Monday, October 31, 2005

99. வாழ்த்து


தீபாவளித் திருநாளைக் கொண்டாடும்
வலைஞர்களுக்கும்,
அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் மனம் நிறைந்த
ஒ ளி நி றை
ந ல் வா ழ் த் து க் க ள்.
அன்புடன்….தருமி
p.s.: photo is specially takenfor this occasion as recentlyas in 1977
Oct 31 2005 02:09 pm அவியல்... edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 4 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
11 Responses
Suresh - Penathal Says: after publication. e -->October 31st, 2005 at 2:38 pm e
Thanks for the wishes and wish your family the same..
//as recently as in 1977 // — Inspired by Dondu
குமரன் Says: after publication. e -->October 31st, 2005 at 4:08 pm e
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தருமி….
PositiveRAMA Says: after publication. e -->October 31st, 2005 at 4:14 pm e
வாழ்த்துக்கு நன்றி! படம் அருமை! என்னுடைய அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்.
kid Says: after publication. e -->October 31st, 2005 at 5:01 pm e
Ennakkaeva!!!!!!!
Dharumiku Mattum Puriyumm
Deepavali Vaalthukkal
இராமநாதர் Says: after publication. e -->October 31st, 2005 at 6:41 pm e
தருமிதீபாவளி நல்வாழ்த்துக்கள்
hameed abdullah Says: after publication. e -->October 31st, 2005 at 7:24 pm e
Ungalukkum Matra valaingarkalukkum Ennaip ponta Valai pathivu vaasarkalukkum Innum Ellorukkum Iniya Deepaval$Ramzaan NAL VAAZTTHUKKAL>>>>>
துளசி கோபால் Says: after publication. e -->November 1st, 2005 at 5:53 am e
தருமி,
உங்களூக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அது என்ன 99a, 99 bன்னு போடறீங்க? 100வதுக்கு நல்ல பதிவாப் போடணுமுன்னா? ஓடுமீன் ஓட உறுமீனுக்குக் காத்திருக்கணுமா நாங்க?
P.V.Sri Rangan Says: after publication. e -->November 1st, 2005 at 7:44 pm e
தருமி ஐயா,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Ramya Nageswaran Says: after publication. e -->November 1st, 2005 at 8:00 pm e
தருமி ஐயா, உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
படத்தில் இருக்கும் இந்த அழகுப் பெண் குழந்தை உங்க அன்பு மகளா?
ivarugala Says: after publication. e -->November 1st, 2005 at 8:58 pm e
kiddy ma வுக்கு மட்டுமல்ல எனக்கும் புரியும்.
வாழ்த்துக்கள்.
Awwai Says: after publication. e -->November 1st, 2005 at 9:25 pm e
Andha azhagai pattRi ungalukkum therindhAl neenga sollungalEn, Azhagu!Unga punaippeyar nalla irukku!

99a. ரமலான் வாழ்த்துக்கள்

தருமி

ரமலான் பண்டிகை கொண்டாடும்
நண்பர்களுக்கு
அன்பான
வாழ்த்துக்கள்.
Oct 31 2005 01:14 am அவியல்... edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
4 Responses
ஜோ Says: after publication. e -->October 31st, 2005 at 9:15 pm e
இஸ்லாமிய அன்பர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!
Anony Says: after publication. e -->November 2nd, 2005 at 6:42 am e
Not funny!
ரமலான் வாழ்த்து சொல்லும் “மாற்று மத அன்பர்”களுக்காக - தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பரஞ்சோதி Says: after publication. e -->November 2nd, 2005 at 11:14 am e
அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்.
கோ.இராகவன் Says: after publication. e -->November 2nd, 2005 at 2:25 pm e
இஸ்லாமிய அன்பர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்.

Saturday, October 29, 2005

98. நடிகையர் திலகம் vs ராதிகா

98. நடிகையர் திலகம் vs ராதிகா
என்ன மாதிரி பழைய ஆளுங்ககிட்ட கேளுங்க, ஒண்ணுபோல ஒரே மாதிரி பதில் சொல்லுவோம். கேட்டுப் பாருங்களேன் - தமிழில் நல்லா வசனம் பேசுற நடிகை யாருன்னு? டக்குன்னு பதில் வரும்: ‘
கண்ணாம்பா’ன்னு. அதாங்க, மனோகராவில சிவாஜிக்கு அம்மாவா வருவாங்களே, அவங்க.
அதே மாதிரி, நடிப்புக்கு எந்த நடிகைன்னு கேளுங்க; சாவித்திரி அப்டீம்பாங்க.

முதல்ல சொன்னவங்க பூர்வீகம் தமிழ் நாடுகூட இல்ல; ஆனா தமிழ பிச்சு வாங்கிருவாங்க. அப்படி ஒரு modulation, clarity… அப்படி முழிச்சி பாத்தாங்கன்னாலே நாம ஒரு வழியா ஆயிடுவோம். மூச்சு விடாம வசனம் பேசுவாங்க -மனோகராவில பாத்திருப்பீங்களே! ‘ போதுமடா மகனே, பொறுத்தது போதும்; பொங்கி எழு, மனோகரா’ அப்டீங்கிற வசனம் இன்னைக்கி வரைக்கும் நம்ம காதில் ஒலிக்குமே.

அடுத்தது, சாவித்திரி அவர்கள். நல்ல நடிகை; ஆனாலும், இப்போவெல்லாம் அவங்கள நினச்சாலே அவங்களோட பரிதாப கடைசி நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது. எப்படி ஒரு வீழ்ச்சி. யார்தான் இந்தக் குடியைக் கண்டுபிடித்தார்களோ. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டம் என்பார்கள். சாவித்திரி சொந்தமாக எடுத்த, ‘பிராப்தம்’, சிவாஜி நடித்த அந்தப் படமே ஒரு பெரும் சோகக் காவியம்; அப்போதே அவர்களின் வாழ்வின் அஸ்தமன காலம் ஆரம்பித்து விட்டது.

பாசமலர் படம் அவருக்கும், சிவாஜிக்கும் ஒரு மகுடம். ( குமுதம் இந்தப் படத்திற்கு எழுதிய விமர்சனம் நன்றாக நினைவிலிருக்கிறது.: ‘பாசமலர்- அது வெறும் காகித மலர்!’ நம் தமிழ் பத்திரிகையின் சினிமா விமர்சர்களுக்கு differentiating between grain and chaff தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.) அதன்பின் வந்த படங்களில் இந்த இரு பெரும் கலைஞர்களும் காதல் ஜோடிகளாக வருவதைத் தமிழுலகமே ஒத்துக்கொள்ள மறுத்தது. Such was the impact of Pasamalar!

நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடங்கள் என்றால் சாவித்திரிக்கும் ஏறத்தாழ அதே மாதிரிதான். அழகாகச் செய்திருப்பார்கள். சிவாஜியோடு இணைந்து உணர்ச்சிப் பிழம்பாய் (ஓவர் ஆக்டிங்?) நடித்தார் என்றால், ஜெமினியோடு சேர்ந்து இயல்பான, மிகையற்ற நடிப்பிலும் ஒளிர்ந்தார். என்ன ஒண்ணு, அந்தக் காலத்தில சிவாஜிக்கும், நம்ம ஆளு எம்.ஜி.ஆருக்கும் ஒரு போட்டி; இவர் ஒரு நடிகையோடு நடித்தால் அவர் அதே நடிகையை அடுத்த படத்திற்கு ‘புக்’ செய்துவிட வேண்டும். பாசமலர் பெற்ற வெற்றியைப் பார்த்த எம்.ஜி.ஆர். தன் அடுத்த படமான ‘வேட்டைக்காரன்’ என்ற படத்திற்கு சாவித்திரியோடு சேர்ந்து நடித்தார். ‘மெதுவா..மெதுவா..தொடலாமா, மேனியிலே கை படலாமா?” என்றொரு பாட்டு. பாட்டு என்னவோ, மெதுவா..மெதுவா அப்டின்னுதான் வரும்; ஆனா நம்ம தலைவர் பிடிக்கிற பிடி…செம பிடி…! அது என்னவோ, தலைவர்கூட நடிக்கிற நடிகைமேல கூட எரிச்சல் வர்ர மாதிரி ஆயிடும். சரி..சரி…digression வேண்டாம்!


எனக்கும் எப்பவுமே நடிப்புக்கு சாவித்திரின்னுதான் இருந்திச்சு. சாவித்திரி எல்லா ரோலும் பண்ணினாலும் சோக நடிப்புக்கு அவர்தான் அப்டிங்கிறது ஒரு முடிவான விஷயமா என்னைப் பொறுத்தவரை இருந்தது. நாளாக நாளாக அந்தக் கருத்து மாறிடிச்சி. இப்போ என்னைப் பொறுத்தவரை, இதுவரை நம் தமிழ் நடிகைகளில் டாப் யாருன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு, ‘ராதிகா’ என்பேன்.

அந்த எண்ணம் முதலில் வந்தது அவரும், விக்ரமும் (!) சேர்ந்து நடித்த ‘சிறகுகள்’ என்ற சின்னத்திரைக்காக எடுத்த படம் பார்த்தபோதுதான். அதன்பின் பல படங்கள். அதிலும் முக்கியமாக, அவரது சிறந்த நடிப்பு அதிகம் பேசப்படாத ‘ஜீன்ஸ்’ படத்தில் அவரது negative role - simply superb. அதன் பிறகு வந்த, கிழக்குச் சீமை, அதைவிடவும் பசும்பொன்…வாவ்… ராதிகா நடித்ததில் மிகவும் பிடித்த படம் அதுதான்.

சாவித்திரியை விடவும் variety roles செய்தது ராதிகாதான். முதல்வரிடம் இல்லாத சிலவகைத் திறமைகளை ராதிகாவிடம் கண்டிருக்கிறேன். சூட்டிகையான பெண்ணாக, glamour ரோல் (சாவித்திரியை அப்படிக் கற்பனைகூட பண்ண முடியவில்லை!);tough and strong lady ரோல்; இப்படி எந்த ரோலையும் எளிதாகச் செய்த ராதிகாவிற்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் அவர் பல படங்களில் challenging roles பண்ணியிருக்க வேண்டும்; இனிமேயாவது பண்ண வேண்டும்.


