வரவர ராவ் – தெலுங்குக் கவிஞர். ஆதிவாசிகளுக்காகப் போராடிய கவிஞர். சுய நினைவிழந்து சிறையில் தன் 81 வயதில் துன்பப்பட்டவர்.
தன் மகள் பாவனாவுடன் பேசிய வரவர ராவ் “நீங்கள் இந்தச் சிறை வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் பேசுங்கள். மக்களும், ஊடகங்களும் எங்கள் சிறைவாழ்க்கையைப் பற்றி சிறிதாவது தெரிந்து கொள்ளட்டும்" என்று கேட்டுள்ளார்.
.... தொலைபேசியில் பேசியவர் என் தந்தை தன்னுடைய நினைவாற்றலை முழுவதுமாக இழந்துவிட்டார். அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களால் அவரைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை ஏதோ ஒரு தனி உலகில்... அவருக்கான தனி உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் உடல்நிலை சரியில்லை உடனே அவருக்கு ஏதாவது செய்தாக வேண்டிய சூழல் இருக்கிறது" என்று தொலைபேசியில் பேசியவர் பாவனாவிடம் கூறியிருக்கிறார்.
குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரைச் சிறைக்கு அனுப்புவது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் அவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதும் அதற்கு எந்தவிதமான மருத்துவ உதவியும் கொடுக்காததும் எங்களது வேதனையை இன்னும் அதிகமாக்கியது. 81 வயதான வரவர ராவ் ஒரு பெரும் கவிஞர்; பெரும் விமர்சகர்; புரட்சிகரமான பாடல்கள் எழுதியவர். ஆனால் இன்று அவர் எந்தவிதக் கவனிப்பும் இல்லாமல் சிறையில் தன் நினைவாற்றலை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பலரின் மனசாட்சிகளை இவை தொடவே இல்லாமல், அவர் தனித்து விடப்பட்டுக் கிடந்தார்.
அவரது கவிதைகள் பல இளைஞர்களை ஊக்குவித்தன. அவர் கவிதைகள் பெரும்பாலும் பாவப்பட்ட ஏழை மக்கள், விவசாயிகள், ஆதிவாசிகள் போன்றவர்கள், அதிகாரம் மிக்க மக்களிடம் அடிமைகள் போல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளே அதிகம். காவல்துறையின் ஆதிக்கத்திலும், நில உரிமையாளர்களின் செல்வாக்கிலும் இந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் துரத்தப்பட்டார்கள். துரத்தப்பட்ட அவர்களின் இடங்களில் புதிய தொழில் ஆலைகள் நிறுவப்பட்டன; அல்லது சுரங்கங்கள் தோண்டப்பட்டன; அல்லது புதிய அணைகள் கட்டப்பட்டன. ஆனால் அந்த மக்களைப் பற்றிய கவலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை. வரவர ராவ் போன்ற கவிஞர்களுக்குத் தான் அந்தக் கவலை முழுமையாக இருந்தது.
முன்பு சிறையிலிருந்து அவர் எழுதிய கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘பிரதிபலிப்பு’. இந்தியா முழுவதும் மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் என்ற பெயர் பெற்ற, மறைந்த கே பாலகோபால் இந்தக் கவிதையை மொழிபெயர்த்திருந்தார்.
நான் ஒன்றும்
வெடி மருந்துகளை யாருக்கும் அள்ளிக் கொடுக்கவில்லை
எந்த அறிவுரையும் யாருக்கும் அள்ளித் தெளிக்கவில்லை
ஆனால் நீங்கள் தான்
உங்கள் இரும்பு செருப்புகளை வைத்து
எறும்புப் புற்றுகளை மிதித்து அழித்தீர்கள்
அந்தப் புற்றிலிருந்து போராட்டம் பிறந்தது
நீங்கள் தான்
உங்கள் லத்திகளால் தேன்கூட்டை உடைத்துச் சிதைத்தீர்கள்
பறந்து வந்த தேனீக்கள் தந்த ஒலி
உங்கள் இதயத்தை நொறுக்கி விட்டது.
No comments:
Post a Comment