Wednesday, January 16, 2013

631. இலங்கைப் பயணம் - 14 - KANDY to COLOMBO







*
KANDY TO COLOMBO .............














WAYSIDE "TEA SHOP" .... LOOKED SO NICE AND CLEAN



வலது பக்கத்தில் நிற்பவர் NEIL

 COLOMBO STREETS AND SIGHTS



INDEPENDENCE MEMORIAL








PETTAH ... அச்சு அசலா சென்னை ரங்கநாதன் தெரு மாதிரியே ....
ஆனால் தெரு நம் ஊர் மாதிரி இல்லாமல் சுத்தமாக இருந்தது. நாம் மட்டும் இம்புட்டு ‘அழுக்கா’ இருக்கோம்.

நிறைய தமிழ் பேசுபவர்களைப் பார்த்தேன்.

நண்பர் ஒருவருக்கு ராணி சந்தன சோப் வேண்டுமென்றார். ஒரு கடைக்கு வாங்கப் போனோம். அப்படியே நம்ம ஊர் ஆட்கள் .. நம்ம ஊர் கடை ...!

















*







Sunday, January 13, 2013

630. தோரணம்







*

 நாயும் பேயும் கூட எங்கள் ஊர் மதுரைக்கு வரலாம். ஆனால் இந்த ராமதாஸுன்ற ஆளு உள்ள வரக்கூடாதாம். Thank you, Mr. Collector.
தீண்டப்படக் கூடாத ஆளு தான்.

இந்த மாதிரி கேவலங்களையெல்லாம் நம்மூர் அரசியல் வியாதிகள் எளிதாகத் துடைத்து விட்டுப் போய் விடுவார்கள். இருந்தாலும் இந்த ஆளுக்கு இது மிகச் சரியான பொங்கல் ‘விருது’!


*                                      *                                                 *

 இதென்னங்க ... புதுசா ஒரு தொலைக்காட்சி பார்த்தேன். தந்தி தொலைக் காட்சி. நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் போட்டிருந்தது. தற்செயலாக நேற்று ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.

பாகிஸ்தானியப் படையினரின் அராஜகத்தைப் பற்றி ஒரு கலந்துரையாடல். இரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் - சுந்தர் & இன்னொருவரின் பெயர் கார்த்திகேயன் என்று நினைக்கிறேன். இன்னொரு இளைஞர் சேவியர், லொயோலா கல்லாரிப் பேராசிரியர். நல்ல விவாதம்.

அரசியல்வாதிகளுக்கு அயல்நாட்டு விவகாரங்கள் ஏதும் தெரிவதில்லை; ஆனால் படையின்ரைக் கலந்தாலோசிக்காமல் பல முடிவுகளை அரசு எடுக்கிறது. ஓய்வு பெற்ற படையதிகாரிகளை வைத்து முடிவெடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற படையதிகாரிகளும் அரசிய்லில் இறங்க வேண்டும். நம் அயல் நாட்டுக் கொள்கைகளில் உள்ள தவறுகளை மேடைகளில் .. ஏன் .. வீதிகளில் இறங்கி நின்று பேச வேண்டும் என்றார் சுந்தர். மூவரின் பங்களிப்பும் மிக அழகாக இருந்தது.

அதைவிட இன்னொரு வியப்பு. இந்த நிகழ்வை நடத்தியவர் பார்ப்பதற்கு ஒரு தமிழர் மாதிரி கூட தெரியவில்லை. ஆனால் மனுஷன் கோட் சூட் போட்டுகிட்டு நல்ல தமிழில் அழகாக கருத்தரங்கை நடத்தினார். இதுவரை வட நாட்டு சேனல்களில் மட்டும் பார்த்தது போன்ற நிகழ்வை இங்கு தமிழில் அழகாக நடத்தியதைப் பார்த்த போது பெருமையாக இருந்தது.

 *                                              *                                               *

புதிய தலைமுறை செய்தித் தொகுப்பு - யானைகள் ஊர்ப்பக்கம் வந்து நாசம் விளைவிக்கின்றன. இதற்குக் காரணம் சரியான ஒப்புதல் இன்றி பல கட்டிடங்கள் அந்த மலைப்பகுதிகளில் கட்டுப்படுவதுதான். கட்டுவது எல்லாம் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஈஷா, அமிர்தானந்தம் போன்ற ‘கடவுள் புள்ளிகள்’, அதோடு இண்டஸ் என்ற ஒரு கல்லூரி. இதை ஈஷா தங்களிடத்தைச் சுற்றி, மலையடிவாரத்திலிருந்து 150 மீட்டருக்கு உள்ளேயே, மின்சாரத் தடுப்புக் கம்பிகள் வைத்திருக்கின்றனராம்.