ஆனால், அது முடியாது போயிற்று. சாவித்திரிக்கு குடிப்பழக்கமும், அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளும் அவரது திரைப்பயணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியானதென்றால், இவருக்கோ வேறொரு மெகா பூதம் மெகா சீரியல் என்ற ரூபத்தில் வந்து விட்டது. அனகொண்டாவை விடவும் இந்த ‘முழுங்கு பூதம்’ அவரை மொத்தமாய் விழுங்கி விட்டது. இனி அவர் அதிலிருந்து வெளி வருவது அனேகமாக நடக்காத காரியம்தான்.

தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரும் நட்டம்தான்.


பி.கு.ராதிகா நடித்த முதல் படம் - கிழக்கே போகும் ரயில். இடைவேளை வரை கூடவந்த நண்பன் பொறுத்துக் கொண்டான். அதற்கு மேல் முடியவில்லை; இந்த மூஞ்சிகளைப் பார்க்கவே சகிக்கவில்லை என்று எழுந்து போய்விட்டான்; நான் பாரதி ராஜாவுக்காக முழுப் படமும் பார்த்தேன். அப்படி அசிங்கமாக (யாரும் கோவிக்க மாட்டீங்களே?) இருந்த ஒரு பெண் எப்படி அழகாகவே மாறினார். ‘அப்படி இருந்தவர் எப்படி இப்படி ஆனார்?

 ( அதேபோல், விஜய் சின்னப் பையனாக முதலில் தோன்றிய ஒரு படம், பெயர் தெரியவில்லை. ரஜினிக்கு ராம்கி மாதிரி விஜய்க்கு யாருங்க அங்கே? ஆனா என்ன? விஜய் ஏறக்குறைய அதே மாதிரிதான் இருக்கார்;கொஞ்சம் பரவாயில்லை. அடுத்து விஜயகாந்த் - எப்படி இவுங்கல்லாம் சகிக்காத மூஞ்சுகளோடு வந்து அப்புறம் மாறிடுராங்க?) எனக்கு என்ன சந்தேகம்னா, ராதிகா அழகா( அழகுன்னா உடனே அஸினோட கம்பேர் பண்ணிடவேணாம்!)உண்மையிலேயே மாறிட்டாங்களா; இல்லா, பாத்துப் பாத்து நமக்கு அப்படி ஒரு acceptance வந்திருதா? தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன். சொல்றீங்களா???

(அப்பாடி, ஒரு வழியா தருமி அப்டீங்கிற பேரைக் காப்பாத்திக்கிறதுக்காகவே ஒரு கேள்வியோடு இந்தப் பதிவை முடிச்சிட்டேன்; இல்லைன்ன நம்ம பையன் அவ்வைக்குக் கோபம் வரும்!)


Oct 29 2005 07:46 pm சினிமா edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
21 Responses
padma arvind Says: after publication. e -->October 29th, 2005 at 9:10 pm e
தருமி: இப்போதுதான் நீங்கள் எழுதிய சிவாஜி எம்ஜியார் கட்டுரைகளை படித்தேன்.எனக்கு ராதிகாவின் நடிப்பில் நான் பார்த்த இரண்டு படங்களில் பிடித்தது சிப்பிக்குள் முத்து படத்தில் மட்டுமே.முதலாவது கிழக்கே போகும் ரயில். அதை பார்த்தவுடன் சாதாரண பெண்கள் கூட த்ரையில் நடிக்க முடியும் என்றதுதான்.சாவித்ரியின் முகபாவங்கள், நடிப்பு பிடிக்கும் என்றாலும் அனியாயமாக குண்டாக இருந்ததாக ஒரு எண்ணம் அதுவும் பச்சைவண்ணம் பூசி திருவிளையாடலில் நடித்த சில காட்சிகள் !!
ஜோ Says: after publication. e -->October 29th, 2005 at 9:41 pm e
தருமி,சாவித்திரியின் தாய்மொழி கூட தெலுங்கு தான் .எனக்கு இன்னும் சாவித்திரி தான் ‘நடிகையர் திலகம்’.
ஜோ Says: after publication. e -->October 29th, 2005 at 9:43 pm e
நவராத்திரி அந்த கூத்துப்பாட்டு ஒன்று போதும் சாவித்திரியின் திறமையை சொல்வதற்கு .சும்மா அனாசயமா பண்ணிருப்பாங்க.
ennar Says: after publication. e -->October 29th, 2005 at 9:51 pm e
தங்கப்பதுமை பத்மினி அத்தா…ன் உங்கள் கண்கள் எங்கே?கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டி மானே வளத்தவனே வெறுத்துவிட்டான்டி நீதி நிலைபெற என் குங்கும் நிலைத்திருக்க உங்கள் மனைவி கேட்கிறேன் சொல்லுங்கள் அத்தான்.சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு சம்சாரம் எதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
தாணு Says: after publication. e -->October 29th, 2005 at 10:05 pm e
பாஞ்சாலியை எல்லோருக்கும் பிடிச்சது அழகுக்காக இல்லை, அந்த கொஞ்சல் மொழிக்காக. இன்னும் அது அவ்வளவா மாறலியே
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->October 30th, 2005 at 3:21 am e
ராதிகாவை விட கூட நடித்த உஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரிய கிருதாவுடன் தடித்து வந்த ராதிகா பாரதிராஜா அறிமுக படுத்திய ஹீரோயின்களில் வசீகரம் குறைந்தவர். அதற்குப் பின் வந்ததெல்லாம் சினிமா தந்த ஜோடணை அழகு.
P.V.Sri Rangan Says: after publication. e -->October 30th, 2005 at 5:10 am e
தருமி,வணக்கம்!பனையோலை மிக அழகாகத் தங்கள் கமிராவுக்குள் படமாகியுள்ளது.பதிவு நன்று.எனக்குப் பிடித்த நடிகை சோபா.மிக வெகுளித்தனமாக,இயல்பாக நடிக்கும் ஆற்றலை வேறெவரிடமும் பார்க்கமுடியாது.இந்தச் சோபாவை அற்புதமாக வெளிப்படுத்திய பாலுமகேந்திரா அவரைக் கொண்டுபோட்டதாகவும் ஒரு வதந்தியுண்டு.சோபாவின் மறைவையொட்டி நான் பலநாட்கள் மனம் நொந்தவன்.இராதிகாவிடம் நடிப்பைப் பார்த்தோம்.ஆனால் இயல்பாக சட்டகத்துள் வாழும் வாழ்வைப் பார்க்கமுடியாது.இத்தகைய ஆற்றல் சோபாவிடமே காணமுடியும்.
LLDasu Says: after publication. e -->October 30th, 2005 at 7:24 am e
//விஜய் ஏறக்குறைய அதே மாதிரிதான் இருக்கார்;//
விஜயின் முதல் பட குமுதம் விமர்சனத்தில் ‘ இந்த மூஞ்சயெல்லாம் ‘ என எழுதியிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ரசிகர் மன்ற தலைவரிடமிருந்து(!!) வந்த கண்டன கடிதத்தைத் தொடர்ந்து , குமுதம் ஆசிரியர் ‘இனிமேல் விஜய் பற்றிய செய்திகள் குமுதத்தில் வராது ‘ என எழுடியிருந்தார் .. ஓரிரு வருடங்களிலே விஜய் வாழ்க்கை வரலாறை குமுதம் பிரசுரித்தது …
//அடுத்து விஜயகாந்த் - எப்படி இவுங்கல்லாம் சகிக்காத மூஞ்சுகளோடு வந்து அப்புறம் மாறிடுராங்க?//
விஜயகாந்த் மாறிட்டாரா?? அதுசரி கொ.ப.செ.க்கிட்டயிருந்து என்ன எதிர்பார்க்கமுடியும் ?
Annonymous Says: after publication. e -->October 30th, 2005 at 9:24 am e
ரஜினிக்கு ராம்கி மாதிரி விஜய்க்கு யாருங்க அங்கே?
Ramki, kevalam ithu
ramachandran usha Says: after publication. e -->October 30th, 2005 at 10:07 am e
தருமி, தாஜ்மகால் என்ற படு திராபையான படத்தில் சில காட்சிகளில் வரும் ராதிகாவின் நடிப்பு பார்த்திருக்கிறீர்களா? இதுவரைஅவர் நடித்ததில் மிக பிடித்தது அந்த நடிப்புத்தான்.அப்புறம் சாவித்திரி ம்ம்ம்ம், நா உங்க மாதிரி வயசாளி இல்லைங்க ))))))))))ராகவன், நடிப்பை மட்டும் பார்ப்போமே? நீங்கள் ராதிகாவின் சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதாய் தோன்றியதால் இதை குறிப்பிட்டேன்.
//இராதிகாவிடம் நடிப்பைப் பார்த்தோம்.ஆனால் இயல்பாக சட்டகத்துள் வாழும் வாழ்வைப் பார்க்கமுடியாது//
Awwai Says: after publication. e -->October 30th, 2005 at 10:24 am e
Ramachandran Usha, I guess there is a misunderstanding; what Raghavan means is, “we see Radhika *acting* but not living (like Shobha does) inside the frame (of the camera)”. Which means, Shobha’s acting is so natural that it doesn’t appear it is ‘acting’, whereas Radhika’s performance comes out as “good acting”, where you are not able to forget the actor when you look at the character. Shobha acheives that.
Awwai Says: after publication. e -->October 30th, 2005 at 10:27 am e
Correction: “Sri Rangan” not “Raghavan”
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:05 am e
உஷா,நம்ம பையன் அவ்வை ‘தனியொருவனாக வந்து’ நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிச் சென்று என் வேலையை எளிதாக்கி விட்டான்.நீங்களே சொல்லிவிட்டீர்கள் தாஜ்மகல் திராபை என்று. நான் பார்க்கவே இல்லை. இது தொடர்பாக ஒரு கேள்வி: ஒருவேளை பா.ரா.வின் மகன் மனோஜும் நிறைய படங்களில் வந்திருந்தால் அவர் ‘மூஞ்சும்’ சகிக்கும்படி ஆயிருக்குமோ? - விஜய் மாதிரி!
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:25 am e
padma arvind,“சாதாரண பெண்கள் கூட திரையில் நடிக்க முடியும் என்றதுதான்.” - இந்த விஷயத்தில் எல்லாப் புகழும் பாரா.வுக்கே!பாண்டியன், சந்திரசேகர்,பா.ரா. - இப்படி யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்து, உங்களையெல்லாம் பார்க்கவும் வைப்பேன் என்று சொல்லி, செய்தும் காட்டியவர்தான். என் கேள்வி இன்னும் நிற்கிறது: அவர்கள் உண்மையிலேயே அழகாக மாறி விடுகிறார்களா; இல்லை, நம்முடைய tolerance level கூடி விடுகிறதா என்பதுதான்.
joe,கண்ணாம்பாவைத் தெலுங்கர் என்று சொன்னது in spite of that.. என்ற பொருளில் கொள்க. “அப்படி ஒரு modulation, clarity… ”
P.V.Sri Rangan,மர்லின் மன்றோ ஒருவேளை வயதாகி, இயற்கையாக மரணமடைந்திருந்தால் இப்போதுள்ளது மாதிரிஎல்லோர் நினைவிலும் இன்னும் நீங்காது இருப்பாரா என்ற ஐயம் உண்டு. அது போலவே ஷோபாவின் மரணம் அவரைச் சுற்றி ஒரு aura-வையும், halo-வையும் விட்டுச் சென்று விட்டதோ என்றொரு ஐயம் உண்டு.
வெளிகண்ட நாதர்,“ராதிகாவை விட கூட நடித்த உஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.//உஷா..who? !
LLDasu,விஜயகாந்த் மாறிட்டாரா?? அதுசரி கொ.ப.செ.க்கிட்டயிருந்து என்ன எதிர்பார்க்கமுடியும்//இப்படி வாரீட்டீங்களே, தலீவா!!ஆனாலும் கேப்டன் இத்தனை நாள் ‘வண்டிய’ ஓட்டிட்டாரா இல்லியா?
ramachandran usha Says: after publication. e -->October 30th, 2005 at 11:47 am e
ஸ்ரீரங்கன் மன்னிக்க, போட்ட பிறகு தோன்றியது, ஸ்ரீரங்கன் இப்படி எழுத மாட்டாரே என்று! அதற்குள் வீட்டில் ஒரு சிறு குழப்பம்,மனம் வேறு திசையில் திரும்பிவிட்டது.தருமி, அந்த “உஷா” ராஜேந்தர் மனைவி, அன்றைய லிட்டில் சூப்பர் ஸ்டார், தற்போதய ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்று தானே நாமகரணம் சூட்டிக்கொண்ட சிம்பிவின் தாய்.அந்த திராபை படத்தை ராதிகாவுக்காக பாருங்கள்
P.V.Sri Rangan Says: after publication. e -->October 30th, 2005 at 1:02 pm e
Awwai Says:October 30th, 2005 at 10:24 am>>>>>Ramachandran Usha, I guess there is a misunderstanding; what Raghavan means is, “we see Radhika *acting* but not living (like Shobha does) inside the frame (of the camera)”. Which means, Shobha’s acting is so natural that it doesn’t appear it is ‘acting’, whereas Radhika’s performance comes out as “good acting”, where you are not able to forget the actor when you look at the character. Shobha acheives that.
P.V.Sri Rangan Says: after publication. e -->October 30th, 2005 at 1:05 pm e
நான் இதையேதாம் கூறினேன்.நன்றி,ஒளவை!மற்றும்படி தனிப்பட்ட வாழ்வைச் சொல்லுவேனா?இராதிகாபோன்றவர்கள் மிகவும் முன்னேறிய படிப்பாளிகள்.அவர்களின் தெரிவு,அவர்களின் தனிநபர் சுதந்திரம்.அதைப்பேச நாம் யார்?அன்புடன்ப.வி.ஸ்ரீரங்கன்
Awwai Says: after publication. e -->October 30th, 2005 at 8:04 pm e
To answer the ‘becoming beautiful’ question, I think it has to do with conditioning of the mind. Even our charismatic Rajinikanth is commented badly outside Tamizhnadu and Japan! We too don’t find the leading film personalities of Telugu or Kannada attractive! You keep seeing a face and your mind opens up to the beauty to which it had been blind till then! Why else would most of us feel ‘good’ after spending 5 minutes infront of the mirror!
Secondly, it has to do with the ‘build up’ given to these people. This technique is very wisely utilized by our very own Dharumi. First he hides his identity under an interesting pseudonym; then writes an elaborate note on why he chose that name. Then after keeping people guessing for a while (he himself becomes impatient) he reveals part of his identity. Then he posts his childhood photograph. Then a 30-year-old photograph, and then to top it, a back pose that covers the ‘bright-spot and the silver lining’. And then finally for his 100th posting he will dramatically post a smiling picture! Lo! we all will be excited to see him! )(Sam-Ji! you don’t have to change your plan now. I know you’d have already gotten the 100th posting and the bestest of all pictures ready for posting. Deepavali release?—Anyways, why do you always refer to me as ‘தனியொருவனாக வந்து’? Is it because I was the one who posted a scientific and logical counter-arguement for your series on God and Religion? Eager to see your reponse to my essay.anbudan Awwai.
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 8:36 pm e
hi awwai,you are too cute, boy! and at the same time a spoilsport!!
you are the first one among those to whom i sent an info about my blog initially. you got / caught me right and now actually i have plans to put a photo of mine, as you have correctly guessed, in the hundredth post! any way i am yet to decide on the photo that i would place in the blog -//he will dramatically post a smiling picture! //that one or a serious one!? but you have said ’smiling picture’ and so let me go by your decision /judgment.
no wonder you passed meritoriously in all the 8 entrance exams you sat for after your U.G.!
//Why else would most of us feel ‘good’ after spending 5 minutes infront of the mirror!// let me try tomorrow, ‘coz i do spend less than that.
“why do you always refer to me as ‘தனியொருவனாக வந்து’”// that is the வசனம் of the pandiya king in திருவிளையாடல், you know.
அன்புடன்….தருமி
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 9:53 pm e
//joe,கண்ணாம்பாவைத் தெலுங்கர் என்று சொன்னது in spite of that.. என்ற பொருளில் கொள்க. “அப்படி ஒரு modulation, clarity… ”//அது தெரியுது .ஆனா எங்க சாவித்திரி மட்டும் என்னவாம்? திருவிளையாடல் படத்தி
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 9:54 pm e
//joe,கண்ணாம்பாவைத் தெலுங்கர் என்று சொன்னது in spite of that.. என்ற பொருளில் கொள்க. “அப்படி ஒரு modulation, clarity… ”//அது தெரியுது .ஆனா எங்க சாவித்திரி மட்டும் என்னவாம்? திருவிளையாடல் படத்தில் சிவனும் சக்தியும் மோதும் இடத்தில் நம்ம சிம்மக்குரலோனுக்கு வேறு யாரும் ஈடு கொடுத்திருக்க முடியுமுண்ணு நினைக்குறீங்க ?Never.

