Thursday, May 13, 2010

393. WHY I AM NOT A MUSLIM .. 6 (இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் )

*


ஏனைய பதிவுகள்:


*

377. WHY I AM NOT A MUSLIM .. 4 என்ற பதிவினில் குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.

முந்திய பதிவு  god is not great என்ற  நூலிலிருந்து.

இப்போது இப்பதிவு: இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் என்று நூலிலிருந்து.....


இஸ்லாமியத் தத்துவ இயல்
ராகுல் சாங்கிருத்யாயன்
நபிகளின் வாரிசுகள்:
 நபிகளின் தன்னலமற்ற லட்சியத் தோழர்களான ஆபூபக்கர் (கி.பி. 622-642),  உம்மர் ( 642-644), உஸ்மான் (644-656), அலி (656-661)-க்குப் பின்னர், ந;பிகளின் எண்ணம் கற்பனைக் கனாவாகவே முடிந்தது விட்டது.  முகமது மறைந்த 39 வருடங்களுக்குப் பிறகு, அமீர் ம்வாவியா (661-680) வின் கைக்கு ஆட்சி வந்தததிலிருந்து அவருடைய வாரிசுகள் அனைவரும் கி.பி. 1037 வ்ரையிலும் ஷாக்களைப் போலவே, கைசர்களைப் போலவே கொடுங்கோல் ஆட்சியாளர்களாக் இருந்தனர். (பக். 11)

நபிகளைப் பின்பற்றியவர்களில் முதல் சச்சரவு:
மூன்றாவது  கலீபாவான உஸ்மான் உமையா இனத் தலைவரான வாவியாவை டமாஸ்கஸ் கவர்னராக நியமித்தார்.
... வாவியா ரோமானிய ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டார். இதனை  நான்காம் கலீபா அலி கண்டனம் செய்தார். இதனால் இருவருக்குமிடையில் நிரந்தரப் பகைமை தோன்றிவிட்டது. அலியின் மறைவுக்குப் பின் நபிகளின் ஒரே மகளான பாத்திமாவும், அலியின் இரு புத்திரர்களான ஹஸனும், ஹுசேனும் உய்ரோடிருக்கும்வரை நிம்மதியுடன் இருக்க முடியுமா?

ம்வாவியா, ஹஸனை அவரது மனைவியின் மூலம் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார். ஹூசேனின் அபாயத்திலிருந்து தப்பிக்க, மகனான யஜீத் சதி செய்தான். சமாதானத்திற்கு அழைத்து, வழியில் கர்பலா என்னும் பாலைவனத்தில் ஹூசேனும் அவரது பரிவாரங்களூம் நிர்தாட்சண்யமாகக் கொலை செய்யப்பட்டனர். 

அலியும் ஹூசேனும், அவரது நண்பர்களும் நிலப்புரபுத்துவ அமைப்பைக் கடந்த முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யாமல் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னுக்கிழுத்து மீண்டும் சிறு சிறு கூட்டங்களுக்குப் பின் இழுத்துச் செல்லப் பார்த்தனர். 

அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், நாம் இந்தியா, ஈரான், மெஸப்படோமியா, துருக்கு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய கலை, இலக்கியம், தத்துவ இயல் வளர்ச்சியைக் கண்டிருக்க மாட்டோம்.  (பக்.13 - 16 )

இஸ்லாமில் கருத்து வேற்றுமை
இஸ்லாமிய உலகு அரேபியாவை விட்டு வெளி நாடுகளிலும் பரவத் துவங்கியதும், அந்நாடுகளின் கருத்துக்களுடன் மோதல் ஆரம்பமானதும் இஸ்லாமில் கருத்து வேற்றுமை தோன்றுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

நபிகள் காலத்திற்குப் பிறகு நபிகள் வாக்கியங்கள் அனைத்தும், நினைவுகளும் திரட்டுவதற்கான முயற்சி துவங்கியது. ஆனால் நபிகள் மறைந்த ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவற்றில் மனித அறிவு தலையிடவாரம்பித்தது. அப்பொழுது அறிவுக்கும், மத நூலுக்கும் போட்டா போட்டி பிறந்தது.