என்னே அவர்களது மற்ற உயிர்கள் மீதான பாசம் !

உபதேசங்கள் ஊருக்குத் தான் ...!


*                                                                  *                                  *

இப்படி சில தொலைக்காட்சிகளைப் பார்த்ததும் இன்னொரு நிகழ்ச்சி - வசந்த் டி.வி. ஐயப்பன மகர ஜோதியைக் காட்டப் போவதாக ஒரு நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த மகர ஜோதி மக்கள் ஏற்றும் தீபம் என்றெல்லாம் நிரூபித்தார்கள். ஆனால் இன்னும் ம்கர ஜோதி தானாக வரும் ஒளி என்று மக்களும் நம்புகிறார்கள்; அதை ஒளிபரப்பவும் ஒரு தொலைக்காட்சி இருக்கிறது.

அட போங்க’ப்பா, ஒரே வேடிக்கை தான்!

*                                                           *                                                 *

சூர்யா ரொம்ப பிடிக்கும் தான். ஆனாலும் இவர் இம்புட்டு விளம்பரங்களுக்கு வரக்கூடாதுங்க. பயங்கர போர். Just an overkill. அதுவும் Aircel-க்கு ஒரு விளம்பரத்தில் வர்ராறு பாருங்க ... சாமியே! சகிக்கலை’ப்பா! தாங்க முடியலை. காசுன்னா என்ன விளம்பரத்திலேயும் தலை காட்ற அளவுக்கா சூர்யா காசுக்கு அலைய்றார்?

இந்த விளம்பரங்கள் பார்த்ததும் அஜீத் மேலே எல்லாம் ரொம்ப மரியாதை வந்தது.

*                                                                          *                                           *

 நமக்கு இசை ஞானம் சுத்தமா கிடையாது. ஆனாலும் என்னாலேயே Fiama சோப்புக்கு வர்ர ஒரு விளம்பரத்தில் ஒரு ஞான சூன்யம் ஒரு பாட்டு பாடுது. தாங்க முடியலை. கடவுளே .. கர்ண கடூரம் அப்டின்னு என்னான்னு தெரியணும்னா அந்தப் பாட்டை ஒரு தடவை கேட்டுப் பாருங்க. அந்த ஜிங்கிளுக்கு இசையமைத்த புண்ணியவான் யாருன்னு தெரியணும்னு ஆசையாக இருக்கிறது.

கடவுளே .. என்னைக் காப்பாத்தப்பா ...!



*                                                                      *                                                         *

*

Saturday, January 12, 2013

629. காணாமல் போன நண்பர்கள் - 11 - தப்பு செஞ்சா பயந்துகிட்டே செய்யணும் !





*

அதீதம் இணைய இதழில் வெளி வந்த பதிவு

*


1961 - 62 ஆண்டில் ...

P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிர்ரான் - காதலிக்க நேரமில்லை.)

 பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன்.

P.U.C. விடுதியில் என்னோடு படித்த மாணவன் ஒருவனை தற்செயலாக மதுரை தூய மரியன்னை கோவிலில் சந்தித்தேன். அவனின் இரண்டாவது பெயர் மைக்கிள். முதல் பெயரும் ஏதோ ஒரு ஆங்கிலப் பெயர். என்னைப் போல் நல்லவனாக (!) அவனும் சாமி கும்பிட அங்கே வந்திருந்தான். பழைய அறிமுகத்தையும், நட்பையையும் அங்கே புதுப்பித்துக் கொண்டோம். எங்கள் வீட்டுக்கும் அழைத்திருந்தேன். அதன்பின் அவன் அவ்வப்போது கோவிலுக்கும் வீட்டுக்கும் வர ஆரம்பித்தான்.

அவன் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தான். ஆள் செம குச்சி. நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. தம் அடிக்க ஆரம்பித்திருந்தான். எங்கேயாவது சேர்ந்து, ஒளிந்திருந்து அடிப்போம். அதற்காகவே அவனும் அடிக்கடி கோவிலுக்கும் இதற்கும் சேர்ந்து வர ஆரம்பித்திருந்தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அதில் உள்ள ஒரு குறுக்குச் ச்ந்துதான் எங்கள் புகைப்பிடமாக இருந்தது.