Saturday, October 22, 2005

95. என் மனக் காய்ச்சல்…

நமக்கோ சுயக் கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தேனும் கிடையாது; ஆனாலும் நாம் எல்லோருமே பெரிய படிப்பாளிகள்; சிலர் படைப்பாளிகள்கூட. ஆயினும் என்ன? என் வாழ்நாளில் நான் சந்தித்த இருபது இருபத்தோரு வயதுக்கும் குறைவான என் மாணவர்களைவிடவும் மோசமாக நடந்து கொள்ளும் பதிவாளர்களைக் காணும்போது, அதுவும் இவர்களின் கையில் நாளை என் நாடு என்னும்போது பயம்தான் வருகிறது.
என் மாணவர்களிடம் நான் சொல்லும் ஒரு வழக்கமான விதயம்: உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்களும் உங்கள் எல்லை தெரிந்து அதை முற்றாகவும், நன்றாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் - என்று சொல்வதுண்டு. அவர்கள் புத்திசாலிகள். ஒரு சில நேரங்களில் தவிர அவர்கள் அவர்கள் எல்லைக்குள் இருந்து நான் எந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு கொடுத்ததில்லை. அவர்களுக்கும் என்னை நன்கு தெரியும். எல்லைக் கோட்டைத் தாண்டினால் அது எனக்கும் அவர்களுக்குமே நன்றாக இருக்காது என்று.
இது சுய புராணமில்லை. நடந்தது.
முதலில், காசி முன்னறிவிப்புகள் இன்னும் கொடுத்து, தனி மடல்களிட்டு, பிறகு நீக்க நினைக்கும் பதிவுகளை நீக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால், அதற்கு நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம். நேற்றுவரை நல்லவன், வல்லவன் என்றெல்லாம் நாம்தானே புகழ்ந்தோம்; இன்று நாமே வரைமுறையில்லாமல் பேசுகிறோமே என்றாவது நமது அறிவுஜீவிகள் கொஞ்சம் யோசிக்க மாட்டார்களா? ‘என்னைத் தூக்கி வெளியே போட்டுட்டியா; போகுது போ; நீ நல்லா இரு; நானும் வாழ்ந்து காண்பிக்கிறேன்’ என்றால் அல்லவா உங்கள் தகுதிகளுக்குப் பொருந்தும். புனைப்பெயர்களுக்குள்ளும், அனானிமஸ்களாகவும் உலா வருவதால் வரும் தைரியமா?
சரி, காசி தவறே செய்து விட்டார்; தட்டிக் கேட்கணும்னா, அதுக்கு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்ற விவஸ்தைகூட இல்லாமல் எவ்வளவு அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘நாங்கள் இவ்வளவுதான்’ என்று நிரூபிப்பது எவ்வளவு சரி?
சிலர் கடுமையான வார்த்தைகள் என்றால், சிலர் அங்கதம் என்றொரு பாணியாமே, அதில் விளையாடுகிறார்கள்; நேரமா அதற்கு இப்போது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா திறமை?
‘உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று பைபிளில் ஓரிடத்தில் வரும். கல் எறியுங்கள்; அதற்கு முன் உங்களையே கண்ணாடிகளில் பார்த்துக் கொள்ளுங்கள்…
இந்தத் தடங்கல்களையும், இரு புற மனக் காயங்களையும் தாண்டி நாமும், நம் தமிழ்மணமும் தொடர்ந்து வளர்வோம் என்று நம்புகிறேன்; விழைகிறேன்.
we have miles to go………
Oct 22 2005 04:05 pm அவியல்... edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 6 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
23 Responses
ஜோ Says: after publication. e -->October 22nd, 2005 at 4:40 pm e
100 % சரியா சொல்லிருக்கீங்க
inomeno Says: after publication. e -->October 22nd, 2005 at 8:45 pm e
/ஆனால், அதற்கு நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம். /
தங்களின் இக் கருத்து எமாற்றமளிக்கிறது தருமி.கீழ் கண்டவர் என் மனதின் எண்ணத்தை பிரதிபளிக்கிறார்.இவரைப் போன்றவர்களின் நியாயமான ஆதங்களையும் தாங்கள் கொஞ்சம் கண்டுக் கொண்டு இருந்திருக்களாம்.பொத்தம் பொதுவாக ‘நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம்’ என்று சொல்லியது எமாற்றமளிக்கிறது.
Jayashree Govindararan/ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது… நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.
இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம். அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Gஒல்டென் Hஅன்ட்ஷகெ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.
உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். …லாம் …லாம் …லாம். மிக மிக நல்ல விஷயம். ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் (காலணா திவச தம்படிக்குப் பிரயோசனமில்லாத) கருத்து! வருந்துகிறேன்!!! /
inomeno Says: after publication. e -->October 22nd, 2005 at 8:51 pm e
/நாமும், நம் தமிழ்மணமும் /நிஜ உலகுக்கு வருங்கள் தருமி .அந்த வார்த்தை எப்பொழுதோ அதன் அர்த்தம் இழந்துவிட்டது.
சின்னவன் Says: after publication. e -->October 22nd, 2005 at 8:55 pm e
:-)
P.V.Sri Rangan Says: after publication. e -->October 22nd, 2005 at 10:53 pm e
தருமி,என்னதாம் இருப்பினும் வலைப்பதிவுகளைத் தூக்குவது ஏற்கமுடியாது.நீண்டகாலமாகப் பதியாத,மற்றும் இணைப்புகளற்ற பதிவுகளை அகற்றலாம்.ஆனால் குசும்பனின்,அடுத்து ‘என்னமோ போங்க’போன்றவர்களின் பதிவுகளை அகற்றியிருக்கக்கூடாது.என்னவோபோங்க’என் பதிவைக் காசி தூக்கிட்டாரு’என்று எழுதும்போது மனது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!.என்னே நம்ம அவசரம்!எந்தக் கருத்து முன்வைக்கப்பட்டாலும் அதைப் புரிந்து கொள்வதும்-சம்பந்தப்பட்டவரின் மன நிலைக்கு நாமும் மாறி அந்தச் செயற்பாடை விளங்க முற்படணும்.அதன் பின்பு மூன்றாம் நபரின் நிலையில் நின்று நாம் செய்யப்போகும் காரியத்தை நோக்கி,அதன்பின் செயற்படுத்துவதில் எண்ணத்தைச் செலுத்தும்போது,ஆற்றவேண்டிய செயல் கடுகளவு பிரச்சனையாகவும்,அது தேவையற்ற செயலாகவும் படும்.காசி இந்தத் தளத்தில் சிந்திக்கவேயில்லை.எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது பொறுப்பான அதிகாரிக்கு உரிய செயலில்லை.
dharumi Says: after publication. e -->October 22nd, 2005 at 11:19 pm e
inomeno, sri rangan,“முதலில் எனக்கும் காசி முன்னறிவிப்புகள் இன்னும் கொடுத்து, தனி மடல்களிட்டு, பிறகு நீக்க நினைக்கும் பதிவுகளை நீக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது” - காசி செய்தது சரியென்பதல்ல என் வாதம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை சிலரின் எழுத்துக்களும், வார்த்தைப் பிரயோகங்களும் மிகவும் கீழ்த்தரம். நாவினால் சுட்ட வடு ஆறாதே..
நமக்கு நேர் எதிரே நிற்கும் ஆளைப்பார்த்து, அதுவும் நம்மைவிட சிறிது உடல் வலிமையோடு நிற்கும் ஒருவனைப் பார்த்து நாம் நேரில் சொல்லத் தயங்கும் வார்த்தைகளை, அனானிமஸ் என்ற போர்வையிலோ, வேறு ஏதோ ஒரு funny பெயரிலோ சொல்லும் ஒரு பதிவரைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. யார், என்ன வார்த்தைகள் என்று விளக்கம் வேண்டுமா என்ன? அதற்குத்தான் தங்கள் முகங்களைக் கண்ணாடியில் பார்க்கச் சொன்னேன். சொல்லப்பட்ட சில வார்த்தைகளை என் முன்னால் நின்று என்னப் பார்த்து யாரும் சொல்லியிருந்தால் ( at least 15/20 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்க!)நிச்சயமாக வெறுமனே கேட்டுக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்.
இந்த நாகரீகமற்ற செயலே என்னை வெறுப்படையச் செய்கிறது.
dharumi Says: after publication. e -->October 22nd, 2005 at 11:31 pm e
நன்றி ஜோ.சின்னவன்,புறக்கணிப்புக்கு உள்ளான எல்லா பதிவாளர்களுக்காகவும், உங்களை ரசித்தவன் என்ற முறையில் அதிகமாகவே உங்களுக்காகவும் வருந்துகிறேன். சீர்படும், சீர் படுத்தமுடியும் என்ற -இனோமினோவுக்கு இல்லாத - நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை. திருத்தப்பட வேண்டியவைகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கை இன்னும்.
சின்னவன் Says: after publication. e -->October 22nd, 2005 at 11:52 pm e
