Tuesday, February 14, 2012

552. நானும் photogrphy-யும் ... 6 & "ஒச்சப்பனும் நானும்"





*
"ஒச்சப்பனும் நானும்"



இரு ஆண்டுகளுக்கு முன்பே ஒச்சப்பன் என்ற பெயரை இணையத்தில் பார்த்தேன். நிழல்படக்காரர். அவரது படங்கள், மதுரையை மிகவும் ரசித்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பாக, ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. வண்ணக் கலவைகளும், படம் சொல்லும் 'கதைகளும்', வாழ்வியல் படங்களும், நம் நாடும், நம் ஊரும், நம் மக்களும் வித விதமாக அவர் படங்களில் தோன்றினார்கள். candid  போட்டோக்கள் நிறைய. pose கொடுக்கும் படங்களில் கூட மக்கள் இயற்கையாக candid-ஆகத்   தோன்றினார்கள். மக்களின் வாழ்வியலோடு படம் எடுப்பது வித்தியாசமாக இருந்தது. 

அவர் படங்களை C & P செய்ய முடியாது. ஆகவே அவரது வலைப்பூவைப் பார்த்து வாருங்கள் ... http://www.oochappan.be/ 

இல்லாவிட்டால் அவரின் சில படங்களை இங்கு பாருங்கள்

http://www.pbase.com/oochappan/image/139709681 

ஒரு நாடகமே அல்லவா இங்கே நடக்கிறது. அதில் நாமும் நடிகர்களாக இருப்பதுபோல் தோன்றுகிறது!



http://www.pbase.com/oochappan/image/139709678 

சிகப்பு-மஞ்சள் குவியலுக்குள் ...

 நடுவில் அந்த எவர்சில்வர் பாத்திரம் கண்ணைச் சிமிட்டுகிறதே....

http://www.pbase.com/oochappan/image/131985122   
நவ ரசங்கள் ...

http://www.pbase.com/oochappan/image/140769267 

இப்படத்தை எடுத்த நிமிடம்:  ஒச்சப்பனோடு நானும் ரவியும் சேர்ந்து ஒரு சின்ன சந்தில் சென்று கொண்டிருந்தோம். ஒரு பள்ளியின் பின்பக்க தகரக் கதவு  ஒன்றின் வழியே ஒரு சின்னப் பெண் வெளியே இருந்த கடைக்காரரிடம் ஏதோ தின்பண்டம் வாங்கிக் கொண்டிருந்தாள். நானும் ரவியும் உடனே எங்கள் manual modeல் இருந்த எங்கள் பெட்டிகளைத் தூக்கி, என்ன diaphragm .. shutter .. என்று யோசித்து வைப்பதற்குள் பாப்பா காணாமல் போய்விட்டது. ஆனால், ஒச்சப்பன் அந்தப் படத்தை ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார்.



இதுபோல் இடங்களில் பொட்டியை auto mode-ல் அல்லது  program mode-ல் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்த வினாடியும் வீணாக்காது ஒரு படத்தை உடனே எடுக்க முடியும் என்றார்
.

http://www.pbase.com/oochappan/image/133248700
எங்கிருந்தோ வரும் 'தேவனுடைய ஒளிக்கதிர்கள்' மாதிரி இல்லை ...?!



சரி ... யாரோ நம்மூர்க்காரர் இப்போது வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தன் நகரத்தின் அழகுகளைப் படம் பிடிக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இன்னொரு நிழல்பட நண்பன் இவரைப் பற்றிய முன்னுரை கொடுத்து, இப்போது மதுரையில், அதுவும் எங்கள் கல்லூரிக்குப் பக்கத்திலேயே தங்கி இருக்கிறார் என்றான். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்; ஒச்சப்பன் என்பது அவரது புனைப்பெயர்; மதுரைக்குத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருகிறார் என்பது போன்ற செய்திகள் கிடைத்தன.

யாதும் ஊரே ....
யாவரும் கேளிர்

மயிலில் தொடர்பு கொண்டேன். வரச் சொல்லியிருந்தார்.   முதல் முறை மதுரை வந்த போது கோடை செல்லும் பேருந்தில் அருகிலிருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி பிழைக்கும் சாதாரண மனிதர். அவரின் பெயர் ஒச்சப்பன். அவரோடு நெருக்கமாகி, அவரது பெயரையே தனக்குப் புனைப்பெயராக வைத்துக் கொண்டுள்ளார். இன்றும் வரும் ஒவ்வொரு ஆண்டும் அவரைச் சந்தித்து நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


அடுத்த நாள் மதுரையில், தங்கியிருக்குமிடத்திற்கருகில் படம் எடுக்கலாம் என்றார். அடுத்த நாள் நானும் பொட்டியோடு சென்றேன். நண்பன் ரவியும் என்னோடு சேர்ந்து கொண்டான். மூவரும் ஆளுக்கொரு பொட்டியோடு கரிமேட்டு சந்தை, பக்கத்திலுள்ள கடைகள், சந்து பொந்துகள் என்று சென்று வந்தோம். (அந்தப் படங்கள் பின்னால் அடுத்த பதிவுகளில் வரும்.)


