நல்லதொரு கேள்விக்கான ஒரு பதில்
விசுவாசம் மிக்க நண்பரொருவர் நல்ல கேள்வி ஒன்று
கேட்டார்” ‘பலருக்கு நன்மரணம்
கொடுத்த அன்னை தெரசா போன்றவர்கள் atheistsகளில் யாரேனும்
ஒருவராது உண்டா?’ என்று கேட்டிருந்தார். பதில் அங்கே சொல்ல
நினைத்தும் முடியாது போனது. பதில் சொல்லமுடியாமல் போனது மனதிற்கு நிறைய விசனமாகி
விட்டது. அதற்கான பதில் இதோ:
நண்பரே
நீங்கள் சொல்லும் அன்னை தெரசாவே எங்கள் கட்சிதான்; தெரியாதா உங்களுக்கு? கீழ்வரும் வரிகள் அன்னை தெரசா தன்
ஆன்மீக குருக்களுக்கு எழுதிய வார்த்தைகள். படித்துப் பாருங்கள்.
என்னுள் எல்லாமே மரத்துப் போய்விட்டன. (within
me everything is icy cold.) வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கை மட்டுமே (blind faith) என்னை இந்த இருட்டிலிருந்து வழி நடத்திச் செல்கிறது; ஆனாலும் எல்லாமே எனக்கு இப்போது இருட்டுதான். (163)
எனது தெய்வ நம்பிக்கைகளை நான் இழந்து விட்டேன்
... மனத்தில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளாக்கி வெளியில் கொட்ட முடியாதவளாக
இருக்கிறேன் ... மனத்தில் சூழும் எண்ணங்கள் எனக்கு சொல்ல முடியாத வேதனையைத்
தருகின்றன. எத்தனை எத்தனை பதிலில்லா கேள்விகள் என் மனத்துக்குள் ... அவைகளை
வெளியில் சொல்லவும் வழியில்லை ... கேட்டால் அவைகள் எல்லாமே தேவதூஷணமாகவே இருக்கும்
... கடவுள் என்று ஒன்றிருந்தால் ... தயவு செய்து என்னை மன்னித்து விடு, (187)
1959-ம் ஆண்டு
பாவமன்னிப்பிற்காக ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ...
என் ஆன்மாவிற்குள் நடந்த ஓர் இழப்பிற்காக மிகவும்
வேதனைப்படுகிறேன் ... கடவுள் கடவுளாக இல்லாமல் இருப்பதற்காக ...கடவுள் என்ற ஒன்று
இல்லாமல் போனதற்காக ஏசுவே, என் தேவதூஷணத்திற்காக என்னை மன்னித்துவிடுங்கள்
... பாவமன்னிப்பிற்காக எல்லாவற்றையும் எழுத ஆசை. (190)
கடவுள் என்ற ஒன்றில்லாவிட்டால் அங்கே ஆன்மாவும்
கிடையாது. ஆன்மா என்ற ஒன்றில்லாவிட்டால், ஏசுவே, நீரும் அங்கில்லை ... மோட்சம் ... மோட்சத்தைப் பற்றிய எந்த நினைவும்
மனதில் தோன்றவேயில்லை ...
ஒவ்வொரு
முறையும் நான் உரக்க 'என்னிடம் (கடவுள்) நம்பிக்கை இல்லை' என்ற உண்மையைச் சொல்ல நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகள் வெளிவர
மறுக்கின்றன. என் உதடுகளோ மூடிக்குவிந்து விடுகின்றன. நானோ இன்னும் கடவுளையும்
மற்றவர்களையும் பார்த்து புன்னகைக்கிறேன். (238)
மேலும் படிக்க:
https://dharumi.blogspot.com/search/label/COME%20BE%20MY%20LIGHT
https://dharumi.blogspot.com/2010/10/450-come-be-my-light-2.html#more
.jpg)
No comments:
Post a Comment