*
மணற்கேணி 2009 போட்டியின் "அரசியல் / சமூகம்" பிரிவின் வெற்றியாளர் "திரு.தருமி" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.
அரசியல் / சமூகம் பிரிவு கட்டுரைகள்
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமி
--- இப்படி ஒரு வெற்றி கிடைத்ததும், 'அடடே! நமக்கா' என்று தோன்றியது. 'வாங்க சிங்கப்பூருக்கு' என்று சிங்கை தமிழ்ப்பதிவர்களின் அழைப்பும் வந்தது. ஒரு வழியாக புறப்பட ஆரம்பிச்சாச்சு. 21 மே இரவு சென்னையிலிருந்து பயணம். திரும்புவது 31 மே காலை. தங்ஸ் 'வரமாட்டேன், போ!' என்று சொன்னதால் தனிப்பயணம். தனிப்பயணம் இல்லை ... நண்பன் பிரபாகர் சென்னையிலிருந்து என்னோடு வருகிறார். தேவன்மாயம் எங்களுக்கு அடுத்த விமானத்தில் வருகிறார். I miss கையேடு.
சிங்கைப் பதிவர்கள் இந்தப் போட்டிக்காக தங்கள் உழைப்பு, நேரம், ஆர்வம், காலம், பணம், பல முயற்சிகள், எல்லாவற்றையும் தாராளமாகக் கொடுத்து, அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கெல்லாம் தமிழ்ப்பற்று ஒன்றுதான் காரணம் என்பதை நினைக்கும்போது அவர்களுக்கு பெரும் பாராட்டும், நன்றியும் சொல்லியாக வேண்டும். வாழ்க .. வளர்க ..
போய்ட்டு வந்து மீதிக் கதை சொல்றேன். வர்ட்டா .......?
பி.கு.:
பதிவு போட்டதும் மதுரைப் பதிவர்களிடமிருந்து ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் ... மதுரை திரும்பி வரும்போது எந்த சைஸில் flexboard அடிக்கிறது; என்ன டிஸைன் போடணும்; தலைவா வா ... அப்டின்னு போடலாமா?, இளைஞரணியின் வழிகாட்டியே ..ன்னு போடவா? -- இப்படி எக்கச்சக்க கேள்விகள்.
உ.பிறப்புகளே & ர.ரத்தங்களே, இதெல்லாம் தயவு செய்து வேண்டவே வேண்டாம்.
:)
******************
ஆனானப்பட்ட இந்து தினசரியில் கிரிக்கெட்டுக்குப் பதிலா உலகக் கால்பந்து பற்றி நேற்றிலிருந்து (19 மே) செய்திகள் போட ஆரம்பித்து விட்டார்கள். நம் பதிவர்கள் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு பதிவு போடுவார்கள். ஆனால் பாவம் .. கால்பந்து. சரி, நாமளாவது ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாமா என்று நினைத்து .. நினைத்து .. காலமாகி விட்டது. உடன் சேர ஆர்வமானவர்களைத் தேட நினைத்தும் கைகூடவில்லை. சரி... நாமளா விளையாட்டைப் பார்த்து, போனதடவை ஆங்கிலப் பதிவில் சிறு குறிப்புகள் எழுதியது மாதிரி ஏதாவது எழுதி 'பசி'யை ஆற்றிக் கொள்ளலாமென நினைத்து விட்டேன். அதிலும் ஒரு பிரச்சனை, எந்த தொலைக்காட்சி ஒளிபரப்பப் போவது என்றும் தெரியவில்லை, அதோடு விளையாட்டு சேனல்கள் எல்லாவற்றையும் கடந்த சில வாரங்களாக முடக்கிப் போட்டு வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு மட்டும் ஒரு சேனல். மற்றதெல்லாம் அரோகரா .. கேபிள்காரர்கள் சுமங்கலி அவற்றையெல்லாம் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஜூனில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்கிறார்கள். அதென்னமோ .. கால்பந்துன்னா இப்படி ஒரு அலட்சியம். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். சென்ற கால்பந்து உலகக் கோப்பைக்கும் இதே தகராறு இருந்து, பின் வந்தது.
கால்பந்து பார்க்கணும். எங்க ஊர் 'பெரியவர்' கண் திறக்கணும்.
***********
21 comments:
ஆஹா...... உங்கள் சிங்கைப் பயண(மு)ம் வெற்றி பெற இனிய வாழ்த்து(க்)கள்!!!!!
எஞ்சாய்!!!!!!!!!!!
சிங்கையில் உங்கள் அனுபவங்களை படிக்க காத்திருக்கேன்.
எல்லாமே வித்தியாசமாக இருந்தாலும்,இது வரை யாரும் சொல்லாததை நீங்கள் சொல்கிறீர்களா என்று பார்ப்போம்.
