உண்மையாகச் சொல்கிறேன். ஒரு மறக்க முடியாத வாரமாக இந்த நாட்கள் கழிந்தன. ஆனால், முடியும் தருவாயில் வந்த ஒரு பின்னூட்டம், பின்னூட்டமா அது என்னைக் கொஞ்சம் - கொஞ்சமென்ன கொஞ்சம் - நன்றாகவே தடுமாற வைத்துவிட்டது. எழுத நினைத்து வைத்தவைகளை எப்படி சொல்ல முடியுமோ, தெரியவில்லை. அந்தப் பின்னூட்டம் வந்து சில நிமிடங்களே ஆயின. இப்போது தொடர மனமில்லை. சிறிது நேரம் கழித்து வந்து தொடர்கிறேன்.
திங்கட்கிழமைகாலை: 8.5810.10.;05
இந்தப் பதிவு நட்சத்திரப் பதிவோடு சேராது என்றே எண்ணுகிறேன். நேற்று இரவு எழுத முயற்சித்தும் முடியாது போயிற்று.
நன்றாகச் சென்ற ஒரு வாரம், என்னை cloud9–ல் ஏற்றிவைத்த பின்னூட்டங்கள், நமக்கும் ஏதோ கொஞ்சம் எழுத வரும்போலும் என்ற நினைப்பு - இவையெல்லாமே கடைசி நேரத்தில் ‘மனிதன்’ என்ற பெருமனிதனால் சிதைந்தது வருத்தத்தையே தருகிறது. ஆனாலும் அந்த ‘மனிதனின்’ உயர் சிறப்புகளைப் பாடாமல் இருக்க முடியவில்லை. பாருங்களேன், தமிழ்மண நிர்வாகிகளுக்கும், காசிக்கும், மதிக்கும் வலைப்பதிவன் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் நன்றி சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் தன் புகழைப் பாட வைத்த அந்த ‘ம்னிதனின்’ திறமையையும், பெருமையையும் என்னென்று சொல்வது! வேறு எந்தப் பதிவில் போட்டிருந்தாலும் நான் அநேகமாக அதைக் கண்டு கொண்டிருக்கமாட்டேன். ஆனால்..
***அந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்த அவரின் மனிதாபிமானத்திற்கு என் வாழ்த்துக்கள்.இதுபோன்ற ‘வேலை’களைச் செய்ய எவ்வளவு அழகான, பொருத்தமான ஒரு பெயரைத் தன் புனைப்பெயராக வைத்துள்ளார்.***அந்த அறிவுக்கூர்மைக்கு தலை வணங்குகிறேன்.என்ன அழகான வார்த்தைகளால் என்னை ‘அர்ச்சித்திருக்கிறார்’.***அந்த அழகு மொழிக்கு அவரை வாழ்த்துகிறேன்.4 என்பது எங்கெங்கே பதிவில் வந்திருக்கிறது என்று தேடித் தேடி எடுத்து, தன் உயர்ந்த கருத்துக்களுக்கு அவைகளைச் சான்றாக நிறுவி உள்ளார்.***இந்தப் பொறுமைக்கும், அவரது ஆராய்ச்சித் திறனுக்கும் வாழ்த்துக்கள்.***அதற்கு மொந்தை எழுத்துக்களில் பதிலும் கேட்டிருக்கும் அவரது புலமைக்கு வாழ்த்துக்கள்.***எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் நான் இப்படி எழுதியிருக்கிறேன் என்று ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருக்கிறாறே அந்த நேர்மைக்குத் தலை வணங்கித்தானே ஆக வேண்டும்.***என்னே ஒரு தெளிவு, என்னே ஒரு நேர்மை. என்னே ஒரு கொள்கைப் பிடிப்பு. இவரல்லவோ ஒரு தனி ‘மனிதப்பிறவி, கொள்கைக் கோமான்” வாழ்க அவர்தம் கொள்கையும்,தொண்டும்.************* ************
தமிழ்மணம் பற்றி…இல்லை இல்லை.. தமிழ்மணத்தில் உள்ள தமிழ் பற்றியும், வலைஞர் பற்றியும் எழுத ஆசை. மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று எடுத்துக் கொள்ளும்படி முதலிலேயே கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்மணம் தமிழுக்குச் சேவை செய்கின்றதா? இது என் முதல் கேள்வி. இல்லை என்பது அநேகமாக பலரது பதிலாக …………….. இதுபோன்று பல் விதயங்களை எழுத எடுத்து வைத்திருந்தேன். இப்போது முடியவில்லை. வேறொரு சமயம் இதைத் தொடர்கிறேன்.நான் எழுத நினைத்தவைகளை எழுதுவேன். தயவசெய்து இப்போது பொருத்தருள்க. நட்சத்திரப் பதிவுகளை மட்டுமேயா வாசிப்பவர்கள் நீங்கள்.