ஒரு வாரம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் எங்கள் மறைவிடம் தேடிப் போய்க்கொண்டு இருந்தோம். இருட்டத் தொடங்கிய மாலை நேரம். தெற்குவாசல் பக்கத்தில் ஒரு டீக்கடையின் வாசலில் ஒரு போலீஸ்காரர் நிற்பது தெரிந்தது. அப்போதெல்லாம் சைக்கிளில் விளக்கு இல்லையென்றால் போலீஸ் புடிச்சுக்கும். என் வண்டியில் டைனமோ இருந்தது. ஆனால் அவன் சைக்கிளில் டைனமோ லைட்டோ மண்ணெண்ணெய் விளக்கோ எதுவும்  இல்லை. அதற்காகவே நானும் என் சைக்கிளில் விளக்கைப் போடவில்லை.

 சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தவர்கள் ‘தல’யப் பார்த்ததும் மரியாதையாக இறங்கி சைக்கிள்களை உருட்டிக் கொண்டு வந்தோம். ஆனால் தல எங்களைக் கண்ணி வச்சி பிடிச்சிட்டார். ‘யார்ரா நீங்க?’ அப்டின்னார். மைக்கிள் வேகமாக ‘இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்’ என்றான். அப்போதெல்லாம் மக்களிடையே மருத்துவக் கல்லூரி மாணவர் என்றால் பெரிய கித்தாப்பு தான். தல அதுக்கு மேல எங்கட்ட பேச விரும்பலை; எங்க ‘ஸ்டேட்டஸ்’ அப்டி ஆகிப் போச்சு!.

ஆனாலும் ’வாங்க .. ஸ்டேஷனுக்கு வந்து ஐயாட்ட சொல்லிட்டு போங்க’ அப்டின்னு பக்கத்தில் இருக்கிற தெற்குவாசல் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனார். நாங்க ரெண்டு பேரும் தலைக்குப் பின்னால் போகும் போது அட்ரஸ் எல்லாம் கேட்டா பெயரை மாற்றிக் கொடுத்துர்ரதுன்னு பேசி முடிவு பண்ணிட்டோம்.

அங்க போனா ‘ஐயா’ இல்ல. ரைட்டர் மட்டும் இருந்தார். இப்போ எங்களுக்கு ரைட்டர் தலையாயிட்டார். ’என்ன கேசு?’ என்றார்; ’லைட் இல்லாம போனாங்க’ என்றார் போலீஸ்காரர். ‘நீங்க யாரு ... என்ன செய்றீங்க?” என்று எங்களைப் பார்த்து ரைட்டர் கேட்டார். ‘மருத்துவக் கல்லூரியில் படிக்கிறோம்’. ரைட்டர் இது பெரிய கேஸ் அப்டின்னு நினச்சுட்டார் போலும். உங்க முகவரி கொடுத்துட்டு போங்க .. நாளைக்கு வந்து ஐயாவைப் பார்க்க வாங்க’ அப்டின்னார். எங்கள் பெயர், முகவரி எல்லாம் கேட்டார்.

நான் ஏற்கெனவே அந்த சமாச்சாரங்களை ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஒரு பெயர், ஒரு இனிஷியல், இனிஷியலுக்கு ஏத்த மாதிரி ஒரு அப்பா பெயர் ... இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் விருதுநகருக்கு அப்பாவுடன்சென்று வந்திருந்தேன். அங்கே ஒரு தெப்பக்குளம் பார்த்திருந்தேன். வடிவேலுவிடம் பார்த்திபன் துபாய் முகவரி சொன்னது மாதிரி நானும், வீட்டு நம்பர், தெப்பக்குளம் மேலத்தெரு, விருது நகர் அப்டின்னு சொல்லிட்டேன். எழுதிக்கிட்டார்.

ஆனால் அடுத்த நம்ம நண்பனைக் கேட்டார். பயல் எதுவும் யோசிச்சி வைக்கலை போலும். தனது சரியான இனிஷியலைச் சொல்லித் தொலைத்தான். அடுத்தது அப்பா பெயர் கேட்க இவன் ஏதோ ஒரு பெயர் சொன்னான். எனக்கு உதைப்பு. அப்பா பெயரும் இனிஷியலும் ஒத்துப் போகலைன்னு இன்னைக்கு தலயும், நாளைக்கு ‘ஐயா’வும்  கண்டு பிடிச்சிட்டா என்ன பண்றதுன்னு பயம். ஆனால் இப்போ தல கண்டு பிடிக்கலை.

’போய்ட்டு நாளைக்கு வந்து ஐயாவைப் பாருங்க’ என்றார் ரைட்டர்.

வெளியே வந்ததும் ‘ஏண்டா இப்படி மடத்தனம் பண்ணுன ..?’ அப்டின்னு கேட்டேன்.

’ஏண்டா .. என்னாச்சு?’ என்றான்.

