Tuesday, April 19, 2011

499. WHY I AM NOT A MUSLIM ... 15

*




ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
 பதிவு: 13
பதிவு:  14 


இப்பதிவு: 15



Image and video hosting by TinyPic




CHAPTER  9
                                          (தொடர்ச்சி)


THE ARAB CONQUESTS AND THE 
POSITION OF NON-MUSLIM SUBJECTS



அரேபியரின் வீர சாகசங்களும்
இஸ்லாமியரல்லாத மக்களின் நிலையும்


இஸ்லாமியரின் போர் வெற்றிகள்:

(AN APOLOGY:


நூலின்  இந்தப் பகுதியை விளக்கமாகச் சொல்லாமல்  சில செய்திகளைத் தவிர்த்து விடலாமென நினைத்தேன். ஏனெனில் அவை அவ்வளவு குரூரமானவை. 

 இஸ்லாம் என்ற சொல்லுக்கே ”அமைதி” என்பதுதான்  பொருள்; முகமதுவிற்கு வந்த எதிர்ப்பினால் மட்டுமே அவர் பல போர்களை நடத்தினார்; ஒரு மனிதனைக் கூட கொல்வதற்கு எங்கள் மதம் சொல்லவில்லை;  -- இப்படியெல்லாம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதாலும், அதில் அவர்கள் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கைகளோடு இருப்பதாலும், (ஒரு வேளை அவர்கள் பார்க்க மறந்து போன,)  நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் அவர்களது மத நூல் என்ன சொல்கிறது என்பதையும், ஏன் ’இஸ்லாம் கத்தியால் பரப்பப்பட்டது’ என்பது அடிக்கடிசொல்ல்ப்படும் வார்த்தையாக உள்ளது என்பதையும்  அவர்களுக்குக் காண்பிக்கவே இந்தப் பகுதியையும் மற்ற பகுதிகள் போலவே கருதி, அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.)

நம் தமிழ்ப் பதிவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு எண்ணமும் என்னை இப்பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைக்க இடம் கொடுக்கவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அயல்நாட்டு அரசர்கள். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் போல் இவர்களும் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள். ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்தினான் என்பதால் நமக்கு கிறித்துவத்தின் மேல் (ஓரளவு) வெறுப்பில்லை. அதே போல் எந்த கிறித்துவனும் மதச் சார்பினால் ஆங்கிலேயன் புகழை ஓதுவதில்லை. அவன் என்னை அடிமைப்படுத்தியவன் என்ற உணர்வே எல்லோரிடமும் - கிறித்துவரிடமும் சேர்த்து - உண்டு. மதத்தையும் அரசியலையும் எப்போது இணைத்தே வைத்திருக்கும் இஸ்லாமிய தத்துவம், கிறித்துவத்தில் (இப்போதைக்கு) இல்லை. (சில நாடுகளில் கிறித்துவம்- இஸ்லாம்; கத்தோலிக்கர் - பிரிவினைக்காரர்கள் இவர்களிடையே தகராறும் உண்டு.) ஆகவே ஒரு ஆங்கிலேயனை, அவனது ஆட்சியை எதிர்த்துப் பேசினால் அவன் ஒரு ஆங்கிலேயனாகத்தான் பார்க்கப்படுகிறான். ஒரு கிறித்துவனாக அல்ல.

ஆனால் இஸ்லாமிய மன்னர்களை நம் இஸ்லாமியப் பதிவர்கள் புகழ்ந்தேற்றுவது வேதனையான ஒன்று. ஒளரங்கஜேப் தனி மத  வரி விதித்தானே என்றால் அதற்குப் பதில் ’அவன் ஆள்வதற்கு வரி விதித்தான். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அந்த வரியைச் செலுத்துவது கடமை’ என்றொரு விவாதம். அவன் ஒரு ஆக்கிரமிப்பாளன்; அவனுக்கு நான் ஏன் வரி செலுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. (கட்டபொம்மன் வசனம் அவர்களுக்கு நினைவில் இருக்குமோ என்னவோ!) அவனுக்கு வரி செலுத்தாதது தவறு என்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை,  காந்தி உப்புசத்தியாகிரகம் செய்தாரே, அதுவே தவறு. ஆங்கிலேயன் போட்ட உப்பு வ்ரியை நாம் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்; ஏனெனில் அவன் நம் நாட்டை ஆள்வதற்காகத்தானே வரி கேட்கிறான்!!

இன்னொரு ‘அழகான’ விவாதம் கடையேறியது. இஸ்லாமியர் 700 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலேயர் அதன் பின் வெறும் 200 ஆண்டுகள் தான் நம்மை ஆண்டனர். நாம் 200 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை விரட்டி விட்டோம். ஆனால் 700 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய அரசர்களை நாம் விரட்டவேயில்லை. அதாவது, நமக்கு இஸ்லாமிய அரசர்கள் மேல் ”அம்புட்டு அம்பு அன்பு” ! இந்த விவாதத்திற்கு என்ன பதில் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது எனக்குப் புரியவில்லை.

இதில் நம் வரலாற்று நூல்களில் சில இஸ்லாமிய மன்னர்களைப் பற்றித் தவறான செய்திகள் இருப்பதாகவும் வருந்தினர். கிளைவ், ஜெனரல் டயர் போன்ற ஆங்கிலேயர்களைப் பற்றி மோசமாக எழுதினால், பேசினால் ஒரு கிறித்துவனுக்கும் கோவம் வந்ததாக நான் இதுவரை பார்க்கவில்லை. அதைப் பற்றிய ஒரு பதிவில் நான் சொன்னதைப் புரிந்து கொள்ளும்  இஸ்லாமியப் பதிவர்களையும் நான் பார்க்கவில்லை. ஆக்கிரமித்த ஒளரங்கஜேப் ’மிகவும் நல்ல’ இஸ்லாமியனாம்; சொல்கிறார்கள். தொப்பி தைத்து அதன் வருமானத்தில்தான் சாப்பிட்டானாம். ரொம்ப  நல்லது. ஆனால் அதனால் எனக்கென்ன? என்னை எப்படி ஆக்கிரமித்தான்; எப்படி ஆண்டான் என்பதுதானே என் கேள்வி.

சில / பல இஸ்லாமிய மன்னர்கள் ‘குடியும் கூத்தியுமாக’ வாழ்ந்தார்கள். அது தவறுதான் என்றும் சில பதிவர்கள் ‘பாவமன்னிப்பு’ கேட்டுள்ளார்கள். அதற்காக இங்கு யாரும் அழவுமில்லை; கவலைப்படவுமில்லை.

நம் வரலாற்று நூல்களிலும், பாடப் புத்தகங்களிலும்  இஸ்லாமிய அரசு, ஆட்சி பற்றித் தவறான செய்திகளைப் பரப்பி விட்டார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. அதை நினைவில் வைத்து நம் நாட்டைச் சேராத வரலாற்றாளர்கள் கொடுத்த செய்திகளையும் தொகுத்து விடலாமே என்று இந்த நூலில் கண்டுள்ளவற்றைக் கொடுத்துள்ளேன்.)




Schumpeter (1883-1950) - அராபியர்கள் ஒரு போரிடும் சமூகம். போர் என்பது மிகவும் சாதாரணமான ஒரு வழக்கம். சமூகத்தின் அமைப்பே போரில் வெல்வது மூலமே உறுதிப்பட்டது. இஸ்லாம் இல்லாவிட்டாலும் இந்த போர் முறை அவர்களிடம் இயங்கியே வந்திருக்கும். முகமது அமைதியையும், தாழ்ந்து இருப்பதையும் பற்றிப் பேசியிருந்தால் அவரை அந்தச் சமூகத்தினர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். 

இஸ்லாமின் புதிய தலைமுறையில் இருந்த பெரும் தலைவர்கள் பலரும் இஸ்லாமில் அதிக நாட்டமில்லாதவர்கள். Khalid என்பவர் பைஸாண்டினின் நடந்த போரில் பெரும் தலைவராக இருந்தவர்; அவரைப் பற்றிய குறிப்பில் அவர் ‘போரைத் தவிர வேறெதுவிலும் அவருக்கு ஆர்வமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் போலவே எகிப்தை வென்ற Amr b. al-As என்பவரும், போரில் அடித்த கொள்ளைகள் மூலம் மிகவும் பெரிய செல்வரான Othman b. Taliba என்பவரும் அடுத்த சான்றுகள். 

முதல் வெற்றிகள்:
634 - அபு பக்கர் - 4000  பேர் - யூதர்கள், கிறித்துவர்கள், சமாரியர்கள் 
கொல்லப்பட்டனர். காஸா கைப்பற்றப் பட்டது.
635 & 642  - மெஸோபட்டோமியாவில் கிறித்துவ மடங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, Monophysite Arabs-களால் கட்டாய மத மாற்றம் நடந்தது. Amr b. al-As எகிப்தில் படையெடுத்தபோது அங்குள்ள Behnesa என்ற நகரத்தின் மக்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகள் யாருமே தப்பவில்லை. இதே போன்று ஆர்மேனியாவில் உள்ள Euchaita என்ற நகரின் மக்கள் அனைவரும் இதே போல் கருவறுக்கப்பட்டனர். 
642, 643 ஆண்டுகளில் வடக்கு ஆப்ரிக்காவின் ட்ரிபோலி, அனடொலிய, மெஸொபட்டோமியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற இடங்களும் போரில் இஸ்லாமியரால் தோற்கடிக்கப்பட்டன. 



இந்தியா


712 - ஈராக்கின் கவர்னரான ஹஜாஜ் (Hajjaj) என்பவரால் திட்டமிடப்பட்டு, முகமது காசிம் (Muhammad b. Qasim) என்பவரின் தலமையின் கீழ் முதல் படையெடுப்பு நடந்தது. ஹஜாஜ் கொடுத்த கட்டளையே ‘இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்களைக் கொன்று விடுங்கள்’ என்பதே, 

டேபால் (Debal) என்ற கோட்டையைப் பிடித்த இஸ்லாமியர் மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த நகரின் மக்களைக் கொன்று குவித்தார்கள். அதன்பின் காசிம் மனம் இறங்கி ( ! ) மீதியிருந்தோரை அவரவர் பணிகளில் ஈடுபடவும், தங்களது மதத்தில் தொடரவும் சம்மதித்தான். ஆனால் இது ஹஜாஜூக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. அவர் காசிமிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “குரானில் 47:4-ல் நம்பிக்கையில்லாதவர்களைக் காணும்போது அவர்களின் தலைகளைக் கொய்துவிடுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. கடவுளின் இந்தப் பெரிய கட்டளையை மதிப்பதும் நடைமுறைப்படுத்துவதுமே சரியானது.  நீங்கள் இரக்கம் காட்டுவது தவறு’ என்று எழுதுகிறான்.


மீண்டும் ஹஜாஜ் திரும்பி வந்து Brahminabad என்ற நகரிலுள்ள 6000 ஆண்களைச் சிரச்சேதம் செய்கிறான். 6000 அல்ல 16000 என்ற கூற்றும் உண்டு. மற்றவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்.

Mahmud of Ghazni (971 - 1030)
Turco-Afghan என்ற சமூகத்து முகமது கஜினி 1000 ஆண்டில் முதல் முறையாகச் சூறாவளி போல் இந்தியாவினைச் சூரையாடி, மக்களைக் கொன்று, கொள்ளையிட்டுச் சென்றான். ஒவ்வொரு வருடமும் குரானின் இந்தக் கட்டளையைச் செய்து தன்னை அவன் ‘புனிதப்ப்டுத்திக் கொண்டான்’.
Vincent Smith என்ற ஆசிரியர் கஜினி பற்றி, ’அவன் ஆழ்ந்த இஸ்லாமியன்; மற்ற மதத்தினரைக் கொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மிகவும் பேராசை பிடித்தவனாகவும் இருந்தான்’ என்கிறார்.
Alberuni என்ற அறிஞர், ’மகமூது பதினேழு முறை படையெடுத்து இந்த நாட்டை முழுவதுமாகச் சுரண்டினான். அவனது வெறியாட்டத்தில் இந்துக்கள் தூசி அணுக்கள் போல் எங்கும் சிதறடிக்கப்பட்டனர்’ என்கிறார்.

முகமூது முதலில் ஜெய்பால் என்ற பஞ்சாப் மன்னனைச் சிறைப் பிடித்தான். பின், முல்தான் என்ற இடத்தை 1004-ல் கைப்பற்றினான். அங்கேயிருந்த Ghur என்ற இடத்திலுள்ள அனைவரையும் இஸ்லாமியராக மாற்றினான். 

அவனது அடுத்த பலி மதுரா நகர். ‘அந்த ஊரின் நடுவில் வர்ணிக்கவோ, வரையவோ முடியாத அழகுடன் ஒரு கோவில் இருந்தது. முகமூது அந்தக் கோவிலைக் கட்ட 200 ஆண்டுகளாவது ஆகும் என்றானாம். அங்கு  ஐந்து கெஜ உயரத்தில் இருந்த செம்பொன் சிலைகளின் கண்கள் மிகவும் உயரிய கற்களால் ஆனது.’
அந்தக் கோவிலை முழுவதுமாக எரிக்க கஜினி உத்தரவிட்டு, இந்தியாவின் மிகப் பழமையான, அழகான, கலைநயம் மிகுந்த கோவிலை நிர்மூலமாக்கினான். 

அடுத்து சோமநாத் என்ற இடத்தில் இருந்த இடத்தில் 50,000 பேர் கொல்லப்பட்டு, அந்த நகரையும் கொள்ளையடித்தான்.

இஸ்லாமிய வரலாற்றாளர்கள் முகமூதுவை இஸ்லாமின் மதிப்பிற்குரியவனாகக் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அவன் எந்த வித புகழுக்கும் காரணமில்லாதவன்; மிகப்பெரும் கொள்ளைக்காரன்.

Firuz Shah 1351-ம் ஆண்டு வட இந்தியாவில் அரியணையேறினான். படித்துப் பலவும் கற்றவன்; ஆனால் மத இணக்கம் என்பது கொஞ்சமும் இல்லாதவன். அடிமை வணிகத்தில் தேர்ந்தவன். 1,80,000 அடிமைகளை தன் நகரத்தில் வைத்திருந்தான்.அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகி விட்டார்கள்!
இந்துப் பண்டிகை நடந்த இடத்திற்குச் சென்ற இந்த மன்னன் தனது குறிப்பில், ‘இந்தப் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள், அவர்களுக்கு உதவுவர்கள் எல்லோருக்கும் அவர்கள் செய்த அநீதிக்காக மரண தண்டனை அளித்தேன். ஆனாலும் கொண்டாடிய இந்துக்களுக்குப் பெரிய தண்டனைகள் கொடுக்கவில்லை. ஆனல் சிலைகள் இருந்த அந்தக் கோவில்களை அழித்து, அதற்குப் பதிலாக மசூதிகளை எழுப்பினேன்’ என்று எழுதியுள்ளான்.


தனியே தன் மத வழக்கங்களைச் செய்துகொண்டிருந்த ஒரு பிராமணனை அந்த இடத்திலேயே நெருப்பூட்டினான்.


கடுமையான ஜிஸ்யா  வரி செலுத்தியவர்களில் பலரை, பிராமணர்களையும் சேர்த்து, பலருக்குப் பணம் கொடுத்து இஸ்லாமியராக்கினான்.


