Wednesday, February 29, 2012

554. செளதியும் அடிப்படைவாதிகளும் ...

Unveiled: As elsewhere in the Arab world,
the expansion in communication tools has deprived 

the Saudi regime of
the secrecy and deception its legitimacy relied.

*
சில ஆண்டுகளுக்கு முன் செளதியில் வேலை பார்த்து பின் கனடாவிற்குக் குடியேறிய பதிவர் செளதியைப் பற்றிக் குறையாக பதிவுகள் எழுதிய போது வழக்கம் போலவே இஸ்லாமியப் பதிவர்கள் அவர் எழுதியதை  வெறுத்தார்கள்; எழுதியதை மறுத்தார்கள். அந்த நாட்டில் இன்னும் அடிமைத்தனம் மாறவில்லை; இன்னும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்கிறார்கள் என்று நான் சமீபத்தில் எழுதிய போது, நம்மவர்கள் ஏமாற்றுவதால் தானே அதனை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்திய பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளும் செளதிகளுக்கு நம்பிக்கையான பதிவர் சுவனப்பிரியன் சொன்னார். அமெரிக்கா போன்ற மற்ற நாட்டுக்காரர்களுக்கு இல்லாத இந்தச் சூழல் இந்தியர்களுக்கு மட்டும் ஏன் என்றும் அந்தப் பதிவர் சிந்திக்க மறுத்தார். அதையும் விட அவர் இஸ்லாமிய நாடுகளில் செளதியே இஸ்லாமியக் கொள்கைகளை முழுமையாகக் கையாளும் நல்ல அரசு; நாட்டை நன்கு ஆள்கிறது என்றார். நானும் இதையெல்லாம் கேட்டு அங்கு 'பாலும் தேனும் ஓடும்' என்றுதான் நினைத்தேன். ஆனால், அங்கு வேலை பார்த்த சில நண்பர்களிடம் கேட்ட போது வேறு கருத்துக்களே கிடைத்தன. மற்றவர்களுக்கு நரகம் என்பது இவர்களுக்கு சுவனமாகப் படுகிறது! (இந்த இடத்தில் வழக்கமாகப் பதிவர்கள் கேட்கும் கேள்வியை நானே கேட்டு விடுகிறேன்: நரகம் என்று நினைப்பவர்கள் ஏன் எங்கள் செளதியில் வந்து வேலை பார்க்க வேண்டும்?!!) என் மதத்துக்காரர்கள் என்பதாலோ, எனக்கு வேலை கொடுத்ததாலோ இப்படி சிலருக்கு அந்த நாட்டின் மீது பயபக்தியும், விசுவாசமும் வந்து விடுமோ என்னவோ?! 58 வயதில் இறக்கும் செளதி அரச குடும்பத்தவரைப் பற்றி எழுதும்போது கூட அதை ஒரு 'அகால மரணம்' என்று சொல்லுமளவிற்கு உள்ள பாசத்தினால் மட்டும் சிலருக்கு செளதியில் பாலும் தேனும் ஓடுகிறது என்று தோன்றுமோ?அதோடு அவரைப் போன்ற அடிப்படைவாதிகள் எப்போதும் தங்கள் மார்க்கம் பற்றி சில வழக்கமான cliche சொல்வார்களே அது போல்தான் இதுவும் என்பது இன்று இந்துவில் வந்த ஒரு கட்டுரையை வாசித்த போதுதான் புரிந்தது.

கட்டுரையின் தலைப்பு: Awaiting its spring. தலைப்பு புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்போது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டங்களின் ஆரம்பமான எகிப்திய போராட்டத்திற்கு வைத்த பெயர்தானே spring! இதைப் போன்ற இன்னொரு spring செளதியில் நடக்கும் என்று ஒரு இஸ்லாமியர், Movement for Islamic Reform in Arabia என்ற அமைப்பின் தலைவர் Dr. Saad al-Faqih எழுதியுள்ளார். யார் பொய் சொல்லுகிறார்கள்; நம் பதிவர்களா, இல்லை இவரா?

அவர் சொல்லும் சில கருத்துகள்:

* "கடைசி மதக்குருவின் குடலை எடுத்து, கடைசி அரசனின் குரல் வளையைக் கட்டி ..  முடித்து விடுங்கள்". - Denis Diderot என்ற தத்துவ ஞானியின் கூற்று. இப்போது செளதி அரேபியா என்றழைக்கப்படும் அரேபியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இப்போது அங்கு அடிக்கடி கேட்கும் குரல் இது.

* அரேபிய போராட்டங்களுக்கான வித்து இங்கேயும் உண்டு.

* தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் இல்லாமலேயே லட்சக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில்.

* ஊழல் மிகப் பெருமளவில் நடக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் 100 பில்லியன் டாலருக்கு கணக்கேதும் இல்லை.

* வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகம்.

* சராசரி மாத வருமானம் - எண்ணெய் பணம் குவிந்தாலும் - வெறும் 820 பவுண்டு.

* 22 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். ( ஆனால் நம் பதிவர்கள் சிலர் நம் நாட்டு மக்கள் மட்டுமே ஊழல்காரர்கள்; மக்கள் ஏழ்மையில் உழலுகிறார்கள்; எங்கே சிறுநீர் பெய்வது என்றுகூடத் தெரியாத மாக்கள் என்கிறார்கள்!)

* தகவல் தொடர்பு அதிகரித்துள்ளதால் அரசின் மீதான கசப்பு நாடெங்கும் விரைவாகப் பரவுகிறது.

* @mujtahidd என்ற டிவிட்டருக்கு 2,20,000 followers. இந்த டிவிட்டர் மூலம்  அரசரைப் பற்றியும், மற்ற அரசக் குடும்பத்தினைரைப் பற்றியுமான சரியான பல தகவல்கள் பரப்பப்படுகின்றன. கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இவை இப்போது அந்த நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு டிவிட்டர்.

* இந்த அழிவுகளிலிருந்து மீள வேண்டும் என்ற ஆவல் மதக் காவலர்களின் மத்தியில் தான் அதிகமாகத் தென்படுகிறது. (நம் பதிவர்களைவிடவும் அவர்கள் பெரிய அடிப்படைவாதிகளா ... என்ன?)

* ஷியாவின் போராட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால் அரசு இவைகள் ஷியாவின் போராட்டங்கள் என்று பெரும்பான்மையான சன்னிகளிடம் சொல்லி சமாளிக்கிறார்கள்.

* இரு பாலருமே அடிப்படை உரிமைகள் ஏதுமின்று இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே அது மேற்கத்தியக் கலாச்சாரம் என்று கூறப்படுகிறது.

* அரசு கட்டாயம் மாறும். அதற்கான போராட்டங்கள் கட்டாயம் வரும் என்றாலும், ஊடகத்தில் பரப்பப்படும் அச்சுறுத்தல்கள் இதனைச் சிறிது தள்ளி  வைத்துள்ளன.

* எதிர்ப்பாளர்களுக்குள் நிலவும் நம்பிக்கையின்மையினால் ஒத்த முனைப்பு ஏற்படவில்லை.

* ஆனால் நிச்சயம் எதிர்ப்பு வளரும். இளவரசர் Nayef மீது மரியாதை மிகக் குறைந்து போய்விட்டது. ஆனாலும், (நமது பதிவர்கள் அரச குடும்பத்தினர் மீது புகழை வாரி வழங்குவதுண்டே! More loyal than the king!!??)