நாம் பொட்டியோடு போனால் விரட்டியடிக்கும் நம்மூர் மக்கள் இவரோடு போனால் இன்முகத்தோடு ஒத்துழைத்தார்கள். படமெடுக்கத் தடையேதுமில்லை.

HOME WORK செஞ்சிட்டியா ...?

அடுத்த நாள் பக்கத்து கிராமங்கள் சிலவற்றிற்குச் செல்ல ஏற்பாடானது. அன்று காலையிலேயே புறப்பட்டு சில கிராமங்களுக்குச் சென்றேன். எனக்கு அவைகள் புது இடமாக இருந்தன. ஆனால் ஒச்சப்பனுக்கு எல்லாம் மிகப் பழகிய இடங்கள். இடங்கள் மட்டுமல்ல .. அங்குள்ள மக்களுக்கு அவர் மிகவும் தெரிந்தவராக, நண்பராக இருந்தார்.


கீழக்குயில் குடி என்ற ஊரில் ஏறத்தாழ முழு கிராமமுமே அவருக்கு மிகவும் பழகிப் போயிருந்தது. ஒவ்வொரு சந்தும் அவருக்குப் பழகிப் போயிருந்தன. மக்களிடம் அவரது மழலைத் தமிழுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.


படம் எடுக்கும்போது சில பாடங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு எப்போதும் profiles எடுப்பது பிடிக்கும். ஆனால் வெறும் முகம் மட்டும் இருந்தால் அது 'கதை ஏதும் சொல்லாது'; அந்தப் படங்களோடு பின்னணி போன்று ஏதாவது இருக்க வேண்டுமென்றார். முந்திய நாள் படம எடுக்கும்போதுகூட அதே போல் சில clues  கொடுத்தார். தலைக்கு மேல் பொட்டியைத் தூக்கி வைத்து படங்களை எடுப்பது journalists' style என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியில்லை என்றார். நானும் ஒரு சில படங்களை அது போல் எடுத்தேன். எடுத்தவைகளில் ஒரு படம நன்கு வந்திருப்பதாகச் சொன்னார்.


அவர் சொன்னவை போல் எடுத்த படங்களைப் பின்னால் அடுத்த பதிவில் சேர்க்க எண்ணியுள்ளேன்.

CONTEMPORARIES



வட கிடச்சிருச்சே ..!

*
படங்களை எடுத்த பின் இன்னொரு நாள் post production session. அப்போது தான் ஒச்சப்பனின் magic புரிந்தது. ஒவ்வொரு படத்திற்கும் வெகுநேரம் எடுத்து அவைகளைச் சீர்படுத்துகிறார். அவர் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள என் மூளை மிகவும் மறுத்து அட்டகாசம் செய்தது. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இனி பயிற்சியில் அவைகளை வளர்க்க வேண்டுமாம் ..
(கடவுளே...! நமக்கு எந்தக் கலையும் களவு படாது என்று அந்தக் கடவுளே என் தலையில் எழுதிட்டார் போலும்!!) ஒவ்வொரு சின்ன மாற்றங்களையும் மிக உன்னிப்பாகப் பார்த்து சீர் செய்கிறார். ஏற்படும் அந்தச் சின்ன மாற்றங்களை மிக உன்னிப்பாகப் பார்த்தால் தான் எனக்கு வித்தியாசமே புரிந்தது. .... பழகணும் :(


டீக்கடை with flash ...
ஒரு டீக்கடை. எங்களுக்காக டீ போட்டார். ஒரு படம் எடுத்திரலாமேன்னு ரெண்டு மூணு முயற்சித்தேன். கடையின் உட்பகுதி மிகவும் இருட்டாகப் போச்சு. சரின்னு ஒரு flash போட்டு ஒரு படம் எடுத்தேன். வெளிச்சம் வந்ததும் ஒச்சப்பன் என்னைப் பார்த்தார். அவருக்கு அது பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்து படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். flash பிடிக்காதோ என்றேன். ஆமாம் என்றார்.
ஆனால் படங்களை வரிசையாகப் பார்த்தவர் இந்தப் படத்தைப் பார்த்து, உள்ளே கையில் இலையோடுஉட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்ததும் அந்த சின்ன மாற்றத்திற்காக இந்தப் படத்தையும் போனால் போகுதென்று 'நல்ல படங்கள்' என்று எடுத்துப் போட்ட என் folder-ல் சேர்த்துக் கொண்டார்.

*
அம்மாடி ...HEAVIEST smoker!!!

12 comments:

பதி said...

ஆஹா.. ஒச்சப்பன் சொல்லிக் கொடுத்த அந்த படங்களைத் திருந்தும் நுணுக்கங்களையும் பகிர்ந்துக்கலாமே?

நம்ம ஊர்ப் பக்கங்களை நண்பர்களுக்கு காட்ட வேண்டுமெனில் இவருடைய படங்களைத் தான் உபயோகிப்பேன். என்னைப் போன்றவர்களுக்கு Point and shoot camera வச்சே ஏதோ பார்க்கும் படியான படங்களை எடுக்க, இவரும் ஒரு கிரியா ஊக்கி :)

பகிர்தலுக்கு நன்றி ஐயா !!!

