Friday, May 29, 2020

1099. இடப் பங்கீட்டின் பரிதாப நிலை




*



இதெல்லாம் புரிஞ்சா தானே கோபம் வரும். இந்த OBC பசங்களுக்கு இது துப்புறவாகப் புரியவேயில்லை. இது வெறும் மாடு பிடிக்கும் சண்டையில்லை. அடி வயிற்றில் அடிக்கும் மரண அடி என்பது அவர்கள் மண்டையில் எப்போது ஏறுமோ!




இது ’ஆண்ட சாதி’க்கு மட்டும் வந்ததல்ல. அனைத்து சாதிக்கும் வச்ச ஆப்பு தான் இது. சும்மா சொல்லக் கூடாது ... நல்ல மூளைக்காரர்கள் .. எங்கு கன்னம் வைக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாமல், இழந்தது என்னவென்றே புரியாமல் இருக்கும் நம்
அத்தனை சாதியினருக்கும் வச்ச ஆப்பு இது.






முதலில் நாம் யாருன்னு இந்த OBC பசங்களுக்குத் தெரிந்தால் நல்லது. அதுவே தெரியாமல் இருக்கிறவங்களுக்கு இந்த மீம்ஸ் சொல்லும் முக்கியமான சேதி போய்ச் சேரவே சேராது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்களாவது இதைச் சொல்லிக் கொடுக்கலாம். இது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரியாமால் இருப்பவர்களைப் பார்த்தால் என்னைப் போன்ற கிழவனுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்? என் புலம்பலில் இது ஒரு வெகு முக்கியமான புலம்பல்……. வெகு நாட்களாகவே!





*



3 comments:

சார்லஸ் said...

நீங்கள் சொல்வது புரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள்ள உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. யாரிடம் நீதி கேட்பது என்பது தெரியவில்லை. ஏனென்றால் நீதி மன்றங்கள் அரசுக்கானதாய் மாறிப் போயின.

முக்கிய வழக்குகளில் எல்லாம் தமக்கு வேண்டிய தலைமை நீதிபதிகளை வைத்து தீர்ப்புகள் எழுதப்பட்டதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். இனியும் அப்படிதான் இருக்கப் போகிறோம்.

இன்னொரு பெரியார் வந்தால்தான் தீர்வு வருமோ!?

தருமி said...

போராட்டக் குணம் சுத்தமாக வற்றிப் போனதே என்பதே என் கவலை.

velvetri.blogspot.in said...

அனிதாவோடு ஆட்டம் முடிஞ்சு போச்சு. இப்போ நீட் ல எப்படி தேர்வானது தான் பிரச்சினை. நல்ல கோச்சிங் சென்டர் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆம் வாழ பழக்கப்பட்டு ......

Post a Comment