தருமிஇதில் வருந்த அதிகம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது காசி என்ற தனி மனிதரின் personal blogroll , இதில் யாரை வேண்டுமானாலும் அவர் வைத்துக் கொள்ளலாம். இதில் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது. ஆனால் இந்த காரணத்துக்கா நீக்கினேன் என்று சொல்லி இருந்தால் அவர் மீது நான் வைத்து இருந்த மரியாதை கொஞ்சம் கூடி இருக்கும்.
வயதில் நான் கொஞ்சம் சின்னவன். உலக அனுபவம் அதிகம் போதாது. நீங்கள் என் எழுத்தை ரசித்தீர்கள் என்பதை அறிவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
dharumi Says: after publication. e -->October 23rd, 2005 at 12:14 am e
சின்னவன்,காசி மேல் எனக்கு உள்ள வருத்தம் ( I am sad and I am unhappy -என்ற இரு பொருளிலுமேதான்) இவ்வளவு செய்த மனுஷன் சிறிது சறுக்கி, பலரின் கேள்விகளுக்கு - சில தரமான கேள்விகள்; பல தரம் குறைந்த கேள்விகள்; - ஆளாகி விட்டாரே என்பதுதான்.
ஜோ Says: after publication. e -->October 23rd, 2005 at 12:15 am e
இங்கு சின்னவன் நடந்து கொண்டது போல எல்லோரும் நாகரீகமாக நடந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
இராமநாதன் Says: after publication. e -->October 23rd, 2005 at 12:42 am e
தருமி,சின்னவன் சொன்னது போல் இது காசி என்ற தனி மனிதரின் blogroll. கேள்வி கேட்க உரிமையில்லை. ஆனால் சுட்டிக்காட்டலாம் அல்லவா?
தவச தானியம் என்று எப்போது சொன்னாரோ அன்றைக்கு அவர் மேல் நான் வைத்திருந்த மரியாதை மிகவும் குறைந்து விட்டது என்று வருத்தத்துடன் சொல்கிறேன். இலவச சேவை பயன்படுத்துபவர்களின் மனம் புண்படும் வகையில் தேவையில்லாமல் பிரச்சனையை குழப்பி விட்டுவிட்டார். இதனை அவரின் பதிவிலே கூட எழுதியுள்ளேன். இந்த இந்த பதிவுகளின் போக்கில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் நீக்குகிறேன் என்று சொல்லிருந்தாரே ஆனால், அவரின் மதிப்பு பன்மடங்கு கூடியிருக்கும்.
மொத்தத்தில் வருந்தத்தக்க விஷயம்.
நேச குமார் Says: after publication. e -->October 23rd, 2005 at 2:36 pm e
அன்பின் தருமி,
உங்களது குழந்தைப் பருவம்/தாயார் பற்றிய பதிவைப் படித்து முடிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டன, இப்போது இதை எழுதும் போதும் தான். நல்ல பதிவு.
அப்பதிவை திரும்பவும் தேடிப்பார்த்தால் கிட்டவில்லை. ஆதலால் இந்த பின்னூட்டம் இங்கு. மன்னிக்கவும்.
இந்தியன் Says: after publication. e -->October 23rd, 2005 at 3:09 pm e
//‘உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று பைபிளில் ஓரிடத்தில் வரும்.//ஓஹோ! உமக்குத்தான் மதம் பிடிக்கவில்லை என்று பீலா விட்டீரே! பின் எதற்கு பைபிளிலிருந்து மேற்கோள்?? சரிதான். இப்பொழுது புரிகிறது. நாத்திகம் என்ற போர்வையில் பிற மதங்களின் மேல் கல்லெறிவதை நீர் மட்டும் செய்யலாமோ?
dharumi Says: after publication. e -->October 23rd, 2005 at 3:22 pm e
இந்தியனே (இப்படி அழைக்க நேர்ந்த அவலத்திற்கு வருத்தம்),உங்களைப் போன்ற மனிதர்களின் பிதற்றல்களுக்கு அளவேயில்லையா? உங்களின் ‘அறிவார்ந்த கேள்விகள்’ உங்களை எவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என்று உங்களுக்கு புரிவதில்லையெனவே நினக்கிறேன்!
இந்தியன் Says: after publication. e -->October 23rd, 2005 at 11:27 pm e
திரு தருமி ஐயா, உம்மை முன்னாள் கிறிஸ்தவர் என்று எண்ண நேர்ந்த அவலத்தை என்னவென்பது? நல்ல வேளை எம் கிறிஸ்தவம் உம் போன்ற போலியாளர்களின் இருப்பை விட்டுத் தப்பிவிட்டது.. நானும் தூய மரியன்னையில் படித்தவன்.அது கிறிஸ்துவின் தேட்டத்தை அதிகப்படுத்தியதேயன்றி உம்போல் அவநம்பிக்கை கொள்ளவைக்கவில்லை. அதனால் தான் விவிலியத்தை மேற்கோள் காட்ட உமக்கு அருகதையில்லை என்ற பொருளில் தான் என் மேற்கண்ட பின்னூட்டம். பதிவுக்குப் பொருத்தமில்லாப் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
வசந்தன் Says: after publication. e -->October 24th, 2005 at 5:57 am e
தருமி,நீங்கள் அலட்டிக் கொள்ளாதீங்கோ.எல்லாம் “தேளும் நெறியும்”தான்.மதத் தீவிரவாதிகளின் தாக்குதல்களே சொல்கிறது நீங்கள் எழுதிய பதிவின் தார்ப்பரியத்தை.
வசந்தன் Says: after publication. e -->October 24th, 2005 at 5:58 am e
“தேட்டத்தை” என்றால் சொத்தையா?
dharumi Says: after publication. e -->October 24th, 2005 at 9:56 pm e
இராமனாதன், சேச குமார், வசந்தன் - நன்றி.
வசந்தன் அந்த கேள்வி என்னிடமா? இல்லை அந்த மனிதன்…இல்லை… இல்லை…(இப்போது) இந்தியனிடமா?
மனிதன் –> இந்தியன் –> இந்த பரிணாம வளர்ச்சியில் அடுத்த நண்பர், தமிழன் என்ற பெயரில் வந்தாக வேண்டும்.பார்க்கலாம் வருகிறாரா என்று..
dharumi Says: after publication. e -->October 24th, 2005 at 10:52 pm e
அது நேச குமார், சேச குமார் இல்லை..மன்னிக்கணும்- புதுப்பெயர் வச்சதுக்கு!
விளாங்குடி-காரன் Says: after publication. e -->October 25th, 2005 at 5:52 am e
தலைப்பு: “எனக்கு ஏன் ப்லொக் பிடிக்கவில்லை” அல்லது “நான் ஏன் ப்லொக் மாறினேன்”
இப்படிதான் முதல்ல எல்லோரும் எல்லோரிடமும் அன்ப இருப்பாங்க; பிறகு குட்டி குட்டி குழுவா பிறிச்சிகிட்டு சண்டபோடுவாங்க. எது எங்கிட்டு ஆரம்பிச்சிச்சுனு யாருக்கும் தெரியாது! ஒரு oneman-up-ship போட்டி நடக்கும்! “என் பேச்சு திறனால உன்ன மடக்கிட்டேன் பாத்தியா?” அப்படின்னு.
மனுஷ புத்தி அப்படி. மூனு பேர் இருந்தா அங்க ரெண்டு குழு ஏற்படுதிடுவோம்! கேவலம் ஒரு ப்லொகுக்கெ இப்படி தெருசண்டைனா, ஆண்டாண்டு காலமா வரும் மதங்களுக்குள்ள எம்புட்டு இருக்கும்!
சரி, மதம்னா நாம அறிவு கெட்டு போய் சண்ட போடுவோம்னு அந்த தாடிகாரரு ரெண்டு அடில நெறய எழுதி வச்சாரு. நாமலும் அதுக்கும் “உலக பொதுமறை” அப்படின்னு பேர் குடுத்து பெரும பட்டுகுரோம். ஆனா “இனிய உலவாக இன்னாத கூரல் கனியிருப்ப காய் கவர்ந்தட்று” (எழுத்துப்பிழை? ) சுத்த்த்தமா பின்பற்ற மாட்டோம்!
சரி விடு! நான் சொல்லிதான் எல்லாரும் மாறப்போராங்கலா?HakuunaMataata!
ஒளவை
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 6:45 am e
//அதனால் தான் விவிலியத்தை மேற்கோள் காட்ட உமக்கு அருகதையில்லை//இந்தியன்,பைபிள்-ல இருந்து மேற்கோள் காட்ட கிறிஸ்தவனா இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை .பைபிள் ஒன்றும் உம்ம சொத்து இல்ல .அது உலக மக்களுக்கெல்லாம் பொதுவானதுண்ணு நீர் நம்பல்லியன்னா நீர் கிறிஸ்துவரா?.விட்டா இயேசு நாதரே உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்-ன்னு சொல்லுவீர் போல .அவரை ஈசா நபி-ன்னு சொல்லுற முஸ்லிம் கிட்ட நீர் என்ன ஓய் சொல்லுவீர்?
வசந்தன் Says: after publication. e -->October 25th, 2005 at 8:08 am e
//கிறிஸ்துவின் தேட்டத்தை அதிகப்படுத்தியதேயன்றி//
இதன் சரியான கருத்து எனக்குப் புரியவில்லை. தேட்டமென்பது சொத்து என்ற கருத்தில்தானே வரும்?
கடவுளையோ விவிலியத்தையோ அவனவன் தன்தன் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தும்போது நாமும் எம்தேவைக்குப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்தான். பயன்படுத்தாவிட்டால் கண்டுபிடிப்புக்கே அர்த்தமில்லாமற்போய்விடும்;-)
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 2:43 pm e
வசந்தன்,
அந்த நண்பர் ‘கிறிஸ்துவினைப் பற்றிய தேடலை’என்ற பொருளில் எழுதியிருக்கிறாரென்று நினைக்கிறேன்.
அவ்வை,
அப்டி இப்டின்னு கடைசியில என் தலையில் கை வச்சிட்டியா…?!! - உன் மெயிலின் தலைப்பையும், இந்தப் பின்னூட்டத்திகேன்றே வைத்துக்கொண்டுள்ள புனைப் பெயரையும் சொல்றேன்!! நல்லாதான் இருக்கு..