* இளவரசர் மீது வழக்குகள் தொடுத்து அவரைக் கூண்டில் ஏற்ற வேண்டுமென்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* 90 வயதாகும் அரசரின் மரணத்திற்குப் பின் இளவரசர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமடையும்.

* மத குருமார்கள் அரசக் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

* நிச்சயம் போராட்டம் வெடித்தே தீரும் - சரியான தருணத்திற்காகவே அது காத்திருக்கிறது.



பி.கு.:
தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு ஓட்டு போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!













.

48 comments:

ப.கந்தசாமி said...

பரிதாபத்திற்குரிய நிலை.

கோவி.கண்ணன் said...

:)
100 % அல்லாவின் ஆட்சி அமலில் இருக்கும் நாட்டிலா இப்படி ?

மற்ற (இஸ்லாமிய) நாடுகளைப் பார்த்து சவுதியும் இஸ்லாமிய ஆட்சியில் இருந்து பிறழ்கிறது என்று சொல்லுவார்களோ.

இல்லாவிடில் சவுதியின் மீதான பொறாமையால் மேற்கத்திய ஊடகங்கள் கிளப்பிவிடும் பொய்த்தகவல் என்பார்களோ.

கோவி.கண்ணன் said...

//தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு ஓட்டு போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!//

தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு உங்கள் பல்வேறு கள்ள ஐடிகளின் கள்ள ஓட்டுகளை போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!

என்று இருக்க வேண்டுமோ.

ஒசை said...

மாற்றம் ஒன்று தானே மாறாதது. நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்த பொருட்களுடன் வாழ ஆசைப்படுபவர்கள் - மக்கள் மட்டும் ஆயிரமாண்டு பழமையான ஆட்டுமந்தை கூட்டம் போல வாழ வேண்டும் என்று எதிர்பார்த்தால் நியாயமா? ஜனநாயகம் எனும் அருமருந்து காலத்தின் தேவை. சவூதி மக்களுக்கு மட்டும் கிடைக்காமல் போகுமா என்ன.

ஒசை said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு உங்கள் பல்வேறு கள்ள ஐடிகளின் கள்ள ஓட்டுகளை போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!//

கழிவறை பதிவுக்கு முதல் ஓட்டாக போட்டு மகுடம் ஏற ஆசைப்பட்டீர்களே! அப்போ அதுவும் கள்ள ஓட்டா! ஒன்று தெரியுமா? முந்தய பல பதிவுகளுக்கு எனது பதிவுக்கு நானே ஓட்டு போட்டதில்லை. ஓட்டு போடுங்கள் என்று யாரிடம் சொல்வதும் இல்லை.

திரு தருமி!

//நிச்சயம் போராட்டம் வெடித்தே தீரும் - சரியான தருணத்திற்காகவே அது காத்திருக்கிறது.//

உங்கள் ஆசை நிறைவேறப் போவதில்லை. ஏனெனில் எகிப்து, டுனீஷியா, லிபியா,ஈராக் போன்ற நாட்டு தலைவர்களெல்லாம் இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியை நடத்தி வந்தனர். எனவே அந்த மக்களால் தண்டிக்கப்பட்டனர். சவுதி நிலைமை வேறு. இங்கு இருக்கும் பூசல் சொற்பமான ஒரு சில ஷியாக்களால் உண்டாக்கப்படுவது. அதை எப்படி சமாளிப்பது என்பது சவுதி அரசுக்கும் தெரியும்.

மிகப்பரந்த செல்வம் கொழிக்கும் நாட்டில் சில மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே செய்யும். அதையும் சரி செய்வார்கள் ஆட்சியாளர்கள்.

எனவே பழையபடி ஹூருல்ஈன்கள், கில்மான்கள் என்ற பல்லவியை ஆரம்பிக்கவும். ஆட்சி மாறும் கனவு பலிக்காது.

Ganesan said...

சவுதியின் என்ன ஒரு அருமையான நாடு என்பதற்கு மற்றொரு உதாரணம்.

http://abcnews.go.com/blogs/headlines/2012/02/saudi-blogger-heads-home-to-possible-death-sentence/

இத்தனைக்கும் இந்த மனிதர் முகமதை இழிவாய் ஒன்றும் சொல்லவில்லை. உன்னை நண்பனை மட்டுமே பார்க்கிறேன் அதற்க்கு மேல் ஒன்று இல்லை என்று சொன்னதற்கு போய் உயிருக்கு பயந்து தப்பி ஓடியவரை மலேசியாவில் வைத்து கைது செய்து சவூதிக்கு இழுத்து வந்திருக்கிறார்கள். இஸ்லாமிய ஆட்சி என்ற கோஷத்தை கேட்டாலே உதறலாய் இருக்குங்க சார்.

தருமி said...

// Insulting the prophet is considered blasphemous in Islam and is punishable by death in Saudi Arabia. //

கணேசன், நீங்க சொன்னதை வாசித்துப் பார்த்தேன். நன்றி. நீங்க கணேசன்; நான் Sam; நாம ரெண்டு பேரும் எம்புட்டு லக்கி! நம்ம பாட்டுக்கு அந்தப் பையன் மாதிரி ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லிட்டு தல போச்சுடான்னு சொல்ற இடத்தில பிறக்காம புண்ணியம் பண்ணிட்டோம். இல்ல?!

சார்வாகன் said...

வணக்கம் அய்யா

சவுதியில் பணிபுரியும் பல இஸ்லாமிய பதிவர்களே சவுதி புகழ் பாடி வருகிறார்கள்.சொந்த நாடு தவிர்த்து பிற நாடுகளில் பணியாற்ற‌ செல்லும் ஒருவருக்கு இருக்கும் பல் சிரமங்கள் சவுதியிலும் உண்டு.இன்னும் கொஞ்சம் கூடுதல் கெடுபிடிகள்,மனித உரிமை மீறல்களும் உண்டு.

இவர்கள் சவுதியை தங்கள் மதத்தை உண்மையாக் பிபற்றும் நாடு என பிரச்சாரம் செய்வதும்,இதே போல் உலகையே மாற்றுவோம் என்பது இப்பிரச்சாரத்தை எதிர்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.இப்பிரச்சாரவாதிகளால் நம்ம ஊரிலும் அந்த மதம் பல பிரிவுகளாகி இது சரி சரியல்ல என‌அடித்துக் கொள்வதும் அனைவரும் அறிந்த செய்தியே!சரி அது அவர்கள் சொந்தப் பிரச்சினை.சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகாதவரை சிக்கல் இல்லை.

சவுதியிலுள்ள விடயங்களில் என்ன சிறப்பு!

1. அனைவருக்கும் வஹாபிய(ஸலாஃபி) ஷாரியா சட்டங்கள்.
இருக்கும் பல் வகை ஷாரியாவில் இதுதான்கடுமையான் சட்டம்.

2. பெண்களுக்கு ஃபர்தா கட்டாயம்.ஓட்டுரிமை இல்லை,வாகனம் ஓட்டக் கூடாது.பெண் குறைந்த பட்ச திருமண வயது கிடையாது.ஆண் 4 மனைவி ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ளலாம்.

3. பிரார்த்தனை நேரங்களில் பிற செயல்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.

4.இரம்ஜான் விரத நேரத்தின் போது போது உணவகங்கள் மூடப்படுகின்றன.உணவு பொது இடத்தில் உண்ணக்கூடாது.

