46. மதுரைக்குப் போயிட்டு வர்ரேன்...
சென்னையில் மகள் வீட்டில் ஒரு மாதம் டேரா போட்டுவிட்டு, நம்ம ஊர் நாமில்லாமல் எப்படி இருக்கின்றதோ, என்னவெல்லாம் ஆச்சோ என்ற கரிசனத்தோடு சரி, நம்ம ஊரை ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோம் என்று மதுரைக்குப் புறப்பட்டு, நேற்று காலைல மதுரைக்குள்ள நுழைஞ்சேன். ஆஹா, நம்ம ஊரு காத்துன்னு நினைச்சுக்கிட்டு ஒரு மூச்சு இழுக்கலாமேன்னு ஒரு இழுப்பு இழுக்கறதுக்குள்ள காதில அறையிறது மாதிரி சினிமாப் பாட்டுச் சத்தம் காதைத் துளைச்சது. ஏதோ ஒரு கோயில்; ஏதோ ஒரு விழா; ஒலிபெருக்கியில் அம்பி ஐயங்கார் ஐய்யராத்துப் பொண்ணைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார் - ரொம்பவே சத்தமாக. ஒரு மாத சென்னை தங்கலில் ஒரே ஒரு நாள்மட்டும் இந்த ஒலிபெருக்கிச் சத்தத்தைக் கேட்டேன். ஆனால், எங்கள் ஊரில் மனுஷப் பய பிறந்தா பாட்டு, காது குத்துக்குப் பாட்டு; இன்னும், புனித(!?) நீராட்டுக்கு, அதுக்கு இதுக்கு என்றும், அதோடு செத்தாலும் பாட்டு என்று வாழ்வே எங்களுக்கு ஒலிபெருக்கியோடுதான்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்கூட ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல்துறையின் அனுமதி பெறவேண்டும் என்றொரு கட்டாயம் இருந்தது. இப்போதோ அப்படி எதுவுமே கிடையாது. அது பகலா, இரவா, தேர்வு நேரமா, எந்தத் தடையும் கிடையாது. குழாய் ஒலிபெருக்கி கூடாதென்று ஒரு சட்டம் வந்தது. சட்டத்தில் ஓட்டை கண்டுபிடிப்பதை ஒரு தலையான கலையாகவே செய்யும் எம் நற்றமிழர்கூட்டம் இதற்கெல்லாம் தலைவணங்குமா என்ன? இராட்சச சைஸ்களில் ஸ்பீக்கர் பெட்டிகள் இப்போது தமிழ் இசைச் சேவை செய்து வருகின்றன தங்கு தடையின்றி. அதிலும், அந்த அதிரும் பெட்டிகளுக்கு முன்பாக நின்றுகொண்டு பொங்கி வரும் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்தும் கலாரசிகர்கள் - உங்கள் ஊரில் உண்டா, என்ன?
* * * * *
9 comments:
அன்புள்ள தருமி,
நலமா?
//எங்கள் ஊரில் மனுஷப் பய பிறந்தா பாட்டு, காது குத்துக்குப் பாட்டு;
இன்னும், புனித(!?) நீராட்டுக்கு, அதுக்கு இதுக்கு என்றும், அதோடு
செத்தாலும் பாட்டு என்று வாழ்வே எங்களுக்கு ஒலிபெருக்கியோடுதான். //
இங்கே இப்படி இல்லைதான். ஆனா வயசுப் பசங்க ஓட்டிக்கிட்டுப் போற காருலே பார்க்கணுமே!
சிக்னல்லே நிக்கறப்ப ஊரையே தூக்கறமாதிரி சத்தமா.... ஐய்யோ தலை வெடிச்சிரும்!
சப்வூஃபர்ஸ் அது இதுன்னு என்னென்னவோ ஸ்பீக்கர்ஸ் போங்க.
என்றும் அன்புடன்,
துளசி.
கார்ன உடனே ஞாபகத்துக்கு வருது... நேத்தி இங்க பக்கத்து ஊருல, நடுராத்திரி 5 மணிக்கு கார் அலாரம் அடிச்சிருக்கு.. 3 நிமிஷம் பாத்துருக்கான் ஒருத்தன், அப்புறம் கடுப்பாகி shot gun எடுத்துகிட்டு போயி கார "போட்டு" தள்ளிட்டான்... துப்பாக்கி சத்தம் கேட்டு பயந்து போயி எல்லாரும் போலீஸ¤க்கு போன் போட்டுட்டாங்க. போலீஸ் விரைந்து வந்து அந்த அபார்ட்மெண்ட் காம்ளெக்ஸையே காலி பண்ணி, இவன புடிச்சி விலங்கு மாட்டி ஜெயிலுக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க.
