சிங்கப்பூர் சுழல் குடை ... ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஒரு பெரும் சக்கரம். 40 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமான இரும்பு அதிசயம். உலகத்தில் இதுபோல் உள்ள பெரும் சக்கரங்களில் இதுவே மிகப் பெரியதாம்.
| தூரத்திலிருந்து .... |
| தரையில் ஒரு பெட்டி மட்டும் .. பின்னால் flyer |
| comparative figures of tall structures |
| கூண்டுக்குள் ... |
நாமதான் கொஞ்சம் ஓட்டை இதயம் வச்சிருக்கோமே .. போகலாமா வேண்டாமான்னு கொஞ்சம் யோசித்தேன். ஆனால் இதில் யார் வேண்டுமானாலும் போகலாம். ஏனெனில் அந்தச் சக்கரம் அசையவேயில்லை. அப்படியே பூப்பூவாய் மெல்ல .. மெல்ல நகர்கிறது. அது நகருவதே நமக்குத் தெரியவில்லை.
| கூண்டிலிருந்து ... |
| தூரத்துக் கட்டிடங்கள் |
ஊரும் தெரியுது .. பக்கத்து மலேஷியா, இந்தோனேஷியா தெரியுதுன்னு சொன்னாங்க ...
| Main Axis- அச்சும் ஆரமும் .. |
| மேலிருந்து கீழ் ... |
| எங்களுக்கு முந்திய பெட்டி பச்சை வண்ணப்பெட்டிக்குள் .. இருக்கை வசதிகளோடு .. எளிதாக பத்துப் பதினைந்து பேர் அமர முடியும். |
Marina Bay Sands: சிங்கையில் என் கண்ணக் கவர்ந்த கட்டிடம். மூன்று கோபுரங்கள் .. அதன் மேல் அந்த மூன்று கட்டிடங்களையும் இணைத்து, கப்பல் போல் ஒரு கட்டிடம். அதன் மேல் செடியும் கொடியும் ... உலகத்தின் இரண்டாவது பெரிய Casino.
| மேலிருந்து கீழ் |
| தரையில் இத்துனூண்டு ஆட்கள் ! |
*
இன்னும் சில படங்களுக்கு இங்கே வாருங்களேன் ...
2 comments:
இன்னொரு இறகு உங்க தொப்பிக்கு!
இதுவும் நான் போகலை. மகள் மட்டும் இங்கே சென்னைக்கு எங்களைப் பார்க்க வந்துட்டுத் திரும்பிப் போனபோது ஃப்ளையரில் ஏறி சுத்திட்டு படங்கள் எடுத்து அனுப்பினாள்.
விமானநிலையத்தில் இருந்து ஃப்ளையருக்குப் போகவர தனி பஸ் சர்வீஸ் நடக்குதாம்.
//இன்னொரு இறகு உங்க தொப்பிக்கு!//
அடேய் தருமி! பின்னீட்டடா ..! நம்ம டீச்சரை மறுபடியும் தாண்டிட்டியே !!
Post a Comment