படியே பார்த்து பழகிப் போய் விட்டோம். அவர்கள் மத்தியில் இப்படி ஒரு கட்சியா என்று சொல்லும் அளவிற்கு நல்ல கட்சியாக இருக்கிறது. ஆனால் மொத்தமே 5 இடங்களில் மட்டும் வென்று பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். நமக்கு வரும் பிரச்சனைகளை இவர்கள் வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் விரும்புகிறோம். ஆனால் இவர்களுக்கு - என்னையும் சேர்த்து - நாம் எப்போதும் ஓட்டளிப்பதில்லை.
ஏனிந்த நிலை இவர்களுக்கு.? இதற்கான காரணங்கள் என்ன? என்றேனும் அவர்களும் கொஞ்சம் செல்வாக்கு பெருவார்களா?
பதில் தெரிந்தால் சொல்லுங்களேன் .. கேட்டுக் கொள்கிறேன்.
****
இன்றும் ஒரு செய்தி
தினசரியில். புத்தாண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஒரு தலித் இளைஞன் அடிதடி சண்டையில்
கொல்லப்பட்டான். அவனைக் கொன்றது ‘an intermediate caste ஆட்களாம்.
ஏற்கெனவே இது போன்ற
செய்திகளில் தலித் என்பதை எழுதுபவர்கள் அவர்களைக் கொன்றவர்களின் சாதியை எழுதுவதே இல்லை.
ஏனிந்த வழக்கம் என்று பல முறை கேட்டு விட்டேன்; தினசரிகளுக்கு எழுதியும் அலுத்து விட்டேன்.
செய்திகளைத் தரும்போது கூட இந்த சாதி வித்தியாசங்கள் எதற்கு? எந்த சாதி என்று எழுதினால்
அந்த சாதிக்காரர்களுக்குப் பிடிக்காமல் போய் விடும் என்று தினசரிகள் மெளனம் சாதிக்கின்றனவா?
***
ராமராஜ் கம்பெனிக்காரர்கள்
மாமாக்களுக்கு 1000 ரூபாய்க்கு வேட்டி சட்டை கொடுக்கப் போகிறார்கள் என்று மாமி சொல்வதாக
ஒரு விளம்பரம்.
விளம்பரக்காரர்களுக்கும்.
விளம்பரம் செய்பவர்களுக்கும் அறிவே இருக்காதோ? அப்படி ஒரு சந்தேகம் எனக்கு.
*
1 comment:
பேரே ராமராஜ் . அதிலும் மாமாக்களுக்கு இல்லாததா?
Post a Comment