*
வடநாட்டு இறக்குமதி
இங்கே நல்லா போணியாகுது. வடக்கில தான் fashion உருவாகும் போலும். நானும் கூட இந்தி
ஆராதனா படம் பார்த்துதான் 70-ல் ஜிப்பா போட ஆரம்பித்தேன் - அதுவும் கலர் கலரா! (முதல்
ஜிப்பா பின்க் கலர் தான்!) சாப்பாட்டில் கூட பாணிபூரி எல்லாத்துக்கும் பிடிச்சிப் போச்சு.(எனக்கில்லை.)
ஏதோ ஒரு பாக்கை எடுத்து உதட்டுக்குக் கீழ போட்டுக்குறாங்களே … அதுவும் வட இந்திய சரக்கு
தான்.
இது மாதிரி பொறுத்தமில்லாத fashions காத்தோடு நமக்கும் வந்திருதே.
அட .. அவுக செவத்த தொலிக்காரவுக. முழுசா முதுகு தெரியறது மாதிரி ஜாக்கெட் எல்லா வயசுக்காரங்களும்
ரொம்ப கீழ வரைக்கும் வர்ர மாதிரி போட்டுக்குறாங்க .. நம்ம ஆளுகளும் follow பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்னத்த சொல்ல … ?
ஆனா ஒண்ணு பாருங்க
.. அவங்க செவத்த தோலுக்கு மெகந்தி வச்சிக்கிட்டா எடுப்பா தெரியுது. நம்ம ஆளுக - என்
பிள்ளைகளையும் சேர்த்து - மெகந்தி போட்டுக்கிட்டா போட்டதே தெரிய மாட்டேங்குது. நம்ம
ஊர் பொண்ணுகளுக்கும் நம்ம தோலுக்கும் மருதோன்றி இலையை அரைச்சி வச்சிக்க்ட்டா தான் பளிச்சின்னு
நல்லா இருக்கு. பிறகு ஏன் மெகந்தி?
*
No comments:
Post a Comment