Sunday, October 16, 2005

94. தல புராணம்…4

* ஏனைய பதிவுகள்:

1...............

2.............. 

3............... 

4............. 

5............. 
*சொகுசான அறை; சின்ன நண்பர்கள் குழாம்; புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்த புகைப்பழக்கம் - வாழ்க்கை நல்லாவே போச்சு. ஒரு கெட்ட பழக்கம் பழகியாச்சு. அந்தப் பழக்கமும் 1990 ஜனவரி 10 தேதி இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பழக்கம் சொன்னேனே - அது நல்ல பழக்கமா, இல்ல கெட்ட பழக்கமா? நீங்களே முடிவு பண்ணிக்கீங்க,, சரியா?

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல. இதுக்கெல்லாம் பிறகு ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ படிக்கக் கூட செய்வோம்!

பள்ளியிறுதி வரை வீட்டுக்குத் தெரியாமல் போனது ஒரே ஒரு சினிமா. எப்படியோ, தைரியமாய், காசெல்லாம் செட்டப் பண்ணி நண்பர்களின் வற்புறுத்தலிலும், சுயமாய் வளர்த்துக்கொண்ட தைரியத்திலும் (?) ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து பார்த்தது அந்த சினிமா. மற்றபடி சினிமா போனா வீட்டோடு; இல்ல ஊர்ல இருந்து விருந்தாட்கள் யாரும் வந்தால் ஒட்டிக்கிறது அவ்வளவுதான். இங்கிலீசு படம் எல்லாம் ஒண்ணிரண்டு - எல்லாம் சாமி படங்கள் -தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப சொல்ற ‘சாமி படங்கள்’ இல்ல. நிஜ சாமி.. Ten Commandments மூணுதடவை பாத்தேன். எப்டீங்கிறிங்களா? முதல்ல வீட்டோட; அதுக்குப் பிறகு இந்தப் படம் பார்க்கவே ஊரிலிருந்து வந்த உறவு மக்களோட - ஒரு guide மாதிரி வச்சுக்கங்களேன்!

அதில என்னென்னா, பாத்த அத்தனை இங்கிலீசு படங்கள்ல வர்ர மூஞ்சு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்! ஏதோ, ‘Ten Commandments’ மட்டும் ஒரு ஆளு-Charlton Heston- தாடியோடவும், மொட்டைத்தலையோடு Yul Brynner வந்ததும் நல்லதாப் போச்சு.


காம்பஸுக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜராகி இருக்கவேண்டுமென ஸ்ட்ரிக்ட் ரூல். அதனால, இந்த சினிமாவுக்குப் போற எண்ணமே வந்ததில்லை. ஏதோ , ஒரு டீ குடிச்சமா, ஒரு தம் அடிச்சமான்னு இருந்தோம். அப்பதான் ரீகல் தியேட்டர் பற்றி மக்கள் விவரமா சொன்னாங்க. எப்படி no risk-ல இங்கிலீபீசு படம் பாக்க முடியும்னு தெரிஞ்சிச்சு.


ஊருக்கு ஊர் பிரிட்டீஷ்காரங்க டவுன் ஹால்னு ஒண்ணு கட்டிப் போட்டிருப்பாங்க போல. அது மாதிரி இது ஒரு ஹால்; எட்வர்டு ஹால்னு பேரு. மதுரை ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும் மெயின் ரோட்ல இருக்கு. இந்த தியேட்டருக்கு எதிர்த்தாற்போல கிழக்கே போற ரோடுதான் டவுன் ஹால் ரோடு; நேரே போனா மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த தியேட்டரிலிருந்து பார்த்தாலே கோவிலின் மேற்குக் கோபுரம் தெரியும்.(படம் -கீழே)


இந்த தியேட்டர்ல ஒரு விசேஷம் என்னன்னா, பகல் முழுவதும் இது ஒரு வாசகசாலை. சாயங்காலம் ஆறு மணிக்கு அதை மூடி, பென்ச்,ஸ்க்ரீன் அப்படி இப்படி ஒரு பத்து நிமிஷத்தில தியேட்டரா புது ஜென்மம எடுத்திடும். ஆறரை, ஆறே முக்கால் மணிக்கு மேலதான் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஏழு மணிக்கு அப்போதெல்லாம் சட்டமாக இருந்த அரசு நியூஸ் ரீல போட்டு (ஆமா, இப்போவெல்லாம் அந்த அரசு செய்தித் தொகுப்பு எல்லாம் உண்டா? உண்டென்றால் அதை யார், எங்கே பார்க்கிறார்கள்?), அதுக்குப் பிறகு ஸ்லைடு, ட்ரைலர் எல்லாம் போட்டு முடிச்சி படம் போட எப்படியும் குறைந்தது ஏழேகாலாவது ஆகிவிடும். எவ்வளவு லேட்டானாலும் படம் எட்டே முக்காலுக்குள் முடிந்துவிடும். ஆக, வீட்டிலிருந்து ஆறே முக்கால், ஏழு மணிக்குப் புறப்பட்டால் கூட படம் பார்த்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒன்பது மணிக்கு முன்பே திரும்பிடலாம். சில சின்னச் சின்ன, ஆனா முக்கியமான precautions எடுக்கணும்: நம்ம பசங்ககிட்ட முதல்லே சொல்லிடணும்; இல்லன்னா சரியா அன்னைக்கிப் பாத்து வீட்டுக்குத் தேடி வந்திருவானுங்க; இரண்டாவது, திரும்பி வரும்போது கிழிச்ச அரை டிக்கெட்டை எடுத்து பத்திரமா வெளியே கடாசிட்டு வரணும். ஒரு tell tale signs -ம் இருக்கக் கூடாதல்லவா?