5.பன்றி மாமிசம்,மது(நாட்டுக்கு வெளியே போய்[பஹ்ரைன்,துபாய்] குடித்து விட்டு வந்து விடலாம்) தடை செய்யப்பட்ட ஒன்று.

6.வங்கிகளில்[ மதத்தின்படி தடை செய்யப்பட்டாலும்] வட்டி உண்டு.[ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே].

7. பிற மத வழிபாடுகள் தடை.இஸ்லாமில் இருந்து பிற மத‌ங்களுக்கு மாறுவது குற்ற‌ம்,இஸ்லாமுக்கு மதம் மாறுவது ஊக்குவிக்கப் படுகிறது.[ஜாகிர் நாயக் ஃபார்முலா 2+2=4!!!!!!]

8.சவுதி ஆளும் குடும்பம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் சுரண்டலுக்கு உதவும் நண்பன்.இதை மறைக்க்வே மத பிரச்சார முகமூடி!.
இத்ன வரலாறு அறிவது நல்லது.

சவுதியை பல் அண்டை நாடுகளே பின்பற்றுவது இலை.அவர்களது கலாச்சாரம் அழிந்துவிடும் என அஞ்சுகின்றனர்.துனிசியாவில் ஃபர்தா அணிவது வலியுறுத்தப்படுவது இல்லை.

சரி விவாதம் போது இன்னும் பல் தக்வல்கள் கூறலாம்!!!!
நன்றி அய்யா

naren said...

நண்பர்கள் ஏன் சவுதி கொடியை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால்.......

ஒரு ஆட்சிமுறையில் மக்கள் அனைவரும் நன்றாக, சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றால் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக மாற வேண்டும்.
ஆனால் மனிதர்களாக அனைவரும் பல காரணங்களுக்காக நல்லவர்களாக இருக்கமுடியாது. மனிதர்கள் விடியோ காஸேட் ரிகார்டர் கிடையாது.
அதனால் நல்லவர்கள் ஆட்சிமுறையில் மக்கள் அனைவரும் நன்றாக சந்தோஷமாக இருக்க முடியாது.

இஸ்லாமிய ஆட்சிமுறையில் மக்கள் அனைவரும் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய ஆட்சி முறையில் ஆட்சியாளர்கள் மற்றவர்களும் ஆட்சி செய்ய வேண்டும்.
ஆனால் உலக சரித்தரத்தில் அவர்கள் கூறும் இஸ்லாமிய ஆட்சி முறை அமைந்தது கிடையாது.
அதனால் இஸ்லாமிய் ஆட்சிமுறை அமைக்க முடியாது சாத்தியமுமில்லை.
மக்களும் சந்தோஷமாக நன்றாக இருப்பதில்லை.

இந்த இஸ்லாமிய ஆட்சிமுறை சாத்தியம், நடைமுறைபடுத்தப் படுகிறது, அதில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக நன்றாக இருக்கிறார்கள் எனக் காட்ட சவுதி கொடி உயரே பிடிக்கப்படுகிறது.

தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை காணோமே சார்? ஓட்டு போட முடியவில்லை மகுடத்தை சூட்டமுடியவில்லை.

ராவணன் said...

சவுதியின் அரச குடும்பம் அமெரிக்காவிற்கு அடிமையாக இருக்கும்வரை அங்கே எந்தப் புரட்சியும் வராது.அமெரிக்காவிற்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் அது ஈராக் போன்று மாறிவிடும்.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா

நண்பர் சுவனப்பிரியன் கருத்துகளுக்கு சில ஒப்பீடுகள்

சவுதியில் ஷியாக்கள் 10_15% இந்தியாவில் முஸ்லிம்கள் 10_15%.

சவுதியில் ஷியாக்கள் பெரும்பான்மையாக் வாழும் கத்தீஃப் உலகின் பெருமள‌வு எண்ணெய உள்ள இடங்களில் ஒன்று.அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் எண்ணெய் மட்டும் சுரண்டுகிறர்கள்.இத்னை சு.பி நியாயப் படுத்துகிறார்.

இந்தியாவில் அப்ப்டி எதுவும் கூற முடியாது.இங்குள்ள சிலர் மதம் மாறினார்கள்.700+ வருடங்கள் ஆட்சியும் செய்தார்கள்.அபோது ஜிஸ்யா உடப்ட்ட கொடுமைகள் பெரும்பானமையினர் மீது நடத்தப்பட்டது. ஆனால் நம் ஜனநாயக்,மதசார்பற்ற நாட்டில் இப்போது அனைத்து முஸ்லிம்களுக்கும் 10% த்னி இட ஒதுக்கீடு கேட்கிறர்கள்.இதற்கும் ஆதரவு தெரிவுக்கும் மத சார்பற்ற பிற மத காஃபிர் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதும் சொல்லியே ஆக வேண்டும்.இதுவும் சு.பிக்கு நியாயம்.

பஹ்ரைனில் பெரும்பான்மையினரான் சியா ஆட்சியை வர விடாமல் சிறுபான்மை சன்னி ஆட்சியை நடத்த உதவுவது சவுதி.ஏம்னில் போராடும் ஷியாக்கள் மீது அவ்வப்போது குண்டு வீசும் சவுதி.

இபோது இரானை தாக்க அமெரிக்க இஸ்ரேலுக்கு கூட உதவ எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தும்,அமெரிக்க துருப்புகள் அணிவகுக்க உதவும்.
இதுவும் சு.பிக்கு நியாயம்.

துனிசியாவில் விரட்டி அடிக்கப்பட்ட பென் அலி,மனித் மாமிசம் சாப்பிட்ட இடி அமீன் போன்ற்வர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது சவுதி அரசே!

சவுதி இபின் சவுத் அரச் குடும்பமே யூதர்களாக் இருந்து மதம் மாறியவர்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

சவுதியை புகழ்வது இந்திய[தமிழ்] முஸ்லிம்கள் அப்பின் மீது தானே சென்று அம்ர்வதுதான்.

தனக்கு ஒரு நீதி,பிறருக்கு ஒரு நீதி!!!!!!!!.சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரப்பு

சவுதி ஷாரியா ஆட்சி சரி எனில் இந்துத்வ ஆட்சியும் சரிதான்.

ஹி ஹி ஹி இப்படியே பேசுவது நிச்ச்யம் இந்துத்த்வவாதிகளை தவிர எவருக்கும் உதவாது.

இவர்கள் இந்துத்வா ஆட்கள்தான் எதிர் பிரச்சாரத்திற்காக்,எதிர்வினைக்காக முஸ்லிம் பெயர்களில் எழுதுகிறார்களோ என்று கூட பல முறை எனக்கு சந்தேகம் வரும்.

உண்மையா ?????????????
நன்றி

தருமி said...

//வங்கிகளில்[ மதத்தின்படி தடை செய்யப்பட்டாலும்] வட்டி உண்டு.// அப்டியா??

தருமி said...

சார்வாகன்,நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள். நன்றி. எப்படி இம்புட்டு தெரிஞ்சிக்கிறது? //சவுதி இபின் சவுத் அரச் குடும்பமே யூதர்களாக் இருந்து மதம் மாறியவர்கள்..// அப்படியே இருந்தாலும், எங்க அல்லா & நபி மீது நம்பிக்கை வந்துட்டா அவுக இஸ்லாமியர் தானே. எப்டி லாஜிக்?

சார்வாகன் said...