இப்ப தலைவர் மேல 'துப்பாக்கியை துஷ்பிரயோகம் செய்தல்' , 'சொத்துக்கு சேதம் விளைவித்தல்' என்று 2 கேஸ¤... அதுமட்டுமில்லாம, அவன் சுட்ட கார் புது கேம்ரி. அது என்ஜின்ல குண்டு பாஞ்சி இப்போ ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதாம். அதுக்கு தலைவர் தான் தெண்டம் அழணும்...
இதுல செம கூத்து அக்கம் பக்கத்து வீட்டுகாரங்க கொடுத்த ஸ்டேட்மெண்ட்தான்... இவனுக்கு சவுண்ட் தாங்க முடியலையா... தினமும் இவன் பாட்டு கேக்குறேன்னு பயங்கர சத்தத்துல தலை வலிக்கிற மாதிரி அலற விடுவானே... நாங்க யார சுடுறதாம்னு...
துளசி,
உங்க பாடு பரவாயில்லைன்னு சொல்றேன். ஏன்னா அது 'passing sounds/noise" எங்க விவகாரம் -நிலைத்து நின்று உறுத்தும் 'ஊழ்வினை'. விடாது சத்தம்!
முகமூடி, கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. உங்க ஊரு ஒரு 'மாதிரி'யாத்தான் இருக்கும்போல.
அட மருதயிலிருந்து கூட பதில் எழுதறீங்க... இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்சா... என்னப்பா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை... ;-))
//ஆனா வயசுப் பசங்க ஓட்டிக்கிட்டுப் போற காருலே பார்க்கணுமே!
சிக்னல்லே நிக்கறப்ப ஊரையே தூக்கறமாதிரி சத்தமா.... ஐய்யோ தலை வெடிச்சிரும்!
சப்வூஃபர்ஸ் அது இதுன்னு என்னென்னவோ ஸ்பீக்கர்ஸ் போங்க.//
Adhee adhee! ;O)
இருந்தாலும் நாஞ் சொல்றேன் இந்த மாதிரி ஏம்மருதய லந்து பண்ணிணீன்னா அப்புறம் தருமின்னு பாக்கமாட்டேன். குல வழக்கத்த இப்டி கவுத்துபுடீக, போனா போகுது.
இதுல // இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்சா// ன்னு இவிங்க லொள்ளூ வேர பண்ராய்ங்களே? அடியேய் மருதேல என்ன குருதேல போராய்ங்கனு நெனப்பா?
// இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்சா//
இது..இந்த லொள்ளுதனே வேண்டங்கறது..என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க..எங்க கூடல் மாநகரப்பத்தி..
அட சுரேசு வாங்கப்பு..பின்ன இத்தனை நாளா ஆளு எங்கன இருந்தீக..? நமக்குள்ள என்ன, கோவிச்சுக்காதீக. ஆமா, மருதக்காரவியளா, நீங்க.. எந்தப் பக்கம்??
நன்றி - மழை ஷ்ரேயாவுக்கு
தருமி நாம மொதல்ல கலக்டர் பங்ளாவுக்கு பக்கத்ல இருக்ற ரேஸ்கோர்ஸ் காலனில பால்ய பருவத்த கழிச்சு பின்னாடி பழங்காநத்தமென்னும்
பெருங்குடிக்கு அருகேயுள்ள பசும்பொன்நகரில் வளர்ந்து, மதுரை கல்லூரியில் படித்து (முதுகலை வரை) பின்பு மும்பாய் சென்று (முனைவராகி) தற்பொழுது நிஸியில் வாசம்.
சக மதுரக்காரர கண்டுக்கிட்டதுல மகிழ்ச்சிதா போங்க. உங்க தனிமடல் முகவரி இல்லாததால இங்கன இத இட்டேன். என் வலைபதிவில் என் முகவரி உள்ளது. சமயம் கிடைத்தால் தொடர்புகொள்ளவும்
"சக மதுரக்காரர கண்டுக்கிட்டதுல மகிழ்ச்சிதா போங்க"
எனக்கும்தான் சுரேஷ். துணைக்கு மருதக்கார ஆளுக இல்லாம் தவிக்கிறது எனக்குத்தான் தெரியும்
Post a Comment