Gurusamy Thangavel said...

நான் ஒச்சப்பனை இணையம் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கீழக்குயில்குடி கிராமம் தான் காவல்கோட்டம் நாவலில் வரும் தாதனூர்.

தருமி said...

Naufal சொன்னது ....

அவருடன் படமெடுக்க சென்ற அதிர்ஷ்டசாலிகளில் நீங்ககளும் ஒருவரா? அவரோட மிகப்பெரிய விசிறி நான். ஊருக்கு வரும்போது அவர் போல் படமெடுக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறேன். அவரோட தமிழ்நாட்டுப்பற்று அவரை இன்னும் கூடுதல் நேசிக்க செய்கிறது.

ராமலக்ஷ்மி said...

ஒச்சப்பன் அவர்களைப் பற்றி நீங்கள் முன்னர் தந்திருந்த சுட்டி மூலமாகவே அறிய வந்தேன். பிரமிக்க வைக்கும் படங்கள்.

பெயர்க் காரணம் சுவாரஸ்யம்.

/நாம் பொட்டியோடு போனால் விரட்டியடிக்கும் நம்மூர் மக்கள் இவரோடு போனால் இன்முகத்தோடு ஒத்துழைத்தார்கள். படமெடுக்கத் தடையேதுமில்லை./

அது சரி:)!

/ ஒவ்வொரு படத்திற்கும் வெகுநேரம் எடுத்து அவைகளைச் சீர்படுத்துகிறார்./

எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாதாயினும், எனக்கும் இப்பழக்கம் உண்டு:)!

பகிர்வுக்கு நன்றி. தொடரக் காத்திருக்கிறோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அனுபவம் ..

\\நாம் பொட்டியோடு போனால் விரட்டியடிக்கும் நம்மூர் மக்கள் இவரோடு போனால் இன்முகத்தோடு ஒத்துழைத்தார்கள். படமெடுக்கத் தடையேதுமில்லை.//
அவ்வளவு நம்பிக்கை பாருங்க..

சித்திரவீதிக்காரன் said...

ஒச்சப்பன் மிகவும் அற்புதமான மனிதராக இருக்கிறார். படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. மேலும் எடுத்த படங்களைப் பார்க்க அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

அருமையான படங்கள் ஐயா. நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்க்க வியப்பாக இருக்கின்றன. நீங்கள் சொல்லாவிட்டால் வழக்கம் போல் மேலோட்டமாகப் படங்களைப் பார்த்துவிட்டு அது சொல்லும் கதைகளைக் கவனிக்காமல் விட்டுவிடுவேன். நன்றி.

வரவனையான் said...

வாத்தியார் அய்யா ! ஒச்சப்பன் சிறுமலையை பனொரொமா எபெஃட்ல ஒரு படம் எடுத்துருப்பாரு இனியும் அப்படி ஒரு படம் எடுக்க முடியாது !

( ஆள் ஜம்ன்னு இருக்கிங்க டிபி’ல :) டை அடிச்சா ஒரு 40 வயசு சொல்லலாம்
)

தருமி said...

வரவனை,என்னய்யா இப்படி ஆள் காணாம போய்ட்டீங்க .. எப்படி எழுதுற ஆளு... சோகம் தான். வந்தமைக்கு நன்றி. நீங்க சொன்ன போட்டோவை நான் பார்த்ததில்லையே. தொடுப்பிருந்தால் கொடுங்கள்.என் வயசு பத்தி ஏதோ சொல்லிட்டீங்களே... 5 வயசு கூடப் போட்டுட்டீங்களே .. ;(

வரவனையான் said...

http://www.flickr.com/photos/murali-art/3039976896/

ஒரு வழியாய் கண்டுபிடித்தேன் ஆனால் இது ஒச்சப்பன் அவர்களினது இல்லை முரளி என்கிற கலைஞரது. ஒச்சப்பனின் ஒவ்வொரு படங்களுக்குள் ஒரு வாழ்க்கை இருப்பதையும் உணர்ந்தேன்

தருமி said...

வரவனை,நல்லதொரு தொகுப்பு கொடுத்துள்ளீர்கள்.நுட்பம் நிறைந்த படங்கள். ஒச்சப்பன் பற்றி நீங்கள் கூறியது மிகச் சரி.

தருமி said...

இது ஒச்சப்பனின் புகைப்படத் தொகுப்பில் நம்மூர் படங்களுக்கு அவர் கொடுத்த முன்னுரை:

INDIA

Did you ever have a feeling that you went to a total strange place and you felt yourself straight away at home ?
That place is called Tamil Nadu that I visited first in 1987 and from since I go back there every year.
Learning the Tamil language a bit helped me to discover the essence of this beautiful culture. Returning to Tamil Nadu, even after visiting friends in the North, feels always like coming home.

In 1994 I met Ochappan, a poor Tamil tricyle-man. He inspired me to use the derived name oochappan to spot his world out looking over his shoulders.
Enjoy Tamil Nadu, the colors for joy,
what comes from there, goes back there,
your reflections are most welcome. oochappan

Post a Comment