சில சமயங்களில் மிகப் பெரிய டீம்கள் பெரிய போட்டிகளின்
முதல் ஆட்டத்திலேயே தோற்று ,பின்பு மெல்ல எழுவதுண்டு. அதுபோல் இந்த தடவை ஜெர்மனிக்குஆகலாமோவென்று யாரோ
எழுதியதை வாசித்தேன். ஆனால் நடந்தது வேறு.
ஜெர்மனி பெரும் உறுமலோடு தன் போட்டியின் ஆரம்பத்தை வைத்திருந்தது. என்ன உறுமல் ... 5;1 என்று ஸ்காட்லாந்தை வென்றது.
நான் போன பதிவில் எழுதியது அப்படியே முதல் கோல் போட்டபோது நடந்தது.
Kroos – ஜெர்மனியின்
டாப் மேன் – (ஒருவேளை அந்தப் பெயர் Cross
என்பதின் திரிபாக இருக்குமோ?) தனது டீம் இருக்குமிடத்தின்
இடது பக்கத்திலிருந்து நீளமாக வலது பக்கம் அடித்தார். அங்கிருந்த right
winger அப்படியே பந்தை வாங்கி, எதிராளியின் கோலுக்கு
நேரே பந்தை அடித்தார். அதை அழகாக உள்வாங்கி
அவர் நேரே அடித்த பந்து ....கோல். மூன்றே பேரிடம் பந்து சென்றது. அரை நிமிடத்திற்குள்
இங்கிருந்த பந்து அங்கு கோலானது. அது விளையாட்டு ...
5:1 என்ற கணக்கும் தப்புதான். அதாவது அந்த
ஒரு கோலும் self goal!
No comments:
Post a Comment