********************* ***********************************************************
நட்சத்திரமாக்கி, என்னை ஒரு வாரம் தனி உயரத்தில் ஒளிர வைத்து, நித்தம் நித்தம் புத்தம் புது நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தி, அதையெல்லாம் விட எனக்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கையைக் கொடுத்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும், நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்போருக்கும் என் நன்றி.
சிறப்பாக இருவர் பெயர் சொல்ல வேண்டும். முதல்வர்; காசி: எல்லோரும் அவர் தமிழ்மணத்திற்குச் செய்த, செய்துகொண்டிருக்கும் technical விதயங்கள் பற்றிச் சொல்வார்கள். அது என்ன மாதிரி க. கை. நா. -க்கு (கம்ப்யூட்டர் கை நாட்டு) அவ்வளவு புரியாது. ஆனால் என்னைக் கவர்ந்தது அவரது ‘என் கோடு; உன்கோடு; யூனிகோடு’ என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரைதான். அது என்னை தமிழ்மணத்தின் மேல் காதல் கொள்ளச் செய்தது. கம்ப்யூட்டர் விதயங்களை இவ்வளவு எளிதாக, அதைவிடவும் சுவையாகவும் சொல்ல முடியுமா என்ற வியப்பு. வெறும் பாராட்டல்ல, காசி; 37 வருடங்களாக கல்லூரியில் ஆசிரியனாக இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அந்தக் கட்டுரை it is a piece of art . இது போன்ற art of writing எல்லோருக்கும் வருவதில்லை. நீங்கள் அதே மாதிரி பல கட்டுரைகள் எழுதி - என் போன்றோருக்காக மட்டுமல்ல - உங்கள் திறனையும் தமிழ் உலகமே அறியச் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த சேவையைத் தொடர வாழ்த்துக்கள். நிச்சயமாக இதை ஒரு வெறும் புகழ் மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மதி, முதலில் என் ‘புதுவீடு’ நன்றாக இருக்கிறது’ என்று சொன்ன பலரின் பாராட்டுக்களை உங்களுக்குத் திசை திருப்பி விடுகிறேன். அந்த process-ல் நான் எப்படிப்பட்ட க.கை.நா. என்பதை உங்களிடம் நன்கு நிரூபித்து விட்டேன் என்று நினைக்கிறேன். செய்த உதவிகளுக்கு - உங்கள் உடல் நலக் குறைகளோடும் - மிக்க நன்றி. இன்னும் உதவி கேட்டு வருவேன்! இனிய சேதியைக் கொண்டு வந்ததை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனாலும் உங்களுக்கு என்னைப்பொருத்தவரையில் அசாத்திய பொறுமை. அதே சமயம் உங்கள் கோபம் (என்னிடமில்லை; நான் பார்த்த வேறிடங்களில்) மிகவும் நன்றாக இருக்கிறது!
அனைத்து நண்பர்களே, ஒன்று பார்த்தீர்களா? நீங்கள் யாரோ, நான் யாரோ என்றிருக்கும்போது ஒரே ஒரு பின்னூட்டம் நம்மை எவ்வளவு நெருங்கி வரச்செய்து விடுகிறது. ஒரு மடலில் நண்பர்களாகிவிடும் மாயம் நம் தமிழ்மணத்தில் எவ்வளவு சாதாரணமாகி விடுகிறது. ஒரே மடலில் ஒருவரை ஒருவர் சர்வ சாதாரணமாகப் பெயர் சொல்லி அழைத்து, காலை வாரி, கேலி செய்து, லொள்ளு பண்ணி,…ஓ, என்ன ஒரு இனிய உலகம் இது. நான் இப்போதெல்லாம் காலங்கார்த்தால கணினி முன் உட்காரப் போகும் முன் வீட்டில் சொல்வது: ‘ என் நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்; போய்ப் பார்த்துட்டு வர்ரேன்’. அது உண்மைதான். சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன். இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை. அடிக்கடி ‘பேசிக்குவோம்’ - அதான் இருக்கே நம்ம தமிழ்மணம். நன்றியெல்லாம் நண்பர்களுக்குள் தேவையா என்ன?
