Saturday, August 13, 2011

523. மோட்சம் பார்க்கலாம் ... வாங்க .. வாங்க ..

*

நரேன் பதிவு ஒன்றில் தான் கீழே வரும் அதிசயப் படங்களைப் பார்த்தேன்.  அவரது அப்பதிவில்  வாசிக்க வேண்டியது  நிறைய இருக்கிறது. வாசித்துக் கொள்ளுங்கள். படங்கள் மட்டும் உங்களுக்குக் காண்பிக்க  இங்கே மறுபதிவு செய்கிறேன். காண வேண்டிய காட்சியை எல்லோரும் பார்க்க வேண்டாமா?

***

நான் போட்டிருந்த காணொளிகள் காணாமல் போய் விட்டன. ஆனால் youtubeக்கு சென்று dinakaran on visiting  heaven என்று கேட்டால் அள்ளித் தருகின்றன நிறைய காணொளிகளை. அங்கே சென்று அவைகளை அள்ளிப் பருகலாம்!

https://youtu.be/m-WUBu4iDiY


https://youtu.be/m-WUBu4iDiY


சில directorial mistakes in Dinak's MOVIE !

*** இலக்கணப் பிழைகளை விட்டு விடுவோம்.

*** ரெண்டு apostles பார்த்ததாகச் சொல்கிறார். ஒருவர் பீட்டர்; இரண்டாவது பால். ஆக பால் ஒரு apostle என்கிறார். இது சரியா?

*** பரிசுத்த ஆவியைப் பற்றிய விளக்கம் ஏதுமில்லாமல் வெறும் sound effect மட்டும் கொடுத்திருக்கிறாரே :( அவரை இப்படி உதாசீனம் செய்கிறாரே தினக்!

*** முதல் MOVIE ஒரு நாளிலும் அதற்கு அடுத்த நாள் இரண்டாவது MOVIE  எடுத்திருப்பதாகச்  சொல்கிறார்கள். ஆனால் முந்தின நாள் போட்ட அதே சட்டை, கோட், டை என்று ‘அழுக்காக’ ஏன் உட்காரணும்? Asst. Director அடுத்த costume கொடுக்காமல் விட்டாரே ... A bad continuity. So sad.

***



கிறித்துவ வரலாற்றில் எத்தனையோ புனிதர்கள் - Saints - உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர்கள், அவர்களும் கூட இப்படி மோட்சம் போய் வந்தேன்; நரகம் போய் வந்தேன் என்று இதுவரை ‘கதை விடுவதில்லையே’ ...  இவருக்கு மட்டும் எப்படி இம்புட்டு தைரியம்??!!

தினக் இன்றும் மோட்சம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
முகமது அன்று சுவனம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.

நல்ல நம்பிக்கைகள் ......... வேறென்ன சொல்ல நம்புபவர்களை!
நான் சொல்லவில்லை. Doris Egan என்பவர் சொல்கிறார்: “You talk to God, you're religious. God talks to you, you're psychotic.”
***





great BGM.

நல்ல make-up!! Kudos to the make up man.

ஆயிரக்கணக்கில் மோட்சம் பார்க்க போயிருக்காங்க ... you tube சொல்லுது. ஆனால் நரகத்தைப் பார்க்க வெறும் எட்டாயிரம் சில்லறை! sad ... அங்கேயும் போய்ட்டு ‘திரும்பி’ வாங்க ...

வேற வேற டிபார்ட்மென்ட் நரகத்தில் பார்க்கலாமே ...

***
தினக், ஜாஹீர் நாயக் போன்றோரை ஒரு விஷயத்திற்கு மிகவும் பாராட்ட வேண்டும். என்ன நினைவாற்றல் ... கண்ணை மூடித்திறந்தால் நாலு மேற்கோள்கள் .. அத்தியாயம், வசனம் எல்லாம் எண்களோடு .. பிரம்மாதம்.

