*
யாரையாவது டிவில கூட டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கக் கூடாதுன்னு நினச்சீங்கன்னா ஒரு நல்ல வழியை நேற்றும் இன்றும் கண்டுபிடிச்சேன். 6வது தர விளையாட்டுக்காரர் சிலிக் அப்டின்னு ஒருத்தர் இருக்கிறார். அவர் விளையாட்டை பத்துப் பதினைந்து நிமிடம் பார்த்து விட்டாலே அதன் பிறகு யாருக்கும் டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கவே பிடிக்காமல் போய்விடும்.
மனுஷன் செர்வ் செய்வதற்கு முன் பந்தைத் தரையில் தட்டி.. தட்டி .. தட்டி அதன் பின் செர்வ் செய்வார், விடிந்து விடும் பொழுது. இப்படியா 18-20 தடவை பந்தைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருப்பார்கள். நாமளும் அதை விதியேன்னு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளை நான் பார்த்த போட்டியில் ஜெயித்தவர் அடுத்த நாள் தோற்று விட்டார். அப்பாடா ...!
******
இன்று (20.1019) பெடரரை ஒரு சின்னப் பையன் வெற்றி பெற்று விட்டான். ஏன் சின்னப் பையன்னு சொல்றேன்னா ... அவன் பெயரை எப்படி எழுதுவது, சொல்லுவது என்று தெரியவில்லை. சரி.. நம்ம கடைசி சோர்ஸ் ‘கடவுள்’ தானே. அதனால் கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன். அவர் இந்தப் படத்தைப் பார் என்று சொல்லி விட்டார். அதைப் பார்த்த பிறகும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லிக் கொடுங்கள்.
முதல் இரு செட்கள் பார்க்கவில்லை. அதன்பின் பார்க்க ஆரம்பித்தேன். பையனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. தம்பி பக்கம் நின்னு விசிலடித்தேன். பெடரர் இதுவரை நெட்டை ஒட்டி ட்ராப் போட்டு எதிராளியை ஏமாற்றி பாய்ண்ட் எடுப்பதை இதுவரை பார்த்ததில்லை. அதுவும் செய்து முயற்சித்தார். இருந்தும் பயனில்லை. அடிக்கு அடி பையன் திருப்பி அழகாக அடித்தான். போட்டி பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.
*****
யோசித்துப் பார்த்தேன். இந்தப் பையன் நடால், ஜோகோவிச் இவர்களை எதிர்த்து ஆடினால் நான் யார் பக்கம் இருந்து விசிலடிப்பேன் என்று யோசித்தேன். டாப் இருவரில் எப்போதும் நான் நடால் பக்கம் தான்.
ஆனால் ... இந்த தடவை .... தெரியவில்லை!
*
No comments:
Post a Comment