இந்தத் தியேட்டருக்கென்றே சில culture உண்டு; மிகவும் ஆச்சரியமானவைகள். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதெல்லாம் அந்த ஆச்சரியங்கள் அநேகமாக நடக்கும். மிகச் சாதாரண ஆட்களாக இருப்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் ஹாலிவுட்டின் சரித்திரமே அதில் இருக்கும். எந்தப் படம் எந்தக் கம்பெனியால் எப்போது எடுக்கப் பட்டது; நடிக, நடிகைகள் பெயர்கள், டைரக்டர்கள் எல்லாமே அலசப்படும். பொய்க் கதைகளாக இருக்காது; நிஜமான தகவல்களாக இருக்கும் கிரிக்கெட் விசிறிகள் கெட்டார்கள் போங்க… என்ன, கிரிக்கெட் ரசிகப் பெருமக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மழைக்குக் கூட விளையாட்டு மைதானங்களில் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் வாய் கிழியக் கிழிய technicalities பேசுவார்கள். இங்கே அப்படி இல்லை.. ரெகுலரா படம் பார்க்கிற கூட்டமே உண்டு. ஒன்றிரண்டு மாதங்கள் நீங்களும் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போனீர்கள் என்றால் பல முகங்களை அடிக்கடி தொடர்ந்து பார்க்கலாம். அவர்களில் பலரும் நான் சொன்னது மாதிரி நடமாடும் ‘என்சைக்கிளோபீடியா’வாக இருப்பார்கள்.


இதைவிடவும் ஆச்சரியமான விதயம் ஒன்றுண்டு. நம்ம மக்களுக்கு, படித்தவன் படிக்காதவன் என்ற வேற்றுமையே இல்லாமல் ஒரு நோய் உண்டு; மூத்திரப் பை ரொம்ப வீக்; அங்கிங்கு என்னாதபடி எங்கெங்கும், எப்போதும், தம் கண்களை மூடிக்கொண்டு நம் கண்களையும், மூக்குகளையும் மூட வைப்பதில் மன்னர்கள்தான். ஸ்மார்ட்டாக உடுத்துக்கொண்டு ‘ஓரங்கட்டும்’ எத்தனை படித்த இளைஞர்களிடம் நானே சண்டை போட்டு, திட்டியிருக்கிறேன். நன்றாக செலவு செய்து கட்டிய மூத்திரப்பிரையாக இருந்தாலும் நம் தியேட்டர்களில் அவைகளின் உள்ளே செல்ல நல்ல மன உறுதி இருக்க வேண்டும் - இப்போதும் கூட. ஆனால், ரீகல் தியேட்டரில் பெரிய ஒரு சதுரம்; மேலே கூரை கிடையாது; நான்கு பக்கமும் சுவர்கள்; சுவர்களை ஒட்டி இரண்டு இன்ச் உயரத்தில் ஒரு சிமெண்ட் மேடை; அவ்வளவுதான். ஆனாலும், ஏன் என்று யாருக்கும் தெரியாது - இந்த தியேட்டருக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து, தன் வரிசைக்குக் காத்திருந்து சரியான இடத்தில் சரியாகப் "போவது" என்பது இதுவரை நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டது கூட இல்லை.


அதே போலவே எல்லா தியேட்டர்களில் மட்டுமல்ல எங்கெங்கு படிகள் இருக்கின்றனவோ அந்த படிகளின் மூலைகளைப் பார்த்ததும் இந்த வெற்றிலை போடும் ஆட்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை; என்ன instinct அல்லது reflex என்று தெரியாது - Pavlov-ன் நாய் மாதிரி - மூலைகளில் எச்சில் துப்பும் அந்த ‘இந்தியப் பண்பை’ ரீகலில் பார்க்கவே முடியாது.

தியேட்டரின் கீழ் பகுதியில் மூன்று வகுப்புகள், மேலே இரண்டு பகுதிகள். கீழே உள்ள மூன்று வகுப்புகளின் கட்டணம் எல்லாமே ஒரு ரூபாய்க்கும் குறைவே. 30, 60, 90 பைசா என்ற கணக்கில் டிக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். நம்ம ஸ்டாண்டர்டுக்கு எப்பவுமே இரண்டாம் வகுப்புதான். ஆனால் அதில் ஒரு தடவை ஒரு பிரச்சனை. இப்போ சன் டீ.வி.யில் வர்ர மாதிரி அப்போ நம்ம தியேட்டரில் ஸ்பெஷல் வாரங்கள் என்று வரும். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதி 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு படமாக போடுவார்கள்; ஒரே நடிகர் - ஜெர்ரி லூயிஸ், கிளார்க் கேபிள், நார்மன் விஸ்டம்,…- நடித்த படங்கள், ஒரே கம்பெனியின் படங்கள் - எம்.ஜி.எம்., கொலம்பியா, - என்று இருக்கும். முதல்லேயே ஒழுங்கா ப்ளான் செய்து எந்தெந்த படங்களைப் பார்ப்பது, அதற்குரிய பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது போன்ற திட்டங்களைத் தீட்டி - இறுதிப் பரிட்சைக்கு டைம் டேபிள் போடுவது போல் - ரெடியாக வேண்டும்.

அப்படி போட்டதில் ஒரு தடவை எக்ஸ்ட்ராவாக ஒரு படம் சேர்ந்து விட்டது. பொருளாதாரப் பிரச்சனை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தாலும் போய்விடுவது என்று முடிவெடுத்து தியேட்டர் போனேன். 30 பைசா வரிசை
தியேட்டருக்கு வரும் எல்லோரும் பார்க்க முடியும்; மற்ற இரு வகுப்புகளுக்கும் டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே இருக்கும். அந்த வரிசையில் நிற்கத் தயக்கம். நின்ற ஒருவரிடம் ஏதோ காரணம் சொல்லி டிக்கெட் எடுத்தாகிவிட்டது. உள்ளே விரைந்து போய் கடைசி வரிசையில் இடம் பிடித்து கையோடு கொண்டு போயிருந்த நோட்டை (ஆமா! பிள்ளை படிக்கப் போகிறது என்று அப்பதான் வீட்ல நினைப்பாங்க!) அந்த சீட்டில் வைத்து ரிசர்வ் செய்துவிட்டு வெளியே வந்து, லைட் எல்லாம் அணைத்த பிறகு உள்ளே போனேன். வேறு யாரும் நான் 30 பைசா டிக்கெட்டில் வந்திருப்பது தெரியக்கூடாது என்ற எண்ணம். ஏன்னா, அது ‘தரை டிக்கெட் லெவல்தான்’. அதற்குள் பக்கத்து சீட்டுக்காரர் என் நோட்டைத் திறந்து பார்த்து விட்டார் போலும். நான் போய் உட்கார்ந்ததும், ‘தம்பி, பெரிய கிளாஸ்ல படிக்கிறீங்க; எதுக்கு இங்க வர்ரீங்க’ன்னு கேட்டார். அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.


இன்னொரு unique matter என்னன்னா, இடைவேளையில் தியேட்டருக்கு வெளியே செல்ல அனுமதி உண்டு; ஒரு சிகரெட் அட்டையின் பின்பக்கம் ஒரு சீல். அதுதான் அவுட்பாஸ். எதிர்த்தாற்போல் இருந்த, இன்னும் இருக்கும் Zam-Zam டீக்கடையில் (the hottest tea i have ever had in my life) குடிச்சிட்டு வரலாம். சில பேர் முதல் பாதி சினிமாவை ஒரு நாளும், பின் பாதியை அடுத்த நாளும் - ஒரே படத்த இரண்டு instalments-ல் - பார்த்ததுண்டு. ஆனால் இது சில காலமே நடைமுறைப் படுத்தப் பட்டது.


இதில என் தப்பு ஒண்ணுமே இல்லீங்க; இப்படி திருட்டுத்தனமா பாத்த முதல் படம் நல்லா நினைவில் இருக்கிறது.  Rank Organization’s ON THE BEAT என்ற Norman Wisdom நடித்த நகைச்சுவைப் படம். நான் போடும் ஒரு கணக்கு: Norman Wisdom + Jerry Lewis = நம்ம நாகேஷ். காதலிக்க நேரமில்லை படத்தில் கூட ‘செல்லப்பா’ தனது ‘ஓஹோ’ என்ற படக்கம்பெனியின் மேசை மேல் Jerry Lewis போட்டோ வைத்திருப்பார். Norman Wisdom ஹாலிவுட் ஆள் இல்லையென்பதால் அதிகமாக நமக்குத் தெரியாத நடிகர். ஆயினும் நாகேஷின் பல படங்களில் இவரது பாதிப்பு இருக்கும். A stitch in time என்ற படத்தின் கதை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் காமிக் ட்ராக்காக வரும்.


சரி, நம்ம கதைக்கு வருவோம். படம் பாத்துட்டு, வீட்டுக்குப் போய் அப்பாகூட உக்காந்து இரவுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது படத்தில் உள்ள ஒரு நல்ல காட்சி நினைவுக்கு வர, என்னையறியாமல் சிரித்து விட்டேன். அப்பா என்னவென்று கேட்க ஏதோ காலேஜ்..அது.. இது.. என்று அங்கே ஒரு ரீல் விட்டேன். அவ்வளவு பிடித்த படமே முதல் படமாக அமையாமல் இருந்திருந்தால் நான் அதற்குப் பிறகு இங்கிலீசு படம் பாக்கப் போயிருப்பேனா?


