*
அரையிறுதி
ப்ரான்ஸ் - பெல்ஜியம் = 2 : 1
இங்கிலாந்து -- க்ரோஷியா 1 : 2
"காலங்கார்த்தால வெளியூர் போகணும் ... வண்டி ஓட்டணும். பேசாம சீக்கிரம் தூங்குங்க .. செமி ..கெமின்னு முழிச்சிக்கிட்டு இருக்க வேணாம்”. மேலிடத்து உத்தரவு ரொம்ப கண்டிப்போடு வந்தது. ரபா நாடல் கால் இறுதி விளையாட்டு கொஞ்சம் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் க்ரோஷியா - இங்கிலாந்து அரையிறுதி போட்டி ஆரம்பமாகப் போகுது. பெரிய இடத்து உத்தரவு வந்தா என்ன தான் பண்ண முடியும். ஆனாலும் டென்னிஸ் & கால்பந்து ரெண்டு சானலையும் போட்டு வச்சிக்கிட்டேன். டிவிய ஆண் பண்ணினா ஒரு சானல்ல டென்னிஸ் ..இன்னொண்ணுல கால்பந்தாட்டம் ரெடி பண்ணிட்டு ரெடியாயிட்டேன்.
கண்ணை மூடிப் படுத்தாச்சு. நம்ம தான் படுத்தால் உடனே ஆப் ஆயிருவோமே.. தூங்கியாச்சி. புதுசா திடீர்னு முழிப்பு வந்துச்சு. டிவிய ஆண் பண்ணினேன். கால்பந்து இன்னும் ஆரம்பிக்கலை. சரின்னு ஸ்வைப் பண்ணினேன். டென்னிஸ் .. ஆளுக்கொண்ணு செட் ஜெயிச்சிருத்தாங்க.. படுத்து கண்ணை மூடினேன். அடுத்து ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போலும். அரை குறையாக முழிச்சிப் பார்த்தேன். டென்னிஸ் முடிஞ்சிருச்சி. கால்பந்து ஏதோ ஒரு சைட் ஒரு கோல் போட்டிருந்தது. மறுபடியும் தூங்கினேன்.
அடுத்து முழித்துப் பார்த்தேன். டிவியில எல்லாம் முடிந்திருந்தது. ரிசல்ட் தெரியலை. கைப்பேசியில் கண்ணாடி போடாமல் தேடி எடுத்தேன். ரபா ஜெயிச்சிருந்தார். மகிழ்ச்சி.
கால்பந்து முடிவு பார்த்தேன். 2:1-ன்னு தெரிந்தது.சரி இங்கிலாந்து ஜெயிச்சிருக்கும்னு நினச்சி படுத்தாச்சு.
காலையில எழுந்திருச்சு புறப்பட்டாச்சு. 120 கிலோ மீட்டர் பளஸ் 120 கிலோ மீட்டர் போய்ட்டு வந்த பிறகுதான் மறுபடி டிவிய திறக்க முடிஞ்சிது. அட .. க்ரோஷியா வெற்றி ... ரொம்ப மகிழ்ச்சி. சின்ன இத்தனூண்டு நாடு. இன்னைக்கி இங்கிலாந்தை ஜெயிச்சாச்சு.
அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணினேன். இங்கிலாந்தும் இத்தனூண்டு சின்ன நாடு. ஆனா எத்தனை எத்தனை நாடுகளைக் காலனியாக்கி ... அடிமையாக்கி... உலகம் பூரா பரவி... தங்கள் மொழியையும் உலக மொழியாக்கி ... அதோட இன்னும் ஒண்ணும் தோணுச்சு. ஒரு வேளை அப்போ அவர்களது reproductive potential ரொம்ப அதிகமாக இருந்திருக்குமோன்னு நினச்சேன்,
மொதல்ல அமெரிக்கா போய் அங்கிருந்தவங்கள பெரும்பான்மையாக அழிச்சிட்டு, அவங்க ஆளுகளை வச்சி நிறச்சிட்டாங்க. .அடுத்து ஆஸ்த்ரேலியா. நியூசிலாந்து ... என்று பல இடங்களுக்குப் போய் புதியதாக தங்கள் வாரிசுகளை வைத்து நிரப்பி உட்டுட்டாங்க. ஏதோ .. நம்ம நாடு கொஞ்சம் பொழச்சிது. கொஞ்சூண்டு மக்களை மட்டும் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆக்கிட்டு உட்டுட்டாங்க. பொழச்சோம்!
இறுதியில் ரபா, செரினா ஜெயிச்சிருவாங்களா?
கால்பந்துல க்ரோஷியா வெல்லுவாங்களா?
பார்க்கணும் .....
*
No comments:
Post a Comment