வண்க்கம் அய்யா

சவுதி அல்ராஜி வங்கியின் தள்ம இதில் இருந்து வட்டி கண்க்கீடுகள் அளிக்கிறேன்.
வட்டி என்று சொல்லாமல் வாங்குவதுதான் இவர்களின் கொள்கை.[ கொன்றால் பாவம் தின்றால் போன‌ மாதிரி!!!!!!!!!!!]
http://www.app1.alrajhibank.com.sa/calculatorsVer2/#

இந்த இணைப்பில் கணக்கிட்டு பார்த்து கொள்லுங்கள்.
பாருங்கள் நீங்கள் மாதம் 2000 ரியால்[1SR =13Rs] சம்பளம் வாங்குபவராக் இருந்தால் உங்களுக்கு கிடைக்கும் பர்சனல் லோன் 31,388 ரியால்கள்,இதற்கு 5 வருடத்தில் திருப்பி கட்ட மாதம் 667 ரியால் கட்ட வேண்டும் ஆக்வே 60*667=40,020SR
ஆக்வே வடி=40,020-31,338=8632ரியால்கள் இது ஃப்ளாட்[flat] வட்டி முறைக்கு சுமார் 5.5%[anum]
நம் நாட்டை விட வட்டி குறைவாக இருப்பதால் அங்கு வாழும் பல நண்பர்கள் அங்கு கடன் இங்கு முதலீடு செய்வதை நன்கு அறிவேன்.

சவுதி அரச குடும்பம் யூதரா என விவாதிக்கும் பாகிஸ்தானி பத்திரிக்கை செய்தி
http://www.daily.pk/are-the-saudi-royal-family-jewish-11725/

படியுங்கள் மர்மக்கதை போல் உள்ளது.

suvanappiriyan said...

தருமி சார்!

//அப்படியே இருந்தாலும், எங்க அல்லா & நபி மீது நம்பிக்கை வந்துட்டா அவுக இஸ்லாமியர் தானே. எப்டி லாஜிக்?//

நீங்க சார்வாகனுக்கு சப்போர்ட் பண்ணாமல் எனக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறீர்களே! இது நியாயமா

@sarvaghan
//சவுதி ஷாரியா ஆட்சி சரி எனில் இந்துத்வ ஆட்சியும் சரிதான்.///

சீக்கிரம் கொண்டு வாங்க சார்வாகன். அப்போதான் சூத்திரர்கள் எல்லாம் வெகுண்டு இஸ்லாத்தை நோக்கி ஓடி வர வசதியாக இருக்கும். எங்கள் பணியும் குறையும்.:-)!

ராஜ நடராஜன் said...

இஸ்லாமிய நாடுகளின் அரசியலை சவுதி என்ற ஒரே நேர்கோடு போட்டு விமர்சித்து விட முடியாது.முதலாவதாக GCC எனப்படும் எண்ணைப் பொருளாதார அமைப்புக்குள் உள்ள எண்ணை செழிப்பு மிக்க நாடுகள்.இதில் இரண்டு பிரிவுகளில் ஒன்றாக அமெரிக்கா சார்ந்த முடியாட்சியாளர்கள்.இஸ்ரேலுடனும் சமாதானமாக போகலாம் என்ற நிலைபாடும் கூடவே.இன்னொன்று அமெரிக்க சார்பும் தேவைப்பட்டால் எதிர்க்கவும் துணிந்த ஈராக்,லிபிய சதாம்,கடாபி போன்றவர்கள்.ஏனைய முடியாட்சியாளர்களை விட இஸ்ரேல் எதிர்ப்பு நிலையாளர்கள்.விளைவு என்ன என்பது அறிந்த ஒன்றே.

இன்னொரு பக்கம் போராட்டத்திற்கான சூழலும்,பொருளாதாரத்தில் பின் தங்கியவைகளான் சிரியா,டுனிசியா,எகிப்து,லெபனான்,ஜோர்டான் போன்றவைகள்.சிரியாவின் அரசியலில் ஈரான்,இஸ்ரேல் பிரச்சினைகள் இருப்பதால் அமெரிக்கா சிரியாவை சீர்குலைப்பதில் கவனம் செலுத்தும்.

எண்ணைப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த இஸ்லாமிய முடியாட்சியாளர்கள் அவசியம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்தே வைத்துள்ளது.ஜனநாயகத்தின் மாறுபட்ட பல குரல்களைக் கட்டுப்படுத்துவதை விட ஒற்றை ஆட்சி முறையாளர்களை கையாளவது எளிது எனப்து அமெரிக்கா அறிந்த ஒன்றே.

அமெரிக்கா இரட்டை நிலை அரசியலையே கையாள்வது பல ஒப்பீடுகள் சொல்ல முடிந்தாலும் பதிவு சார்ந்து பஹ்ரைனின் ஷியாக்களின் குரலை சவுதி ஒடுக்கியதில் அமெரிக்கா ஆட்சேபனை தெரிவிக்கவில்லையென்பதால் சவுதியில் மாற்றங்கள் எதுவும் விளையாது என்பதால் பதிவர் சுவனப்பிரியனின் கருத்து சரியானதே.

Saudi is a hard nut to crack, neither political revolution nor religious renaissance.

எண்ணைப் பொருளாதார அடிப்படைக் கட்டமைப்புக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை நிறைவு செய்வதால் பொருளாதாரம் சார்ந்து புரட்சி ஏற்பட வாய்ப்பில்லை.ஒசாமாவின் தீவிர இஸ்லாமியம்,இஸ்ரேல்,ஷியா,சுன்னி பிரிவுகள்,அமெரிக்காவின் இரட்டை நிலை,பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் போன்ற காரணிகள் மட்டுமே தீக்குச்சி உரசுவதற்கான வாய்ப்புக்கள்.

சவுதி மனித உரிமைகள் பற்றி பேச ஆசிய நாடுகளின் தூதரகங்களுக்கு முதுகெலும்பில்லையென்பதோடு மனித உரிமை அமைப்புக்களுக்கும் வலுவில்லையென்பதே உண்மை.

ஷியா ஈரான் இஸ்ரேலின் எதிர்ப்பு நிலையிலும் ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றிற்கு எண்ணை விநியோகம் நிறுத்தி இருப்பதால் ஏனைய வளைகுடா நாடுகள் அமெரிக்க சார்பு நிலையால் பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைத்துள்ளதையும் கவனித்தில் கொள்ளலாம்.

சதாமின் குவைத் ஆக்கிரமிப்பு,மக்கள் அடக்குமுறை போன்ற சில தவறுகள் தவிர ஓரளவுக்கு ஜனநாயகம் கொண்ட நாடாக ஈராக் விளங்கியது.

சவுதிக்கு தேவை ஜனநாயகமல்ல.இஸ்லாமிய அடிப்படைவாதமே.

குறும்பன் said...

அமெரிக்காதான் இஸ்லாமின் முதல் எதிரி சரியா? அப்பறம் ஏன் பாலாறும் தேனாறும் ஓடும் சவுதியின் அரச குடுத்தார்கள் அங்க(அடிக்கடி) போறாங்க. இது எனக்கு புரியலை. சார்வாகன் சொன்னது போல் சியா பிரிவு மக்கள் பெரும்பான்மையாக உள்ள பக்ரைனில் சிறுபான்மை சுன்னி முசுலிம்கள் ஆட்சிகட்டிலில் அதிகாரம் செலுத்துவது எப்படி சரியாகும்? சுன்னிகளுக்கு (இராசாவுக்கு எதிரா) எதிராக புரட்சி நடந்ததை ஒடுக்க சவுதி தன் இராணுவத்தை அனுப்பியதை யாரும் மறக்கக்கூடாது.