Sir all the best for your S'pore visit..
I'm an ardent fan of soccer.. Appreciate your effort in starting a blog on it. even i was thinking of writing about it. I would like to contribute if u are ok with it.
Happy Journey, Sir.
சிங்கை பயணம் சிறக்க வாழ்த்துகள் ஐயா..:-))
கால்பந்து பத்தி ஏதாவது சொல்லி உங்ககிட்ட திட்டு வாங்க நான் தயாரா இல்லாததினால.. அப்பீட்டு.. ஹி ஹி ஹி..
கா.பா., Bharath,
ஆரம்பிச்சிருவோமா?
துளசி,
பாலா,
வ.குமார்
.........நன்றி
பயணம் சிறப்பாக அமையவும் பின்னர் பகிரப்போவதற்கும் இணைந்து
வாழ்த்துகள்ங்க தருமி் சார்,
i missed u too.. :(
கால்பந்து பற்றி கொஞ்சூண்டு மண் குடுக்கற அளவிற்கு கலந்துகலாமா.
பள்ளியில் ஒரேயொரு மேட்சில் மாற்று ஆட்டக்காரன். பின்னர், மீண்டும் கல்லூரியில் எங்கள் துறைக்காக விளையாடியதுண்டு. மற்றபடி வெறும் பார்வையாளன் மட்டுமே.
தமிழ்ல விளையாட்டு தளம்
http://www.tamilsportsnews.com/
ஹேப்பி ஜர்னி தருமி!!:)))
சொல்ல மறந்துட்டேன் அது கால்பந்து செய்தி தளம்
வாழ்த்துக்கள், சென்று, வென்று (அதான் மொதல்லயே வென்றாச்சே, அப்றம் என்னன்னு கேக்கறீங்களா, சிங்கை பதிவர்களின் உள்ளங்களை வென்று) வாருங்கள்.
வாழ்த்துக்கள்!
வாவ்! என்னது தருமிக்கு சிங்கப்பூர் செல்ல அதுவும் வெற்றி மூலமாக வாய்ப்பு கிடைச்சிருக்கா சொல்லவே இல்ல. அசத்துங்க, தலீவா! எஞ்சாய்!!
பயணம் இனிதாகவும், நல்லபடியாக சென்று திரும்பவும் வாழ்த்துக்கள்...
வருக வருக, கடைசிவரை நீங்கள் கேட்ட சிங்கைப் பதிவர்கள் வலைப்பதிவு பட்டியல் அனுப்பு முடியல
:(
நாளை விமானநிலையத்தில் எதிர்கொள்வோம்.
:)
வாங்கையா வாத்தியாரய்யா!
வாழ்த்துக்கள் சார்.
தங்கத் தலைவர்..
தன்மானத் தலைவர்..
எங்கள் நெஞ்சங்களிலெல்லாம் நீங்காத இடம் பிடித்திருக்கும் புகழ் மங்காத் தலைவர்..
செய் அல்லது செத்து மடி என்பதை தனது எழுத்திலேயே செய்து காட்டும் ஆற்றல் மிக்கத் தலைவர்..!
எத்தனை வயதானாலும் பெங்களூரு கிளியை மறவாமல் அவ்வப்போது திரும்பிப் பார்க்கும் உற்றத் தலைவர்..
பகுத்தறிவை வைத்து காசு பணம் பார்க்க விரும்பாமல் கொள்கை பரப்ப விழையும் பொழைக்கத் தெரியாத உத்தமத் தலைவர்..
அண்ணனின் கோட்டையிலேயே அவர் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் போராளித் தலைவர்..!
படைக்கஞ்சா சிங்கம்..!
இனமானப் பேராசிரியரின் சிங்கப்பூர் பயணம் வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன்..!
தலைவா சென்று வா..!
திரும்பி வரும்போது மீனம்பாக்கத்தில் இருந்து மதுரைவரையிலும் பிளக்ஸ் போர்டு வைக்க ஆசைதான்.. ஆனால் என் மனதிலேயே நீ இருப்பதால் வெட்டியாக எதுக்கு போர்டு என்று நினைத்து விட்டுவிடுகிறேன்..!
சென்று வா.. வென்று வா..!
//எத்தனை வயதானாலும் பெங்களூரு கிளியை மறவாமல் அவ்வப்போது திரும்பிப் பார்க்கும்...//
yarunga antha kili ..??!!
//வெட்டியாக எதுக்கு போர்டு //
ithu romba sari ....
பிளக்ஸ் போர்டு ஆர்டர் கொடுத்த பின்னாடி இப்ப வேணாம்னு சொன்னா எப்படி? ரொம்ப ஓவரா வெட்க படாதீக தலைவா.
@Dharumi..
நான் ரெடி..
@கபீஷ்
சைட் இருக்கு ஆனா loadஆலயே???
Post a Comment