தினக்  I love everybody என்கிறார். ஆனால் காருண்யாவில் அடிமிஷன் கேட்பவர்களிடம் அப்படி எதையும் காண்பித்ததில்லை என்பார்களே!

தினக் பயங்கர மூடில் இருக்கிறார்; நிறைய “ஜோக்குகள்” ....

***


9 comments:

naren said...

ஹா..ஹா..நீங்கள் தந்த காணொளியில் அண்ணாச்சி நன்றாகத்தான் வியாபாரம் செய்கிறார்.

தினகரன் 1990 களின் முற்பகுதி வரை, பிரசங்க வியாபாரத்தில் கோலோச்சி வந்தாலும், அவருடைய பிரசங்களில், நான் சொர்க்கம், நரகம் சென்றேன், கடவுள், ஏசு,....etc., பேசினேன், என்ற line க்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நான் பிரசங்கதிற்கு முன் கடவுளிடம் பேசினேன், அவர் இதை பிரசங்கம் செய்ய சொன்னார், என்ற line தான் ஓடும்.

முன்பெல்லாம், சென்னை மெரினா கடற்கரையில் “பேரின்ப பெருவிழாக்கள்” நடைப்பெறும். கடைசி இரண்டு மூன்று நாட்கள் climax ஆக தினகரன் மற்றும் அவர் குடும்பத்தினர் பேசுவார்கள். கூட்டம் அலைமோதும் அதுவே அந்த விழாவின் பெரிய கூட்டம் highlight.

ஆனால், ஒரு 1990 முற்பகுதி வருடத்தில் தினகரன் & co.வால் விழாவிற்கு வரமுடியவில்லை. அதனால் கடைசி நாளன்று கூட்டமே இருக்காது என்று நினைத்தார்கள். அந்த வருடம் john solomon என்பவர் கடைசி நாளன்று பேசினார். ஆச்சிரயத்திலும் ஆச்சரியம் கூட்டம் கட்டு கட்ங்காமல் வந்தது.( இதை 20 வருடம் கழித்தும் john solomon இன்னும் சொல்லிக்கொண்டு பெருமைபட்டு கொண்டிருக்கிறார்). அதேப் போல் அடுத்த அடுத்த வருடங்களில் மற்ற ஊர்களில் நடந்த பேரின்ப பெருவிழா கூட்டங்களில் john solomon பேசிய கடைசி கூட்டங்களில் கூட்டம் ஜே.ஜே.

தினகரனுக்கு பயம் தொற்றி கொண்டது. என்னடா நாம கோலோச்சும் வியாபாரத்தில் போட்டியா? கடை இரண்டானால் வியாபாரம் குறையுமே என்று நினைத்து- 1990 களிலிருந்து நான் சொர்க்கம், நரகம் சென்றேன், கடவுள், ஏசு,....etc., பேசினேன், என்ற line க்கு முக்கியத்துவம் தந்து, இழக்கிற் மாதிரி இருந்த market யை நிலை நிறுத்தினார்.

அது நன்றாக workout ஆக நீங்கள் அளித்த சினிமா கானொளியில் வரை வந்து நிற்கிறது. இந்த மத வியாபாரிகள் எல்லாம் ஏசு மீண்டும் வந்தால் அவரை இரண்டாவது முறை crucify செய்து விடுவார்கள். ஏசப்பா அங்கேயே பத்திரமாக இருங்கள்.

இதில் மனதை தொட்டது, ஜூதாஸ் கதை, உலகத்தில் யார் யாரோக்கோ மன்னிப்பு தந்த ஏசு, தான் செய்த தப்பை உணர்ந்து பிராய்ச்சித்த செய்ய முனைந்த அவருக்கு ஏன் மன்னிப்பு இல்லை. ஏசு எப்படியும் சாகத்தானே வந்தார். அவர் சாவுக்கு ஜூதாஸை கடவுள் ஒரு கருவியாகத்தானே பயன்படுத்திக் கொண்டார்.