Vincent Smith, ‘ Firuz Shah தன் நாட்டின் இயற்கையையும், மக்களுக்கான கல்வியையும் செவ்வனே கொடுத்தாலும், சமயங்களைப் பொருத்தவரை எந்த விதப் பொறுமையும் இல்லை’.


14-ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள் பழைய முதல் இஸ்லாமியர்கள் போலவே சிலை வடிவங்களை வணங்குவது பொறுக்க முடியாத பெரிய பாவம் என்று கருதினார்கள்.(222)


AKBAR, THE GREAT (1542 - 1605)
இஸ்லாமிய வழியில் வளர்ந்தாலும் அக்பர் மற்ற சமயங்கள் மீதும் ஆர்வம் காட்டினார். தனது அரசவையில் Abu Fazl போன்ற விரிந்த சிந்தனையாளர்களை வைத்திருந்தார். இவரோடும் மற்றும் மற்ற சமயத்தினரையும் இணைத்து ஒரு ’தியான மண்டபம்’ அமைத்தார். அங்கு சமயங்கள் பற்றிய உரையாடலை நடத்தினார். இதில் முதலில் இஸ்லாமியர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் அவர்களின் முட்டாள்தனமான செய்கைகளால் அக்பருக்கு இஸ்லாமின் மீதிருந்த மரியாதை  குறைவதாகக் கண்டார்; அதனால் அவர்கள் மீதும் எரிச்சலடைந்தார். இதன் பின் இந்து, ஜெயின், ஜோராஸ்ட்ரியன், யூதர், இவர்களோடு கோவாவில் இருந்த  சேசு சபைக் கிறித்துவ சாமியார்கள் மூவர் -- இவர்கள் எல்லோரையும் அக்பர் தன் குழுவில் இணைத்தார். எல்லோரும் மரியாதையாக நடத்தப்பட்டனர். அக்பர் கிறித்துவ விவிலியத்தை மரியாதையோடு முத்தமிட்டார்.


இது மட்டுமல்லாது வேறு சிலவும் இஸ்லாமியருக்கு அக்பர் மேல் கோவம் கொள்ள ஏதுவாயிற்று. அதில் முதலாவதாக ”தவறா வரம்” என்ற ஒன்றினைக் கொணர்ந்தார். இஸ்லாமில் எழும் கேள்விகளுக்கு குரானின் துணையோடு அரசர் தரும் பதில் தவறாதது என்ற ஆணையைக் கொணர்ந்தார். அதோடு அபுல் பாஸ்லின் சகோதரர் Faisi இயற்றிய சில பாடல்களைப் பள்ளிவாசலில் மேடையேறி அக்பரே பாடினார்.


வங்காளத்தில் இருந்த முகமதிய குருமார்கள் அக்பருக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த போராட்டத்தை முற்றாக அடக்கிய அக்பருக்கு இப்போது முழு சுதந்திரம் கிடைத்தது. இதைப் பற்றி V.Smith, ‘இஸ்லாமிய மதத்தின் மேலுள்ள தன் விருப்பமின்மையை அக்பர்  காண்பித்தார்’ என்று சொல்கிறார்.


அக்பர் அதுவரை வழங்கி வந்த கால அட்டவணையையும் புறக்கணித்தார். இஸ்லாமிய கால அட்டவணைக்குப் பதில். தன் அரசாட்சியின் காலத்தை வழங்குமாறு செய்தார். அதைவிடவும் அவர் வெளியிட்ட நாணயங்களில் ‘அல்லாஹூ அக்பர்’ என்ற சொற்கள் உண்டு. இது கடவுள் மிகப் பெரியவன் என்ற பொருளிலா, அக்பரே கடவுள் என்ற பொருளிலா என்ற ஐயம் பலருக்கும் எழுந்தது.


தன் ஆட்சிக்காலம் முழுமைக்கும் பெரும்பான்மையான இந்துக்களைப் புறந்தள்ளாதவாறு இருந்து வந்தார். ஓர் அரசன் தன் குடிமக்கள் அனைவரையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்ற கருத்தோடு, இந்து, பார்ஸி இனத்தவரின் பண்டிகைகளில் ஈடுபட்டார். அக்பரின் கோட்பாடே பொதுவான சமய நல்லெண்ணம். இதனாலேயே எல்லா மதத்தினரும் மரியாதையோடும், மத சுதந்திரத்தோடும் இருக்க முடிந்தது. இந்துப் பெண் ஒருவரை மணந்தார். இந்துக்கள் பலரும் அரசியலின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இவரது ஆட்சியின் கீழுள்ள அம்பர், மார்வார், பிக்கானீர் அரசகுமாரர்கள் தங்கள் மதத்திலேயே இருக்க முடிந்தது. இந்த இளவரசர்கள் உயர்ந்த ஆட்சிப் பொறுப்பிலும், படைகளில் பெரும் பதவிகளிலும் இருக்க முடிந்தது.  (233)


AURANGZEB (1618 -1707) :
அம்பரின் கொள்ளுப் பேரனான ஒளரங்கஜேப் இதற்கு நேர் எதிரானவர். அவர் முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையாளர்.இவர் இஸ்லாமியத்தின் பழைய கட்டுப்பாட்டிற்குள் வாழ்ந்தவர். இவரது காலத்தில் இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டன. 1679-80களில் உதய்ப்பூரில் 123 கோவில்களும், சித்தோரில் 63-ம், ஜெய்ப்பூரில் 66-ம்  அழிக்கப்பட்டன. இஸ்லாமியரல்லாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக தங்கள் நாட்டிலேயே ஆக்கப்பட்டனர்.


இந்துக்களுக்கு அக்பர் மிகப் பெரிய இஸ்லாமிய அரசராகவும், ஒளரங்கஜேப் மிக மோசமான அரசனாகவும் தெரிந்தது. இஸ்லாமியருக்கோ இதற்கு எதிர்மறையான கொள்கையாகவும் இருக்கும். (இப்போதைய இஸ்லாமியருக்கும் இதே கொள்கைதான் இருக்கும்! ) அக்பருக்கு இந்தியா ஒரு
இஸ்லாமியரல்லாதவரின்  நாடு என்பது தெரியும். ஒளரங்கஜேபுக்கு இந்தியாவும் ஒரு இஸ்லாமிய நாடுதான்.


**                                              **                                                 **

புத்த மதம்:
Edward Conze - 1000 முதல் 1200 வரை புத்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்தது. இதற்கான காரணங்களில் ஒன்று -  இஸ்லாமும் இந்துத்துவாவும் இணைந்த முயற்சியின் விளைவு அது. (224)


12வது நூற்றாண்டில் Qutb ud din Aibak என்ற ’இரக்கமற்ற, தீவிரவாதியான’ மன்னன் தன் படையின் தலைவனான  Muhammad Khilji -யை பீகாரை வென்று வர அனுப்பித்தான். அப்போது அங்கு புத்த மதமே தழைத்திருந்தது. புத்த சந்நியாசிகள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் என்பதால் அவர்களை அவன் கொன்றொழித்தான். அதுவும் மட்டுமின்றி அங்கிருந்த பெரும் நூலகத்தை எரித்து அழித்தான். (இது இந்த மதத்தோடு பிறந்த வியாதியோ?)


                    **                                            **                                      **


திம்மி (dhimmis) - இஸ்லாமை நம்பாதவர்கள். இந்த திம்மிகளைப் பற்றிய  வரலாற்று நூல்கள் பல உண்டு.Norman Stillman என்பவரது நூல் The Jews of Arab Lands: A History and Source Book (1979).அந்நூலில் -- மத்திய கிழக்கில் அரேபியர்கள் நுழைந்தது மகிழ்ச்சிகரமான காரியமல்ல. இறப்புகளும் அழிவுகளும் பெருமளவில் நடந்தன. அந்நாட்டினரின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன; பலரும் கொல்லப்பட்டார்கள். ஜிஸ்யா, ஹராஜ் (jisya & kharaj ) என்ற இரு வரிகளும் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு முதுகை முறிக்கும் பெருஞ்சுமைகளாக ஆகின. (226)


1165,1678-ல் யேமனில் யூதர்கள் , 1198-ல் ஏடனில் , 1291.1318-ல் டப்ரிஸில் (Tabriz) , 1333-1344-ல் பாக்தாதில் , 1617, 1622-ல் பெர்சியாவில் , 1653 -1666-ல் ஷா அப்பாஸ் காலத்தில் பெர்சியாவில்  - இந்த ஆண்டுகளில் யூதர்கள் இஸ்லாமிற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்கள். 


யூதர்களைத் தவிர கிறித்துவர்கள், இந்துக்கள், ஜோராஸ்ட்ரியன்கள், போன்ற மற்ற மதங்களிலிருந்தும் இஸ்லாமிற்கான கட்டாய மாற்றம் நடந்தன. 


 Lewis எழுதிய The Jews of Islam (1984) நூலில் ‘இஸ்லாமியருக்கும் அல்லாதாருக்கும் எப்போதும் ‘சம்நிலை’ என்பதே இல்லை. பாரம்பரிய இஸ்லாமிய சமூகங்களில் இந்த சமநிலை எப்போதும் கொடுக்கப்படுவதேயில்லை. (227)
                           
                                 **                                            **                                      **


முஸ்லீமல்லாதவர்களுக்கான தனி வரிகள்:
KHIRAJ -- நிலங்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அந்த நிலங்களுக்கான வரியே இது. போரின் தோல்வியடைந்தவர்களுக்கு நிலத்தில் மேல் எந்த உரிமையும் கிடையாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு.


JISYA  --  குரன்  9:29-ல் சொல்லப்பட்ட இந்த வரியை தண்டிக்கும் முறை மிகக் கேவலமானது. 9:29-ல் சொல்லப்பட்டதற்கான விளக்கத்தில் இந்த வரி வரிகொடுப்பவனை மிகவும் தரம் தாழ்த்தி, வெட்கப்படுத்தி, கழுத்தில் ‘துண்டைப் போட்டு’ வரி கொடு என்று உரக்கக் கத்தி வசூலிக்க வேண்டும்.


மற்ற வரிகள்: வியாபார வரி, பயண வரி இதுபோன்ற பல வரிகள் திம்மிகளை நசுக்கப் பயன்பட்டன. 


எந்த திம்மியும் ஒரு இஸ்லாமியன் மேல் எந்த வித உரிமையையும் கோர முடியாது. குரான் 3:28 மூலம் திம்மிகளுக்கு எந்த வித சமூகப் பொறுப்பும் மறுக்கப்படும். 


ஆளுக்கொரு சட்டம்:  
* எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான  திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது. 
* இஸ்லாமியர்கள் திம்மிகளை விட மேம்பட்டவர்கள்.
* ஒரு இஸ்லாமியனுக்குச் சட்டப்படி ஏதேனும் தண்டம் விதித்தால், அந்தக் குற்றம் ஒரு திம்மிக்கு எதிரான குற்றம் என்றால் தண்டம் ஏதும் இல்லை.
* திம்மி ஒரு இஸ்லாமியனாக ஆனால் அவனது சாட்சி வழக்கில் கேட்கப்படும். (229)
* ஒரு இஸ்லாமியன் கிறித்துவ, யூதப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு திம்மி ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடாது. (இன்னும் இந்த வழக்கம் நமம ஊர்ல  இருக்கே. )
* ஒரு இஸ்லாமியனுக்கு ஏதாவது ஒரு குற்றத்திற்கான தண்டனை விதித்தால், அவன் அக்குற்றத்தை ஒரு திம்மிக்குச் செய்திருந்தால் அந்தக் குற்றம் பாதியாகக் குறைக்கப்படும்.
* தேவ தூஷணத்திற்கான எந்த சாட்சியும் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லை. திம்மி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமியனாவதே ஒரே வழி. (229)


* 717-720-ல் ஆட்சி செய்த உமார் அபிட் அல் அஸிஸ் (Umar b.Abd al-Aziz) 8-வது நூற்றாண்டில் திம்மிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகள் நிறைய ... எல்லாமே ரொம்ப interesting!(ஏறத்தாழ தலித்துகளுக்கு வேத காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளைப் போலவே நிறைய உள்ளன.) 
அவைகளில் ஒரு சில ...
* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று சில சாதியினரை இங்கே  இன்னும் சில “சாதி இந்துக்கள்” சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.  
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது ....... இப்படி இன்னும் பல ......... (230)


அடிமைப்படுத்துதல் .. இது ஒரு பெரிய நீண்ட அட்டவணை .. சில வரலாற்றுச் சான்றுகள் ---
* 881 - 7000 கிரேக்கர்கள்
* 903 - தெஸோலினிக்கா - 22,000 கிறித்துவர்கள்
*1064 -  ஜார்ஜியா, ஆர்மினியா ... திம்மிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.


* 300 ஆண்டுகளாக கிறித்துவர்கள் மீது "devshirme" என்ற ஒரு சட்டத்தை சுல்தான் ஓர்க்ஹான் (1326-1359) ஏற்படுத்தினான்.  இதன் மூலம் கிறித்துவக் குழந்தைகளில் ஐந்தில் ஒரு பகுதியை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைப் போர்ப்படை வீரர்களாக மாற்றியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் இஸ்லாமில் இல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளோடு வந்து பொது இடத்தில் நிற்க வேண்டும். அதிலிருந்து பிள்ளைகளை இஸ்லாமியர்கள்  தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இதில் கையூட்டும் நிறைய நடந்ததாக வரலாறு சொல்கிறது. 1656-ல் இந்த சட்டம் நிறுத்தப்பட்டது. 


வணங்குமிடங்கள்:  
* 853-ல் காலிப் முட்டாவக்கில் எல்லா கிறித்துவ கோவில்களையும் தரைமட்டமாக்கினான்.
* 1321-. எகிப்தில் உள்ள எல்லா கிறித்துவ கோவில்களுக்கும் அதே கதி.
* ஆர்மீனியன் கிறித்துவர்கள் 704-705 ஆண்டுகளிலும், பின் 852-855 ஆண்டுகளிலும்  இஸ்லாமியரின் கட்டுக்குள் கஷ்டப்பட்டார்கள்.


ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொருவகையான பயங்கரங்கள் நிகழ்த்தப்பட்டன.
 8-ம் நூற்றாண்டு - சிந்துவில் ..
 9-ம் நூற்றாண்டு - ஸ்பெயின் கிறித்துவர்கள் ...
10-ம் நூற்றாண்டு - காலிப் அல் ஹக்கிமின் ஆளுகையில் திம்மிகள் ...
11-ம் நூற்றாண்டு - க்ரினடா, பெஸ் (Grenada & Fez) இங்குள்ள யூதர்கள் .... இதே காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் மகமுதுவினால் (Mahmud)  தொல்லையை அனுபவித்தார்கள்...
12-ம் நூற்றாண்டு - Almohads of North Africa தொல்லை கொடுத்தனர். 
13- நூற்றாண்டு - டமாஸ்கஸ் கிறித்துவர்கள்
14 & 15-ம் நூற்றாண்டு - பயங்கரவாதி  Timur the Lame - இவனது ’திருவிளையாடல்’ வரலாற்று ஆசிரியர்களையே பயத்தில் உறைய வைத்தது.
'Zafer Nameh'  என்ற நூலே தைமூரின் முரட்டுத்தனத்தை இன்றும் நமக்குப் புரிய வைப்பது. இந்நூலில் ‘குரானில் நம்பிக்கையில்லாதவர்களின் மீது படையெடுத்து அவர்களை அழிப்பவர்களுக்கு மிக மதிப்பான சுவனம் கிடைக்கும்’ என்பது சொல்லப்பட்டுள்ளது. தைமூர் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் இந்துக்கள் மீது சிறிது இரக்கத்தோடு இருந்தது பிடிக்காது போயிற்று. அதற்காகவே அவன் இந்தியா மீது படையெடுத்து வந்தான். ஆயிரக்கணக்கான இந்துக்களைச் சிறைப் பிடித்த பின் அவர்களால் தன் படைகளுக்கு எதிர்ப்பு வரலாமென்ற அச்சத்தில் பிடிபட்ட அத்தனை இந்துக்களையும் சிரச்சேதம் செய்து, அவர்களின் தலைக்குவியலின் மீது தன் வெற்றிக் கொடியை நட்டான். 
                               
