*
இன்னைக்கி காலைல யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. இப்படியா ஒரு டென்னிஸ் போட்டிய பார்க்கணும். விளையாடியது நாலாவது சுற்று. Pre-quarter final. செவ்ரெவ்(4)- ராகோனிக்(16) நடுவில் போட்டி. முடிவு 6:1; 6:1: 7:6
முதல் இரு செட்டுகளிலும் ஒரு “செட்டு” மேளம் மட்டுமே கேட்டுது. ராகோனிக் விளையாடினார். பாவம்.. செவ்ரெவ். புதிய சில விளையாட்டுகளை விளையாட முயற்சித்தார் போலும். அதாவது, தன் ராக்கெட்டை தரையில் எத்தனை தடவை அடித்து, அதை உருப்பெறாமல் செய்ய வேண்டும் என்பதை அழகாகச் செய்து காண்பித்தார்.
அதை அடுத்து இன்னொரு பிரமாண்ட record உருவாக்கினார். அதிக முறை ஒரு ஆட்டக்காரர் Double faults வைப்பதில் அநேகமாக ஒரு ரிக்கார்ட் வைக்க முயற்சித்தார். மொத்தம் 10 Double faults. அசகாய சூரர் தான்!
மூன்றாவது செட்டில் ராகோனிக் ரொம்ப பாவப்பட ஆரம்பித்து விட்டார். எத்தனை வில்லத்தனம் பண்ணினாலும் நம் சீரியல் கதாநாயகிகள் கோபப்படாமல், விரோதிகளுக்கும் நல்லதே செய்வார்களே, அது மாதிரி ராகோனிக் தன் எதிராளி மேல் பாவப்பட ஆரம்பித்து விட்டார். கடைசி இரு கேம்களில் ராகோனிக் டென்னிஸ் சொல்லிக் கொடுக்கும் போது கோச் எதிர் கோர்ட்டில் இருந்து எதிராளி அடிப்பதற்காகவே எளிதாக, அவர் கையில் கிடைக்கும்படி அடிப்பார்களே ... அதே மாதிரி செவ்ரேவ் கைகளுக்கே பந்து கிடைப்பது போல் பந்தைத் “தட்டிக் கொடுத்து” ஆடினார்.
இத்தனை சலுகை கிடைத்தாலும் செவ்ரெவ் தொடர்ந்து தன் ஆட்டமின்மையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். எனக்கே சந்தேகம் வர... தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் போய் அவரது தரம் நிஜமாகவே நான்கு தானா என்று அருகில் போய் சரி பார்த்தேன்.
அடேய் தம்பி .. செவ்ரெவ் எப்படிப்பா இப்படியெல்லாம் விளையாடி நாலாவது தரம் பெற்றாய்? அல்லது இன்று மட்டும் தான் உன் ஆட்டம் இப்படியா? என்னமோ போ ... நீ தோற்றவரை எனக்கு மகிழ்ச்சி தான்.
*
No comments:
Post a Comment