முகமதுதான் கடைசி தூதர் என்றால், ஏசு தூதர் அண்ணாச்சியை அவர் தூதராக நியமித்தாரே. agentக்கு agent செல்லாதே.

saarvaakan said...

அய்யா வணக்கம்
இம்மாதிரி விஷயங்களை ஆவணப் படுத்துவதே நல்லது.
1.இம்மாதிரி பல பிரச்சாரகர்கள் சொலவது அந்த மத பிரிவின் புத்தகம், கொள்கையாக்கம்,நடைமுறை போன்றவற்றில் இருந்து வேறுபடும்.அதாவது இத்னை ஒரு விமர்சகர் சொன்னால் இது மதத்தில் இல்லாத விஷயம் ,இத்னை கூறி அவதூறு கற்பிகிறாய் என்பவர்கள் ,அவர்கள் ஆள் கூறும் போது சும்மா இருப்பாது ஏன்?

2.கிறித்தவத்தின் படி இம்மாதிரி செயல் செய்ய முடியுமா?.முன் உதாரணம் உண்டா?.இறையியல் சிக்கல் நிறைந்த ஒரு பிரச்சினை.நியாயத் தீர்ப்பு, மரித்தோர் எழுப்பப் படல் முன் ஒருவர் சொர்க்கத்தில் இருக்க முடியுமா?.அதை ஒருவர் சென்று பர்த்து வர முடிய்மா?

3. சென்றவர் படைப்புகளின் மர்மம,முக்கியமான விஷயம் பற்றி எதுவுமே கேட்காமல் சுற்றுலா போய் வந்தவர் பயணகதை கூறுவது போல் பேசுவது ஏமாற்று வேலை என்பதை உறுதிப் படுத்துகிறது.

4.என் பதிவில் ஒரு ஆவணப் படம் (discovering religions) பதிவிட்டிருக்கிறேன்.அதில் ஆபிரஹாமிய மதங்களின் படைப்பு கொள்கையைஅ நன்கு அறிவியல் பூர்வமாக் விமர்சித்து இருக்கிறார்கள்.பாருங்கள்
http://saarvaakan.blogspot.com/2011/08/discovering-religion-series.html

________
நன்றி

saarvaakan said...

கிறித்தவத்தில் ஒரு பிரிவான பிந்தைய தீர்க்கதரிசிகள் அமைப்பினர்(church of later Day saints) மட்டும் இம்மாதிரி விஷயங்களை நம்புவார்கள்.
எ.கா மர்மான்கள் அமைப்பின் நிறுவனன் ஜான் ஸ்மித் (இவர் கதை பெரியாஆஆஆஆஅ கதை,கதை சொல்லனும்) பிதா குமாரன் இருவரும் அவருக்கு காட்சி தந்ததை கூறி மத பிரிவை ஆரம்பித்தார்

ஜான் ஸ்மித்துக்கு தங்க ஏடுகளால் ஆன ஒரு மத புத்தகம் பைபிளின் இணைப்பு எகிப்தில் இருக்கும் இடம் வெளிப்படத்தப் பட்டது.உடனே எகிப்து சென்று அப்புத்தக்ம் பெற்று அதில் உள்ள பழங்கால் மொழியை மொழி பெயர்க்கும் சக்தி பெற்று புதிய மத புத்தகம் தயாரித்தார்.இவருக்கு பல மனைவிகள்,அமெரிக்க அதிபர் ஆக முயற்சித்தமை உள்நாட்டு போர் என்று பல சர்ச்சைக் குறிய செயல்களில் ஈடுபட்டார்.இவர் மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்.இவரின் வம்சமே தீர்க்க தரிசிகள் வம்சம் ஆகிவிட்டது(ஒரு பதிவிடுவேன்,விவரங்கள் சேகரித்து கொண்டிருக்கிறேன்). அமெரிக்காவில் பிரபல கிறித்தவ பிரிவு ஆகி விட்டது
http://en.wikipedia.org/wiki/Joseph_Smith

