சென்ற பதிவில் சொன்ன 'தண்ணிக்கடைகள்' இருந்த தெருவைப் பார்த்து விட்டு இயல்பாக நடந்து வந்து கொண்டிருந்த போது இன்னொரு கட்டிடம் எங்கள் கவனைத்தைக் கவர்ந்தது.
நிறைய சன்னல்கள்; ஒவ்வொரு சன்னலும்
ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தன. அவைகளே ஒரு ஈர்ப்பைத் தந்தன. அந்த சன்னல்களின் வண்ணமே எங்களை அக்கட்டிடத்தின் பக்கம் இழுத்தன. என்னவென்று பார்க்க அக்கட்டிடம்
modern sculpture |
முதலில் ஒரு பகுதிக்குச் சென்று உள்ளே பார்ப்பதற்கும், படம் எடுப்பதற்கும் உத்தரவு கேட்டோம். எளிதாகக் கிடைத்தது. விளக்க பத்திகள் கொடுத்து, அமர்ந்து வாசிக்கவும் இனிதாக உத்தரவளித்தார்கள். ஆனால் அடுத்த ஹாலுக்குச் சென்றதும் அங்கிருந்தோர் புகைப்படம் எடுக்கக்கூடாதென்று சொல்லி விட்டார்கள்.
ஆனாலும் ஒரு நல்லூழ். வெளியே இருந்த பெரிய படங்களைப் படமெடுத்துவிட்டு வெளியே வர வேறொரு வாயிலைத் தேர்ந்தெடுத்தால் அங்கே ஒரு சித்திர கண்காட்சி நடந்து கொண்டிருந்தது.
அழகான ஜப்பானிய / சீன வண்ணச் சித்திரங்கள். மிக அழகாக அவைகளைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். படங்களைச் சுற்றிலும் மிக அழகான பூ வேலைப்பாடுகள். (இகபானா ??) வரைந்த மலர் ஓவியங்களும், நிஜ மலரடுக்குகளும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டிருந்தது மிக நன்றாக இருந்தன. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு head light போட்டிருந்ததால் புகைப்படங்களில் அவை ஒரு தடுக்க முடியாது தொல்லையாக, படங்களை அதன் முழு அழகோடு படம் எடுக்க முடியாதபடி அமைந்து விட்டது ஒரு சோகம். சுவற்றில் ஓர் அழகுப் படைப்பு |
உயர்ந்த ஒரு சுவர்; அதில் பரவலாக ஒழுகி விழும் நீர்; முன்னால் மூன்று வடிவங்கள் சுவற்றிலிருந்து துருத்திக் கொண்டு நின்றன. பார்க்க அவ்வளவு அழகு ...------------------>
சில படங்களை இங்கே தருகிறேன். மீதிப்படங்களைக் காண அங்கே வாருங்களேன் ....
5 comments:
நான் இது வரை இங்கு போனதில்லை.
இதுவரை நான் போகாத இடம்.
உங்கள் விவரணையில் கண்டுகொண்டேன்.
எங்கே? இருக்கும் மூணு நாலு நாளில் கோவில்களையும் நட்புகளையும், பாக்கி நேரத்தில் லிட்டில் இண்டியா தங்கத்தையும் பார்த்தால் இதுக்கு போக நேரமேது:(
ஆஹா ..
ஒரு உள்ளூர்வாசி, ஒரு உலகம் சுற்றும் டீச்சர் -- இவங்கல்லாம் பார்க்காததை நான் பார்த்துட்டேன்.
குமார், முடிந்தால் அந்த கண்காட்சியகத்தின் பெயர் கிடைத்தால் தாருங்கள்; சேர்த்து விடுவோம்.
வெக்கமா இருக்கு... நானும் இன்னும் இதெல்லாம் பார்க்கலை...
உங்களுக்குள்ள ஒரு தேடல் இருந்திருக்கு அதான் நீங்க தேடிப்போய் பார்த்திருக்கீங்க... :-)
good sharing. photos very nice. thank u for sharing such nice experience . it motivated other blogger to prepare well for next competition.
Post a Comment