Thursday, November 01, 2012

600. ஒரு அவசர அழைப்பு ... என்ன செய்யப் போகிறோம்??




*




*

ஒண்ணுமே புரியலே உலகத்திலே .....

சின்மயி பற்றி எல்லோரும் எழுதி .. நாம அதை வாசிச்சி .. ஒண்ணும் பண்ணாம எல்லோரும் தூங்கியாச்சி. தூக்கத்திலிருந்து எழுப்புறது மாதிரி அடுத்த ஒரு ‘குண்டு’ விழுந்திருக்கு பதிவர்கள் மேல்.

http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece

பாவம் ... சீனிவாசன் அப்டின்னு ஒரு சின்ன பதிவர் .. ட்விட்டரில் வெறும் 16 followers மட்டுமே வச்சிருக்கிற இவரு மகாத்மா கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ஒரு டிவிட் போட்டிருக்கார். கார்த்தி இதைப் பத்தி e-mail-ல் ஒரு பிராது கொடுத்திருக்கிறார். நம்ம சுறுசுறுப்பான CBCID காலங்காத்தால அஞ்சு மணிக்கு இந்த சீனிவாசனைக் கைது செஞ்சிட்டாங்க. சீனிவாசன் பத்திரமாக காவல் துறையின் ‘பாதுகாப்பில்’ இருக்கிறார்.

சீனிவாசன் வேறும் ஒன்றும் செய்யவில்லை... ஒரே ஒரு ட்விட் கொடுத்திருக்கிறார்: ”கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன”.

சீனிவாசன் கெஜ்ரிவாலின் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பில் ஆர்வமுள்ளவர். ’பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் டிவிட்டினேன். இதில் அவமதிப்பு எங்கே என்று தெரியவில்லை’ என்று சொல்லியுள்ளார்.

இச்செய்தியைப் பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

IT Act Section 66-A என்ற இந்தச் சட்டம் பேச்சு சுதந்திரத்திற்குக் கடுமையான தடைகளைத் தருகிறது.

 நாம் எங்கே போகிறோம்?

பதிவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்??

பதிவுகளில் என்ன எழுதினாலும்  சிறைத் தண்டனை என்பது சின்மயி விஷயத்திலும், கார்த்திக் விஷயத்திலும் மேடையேறி விட்டன.

விழிப்போமா?

பி.கு.
உமாசங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசால் தண்டிக்கப்பட்ட போது  ஒரு பதிவில் - http://dharumi.blogspot.in/2010/08/426-just-idea.html - ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்காக 45 பதிவர்கள் உடனே ஒரு பதிவிட்டு - http://dharumi.blogspot.in/2010/08/427.html - தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்கள். அது போல் இப்போது நாம் எல்லோரும் இணைந்து ஒரு நாள் ஒட்டு மொத்தமாக ஒரே பதிவை இட்டு நாம் தூங்கவில்லை என்பதை அரசுக்கு உணர்த்த அழைக்கிறேன். 

அந்தப் பொதுப்பதிவை  வழக்கறிஞர் யாரேனும் ஒருவர் விரைந்து தயாரித்து உதவினால் நலம்


*
 பிற பதிவர்களின் பதிவுகளின் தொடுப்புகள்:

http://avargal-unmaigal.blogspot.com/2012/11/blog-post.html

*

*

72 comments:

பொன் மாலை பொழுது said...

நானும் சற்று முன்புதான் அந்த கலந்துரையாடலை பார்த்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இங்கு வந்தேன் தங்களின் பதிவை படித்தேன். தங்களுக்குள்ள அதே உணர்வுடன்தான் இதை எழுதுகிறேன். திரு. ப்ரனேஷ் ப்ரகாஷ் அவர்கள் இந்த IT Act Section 66-A சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். எப்படியும் இந்த சட்டத்தை தலைமுழுகியாகவே வேண்டும் என்று அவர் கூறியது நினைவில் உள்ளது. நாம் ஏன் அவரையும் இது குறித்து விசாரிக்கூடாது? மேல் கொண்டு என்ன செய்யலாம் என்பதையும் நாம் விவாதிக்கலாமே?

