Wednesday, September 22, 2010

442. சிங்கப்பூர் -- முடிவுரை மாதிரி ...

*

சிங்கையில் இருந்தது என்னவொ ஏழெட்டு  நாட்கள் தான். இருந்தாலும் யாரும் வாசிச்சாலும் வாசிக்கட்டாலும் சும்மா சகட்டு மேனிக்கு இடுகைகளை எழுதித் தள்ளிடுவோம்னு நினைத்தேன்.
அதே மாதிரி இது என் 17வது சிங்கைப் பதிவு; இதோடு என் நிழற்பட இடுகையில் படங்களாக 9 பதிவுகள் வேறு தனியாக!.


எங்கும் எதிலும் நியதி, சுய ஒழுக்கம், சுத்தம், சட்டம் பேணுதல் என்றிருப்பதைப் பார்த்ததும் எனக்கும் ஒரே ஜொள்ளு. நாம் இருக்கிற இடத்திலும் இப்படியெல்லாம் இருந்திட்டால் எம்புட்டு நல்லா இருக்கும்னு ஒரு ஆசை. அமெரிக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர் ஒரு முறை சொன்னார்: ஒரு தனி மனிதன் எந்த வகையான ஊழலும் இன்றி சுயமாக, மகிழ்ச்சியாக, தொல்லையின்றி வாழ முடியும் என்றார். அதே போல் அவரும் சரி, சிங்கையில் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்த இருவருமே எங்கள் ஊரில் 'கரெண்ட் கட்' என்பதே கிடையாது. இருவருக்கும் ஒரே ஒரு முறை மட்டும் சில நிமிடங்கள் அந்த அனுபவங்கள் அவரவர் வசிக்கும் நாட்டில் கிடைத்தது என்றார்கள். சிங்கையில் சாலைகள் அழகாக இருக்கின்றனவே; அதனால் அடிக்கடி ரோடு போட்டுக்கொண்டிருப்பார்களோ என்று சிங்கை நண்பரைக் கேட்டேன். அவரோ இதுவரை நான் எங்கும் ரோடு போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்ததில்லை என்றார்!

என்னமோ போங்க .. எதைக் கேட்டாலும், எதைப் பார்த்தாலும் இப்படி பிரமிப்பூட்டும் செய்திகள். நானோ முதல் இரு நாளிலேயே love at first sight ஆகிப் போயிருந்தேன். சென்ற இரண்டாம் நாள் barbecue-ல் சிங்கைப் பதிவர்கள் 'எப்படி சிங்கை?' என்றுகேட்டார்கள்.  நானும் I have fallen in love with Singapore என்றேன். உடனே சில பதில்கள்: மோகம் முப்பது நாள்; இருந்து பார்த்தால் தான் தெரியும்; அப்படி என்ன உங்களுக்குப் பிடித்து விட்டது?

மக்களைக் கனிவோடு பார்க்கும் ஒரு அரசு; ஆனால் நியாயமான சட்டங்களும் அவைகளைப் பேணலும் உள்ள ஓர் அரசு; நல்ல வாழ்க்கைச் சூழல்; வாழ்க்கை வசதிகள்; உயர் சமூக நிலை -- இப்படி எல்லாம் இருந்தால் அங்கே வாழ என்ன குறை என்று எனக்குத் தோன்றியது. வாழும் சிலருக்கு அந்த திருப்தி இல்லையென்றால் ஏனென எனக்குத் தெரியவில்லை. அவர்களிடமே கேட்டேன். 'சின்ன இடம்' என்றொரு பதில் வந்தது. மீண்டும் மீண்டும் அதே இடங்கள்; மனிதர்கள் என்றார். நானும் சொன்னேன்; மதுரையில் எனக்கு மட்டும் என்ன வாழ்க்கை பரந்து விரிந்தா கிடக்கிறது. எல்லோருக்கும் ஒரே micro-habitat. ஒரு சூழல். அதில் வாழ்க்கை சுற்றி சுற்றி வருகிறது. மிஞ்சிப் போனால் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்னைக்கு நாலைந்து நாள் பயணம். அதை விட்டால் சின்ன ஏரியா, பெரிய ஏரியா என்றெல்லாம் என்ன வேற்றுமை வந்து விடப் போகிறது. நீங்கள் சென்னையில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையும் ஒரு சின்ன வட்டத்துக்குள் தானே சுற்றி வரும் என்றேன்.

