*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12
*
கடவுள் என்றொரு மாயை
==========================================
அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:
=========================================
Chapter 9.
CHILDHOOD, ABUSE AND ESCAPE FROM RELIGION
=========================================
ஒவ்வொரு ஊரிலும் விளக்கேற்றுபவர் ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு ஆசிரியர்.
ஒவ்வொரு ஊரிலும் அந்த விளக்கை அணைக்க ஒருவர் இருப்பார்;
- அவர் ஒரு மதகுரு.
- VICTOR HUGO (349)
*
David i. Kertzer என்பவர் எழுதிய The Kidnapping of Edgardo Mortara என்ற நூலில் கதையுடைத் தலைவனாக வரும் எட்கார்டோ என்ற அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் கத்தோலிக்க கிறித்துவர்களின் மத 'வெறியாட்டத்தில்' நடந்த உண்மைகளை வெளிக்கொணர்கிறார். Spanish Inquisition நடந்த 1850களில் கதை இது. தற்செயலாகக்கூட ஒருவன் தலையில் தண்ணீர் ஊற்றி ஜெபித்துவிட்டால்கூட அவன் "உண்மையான", திருமுழுக்கு (baptism) பெற்றவனாக மாறிவிடுகிறான் என்ற கத்தோலிக்கரின் நம்பிக்கையை முழுவதுமாக எழுதுகிறார்.
பதினான்கே வயதான வேலைக்காரப் பெண்ணால் தலையில் நீரூற்றப்பட்டு திருமுழுக்கு பெற்ற பையனை அரசு அவனது யூதப் பெற்றோர்களிடமிருந்து பிரித்தெடுத்து விடுகிறது. ஏனெனில் அந்த மதக்காரர்களது நம்பிக்கை அத்தனை ஆழமானது. திருமுழுக்கால் கிறித்துவனாவன் கிறித்துவர்களால்தான் வளர்க்கப்பட வேண்டும் என்பது அப்போதைய போப், மதகுருமார்கள், தினசரிகள் என எல்லோரின் நம்பிக்கை. (349 - 354)
*
சிறு குழந்தைகளின் பாலியல் வன்முறை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மதக்கல்வியின் அழுத்தம் இவைகள் பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். (354 - 366)
*
டாக்கின்ஸுடன் வேலைபார்த்த மனோதத்துவர் Nicholas Humphrey ஒரு சொற்பொழிவில் கூறியவைகளில் சில:
தனிமனித சுதந்திரத்தில் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே மற்றவர்களின் - அவர்கள் யாராக இருந்தாலும் - தவறான முடிவுகளைக் கொடுப்பது தவறு. அவர்களது வாழ்க்கையின் நீட்சிகளை அவர்களே முடிவு செய்ய விட வேண்டும். மூட நம்பிக்கைகள் மலிந்த கடவுள் கோட்பாடுகளை அவர்களிடம் விதைத்து, அவர்களுக்கென்று ஒரு குறுகிய ஒற்றைவழிப்பாதையைத் தரக்கூடாது.
குழந்தைகள் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கக் கூடாது. (367)
*
எந்த ஒரு மத எதிர்ப்பாளனும் இப்போதெல்லாம் அமெரிக்காவில் bright என்று அழைக்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு குழந்தையும் ஒரு bright-ஆக மாறுவதற்குரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். (380)
*
குழந்தைகளை கிறித்துவக் குழந்தைகள், இஸ்லாமியக் குழந்தைகள் என்றெல்லாம் அழைப்பது அருவருக்கத் தக்கது. எந்தக் குழந்தையும் கிறித்துவ குழந்தை, முஸ்லீம் குழந்தை என்றல்ல; கிறித்துவ பெற்றோருக்குப் பிறந்த குழ்ந்தை, முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை என்று வேண்டுமானால் அழைக்கப் படலாம். (381)
*
*
*
11 comments:
Sam,
You must see the oscar winning film 'There will be blood' I ll try to send the DVD, if you don't have one
//எந்த ஒரு மத எதிர்ப்பாளனும் இப்போதெல்லாம் அமெரிக்காவில் bright என்று அழைக்கப்படுகிறார்கள்.
எந்த ஒரு குழந்தையும் ஒரு bright-ஆக மாறுவதற்குரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.//
இந்தியாவிலும் அம்மாதிரியான மாற்றம் வர வேண்டும்!
//இந்தியாவிலும் அம்மாதிரியான மாற்றம் வர வேண்டும்!//
Yes, Bright.
வால் பையனுக்கு தருமி ஐயா சொன்னது:
/Yes, Bright./
அதெப்படி? வால் ப்ரைட் என்றால் பொருத்தமாக இருக்குமோ!!
தலைப்பிரட்டைன்னு சொல்றமாதிரி:-))
அவரை நான் bright அப்டின்னா, அது உங்களுக்குப் பிடிக்கலையா ...?!
/அவரை நான் bright அப்டின்னா, அது உங்களுக்குப் பிடிக்கலையா ...?!/
அப்படியில்லை!வால் சேர்த்துச் சொல்லாத எந்தப் பெயருமே அவ்வளவு பிரைட்டாக இல்லைன்னு தான் சொல்றேன். ப்ரைட்டுக்கு முன்னால் வாலை சேர்த்து வால் ப்ரைட்!
வால் is bright !
//வால் சேர்த்துச் சொல்லாத எந்தப் பெயருமே அவ்வளவு பிரைட்டாக இல்லைன்னு தான் சொல்றேன். //
உலகில் 99% உயிரினங்களுக்கு வால் உண்டு!
அவ்வளவு ஏன் விந்தணிவில் மட்டும் வால் இல்லையென்றால் நாமெல்லாம் பிறந்திருக்கவே முடியாது!
வால் அம்புட்டு முக்கியமாக்கும்!
வால் is a BRIGHT !
நான் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நியூஸ் பேப்பரில் படித்தேன் அமெரிக்காவில் இப்போது விதியை நம்பு பவர்கள் 80% பேர் இது ஒரு கருத்து கணிப்பில் சொன்னது .
ngs,
ம்ம்...ம்..
Post a Comment