Avargal Unmaigal said...

இந்த விஷயத்தில் நான் உங்கள் ஆதரிக்கிறேன்

வால்பையன் said...

நானும் ஆதரிக்கிறேன்

வால்பையன் said...

கருத்தை கருத்தால் எதிர்க்க தெரியாத கருத்து டாட் காம்! :)

ராஜ நடராஜன் said...

ஆட்டத்துக்கு ஒரு கை குறைவா இருந்த மாதிரி தெரிஞ்சது.பாலோயரை 300 ஆக மாற்றி விட்டேன்.

ராஜன் பதிவுலகில் அறிமுகமானவர் என்பதாலும் போன வாரம் வரை பெயர் தெரியாத சின்மயி பிரபலம்ங்கிறதே இப்பத்தான் தெரியுது.இந்தப் பிரச்சினைக்கும் மேலாக பெயரே அறிமுகமில்லாத சீனிவாசன் என்ற பதிவருக்கு குரல் கொடுப்பது மிக அவசியம்.

ப.சி தேர்தல் தில்லுமுல்லு செய்ததாக எழும்பிய குற்றத்திற்கு யாரை கைது செய்வார்கள்?

சின்மயி குற்றச்சாட்டுக்கும் மேலான தார்மீக குரல் கொடுக்க வேண்டியிருக்கிற்து சீனிவாசனுக்கு.

இந்த பின்னூட்டம் வாயிலாக எனது ஆதரவு சீனிவாசனுக்கு.

பதவி மமதைகளும் அதர்மங்களும் அழியட்டும்.

பட்டிகாட்டான் Jey said...

இந்த விசத்தில் என் ஆதரவும் உண்டு.

குறும்பன் said...

நம்மைப் போல சுதந்திரமாக கருத்து வெளியிட எத்தனையோ பேர் நினைத்திருப்பார்கள், ஆனால் அவர்களுக்குசரியான தளம் கிடைக்காமல் இருந்திருக்கும். எனவே அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் வெளியிடும் வகையில் ஒரு அமைப்பைத் தொடங்கினால் என்ன என்று இருவரும் சேர்ந்துபேசியதன் விளைவாக உருவாகியுள்ளதே, கருத்து அமைப்பு :- கார்த்தி சிதம்பரம் ------ கருத்துன்னு இருந்தா அதை வெளியில் சொல்லனும் ஆனா பிரபலத்துக்கு எதிரா கருத்து சொன்னா சிறைக்கு செல்லவும் தயாரா இருக்கனும் என்று சொல்லாம விட்டுட்டாரே.

வவ்வால் said...

தருமிய்யா,

600வது பதிவு அவசர அழைப்புனு நல்ல ரைமிங்க் இருக்கு, 600 பதிவு இட்டமைக்கு வாழ்த்துக்கள்!

உண்மையில் நீங்கள் எழுப்பிய கேள்விகள் என் மனதையும் குடைந்து கொண்டு தான் இருக்கு, வாயுக்கும், வயுத்துக்கும் நடுவே அல்லாடும் மிடில் கிளாஸ் ஆ போனதை நினைத்து என் முன்னோர்கள் மீது கடுப்பாகவும் வருது(சொத்து சேர்த்து வைக்காம பூட்டாங்களேன்னு தான்)

நீங்க சொல்லுங்க , கூடவே வருகிறேன், ஆனாலும் நம்ம மக்கள் அவங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையேன்னு சூப்பர் சிங்கர் முடிவை ஆராய்ச்சி செஞ்சிட்டு இருப்பாங்க :-))

ராஜ நடராஜன் said...

Subramanian Swamy levels corruption charges against Chidambaram's son

http://in.news.yahoo.com/subramanian-swamy-levels-corruption-charges-against-chidambarams-son-084648016.html

It's a very old news and Mr.Chidambaram's son wants to follow a legal suit, the right person to stand on the ring with boxing gloves is Mr.Subramaniam swamy.

ராஜ நடராஜன் said...

Previous comment of mine is said in a different perspective but intertwined with the following news....

Swamy to the Rescue of Man Who Tweeted Against Karti

http://news.outlookindia.com/items.aspx?artid=779702






Anna said...