திருப்தியான பதில் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு வேளை என்னதான் இருந்தாலும் நம் நாட்டில் நம் உறவினர் / நமது சுற்றம் / நமது சூழல் / பிறந்த் வளர்ந்த இடம் என்றெல்லாம் தொலைவில் இருக்கும் அவர்களுக்குத்  தோன்றியிருக்கலாம். அல்லது பாரதிராஜா ஒரு படத்தின் ஆரம்பத்தில் பிறநத் மண்ணை விட்டுப் போதலே வாழ்க்கையின் கடுமையான சோகம் என்றாரே அதை அவர்கள் அனுபவிப்பதால் அப்படி தோன்றலாம். அவர்கள் தான் அதைச் சொல்ல வேண்டும்.

எனக்கு என்னவோ இங்கே நம் நாட்டில் இருக்கும் 'பாலை நிலையைப்' பார்த்த பின் அங்கே இருக்கும் ஒழுங்கு என்னை மிகவும் ஈர்த்தது. மிகப் படித்தவர்களுக்குக் கூட இங்கே civic sense  என்பதே தெரியாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். என் வேலை முடியணும் - இது ஒன்று மட்டுமே நமது குறிக்கோளாக இங்கே இருக்கிறது. ரோட்டை ஆக்கிரமித்து நாம் வீடு கட்டுவது முதல், நம் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டுப் பக்கம் தள்ளும் முனைப்பை எங்கும் எப்போதும் காணலாம். ஏற்கெனவே  சொன்னது போல் அடிப்படை நாகரீகம் இல்லாத வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலை அவ்வப்போது நெஞ்சை உறுத்துகிறது. ஒரு பாலைவனத்துக்காரன்  நல்ல விரிந்த தண்ணீர் ஏரியைக் கண்டதும் காணும்  ஆச்சரியம் எனக்கு.

சின்ன நாடு. அவர்களின் மரியாதைக்குரிய முதல் பிரதமர் கம்யூனிசவாதியாக இருந்தும் நாட்டை முதலாளித்துவ நாடாக மாற்றிய நிலை அங்கு. அதனால் தானோ என்னவோ   A big brother is watching  என்ற நிலை இருப்பது போல் நாண் உணர்ந்தேன். ஆனாலும் முறையான வாழ்க்கை வாழ்வோருக்கு அதுவும் ஒரு பொருட்டல்ல.

ஒரு வழியாக உங்கள் பொறுமையை முற்றும் சோதித்து விட்டேன் எனவே எண்ணுகிறேன். 8 நாளைக்கு இத்தனை இடுகைகள் மிகவும் சோதனைதான். ஒரு வேளை நண்பர் (மதுரை சரவணன்) பின்னூட்டத்தில் சொன்னது போல்   இந்த ஆண்டுக்குரிய மணற்கேணி போட்டியில் நம் பதிவர்களை முழு மூச்சோடு ஈடுபடுத்த இக்கட்டுரைகள் ஒரு கிரியா ஊக்கியாகச் செயல் பட்டால் நலமே ....


*


*





18 comments:

அமர பாரதி said...

நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே தருமி சார். நானும் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை பல முறை கேள்விக்குள்ளாக்கினாலும் சரியான லாஜிக்கலான பதில் கிடைக்கவில்லை. மற்ற நாடுகளைப் போல மிகவும் சிரமமான சூழ்நிலை இந்தியாவில் இல்லை என்பதாலும் இருக்கலாம். அடி மனதில் இருக்கும் ஒழுங்கற்ற மனப்பான்மை காரணமாக இருக்கலாம். எவ்வளவு நாள் இருந்தாலும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலை இருப்பையே உணர முடிகிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அமர பாரதி said...

நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே தருமி சார். நானும் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை பல முறை கேள்விக்குள்ளாக்கினாலும் சரியான லாஜிக்கலான பதில் கிடைக்கவில்லை. மற்ற நாடுகளைப் போல மிகவும் சிரமமான சூழ்நிலை இந்தியாவில் இல்லை என்பதாலும் இருக்கலாம். அடி மனதில் இருக்கும் ஒழுங்கற்ற மனப்பான்மை காரணமாக இருக்கலாம். எவ்வளவு நாள் இருந்தாலும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலை இருப்பையே உணர முடிகிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அலைகள் பாலா said...

என்ன சார்? அதுக்குள்ள முடிச்சுடிங்க?

ப.கந்தசாமி said...

நல்ல தொடர் பதிவு தருமி அவர்களே.

ஜெகதீசன் said...

