Friday, November 11, 2022
Wednesday, November 09, 2022
1192. I SALUTE BRAHMINS ...........
Tuesday, November 08, 2022
1191. இந்து மதத்தின் ஆரம்பம் ....
1850களில்தான் ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக இஸ்லாம், கிறித்துவம், பார்சி அல்லாத
மக்கள் கூட்டத்தையும் மொத்தமாக ஒரே பெயரால் அழைப்பதற்கு ‘இந்து’ என்ற சொல்
பயன்படுத்தப்பட்டது ...
‘இந்துக்கள்’
என்று அழைப்பதை பார்ப்பனத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விஷ்ணுபுவா பிரம்மச்சாரி போன்றவர்கள் இனி ‘இந்து தர்மம்’ என்ற சொல்லை நாம் பயன்படுத்தக்க்கூடாது.
“வேதோக்த தர்மம்” என்பதைத்தான் பயன்படுத்த
வேண்டும் என்றார். தயானந்த சரஸ்வதி “ஆர்ய
தர்மம் அல்லது சனாதன தர்மம்” என்று அழைக்க வேண்டும் என்றார்....
1911ஆம் ஆண்டு
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக கமிஷனர் எட்வர்ட் ஆல்பர்ட் கெய்ட், யாரையெல்லாம் இந்து
என்ற வரையறைக்குள் கொண்டு வருவது என்பதை முடிவு செய்ய சில கேள்விகளை மக்கள் முன்
வைத்தார்:
·
பார்ப்பனர்களின்
மேலாதிக்கத்தை எதிர்க்கிற,
·
வேதங்களை ஏற்றுக்
கொள்ளாத,
·
இந்துக் கடவுள்களை
வணங்காத,
·
கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத,
·
பிணங்களை எரிக்காமல்
புதைக்கிற,
·
மாட்டுக் கறி உண்ணுகிற
– ஜாதிகள் எவை?
இதன் முடிவுகளை
1911ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது வெளியிடுகிறர். அதன்படி, இந்தியா
முழுக்க இருந்த பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாவே இருந்தது.
ஏனைய மக்களுடைய பதில்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திப் போகவில்லை. அவர்களை எப்படி ‘இந்து’
என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அடைப்பது என்ற நியாயமான கேள்வியை கெய்ட் எழுப்பினார்.
அதுவரை ‘மிலேச்சர்களை
இந்துக்களாக சேர்த்துக் கொள்ள முடியாது’ என்று சொல்லிக் கொண்டிருந்த பார்ப்பனத்
தலைவர்களுக்கு, ஆங்கிலேயர்கள் உருவாக்கி வைத்திருந்த சட்ட சபைகளும் பதவிகளும் சில
கணக்குகளைப் புரிய வைத்தன. அனைத்து ஜாதிகளையும் இணைத்து இந்து என்ற அடையாளச்
சொல்லிற்குள் கொண்டுவருவது தான் இனி வரும் நாட்களில் தங்களுக்கான அரசியல்
ஆளுமைக்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். மக்கள் தொகையில் மூன்று
சதவிகிதத்திற்குள் மட்டுமே இருக்கும் தங்களை மட்டும் ‘இந்து’ என்று ஒதுக்கிக்
கொண்டால் மற்ற ஜாதியினர் ஒன்று சேர்ந்து பெரும்பான்மை ஆகிவிடுவார்கள்.
எனவே
அவர்களையும் இந்துவாக இருப்பதற்கு ‘அனுமதிப்பதன்’ மூலம் அவர்களுக்கும் சேர்த்து
தாங்களே தலைமை வகிக்கக்கூடிய ‘இந்துப்
பெரும்பான்மை’ (Hindu Majoritarianism) உருவாகிவிடும் என்று
முடிவு செய்கிறார்கள். அதுவரை நாட்டின் தலைவர்களாய் அறியப்பட்டவர்கள் அனைவரும்
பார்ப்பனர்களே! எனவே இனியும் ‘இந்துக்களின் தலைவர்களாய்’ அவர்களே இருப்பதற்கு எந்த எதிர்ப்பும் எழப் போவதில்லை.
எனவே காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபா இரண்டையும் சேர்ந்த தலைவர்கள் முழுமையாகத்
தங்களை ‘இந்து’ உருவாக்கத்தில் ஈடுபடுத்த்திக் கொள்கிறார்கள்.
இந்து
உருவாக்கத்திற்கு, தொடக்கத்தில் முழு மூச்சாக வேலை செய்தவர் திலகர். அவரைக்
கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா பூலே. காங்கிரஸ் சார்பாக அந்தச் செயலை “சுதந்திரப்
போராட்டம்”, தேச ஒற்றுமை” என்ற பெயர்களில் கச்சிதமாகச் செய்து முடித்தவர் மோகன்தாஸ்
காந்தி. இந்தத் திட்டத்தைசரியாகப் புரிந்து கொண்டவர்கள் டாக்டர் அம்பேத்கரும்
பெரியாரும் மட்டும்தான்