ரொம்ப வருடத்துக்கு இந்தப் பழக்கம் இருந்தது. வேலை பார்க்கும்போது நம்ம ஜாவாவில் போய் மெத்தைக்கு டிக்கெட் எடுத்து படம் பாக்கும்போதெல்லாம் 30 பைசாவில் சினிமா பார்த்த ‘ அந்த நாள் ஞாபகம்…’ வந்திரும். இப்போவெல்லாம் DVD வீட்டுக்கே வந்திடுதே! தியேட்டருக்கு அதிகமா போறதில்லையானாலும் இன்னும் அந்தப் பழக்கம் விடலை…ஏங்க! நீங்களே சொல்லுங்க; இது நல்ல பழக்கமா…இல்ல கெட்ட பழக்கமா…?*******


Oct 16 2005 03:39 pm சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??

7 Responses
சின்னவன் Says: after publication. e -->October 16th, 2005 at 8:14 pm e
எவ்வள்வு பெரிய கிருதா !

Sa.Thirumalai Says: after publication. e -->October 16th, 2005 at 8:58 pm e
Dear Sir
For many Madurai-tians this is an irresistible habit. Parameswari is another theatre where good English movies were shown. I think both were run by same management. I used to see many friends only at these theatres not anywhere else in Madurai. Now except Mappillai Vinagayar no other theatre is showing regular English cinema, no theatre is showing real classical holywoods. Hmm, those are the days. You rekindled my nostalgia one more time. Interesting experiences. Pl. continue. Edward Hall has a better and clear look in now.
ThanksSa.Thirumalai

கோ.இராகவன் Says: after publication. e -->October 17th, 2005 at 6:45 pm e
தருமி, உண்மையிலேயே அற்புதமான பதிவு. தருமீன்னு பேரு வெச்சிருக்கீங்களேன்னு பாத்தேன். மதுரக்காரருன்னு இப்பத்தான தெரியுது.
சின்னப் பிள்ளைல மதுரைல ஒரு வருசம் இருந்தோம். அப்ப இந்த ரீகல் தேட்டரப் பாத்திருக்கேன். வெளிய இருந்துதான். பின்னே விட்டா வீட்டுக்குப் போகத் தெரியாத வயசுல எப்படி தேட்டருக்குத் தனியாப் போக.
பின்னாட்களில் மதுரை வழியாப் போகைல பார்த்ததுண்டு. எனக்குத் தெரிஞ்சு ஜெயராஜ், விஜயலட்சுமி, சினி-மினி-சுகப் பிரியாக்கள், செண்ட்ரல், இதுகதான் நினைவிருக்கு. அப்புறம் இன்னோன்னும் இருக்கு….பேரு நெனவுக்கு வர மாட்டேங்கி……ஸ்டேசனுக்குப் போற வழியில….ரெண்டு தேட்டரு சேந்தாப்புல இருக்கும்.
நீங்க சொல்ற ரீகல் தேட்டர் பக்கத்துல பிரேம விலாஸ் அல்வா கடைல சாந்தரமாப் போனா அல்வாவை எலைல போட்டுத் தருவாங்க. அடடா!

யாத்திரீகன் Says: after publication. e -->October 20th, 2005 at 2:19 am e
அஹா.. பலரும் இப்படி மதுரை நியாபகங்களை கிளரிவிட்டுகிட்டு இருக்கீங்களே…. 2 வருஷம் கல்கத்தால இருந்துட்டு… இங்க வர்ரதுக்கு முன்னாடி மதுரை-ல ஒரு நாள் இருந்தப்ப, நீங்க சொன்ன கடைகலிலேல்லாம் சாப்பிடரதுக்குன்னே சுத்துனேன்
ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தங்கரீகல்-ல படம் பார்த்தேன்னு சொன்ன வீட்ல பின்னிருவாங்க… மத்தவுங்க ஒரு மாதிரி பார்பாங்க.. அப்படி ஆகிப்போச்சு இப்போ….
மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரும் கொஞ்ச காலம் அப்படி இருந்தது, இப்போ, தமிழ்ல மொழிபெயர்த்த ஆங்கிலப்படங்களும் போடுறாங்க.. நீங்க சொன்ன கழிப்பறை நியதி, எனக்கு தெரிஞ்சு, இந்த தியேட்டர்லதான் உருப்படியா இருக்கு

தருமி, படங்களுக்கு நன்றி.. இப்படி வாரம் ஒரு மதுரை படம்னு கூட நீங்க பதிவு போடலாம்…
கொஞ்சம் அப்படியே மதுரையில் கிடைக்கும் சாப்பாட்டுனு ஒரு தொடர் எழுதுங்க ரொம்ப ஆசையா இருக்கு ஹிஹிஹி.. !!!!

-செந்தில்/Senthil
ivarugala Says: after publication. e -->October 22nd, 2005 at 1:07 am e
அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்லே வந்ததே நண்பரே!
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
ivarugala.

கல்வெட்டு Says: after publication. e -->October 22nd, 2005 at 1:22 am e
//முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்!//
:-)))

வசந்தன் Says: after publication. e -->October 22nd, 2005 at 6:09 am e
//அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.//
படிக்கப்போறதை நிறுத்திட்டீங்களா?அல்லது அந்த ‘தரை டிக்கெட்’ வகுப்புக்குப் போறதை நிறுத்திட்டீங்களா?;-)
Saturday, October 15, 2005

93. என் போட்டோவும்…இன்ன பிறவும்…!!நம்ம கதை வான்கோழிக் கதைதான்.
இளவஞ்சி மாதிரி பட்டாம்பூச்சி கவிதயும் எழுதத் தெரியாது. சின்னவன் மாதிரி ஒரு பக்கம் பாத்தா மயிலு மாதிரியும், இன்னொரு பக்கம் பாத்தா வான்கோழி மாதிரியும் தெரியிறது மாதிரி தட்டான பத்தி கவிதயும் எழுதத்தெரியாது. அதுக்காக சும்மா விட்றதா? அதுக்குத்தான் இந்தத் தட்டான். அது கவித எழுதுறதாக நீங்களே எதுனாச்சும் நினச்சுக்கங்க…


வேண்ணா, அது அந்த ‘ஊசி இலை மேல தூங்கற பனித்துளியை நினச்சு பாடறதாகக் கற்பனை பண்ணிக்கீங்க…
இவ்வளவு கற்பனை பண்றவங்க படம் எடுத்த ஆளையும் கற்பனை பண்ணவா முடியும்; அதான் அடுத்த படம்..


இங்கேயும் கற்பனை தேவைதான் … இல்ல?
Oct 15 2005 11:45 pm அவியல்... edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 1 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
9 Responses
சின்னவன் Says: after publication. e -->October 16th, 2005 at 12:33 am e
ஒரு பக்கம் பார்த்தா மயில் மாதிரி இருக்கு என்ற தருமி அய்யா அவர்களேநீங்களே ஒரு பக்கம் பார்த்தா சின்னவராத்தான் இருக்கீங்க
dharumi Says: after publication. e -->October 16th, 2005 at 12:55 am e
சின்னவரே,நம்ம மறு பக்கம் பாக்கலியே! பாத்தா தெரியும்…பொறுங்க..பொறுங்க !!
துளசி கோபால் Says: after publication. e -->October 16th, 2005 at 2:45 am e
ஆளாளுக்குப் படம் காமிச்சுக்கிட்டு இருக்கீங்கப்பு.
ம்ம்ம்ம்….படம் நல்லாத் தெளிவா இருக்கு.
‘கல்லைத்தூக்கு, கருப்பட்டி தாரேன்’னு பாடினது ஞாபகம் வருது.
இப்படிக் கொசுவத்தி வாங்கியே காசெல்லாம் போச்சு. ஹூம்.இன்னும் எவ்வளவு வாங்கணுமோ?:-)
P.V.Sri Rangan Says: after publication. e -->October 16th, 2005 at 4:18 am e
தருமி அழகான படப்பிடிப்பும்,அமைதியான இயற்கை வனப்பும் உங்கள் படங்களுக்குள் கவிதையாக விரிகிறது.ஸ்ரீரங்கன்
வசந்தன் Says: after publication. e -->October 16th, 2005 at 5:50 am e
படத்திலிருப்பதையா நீங்கள் தட்டான் என்கிறீர்கள்?நாங்கள் தும்பி என்போம். தட்டான் என்றும் பாவிப்பதுண்டு. ஆனால் தும்பி தான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொல்.
chiththan Says: after publication. e -->October 16th, 2005 at 8:07 am e
பின்னூட்டத்தில் போட்டோ போடத்தெரியலைஇல்லேன்னா நானும் ஒரு படம் காட்டியிருப்பென்.
“தேவதைதோட்டத்து ஹெலிக்காப்ட்டர்தேன் தேடி வந்ததோ?உமக்கு ஏதும் தூது கொண்டுநின்றதோ?
அன்பரே- பின்னூட்டப்பக்கத்தையும் எப்படி முன்னூட்டத்தில்கொண்டுவர்ரது ?
dharumi Says: after publication. e -->October 16th, 2005 at 10:28 am e
துளசி, ஸ்ரீரங்கன்,வசந்தன், சித்தன் — நன்றி.
துளசி,“இப்படிக் கொசுவத்தி வாங்கியே காசெல்லாம் போச்சு. ஹூம்.இன்னும் எவ்வளவு வாங்கணுமோ?:-) ”- வாஆஆஆஆஆங்கிக்கிட்டேதான் இருக்கணும் இனிம..வயசாக வயசாக‘பழைய நினப்புடா பேராண்டி’ன்னுதான் இருக்க வேண்டியிருக்கு - நான் என்னமாதிரி வயசான ஆளுகளப் பத்தி சொல்றேன்; நீங்கள்ளாம் சின்னப் பிள்ளைங்க!
ஆனாலும் அதுக்குத்தான் நான் நம்ம ‘(கற்பனைக்) குதிரை’யில செலவில்லாமபோயிடுறது.
ஸ்ரீரங்கன்,“அமைதியான இயற்கை வனப்பும்”- இயற்கை வனப்பு சரி; ஆனா, அமைதியானங்றது சரியான்னு தெரியலை; ஏன்னா இதுஎங்க கல்லூரிக்குள்ள எடுத்தது!
வசந்தன்,தும்பின்னா பொதுவா வண்டுகளைக் குறிக்கும் சொல்லல்லவா? நம்ம ஆளு Lord Shiva கூடஎன்னிட்ட ஒரு கவிதை கொடுத்துவிட்டு அதில் நான் மாட்டிக்கிட்டேனே - அந்த மண்டபத்துவிவகாரம் - அந்தக் கவிதைல கூட தும்பிங்கிறது வண்டு என்ற பொருளில் வராது??
சித்தன்,கவிதைல்லாம் பரத்திருங்க! நமக்குத்தான் ஒண்ணும் ‘ஓட’ மாட்டேங்குது!இந்த மாதிரியெல்லாம் எங்கூட விளையாடாதீங்க…நானே ஒரு க.கை.நா. எங்கிட்டஇதல்லாம் கேட்டா எப்படி?
ivarugala Says: after publication. e -->November 7th, 2005 at 1:48 am e
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்உங்களுக்கு Camedia போதும்எப்படி இந்த தெளிவு சாத்தியம்என்பது எந்தன் சோத்தியம்.
பனித்துளிக்குள் பனை மரத்தை கண்டதாக செய்தி உண்டுதேடிப்பாருங்கள் நீங்களே கிடைபீர்கள்.
dharumi Says: after publication. e -->November 7th, 2005 at 8:41 am e
நன்றி ivarugala,camedia பற்றாது; macro வேணுமில்லா…!