That's crazy. Is it possible to do an online petition? However, I am not sure how successful it wil be though!

ப.கந்தசாமி said...

ஆமோதிக்கிறேன்.

சென்னையில் நடந்த பதிவர் மகாநாடு இந்தப் பிரச்சினையைப் பற்றி ஏதாவது சிந்தித்தார்களா?

சார்வாகன் said...

வணக்கம்
அருமை அய்யா,
கருத்து உரிமை பாதுகாப்பு அவசியம். என்று பதிவிடலாம் என அனைவரும் முடிவு செய்தால் இட்டுவிடலாம். நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

shared my gplus.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னுடைய ஆதரவையும் தெரிவிக்கிறேன்....

ADMIN said...

எழுத்தின் வலிமையை இச்சம்பவத்தின் மூலம் உணர்ந்துகொள்கிறேன்.

நாம் எழுதும் கருத்துகளுக்கு அரசியல் வட்டாரத்தில் எவ்வளவு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.


Anonymous said...

நிச்சயமாக மக்கள் ஊடகத்தின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதையே இன்று இந்தியா மட்டுமல்ல, சீனா, ரசியா, இலங்கை, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா என அனைத்து நாடுகளும் செய்கின்றன ..

தமிழ்நாட்டில் ஒரு சாதரண ட்விட் போட்ட சாதரண நபரை கைது செய்யும் அரசு, சாதிய வன்மம் பேசிய பெரும்புள்ளிகள் போட்ட ட்விட்டுக்கு என்னத்தை பிடுங்கியது ... நாம் அனைவரும் மதம், இனம், கருத்து வேற்றுமைகள் கடந்து மக்கள் , மக்கள் கருத்து சுந்ததிரத்துக்காக ஒரே நாளில் பொதுப் பதிவிடும் உங்கள் எண்ணத்தை நானும் வழிமொழிகின்றேன் ... !

விவரங்கள் மற்றும் செயல் திட்டங்களையும் அறியத் தாருங்கள் .. நன்றிகள்

துளசி கோபால் said...

எங்கள் ஆதரவு உங்களுக்கு!

அறுநூறுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

சுட்டபழம் said...

கண்டிப்பாக ஒன்றினைவோம்...

ஆனந்தி.. said...

ஆதரிக்கிறேன்...

//அந்தப் பொதுப்பதிவை வழக்கறிஞர் யாரேனும் ஒருவர் விரைந்து தயாரித்து உதவினால் நலம் //

சு.சாமிக்கு மெயில் தட்டிவிட்டால் என்ன..??!! (பி.கு..முதல் மெயில் ராச நட அனுப்புறதா சொல்லிட்டாரு..:-) )

--

Unknown said...

நானும் ஆதரிக்கிறேன் ,

Avargal Unmaigal said...

பதிவிட்டது போதும் முதலில் விழித்து கொள்ளுங்கள் பதிவாளர்கள் , ட்விட்ர்ஸ், பேஸ்புக் கணக்காளர்களே!
http://avargal-unmaigal.blogspot.com/2012/11/blog-post.html

அஞ்சா சிங்கம் said...

நானும் ஆமோதிக்கிறேன் ..............இப்படி பிரெச்சனை வந்தால் என்ன செய்வது என்று சென்னையில் நடந்த பதிவர் மாநாடு அன்று ஆலோசித்தோம் ஆனால் அதில் அப்போது யாரும் சரியாக அக்கறை காட்டவில்லை .
அன்று ஆட்சபித்தவர்களுக்கு இன்று அதன் தேவை புரிந்திருக்கும் . ஒரே நேரத்தில் பதிவிடலாம் என்று சென்ற வாரம் நான் மதுமதி, பட்டிகாட்டான் , போன்றவர்கள் பெசிகொண்டோம் . நீங்கள் அதை முன்னெடுப்பது மகிழ்ச்சி ..நன்றி ...

காவேரிகணேஷ் said...

மதுரையிலிருந்து ஆரம்பிங்கய்யா..

குழுவாய் செயல்படும் காலம் இது..