ம்ம்ம்.... தெரியல..
எல்லாம் இருந்தும், எதையோ இழந்தது போல் ஒரு உணர்வு..
சென்னையில் இருந்தபோதும் கூட இப்படித்தான் உணர்ந்தேன்..
எங்க ஊரில் இருக்கும் போது மட்டுமே எனக்கு மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது போல இருக்கு... :)
எனக்கு சென்னையில் இருப்பதுவும் சிங்கையில் இருப்பதுவும் ஒன்றே.. இரண்டும் எனக்கு அந்நிய இடமே.

Thekkikattan|தெகா said...

//பிறந்த் வளர்ந்த இடம் என்றெல்லாம் தொலைவில் இருக்கும் அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். //

மிக முக்கியமான உளவியல் பின்னணி அதுதான், தருமி. ஒட்டியும் ஒட்ட முடியாமல் இருப்பதற்குக் காரணம். அதே நேரத்தில் அங்கயே இரண்டாவது தலைமுறையாக பிறந்து, வளர்த்து, படித்து வரும் பசங்கள பிடிச்சு நிறுத்தி கேளுங்க சொல்லுவாங்க எங்க ஊரு சிங்கைன்னு :) - சோ, காரணம் க்ளியரா புரியும்.

குழந்தைப் பருவம் மிக முக்கிய காரணம் அது போன்ற எண்ணத்திற்கின்னு நினைக்கிறேன். ஆனா, காலப் போக்கில இங்கிருந்து போனவங்களே மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கும் நிதர்சனம் புரியப் புரிய. நீங்க எஞ்சாய் பண்ணுவதற்கு வாய்ப்பிருக்கு ஏன்னா எதிர் பார்த்து எதிர் பார்த்து நொந்து நூடுல்ஸ்யாகிட்டீங்க அதேய்ன்.

எனக்கும் சிங்கப்பூர் ரொம்ப பிடிக்கும், இரண்டு உலகங்களும் அங்கயே கிடைக்குதே...

துளசி கோபால் said...

நம்ம மனுசருங்க திருந்துனாத்தான் நாடே உருப்படும். அதுவும் எதாவது ஒரு அரசியல் கட்சியில் எடுபிடியா இருந்தாக்கூட,'ஏய்....நான் யாரு தெரியுமா' னு சவுண்டு விடும் ஆசாமிகளும், அல்பக் காசானாலும் பரவாயில்லைன்னு கைநீட்டும் காவல்துறையினரும் என்னமோ தான் தான் உலகத்துலேயே பெரியவன் என்று அலட்டிக்கும் மனப்பான்மையும்.....

எல்லோரும் திருந்தணுங்க. ஓட்டு வாங்கறதைமட்டும் கவனிக்கும் அரசியல் வியாதிகளைச் சொல்லணும்.

முதல்லே சட்டம் எல்லோருக்கும் சமம் என்று இருக்கணும். வெறும் வாய்ச்சொல்லில் இல்லை. நெசமாவே அப்படி இருந்தால் எல்லாம் வழிக்கு வந்துரும்.

சிங்கப்பூர் தொடரை நான் ரொம்ப ரசித்துப் படிச்சேன். இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமுல்லே?

நீங்க கோவில்கள் பக்கம் போயிருக்க மாட்டீங்க...... அந்தக் கதைகள் தனி...... நாகரீகமும் வளர்ச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும்...... மூட நம்பிக்கைகளையும் ஒரு பக்கம் வளர்த்துக்கிட்டேதான் இருக்காங்க:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தொடர் ரசித்தோம்.. நன்றி.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

சிங்கப்பூர் அமெரிக்காவை விட நன்னா இருக்கே. பேசாமே அங்கெ வந்து settle ஆயிடலாம் என்று எனக்கு தோணுது!


என்றும் எப்போதும் அன்புடன்,
ஆட்டையாம்பட்டி அம்பட்டன்
அல்லது
அமெரிக்கா அம்பட்டன்!

வடுவூர் குமார் said...