கருத்து வேற்றுமைகளின் ஆரம்பம்:
ஹலூல்:  இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாகக் கருத்து வேற்றுமை, ஏழாவது நூற்றாண்டில் இருந்த இப்ன ஸபாவால் ஏற்பட்டதென்று கூறுவர். 

இப்ன ஸபாவுக்குப் பின்னர் ஷியாவும் மற்ற பிரிவுகளும் தோன்றின. ஆனால் அக்காலத்தில் இப்பிரிவுகளின் கருத்து வேற்றுமைகளெல்லாம் தத்துவ இயலைப் பற்றியவை அல்ல; குரானைப் பற்றியும், நபிகளின் வாரிசுகளுக்குப் பக்தி செலுத்துவது அல்லது செலுத்தாததைப் பற்றியுமாகத்தான் இருந்தன.  
நபிகளின் வாரிசுகளாகும் உரிமை அவரது மகளான ஃபாத்திமாவுக்கும், அலியின் குழந்தைகளுக்கும் மட்டும் இருகிறதென்று ஷியாக்கள் கூறினர். எனினும் இவர்கள் வருங்காலத்தில் தத்துவக் கருத்து வேற்றுமைகளால் பயன் பெற்று 'மோத்ஜலா', 'ஸூபிக்கள்' என்னும் பிரிவினரிடமிருந்து எத்தனையோ விஷயங்களை ஏற்றுக் கொண்டனர். கடைசியில் அராபியருக்கும் ஈரானியருக்கும் நிகழ்ந்த மோதலில் ஷியாக்கள் நல்ல லாபமடைந்தனர். ஸஃபாவி வம்சத்தினரின் ஆட்சியில் - கி.பி. 1499 - 1536 - அவர்கள் ஷியாப் பிரிவை அரசாங்க மதமென்று பிரகடப்படுத்தினர். 


அபியூனஸ்: இவர் நபிகளின் தோழர்களில் ஒருவர். ஜீவன் செயல்படுவதில் சுதந்திரமுடையது. ஒருவேளை சுதந்திரமில்லாததாக  இருந்தால், அதற்குத் தண்டனை கிடைக்கக் கூடாது.

கடவுள் குணநலன்கள் அற்றவர்:  அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர். (ஆனால் அல்லா ரோஷக்காரன்; கோபித்துக் கொள்வான்; வெட்கமடைவான், தண்டிப்பான் என்றெல்லாம் பல வசனங்களை நம்பிக்கையாளர்கள் சொல்வதுண்டே!!?? எது சரி??) அவரும் குணங்களும், தன்மைகளும் உள்ளவரென்று எண்ணினால், அவருடன் மற்ற பொருள்களின் இருக்கையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். கடவுளை ஞானமும், குணங்களும் உடையவராகக் கருதினால்,கடவுள் அறிந்த பொருள்களும் எப்பொழுதுமே இருக்குமென்பதை ஓப்புக் கொள்ள வேண்டி வரும். அந்த நிலையில் இஸ்லாமின் கடவுளும், ஜீவனும் வேறல்ல என்னும் தத்துவம் அடிபட்டுப் போகும்.

உட்பொருள் வாதம்: குரானில் கூறப்பட்டவைகளுக்கெல்லாம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று வெளிப்படையாகத் தெரிவது; மற்றொன்று உள்ளுக்குள் இருப்பது -- இந்தத் தத்துவத்தை ஈரானியர் தோற்றுவித்தனர். இச்சிந்தனையாளர்களை 'ஜிந்தீக்' என்கின்றனர். 

குரான் அனாதியானதல்ல: பாக்தாதை ஆண்ட 'மோத்ஜலி' மன்னர் குரான் தொன்று தொட்டு இருப்பது என்ற வாதத்தினை நாஸ்திகம் என்று எண்னினார். அப்படிச் சொல்பவர்களுக்கு அரசாங்கத் தண்டனையும் அளிக்கப்ப்பட்டது.(பக். 18 - 25)


இதன்பின் இந்நூலில் பலவேறு இஸ்லாமிய அறிஞர்களின் வேறுபட்ட, மாறுபட்ட இஸ்லாமிய தத்துவங்களும், பிரிவினைகளும் சொல்லப்படுகின்றன.