**************
இந்த மத பிரச்சாரக்ர்களின் செயல்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது விஷயம் இல்லாமல் இருக்காது.தினகரன் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் இம்மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நோக்கிலேயே இந்த பரப்புரை காணொளி தயாரிக்கப் பட்டு இருக்க வேண்டும்.
*************
பல பிரபல பிரச்சாரகர்கள் ஒரு அளவிற்கு வளர்ந்து விட்ட்டல் தங்களை கடவுள் என்றோ அல்லது மிக பெரிய அந்தஸ்திற்கு உயர்த்த இம்மாதிரி கூறுவது வரலாற்றில் மிக சக்ஜம்.அதற்குள் இறைவனின் திருவடி அடைந்து விட்டார்.எங்கு,எப்படி இருக்கிறாரோ அதை யாராவது சென்று பார்த்து வந்து ஏதாவது நாளை கூறுவார்களா?.நல்ல காமெடி!!!!!!!!!!!
நன்றி

Anonymous said...

/தினக் இன்றும் மோட்சம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.முகமது அன்று சுவனம் போய் வந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.//

இது ஒரு பெரிய விஷயம் என்று பதிவிட்டிருக்கிறீர்களே.

தினகரன் பொய் சொன்னார். முகம்மது நபி(ஸல்) அவர்கள் உண்மையை சொன்னார்.

இது என்ன பிரம்மாதமான விஷயமா?

மற்றபடி உங்கள் பதிவுக்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களிடம் அண்ணாந்து பார்க்காமல் துஆ செய்ய சொல்லுங்கள்.
மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

Gujaal said...

கடவுள் (அல்லது கடவுளின் தூதர்?) ஏன் தினகரனிடம் ஆங்கிலத்தில் பேசினார்? ஒன்று அவருக்குத் தெரிந்த அராமைக், ஹீப்ரு(?) மொழிகளில் பேசியிருக்கலாம். இல்ல இவருக்குத் தெரிந்த தமிழில் பேசியிருக்கலாம். ஏன் இருவருக்கும் தொடர்பில்லாத ஆங்கிலத்தில் பேசணும்?

விசயம் என்னன்னா துட்டு அங்கதான இருக்கு.

Gujaal said...

பிண்ணனி இசை மனதை மயக்கி ஹிப்னாடைஸ் செய்ய உதவுது.

இடையில் வரும் சாமியாட்டங்கள், கண்ணாமூச்சி விளையாட்டுகள் இதைத்தான் நினைவுபடுத்துது.

தருமி said...

/கடவுள் (அல்லது கடவுளின் தூதர்?) ஏன் தினகரனிடம் ஆங்கிலத்தில் பேசினார்? //

அட .. நல்ல கேள்வி.


தினக் ஒரு அமெரிக்கனுடன் பேசியதால் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். உங்களுடன் பேசியிருந்தால் தமிழில்தானே சொல்லியிருப்பார்!!!!

நமக்குத் தெரிய வேண்டியது ‘சாமி’ எம்மொழியில் பேசினார்?!

Anonymous said...

அன்புள்ள தருமி
உங்கள் பதிவை விளம்பரம் செய்ய உபயோகப்படுத்திகொள்வதற்கு மன்னியுங்கள்.


அன்புள்ள மூமீன்களே.

சுவனத்தின் பாதையை எளிதாக்கிக்கொள்ளுங்கள்...

ஹராமான உணவுவகைகளை தவிர்த்துகொள்ளுங்கள்.

எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

Anonymous said...

இஸ்லாம் மகோன்னதமான மதம்தான் இதில் சந்தேகம் என்ன?

ஆனால் சிலவேளைகளில் நமது மூமீன்களே இஸ்லாம் எளிய மார்க்கம் என்றெல்லாம் குழம்பிவிடுகிறார்கள்.
ஆகையால் தாவாப்பணியை எப்படி இஸ்லாம் எளிய மார்க்கம் என்று சொல்லி தாவா செய்யும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டியவை என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

கருத்துக்களை கூறவும்

இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

Post a Comment