Friday, September 03, 2010

430. உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து



*

தினமலரில் .........


ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து



சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அவர் டான்சி மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை எனவும், விசாரணை முடிவடைந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------

மழை விட்டிருக்கிறது; இருந்தும் இன்னும் தூவானம் இருக்கிறதாம். சொல்கிறது செய்தி. 

வருவதும் நல்லதாகவே இருக்கட்டும்.

------------------------

உமாசங்கருக்கு ஆதரவான பதிவுகளும். பின்னூட்டங்களும் இட்ட உங்கள் அனைவரோடும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.













12 comments:

Ganesan said...

தருமி ஜயா,

நீதி வென்றுள்ளது.

tsekar said...

பதிவு எலுதிய பிளாக்கர்களுக்கும்,பின்னூட்டம் இட்ட வசகர்கலூக்கும், குறிப்பாக -2010 தேர்தல் வாக்காலர்கலுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

பிரபல பதிவர் கேபிள் சங்கர் -தன்னுடைய ப்ளாக் இல் இதை பற்றி எதுவும் எழுதாதது வறுத்தம் அளிகிறது !!!

த சேகர்
rousesekar@gmail.com

Jerry Eshananda said...

cheers....

வால்பையன் said...

நம்பிக்கையுடன் இதை தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் சார்!

வால்பையன் said...

//பிரபல பதிவர் கேபிள் சங்கர் -தன்னுடைய ப்ளாக் இல் இதை பற்றி எதுவும் எழுதாதது வறுத்தம் அளிகிறது !!!//


தவறில்லை, அவரது கோணத்தில் வேறு வகையில் அவர் தனது ஆதரவை சொல்லியிருக்கலாம்!

PRABHU RAJADURAI said...

பொதுவாக, துறைரீதியிலான நடவடிக்கைகளில் குற்றச்சாட்டு குறிப்பாணை (charge memo) கொடுத்த பிறகு, ஏற்கனவே கூறப்பட்ட தற்காலிக வேலைநீக்க (suspension) உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும். தேவையானால் மீண்டும் தனியாக ஒரு தற்காலிக வேலை நீக்க உத்தரவு கூறப்பட வேண்டும்.


அது ஒரு நல்ல சாக்காக அரசுக்கு அமைந்து விட்டது. பின்ன, தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தென்மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள தேவேந்திர குல வேளாள மக்களள உமாசங்கர் மீதான நடவடிக்கை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி விட்டதை சரி செய்ய வேண்டுமே!

ராஜவம்சம் said...

சத்யமே ஜெயம்.

ஜோதிஜி said...

நன்றி

தருமி said...

rouse,
உங்கள் மொழியின் ஆளுமைக்கும் கூறிய நன்றிக்கும் மிக்க நன்றி.

கேபிள் எழுதலைன்னா அத அவர்ட்ட போய் சொல்ல வேண்டியதுதானே. இங்க எதுக்கு சொல்றீங்க?!

கார்த்திகைப் பாண்டியன் said...

மனதில் சின்னதொரு சந்தோசம்.. நம்மாலும் ஒரு துளி இதற்காக இட முடிந்ததற்காக.. விரைவில் பெருவெள்ளம் வரட்டும்..:-))

தருமி said...

கா.பா.,
நல்ல பல காரியங்களுக்கு நீங்கள் சொல்லும் வெள்ளம் பெருக வேண்டுமென்பதுதான் என் ஆவல்.

Good citizen said...

ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,, வலைபதிவாளர்கள் கடந்த ஒரு மாதக் காலமாக நாயாய்க் கத்தியதற்கு ஏதொ பலன் கிடைத்திருக்கிறது,
கேபில்சங்கர் எதும் இதைப் பற்றி எழ்தவில்லை என்று சொல்பவர்ர்களுக்கு,
அவர் கமலஹாசனைபோலெ சினிமா தான் உயிர்மூச்சி,,தன் வியாபாரத்துக்கு
ஒரு வடிகால் தேடிக்கொண்டிருப்பவர்,
அவரிடம் இதையெல்லாம் எதிப்பார்ப்
பது தவறு,,

Post a Comment