என்றும் அன்புடன்………….தருமி
Oct 10 2005 10:04 am நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 2 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
22 Responses
Josaph Irudayaraj Says: after publication. e -->October 10th, 2005 at 1:06 pm e
கடந்த வாரம் வந்து எங்களோடுஉறவாடியதற்கு நன்றி!
உங்கள் அநுபவமும்,அறிவும், வெகு லாகவமாகஉங்களுக்கு உங்கள் எழுத்துகள் வழியாகவெளியில் வருது. கற்றவர் கற்றவர்தான்,கைநாட்டு (என்னை போன்று) கை நாட்டு தான்.
வாழ்த்துகள்!
ஓரு பாட்டு பாடிக்கிட்டே போயிடவா? !!!!!
உறவுகள் தொடர்கதைஉணர்வுகள் சிறு கதைஒரு கதை இன்று முடியலாம்ஒரு கதை இன்று தொடங்கலாம்இனியெல்லாம் சுகமே!…..
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 2:32 pm e
ரொம்பவே இன்சல்ட் பண்ணீட்டீங்க ஜோசஃப்…ஒரு கதை இன்று முடியலாம்இனியெல்லாம் சுகமே!…..”………….இதுக்கென்னங்க அர்த்தம்!! ம்ம்!!!
அன்புடன்…….தருமி
அது என்ன, ஜோச்ஃப் -க்கு இந்த spelling? அதப்பத்தி அட்டாக் பண்ணி எழுதணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்..
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 6:02 pm e
தருமி. மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
ஒன்று சொல்வேன். மனிதன் என்ற பெயரில் எழுதும் நபரைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டாம்.உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, முன்பு ஆபாசப்பின்னூட்டங்கள் வலைப்பதிவுகளில் உலவியது?இந்த ‘மனிதனும்’ அந்த வகைப்பின்னூட்டங்கள் எழுதியவர்தான். ஓரிரு இடங்களில் மிக அருந்தலாக சாதாரணப்பின்னூட்டங்களும் இட்டுள்ளார். எனவே அந்தப் பெயரில் வருவதைக் கருத்திலெத்து உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள்.
padma Says: after publication. e -->October 10th, 2005 at 6:23 pm e
நல்ல வாரம் தருமி. நிறைய பின்னூட்டம் இடவில்லை என்றாலும் படித்தேன்.
Awwai Says: after publication. e -->October 10th, 2005 at 7:34 pm e
Dear Dharumi! you disappointed me! I do agree that Mr.Manithan touched a very senstitive topic. But I don’t understand why it should bother you so much!Suriyanai paarththu Naai kuraiththaal enna,Star-ai paarththu manithan muraiththaal enna?“மாற்றுக் கருத்துகள் இருந்தால், சினமற்று இது இவன் கருத்து என்று” neengal vittirukalame!
Why did you forget your 10th commandment (10.Nothing matters. zen, பதறுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை).—When you were considered ’star of the week’, it is not that you were MADE into a star for a week; rather, it is recognition of the star (writing) qualities in you. The recognition implies that you were, are and will continue to be a star, irrespective of the readership!So, don’t get bored of writing; continue writing, please. You have made many of us an addict (I used to visit your blog when I had free time. Now-a-days it is part of my morning ritual!).If you hit “writer’s block”, you are permitted a short break to refresh yourself. But be back.anbudan awwai.
PS: In a personal mail, kindly tell me how to use Tamizh font in gmail.
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 8:06 pm e
என்ன சொல்லுங்கள்…’என் பையனே’வந்து மண்டையில் தட்டி, என் ‘கட்டளை’யை எனக்கே திருப்பிச் சொல்லும்போதுதான் கூடக் கொஞ்சம் உறைக்கிறது.
அவ்வை, ஆமப்பா../ஆமா..கொஞ்சம் தேவையில்லாமல்தான் தடுமாறிட்டேன். மன்னிச்சுக்கோ. i will go steady; ok?
முகமூடி Says: after publication. e -->October 10th, 2005 at 11:09 pm e
தருமி… உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். சிறப்பான பதிவுகள். மோசமான பின்னூட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். வலைப்பூ அரசியலில் சகஜமப்பா என்று ஜாலியாக இருங்கள். இந்தி எதிர்ப்பு மாதிரியான கட்டுரைகள் அதை பற்றி கேள்வி மட்டுமே பட்ட்ருந்த என் போன்றோருக்கு ஒரு புதிய பரிணாமத்தை காட்டியது. உங்கள் அனுபவங்கள் பதிவுகளாக எங்களுக்கு தேவை.
தெருத்தொண்டன் Says: after publication. e -->October 10th, 2005 at 11:12 pm e
நல்ல வாரம் நன்றி சார்.