R.Puratchimani said...

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்............
இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

சிவக்குமார் said...

கைதுக்கு கண்டனமும் ட்விட்டருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. வெறும் செய்திப் பகிர்வுக்கே சிறையென்றால், சொந்தமாக கருத்துச் சொல்லும் நாம அனைவரும் களி தின்ன வேண்டியதுதான். ஒவ்வொரு வலைப்பூவிலும் இந்திய இறையாண்மை, அவதூறு, புண்படுததியது என கைது செய்யத் தேவையான கருத்துக்களை அவர்கள் கண்டுபிடிக்க முடியும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு பொதுவான கண்டனப்பதிவைத் தயார் செய்யுங்கள்! ஒரே நேரத்தில் பதிவிடுவோம்! அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளுக்கெதிராக இந்த தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் தெளிவாக வரையறுக்கப்படாத 66 ஆம் பிரிவு இருக்கிறது.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரு பொதுவான கண்டனப்பதிவைத் தயார் செய்யுங்கள்! ஒரே நேரத்தில் பதிவிடுவோம்! அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளுக்கெதிராக இந்த தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் தெளிவாக வரையறுக்கப்படாத 66 ஆம் பிரிவு இருக்கிறது.

MaduraiGovindaraj said...

இந்த விஷயத்தில் நான் உங்கள் ஆதரிக்கிறேன்

passerby said...

I dont.

The right to dignity is as good as the right to free expression. Everyone has the right to dignity - you, me and why not KC too?

Kartik Chidambaram fights for his right to dignity. Srinivasan can fight for his free expression.

KC is an aspiring politician, at the early period of his poltical career. A big fat lie like the one Srinivasan put up in a public forum like the Twitter can spoil the reputatiion and dignity of KC. KC should defend it. Best luck to him !

It would have been better if instead of sensational piece in your blog, a well reasoned and analysed piece on this issue had been put up.

சிவானந்தம் said...

இணைய சுதந்திரம் என்பது மனம்போன போக்கில் எழுதுவதற்கல்ல. அதேசமயம் இதை சாக்காக வைத்து கருத்தை நெரிப்பதும் குற்றம். அப்படிப்பட்ட அபத்தம்தான் இந்த சீனிவாசன் கைது செய்யப்பட்டிருப்பது.

பொதுவான கண்டன பதிவை தயாரியுங்கள். ஆதரவு நிச்சயம்.

ஆனால் இதிலாவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். எடுத்தவுடன் கைது என்ற முறையால் தினம் பல அப்பாவிகள் சிறைக்கு போகிறார்கள். ஒரு இன்ஸ்பெக்டர், `நீ தப்பு செய்யலன்னு தெரியும். இருந்தாலும் உன்னை பிடிச்சி பேப்பர்ல நியுஸ் போட்டு மானத்தை வாங்கிடுவேன்` என்று ஒருவரை மிரட்டியே இருக்கார். அந்த கதையும் ஒரு நாள் பதிவாக வரும்.

எனவே இந்த அநியாயத்தையும் முடிவுகட்ட போராட்டம் தேவை.

ஜோதிஜி said...

நீங்கள் எழுதியது சரிதான்

மகாத்மா கார்த்திக்

தருமி said...

//அந்தப் பொதுப்பதிவை வழக்கறிஞர் யாரேனும் ஒருவர் விரைந்து தயாரித்து உதவினால் நலம் //

உதவி செய்ய யாரும் இல்லையா?

Unknown said...

ஆட்டத்தில என்னையும் சேர்த்துக்குங்க தருமி ஐய்யா

R.Puratchimani said...

//தருமி said...
//அந்தப் பொதுப்பதிவை வழக்கறிஞர் யாரேனும் ஒருவர் விரைந்து தயாரித்து உதவினால் நலம் //

உதவி செய்ய யாரும் இல்லையா?//

ஜாதி கணக்கெடுப்புக்கு எதிரா வழக்கு தொடுக்க நானும் வழக்கறிஞர் எண் கேட்டேன் எனக்கும் இதுவரை யாரும் உதவி செய்யவில்லை :((

காசு கொடுத்தாதான் தோசையோ....ஒருவேளை நல்ல வழக்கறிஞர்கள் கண்ணுக்கு நமது பதிவுகள் எட்டவில்லையோ என்னவோ

ராஜ நடராஜன் said...

