Wednesday, September 20, 2023

1250. சநாதனம்னா என்னாங்க ...4




சநாதனம்னா என்னாங்க ...4

1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.

இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.

***********

முதல் வேத நூலான ரிக் வேதத்தில் உள்ள புருஷா சுக்தா (Purusha Sukta) என்ற பக்திப் பாடலில் மனிதகுலம் எவ்வாறாக முதல் மனிதனின் பலியினால் ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது. அம்முதல் மனிதனின் வாயிலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள்; அவனது கைகளிலிருந்து வந்தவர்கள் சத்திரியர்களும், கால்களிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் வந்தனர். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற 4 படிநிலைகள் இந்து தர்மத்தின் நான்கு அடுக்கு வர்ணாஸ்ரமமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதிப்பிரிவுகள் மீண்டும், அதன்பின் எழுந்த பிராமண நூல்களான மனு ஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம், பகவத் கீதா என்ற நூல்களில் மீண்டும் அடையாளங் காட்டப்படுகின்றன. OBC மக்கள் அனைவரும் சூத்திரர்கள். இந்தக் கோட்பாடு அல்லது வரையறை பிராமண இந்து மதத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்தக் காலத்தில் இருந்தே சூத்திரர்கள் சமூக, ஆன்மீக அடிமைகளாகவே கருதப்பட்டு வந்துள்ளனர்.

*****

பிராமணிய வகைப்படுத்துவதன் மூலம் அனைத்துச் சூத்திரர்களும் - இதில் தீண்டத்தகாதவர்கள்என்று ஒதுக்கப்பட்ட மக்களும் உள்ளடக்கம் - உழைத்து, உற்பத்தி வேலைகளைச் செய்வதற்காகவே உண்டாக்கப்பட்டவர்கள். நம் முன்னோர்களும் அவர்தம் வாழ்வும் இந்த உழைப்பினால்தான் காப்பாற்றப்பட்டன. ஆனால் இந்த உழைப்பின் பயன்கள் என்னவோ மந்திரங்கள் ஓதும் இனத்தவருக்கே சென்றன. இந்த உழைப்பில் வைசியர்களும் பங்களித்ததாக - விவசாயப் பணிகளில் மேலாளர்களாக - ஒரு கருத்தும் உண்டு. ஆனால் சத்திரியர்களோ பிராமணர்களோ இவ்வுழைப்பில் சிறிதும் பங்கெடுத்ததாக வரலாற்று ஏடுகளில் எங்கும் காணப்படவில்லை

 கௌடில்யரின் படைப்பான அர்த்தசாஸ்திரம்என்ற நூலிலும் மேற்சொன்ன அடிமைத்தனமும், வேலைப்பளுவும் வெவ்வேறு சாதியினருக்கான பணிகளாக வகுக்கப்பட்டுள்ளன. சுரண்டல் ஒரு சட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாது, அர்த்தசாஸ்திரம் ஓர் அடிப்படைச் சட்ட அமைப்பை வலியுறுத்துகிறது. இருமுறைப் பிறப்பெடுத்த பிராமணர்கள் - த்விஜஸ் - இதுபோன்ற உடல் உழைப்புகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசமைப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அதன் பயனைப் பிராமணர்களின் நல்வாழ்க்கைக்காகத் தர வேண்டும். சூத்திரர்களின் உழைப்பில் அப்பிரிவு சுகம் காண வேண்டும் என்றுள்ளது.

*****

சூத்திரர்களுக்கு பாதஜா (padaja) என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் அவர்கள் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவர்கள். இதன்மூலம் கடவுள் அவர்களை அடிமைகளாகவே இருக்க படைத்துள்ளார்.




No comments:

Post a Comment