                           **                                              **                                                 **

ஜோராஸ்ட்ரியர்கள்: 'Tarikh-i Bukhara' 944-ல் Bukhara-வைப் பற்றி எழுதப்பட்ட நூலில் புக்காராவில் இருந்த மக்கள் ஒவ்வொரு முறை இஸ்லாமியப் படையெடுப்பை ஒட்டி இஸ்லாமுக்கு மதம் மாறுவார்கள். இவ்வாறு நான்குமுறை மதம் மாறிய மக்கள் உண்டு. 


Khurasan, Bukhara என்ற இடங்களில் உள்ள ஜோராஸ்ட்ரியர்களின் நெருப்புக் கோவில்கள் - fire temples -  முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. 

ஈரானில் முதலில் நடந்த போர்களில் ஜோராஸ்ட்ரியர்கள் தோற்ற போது வழக்கமான உயிர்ச்சேதங்கள் நடந்தன. சான்றாக Raiy என்ற நகர் இஸ்லாமியரை எதிர்த்து நின்றது; ஆனால் மீதியாக உயிரோடு இருந்தது வெறும் சில மனிதர்களே. Sarakh என்ற நகரில் வெகு சிலர் மட்டும் மன்னிக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் இஸ்லாமியரிடம் ஒப்படைக்கப்பட்டனர். (235)
Sus என்ற நகரிலும் இதே நிகழ்வே நடந்தது.
Manadhir என்ற நகரிலும் ஆண்கள் வாளுக்கும், பெண்களும் குழந்தைகளும் அடிமையாக ஆனார்கள்.
Istakhr 40,000 ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள்.
Kariyan, Kumm, Idhaj போன்ற நகரங்களிலும் நெருப்புக் கோவில்கள் எறிந்தன; அங்குள்ள குருமார்கள் கொல்லப்பட்டார்கள்.
ஜோராஸ்டரே நட்டதாகக் கருதப்படும் புனித மரத்தை காலிப் அல்-முட்டாவக்கில் வெட்டிச் சாய்த்தான்.


இதனால் ஜோராஸ்ட்ரியர்களும் சில முறை இஸ்லாமியரை எதிர்த்து நிற்கத் முனைந்தனர். Shirz நகரில் 979-ல் அத்தகைய போராட்டம் நடந்தது. ஆனாலும் இஸ்லாமியரின் அடக்குமுறையை எதிர்கொள்ள முடியாத ஜோராஸ்ட்ரியர்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்குக் குடி பெயர்ந்தனர். பார்ஸி என்ற பெயரில் சிறுபான்மையராக இன்னும் பெருமையுடன் இந்தியாவில் உள்ளார்கள்.


17-ம் நூற்றாண்டிற்குப் பிறகு ஜோராஸ்ட்ரியர்களின் நிலை மிக மோசமானதாக இருந்தது. 18-ம் நூற்றாண்டில் ’Encyclopaedia of Islam' கூறுவது போல் அவர்கள் எண்ணிக்கையிலும் குறைந்து, மத மாற்றத்திற்கோ, அடுத்த நாட்டிற்குச் செல்வதற்கோ என்று தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். 19-ம் நூற்றாண்டில் அவர்கள் பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் இருந்தனர்.(236)


ஆர்மீனியர்கள் :
Armenian Christians  ஆர்மீனிய கிறித்துவர்கள் இஸ்லாமியரின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளானார்கள். 1894,1895, 1896-களில் நடந்த கொலைவெறித் தாக்குதல்களின் போது துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இருந்த மோசமான அரசியல் தொடர்புகளால், ஆர்மீனியர்கள் ரஷ்யாவிடம் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டினார்கள். ஆனால் பயனில்லை. 2,50,000 ஆர்மீனியர்கள்  Sasun, Trapezunt, Edessa, Biredjik, Kharput, Niksar, Wan  போன்ற நகரங்களில் கொல்லப்பட்டார்கள். பல கிராமங்கள் சுத்தமாகத் தீக்கிரையாயின. தேவாலயங்கள் சூறையாடப்பட்டு, எரிந்தன.1896-ல் வெளிவந்த Revue Encyclopedique  என்ற நூலில் ’1894-1896 ஆண்டுகளில் நடந்த வெறிச்செயல்கள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன’ என்கிறது.


1904, 1909- களில் 30,000 ஆர்மீனியர்கள் Adana என்ற நகரில் உயிரிழந்தனர். துருக்கியில் 1915-ல் நடந்த மனிதக் கொலைகள் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனக்கொலை என்று கருதப்படுகிறது. மொத்தம் பத்து லட்சம் ஆர்மீனிய கிறித்துவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இந்தக் கொலைகள் எல்லாவற்றிற்குமே ’இஸ்லாமியர் அல்லாதாரை அழியுங்கள்’ என்று ’கடவுளே’ அளித்த கோட்பாடே காரணமாக உள்ளது. இந்தக் கொலைகளால் பயனடைந்தவர்கள் இஸ்லாமியரே. இதுதான் அவர்களது ஜிகாத்.(238)





**                                              **                                                 **






64 comments:

கோவி.கண்ணன் said...

//ஆளுக்கொரு சட்டம்:
* எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது//

இஸ்லாமிய மனு வர்சன் போல

:)

Madhu said...

இஸ்லாம் என்பது அராபிய பார்ப்பனீயம் தான். சகிப்புத்தன்மை என்பது துளியும் கிடையாது.இன்று வரை உலகிற்கு பெரும் கேடாக இஸ்லாம் முக்கிய பங்கு வகிக்கிறது.

saarvaakan said...

இணையப் பக்கம் முவதுமே இரத்த வாடை வீசுகிறது.மதம் பரப்ப,நாடு பிடிக்க என்ற போர்களினால் மனித குலம் பட்ட துயரங்கள் ஏராளம். போர் புரிபவர்களின் மனிதில் இன்னொரு மனித்னை கொல்லுவது தவறு என்ற உணர்ச்சியை கூட ஏற்படுத்த முடியாதவர் கடவுளா!!!.

பொதுவாக இக்குற்றச் சாட்டுகளை மறுக்க இது எதிரிகளால் செய்யப் படும் பொய் பிரச்சாரம்,விக்கி பெடியா போன்றவற்றை அவர்களே நட்த்துகிறார்கள் என்பதுதான்.பழங்கால தவறுகளுக்கு யாரும் பொறுப்பில்லை எனது உண்மையே என்றாலும அப்போது நடந்தது தவறு என்று ஒத்துக் கொண்டு எதிர்காலத்தில் இக்கொடுமைகள் நடக்காமல் இருக்க எனன செய்ய வேண்டுமென ஆக்க பூர்வமாக சிந்திக்கலாம்.
ஜெர்மனி நாஜிக்கள் 60 இலட்சம் யூதர்களை கொன்றதை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறது.
http://articles.latimes.com/1990-04-12/news/mn-1752_1_east-germany

பலவித அரசியல் மன்னிப்பு கோரிக்கைகள் பற்றிய சுட்டி

http://www.upenn.edu/pnc/politicalapologies.html
__________

http://www.kenanmalik.com/essays/bergens_apology.html

இச்சுட்டியில் இந்த வரிகள் மிக சரியாக இப்பிரச்சினையின் தீர்வை எடுத்துரைக்கிறது.

The demand for political apology turns history into a series of sins to be atoned for rather than events to be learned from.

The acknowledgement of past wrong-doing is certainly important. But the remembrance of yesterday's wrongs should not supplant the search for a more just tomorrow.

ஆனந்தி.. said...

வாழ்த்துக்கள் தருமி சார்...அடுத்த ஆறு ஆண்டு கழிச்சு இந்த பின்னூட்டவாதியையும் நீங்கள் நினைவு கூற நான் பின்னூட்டம் இப்ப போட்டாச்சு...:))

(புதுபதிவில் கம்மென்ட்ட்ட முடியல..:(( )

தருமி said...

//ஆத்திகனாக மாறி பரலோக ராஜ்ஜியத்தில் சிறந்த இடம் பிடிக்க பிரார்த்திக்கும் உங்கள் சகோ.சுவனப்பிரியன்.//

வேண்டாம் சுவனப்பிரியன். பரலோக ராஜ்ஜியத்தை விடவும், உங்கள் மத சுவனம்தான் எனக்கு மிகவும் .. நிரம்ப .. அதிகமாகப் பிடிக்கிறது. (காரணங்கள் சொல்ல வேண்டுமா, என்ன!) சுவனத்திற்கே போகணும்!!

//ஆக்கப் பூர்வமான வாதங்களை வைப்பீர்கள் என்று எண்ணுகிறேன். //

இதுவரை அவைகளைக் கண்டு கொள்ளவேயில்லையே நீங்கள்!!!!
500 வது பதிவில் கேட்டதைக் கூட கண்டுக்க மாட்டேன் என்கிறீர்களே. இப்பதிவில் உள்ள வரலாற்று உண்மைகளையும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ...

தருமி said...

சுவனப்பிரியன்
இன்னொரு சந்தேகம்: நீங்களும் இந்திய முஸ்லீம்களும் சன்னியா, ஷியாவா?

இதை வாசித்ததும் ஐயம்.

1200 வருடமா இப்படியா ஒரே சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?

தருமி said...

சுவனப்பிரியன் said...

தருமி!

//493-ம் பதிவில் //உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா என்று இஸ்லாமிய நண்பரிடம் கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்!//

உலகில் எந்த மனிதனும் தனது குடும்பப் பெண்கள் யோக்கியமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவான். இது மதம் கடந்த ஒரு எண்ணம். திருமணமான சில பெண்கள் கணவனுக்கு துரோகம் இழைத்து அது கொலை வரை செல்வதை நாம் தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோம். இது போன்ற சூழலில் தான் இஸ்லாம் சிறந்த ஒரு வழிகாட்டுதலை கொடுக்கிறது.

'கட்டுப்பட்டு நடப்போரும் இறைவனின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று மனைவியர் விஷயத்தில் நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கைகளில் விலக்குங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'
-குர்ஆன் 4:34

மறைவான வெட்கத் தலங்களை பேணாத தனது கணவனுக்கு துரோகம் செய்யும் சில பெண்களைப் பற்றித்தான் இந்த வசனம் பேசுகிறது. எடுத்தவுடன் அரிவாளை தூக்கி ஒரே போடாக போட்டு விடுவதுதான் நாம் பலமுறை பத்திரிக்கைகளில் படித்தது. ஆனால் இதை இஸ்லாம் தடுக்கிறது.

முதலில் அந்த பெண்ணிடம் சிறந்த முறையில் அறிவுரை கூறி திருத்த முயல வேண்டும். இது சரிவராத போது சில நாட்களுக்கு மனைவியோடு சேர்ந்து படுக்காது தனிமைபடுத்த வேண்டும். கணவன் தன்னை படுக்கையிலும் ஒதுக்குகிறான் என்று தெரிந்து அந்த பெண் திருந்த முற்படுவாள். அதிலும் சரி வராமல் திரும்பவும் அதே தவறை மனைவி செய்தால் அவளை அடித்து திருத்த முயற்ச்சிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. கணவனுக்கு கட்டுப்பட்டு தீய நடவடிக்கைகளை விட்டும் தவிர்ந்து கொண்டால் வேறு வழிகளை தேடாமல் அவளோடு வாழ்க்கை நடத்த வேண்டும்.

இப்படி ஒரு அழகிய வழிமுறை மற்ற மார்க்கங்களில் இல்லாததாலதான் 'நடத்தையில் சந்தேகம் மனைவி கொலை' என்று நாம் பத்திரிக்கையில் அடிக்கடி பார்க்கிறோம்.

மனைவியை அடிப்பதற்கும் சில வழிமுறைகளை இஸ்லாம் வகுக்கிறது.

எந்த சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் முகமது நபி அவர்கள் மிக வன்மையாக தடுத்துள்ளார்கள். ஆதாரம் புகாரி 1294, 1297.

அதாவது தான் தவறாக நடந்தால் நம் கணவன் நம்மை அடிக்கவும் செய்வான் என்ற பயம் இது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களுக்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டது.

இதனாலும் அந்த பெண் திருந்தவில்லை என்றால் அவளை விவாக விலக்கு செய்த விடுங்கள் என்று இஸ்லாம் பணிக்கிறது. இது போன்ற சட்டங்கள் இஸ்லாத்தில் இருப்பதால்தான் கணவனால் மனைவி கொல்லப்படுவது இஸ்லாத்தில் மற்ற சமூகங்களோடு ஒப்பிடும் போது குறைவாக இருக்கிறது.

'பெண் விடுதலை' என்ற பெயரில் பெண்களை காட்சிப் பொருள்களாக மாற்றியதால் இன்று குடும்ப வாழ்வு சிதைந்திருக்கிறது. பெண்மைக்கு பாதுகாப்பு கொடுக்கும் முன்னேற்றத்தால்தான் அவர்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.

மற்றபடி அடிமைப் பெண்களைப் பற்றி ஏற்கெனவே பல முறை விளக்கியாகி விட்டது.

தருமி said...

//அடிமைப் பெண்களைப் பற்றி ஏற்கெனவே பல முறை விளக்கியாகி விட்டது.//

ஒரே விசயத்தை ‘திருப்பி .. திருப்பி .. சொல்வதாலேயே கேட்ட கேள்விக்கு அவைகள் சரியான பதில்கள் என்பதாகாது என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

’கடவுளே’ அடிமைத்தனத்தை ஆதரித்தார்!!

தருமி said...

//
'கட்டுப்பட்டு நடப்போரும் இறைவனின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல ஆண்கள் . பிணக்கு ஏற்படும் என்று கணவன் விஷயத்தில் நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கைகளில் விலக்குங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'

இப்படியும் ஒரு வசனம் குரானில் வந்திருந்தால் அது ஒரு ‘நல்ல’ நடுநாயகமான, சரியான நூல் எனலாம்! தவறு யார் செய்தாலும் - கணவனோ, மனைவியோ - தண்டனை ஒன்றாக அல்லவா இருக்க வேண்டும்?

ஏன் பெண்களை மட்டும் வறுத்தெடுக்கிறார் உங்கள் கடவுள். ஆண்கள் அனைவரும் யோக்கியமானவர்கள்; பெண்கள் மட்டுமே மறைவானவற்றைக் காத்துக் கொள்ளாதவர்கள்; பெண்கள் மட்டுமே கணவனுக்கு துரோகம் இழைப்பார்கள் என்கிறீர்கள். ஆண்களின் துரோகங்கள் தான் சமுதாயத்தில் அதிகம் என்பது தெரியாதா உங்களுக்கு?

