Monday, July 16, 2018

992. சிறிது பெருமிதத்துடன் ... ஒரு ஆசிரியன் ....

பழசும் புதுசும் ....

கல்லூரியில் முதுகலை விலங்கியல் ஆரம்பித்து அறுபது ஆண்டுகள் முடிந்து, அதற்கான விழா ஒன்று நடந்தது. பழைய மாணவர்கள் பலரும் வந்திருந்தனர், தடங்கல்களால் நான் கல்லூரி செல்ல முடியாததால் பலரைப் பார்க்கும் வாய்ப்பை இழந்தேன். அதேபோல் என்னைப் பார்க்க முடியாததால் நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி, என் வீடு தேடி வந்து என்னை பார்க்க வந்த மாணவர்களைக் கண்டு எனக்கு அத்தனை பெருமை .. மகிழ்ச்சி... வகுப்பில் நான் பயன்படுத்திய பலவற்றை அவர்கள் நினைவிலிருந்து மீட்டு என்னிடம் சொன்னதும், சில மேற்கோள்களைச் சொல்லிக் காட்டியதும் பழையதொரு பொக்கிஷத்தைத் தோண்டி மறுபடி பார்த்த மகிழ்ச்சி எனக்கு.

ஒவ்வொரு ஆசிரியனும் தனது தனிப்பட்ட முத்திரையை தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மீது பதித்து அனுப்ப வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. அதனை நான் கொஞ்சம் செய்திருக்கிறேன் என்று அவர்கள் பேசியவற்றிலிருந்து எனக்குப் புரிந்த போது. அத்தனை பெருமிதம் எனக்கு.

நேரில் வந்து சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்திய என் பழைய மாணவர்களுக்கு என் நன்றியும் ... அதை விட இன்னும் சற்றே அதிகமாக என் அன்பும் உரித்தாகுக.

அன்று தொலைபேசியில் பேசிய மாணவர்களுக்கும் என் அன்பு.




இதைப் பார்த்த ஒரு மாணவனின் மகள் (எனக்கு பேத்தி?) சொன்னது:
பாட்டியைப் பார்த்தாதான் professor மாதிரி இருக்கு!!!





*


4 comments:

Unknown said...

￰என் கண்களிலும் முதுகிலும் உங்கள் தடம் அதிகமாகவே பதிந்து உள்ளது சார்.

Unknown said...

Nice words from a good teacher. We learnt not only ecology but also human values. I always feel proud to be your student.

சிகரம் பாரதி said...

நம் நினைவுகள் எப்போதுமே அழகானவை. அந்தப் பொக்கிஷத்தை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துகள். உங்கள் வலைத்தளத்தில் கூகிள் விளம்பரங்களை இணையுங்கள்.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/

முனைவர். வா.நேரு said...

"ஒவ்வொரு ஆசிரியனும் தனது தனிப்பட்ட முத்திரையை தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மீது பதித்து அனுப்ப வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. அதனை நான் கொஞ்சம் செய்திருக்கிறேன் என்று அவர்கள் பேசியவற்றிலிருந்து எனக்குப் புரிந்த போது. அத்தனை பெருமிதம் எனக்கு."அருமை சார். வாழ்த்துகள்....

Post a Comment