துளசி கோபால் Says: after publication. e -->October 11th, 2005 at 12:20 am e
உங்க நட்சத்திரவாரம் நல்லாவே போச்சு தருமி.
இன்னும் எழுதியிருக்கலாம்.வாழ்த்துக்கள்.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:36 am e
Avvai,
Type your tamil text here….,
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
And then C&P into gmail form.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:38 am e
Avvai,
Type your tamil text at http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
and C&P into gmail.
anony Says: after publication. e -->October 11th, 2005 at 8:44 am e
தருமி,
நானும் இதுபோல் நிறைய வலைத்தளங்களில் நட்பு பாராட்டிவிட்டு பின்பு சுத்தமா அந்தப் பக்கமே போகாம இருந்திருக்கேன். வலை உலகம் ஒரு மாய உலகம். முகத்துக்கு முகம் பார்க்காமல் பாராட்டும் நட்பு மறையும்போது எந்த வருத்ததையும் தராது. இன்று நான் முகமின்றி தமிழ்மணத்தில் உலாவுவதற்க்கும் அதுவே காரணம்.
இந்த போக்கை புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்படுபவர்களில் முதன்மையானவர் ‘சாரு நிவேதிதா’.
அன்புடன்,உங்கள் ரசிகன்
Josaph Irudayaraj Says: after publication. e -->October 11th, 2005 at 11:50 am e
ஐயோ! என்னாங்க பெரிய வார்தையெல்லாம்…” இன்சல்ட்டு” கின்சல்ட்டுனுகிட்டு, அப்டியெல்லாம் ஓன்னுமில்லை
உங்கள் வரிகளை வாசித்துக்கொண்டே வரும் போது தீடீரென்று இந்த பாட்டு மனசுக்குள் வந்துச்சு, சும்மா அப்படியே கிறுக்கிவிட்டுட்டேன் அவ்வளவு தான்.
//சிலரின் ஓரிரு வார்த்தைகள்கூட மனசுக்குள்ள ஆழமா போய் உக்காந்துக்குது. ‘ஆத்மார்த்தமான’ அப்டின்னு சொல்வாங்களே, அது மாதிரி நிறைய பேரை நான் மனசுக்குள்ள வச்சிருக்கேன்; எப்போவும் வச்சிருப்பேன்.//
இதுக்கு தான் ” இனியெல்லாம் சுகமே!… அப்படீன்னது.
//இந்த உறவுகள் நிலைத்திருக்க, நீண்டிருக்க ஆசை.//
இதுக்குத்தான் “ஒரு கதை இன்று தொடங்கலாம்!…” அப்படீன்னது,(புதுக்கதை யொன்று தொடங்கலாம் ன்னு இருந்திருந்தா நல்லா இருந்து இருக்கும் போல)
//இன்றிரவோடு star of the week’ முடிகிறது.//இதுக்கு தான் ” ஒரு கதை இன்று முடியலாம்..” அப்படீன்னது.
மற்றும் படி வேறு ஒன்னும் கிடையாதுங்க! நமக்கு பொடி வச்சு எல்லாம் பேச தெரியாதுங்க. மனசுக்கு பட்டத படக்குன்னு சொல்லிபுடுவேன், அம்புட்டு தாங்க!
மனசு பொசுக்குன்னு ஆகியிருந்தா மன்னிச்சுகோங்க.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 12:02 pm e
ஐயோடா…தம்பி ஜோச்ஃப்,நான்கூட ஒரு ‘பொடி வச்சி’ ஜோக் அடிச்சேன்’யா! (இப்படி ஜோக் அடிச்சிட்டு, நான் அடிச்சது ஜோக்கு’ப்பான்னு சொல்ற தல எழுத்து வாத்தியார்களுக்கே வாச்சது!!)நல்லா பாருங்க நீங்க எழுதின பாட்டின் கடைசி 3 வரிகளில் நடு வரியை உருவிட்டுப் போட்டதும் பாட்டின் அர்த்தம் மாறிச்சே, கவனிக்கலையா.நான் எதையும் ரொம்ப சீரியஸா எடுக்கிற ஆளுன்னு தப்பா ஒரு நினப்பு வர்ர மாதிரி நடந்துகிட்டேன். இல்ல..? அப்படியெல்லாம் இல்லன்னு மக்களுக்குப் புரியவைக்க இன்னும் நாளாகும்போல.அது சரி, அந்த spelling விஷயம் என்ன ஆச்சு? பதிலேஇல்ல?