இப்படி ஒருதலைப் பட்சமான வாசகங்களை நீங்கள் “ஒரு அழகிய வழிமுறை ” என்கிறீர்கள். ’கண்ணைத் திறந்து பார்த்தால்’ தான் நான் சொல்லும் ஒரு பக்க உண்மை உங்களுக்குப் புரியும்.

தருமி said...

//மனைவியை அடிப்பதற்கும் சில வழிமுறைகளை இஸ்லாம் வகுக்கிறது.//

(கணவனை அடிக்கவும் மனைவிக்கு சில வழிமுறைகளைக் கொடுத்திருக்கலாமே!)

மனைவியை அடிப்பதே கேவலம் என்கிறேன் என்கிறேன் நான். நீங்கள் ‘வழிமுறைகளோடு’ அடிக்கலாம் என்கிறீர்கள். இது என்ன பண்போ? கேவலமானதை எப்படி செய்தாலும் அதுவும் கேவலம்தான் - அது உங்கள் ‘தூய’ புத்தகத்திலேயே சொல்லியிருந்தாலும்!

தருமி said...

இப்பதிவில் உள்ள வரலாறை நீங்கள் கண்டும் காணாமல் போவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே //”சில கேள்விகளை நான் திருப்பி ...திருப்பி... திருப்பி...... திருப்பி (நண்பர் ஆஷிக் உபயம்) //கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுள்ளது.

புரிகிறதா?

சீனு said...

//ஒரே விசயத்தை ‘திருப்பி .. திருப்பி .. சொல்வதாலேயே கேட்ட கேள்விக்கு அவைகள் சரியான பதில்கள் என்பதாகாது என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.//

:))

suvanappiriyan said...

//ஆகவே இரு வசனங்களும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சிறு சண்டையை பற்றியே பேசுகிறது.பெண் சிறு சண்டை செய்வாள் என்று ஆண் அஞ்சினால் ,அடிக்கலாம்
.ஆண் சிறு சண்டை செய்வான் என்று பெண் அஞ்சினால் ,சமாதானம் அல்லது
பிரிந்து செல்லுதல். ஏன் இந்த‌ பாகுபாடு?//-Sankar

//ஏன் பெண்களை மட்டும் வறுத்தெடுக்கிறார் உங்கள் கடவுள். ஆண்கள் அனைவரும் யோக்கியமானவர்கள்; பெண்கள் மட்டுமே மறைவானவற்றைக் காத்துக் கொள்ளாதவர்கள்; பெண்கள் மட்டுமே கணவனுக்கு துரோகம் இழைப்பார்கள் என்கிறீர்கள். ஆண்களின் துரோகங்கள் தான் சமுதாயத்தில் அதிகம் என்பது தெரியாதா உங்களுக்கு?//-Dharumy

'அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்கள் அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'
-குர்ஆன் 4:32

'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.'
-குர்ஆன் 4:124

இங்கு ஆணும் பெண்ணும் நற்கருமங்கள் செய்தால் அதற்கேற்ற கூலி உண்டு என்று இறைவன் தெளிவுபட கூறுகிறான்.

தவறு செய்யும் பெண்களை அடிக்க சொல்லும் குர்ஆன் அதே அளவு கோலை ஆண்களை அடிக்க ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி வருகிறது.

உலகம் முழுவதும் நாம் எடுத்துக் கொண்டால் பெண்ணை விட ஆண் இயற்கையாகவே பலசாலியாக படைக்கப்பட்டுள்ளான். பெண்கள் மென்மையானவர்கள். அந்த மென்மை என்ற தன்மை பெண்மைக்கு இருப்பதால்தான் ஆம்பள பசங்க அவர்களை சுற்றி சுற்றி வருவதற்கு காரணம். சில ஆண்கள் மனைவிக்கு துரோகம் செய்கிறார்கள். இதனால் அந்த மனைவி அந்த கணவனை அடிக்க முடியுமா? அதற்குரிய சக்தியை அந்த பெண் இயற்கையாக பெற்றிருக்கிறாரா? இல்லை.

அன்பாக சொல்லலாம். அழுது சொல்லலாம். அடித்து சொல்ல ஆரம்பித்தால் அந்த மனைவி மேலும் கணவனிடம் அடி வாங்கத்தான் நேரும். ஏனெனில் கணவனை எதிர்க்கும் உடல் வலிமையை 90 சதவீத பெண்கள் இயற்கையாகவே பெற்றிருக்கவில்லை. பல குழந்தைகளை பெறுவதால் அந்த பெண் இருக்கும் வலிவையும் இழக்கிறாள். நான்கு குழந்தைக்கு தகப்பன் என்று சொல்லும் ஆண் அதே இளமையோடு இருப்பான். நான்கு குழந்தைக்கு தாய் என்று சொல்லும் பெண் திருமணத்துக்கு முன் இருந்த அதே இளமையோடும் வலிவோடும் இருப்பாளா? கண்டிப்பாக இருக்க முடியாது. வலிவிழந்த அந்த பெண்ணை கணவனை அடி என்று சட்டம் போட்டால் அது 'ஏட்டுச் சுரைக்காயாக' பயன் படுத்த முடியாத சட்டமாகத்தான் இருக்கும். முடிவாக எதற்கும் அந்த கணவன் மசியவில்லை என்றால் அந்த கணவனை பிரிந்து விட இஸ்லாம் பணிக்கிறது.

இதனால்தான் திருமணத்துக்கு முன்பு ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று ஆண் பெண்ணுக்கு கட்டாயமாக மஹர் தர வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இந்த மஹரை கொடுக்க முடியாமல் 40 வயதிலும் கல்யாணமாகாத பல சவுதி இளைஞர்களை நாம் பார்க்கலாம். மேலும் இவ்வாறு தனது மனைவிக்கு துரோகம் இழைக்கும் ஆண்கள் கண்டிப்பாக இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். இங்கு மனைவிக்கு மேல் பலம் பொருந்தியவன் கணவன். கணவனுக்கு மேல் பலம் பொருந்தியவன் இறைவன். இந்த வித்தியாசங்களை புரிந்து கொண்டால் தெளிவான விளக்கம் கிடைக்கும்.

suvanappiriyan said...

//சுவனப்பிரியன்
இன்னொரு சந்தேகம்: நீங்களும் இந்திய முஸ்லீம்களும் சன்னியா, ஷியாவா?//

நான் எந்த பிரிவிலும் இல்லை. நான் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டிருப்பது முகமது நபி அவர்களை. என் வாழ்க்கையை என்னால் முடிந்த வரை குர்ஆனின் படி அமைத்துக் கொள்ள முயற்ச்சிக்கும் ஒரு சாதாரண முஸ்லிம்.

//இப்பதிவில் உள்ள வரலாற்று உண்மைகளையும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ...//

குர்ஆனையும் நபி மொழியையும் சுட்டிக் காட்டி 'இப்படி இருக்கிறதே' என்று கேட்டால் விளக்கமளிக்கலாம். ஃபெரோஸ் ஷா ஏன் அப்படி நடந்தான், அக்பர் ஏன் இப்படி ஏன் நடந்தான், ஷாஜஹான் ஏன் தாஜ்மஹாலைக் கட்டி வீண் விரயம் செய்தான் என்ற கேள்விகளுக்கு அவரகள் குர்ஆனை விளங்க வேண்டிய முறையில் விளங்கவில்லை என்பதே பதிலாக இருக்கும்.

ஒரு கத்தி கொலைகாரனிடம் இருந்தால் அதை வைத்து கொலை செய்கிறான். அதே கத்தி ஒரு டாக்டரிடம் இருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறார். இதே அளவு கோலை குர்ஆனுக்கும் வைத்துப் பாருங்கள். விடை எளிது.

//’கடவுளே’ அடிமைத்தனத்தை ஆதரித்தார்!!//

'தேவதாசி முறை, பொட்டு கட்டும் வழக்கம், தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் நமது சமூகத்தில் புரையோடிப் போயிருந்தது. அதை நீக்க நமது தலைவர்கள் பாடுபட்டனர். இன்றும் இந்த கொடுமைகள் ஒழியவில்லை' என்று நமது வரலாற்று நூல்கள் கோடிட்டுக் காட்டினால் உடனே 'பார்த்தீர்களா! நமது அரசே அனைத்து தவறுகளுக்கும் அங்கீகாரம் அளித்து விடடது' என்று சொல்வோமா? அதே அளவு கோல்தான் இங்கும்.

4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

ஒவ்வொரு தவறுக்கும் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வைத்ததன் மூலமாக குறுகிய காலத்திலேயே அரபு நாடு முழுக்க அடிமைகளே இல்லாதொழிக்கப்பட்டனர்.

தருமி said...

//வலிவிழந்த அந்த பெண்ணை கணவனை அடி என்று சட்டம் போட்டால் .. //
Sorry சுவனப்பிரியன் ... நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவேயில்லை; புரிந்து கொள்ளவும் மாட்டீர்கள்!

கணவன் மனைவியை அடிக்கலாம் (அல்லா சொல்லியாச்சு!); மனைவி கணவனை அடிக்கலாம் – இப்படியெல்லாம் ‘ரூல்ஸ்’ போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
// தவறு செய்யும் பெண்களை அடிக்க சொல்லும் குர்ஆன் அதே அளவு கோலை ஆண்களை அடிக்க ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி வருகிறது.// கேள்வியையே மாற்றி விட்டீர்கள்! உடல் வலிமை பற்றியும் பேசுகிறீர்கள். நான் சொன்னது ‘மனைவியை அடிப்பது’ என்ற கடவுளின் தத்துவத்தைப் பற்றி. நான்
சொன்னதை சிறிது மாற்றி மீண்டும் சொல்கிறேன்:
மனைவியை அடிப்பதே கேவலம் என்கிறேன் நான். அல்லா ‘வழிமுறைகளோடு’ அடிக்கலாம் என்று சொல்வதாக சொல்கிறீர்கள். இது என்ன பண்போ?
கேவலமானதை எப்படிச் செய்தாலும் அதுவும் கேவலம்தான் - அது உங்கள் அல்லாவே சொல்லியிருந்தாலும்!

அல்லாவின் இந்தக் கட்டளையைப் பற்றி கண்மூடி நம்புவர்களுக்கு ஒன்றும் தோன்றாது; ஆனால் ஒரு காபிருக்கு .... ஆச்சரியமும், வேதனையும் மட்டுமே மிச்சம்!

இன்று நடந்த ஆங்கில அரசுக் கல்யாணத்தில் மணப்பெண் to obey and love my husband என்று வழக்கமாக எடுக்கும் உறுதியை மாற்றி to love and cherish my husband சொன்னதைப் பார்த்தது மிக நன்றாக இருந்தது. அதுதானுங்க திருமணம்... இரண்டும் ஒன்று... அதில் ‘சிறுசு’- ‘பெருசு’, strong – weak, அடிக்கிறது – வாங்கிக்கிறதுன்னு வேறுபாடு இல்லைங்க! இதையல்லவா ‘ஒரு சாமி’ சொல்லிக் கொடுக்கணும்! அத உட்டுட்டு .... :(

தருமி said...

//ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது .. முஃமின் காபிரைக் கொன்றால் ...//
கொலை செய்யாதே என்றால் அதில் பொருள் உண்டு. அதை விட்டு விட்டு முஃபினைக் கொன்றால் இப்படி ... காபிரைக் கொன்றால் ... இப்படி என்று ஒவ்வொன்றிற்கும் பட்டியலிடுவதா கடவுளின் கொள்கையாக என்றும் இருக்க வேண்டும். ஆச்சரியம்தான் – இதுவும் ஒரு காபிருக்குத்தான்.

1600-ல் அல்லது 2011- எந்த ஆண்டாக இருந்தாலும் அடிமைத்தனம் தவறு என்று எல்லாம் வல்லவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அல்லா போட்ட பட்டியலால் அடிமைத்தனம் ஒழிந்தது என்கிறீர்கள். நான் எழுதியுள்ள வரலாற்றை மறுபடி படியுங்கள் - அடிமைத்தனம் இஸ்லாம் நாடுகளில் எதுவரை இருந்து வந்துள்ளது; (இன்னும் இருக்கிறது; உங்கள் பாஸ்போர்ட் உங்களிடம் இப்போது இருக்காதே; அரசிடம்தானே இருக்கும்; இதுவும் ஒரு அடிமைத்தனம்தானே?)

அடிமைத்தனத்தைப் பட்டியலில் அல்லா சேர்த்துள்ளது அடுத்த ஆச்சரியமே. கடவுள் அன்றே இதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டியலிடுவது ஒரு மனிதன் மட்டுமே செய்வது; செய்யக் கூடியது. நிச்சயமாக ஒரு கடவுள் இப்படி பட்டியலிட மாட்டார்; பட்டியலிடக் கூடாது.

தருமி said...

//ஃபெரோஸ் ஷா ஏன் அப்படி நடந்தான், அக்பர் ஏன் இப்படி ஏன் நடந்தான், ஷாஜஹான் ஏன் தாஜ்மஹாலைக் கட்டி வீண் விரயம் செய்தான் என்ற கேள்விகளுக்கு.//

இவைகள் என் கேள்விகளே அல்ல. //சில / பல இஸ்லாமிய மன்னர்கள் ‘குடியும் கூத்தியுமாக’ வாழ்ந்தார்கள். அது தவறுதான் என்றும் சில பதிவர்கள் ‘பாவமன்னிப்பு’ கேட்டுள்ளார்கள். அதற்காக இங்கு யாரும் அழவுமில்லை; கவலைப்படவுமில்லை.// என்று நானே சொல்லியிருக்கிறேன்.

உங்களின் பதிலை எதிர்பார்த்து நான் கேட்டவை: –
1. ஏன் கடவுள் முஃமீனுக்கும், காபிருக்கும் தனித்தனி வரி விதித்தார் என்பதுவும்,
2. //5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )// – இப்படிக் கூறும் ஒரு கடவுளைப் பற்றியும்,
3. ‘ஏன் ’இஸ்லாம் கத்தியால் பரப்பப்பட்டது’ என்பது அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையாக உள்ளது என்பதைக் காண்பிக்கவும்,
4. கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் ஏனிந்த கொலைகள்; கொள்ளைகள்; கட்டாய மத மாற்றங்கள் என்பதுவும் என் சில கேள்விகள்.

இவைகளுக்கு ஆதாரமாக சில வரலாற்று நிகழ்வுகளைக் காண்பித்திருக்கிறேன். நான் சொன்னவை எல்லாம் ”இணையத்தில் கிடைத்த ஆதாரமற்ற 'கதை'களை சொல்லி எங்களை 'வதை' செய்யாமல் 'விதை' போல வாதங்களை விதைப்பீர்களாக!’’ என்று திரும்ப .. திரும்ப .. சொல்லிவிடாதீர்கள். அவை பதியப்பட்ட எழுத்துகள்.

வரலாறு மிகவும் முக்கியம், சுவனப்பிரியன்!!

தருமி said...

//குர்ஆனின் படி அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் ஒரு சாதாரண முஸ்லிம்.//
நல்லது. அப்படின்னா ஷியா, சன்னி முஸ்லீம் அசாதரண முஸ்லீம்களா? நான் கேட்டது இந்திய முஸ்லீம்கள் இந்த இரண்டில் ஒன்றாகத்தானிருக்க முடியும். (கிறித்துவத்தில் கத்தோலிக்கன் & பிரிவினைக்காரன் என்பது போல்.) இரண்டில் ஏதாவது ஒன்றில் இருப்பது தவறென்றும் சொல்லவில்லை. அது போல் இந்திய முஸ்லீம்கள் இரண்டில் ஒன்றாகத்தானிருக்க முடியும். இது ஏதோ தவறு போல் ஒதுங்கிக் கொள்கிறீர்கள்! இதில் எப்பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

suvanappiriyan said...