சியாக்களை வளரவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கும் இவர்கள் அவர்கள் தன்மதம் தானே என்று பார்ப்பதில்லை. வளைகுடாவில் சுன்னி சவுதியின் ஆதிக்கத்திற்கு சியா ஈரானின் ஆதிக்கம் தடையாகவுள்ளது என்பது அவர்களின் அரசியலில் இருந்து நன்கு புலப்படும்.

கால்கரி சிவா said...

தருமி சார், இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. கடந்த டிசம்பரில் மதுரைக்கு வந்திருந்த போது ரீகல் தியேட்டருக்கு எதிரே இருந்த ஜம் ஜம் டீ ஸ்டால் இடம் மாறி பெருமாள் கோவில் பின் புறம் இருப்பதை கடக்கும் போது உங்களை நினைத்துக் கொண்டேன்.

சவூதி நினைவுகள் மறந்துவிட்டன. நான் சொன்ன அனைத்தும் பத்திரிக்கைகளிலும் பதிவுகளும் வருவதை புன்னகையுடன் படித்துக் கொண்டே கடக்கிறேன்.

சார்வாகன் மிக சரியாக சவூதியில் இருக்கும் ஷியா மக்கள் தொகையைப் பற்றி சொல்லியிருக்கிறார்

கால்கரி சிவா said...

இஸ்லாமிய வங்கியில் வட்டி என சொல்ல மாட்டார்கள். கமிஷன் மற்றும் சர்வீஸ் சார்ஜ் என்று சொல்லுவார்கள்

கால்கரி சிவா said...

சவூதி அராம்கோவில் நன்றாக வேலைப் பார்க்கும் சவூதிகளில் 95% ஷியாவாக இருப்பார்கள். மானேஜர்களில் 99% சுன்னியாக இருப்பார்கள்

அப்துல் அர்ஷத் said...

காமாலை காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள் அது போல் உள்ளது தங்களின் வாதம், இஸ்லாமியர்களை பற்றியோ அல்லது இஸ்லாம் பற்றியோ அல்லது இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பின் பற்றும் நாட்டை பற்றியோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதில் குற்றம் கண்டுபிடிப்பதை முக்கிய பணிய வைத்துள்ளீர்கள் போல தெரிகிறது. சரி விசயத்திற்கு வருவோம் , இந்தியர்களின் பாஸ்போர்ட் என்று இல்லை , பங்காளி,(பங்களாதேஷ்),நேபாளி, இந்தியன்,ஸ்ரீலங்கன்,பாகிஸ்தானி,பிலிபைணீ(filifinos) இவர்களின் பாஸ்போர்ட்டை சவூதி,யு .ஏ.இ,கத்தார் ஏனைய நாடுகளில் அவரவர் கைகளில் தருவதில்லை.இது அவர்களின் பழக்கம்.அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ,ஆனாலும் இதெற்கெல்லாம் காரணம் தெரியவில்லை.நீங்கள் இப்படிதான் சொல்லிருக்க வேண்டும் மற்றவைகளுக்கு சுவர்க்கம் இவர்களுக்கு நரகமாக படுகின்றது என்று ,என் என்றால் இது இஸ்லாமிய மத கோட்பாடு,இந்த உலகம் மனிதர்களுக்கு நிரந்தரம் இல்லை,இன்னொரு உயர்ந்த வாழ்க்கை உண்டு அதற்க்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்;(அதாவது தொழுகை ,தர்மம்,பிறர்க்கு தீங்கு செய்யாமை,புறம் பேசாமை,மது,மாது போன்ற கேட்ட சகவாசங்கள் இல்லாமை)இதை நீங்கள் சொன்ன சவுதியில் கடை பிடிக்கின்றார்கள், அது எந்த மதம் அல்லது எந்த நாட்டுக்கரனாக இருந்தாலும் சரி தண்ணி அடிக்காதே விபசாரம் செய்யாதே என்றால் அது அவர்களுக்கு நரகமாக தான் தெரியும்.அடிப்படையாக ஒரு விஷத்தை தெரிந்து கொள்ளுங்கள் முஸ்லிம் என்பதால் இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு சலுகையும் மற்ற மதத்தினருக்கு ஒரு சலுகையும் அவர்கள் செய்வதில்லை.நம்மை இந்தியன் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். இஸ்லாம் இப்படி தான் மனிதன் வாழ வேண்டும் என்று சொல்கிறது அதை ஒரு முஸ்லிம் செய்யவில்லை என்பதற்காக இஸ்லாத்தை குறை சொல்வது அறிவுடைமை அல்ல.அதனால் அங்கும் ஊழல் உள்ளது என்பது மதத்தின் குறை அல்ல,ஏழ்மை,வேலை இல்லா திண்டாட்டம் இது அந்த நாட்டின் பிரச்னை,உலகத்தில் எல்ல நாட்டிலும் இந்த பிரச்சினைகள் உள்ளது, இடையில் இன்னொரும் சொல்லி கொள்ள விழைகிறேன் முஸ்லிம் நாடு என்பதற்காக அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆட வில்லை, அவ்வாறு தங்களுக்கு யாரவது கருத்து சொன்னால் அதுவும் கண்டிக்க வேண்டியதே!.அரச குடும்பம் என்றாலும் அவர்களும் மனிதர்கள் தானே தவறு செய்கிறார்கள் இல்லை என்பதிற்கில்லை, அது the law maker should not be a law breaker என்பது தான், கடுமையான சட்டங்கள் போடும் இவர்களும் தவறு செய்வதால் தான் மக்கள் கோப படுகிறார்கள் அது விசயத்தில் மக்களின் கோபம் நியாயமானதே.

hariharan said...

ஒரே சமயத்தில் அமெரிக்காவிற்கும் அல்கொயிதாவிர்கு பணம் கொடுப்பார்கள்.

தற்போதைய ஈரான் பிரச்ச்னைக்கு மூல கராணமே சவுதி தான்.

தருமி said...

என் பதிவுகளில் நான் தரும் செய்திகளை விடவும் என் பின்னூட்டங்களில் அதிகமான, ஆழமான கருத்தோட்டங்கள் இருக்கும் என்பது எனக்கு எப்போதுமே ஒரு பெருமையான விஷயம். இப்பதிவு அதற்கு ஒரு நல்ல சான்று.

பழனி. கந்தசாமி,
கோவி,
ஓசை, சு.பி.,
கணேசன்,
சார்வாகன்,
நரேன்,
ராவணன்,
ராஜ நடராஜன்,
குறும்பன்,
கால்கரி சிவா,
அப்துல் அர்ஷத்,
ஹரிஹரன்.இப்பதிவில் பல நல்ல விவரங்களைக் கொடுத்துள்ள அனைவருக்கும் என் நன்றி.

தருமி said...