Suresh - Penathal Says: after publication. e -->October 11th, 2005 at 12:31 pm e
(இப்படி ஜோக் அடிச்சிட்டு, நான் அடிச்சது ஜோக்கு’ப்பான்னு சொல்ற தல எழுத்து வாத்தியார்களுக்கே வாச்சது!!)அப்படிப் போடுங்க!!
same side goal-aa?
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 12:48 pm e
“same side goal-aa? ”
இல்ல சுரேஷ்,
CONFESSION!!
ஒண்ணு ஞாபகத்திற்கு வருது; எங்க P.U.C. தமிழ் ஆசிரியர் மறுபடியும் இளங்கலை முதலாண்டுக்கும் வகுப்பெடுக்க வந்தார்.(வாத்தியார்கள் எல்லோரும் ஒரு stock of jokes வச்சிக்கிட்டு அப்பப்போ ஒண்ணு ஒண்ணா எடுத்து விடறதுதான வழக்கம். அடுத்த confession!) நம்ம வாத்தியாரும் அதே மாதிரி சில ஜோக்குகளை repeat பண்ணுவார். இன்னொரு mannerism அவருக்கு. ஒவ்வொரு ஜோக்குக்கும் முந்தி மூக்கைச் சொறிந்து கொள்வார். ஆனா அவரை எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும். அதனால அவரோட பழைய மாணவர்கள் எல்லோரும் அவர் மூக்கைத்தொட்டதும் தயாராயிடுவோம்; மற்ற புது மாணவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொள்வோம். ஏதோ நம்மாலான உதவி, வாத்தியாருக்கு.
நம்ம கிளாஸ்பத்தி நம்ம பசங்ககிட்டதான கேக்கணும்.
தாணு Says: after publication. e -->October 11th, 2005 at 2:28 pm e
உங்க எழுத்துக்களெல்லாம் வாசித்தாலும் இடையிடையே பின்னூட்டமிட நேரமிருப்பதில்லை. சில நாள் சேர்த்துவைச்சுக் கூட வாசிப்பேன். ஆனாலும் இவ்ளோ வயசாகியிருக்கும்னு நெனைக்கலை, உங்கள் எழுத்துக்களிலிருந்த இளமையைப் பார்த்து!
இன்னும் இளமையான சண்டை சச்சரவுகளுடன் சந்தியுங்கள்.
வசந்தன் Says: after publication. e -->October 11th, 2005 at 4:46 pm e
//இன்னும் இளமையான சண்டை சச்சரவுகளுடன் சந்தியுங்கள். //
தாணு சொல்லுறதும் சரிதான். சண்டை சச்சரவெண்டு வந்தால்தான் இளமையாயிருக்கிறமாதிரிக் காட்டலாம்.அதால இனி சண்டை பிடிக்கிற தருமியப் பாக்க ஆசையாக் கிடக்கு.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 6:29 pm e
தாணுகூட சண்டை போடலாம்; வசந்தன் கூட சண்டை போடலாம்; நம்ம லொள்ளு பார்ட்டிக கூட சண்டை போடலாம்..ஆனா, மனிதர்கள் எல்லாரும் அதே மாதிரியா, என்ன?
Awwai Says: after publication. e -->October 11th, 2005 at 6:45 pm e
“நம்ம கிளாஸ்பத்தி நம்ம பசங்ககிட்டதான கேக்கணும்.”Suppppera irukkum.You feel relaxed and well rested after his class!
Awwai Says: after publication. e -->October 11th, 2005 at 7:01 pm e
பெயர் இல்ல பெருமகனுக்கு மிக்க நன்றி! இப்படி தமிழ்ல எழுதுவது இனிமையக இருகிறது!
ஸாம்-அய்யாவின் வகுப்புகள் மிக நிறைவாக/ நித்திரையாக இருக்கும். (இன்த ஆளூ எழுதுவதே ( இவ்வளவு சுவைனா வகுப்பு எப்படி சூப்பரா இருன்துருக்கும் யொசிச்சு பாருங்க!
பிழைகளுக்கு மன்னிக்கவும். விரைவில் சரியாக டைப் அடிக்க கற்று கொள்வேன்.
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 7:52 pm e
அடப் பாவி அவ்வை,கெடுத்தியே காரியத்தை…ஏதோ இது நாள்வரை ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வந்தாய்; இப்போ தமிழ்ல எழுத ஆரம்பிச்சிட்டியா…இனி எம்பாடு அவ்வளவு தான்!
இதுக்காகவாவது பெனாத்தல் சுரேஷின் மாணவன் யாரையாவது பிடிக்கணும்..
No comments:
Post a Comment