//வரலாறு மிகவும் முக்கியம், சுவனப்பிரியன்!!//

வரலாறு என்று எதை சொல்கிறீர்கள்? இஸ்லாத்துக்கு மாற்றமாக நடந்த அக்பர் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில் நல்லவர். இஸ்லாமிய சட்டங்களின் படி ஓரளவு ஆட்சி நடத்திய ஒளரங்கஜேப் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில் கொடுங்கோலர். ஒளரங்கஜேப் சிறந்த ஆட்சியாளர் என்பதற்கு நான் வரலாற்று ஆதாரங்களை கொடுத்தாலும் நீங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் உங்கள் நிலைப்பாடு அப்படி. எனவே ஒரு ஆட்சியாளர் செய்யும் நிறை குறைகளை மார்க்கத்தோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. குர்ஆன் வசனங்களில் உள்ள உங்களின் ஆட்சேபனைகள்தான் இங்கு விவாதிக்க முடியும்.

//இது ஏதோ தவறு போல் ஒதுங்கிக் கொள்கிறீர்கள்! இதில் எப்பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.//

அரசு கணக்கெடுப்பின் படி நான் சன்னி பிரிவில் வருகிறேன். குர்ஆனிலோ ஹதீஸிலோ ஷியா, சன்னி என்ற பிரிவுகளுக்கு இடமில்லை. என் தாய் வழி சொந்தங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் இருப்பர். முன்னால் பிராமணர்களாகவோ சௌராஷ்டிரர்களாகவோ இருக்கலாம். என் தந்தை வழி சொந்தம் அனைத்தும் மாநிறம். அதாவது இந்திய நிறம். முன்னால் மூப்பனார்களாகவோ, செட்டியார்களாகவோ இருந்திருக்கலாம். ஏனெனில் எங்கள் ஊரைச் சுற்றி அவர்கள்தான் அதிகம்.

ஒரு வேடிக்கையான செய்தி. எங்கள் ஊரின் தெருக்களின் பெயர்கள் முறையே பாப்பான் தெரு, செக்கடித் தெரு, ஞாயக்கர் தெரு, வடுகத் தெரு, கொல்லன் தெரு. ஆனால் வசிப்பது அனைவரும் இஸ்லாமியர்கள். அங்கிருந்த அனைத்து சாதியினரும் இஸ்லாம் என்ற ஒரு கொடியின் கீழ் வந்து விட்டனர். யாரிடமாவது சென்று உங்களின் முந்தய சாதி என்ன என்று கேட்டுப் பாருங்கள். 'தெரியாது' என்ற பதில்தான் வரும். 100 பெரியார் வந்தும் இன்றும் ஒழிக்க முடியாத சாதி, அவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் பறந்து விடுகிறதே. நமது நாடு இஸ்லாத்தினால் பெற்ற பயன்களில் தலையாயது இந்த மாற்றம்.

//(இன்னும் இருக்கிறது; உங்கள் பாஸ்போர்ட் உங்களிடம் இப்போது இருக்காதே; அரசிடம்தானே இருக்கும்; இதுவும் ஒரு அடிமைத்தனம்தானே?)//

தவறு. என் பாஸ்போர்ட் முதற்கொண்டு என் கம்பெனியின் அனைவரின் பாஸ்போர்ட்டும் என் கஸ்டடியில்தான் இருக்கிறது. சில நபர்களை என் கம்பெனியில் கடைகளின் பொறுப்புதாரியாக நியமிக்கிறார்கள். விற்ற பொருள்களின் பணத்தை பேங்கில் போடாமல் இந்தியாவுக்கு பல லட்சங்களை அனுப்பிய சில இந்திய குடிமகன்களும் என் கம்பெனியில் இருந்ததுண்டு. இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத்தான் பாஸ்போர்ட்களை வாங்கி வைப்பது. நிர்வாக வசதிக்காக செய்வது எப்படி அடிமைத்தனமாக முடியும்?

//அடிமைத்தனத்தைப் பட்டியலில் அல்லா சேர்த்துள்ளது அடுத்த ஆச்சரியமே. கடவுள் அன்றே இதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பட்டியலிடுவது ஒரு மனிதன் மட்டுமே செய்வது; செய்யக் கூடியது. நிச்சயமாக ஒரு கடவுள் இப்படி பட்டியலிட மாட்டார்; பட்டியலிடக் கூடாது.//

மதுவை ஒரே உத்தரவில் ஒழித்துக் கட்டியது இஸ்லாம். அது போல் அடிமைமுறையை ஒரே உத்தரவில் ஒழிக்க முடியாது. ஏனெனில் அன்றைய காலத்தில் ஆடு, மாடுகளைப்போல் மனிதர்களும் அடிமைகளாக விற்க்கப்பட்டார்கள். திடீரென்று சட்டம் இயற்றினால் வாங்கிய அடிமை வியாபாரிகளுக்கு நஷ்ட ஈட்டை யார் கொடுப்பது? எனவேதான் குற்ற பரிகாரமாக அடிமை விடுதலை கொண்டு வரப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை.

suvanappiriyan said...

//1. ஏன் கடவுள் முஃமீனுக்கும், காபிருக்கும் தனித்தனி வரி விதித்தார் என்பதுவும்,//

ஜகாத் வரி முஸ்லிம்களுக்கு, ஜிஸியா வரி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு. இது ஏற்கெனவே விவாதித்த விஷயம். திரும்பவும் திருப்பி...திருப்பி...

//2. //5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )//

முகமது நபி பிரசாரத்தை துவங்கியிருந்த காலத்தில் பல குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவின. இஸ்லாத்தை தழுவிய பல குடும்பத்தின் சில உறுப்பினர்கள் கிறித்தவர்களாகவும் யூதர்களாகவும் தொடர்ந்தனர். சொந்தங்கள் என்ற வகையில் அவர்களோடு உறவாடி வந்தனர். அந்த நேரம் போர் உச்சகட்டமாக நடந்து வந்தது. இவர்கள் உறவாடுவதால் சில போர் உத்திகள் எதிரி தரப்புக்கும் தெரிய ஆரம்பித்தது. இதை தடுக்கவே கிறித்தவர்களிடமும் யூதர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டாம் என்ற வசனம் இறங்கியது.

'மார்க்க விஷயங்களில் உங்களிடம் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:9

அதே நேரம் கிறித்தவர்களிலும், யூதர்களிலும் முஸ்லிம்களிடம் நட்போடு பழகியவர்களை பழைய விரோதத்தை வைத்து நல்லவர்களை இம்சிக்கக் கூடாது என்பது அடுத்த கட்டளை. முகமது நபி ஒரு யூதரிடம் கடன் வாங்கி இருந்தார்கள். மாற்று மதத்தவரோடு நல்லிணக்கத்தோடு செல்லத்தான் இறை கட்டளை பிறப்பிக்கிறது. எனவே நல்லவர்களோடு நட்பு பாராட்ட வேண்டும். தீயவர்களோடு நெருக்கமாவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இதுதான் இங்கு சொல்லப்பட்டுள்ளது. இது போல் இன்னும் நிறைய வசனங்கள் உண்டு.

//3. ‘ஏன் ’இஸ்லாம் கத்தியால் பரப்பப்பட்டது’ என்பது அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையாக உள்ளது என்பதைக் காண்பிக்கவும்,//

இதற்கும் ஏற்கெனவே பதில் சொல்லியாகி விட்டது. திரும்பவும் திருப்பி...திருப்பி...

//4. கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் ஏனிந்த கொலைகள்; கொள்ளைகள்; கட்டாய மத மாற்றங்கள் என்பதுவும் என் சில கேள்விகள்.//

இதற்க்கெல்லாம் மனிதர்கள்தான் காரணம். இறை வசனம் தெளிவாக இருக்க அதற்கு மாற்றமாக தன் மனோ இச்சைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டது மனிதனின் தவறல்லவா!

//இன்று நடந்த ஆங்கில அரசுக் கல்யாணத்தில் மணப்பெண் to obey and love my husband என்று வழக்கமாக எடுக்கும் உறுதியை மாற்றி to love and cherish my husband சொன்னதைப் பார்த்தது மிக நன்றாக இருந்தது. அதுதானுங்க திருமணம்... இரண்டும் ஒன்று... அதில் ‘சிறுசு’- ‘பெருசு’, strong – weak, அடிக்கிறது – வாங்கிக்கிறதுன்னு வேறுபாடு இல்லைங்க! இதையல்லவா ‘ஒரு சாமி’ சொல்லிக் கொடுக்கணும்! அத உட்டுட்டு ....//

'அவர்கள் உங்களுக்கு ஆடை: நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187

'அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதை செய்தால் தவிர அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் இறைவன் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.'
-குர்ஆன் 4:19

obey, love, cherish

நீங்கள் குறிப்பிடும் வார்த்தைகளுக்கும் மேலாக இறைவன் கணவன் மனைவி உறவைப் பற்றி இரண்டு வசனங்களிலும் கூறுகிறான். மனிதனின் கருத்துக்கும் இறைவனின் கருத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

saarvaakan said...

http://saarvaakan.blogspot.com/2011/04/434.html
குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்கிறதா?

saarvaakan said...

//இது ஏதோ தவறு போல் ஒதுங்கிக் கொள்கிறீர்கள்! இதில் எப்பிரிவில் நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.//

இந்திய,தமிழ் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையோர் சுன்னி என்ற பிரிவின் கீழ் வருகிறார்கள்.சுன்னா என்றா கொள்கையை பின்பற்ருபவர்கள் சுன்னி முஸ்லிம்கள்.
சுன்னி பிரிவில் வஹாபி என்ற தவுகீத் கொள்கையை கடைப்பிடிப்பவர் நண்பர் சுவனன்(சும்மா செல்லமாக) என்று நினைக்கிறேன்
ஷியா தோன்றியது குறித்து பெரிய கதை சொல வேன்டும்.கதை சொல்லவா?
http://en.wikipedia.org/wiki/Sunni_Islam
http://en.wikipedia.org/wiki/Sunnah

தருமி said...

//குர்ஆன் வசனங்களில் உள்ள உங்களின் ஆட்சேபனைகள்தான் இங்கு விவாதிக்க முடியும்.//

ஆஹா! நல்லது; ஆனால் நீங்கள் அவைகளை விவாதிக்கவில்லையே என்ற கவலைதான் எனக்கு.
499-வது பதிவில் ---
JISYA -- குரன் 9:29-ல் சொல்லப்பட்ட இந்த வரியை தண்டிக்கும் முறை மிகக் கேவலமானது.
எந்த திம்மியும் ஒரு இஸ்லாமியன் மேல் எந்த வித உரிமையையும் கோர முடியாது. குரான் 3:28 மூலம் திம்மிகளுக்கு எந்த வித சமூகப் பொறுப்பும் மறுக்கப்படும்.

ஆளுக்கொரு சட்டம்:
* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று சில சாதியினரை இங்கே இன்னும் சில “சாதி இந்துக்கள்” சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது .

496-வது பதிவில் ---
5 : 51;
5 : 56 - 64
9 : 5-6
8 : 12
8 ; 39-42
8 : 15-16
4 : 74
இப்படிப்பட்ட ரத்த வெறியடிக்கும் வசனங்கள் ஒரு சமயத்தின் தூய புத்தகத்தில் இருப்பதைப் பார்க்கும் போது அது மிக அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

494-வது பதிவில் ---
16 : 77; 30: 28
4 : 3; 23 : 6; 3 : 50-52; 70 : 30

479-ல் சொல்லியிருந்தேனே - //ஆளுக்கொரு, சாதிக்கொரு, சமயத்துக்கொரு வரி என்பது அரசல்ல... அராஜகம்! மதம் அதற்குத் துணையாக இருந்தால் அந்த மதம் ஒரு அராஜக மதம். //

இவைகளைப் பற்றியெல்லாம் பேசாமல் சென்று விட்டீர்களே. இதில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம்: இதெல்லாம் அந்தக் காலத்து நடைமுறைகளை வைத்து அல்லா சொன்னது என்று சொல்வது தவறு. ஏனெனில் ‘ஒரு கடவுள்’ சொன்னது எக்காலத்திற்கும், எந்த வகையிலும், பொருத்தமானதாகவும், சமாதானத்தை நிறுவுவதற்காகவும் இருக்க வேண்டும் அல்லவா? ’சும்மா ஜாலியா சண்டை போடு; கழுத்தை சீவு; திம்மிகளுக்கென்று பல வரிகள் போட்டுக் கொல்’ என்பதெல்லாம் கடவுள் சொல்லித் தருவதாக இருக்கலாமா?

தருமி said...

// நல்லவர்களோடு நட்பு பாராட்ட வேண்டும். தீயவர்களோடு நெருக்கமாவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இதுதான் இங்கு சொல்லப்பட்டுள்ளது.//
அப்டியா??!!!

அப்படியாயின் கீழே வரும் குரான் வாசகங்கள் ஏனிப்படி இருக்கின்றன? நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு நீங்களே ‘உற்பத்தி’ செய்து கொண்டதோ?

//குரானில் கிறித்துவர்களும் யூதர்களும்:
5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )

5 : 56 - 64 - உங்களுக்கு முன் வசனங்களைப் பெற்ற யூதர்களையும், கிறித்துவர்களையும், நம்பாதவர்களையும் உங்கள் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். //

அல்லா ரொம்பவே அழுத்தம் திருத்தமா சொல்லிட்டாரே - யாரு கூட நீங்கல்லாம் சேரவே கூடாதுன்னு. அதான் கேட்டேன் - கடவுள் இப்படி பொறாமையை, தீமையை, போட்டியை,சண்டையை வளர்க்கலாமா என்று. ‘சகோ,’ என்றெல்லாம் எங்களை நீங்கள் விளிப்பதே குரானில் சொல்லியிருப்பதற்கான எதிர்மறையான ஒரு விஷயமாச்சே!

தருமி said...

இங்கிலாந்து பெண்: love and cherish என்கிறாள்.
குரான்: மனைவியை அடித்து அடக்கி வை என்கிறது.

//மனிதனின் கருத்துக்கும் இறைவனின் கருத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.//

இதுதானே நீங்கள் சொல்லும் வித்தியாசம்.

நன்றாக இருக்கிறது இரண்டில் ஒன்று!

தருமி said...

//மனைவியை அடிப்பதே கேவலம் என்கிறேன் நான். அல்லா ‘வழிமுறைகளோடு’ அடிக்கலாம் என்று சொல்வதாக சொல்கிறீர்கள். இது என்ன பண்போ?
கேவலமானதை எப்படிச் செய்தாலும் அதுவும் கேவலம்தான் //

இதை மறுக்கிறீர்களா? (வேறு வழி; நீங்கள் மறுக்க முடியாது இதை. அதாவது நல்ல ஒரு கணவனாக இருக்க உங்கள் மதம் உங்களை அனுமதிப்பதில்லை. மிக நல்ல மதம்!)

suvanappiriyan said...

தருமி!

//* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று சில சாதியினரை இங்கே இன்னும் சில “சாதி இந்துக்கள்” சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது .//

முகமது நபியின் காலில் விழ அனுமதி கேட்டபோது 'எந்த மனிதரும் எவரின் காலிலும் விழக் கூடாது' என்ற பொதுவான விதியை அன்றே அமைத்து சென்று விட்டார் முகமது நபி. ஆதாரம் அபூதாவூத் 1828.

முகமது நபிக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா. அவர் வெளியே வந்தபோது அவரைக் கண்ட மற்றவர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். உடனே ஜனாதிபதி அவர்கள் 'அமருங்கள்' என்றார். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று முகமது நபி கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா கூறினார்கள்.
ஆதாரம் திர்மதி: 2769, அபூதாவூத் 4552


"எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற ஒருவருக்கு அநீதியிழைக்கின்றாரோ அல்லது அவரின் உரிமையை குறைக்கின்றாரோ அலலது அவரது சக்திக்கு மேல் அவருக்கு பொறுப்புக்களை சுமத்துகின்றாரோ அல்லது அவரின் மனவிருப்பின்றி அவரிடம் இருந்து ஏதேனுமொன்றை பெறுகின்றாரோ அவருக்கு எதிராக மறுமையில் நான் வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: அபூதாவூத்)

• "எவர் உடன்படிக்கை செய்து வாழும் ஒரு முஸ்லிமல்லாத ஒருவரைக் கொலை செய்கிறாரோ அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்". (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

• "எவர் முஸ்லிமல்லாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை இம்சிக்கின்றாரோ நான் அவரது எதிரியாவேன். நான் எவரது எதிரியாக இருக்கின்றேனோ மறுமையில் அவருக்கெதிராக வாதிடுபவனாக இருப்பேன்". (ஆதாரம்: தாரீகு பக்தாத் – அல்கதீபுல் பக்தாதி)

நீங்கள் கொடுத்த செய்திகளுக்கும் நான் கொடுத்திருக்கும் இஸ்லாத்தின் உண்மையான நடைமுறைக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா? நிச்சயமாக இல்லை.

நீங்கள் கொடுத்த செய்தி உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி தெரியவில்லை என்று அர்த்தம். அல்லது இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தின் பெயரால் கட்டி விட்ட கதைகள். இந்த இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும்.

மேலே நீங்கள் குறிப்பிடும் குர்ஆன் வசனங்கள் பல போர்கலங்களில் சொல்லப்பட்டது. முழு வாக்கியத்தையும் படித்தால் விளங்கும். இதுவும் முன்பே விளக்கப்பட்ட செய்தி.

அடுத்து உங்களிடம் ஒரு கேள்வி இஸ்லாத்தை தவிர்த்து நீங்கள் வைக்கும் சிறந்த வாழ்க்கை முறை எது என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கிறித்தவத்திலும் சாதி புகுந்து விட்டது. இந்து மதத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். நாத்திகமும் திக வைப்பார்த்து, திமுக வைப் பார்த்து தெரிந்து கொண்டு விட்டோம்.
எனவே இஸ்லாத்தை களங்கப் படுத்த பகீரத முயற்சி எடுத்து பல பதிவுகளை எழுதும் நீங்கள் அதற்கான மாற்று ஏற்பாடு என்ன? என்பதையும் சொல்லலாமே!

இஸ்லாத்தின் எதிர்ப்பான உங்கள் முயற்சியில் ஒரு சதவீதம் கூட வெற்றிபெற போவதில்லை என்பதும் உங்களுக்கே தெரியும். :-)

தருமி said...

//இஸ்லாத்தின் எதிர்ப்பான உங்கள் முயற்சியில் ஒரு சதவீதம் கூட வெற்றிபெற போவதில்லை என்பதும் உங்களுக்கே தெரியும். :-) //

நிச்சயமாகத் தெரியும். என் பதிவுகளால் எந்த ஒரு இஸ்லாமியரும் அரை சதவீதம் கூட மாற மாட்டார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.

இஸ்லாமியரல்லாதாரிடம் என் பதிவுகள் என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தருமி said...

//மேலே நீங்கள் குறிப்பிடும் குர்ஆன் வசனங்கள் பல போர்கலங்களில் சொல்லப்பட்டது. //

இப்படி சொல்வீர்கள் என்று தெரிந்துதான் ஏற்கெனவே //இதெல்லாம் அந்தக் காலத்து நடைமுறைகளை வைத்து அல்லா சொன்னது என்று சொல்வது தவறு. ஏனெனில் ‘ஒரு கடவுள்’ சொன்னது எக்காலத்திற்கும், எந்த வகையிலும், பொருத்தமானதாகவும், சமாதானத்தை நிறுவுவதற்காகவும் இருக்க வேண்டும்.// -- என்று சொல்லியிருந்தேன்.

இந்த statement-யை இதுவரை பத்து முறைகளுக்கும் மேலும் சொல்லியிருக்கிறேன். பயனேது!

தருமி said...

//நீங்கள் அதற்கான மாற்று ஏற்பாடு என்ன? என்பதையும் சொல்லலாமே! //

அது நல்ல ஏற்பாடுன்னா வந்திருவீங்களோ?

இங்கே என்ன பண்டமாற்று வியாபாரமா செய்து கொண்டிருக்கிறோம்!

தருமி said...

முத்தாய்ப்பாக ஒன்று:

குரானை ஏதோ உங்கள் ‘புண்ணியத்தில்’ கொஞ்சம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். வாசித்ததில் புரிந்து ஒன்று: குரான் ஒரு மனிதனின் மனப்போக்கில் எழுதப்பட்ட ஒன்று. அவன்தான் அவனை அடி; இவனைக் கொல்; பொண்டாட்டியைத் தட்டி வை என்றெல்லாம் சொல்ல முடியும். நிச்சயமாக ஒரு கடவுளால் இதுபோன்ற இரண்டாந்தர கட்டளைகளைத் தர முடியாது.

பல மதங்களைப் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். எந்த மதக் கடவுளாவது உங்கள் அல்லா போல் அவனை வெட்டு; இவனை விலக்கி வை, நட்பு பாராட்டாதே; பெண்ணை, அடிமைகளை அடக்கி வை ... இப்படியெல்லாம் சொல்லியுள்ளதா என்று மட்டும் கூறுங்கள்.

suvanappiriyan said...

//அது நல்ல ஏற்பாடுன்னா வந்திருவீங்களோ?//

கண்டிப்பாக! நான் இப்போது பின் பற்றும் கொள்கையை விட எந்த வகையில் சிறந்தது என்பதை ஆதாரத்தோடு விளக்கி விட்டால் போதும்.

//‘ஒரு கடவுள்’ சொன்னது எக்காலத்திற்கும், எந்த வகையிலும், பொருத்தமானதாகவும், சமாதானத்தை நிறுவுவதற்காகவும் இருக்க வேண்டும்.// -- என்று சொல்லியிருந்தேன். இந்த statement-யை இதுவரை பத்து முறைகளுக்கும் மேலும் சொல்லியிருக்கிறேன். பயனேது!//

குர்ஆன் என்பது பயபக்தியோடு படித்து கண்களில் ஒத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டது அல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் போர், மனைவி, ஆட்சி, அதிகாரம் அனைத்தும் குறிக்கிடும். அனைத்திற்கும் தீர்வை சொல்லக் கூடியதே வேதப்புத்தகம். போர்க்கலத்தில் சொல்லப்பட்டதை போர்கலத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும். குடும்ப சூழலில் இறங்கிய வசனத்தை அதே சூழலில் வைத்துதான் பார்க்க வேண்டும். இன்று போர் நடந்தால் அந்த வசனங்கள் இன்றும் பொருந்தும்.

அடுத்து எங்கோ உள்ள அரபு நாட்டில் இறங்கிய வசனம் உசிலம்பட்டியில் உள்ள சாமான்யனுக்கும் பொருந்துகிறதா இல்லையா?

//இஸ்லாமியரல்லாதாரிடம் என் பதிவுகள் என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

உங்கள் பதிவை படித்து விட்டு அந்த நண்பர் பார்க்க ஆரம்பிப்பார். அரசர்கள் செய்த தவறுகளுக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததைப் பார்த்து அவருக்கு குர்ஆனின் மேல் மதிப்பு உயரும்.

//பல மதங்களைப் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். எந்த மதக் கடவுளாவது உங்கள் அல்லா போல் அவனை வெட்டு; இவனை விலக்கி வை, நட்பு பாராட்டாதே; பெண்ணை, அடிமைகளை அடக்கி வை ... இப்படியெல்லாம் சொல்லியுள்ளதா என்று மட்டும் கூறுங்கள்.//

1.இராமன் என்ற கடவுள் தனது மனைவியை மீட்க குரங்கு கடவுள் ஹனுமனிடம் உதவி கோருகிறான். அதற்கு பரிகாரமாக தனது சகோதரன் வாலியை கொல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க அதை ஏற்ற கடவுள் வாலியை மறைந்திருந்து கோழைத்தனமாக கொல்கிறான்.

2.சூர்ப்பநகை, அய்யம்முகி போன்ற பெண்களின் அவயங்களை வெட்டியதும் இதே கடவுள் ராமன்தான்.

3. ராமன் என்ற கடவுள் சம்புகா என்பவனை கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வதுஅவனுக்குத் தடை செய்யப்பட்டது. அதற்கு காரணம் அவன் சூத்திரன்.
-உத்தர காண்டம், அத்தியாயம் 76

சூழ்ச்சி, வஞ்சகம், காமம், கொலை போன்றவற்றை கண்ணன், பாரதப்போர், பிள்ளையார் உருவான விதம் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.
----------------------------------------------------------------------------
உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி…. (உபாகமம் – 20:13)
ஒரு நாட்டின் மீது அத்து மீறி படையெடுத்துச் சென்றால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஆண்களையும் வெட்டி சாய்க்க வேண்டும். இதுவே இறைகட்டளை.

பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக (உபாகமம் – 20:14)
இணைச்சட்டம் (உபாகமம்) 20 ஆம் அத்தியாயம் 16 ஆம் வசனம் கூறுகிறது.
”ஆனால் இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே”
”ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடும்” சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தொலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்” (1 சாமுவேல் 15: 3,4)
"நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்'' என்று சொன்னார்.
லூக்கா 19:27
தருமி சார்! இதைச் சொல்வது சாந்த சொரூபியான ஏசுநாதர்தான். இது போதுமா? தேவை என்றால் 'வீட்டுக்கு குஷ்டம்' போன்ற சனாதன தர்மங்களையும் பைபிளிலிருந்து எடுத்து தரவா? எழுதவே கூசப்படும் பல ஆபாச கதைகளை பைபிளிலிருந்து தரட்டுமா?

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//அரசர்கள் செய்த தவறுகளுக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததைப் பார்த்து//

மீண்டும் ... மீண்டும் ... சொன்னதையே சொல்லுகிறீர்களே! நானும் உங்கள் குரானின் வசனங்களில் உள்ள கொலைவெறி பற்றித்தான் பேசுகிறேன்.


496-வது பதிவில் ---
5 : 51;
5 : 56 - 64
9 : 5-6
8 : 12
8 ; 39-42
8 : 15-16
4 : 74
இப்படிப்பட்ட ரத்த வெறியடிக்கும் வசனங்கள் ஒரு சமயத்தின் தூய புத்தகத்தில் இருப்பதைப் பார்க்கும் போது அது மிக அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.


//உங்கள் பதிவை படித்து விட்டு அந்த நண்பர் பார்க்க ஆரம்பிப்பார். அரசர்கள் செய்த தவறுகளுக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததைப் பார்த்து அவருக்கு குர்ஆனின் மேல் மதிப்பு உயரும்.//

நல்ல “நம்பிக்கை”.

தொடருங்கள்........

தருமி said...

//நான் இப்போது பின் பற்றும் கொள்கையை விட எந்த வகையில் சிறந்தது ..//

அப்படியேதும் இருக்க முடியாது. ஏனெனில் ஏதாவது ’ஒன்றை’ கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்காமல், மனிதத் தன்மையோடு இயங்க சுதந்திரமான மனது வேண்டும். //போர், மனைவி, ஆட்சி, அதிகாரம் அனைத்தும் குறிக்கிடும். அனைத்திற்கும் தீர்வை சொல்லக் கூடியதே வேதப்புத்தகம்.// - என்று எப்போதோ யாரோ எழுதி வைத்த புத்தகத்தை அதைக் கடவுளின் வார்த்தை என்று நம்புவோருக்கும், எங்கள் மத நூலில் “எல்லாவற்றிற்கும் பதிலுண்டு” என்றும் நம்புவோருக்கும் இந்த சுதந்திர மனது வெகு தொலைவில் உள்ளது. உங்களால் அதை அணுகவும் முடியாது.

தருமி said...

ராமாயணக் கதைகளை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். உங்கள் குரானும் ராமாயணம் போல் ஒரு காவியம்தானா? கதைதானா? புராணம்தானா? அப்படியாயின் ஒற்றுமைப் படுத்துங்கள்; கேட்டுக் கொள்கிறேன். இன்னும் மாயாண்டி, பேயாண்டி கதைகளையும் வேண்டுமானால் எடுத்துச் சொல்லுங்கள்.; கேட்டுக் கொள்கிறேன். (நான் கேட்டது //எந்த மதக் கடவுளாவது உங்கள் அல்லா போல் அவனை வெட்டு; இவனை விலக்கி வை, நட்பு பாராட்டாதே; பெண்ணை, அடிமைகளை அடக்கி வை ... இப்படியெல்லாம் சொல்லியுள்ளதா என்று மட்டும் கூறுங்கள். //) உங்கள் குரான் வேத நூலென்றால் நீங்கள் மேற்கோள் காட்டுவதும் வேத நூல்களாயிருப்பதுவே சரி.


கிறித்துவத்திற்கு இரு கதைகள் சொல்லியுள்ளீர்கள். முதல் செட் கதைகள் உபாகமத்திலிருந்து கொடுத்துள்ளீர்கள். அவைகள் எல்லாமே பழைய ஏற்பாட்டில் உள்ளவை. இஸ்லாமிற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா, இல்லையா?

உபாகமம் மோஸேயின் இடைப்பட்ட சட்டம். கடவுளின் வார்த்தைகள் இல்லை.

ஏற்கெனவே பழைய ஏற்பாட்டில் ‘வல்லினமாய்’ இருந்த உங்கள் கடவுள், கிறித்துவத்தில் மெல்லினமாய் மாறி, பின் இஸ்லாமில் மிகுந்த வல்லினமாக மாறியிருக்கிறாரே என்று நானே ஒரு கேள்வியெழுப்பியிருந்தேனே! (பல்லுக்குப் பல்; கண்ணுக்கு கண் (பழைய ஏற்பாடு)  ஒரு கன்னத்திலடித்தால் மறு கன்னைத்தைக் காண்பி (புதிய ஏற்பாடு)  கழுத்தைச் சீவு (கடைசி ஏற்பாடு - குரான்) ... ஏனிப்படி என்று நானே ஒரு பதிவில் கேட்டிருந்தேன்.)

சாமுவேலிலிருந்தும் ஒரு வரலாற்றுப் பகுதி. அதில் வரும் வசனத்தைக் கொடுத்துள்ளீர்கள்.