@passerby! You too have a right to expression and your view of CK to protect his dignity but here starts a social argument process.If your point of CK dignity is right in that case CK should have filed a case very earlier against Mr.Subramanian Swamy and not on Ravi Srinivasan as I have mentioned in my previous comments.

Ravi Srinivasan has expressed his opinion as like you and me.

I think CK should have noted Ravi's 18 followers to file a complaint:)

I can go a little further on political dignity if you would like to shift your argument to our roots of tamil expression and to share the views of others too.

கபீஷ் said...

எனக்கு ட்ராஃப்ட் எழுத தெரியாதனால எழுதி இதான் விசயம்னு சொன்னா நானும் ப்ளாக்ல போட்டுக்கறேன். அதனால ப்ரயோசனம் இருக்குமா இல்லயானு யோசிக்கறத விட என்ன நெனக்கறோம்னு சொல்றது நல்லதுன்னு நெனக்கறேன்

வவ்வால் said...

ராச நட ராசர்,

சு.சுவாமி சும்மாவே ஆடுவார் , கேசு போட்ட கெரகம் எடுத்து ஆடிற மாட்டார், அதான் அவரை பார்த்தால் அரசியல்வாதிங்க கப்சிப்புனு போயிடுறது :-))

அவரே பேட்டி கொடுத்தார் , கேசு போடுறதுன்னா போடட்டும் , அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பின குப்பை கூடையில் போடுவேன்னு சொல்லிட்டார், பத்தாததுக்கு ராகுல் சின்ன பையன் ,வளரனும்னு வேற சொல்லி இருக்கார், ஆனால் ஒன்னும் நடவடிக்கை காணோம்.

இப்போ புதுவை ரவி ஶ்ரீனிவாசனுக்கு துவித்தரில் ஆதரவு பெருகிடுச்சு ஒரே நாளில் 300 பேரு ஃபாலோர் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம். சு.சுவாமி வேற போன் செய்து அவருக்காக வாதாடுறேன்னு சொல்லி இருக்கார்.

இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது.

அனேகமா கா.சி வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வார் என நினைக்கிறேன்.

R.Puratchimani said...

ராஜ நடராஜன் said...
//I think CK should have noted Ravi's 18 followers to file a complaint:) //
oh my god i have only 7 followers which means i am also in danger zone? :(

ராஜ நடராஜன் said...

கபீஷ் நலமா? உங்க கூட்டணியில் இணைய முடியவில்லை.நம்ம குப்பையும் வீட்டு சுத்தமும் இங்கே மட்டுமே.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சு.பி சுவாமி.சு.சுவாமின்னு ஒரே சூ மந்திரக்காளிதான் போடுறீங்க.

ஒரு சின்ன திருத்தம்!வக்கீல் நோட்டிஸ் வந்தா குப்பைத் தொட்டியில் போடுவேன்னு சு.சு சொன்னது 2G வழக்கில் தி.மு.கவிற்கு.

தம்பி ராகுல் இன்னும் வளரனும்ங்கிறது ரஜனி மேல் எந்த குற்றப்பத்திரிகையும் இல்லாததால் அவர் காங்கிரசில் சேரலாம் என்று தமிழக வருகையின் போதே தெரிந்த விசயம்தான்.ஆனாலும் பாருங்க ராகுல் பற்றியெல்லாம் முன்பு பதிவு போட்டும் கூட இந்தியாவின் தலைவிதி குடும்ப ஆட்சியாக மாறும் சாத்தியங்களே உண்டு என்பதை காங்கிரஸ் பெருசுகள் எல்லாம் ராகுல் எப்பொழுது சரின்னு தலையாட்டுவார் என்றே எதிர்பார்க்கின்றனர்.இதில் மவுன்சாமி மன்மோகன் சிங்கும் அடக்கம்.நல்லவேளை பிரதமருக்கு தமிழ் தெரியாது.இல்லாட்டி எப்படி மவுன்சாமின்னு சொல்லப்போகலாம்ன்னு நம்ம மேல கூட கேஸ் பாயும் சாத்தியமிருக்குது.இப்படியே இன்னும் சில வருடங்கள் போனால் வழியில் நடந்து கொண்டிருந்தால் தோ!கேஸ் போகுதுன்னு நேரடி கமெண்டுகள் வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை:)

ராஜ நடராஜன் said...