***********

முதல் பதிவில் Why i am not muslim என்ற நூல், அடுத்த பதிவில் "god is not great" என்ற நூல், கடைசியாக இப்பதிவில் சாங்கிருத்யாயனின் நூல் --- இம்மூன்று பதிவுகளிலும் குரானின் காலக் கட்டமைப்பு, அவைகள் தொகுக்கப்பட்ட விதம், அவைகளில் இயற்கையாக  நிகழக்கூடிய குழப்பங்கள், தொகுத்த பின் அவைகளை ஏற்றுக் கொள்வதில் வந்த வரலாற்றுக் குழப்பங்கள், மாறுபட்ட கருத்துக்கள், அரசியல் தலையீடுகள் என்று பலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.


இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மத நம்பிக்கைகள், சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் என்பவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பார்க்க முடிந்தால் உண்மை பட்டெனத் தெரியும்.


***********



*

19 comments:

அப்துல் குத்தூஸ் said...

எது உங்களை கவர்ந்ததோ இல்லையோ...? இஸ்லாம் உங்களை கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஏனென்றால் அதுதான் இஸ்லாம்.

குறை காண முயற்சியுங்கள்... இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அறியாமலே அது உங்களை ஈர்க்கும். ஏனென்றால் அதுதான் இஸ்லாம்.

தருமி said...

//நீங்கள் அறியாமலே அது உங்களை ஈர்க்கும்.//

வரமா? சாபமா?

நன்றி

உமர் | Umar said...

//குறை காண முயற்சியுங்கள்... இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அறியாமலே அது உங்களை ஈர்க்கும். ஏனென்றால் அதுதான் இஸ்லாம்.//

பதில் சொல்ல முடியாவிட்டால் வரும் பதில்கள் இருக்கின்றனவே ... :-)

வால்பையன் said...

முரண்பாடுகள் இவ்வளவு இருந்தும் ஈர்க்கும்னு சொல்றாரே! நித்தியகன்னிகள் கனவுளயே இருப்பரோ!

கல்வெட்டு said...

.

கேள்வி:
டாக்டர், எத்தனையோ விசயங்கள் இருக்க ஏன் கஞ்சாவும் ,அபினும் சட்டென்று மனிதனைக் கவர்கிறது? ரோட்டை மறித்து பல வண்டிகளை நிறுத்திவிட்டு எந்த அறிவும் இல்லாமல் கஞ்சாவுக்காகவும் ,அபினுக்காகவும் கூட்டமாகப் போகிறார்களே, கஞ்சா அபினைவிட ரோட்டுவிதிகள் முக்கியம் இல்லையா?

பதில்:
கஞ்சாவும் ,அபினும் மனிதர்களைக் கவர்வதில் எந்த அதிசியமும் இல்லை. ஏன் என்றால் அதுதான் போதை. பலர் நடக்கும் தெருவில் அம்மணமாக அலையும் மனநலம் மாறுபட்டவர்கள் சட்டென்று கவனத்தை இழுப்பார்கள். ஏன் என்றால் அதுதான் இயல்பு. இதில் ஆச்சர்யம் இல்லை. தனிமனித, சமுதாய ஒழுங்கிற்கும் கஞ்சா அபின் போதைக்கும் சம்பந்தம் இல்லை.


பின் குறிப்பு:
இந்த் பின்னூட்டத்திற்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தம் இல்லை. தெரியாமல் போட்டுவிட்டேன்.

.

உமர் | Umar said...

//அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர்//

அல்லாஹ் குறித்த அடிப்படை கட்டுமானம், அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.

குர் ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள்.

39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him! (Translated by Yusuf Ali - http://www.islamawakened.com/Quran/39/67/default.htm)

39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் 1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (பிஜே தமிழாக்கம் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/assumar/)

உருவமில்லாத ஒன்றிற்கு எப்படி கைகள் இருக்கக்கூடும்?

சுதர்ஷன் said...

அப்துல் குத்தூஸ் said...
//குறை காண முயற்சியுங்கள்... இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அறியாமலே அது உங்களை ஈர்க்கும். ஏனென்றால் அதுதான் இஸ்லாம்//

என்ன ஒரு புத்திசாலித்தனம்
ரொம்ப கஷ்டம் ....

உமர் | Umar said...

//இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்//

குரான் பாதுகாக்கப்பட்டது அல்ல, பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் குர்ஆனில் இருந்தே

16:101 When We substitute one revelation for another,- and Allah knows best what He reveals (in stages),- they say, "Thou art but a forger": but most of them understand not.

16:101 ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

இந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.

மூன்று கால் நண்பர்களே இந்த வசனம் உண்மையா? பொய்யா?

shafi-Sabiudeen said...

நபி முஹம்மதுவை எதிர்த்த உமரும் குராஆன் வார்த்தைகளை கேட்ட பின் தான் இஸ்லாத்தை ஏற்றார். நண்பரே குறை காணுங்கள் உண்மை விளங்கும்.

கால்கரி சிவா said...

நல்லது....உங்கள் பதிவு.. நடக்கட்டும்.

தருமி said...

சிவா,

மகிழ்ச்சி
long time ... nooooo see!

தருமி said...

கும்மி,

//இந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.//

ஒரே வார்த்தையில் சொல்லணும்னா ... பின்னீட்டீங்க

அதாவது, சாமி அப்பபோ stand-யை மாத்துது அப்டின்றீங்க? editing .. re-editing ...அதாவது, ஒரு assignment எழுதுறது மாதிரி?

தருமி said...

//நீங்கள் அறியாமலே அது உங்களை ஈர்க்கும்.//

// நண்பரே குறை காணுங்கள் உண்மை விளங்கும்.//

அப்துல் குத்தூஸ் & ஷபி,

உங்கள் மதத்தைப் புறந்தள்ள எனக்குப் பெரிய தத்துவங்கள், உண்மைகள் இதெல்லாம் எனக்குத் தேவையே இல்லை. கலையை - இசையை, ஓவியத்தை - மறுக்கும் சாமி எனக்கு வேண்டவே வேண்டாமுங்க. அப்படி ஒரு சாமியை என்னால் கற்பனை செய்யக் கூட முடியலைங்க!

உமர் | Umar said...

//editing .. re-editing ...அதாவது, ஒரு assignment எழுதுறது மாதிரி?
//

குணா திரைப்படத்தில் பாடல் தொடங்கும் காட்சியில், கமல் சொல்லுவார்.

கண்மணி!
அன்போட காதலன்
நான் எழுதும் கடிதம்
இல்ல லெட்டர், இல்ல கடிதாசி
இல்ல இல்ல கடிதம்னே இருக்கட்டும்.

அந்த வசனம் 'அருளப்பட்ட' சூழலிலும் இதுபோன்று நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. :-)

ஆனால், ஏனோ சம்பந்தமில்லாமல் Grandiose Delusionம் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

Victor Suresh said...

தருமி அவர்களே,

தங்களது இந்தப் பதிவு உட்பட பல பதிவுகளுக்கான பதிலை http://thabaal.blogspot.com என்ற வலைப்பதிவில் http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html என்ற இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். அதில் சொன்ன வண்ணம்: "கடவுள் சம்பந்தமாக அவர் சொல்லும் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு; பலவற்றில் இல்லை. என்னுடைய கருத்துக்களை நான் அவருடைய வலைப்பதிவிலேயே பின்னூட்டமாக விட்டிருக்கலாம். ஆனால் கருத்துக்கள் பல இடங்களிலே சிதறியிருக்கும். அவற்றை கோர்வையாக ஒரு தொகுப்பாக என்னுடைய வலைப்பதிவிலே இட்டு, தேவைப்பட்டால் அவற்றை பின்னூட்டமாக அவருடைய வலைப்பதிவில் இடலாம் என்ற எண்ணத்துடனேயே" இப்படிச் செய்துள்ளேன். தங்களது மறுமொழி கண்டால் மகிழ்வடைவேன்.

Unknown said...

In the name of almighty, Most Gracious and Most Merciful

Greatness of God

We learn from Verse 39:67 that God's greatness is far beyond human comprehension
- the verse states that all seven universes are "folded within God's hand."

Supported by the Quran's formidable mathematical code, we are taught that our universe is the smallest and innermost of seven universes (41:12, 55:33, 67:5, & 72:8-12).
Meanwhile, our scientific advances have shown us that our galaxy, the Milky Way, is 100,000 light years across, and that our universe contains a billion such galaxies and a billion trillion stars, plus countless decillions of heavenly bodies.
Our universe is estimated to span distances in excess of 20,000,000,000 light years.