//நீங்க சார்வாகனுக்கு சப்போர்ட் பண்ணாமல் எனக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறீர்களே! // அதிகம் சந்தோசப்படாதீர்கள், சு.பி. ஏனெனில் சார்வாகன் கொடுத்த பதிவைப் படித்தேன். பல கேள்விகள். //அப்போதான் சூத்திரர்கள் எல்லாம் வெகுண்டு இஸ்லாத்தை நோக்கி ஓடி வர...// ஆக, சாதிக்காரணங்களைப் பார்த்துதான் உங்க மார்க்கத்திற்கு உங்க தாத்தா, பூட்டன் ஓடி வந்திருக்கிறார்கள். கொள்கைகளாலல்ல என்பதுதான் என் விவாதம். இதில் 'இங்கு வந்து விட்டால் வெளியே போக வழியில்லை' என்பது எவ்வளவு மோசமான வழக்கு. உள்ளே போற இடத்துக்கு வெளியே வரவும் வழி இருக்கணும். என்னைப் பொறுத்தவரை வெளி வழி இல்லாத ஒன்றே உங்கள் மார்க்கத்தை அடியோடு புறந்தள்ள போதும்.

தருமி said...

அப்துல் அர்ஷத், //அதனால் அங்கும் ஊழல் உள்ளது என்பது மதத்தின் குறை அல்ல,ஏழ்மை,வேலை இல்லா திண்டாட்டம் இது அந்த நாட்டின் பிரச்னை,உலகத்தில் எல்ல நாட்டிலும் இந்த பிரச்சினைகள் உள்ளது, // முதலில் இதையெல்லாம் உங்கள் சு.பி.னிடம் சொல்லிவிட்டு இங்கு வாருங்களேன். வசதியாக இருக்கும்.

தருமி said...

சு.பி.,
சார்வாகன் கொடுத்த கட்டுரையை - இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரே எழுதிய - அந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். என் கேள்விகள் சில மட்டும் இங்கே -

Are The Saudi “Royal Family Jewish?

Saudis are viceroys of our Almighty Allah on the Earth .. ஓ! இப்படிப்பட்ட பட்டமெல்லாம் உண்டா?

Mohammad Amin Al Tamimi- இவரு மாதிரியே நீங்களும் நிறைய கதை சொல்லுவீங்களே, வரலாறு என்ற பெயரில்.

Descendants of Saud (the present day Saudi Family) started a campaign of assassination of the prominent leaders of the Arab Tribes ,,, DEATH WITH THE EDGE OF THE SAUDI SWORD IN THE PUBLIC SQUARE!!!!! .... இதுனாலேயே உங்க மார்க்கம் வாளால் பரவியது என்று கூட சொல்லலாம். இல்லீங்களா?

by inviting them to eat from a banquet he prepared from the cooked flesh of his victims .. ஹராம் ஆகாமல் இருக்க கழுத்தைஅ வெட்டும்போது 'ஹலால்' சொல்லியிருப்பாங்களோ?

King Abdul Aziz Al-Saud when the king signed the document which the English Authorities prepared in 1922 as a declaration for giving Palestine to the Jews; --- உங்க ராசா இப்படியெல்லாம் செஞ்சிருக்காரே. அப்போ அவர் நெசமாவே யூதர் தான்! அடப் பாவமே! நீங்க என்னடான்னா, தெய்வீக நாட்டை ஆளும் தெய்வீக மன்னர்கள் என்கிறீர்கள்!!!

all are executed in compliance with their self invented Wahabi Sect which legalizes the chopping of the heads of their opposing subjects. .. நீங்களும் அந்த வஹாபி செட் தானே!

தருமி said...

//the law maker should not be a law breaker என்பது தான், கடுமையான சட்டங்கள் போடும் இவர்களும் தவறு செய்வதால் தான் மக்கள் கோப படுகிறார்கள் //

ஏனுங்க இந்தக் கோபம் உங்க முகமதுவின் பேரில் வரமாட்டேங்குது?

எல்லாத்துக்கும் நாலுன்னு சாமி சொல்லிரிச்சி. சரி ... ஆனா முகமது மட்டும் பத்து, பன்னிரண்டு என்று அவர்பாட்டுக்குப் போய்ட்டார். கேட்டா, அல்லாவே சரின்னு சொல்லிட்டார் என்கிறார். இதற்கு நான் சொல்வது: குற்றவாளியை சாட்சியா போட்டா இப்படித்தான் ஏதாவது சொல்லி தப்பிப்பான். அது மாதிரியா இது?

ஊருக்கெல்லாம் ஒரு சட்டம்; சட்டம் போடுறவனுக்கு சட்டமே இல்லை. .. நல்ல தத்துவம்!!!

கபிலன் said...

தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை காணோமே சார்...

கல்வெட்டு said...

வேலைப் பழுவினால் அதிகம் பேச இயலவில்லை. மதம் பற்றிப் பேசி மல்லுக்கட்ட இப்போது நேரம் இல்லை. :-))

அரசியில பார்வை:

அ. ஒரு நாட்டிற்கு அல்லது நாட்டை ஆளும் அதிகார மையத்திற்கு அமெரிக்காவின் ஆதரவோ ,அய்ரோப்பிய கூட்டமைப்புகளின் ஆதரவோ அல்லது ரஷ்யா , சீனா போன்ற வல்லரசுகளின் ஆதரவோ இருந்தால் , அந்த நாட்டின் அதிகார மையத்தை அல்லது அரசை எதிர்த்து ந‌டக்கும் மக்கள் போராட்டங்கள் நிச்சயம் வெற்றிபெறாது.

ஆ. ஒரு நாட்டிற்கு அல்லது நாட்டை ஆளும் அதிகார மையத்திற்கு மேலே சொன்னவர்களின் ஆதரவு இருந்தால் , அந்த நாட்டின் அதிகார மையத்தை அல்லது அரசை எதிர்த்து ந‌டக்கும் மக்கள் போராட்டங்கள் நிச்சயம் வெற்றிபெறாது.

உதாரணங்கள்....

0. அமெரிக்காவின் தீவிர இஸ்ரேல் ஆதரவு இருக்கும் வரை ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கப்படும் பாலஸ்தீனர்களின் போராட்டங்கள்.

1. ஈழமக்ககளின் போராட்டம்

சீனா ‍மற்றும் இந்தியா இலங்கைக்கு கொடுத்த ஆதரவும் அமெரிக்காவின் பாராமுகமும் ஈழமக்ககளின் போராட்டத்தை தோல்வியில் கொண்டு முடித்தது.

2.ஈராக், லிபியா, எகிப்து மக்களின் போராட்டங்கள் ---> அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய கூட்டமைப்பின் அமோக ஆதர‌வைப் பெற்றது . வல்லரசுகளுக்கு பிடிக்காத அல்லது ஒத்துழைக்காத அதிகார மையங்கள் கலைக்கப்பட்டு வல்லரசுகள் நினைத்த அரசாங்கங்கள் கொண்டு வரப்பட்டது.

3. இப்போது நடக்கும் "சிரியா" மக்கள் போராட்டங்கள் -->

ரஷ்யா & சீனா ‍‍
இவர்கள்
மக்கள் போராட்டங்களை கண்டுகொள்ளாமல், இருக்கும் அதிகார மையத்தை காக்கப் பார்க்கிறது.

அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய கூட்டமைப்புகள்

இவர்கள் மக்கள் போராட்டங்களை சாக்காக வைத்து "சிரியா" வை இன்னொரு லிபியா மாடலில் மாற்ற நினைக்கிறது.

***

செளதி அதிகார வர்க்கம் "அமெரிக்கா + அய்ரோப்பிய" அல்லது "சீனா+ரஷ்யா" என்ற வல்லரசுகளின் (ஏதோ ஒன்றின்) பாதுகாப்பில் இருக்கும்வரை அங்கே நடக்கும் மக்கள் போராட்டங்கள் ஈராக், லிபியா, எகிப்து போல மாற வாய்ப்பே இல்லை.