@புரட்சிமணி!லைம்லைட்டுக்குள் வராமல் இருந்தால்தான் பாதுகாப்புன்னு நானும் நினைச்சுகிட்டிருந்தேன்.ஆனால் அந்த எண்ணத்தை ரவி சீனிவாசனின் கைது மாற்றி விட்டது.

கவலையே படாதீங்க!புரட்சிகள் மெதுவாகத்தான் கிளம்பும்.ஆனால் எப்பொழுதும் நிலைகொள்ளும்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நீங்கள் சொன்னது சரிதான்.நான் ஊர் சுற்றி விட்டு வந்ததால் இப்போதைய புதிய தகவல்களை இப்பொழுதுதான் பார்த்தேன்.

ராகுல் வளரனும்!வக்கீல் நோட்டிஸ் வந்தால் குப்பைத்தொட்டிக்குத்தான் போகும் என்று சு.சு சொன்னதை அடுத்து இப்பொழுது காங்கிரஸ் இறங்கி வந்திருப்பதோடு முடங்கிப்போன நேஷன்ல் ஹெரால்டு பத்திரிகைக்கு 90 கோடி வட்டியில்லாத கடன் தந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

அதென்ன!கோடிக்கணக்கில் கடன் தருபவர்களும்,கொடுப்பவர்களும் வட்டியில்லாமலே கடன் தருகிறார்கள்?

பிரதமரே!பணம் மரத்திலா காய்க்கிறது:)

Unknown said...

என்னுடைய முழு ஆதரவு தங்களுக்கு.... பொதுப்பதிவு தயாரானவுடன் என்னுடைய தளத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்...

R.Puratchimani said...

ராஜ நடராஜன்
//கவலையே படாதீங்க!புரட்சிகள் மெதுவாகத்தான் கிளம்பும்.ஆனால் எப்பொழுதும் நிலைகொள்ளும். //
சரியாக சொன்னீர்கள் நாம் இணைய கருத்து சுதந்திரத்திற்காக புரட்சி செய்ய காலம் வந்துவிட்டது

தமிழ்வாசி பிரகாஷ் said...

விரைவில் பொது பதிவு தயார் செய்யுங்கள் - ஐயா...

settaikkaran said...

சொல்லுங்கள் ஐயா! செய்து விடலாம்!

Jerry Eshananda said...

Appropriate Time to Unite.

Ganpat said...

நண்பர்களே,

எனக்கு தோன்றும் ஒரு யோசனை.
ஒரு குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து (உதா:7th Nov 7pm) ஸ்ரீனிவாசன் செய்த அதே twit ஐ ஒரு அட்சரம் கூட மாறாமல் நாம் அனைவரும் செய்யவேண்டும்.
குறைந்தது ஒரு ஆயிரம் பேர்கள்?
நன்றி.

passerby said...

@ Raja Nadarajan

/Ravi Srinivasan has expressed his opinion as like you and me.
//

It is not an opinion to say CK has amassed wealth illegally more than Gandhi family. It is an accusation, or a canard, or a character assassination, or a slander in public. It is not mere political dignity as well; it is dignity both political and personal.

If I say in my TW that you have raped more women than a hardened criminal arrested for the same crime on record, it is not an opinion I have expressed. It is an accusation, or a character- assassination if the accusation is just a lie only.

Please know that. A few plain qns to u:

Why shd a person write a lie in his TW against another?
If it is not character assassination, what else?
Shd it go unpunished ?
Shd the person affected stomach it all and suffer in silence ?

Subramaniam Swamy levelled a corruption charge in his TW and KC did not go to Police against that. I dont know exactly, but lets assume. If KC doesn't go to court or to police with a complaint that the SS's charge is without basis, made only to slander him in public, and KC goes against Srinivasan's only, then he may be found fault with for being lenient in one case, or harsh in another case while both cases are similar.