Count the Stars!
If we take only a quintillion [1,000,000,000,000,000,000] of the stars and simply count them [from 0 to quintillion] one count per second, day and night, this will take 32 billion years
(more than the age of the universe). That is how long it will take to just "count" them; but God "created" them. Such is the greatness of God.

We can appreciate the vastness of our universe if we imagine going on a space odyssey.
When we leave the planet Earth towards the sun, at the speed of light, we reach the sun after 93,000,000 miles and 8 minutes. It will take us more than 50,000 years at the speed of light to exit our galaxy. From the outer limit of the Milky Way, our planet Earth is invisible. Not even the most powerful telescope can detect our tiny "Earth."

We have to spend more than 2,000,000 years at the speed of light to reach our next-door galaxy. At least 10,000,000,000 years, at the speed of light, must be spent to reach the outer limit of our universe. From the outer limit of our universe, even the Milky Way is like a speck of dust in a large room.

The second universe surrounds our universe. The third universe is larger than the second, and so on. More accurately, our universe should be considered the seventh universe, surrounded by the sixthuniverse, which is surrounded by the fifth universe, and so on.
Can you imagine the vastness of the first, outermost universe? No number exists to describe the circumference of the first universe. This incomprehensible vastness is "within the fist of God's hand." From the outer limit of the outermost universe, where is the planet Earth?
How significant is it? On the infinitesimal mote called Earth, such minuscule creatures as Mary, Jesus, and Muhammad lived. Yet, some people set up these powerless humans as gods!

God's greatness is represented not only by the fact that He holds the seven universes in His hand, but also by the fact that He fully controls every atom, even subatomic components, everywhere in the greater universe (6:59, 10:61, & 34:3).

உமர் | Umar said...

@abdullah

39:67 No just estimate have they made of Allah, such as is due to Him: On the Day of Judgment the whole of the earth will be but His handful, and the heavens will be rolled up in His right hand: Glory to Him! High is He above the Partners they attribute to Him!

55:33 O ye assembly of Jinns and men! If it be ye can pass beyond the zones of the heavens and the earth, pass ye! not without authority shall ye be able to pass!

How do you mean heaven as universe?

If you mean heaven as universe, what is the need to specify earth, which is a part of universe, separately in each of these verses?

Why do muslim scholars correlate Heaven with sky?

//The second universe surrounds our universe. The third universe is larger than the second, and so on. More accurately, our universe should be considered the seventh universe, surrounded by the sixthuniverse, which is surrounded by the fifth universe, and so on. //

Which scientific body declared the number of universes as 7 and from where did you infer the above statement?


//God's greatness is represented not only by the fact that He holds the seven universes in His hand, but also by the fact that He fully controls every atom, even subatomic components, everywhere in the greater universe//

Basic question here is, how a shapeless entity can have hands?

Unknown said...

@kummi...

And no true understanding of God have they [who worship aught beside Him], in as much as the whole of the earth will be as a [mere] handful to Him on Resurrection Day, and the heavens will be rolled up in His right hand: [I.e., the whole universe is as nothing before Him: for this specific allegory of God's almightiness, see 21:104. There are many instances, in the Quran as well as in authentic hadith, of the clearly metaphorical use of the term "hand" in allusions to God's absolute power and dominion. The particular reference, in the above, to the Day of Resurrection is due to the fact that it will be only on his own resurrection """that a human being shall fully grasp the concept of God's almightiness""", referred to in the subsequent words, "limitless is He in His glory". limitless is He in His glory, and sublimely exalted above anything to which they may ascribe a share in His divinity!

உமர் | Umar said...

@abdullah
//and the heavens will be rolled up in His right hand: [I.e., the whole universe is as nothing before Him//

Do you say heavens and universe are just the same?

//There are many instances, in the Quran as well as in authentic hadith, of the clearly metaphorical use of the term "hand" in allusions to God's absolute power and dominion.//

Various parts of the body like ear, legs and eyes were used in many places in Qur'an and hadith. Allah is shapeless. How can a shapeless entity attribute to have such parts of the body?

Verse 39:67 clearly states that earth will on one hand of allah and heavens will be on the right hand. How such a clear depiction of hands be considered as allusion?

Post a Comment