ஆனாலும் இதையும் தாண்டி, //இதைச் சொல்வது சாந்த சொரூபியான ஏசுநாதர்தான்.// என்ற எள்ளலோடு லூக். 19.27 பகுதியைக் கொடுத்துள்ளீர்கள். இது யாருடைய வார்த்தைகள்? ஏசு பல கதைகளைச் சொல்லுவாரே, அதுபோல் சொன்ன கதையில் வரும் ‘ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகும் ஒரு ’உயர்குடி மகனின் கதை’. ”மினா நாணய உவமை” என்ற பெயரில் லூக்காவில் வருகிறது. ’மினா’ என்னும் நாணயத்தை சிலருக்கு கொடுத்து விட்டு செல்லும் இக்கதையின் இறுதியில் அக்கதா பாத்திரம் சொல்லும் வார்த்தைகளைக் கொடுத்து விட்டு, //இதைச் சொல்வது சாந்த சொரூபியான ஏசுநாதர்தான்.// என்கிறீர்கள்!!! (ஏசுநாதரை நீங்கள் கேலி செய்ய மாட்டீர்களே; அவரும் the last but one prophet தானே! ஆனால் இங்கு அது தேவையாகி விட்டதோ!!!)

//எழுதவே கூசப்படும் பல ஆபாச கதைகளை பைபிளிலிருந்து தரட்டுமா?//

தாருங்களேன்!
நானே ஏற்கெனவே தந்திருக்கிறேன். எந்த இடுகை என்பதும் நினைவில் இல்லை. அதுவும் நிச்சயமாக (உங்களுக்கும் சொந்தமான) பழைய ஏற்பாட்டில்தான் அது இருக்கும். இல்லையா?

தருமி said...

//உங்கள் பதிவை படித்து விட்டு அந்த நண்பர் பார்க்க ஆரம்பிப்பார். அரசர்கள் செய்த தவறுகளுக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததைப் பார்த்து அவருக்கு குர்ஆனின் மேல் மதிப்பு உயரும்.//

அப்படிப்பட்ட ஒருவரை எனக்குக் காண்பித்தால் மிகுந்த நன்றியுடையவனாயிருப்பேன்.

தருமி said...

//என் பாஸ்போர்ட் முதற்கொண்டு என் கம்பெனியின் அனைவரின் பாஸ்போர்ட்டும் என் கஸ்டடியில்தான் இருக்கிறது.//

இதைத்தான் ‘அடிமைத்தனம்’ என்கிறேன். ஒரு வேளை நீங்கள் அடிமைகளுள் ஒரு மேஸ்த்ரியாக இருக்கலாம்.

//விற்ற பொருள்களின் பணத்தை பேங்கில் போடாமல்..// எல்லா மக்களுமா இப்படி காசு விஷயங்களைக் கையாளுகிறார்கள்?! நன்றாகவே மழுப்புகிறீர்கள் ... பரவாயில்லை!

saarvaakan said...

தருமி அய்யா குரானில் உள்ள சில முஸ்லிம்களை பிறரோடு போருக்கு செல்ல கூறும்,போர் செய்தால் இறைவன் முஸ்லிம்களை ஆதரிப்பார் என்ற வசன‌ங்களை மேற்கோள் காட்டி இறைவன் இப்படி கூறலாமா? என்று கேட்கிறார்.
அதற்கு நண்பர் சுவனப் பிரியன் கூறும் பதில்கள்.
1.இவ்வசனங்கள் போர் நடை பெறும்போது கூறப் பட்டது.ஆகவே போர் நடைபெறும் போது மட்டுமே பயன் படுத்தப் படவேண்டும் என்கிறார்.
2.பிற மதங்களிலும் இம்மாதிரி வசனங்கள்,ஆபாசக் கதைகள் உண்டு என்கிறார்.
_______________________

இது பற்றி சில கேள்விகள்.அனைவரும் விடையளிக்கலாம்

முதல் கருத்து பற்றி.அதனை போர் காலத்தில் கூறப்பட்டது என்றே எடுத்துக் கொள்வோம்.
அ) மதம் பரப்ப முஸ்லிம்கள் பிற நாடுகளின் மேல் போர் தொடுக்கலாம்.
சரி/தவறு

ஆ) முஸ்லிம்கள் பிற மதத்தினரோடு போரிட்டு வெற்றி பெற்றால் இறைவன் முஸ்லிம்களை ஆதரிக்கிறார்.
சரி/தவறு

இ) முஸ்லிம்கள் பிற மதத்தினரோடு போரிட்டு தோல்வி அடைந்தால் அவர்கள் உண்மையாக மார்க்கத்தை பின்பற்றவில்லை.
சரி/தவறு

ஈ) முஸ்லிம்கள் ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரிடம் போர் செய்தால் எந்த ப்பிரிவை இறைவன் ஆதரிப்பார்?(எ.கா ஈரான் VS ஈராக்)
முதல் பிரிவு/இரண்டாம் பிரிவு/யாருக்கும் ஆதரவு இல்லை/வெற்றி பெற்றவருக்கு ஆதரவு

உ) ஒரே பிரிவை சேர்ந்த முஸ்லிம் குழுக்கள் சண்டையிட்டால ,அதில் யாருக்கு ஆதரவு?(எ.கா [பாலஸ்தீன விடுதலை இயக்கம் VS ஜோர்டான்])
முதல் பிரிவு/இரண்டாம் பிரிவு/யாருக்கும் ஆதரவு இல்லை/வெற்றி பெற்றவருக்கு ஆதரவு

ஊ) ஒரே பிரிவை சேர்ந்த முஸ்லிம் குழுக்கள் சண்டையிட்டால ,அதில் ஒரு(முதல்) பிரிவு பிற மதத்தினரின் ஆதரவு பெற்று போர் புரிந்தால் யாருக்கு ஆதரவு? (எ.கா [குவைத்‍+சவுதி+அமெரிக்கா) VSஈராக் போர்]
முதல் பிரிவு/இரண்டாம் பிரிவு/யாருக்கும் ஆதரவு இல்லை/வெற்றி பெற்றவருக்கு ஆதரவு

(கேள்விகள் தொடரும்)

saarvaakan said...

//எல்லா மக்களுமா இப்படி காசு விஷயங்களைக் கையாளுகிறார்கள்?! நன்றாகவே மழுப்புகிறீர்கள் ... பரவாயில்லை!//
இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? வட்டி என்பது சுத்தமாக இல்லை என்று நினைக்கிறீர்களா!!!!
படியுங்கள் நம் பதிவை.பிறகு சொல்லுங்கள்

http://saarvaakan.blogspot.com/2011/04/blog-post_25.html

தருமி said...

அ) சரி
ஆ) சரி
இ) சரி
ஈ) வெற்றி பெற்றவருக்கு ஆதரவு
உ) வெற்றி பெற்றவருக்கு ஆதரவு
ஊ) வெற்றி பெற்றவருக்கு ஆதரவு

சீனு said...

//ஃபெரோஸ் ஷா ஏன் அப்படி நடந்தான், அக்பர் ஏன் இப்படி ஏன் நடந்தான், ஷாஜஹான் ஏன் தாஜ்மஹாலைக் கட்டி வீண் விரயம் செய்தான் என்ற கேள்விகளுக்கு அவரகள் குர்ஆனை விளங்க வேண்டிய முறையில் விளங்கவில்லை என்பதே பதிலாக இருக்கும்.//

ஆனா, ஹவுரங்கசீப் ஏன் ஜஸ்யா விதித்தார் என்றால் மட்டும் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களே, ஏன்?

தமிழன் said...

Simple, My brain is still active that is why.

Anna said...

"முறையில் அறிவுரை கூறி திருத்த முயல வேண்டும். இது சரிவராத போது சில நாட்களுக்கு மனைவியோடு சேர்ந்து படுக்காது தனிமைபடுத்த வேண்டும். கணவன் தன்னை படுக்கையிலும் ஒதுக்குகிறான் என்று தெரிந்து அந்த பெண் திருந்த முற்படுவாள். அதிலும் சரி வராமல் திரும்பவும் அதே தவறை மனைவி செய்தால் அவளை அடித்து திருத்த முயற்ச்சிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. கணவனுக்கு கட்டுப்பட்டு தீய நடவடிக்கைகளை விட்டும் தவிர்ந்து கொண்டால் வேறு வழிகளை தேடாமல் அவளோடு வாழ்க்கை நடத்த வேண்டும்."

இது சிறு குழந்தைகளுக்கு அறிவுறையா? அல்லது வளர்ந்த, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலுடைய மனிதருக்கா? (last time I checked I was definitely in the second category, Having said that குழந்தைகளைக் கூட அடித்துத் திருத்துவது சரியல்ல.) நாம் ஒன்றும் சிறு குழந்தைகள் இல்லை இந்த மாதிரி dicipline பண்ணுவதற்கு. சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கத் தெரிந்த adults. திருமணம் ஒரு equal life partnership based on mutual love and respect ஆக இருக்க வேண்டுமே ஒழிய master/slave relationship ஆக இருக்கக் கூடாது.


மனைவியை ஏன் அடித்தாய் என ஒருபோதும் கணவரைக் கடவுள் கேட்கப் போவதும் இல்லையாம்.

"A man will not be asked as to why he beat his wife...( Sunaan Abu Dawud 11.2142 )"

பெண்களை திருத்த படுக்கையிலிருந்து ஒதுக்கச் சொன்ன அதே நபி
"Abu Huraira (Allah be pleased with him) reported that Allah's Apostle (may peace be upon him) said: When a woman spends the night away from the bed of her husband, the angels curse her until morning. This hadith has been narrated through the same chain of transmitters (with a slight variation):" He said: Until she comes back."

இவ்வாறும் கூறியுள்ளார். அதாவது ஆண் கேட்டால் பெண் எப்போது வேண்டுமென்றாலும் போக வேண்டும். இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறேன் உங்கள் angels க்கு வேறு வேலையே இல்லையா? அந்தக்காலத்தில் வேறு வகையில் entertainments பெரிதாக இல்லாததால் இது தான் அவர்களின் பொழுது போக்கோ? marital rape என்று எதுவுமே இருக்காது தானே இப்படியெல்லாம் சட்டமே இருந்தால்.


"முகமது நபியின் காலில் விழ அனுமதி கேட்டபோது 'எந்த மனிதரும் எவரின் காலிலும் விழக் கூடாது' என்ற பொதுவான விதியை அன்றே அமைத்து சென்று விட்டார் முகமது நபி. ஆதாரம் அபூதாவூத் 1828."

யாரையும் யார் காலிலும் விழத்தேவையில்லை என்று சொன்னவர். மேற்கொண்டு, "நான் யாரையும் விழச்சொல்லலாமெனில் மனைவியரைத் தம் கணவர் முன் மண்டியுட வேண்டுமெனக் கட்டளையிடுவேன்" என நபி சொல்லவில்லையா?

தருமி said...

//உங்கள் angels க்கு வேறு வேலையே இல்லையா? //
just a side kick!

suvanappiriyan said...

//யாரையும் யார் காலிலும் விழத்தேவையில்லை என்று சொன்னவர். மேற்கொண்டு, "நான் யாரையும் விழச்சொல்லலாமெனில் மனைவியரைத் தம் கணவர் முன் மண்டியுட வேண்டுமெனக் கட்டளையிடுவேன்" என நபி சொல்லவில்லையா?//-Analyst

இதற்கு காரணம் கணவன் தனது மனைவிக்காக உழைத்து அவளை மனம் கோணாமல் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வதால். இவ்வளவு தியாகம் செய்து குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்றாவது ஒரு பண்டிகைக்கு சிரமத்தினால் புடவை எடுத்து கொடுக்கவில்லை என்றால் 'உங்களை திருமணம் செய்து என்ன சுகத்தை கண்டேன்' என்கிறீர்கள். ஒரு வினாடியில் அவன் செய்த தியாகங்கள் எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறீர்களே! இது நியாயமா!

//ஆனா, ஹவுரங்கசீப் ஏன் ஜஸ்யா விதித்தார் என்றால் மட்டும் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களே, ஏன்?//-Seenu

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

தருமி said...

//இதற்கு காரணம் கணவன் தனது மனைவிக்காக உழைத்து அவளை மனம் கோணாமல் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வதால். இவ்வளவு தியாகம் செய்து குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்றாவது ஒரு பண்டிகைக்கு சிரமத்தினால் புடவை எடுத்து கொடுக்கவில்லை என்றால் 'உங்களை திருமணம் செய்து என்ன சுகத்தை கண்டேன்' என்கிறீர்கள். ஒரு வினாடியில் அவன் செய்த தியாகங்கள் எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறீர்களே! இது நியாயமா! //

இன்னொரு மழுப்பல்! சின்னக் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் ‘பாடம்’ போல் உள்ளது.

தருமி said...

சுவனப்பிரியன்
இந்தியர் பாஸ்போர்ட்கலை நீங்கள் வாங்கி வைத்திருக்கிறீர்களே .. அமெரிக்கர்களிடம் இப்படி பாஸ்போர்ட்களை ‘பிடுங்கி’ வைப்பது இல்லையாமே!

அடிமைகளுள்ளும் இப்படி ஒரு விதிமுறைகளோ?! அது ஏன் அமெரிக்கர் தவர மற்றவர்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்ற நினைப்பே வருவதில்லை உங்களுக்கு. இல்லையா?

அல்லாவே சொல்லியிருக்கிறார். உன் மேலே உள்ளவனிடம் அடங்கியிரு என்று.

சீனு said...

சுவனபிரியன்,

//குர்ஆனையும் நபி மொழியையும் சுட்டிக் காட்டி 'இப்படி இருக்கிறதே' என்று கேட்டால் விளக்கமளிக்கலாம். ஃபெரோஸ் ஷா ஏன் அப்படி நடந்தான், அக்பர் ஏன் இப்படி ஏன் நடந்தான், ஷாஜஹான் ஏன் தாஜ்மஹாலைக் கட்டி வீண் விரயம் செய்தான் என்ற கேள்விகளுக்கு அவரகள் குர்ஆனை விளங்க வேண்டிய முறையில் விளங்கவில்லை என்பதே பதிலாக இருக்கும்.//

நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். "குர்ஆனையும் நபி மொழியையும் சுட்டிக் காட்டி 'இப்படி இருக்கிறதே' என்று கேட்டால் விளக்கமளிக்கலாம்." என்கிறீர்கள். ஆனால், அக்பர், ஃபெரோஸ் ஷா பற்றி கேட்க தேவையில்லை என்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு ஏற்றவாறு ஔரங்கசீபை மட்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்கிறீர்கள். ஏன்? ஔரங்கசீப் உங்களுக்கு சாதகமான ஒன்றை செய்தார் என்பதாலா?

//இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.//

அதெப்படிங்க. உங்களுக்கு சாதகமா இல்லைனா உடனே வரலாற்று ஆசிரியர்கள் தப்பு செய்திருக்கின்றனர் என்று கூசாமல் சொல்ல முடிகிறது? குரான் மட்டுமே 100% perfect என்று 'நம்புவதாலா'? :))

தமிழன் said...

சுவனப்பிரியன், ஜிஸ்யாவைப்பற்றி :-
http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2566&Itemid=64

//Paying Jizyah is a Sign of Kufr and Disgrace

Allah said, (until they pay the Jizyah), if they do not choose to embrace Islam,(with willing submission), in defeat and subservience,
(and feel themselves subdued.), disgraced, humiliated and belittled. Therefore, Muslims are not allowed to honor the people of Dhimmah or elevate them above Muslims, for they are miserable, disgraced and humiliated. Muslim recorded from Abu Hurayrah that the Prophet said,

Jizyah - can be 50% (this is to convert dhimmis to muslim.

suvanappiriyan said...