அமெரிக்காவைப் பகைத்து ஈரானின் அணுச் செரிவை செளதி வெளிப்படையாக ஆதரித்தால் "அமெரிக்கா + அய்ரோப்பிய" நாடுகள் செளதிய மற்றொரு ஈராக், லிபியா, எகிப்து ஆக‌ மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது.

இத்தனைக்கும் ஈரானும் ஒரு இஸ்லாமிய நாடு.

***

கல்வெட்டு said...

Correction....

மேலே உள்ளதில் "ஆ" பகுதி இப்படி இருந்திருக்க வேண்டும் :-(((‍‍‍‍‍‍‍

-------------------------
ஆ. ஒரு நாட்டிற்கு அல்லது நாட்டை ஆளும் அதிகார மையத்திற்கு மேலே சொன்னவர்களின் ஆதரவு இல்லாமல், மேலே சொன்னவர்களுக்கு பிடிக்காவிட்டால் (பல காரணங்கள்) அந்த நாட்டின் அதிகார மையத்தை அல்லது அரசை எதிர்த்து ந‌டக்கும் மக்கள் போராட்டங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
-----------------
.

suvanappiriyan said...

அட..அட...அட...

இஸ்லாமிய எதிர் பதிவு என்றால் எங்கெங்கிருந்தெல்லாமோ ஆட்கள் குழுமுறாங்களேப்பா...

படிப்பறிவில்லாத ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்தவரைப் பற்றி ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தமிழகத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சும்மா சொல்லப்படாது... முகமது நபி அவர்களே கலக்குறீங்க....

உங்களை தலைவராக பெற்றதற்கு உண்மையிலேயே பெருமைபடுகிறேன். ஆன்மீகம் கலந்த அருமையான வாழ்க்கைத் திட்டத்தை தந்திருக்கிறீர்கள். பரிபூரண நிம்மதியும் உங்களால் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. அது கிடைக்காதவர்கள் உங்கள் மீது புழுதி வாரி தூற்றுகின்றனர். அறியாத மக்கள். இந்த தலைமுறை இல்லா விட்டாலும் இவர்களின் அடுத்த தலைமறையாவது உங்களை விளங்கிக் கொள்வர். அது வரை பொறுப்போம்.

தருமி said...

//இஸ்லாமிய எதிர் பதிவு என்றால் எங்கெங்கிருந்தெல்லாமோ ஆட்கள் குழுமுறாங்களேப்பா..// அப்டியா?!அப்படி என்ன 30 - 35 பேரென்ன இங்கே வந்திருக்காங்களா .. என்ன? உங்களைப் போல யாருங்க ஒரே குழுமமா வர முடியும்? கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து ட்ரஸ் மாத்தக் கூடாதுங்க .. தெரியாதா?

தருமி said...

//அது வரை பொறுப்போம்.//அடடே .. சு.பி. பதில் சொல்லாம் போகும்போது இப்படி சொன்னாலும் நல்லாத்தான் இருக்கு. keep it up, ALWAYS

தருமி said...

//உங்களை தலைவராக பெற்றதற்கு உண்மையிலேயே பெருமைபடுகிறேன்//

அட நானும் கூடத்தான் பெருமைப் பட்டேன். அதுவும் இரண்டரை வருஷத்துக்கு முந்தியே. அதைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்." ஆனாலும் நான் கடைசியில் சொன்னது: //ஏசுவும் முகமதுவும் தாங்கள் சொன்ன வார்த்தைகளக் கேட்டு, கோடிக்கணக்கானவர்களை தங்களை நம்ப வைத்து விட்டார்கள் . ம்ம் .. ம் .. சரியான போட்டி ...






எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ... இதையெல்லாம் நம்புவதற்கு! //

இப்போ இரண்டு பேரில் யாரு ரொம்பப் பெரிய ஆளு. கணக்குப் படி பார்த்தா முந்திப் பொறந்த ஆளுதான் பெருசு மாதிரி தெரியுது.

தருமி said...

//பரிபூரண நிம்மதியும் உங்களால் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.//என்னை மதம் மாற்ற முயன்ற ஒரு கிறித்துவ நண்பரும் இதையே சொல்லுவார். ஏதோ நம்பிக்கையாளர்கள் முழு நிம்மதியோடு வாழ்வது போலவும் எங்களைப் போன்றோர் 'சட்டையைக் கிழித்துக் கொண்டு' அலைவது போலவும் ஒரு கற்பனை உங்களுக்கு. வேறொன்றுமில்லை .. சின்னபிள்ளையில் சொல்லிக்கொடுத்த பாடம் .. மனப்பாடம் செய்து ... அதையே திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டு .......... நடத்துங்க ..

வேகநரி said...

//சீக்கிரம் கொண்டு வாங்க சார்வாகன். அப்போதான் சூத்திரர்கள் எல்லாம் வெகுண்டு இஸ்லாத்தை நோக்கி ஓடி வர வசதியாக இருக்கும்.//

எப்படி ஓடிவருவார்கள்!! ஒரு ரொவி toffee சாப்பிடுவதானால் கூட ஹலால் பார்த்து தான் வாங்க வேண்டும், சுன்னத்து செய்ய வேண்டும், பர்தா போட வேண்டும், உள்ளே போனால் திரும்பிவர முடியாது அப்படிபட்ட மதத்திற்கு யாராவது ஓடி வருவார்களா? அந்த மதத்தைவிட்டு கடசியாக வெளியேறி ஓடி போகிறவர்களாக தமிழ் இஸ்லாமியர்களும் சவுதிகாரங்களுமா இருப்பார்கள்.

கல்வெட்டு said...

Saudi women push for the right to play sports

http://news.yahoo.com/saudi-women-push-play-sports-155201454--spt.html

....sports in schools for girls forbidden in Islam.... --Sheikh Abdulkareem al-Khudair (Supreme Council for Religious Scholars)

.

தருமி said...

மற்ற எல்லா மதங்களையும் சமூகங்களையும் விட பெண்களுக்கு முழு சுதந்திரம் தருவதாகச் சொல்லப்படும் இஸ்லாமின் கொள்கைகளோடு முழு அளவில் 'அழகாக' ஆட்சி நடத்தி வரும் செளதி பற்றிய ஒரு சிறு குறிப்பு:
(http://news.yahoo.com/saudi-women-push-play-sports-155201454--spt.html)

Saudi ...was lambasted by Human Rights Watch for never having sent a woman athlete to the Olympics.

...the excessive "movement and jumping" needed in football and basketball might cause girls to tear their hymens and lose their virginity.

Even stadiums for watching sports prohibit females to be present.

publicly slammed for going against their natural role.

Newspaper articles that refer to such women as "shameless"..

... sports in schools for girls because such activity is forbidden in Islam.

... state schools are barred from teaching physical education

-
ஆச்சரியங்கள் ... நம்ப முடியவில்லைதான். இருந்தாலும் உண்மைகள் தானே இவைகள் :-(

தருமி said...

நன்றி கல்வெட்டு. (எங்கிருந்து, எப்படி இப்படியான பொக்கிஷங்களைத் தேடிக் கண்டுபிடிப்பீர்களோ!! )

கோவி.கண்ணன் said...