Yet, going against Srinivasan and not going against SS, does not dilute the crime of slander made by Srinivasan and vice versa. Court or Police wont ask KC why Srinivasan only? It is not their business.

It is the right of the petitioner to file or not file complaint against anyone he likes.

Tharumi and his ilk are chasing a immoral case to canvass. Freedom of expression in blogosphere shd also have moral limits enough to safeguard dignity of persons. Blogosphere belongs to all. Not to Dharumi and Co.

தருமி said...

ராஜ நடராஜன்

why r u wasting your time to answer or to take note of some 'passerby'. let them pass by. they - passerby and the other person mentioned by him - are so 'good' to be passed over by us.

passerby said...

Thanks for publishing my comments which will stand and be read. But remain unanswered as they are inconvenient.

தருமி said...

passerby,

//...as they are inconvenient.//

yep .. very very inconvenient!

passerby said...

You may just answer me Dharumi instead of evading.

R u fighting for freedom to express lies in public forum ?

R u canvassing support to use TW to spread lies about another person ?

Cant a person have right to defend his dignity ?

KC didn't threaten Srinivasan. He just went to file a complaint with the police only. It is the police which took action in their way.

How do u find fault with a person to seek a legal remedy when he is publicly slandered ?

Doesn't each and every citizen of this country have right to legal remedy?

I am not particular about this case. This case is different from Chinmayi's.

Mine are general questions. Instead of evading these qns, face them and post your replies, wont u?

I can continue with you - one to one. Lets debate.

If u insist on Tamil, I am ready to adopt that language for communication here.

Regards.

Dino LA said...

இந்த விசத்தில் என் ஆதரவும் உண்டு.

தருமி said...

//You may just answer me Dharumi instead of evading.//

:-)

Thekkikattan|தெகா said...

தருமி, இங்கேதான் இருக்கேன். எடுக்கும் முயற்சிகளில் என் பங்கிற்கு நானும் நிற்பேன்.

நீங்க இந்த பதிவை போட்ட அன்றே பார்த்து ப்ளஸில் பகிர்ந்து கொண்டேன்; அவர்கள் உண்மைகள் பதிவுடன்.

ஏதாவது செய்யணும் பாஸ்! குறைந்த பட்சம் மாற்று ஊடகமான, மக்களாலே நடத்தப் பெறும் இந்த இணைய உலகிலாவது பண முதலைகளும், அரசியல் பெருச்சாளிகளின் தலையீடுகளும் இல்லாத ஒரு ஆரோக்கியமான இடமாக எப்பொழுதும் இருக்க வேண்டுமென்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

ப.கந்தசாமி said...


//Cant a person have right to defend his dignity ? //

Everybody in India is equal. But, I (Karthik Chidambaram) am more equal than others?

Thekkikattan|தெகா said...

அச்சச்சோ! யாருக்கோ மனசாட்சி உருத்தி ராவெல்லாம் தூக்கமில்லாம போயிடுச்சாம்ல, கடந்து போறவர் சொன்னது அப்படித்தான் இருக்கு.

இந்த ஊழல் சமூகத்தில “மனசாட்சி’ன்னு ஒரு வஸ்து இன்னும் உசிரோட இருக்கா???

ப.கந்தசாமி said...

தருமி அய்யா, இந்தப் பதிவு போட்டு நான்கு நாளாகிறது. பதிவர்களிடையே என்ன விழிப்புணர்வு வந்திருக்கிறது?

தருமி said...

பழனி.கந்தசாமி அய்யா,

எல்லோரும் இதை ஆதரித்துப் பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றிய ஒரு பதிவுக்கான விஷயங்களைத் தொகுத்துத் தரும்படி வழக்கறிஞர், பத்திரிகையாளர் என்று சிலரை நெருங்கினேன். யாரும் உதவ இதுவரை முன் வரவில்லை.

யாராவது எழுதிக் கொடுத்தாலும் அவர்கள் பெயர்கள் இல்லாமலே கூட பதிவேற்றலாம் என்று முயன்றும் இதுவரை பயனேதுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன் .......