நான் சிங்கையை சொர்கமாகத்தான் பார்க்கிறேன்.
தங்க நல்ல வீடு
காடு போல நாடு (அவ்வளவு பச்சை)
சுத்தமான காற்று/சூழ்நிலை
குறைவான செலவில் வெளியில் செல்ல போக்குவரத்து வசதிகள்.
குழந்தைகளுக்கு நல்ல கல்வி/ உலகத்தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள்.
ஒன்றே ஒன்று, வேலை மட்டும் இருக்கவேண்டும் அது இல்லாவிட்டால் பலர் பாடு திண்டாட்டம் தான்.
நல்ல தொடர்,அருமையாக சொல்லியிருந்தீர்கள்.ஏதாவது ஒரு அலுவலகம் உள்ளே சென்று பார்த்திருந்தால் அதில் வேறு ஒரு உலகத்தை பார்த்திருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

====> ஆனா, காலப் போக்கில இங்கிருந்து போனவங்களே மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கும் நிதர்சனம் புரியப் புரிய.//

நான் சொன்ன நிசர்சனம் புரியப் புரிய என்பதற்கு நண்பர் ‘வடுவூர் குமார்’ சில காரணிகளை முன் வைச்சிருக்கார் பாருங்க, அனுபவத்தோட, வயசோட இது மாதிரி உற்று கவனிக்க கவனிக்க பிடிபட ஆரம்பிக்கும்.

@ வடுவூர் குமார் ---ஒன்றே ஒன்று, வேலை மட்டும் இருக்கவேண்டும் அது இல்லாவிட்டால் பலர் பாடு திண்டாட்டம் தான்.--- :)) இது ரொம்ப ரொம்ப முக்கியம். இன்னொரு காரணம் நம்மாட்கள் அப்படி இன்செக்யூரா உணர்வதற்கு ஏதாவது ஒண்ணு ஆகி வேல போச்சுன்னா நம்மூரு மாதிரி அந்த warmth கிடைக்கிறதில்ல bills as usual continue to flow in , திரும்ப ஒரு நிலைய அடையிற வரைக்கும் படுத்திரும். ஊருன்னா அப்படியில்ல எப்படியோ ஓட்டிரலாங்கிற ஒரு தெம்பு இருக்கும் (விவசாயம், பெட்டிக்கடை ;), அம்மாப்பா பூர்விக சொத்து இல்லன்னா அவிங்களுக்கு பாரமா கூட இருந்து கொஞ்ச நாள் ஓட்டிரலாம் இப்படி... )

ஆஹா! திரும்ப நீளமாயிருச்சு - :D

தருமி said...

அலைகள் பாலா: என்ன சார்? அதுக்குள்ள முடிச்சுடிங்க?

துளசி: இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமுல்லே?

துளசி, அலைகள் பாலா,
அட போங்க'ங்க .. வழக்கமா வந்து நாலு பின்னூட்டம் போடுற ஆளுக கூட சிங்கைப் பதிவுகளுக்கு வரலையேன்னு நினச்சிக்கிட்டு இருக்கேன். நீங்க வேற :(

ராவணன் said...

//ஏதாவது ஒரு அலுவலகம் உள்ளே சென்று பார்த்திருந்தால் அதில் வேறு ஒரு உலகத்தை பார்த்திருக்கலாம்.//

எந்த நாட்டிலும் எந்த அலுவகத்திலும் ஓர் ஏழாவது உலகம் உண்டு.

மதுரை சரவணன் said...

அய்யா... பார்த்தவுடன் காதலை இப்படி திடீர்ன்னு நிறுத்தினா எப்படி... நான் இன்னும் அதிகம் எதிர்ப்பார்த்தேன்... ம்ம்ம்ம் ... இனி மதுரையைச் சுத்தி சுத்தி படம் எடுத்து ஓட்டுவோம்.. பகிர்வுக்கு நன்றி. இன்றே இப்படம் கடைசி ... சீக்கிரம் பாருங்கா.... ட்ம் டம் டம் ..

தருமி said...

//நான் சிங்கையை சொர்கமாகத்தான் பார்க்கிறேன்.//

நான் நினைத்ததைச் சொல்லிட்டீங்க வடுவூர். நன்றி

Jerry Eshananda said...

எனக்கும் ஒரே ஜொள்ளு. //
பயந்துட்டேன்..பெரிய வாத்தியாரே..

Anonymous said...

ஒரு வழியா சிங்கை புராணம் முடிஞ்சுதா??? அப்பாடா..

தருமி said...

//ஒரு வழியா சிங்கை புராணம் முடிஞ்சுதா??? அப்பாடா..//

ஏதோ எல்லாப் பதிவையும் படிச்சு முடிச்சது மாதிரி பெருமூச்சு விடுறீங்க..அம்புட்டு கஷ்டப்பட்டா படிச்சீங்க? அப்பாடான்றீங்களே அதான் கேட்டேன்.

Post a Comment