‘இனிஷியல் ஒண்ணு; அப்பா பேரு வேற ... நாளைக்கு இன்ஸ்பெக்டர் மாட்டப் போறார்’ என்றேன்.

’அட போடா ... நாளைக்கு வந்தாதான ...’

‘அப்போ வர வேண்டாமா?’

எனக்குப் பயம். வீடு வேற பக்கத்தில இருக்கு. மறுபடி போலீஸ் கண்ணுல பட்டா என்ன ஆகும்னு பயம்.

’அட போடா! அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்றான் தைரியமாக. ஆனால் அவன் தைரியமெல்லாம் எப்டின்னு தெரியுமா ...? அதுக்குப் பிறகு வீட்டுக்கு வருவதை உட்டுட்டான். அவனை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. போலீஸ்காரங்க புண்ணியத்தில் ஒரு நண்பன் காணாமல் போய்ட்டான்!!
*



அந்தக் காலத்தில் சாலைகளில் விளக்கு அதிகம் இருக்காது, சைக்கிளில் லைட் இல்லாமல் போனால் விபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம். ஆகவே
இந்த லைட் எல்லாம் பார்த்திருக்கீங்களா? கொஞ்சூண்டு தேங்காய் எண்ணெய்யும், மண்ணெண்ணெயும் சேர்த்து போட்டு எரிய வைக்கணும். காத்து வேகமா அடிச்சா அணைஞ்சிரும். அத ‘உயிரோடு காப்பாத்தி’ போறதே பெரிய வேலை !!!


சைக்கிளில் கட்டாயம் லைட் தேவை.  அப்போ இதெல்லாம் எனக்குப் புரியலை.

அன்னைக்கும் இன்னைக்கும் ஒரு பெரிய வித்தியாசம். நாங்களும் அப்போவெலலாம் தப்பு செஞ்சோம். லைட் இல்லாம இரவில் சைக்கிள் ஓட்றது ... டபுள்ஸ் போறது ... NO ENTRY-ல் போறது .... ஆனால் தப்பு செய்றோம் அப்டின்ற பயத்தில் பயந்து பயந்து போவோம். மனசாட்சி குத்தும்.

இப்போ மக்களுக்கு இது மாதிரி தப்பு செய்யும் போது  கொஞ்சம் கூட பயம் இல்லையே.

ஏன்?



*

Friday, January 11, 2013

628. இலங்கைப் பயணம் - 13 - டம்புள்ள - புத்தர் கோவில்





*
*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு



*




18.10.2012

பொலன்னறுவையில் புகைப்படக் கருவியை விட்டு விட்டு வந்து, பின்  ஓட்டுனர்  Neil -க்காகக் காத்திருந்த நேரம். படம எடுக்கவோ சுற்றிப் பார்க்கவோ மனம் இல்லாமல் இருந்தோம்.





 ஒரு வழியாக காமிரா கைக்கு வந்த போது  வெயில் தாழ்ந்து விட்டது. அங்கிருந்து புறப்பட்டு கண்டி நோக்கிச் சென்றோம்.




 பொன் வண்ணத்தில் புத்தரின் சிலை மிகப் பிரமாண்டமாக இருந்தது. தர்ம சக்ர பாவனையில் இருந்தது. உலகிலேயே தர்ம சக்ர பாவனையில் உள்ள சிலைகளிலேயே இது தான் பெரியதாம்.









 











*



627. இலங்கைப் பயணம் - 12 - புன்ன விள - யானை முகாம்








*

19 அக்டோபர் 2012

 புன்னவிள என்ற இடத்தில் யானைகளுக்கான முகாம் ஒன்றுள்ளது. பெரிய இடத்தில் அவைகளை மொத்தமாக வைத்திருப்பார்கள். அந்த முகாமில் யானைகளின் ‘விளையாட்டுகள்’ பார்க்க நன்றாக இருக்கும் என்றார்கள். ஆனால் நாங்கள் அந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டோம். நாங்கள் போன நேரத்தில் அவைகள் விளையாடி முடித்து விட்டு ஆற்றுக்குப் புறப்பட்டுப் போய் விட்டன.




 புகைப்படங்கள் எடுக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. சுற்றிச் சுற்றி எடுத்தோம்.


பால் குடிக்கும் குட்டி





பாய்ந்து ஓடும் யானை


அசத்தலான ஒரு தூக்கம்

யானைக் கூட்டம்

யானைக் குடும்பம்

தனிக்காட்டு ராசா


முட்டி முட்டி பால் குடிக்கும் குட்டி

அரவணைப்பு


யானைப் பொருட்கள்



இன்னும் யானைகள் படங்கள் பார்க்க .....





 *