வால்பையன் said...

நண்பர் வட்டாரத்தில் ஒரு வழக்கறீஞரிடம் கேட்டிருக்கிறேன். சைபர் கிரைம் என்பது புதிதாக வந்தது என்பதால் அதை பற்றி விபரங்கள் எடுத்து எழுதி தருகிறேன் என்றூ சொல்லியிருக்கிறார். மேலும் நமது உரிமை என்பது பல சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது அதனால் தெளிவான கட்டுரை எழுத காலதாமதம் ஆகலாம்.
உங்கள் பக்கமும் அதே நடந்திருக்கும் என நினைக்கிறேன்

நாய் நக்ஸ் said...

என் ஆதரவும் உண்டு.......

நம்பள்கி said...
This comment has been removed by the author.
நம்பள்கி said...

A question to passer by. Could you please explain why statement like this warrants arrest by police or the necessity to file a complaint?

Example : டாடாவை விட அம்பானி அதிக சொத்து சேர்த்திருக்காரு என்று சொல்வதில் என்ன தப்பு?

Amassed meaning: gather, accumulated, accumulate, aggregate.

Why it has to be taken in a negative connotation?

ராஜ நடராஜன் said...

ஆதரவோடு பதிவும் போட்டு விட்டேன்.

D. Samuel Lawrence said...

Anyone in public life, even if he is a Minister's son, must be prepared for criticism. He cannot jump in anger and cry for revenge. Arresting a person for making a comment is atrocious. This is nothing but an assault on freedom of expression.

D. Samuel Lawrence said...

Anyone in public life, even if he is a Minister's son, must be prepared for criticism. He cannot jump in anger and cry for revenge. Arresting a person for making a comment is atrocious. This is nothing but an assault on freedom of expression.

ராஜ நடராஜன் said...

@passerby!when I came back here to post a comment I happened to see your comment.If You need a healthy debate let it go.

Would you please define what is an opinion and character assasination?

I think Character assasination motive may happen in Indian politicoshpere but not an ordinary person who express his opinion and passby really:) That's where I stand and expressing my opinion.

If it is a character assasination Mr.subramaniam swamy would not make any rhetoric statements in publicly by saying if any summons comes to him it will go directly to dust bin!Even SS is wrong I once again would like to emphasize CK should have made a statement very earlier or should have filed a complain when SS made his statement.

curruption charges emerging against political bigwigs all over India, there is a pretty chance for anybody in political links to have a source of accumulating.

//It is the right of the petitioner to file or not file complaint against anyone he likes.//

Dont you think your statement sounds wierd by saying dignity?

If Dharumi and ilk are chasing an immoral case to canvass,you too sounds like canvassing for a wrong cause with an ulterior motive.

You are right by saying Blogoshpere blongs to all including Dharumi where he has expressed his opinion continously as days grow.

I am a frog drinking Tamil well water and have not passby of your expression so far.Do you have a lead? Appriciate a link.Thanks

CS. Mohan Kumar said...

சார் தாமதமான பதிவுக்கு மன்னிக்க !வழக்கறிஞர் என்பதால் வெறும் காப்பி பேஸ்ட் மட்டும் இன்றி இது பற்றி கொஞ்சம் எழுத எண்ணினேன் எனவே தான் தாமதம். எனது பதிவு இங்கே

http://veeduthirumbal.blogspot.com/2012/11/it-act-66a.html

தருமி said...

தங்கள் முகவரியை 601 வது பதிவில் இணைத்துள்ளேன். நன்றி

உங்கள் பதிவை ஏற்கெனவே பார்த்தேன். “பரவாயில்லையே ... இரண்டு தைரியமான பதிவர்கள் உங்களுக்கு பின்னூட்டமெல்லாம் போட்டிருக்கிறார்களே ...!” என்று ஒரு பின்னூட்டம் தட்டச்சினேன். பின் அதை எடுத்து விட்டேன்.

:-(

வால்பையன் said...

http://valpaiyan.blogspot.in/2012/11/blog-post_12.html

Post a Comment