//இந்தியர் பாஸ்போர்ட்கலை நீங்கள் வாங்கி வைத்திருக்கிறீர்களே .. அமெரிக்கர்களிடம் இப்படி பாஸ்போர்ட்களை ‘பிடுங்கி’ வைப்பது இல்லையாமே!//

என் கம்பெனியில் அமெரிக்கர் யாரும் வேலை செய்யவில்லையே! பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது அடிமையின் அடையாளமா? புதிது புதிதாக என்னென்னமோ சொல்றீங்களே சார்!

//அது ஏன் அமெரிக்கர் தவர மற்றவர்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்ற நினைப்பே வருவதில்லை உங்களுக்கு. இல்லையா?//

சட்டத்துக்கு மதிப்புள்ள இடங்களில் நாமும் சட்டத்தை மதிப்போம். சட்டம் பயன்படாத இடங்களில் சில தாதாக்களிடம் பணம் கொடுத்து காரியத்தை சாதித்து கொள்வோம். அதுபோல் அரபு நாடுகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. சில எலும்புத் துண்டுகளை(சில காண்ட்ராக்ட்களை) தூக்கி எறிந்தால் சவூதி சொல்லும் எந்த வேலையையும் செய்ய அமெரிக்கா காத்துகிடக்கிறது. சிரமமில்லாமல் டாலர்களின் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம். ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டத்தில் அமெரிக்கா தத்தளிக்கிறது. அரபு நாடுகள் பிச்சை போடுவது போல் எலும்புத் துண்டுகளை தூக்கி வீசா விட்டால் அந்த மக்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும். எல்லாம் ஒரு பரிதாபம்தான்.

ஒரு அடியாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அடிமை என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

தருமி said...

//புதிது புதிதாக என்னென்னமோ சொல்றீங்களே //

நிச்சயமா உங்களுக்கு இதெல்லாமே புதுசாத்தான் தெரியும்!!!!

//அமெரிக்கா தத்தளிக்கிறது. அரபு நாடுகள் பிச்சை போடுவது போல் எலும்புத் துண்டுகளை தூக்கி வீசா விட்டால் அந்த மக்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும். எல்லாம் ஒரு பரிதாபம்தான். //

சுவனப்பிரியனுடன் பேசுவது ஒரு இந்தியனுடன் என்று நினைத்துப் பேசினேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் ‘முழுசா’ சவூதிக்காரர்னு இப்ப தெரியுது.

நல்லா இருங்க; உங்க ‘எலும்புத் துண்டு’ தயவில எங்க ஊர் மக்களும் அங்க இருக்காக ... :(

சீனு said...

//நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் ‘முழுசா’ சவூதிக்காரர்னு இப்ப தெரியுது.//

அவரு மட்டும் தானா? எல்லா இஸ்லாமியருக்கும் பொருந்தும்...

தருமி said...

தமிழன் நல்ல மேற்கோள் ஒன்று கொடுத்திருக்கிறார். நன்றி

suvanappiriyan said...

//நல்லா இருங்க; உங்க ‘எலும்புத் துண்டு’ தயவில எங்க ஊர் மக்களும் அங்க இருக்காக ... :(//

இந்தியனான நானும் மற்றும் பிற இந்தியர்களும் நியாயமாக வேலை செய்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் சவுதிகளிடம் இருந்து அமெரிக்கர்கள் பெறும் பணம்(மறைமுக கொள்ளை) இதில் அடங்குமா? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

குடுகுடுப்பை said...

"எவர் (முஸ்லிமல்லாத) உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்ற //
நான் வாழ ஏன் முஸ்லீம்கிட்ட உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும், அதே போல நீங்கள வாழ ஏன் மற்றவனிடம் உடன்படிக்கை செய்யனும். இது என்ன கடன் பத்திரமா?

குடுகுடுப்பை said...

சுவனப்பிரியன் said...
//இந்தியர் பாஸ்போர்ட்கலை நீங்கள் வாங்கி வைத்திருக்கிறீர்களே .. அமெரிக்கர்களிடம் இப்படி பாஸ்போர்ட்களை ‘பிடுங்கி’ வைப்பது இல்லையாமே!//

என் கம்பெனியில் அமெரிக்கர் யாரும் வேலை செய்யவில்லையே! பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது அடிமையின் அடையாளமா? புதிது புதிதாக என்னென்னமோ சொல்றீங்களே சார்!

//அது ஏன் அமெரிக்கர் தவர மற்றவர்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்ற நினைப்பே வருவதில்லை உங்களுக்கு. இல்லையா?//

சட்டத்துக்கு மதிப்புள்ள இடங்களில் நாமும் சட்டத்தை மதிப்போம். சட்டம் பயன்படாத இடங்களில் சில தாதாக்களிடம் பணம் கொடுத்து காரியத்தை சாதித்து கொள்வோம். அதுபோல் அரபு நாடுகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. சில எலும்புத் துண்டுகளை(சில காண்ட்ராக்ட்களை) தூக்கி எறிந்தால் சவூதி சொல்லும் எந்த வேலையையும் செய்ய அமெரிக்கா காத்துகிடக்கிறது. சிரமமில்லாமல் டாலர்களின் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம். ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டத்தில் அமெரிக்கா தத்தளிக்கிறது. அரபு நாடுகள் பிச்சை போடுவது போல் எலும்புத் துண்டுகளை தூக்கி வீசா விட்டால் அந்த மக்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும். எல்லாம் ஒரு பரிதாபம்தான்.

ஒரு அடியாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அடிமை என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.//
நல்லா சிரிச்சேன், தங்களிடமுள்ள பெட்ரோலை கண்டுபிடிக்கக்கூட மேலை நாட்டுக்காரன் இல்லாமல் முடியவில்லை, அங்கே செல்வம் கொட்டிக்கெடக்குறது கண்டுபிடிச்சதே குரான படிக்காத வெள்ளைக்காரந்தான்.

தருமி said...

//இந்தியனான நானும்...//

இப்படிச் சொல்வதற்கு முன்பு //சிரமமில்லாமல் டாலர்களின் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம்.// என்று தன்னிலையில் பேசியதால்தான் நீங்கள் சவுதிக்காரர் என்று நினைத்தேன் என்றேன்.

எது உண்மையோ? பிறந்த மண்ணை விட சம்பாதிக்கும் மண்ணுக்கு நல்ல நன்றியோடு இருக்கிறீர்கள்! நல்லது. நாம் பேச வேண்டியது எவ்வளவோ உள்ளது; இதை விட்டு விடுவோம்.

saarvaakan said...

//ஒரு அடியாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அடிமை என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.//

அமெரிகாவிற்கு எண்ணெய் தேவை.சவுதி அரசருக்கு தன் ஆட்சி நிலைக்க வேண்டும்.அமெரிக்காவின் பாதுகாப்பில் சவுதி அரச குடும்பம் இருக்கிறது என்பதே உண்மை. அமெரிக்காவை எதிர்க்கும் எந்த ஆட்சியாளரும் மத்திய கிழக்கில் ஆள முடியாது என்பதும் உண்மை.சவுதி அரசு தனது அமரிக்க ஆதரவு போக்கை மறைக்கவே த்ன்னை ஒரு மத சார்புள்ள ,மத கோட்பாடுகளை காக்கும் நாடாக காட்டி வருகிறது.மத பிரச்சாரங்களுக்கும் பயிற்சி அளித்து உலகமெங்கும் பரப்புரை செய்கிறது.எண்ணெய் வளம் உள்ளவரை இதுவும் தொடரும். இன்று சவுதி அமெரிக்காவை எதிர்த்தால் ஜனநாயகப் புரட்சி வெடிக்கும். இந்த சவுதி புகழ் பாடும் பரப்புரையாளர்கள், ஒரு அமெரிக்க சவுதி அரசியல் சதுரங்கத்தில் பகடைகாயே .
___________
ஒசாமா பின் லேடன் மரணம்:சில புரிதல்கள்
http://saarvaakan.blogspot.com/2011/05/blog-post_03.html

தருமி said...

//இதை தடுக்கவே கிறித்தவர்களிடமும் யூதர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டாம் என்ற வசனம் இறங்கியது. //

இப்படி ஒரு பதில்! இதுவும் ஒரு மழுப்பல்தான். ஏனெனில் கடவுளின் வசனம் எக்காலத்திற்கும் உரியது. ஆகவே இன்றும் கிறித்தவர்களிடமும் யூதர்களிடமும் இஸ்லாமியர்கள் நட்பு பாராட்டக் கூடாது என்பதுதான் உங்களுக்கு அளிக்கப்பட்ட சட்டம். என்னோடு பேசுவதின் மூலம் அல்லாவின் கட்டளையை மீறுகிறீர்களே என்று எனக்கு வருத்தம் !
:(

at least, சண்டை நடக்கும் இந்த காலத்தில் என்று ஏதாவது ஒரு time-bound order உங்கள் கடவுள் வசனம் இறக்கியிருந்தால் இந்த கேள்வியைத் திரும்ப ... திரும்ப .. கேட்க மாட்டேன்!

Anna said...

"இதற்கு காரணம் கணவன் தனது மனைவிக்காக உழைத்து அவளை மனம் கோணாமல் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வதால். இவ்வளவு தியாகம் செய்து குடும்பத்தை கவனிக்கும் கணவன்..."

தியாகமா? மனைவி ஒன்றும் செய்வதில்லை? எப்போ விடப்போகிறீர்கள் இந்த திருமணம் ஒரு 'charity work'/ பெண்ணுக்கு வாழ்வழிப்பது மாதிரியான கருத்தை! சம்பளம் கொடுக்கும் வேலைக்குப் போகும் பெண்களும் போகாத பெண்களும் வீட்டில் சும்மா இருக்கவில்லை. பிள்ளை வளர்ப்பது/ அதோடு கூடிய மற்றைய வீட்டு வேலைகள் கூட ஒரு முழுநேர வேலை தான். Just because she doesn't get paid for it DOES NOT mean it's worth any less. அதையும் விடப் பல‌ பெண்க‌ள் வெளியில் வேலைக்கும் சென்று பின் வீட்டுக்கு வ‌ந்தும் க‌ண‌வ‌னின் ஒரு உத‌வியுமின்றி அநேகமான வீட்டு வேலையும் கூட செய்வ‌தே ந‌ட‌க்கிற‌து. த‌ய‌வு செய்து stereotyping ஜ (would love to know உலகில் புடவை எடுத்துக் கொடுக்காததால் 'உங்களை திருமணம் செய்து என்ன சுகத்தை கண்டேன்' எனக் கூறும் பெண்களின் சதவீதத்தை)விட்டு உண்மையில் உல‌க‌த்தில் என்ன‌ ந‌ட‌க்குதென‌க் க‌வ‌னித்தால் ந‌ன்றாக‌ இருக்கும்.


"Both women and men play important roles in productive work throughout the world, providing for themselves and their families. But women’s roles are often invisible, as they tend to be more informal in nature, such as self-employment and subsistence production. Even when women and men do perform the same tasks for pay, women are often paid less and receive lower benefits from their work than men in developed as well as developing countries."

Like I said before Marriage should not be a master-slave relationship as portrayed by many of the religions.

அதோடு ம‌ற்றிய‌ ச‌ம‌ய‌ங்க‌ள் எல்லாம் கூட‌ப் பெண்க‌ளை அடிமையாக்கி வைத்திருக்கிற‌து என்ப‌து விவாவ‌த்தைத் திசை திருப்ப‌வே வ‌ழிவ‌குக்கிற‌து. இங்கு யாரும் எந்த‌ ம‌த‌ம் மேலான‌தென‌ வாதாட‌ வ‌ர‌வில்லை. கடவுளைப் பற்றி முதலில் என்னை யோசிக்கவைத்ததே genocide of women in hinduism எனும் புத்தகமே. அதற்காக ம‌ற்றைய‌ ம‌த‌ங்க‌ள் பிழையென்ப‌தால் இஸ்லாம் ச‌ரியென்றாகிவிடாது.

தமிழன் said...

@The Analyst

Read this also - women-in-hinduism

http://agniveer.com/1291/women-in-vedas/

http://agniveer.com/3309/women-in-hinduism/

saarvaakan said...

பெண்ணுக்கு மரியாதை,பாதுகாப்பு கொடுப்பதாக மதவாதிகள் கூறுவதும் ஒருவித ஏமாற்றுவேலையே.ஆணும்,பெண்ணும் சம‌மாக சொத்து, கல்வி, வேலை வாய்ப்பு,திருமணம் முதலியவற்றில் நடத்தப்பட வேண்டும். மத புத்தகத்தில் உள்ள உரிமைகள்(ஒரு வித்மான கொள்கையாக்கம்) மட்டுமே பெண்களுக்கு அளிப்பேன் என்பதே மதவாதிகளின் நிலைப்பாடு.

பெண் ஒரு சொத்தாகவே சமுதாயத்தில் இன்னும் பாவிக்கப் படுகிறாள்.இதனாலேயே ஒரு சாதி/மதத்தை சேர்ந்த பெண் வேறு சாதி/மதத்தில் திருமணம் செய்தால் கவுரவ கொலைகள் செய்தாவது தடுத்தாக வேண்டும் என்ற மனநிலை இன்னும் நிலவுவதை செய்திகளில் அறிகிறோம்.இதில் எல்லா மதத்தவரிடமும் இப்போக்கு காணப்படுகிறது. இதில் என்னுடைய இந்த புத்தகத்தில் பெண்ணை புகழ்ந்து/இகழ்ந்து எழுதியுள்ளது என்பதும் தேவையற்றது.
தனிப்பட்ட வாழக்கையில் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கவும்,சமுகத்தில் பெண்ணுக்கு சம அந்தஸ்து கிடைக்க மத புத்தக்த்தை ஒதுக்கி விட்டு போராட தயாரா என்பதே நியாயமான கேள்வி.
சவுதியில் பெண்களின் உரிமைக்காக போராடும் வஜிதா அல் ஹைதரின் செவ்வி இவ்விணைப்பில் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=8K54OkzXWig

தருமி said...

சார்வாகன்,

நீங்கள் சொன்ன செவ்வி பார்த்தேன். வெளியே சொன்னால் சண்டைக்கு வந்து விடுவார்கள் - ஆனாலும் சொல்கிறேனே. எந்த வயது இஸ்லாமியப் பெண்ணென்றாலும் அவர்களைப் பார்த்ததும் என் மனதில் எழும் பரிதாப நிலையை என்னால் மாற்ற முடியவில்லை. இன்னும் முயற்சிக்கணும்! சின்ன வயதில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கும் விதவைப் பெண்களைப் பார்த்து பாவப்பட்டிருக்கிறேன். இப்போது இது!

இந்த Al-Hurra TV பரவாயில்லையே. ஒரு இஸ்லாமியப் பெண்ணின் குரலை வெளியே காண்பிக்கிறார்களே, நமது விஜய் டிவி மாதிரி இல்லாமல்.

விஜய் டிவியில் ஏதோ நம்மளை மாதிரி ரெண்டு பேர் சேர்ந்து பர்தாவிற்கு எதிர்த்துப் பேசி அதை இஸ்லாமியர் எதிர்த்திருந்தால் கூட பரவாயில்லை. நம்மூர் இஸ்லாமியப் பெண்களின் குரலையே அல்லவா கேட்க முடியாது போயிற்று. எதிர்க்கருத்தே அவர்களுக்கு இருக்கக்கூடாது! இதுவே ஒரு வன்முறைதானே!

Post a Comment