//கழிவறை பதிவுக்கு முதல் ஓட்டாக போட்டு மகுடம் ஏற ஆசைப்பட்டீர்களே! அப்போ அதுவும் கள்ள ஓட்டா! ஒன்று தெரியுமா? //

ஒரு இரண்டு நாளைக்கு நீங்க சாமி கும்பிடாமக் கூட இருக்க முடியும், கழிவரைக்குப் போகாம இருக்க முடியுமா ? அதனால் தான் நீங்கள் எழுதிய கழிவரைக்கு ஓட்டு.

உங்க மற்றும் உங்க சகாக்கள் பதிவுகளுக்கு அல்லாவே வாக்குக் போட்டு மகுடம் ஏற்றுகிறார் என்று நீங்க நம்புங்க சார், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்கள் (சகாக்கள்) செயல் முகம் சுளிக்க வைப்பதாக வெளிப்படையாகவே என்னிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் சொல்கிறார்கள், உங்கள் மதத்து வகாப்பி அல்லாதவர்கள் உங்களின் (சகாக்களின்) தொடர்ச்சியான மகுட ஆக்கிரம்பிப்பு இஸ்லாத்துக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துகிறது என்று சொல்லுகிறார்கள், இதையெல்லம கேட்டு நீங்கத் (உங்க சகாக்கள்) திருந்தப் போகிறார்களா என்ன ?
பின்னே எதற்கு என்னுடைய விமர்சனத்தால் விசனப்படுகிறீர்கள், உங்கள் செயல் நான் விமர்சிப்பதானால் கெட்டுவிடாது சார், கூல்.

புதுகை.அப்துல்லா said...

நான் எந்த அளவிற்கு எனது வணக்க முறைகளில் பிடித்தம் உள்ளவனோ, எந்த அளவிற்கு எம்பெருமான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின்மீது காதல் உள்ளவனோ அந்த அளவிற்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களின்மேல் வெறுப்பு உடையவன். தங்கள் வானளாவிய அதிகாரத்தை தொடர,அனுபவிக்க இவர்கள் செய்யும் செயல்களும்,மனித உரிமை மீறலும் அதை வெகுஎளிதாக மதப் போர்வைகொண்டு மூடுவதும்... இதையா இஸ்லாம் இவர்க்ளுக்கு போதித்தது?

அனைவரும் சமம் என்று உரைத்த நபிகளாரின் மண்ணில் "நாம் வரிசையில் நிற்கும் போது உள்நாட்டு அரபி வந்தால் நாம் வழிவிட்டு அவருக்கு முதல் உரிமை குடுக்கவேண்டும்."

உழைப்பவன் வியர்வை காயும் முன்னர் அவனுக்கு உரிய நியாயமான கூலியை வழங்கிவிடு என்று உத்தரவிட்ட எம் பெருமான் மண்ணில் இந்தியப் பணம் வெறும் நாலாயிரத்துக்கும்,அய்யாயிரத்திற்கும் 12 மணி நேரக் கூலிகளாக எம் மக்கள். அந்த சம்பளமும் சரிவர வழங்காத எத்தனையோ நிறுவனங்கள் உண்டு. இவை அத்தனையும் உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் உண்டுதான். எனவே பிற உலகுக்கும் அரபு பிரதேசத்துக்கும் எந்த வித்யாசமும் இல்லை. இஸ்லாம் சொல்வதைக் கேட்டு ஆட்சி நடந்தால் இந்நிலை அங்கு இருக்குமா?

இன்னும் இதுபோல் நூறு உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.

இஸ்லாத்தை ஆதரிப்பது வேறு. இஸ்லாமிய ஆட்சியாளர்களை ( அவர்கள் இஸ்லாத்தின் வழியில்லாத போதும்) ஆதரிப்பது வேறு என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் உணர வேண்டும்.

அந்த மாபெரும் மண்ணின் மகத்தான ஆட்சியாளராக இருந்து இறக்கும் போது ஓரிரு கிழிந்த எளிய உடைகளும், உடைந்த இல்லமும் தன் மகளுக்கு சொத்தாக விட்டுச்சென்ற நபிகள் பெருமான் எங்கே? அவர் வழியில் ஆட்சி செய்வதாய்ச் சொல்லி மக்கள் சொத்தான எண்ணெய் வளத்தை தனது சொத்துகளாக்கி அரண்மனையில் சுகவாசிகளாய் கொழிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே? தயவு செய்து யாரும் அரபு ஆட்சியாளர்கள் நபிகள் வழிநின்று ஆட்சி செய்வ்தாய் சொல்லிவிடாதீர்கள். இறைவனுக்கே அடுக்காது.

அரபு நாடுகளைவிட நம் தாய்நாடு ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

தருமி said...

//"நாம் வரிசையில் நிற்கும் போது உள்நாட்டு அரபி வந்தால் நாம் வழிவிட்டு அவருக்கு முதல் உரிமை குடுக்கவேண்டும்."//

ஓ! அப்டியா? சு.பி. வேற மாதிரில்லா சொல்லுவாரு!

//இஸ்லாத்தை ஆதரிப்பது வேறு. இஸ்லாமிய ஆட்சியாளர்களை ( அவர்கள் இஸ்லாத்தின் வழியில்லாத போதும்) ஆதரிப்பது வேறு என்பதை அனைத்து இஸ்லாமியர்களும் உணர வேண்டும்.//

ஓளரங்கஜேபை வைத்து எம்புட்டோ சொல்லியாச்சி .. ஒண்ணும் ஏறலைங்க .. அம்புட்டுதான்னு உட்டாச்சி .. :-(

தருமி said...

அப்துல்லா,
இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு ஒத்துவராமலிருபதற்காக என் நன்றியும் பாராட்டுகளும்.

shakiribnu said...

தருமி
ரொம்ப நாட்களுக்குபிறகு உங்கள் பதிவில் கருத்து எழுதுகிறேன்.

நடுவில் சில பதிவுகளும் எழுதியிருக்கிறேன்.

உங்கள் பார்வைக்கு


காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா சொல்லித்தந்த சுகாதாரம்



நித்யானந்தாவும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் – ஒரு ஒப்பீடு

இஸ்லாம் ஒரு மதமா? மார்க்கமா? மாஃபியா கும்பலா?

Natraj said...

The Ministry of Labor has issued a statement yesterday. It says that there will continue to be a ban on domestic workers from Indonesia and the Philippines. So far so good and every country has a right to frame their own policies. What follows next is shocking. It says the ban will continue "until these two countries change their conditions that demand improved rights" for employees coming into the kingdom. How much more blatant can one get in the Kingdom of Humanity? What is wrong if these employees are given improved rights? Are they not human beings? Or do they deserve to be treated as worse than slaves?

http://workinginsaudiarabia.blogspot.in/2012/03/new-developments-for-laborers-in-ksa.html

Natraj said...

The Ministry of Labor has issued a statement yesterday. It says that there will continue to be a ban on domestic workers from Indonesia and the Philippines. So far so good and every country has a right to frame their own policies. What follows next is shocking. It says the ban will continue "until these two countries change their conditions that demand improved rights" for employees coming into the kingdom. How much more blatant can one get in the Kingdom of Humanity? What is wrong if these employees are given improved rights? Are they not human beings? Or do they deserve to be treated as worse than slaves?


http://workinginsaudiarabia.blogspot.in/2012/03/new-developments-for-laborers-in-ksa.html

தருமி said...

//you just cannot afford to have outdated rules and even more outdated thought processes if you need progress. //

நடராஜ்,
நீங்க சொல்றதைப் பார்த்தா passort-guardiansகளுக்கும் கூட பிரச்சனைங்கிறது மாதிரி இருக்கே!

Post a Comment