Thursday, October 13, 2005

92. பழசக் கிண்டினேன்…

ஸ்டார் ஸ்டேட்டஸ்ல இருக்கும்போதே பலரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக ஏற்கெனவே நான் பதிய ஆரம்பித்த காலத்தில் எழுதிய சில விதயங்களை மறுபதிப்பு மூலம் உங்கள் பார்வைக்கு மீண்டும் கொண்டு வர நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் அவைகளைப் பலர் பார்க்காமல் போயிருக்கலாம் என்பதாலும், அவைகளில் சில எனக்குப் பதில் தெரியாதவைகளாகவோ, அல்லது அதைப்பற்றி நாம் கொஞ்சம் நினைக்கவேண்டுமென நான் நினைத்ததாலோ மறுபதிப்பிட நினைத்தேன். நாலைந்து பதிவுகளின் சுருக்கம் தர நினைத்திருந்தேன். இப்போது அவைகளைச் சுருக்கி மூன்றாக்கியுள்ளேன்:ஒன்று - தலித் பற்றியது;
இரண்டு - common wealth பற்றியது;
மூன்று - human evolution
இத்தலைப்புகளில் உங்களைத் தொடும் ஏதேனும் இருப்பின் தருமிக்குப் பதில் தருவீர்கள் அல்லவா… அதற்காகத்தான். link கொடுத்துள்ளேன் மேலே; சுருக்கித் தந்துள்ளேன் கீழே.
I. தலித் பற்றியது:THE HINDU Monday, MAY 2, 2005 pp11
DALITS all over the world have something to rejoice about. Durban was not in vain. On April 19, 2005, the U.N. Commission on Human Rights adopted a Resolution to appoint two Special Rapporteurs to tackle caste-based discrimination.
பள்ளத்தில் இருப்பவர்களைத் தூக்கிவிட வெளியிலிருந்து தூக்கிப்போடும் கயிறு போல இது. தேவைதான். அதைவிடவும் உள்ளிருந்து சில முயற்சிகள் அவசரமாகத் தேவை.
1. சில தொழில்களுக்கு என்று சிலரை ஒதுக்கிவைத்து, அதை சாதியாக்கி…கீழிறக்கி, தாழ்த்தி ‘வர்ண’மயமாக்கியாயிற்று. இது நடந்துபோனது. இனி நடக்கவேண்டியது - இந்தத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். பரம்பரையாகச் செய்துவரும் தொழில்களை விட்டேயாகவேண்டும். சில தொழில்களை கலை என்ற பெயர் சூட்டி (தப்பாட்டம்,பறையாட்டம்) தலையில் கட்டியுள்ளார்கள்; இன்னும் சிலவற்றை இவர்கள்தான்செய்யவேண்டும் என்று ‘பட்டயம்’ கட்டியுள்ளார்கள்.
யாருக்கும் யார் வேண்டுமென்றாலும் சவக்குழி வெட்டமுடியும்.சங்கு யார் ஊதினாலும் சத்தம் வரும். வேண்டுமென்பவர்கள் ஊதிக்கொள்ளட்டுமே…..
II. Common Wealth:ஆண்டான் - அடிமை என்ற உறவால் வந்ததா, இல்லை வேறு காரணமா என்று தெரியாது - முதலிலிருந்தே இந்த ஆங்கிலேயர்கள் என்றாலே எனக்கு ஆகி வருவதில்லை. அவர்களை நினைத்தாலே எனக்குக் கோபம் வருவதுண்டு. இத்தனூண்டு நாடு; உலகமெல்லாம் காலனி ஆதிக்கம், சூரியன் மறையாத பேரரசு என்ற திமிர்; செல்லும் இடமெல்லாம் தங்கள் பிரித்தாளும் கொள்கையால் இன்று நாமும் பாகிஸ்தானும் மட்டுமல்ல அவர்கள் கால் பதித்த இடமெல்லாம் பல உலக நாடுகளுக்குள் பகை. ஸ்ரீலங்கா, gulf நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், அயர்லாந்து…பட்டியல் நீளுமென்று நினைக்கின்றேன். சுரண்டியே பிழைப்பை ஓட்டி வந்தவர்கள். சுரண்டியது ஏராளம்; கொடுத்தது ஆங்கிலமும், கிரிக்கெட்டும், அங்கங்கு ஒரு கலப்பினமும்….
அவர்களின் ஆட்சிக்கு கீழ் கஷ்டப்பட்டவர்களை எல்லாம் அதோடு விட்டுவிடாமல் இன்னும் common wealth என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தன் பழைய ‘அடிமை’களை இன்னும் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள். இந்த அமைப்பால் யாருக்கு என்ன லாபமோ, அவர்களுக்குநிச்சயமாக இறுமாப்பும் அதனால் ஏற்படும் திமிரும் கட்டாயமாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் எதற்காக இந்தியாவும், மற்ற நாடுகளும் அந்த அமைப்பில் இன்னும் இருக்க வேண்டும்? இது நமக்கு இழிவு இல்லையா? நான் ஒரு காலத்தில் உன் அடிமை என்ற நினைப்பைத் தந்து கொண்டேயிருக்கும் ஒரு அமைப்பல்லவா இது.
ஆனால் இன்னும் அது நீடிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம்; ஆனால் எனக்குத்தெரியாது. தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
ஏங்க சொல்லுவீங்களா…?
III. Human evolution:(அறி. 1) பரிணாமக்கொள்கையாளர்களுக்கு தருமியின் ஒரு கேள்வி…
போக்குவரத்து பெருகியுள்ள இந்த நாளிலும்கூட பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்வது, குடும்பமாக புதிய இடம் செல்வது என்பது மிக அரிது. ஆனால், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் இடம் பெயர்ந்து ஒவ்வொரு கண்டமாகச் சென்றது என்று தெரிகிறது.
குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோது தேவைகளுக்கான போட்டியும் (competition for resources)இருந்திருக்காது. choices நிறைய இருந்திருக்கும். பின் மனித குலம் கண்டம் கண்டமாக migrate ஆகி, அதோடு, வரண்ட பெரும் பாலைவனங்களையும், பனியால் உறைந்து கிடக்கும் (godforsaken places)பகுதிகளையும்கூட தம் இருப்பிடங்களாக்கி, உலகமெங்கும் அந்த முந்திய காலத்திலேயே நிறைத்திருக்க வேண்டிய தேவை என்ன?
எதுக்குங்க…?
Oct 11 2005 12:33 pm அவியல்... edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 2 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
15 Responses
துளசி கோபால் Says: after publication. e -->October 11th, 2005 at 1:16 pm e
இந்த மூணாவது விஷயம் சுவாரசியமா இருக்கும்போலெ. அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் விரிவா எழுதுங்க தருமி.
முத்து Says: after publication. e -->October 11th, 2005 at 2:12 pm e
எல்லாம் ஒரு ஆர்வம் தாங்க. நமக்கு ஒரு இடத்தில தங்குதா? அந்த மாதிரிதான். மேலும் அது உடனே நாலு நாட்களிலா நடந்தது.
Ravikumar Says: after publication. e -->October 11th, 2005 at 2:39 pm e
I think, Its Just Existence
The evolutionary theory is a tool to see why humans act certain ways. By understanding evolutionary psychology, it will help analyze human behavior and the reasons for human migration, cultural development, and social identity. Humans have an inborn characteristic to want more and be satisfied. They will move and find what it is that they are looking for to bring themselves to be satisfied. Humans struggle to stay alive and they look for numerous ways to keep themselves in existence. To stay alive they must be well adapted to their environment or they would not be able to live. That explains why humans migrated to different places. All they wanted to do was to find a place where they can live comfortably and live as long as they can. As for cultural development, these people who chose to stay in the same place had similar ideas, wants, and lifestyles. This similarity produces a development of a distinct culture and will soon transform itself into a official race, tribe, group, or whatever it may be called at the time. In the formation of these groups, they have created their own social identity. Their culture gives them certain characteristics in the ways they live, the things they worship, and the feeling of belonging. If certain individuals don’t feel the same and don’t think that they fit into that lifestyle they may migrate elsewhere
சாலமோன் பாப்பையா Says: after publication. e -->October 11th, 2005 at 7:22 pm e
வறுமையின் நிறம் சிகப்பு!
தாணு Says: after publication. e -->October 11th, 2005 at 7:42 pm e
இருக்கும் இடத்தைவிட அடுத்த இடம் நன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே போய், ஒரு கட்டத்தில் சோர்வடையும் போது அந்த இடத்தில் நிலைச்சிருப்பாங்களோ?
dharumi Says: after publication. e -->October 11th, 2005 at 8:05 pm e
துளசி,பத்மாவை உதவிக்குக் கூப்பிடணும்னு நினைக்கிறேன்.
முத்து,ஆர்வக் கோளாறினால் மட்டும் இருக்காதென்றே நினைக்கிறேன்.
Ravikumar, i differ on one of your points:“To stay alive they must be well adapted to their environment or they would not be able to live.” IT SHOULD BE THE OTHER WAY. TO STAY ALIVE THEY SHOULD HAVE CHOSEN PLACES MORE CONDUCIVE AND NOT IN THOSE GODFORSAKEN PLACES.
பாப்பையா,புரியலையே, ஐயா!
தாணு,human migration ஒரு தொடர் நிகழ்வாக இருந்துள்ளது. எது உந்து சக்தியாகச் செயல் பட்டது?
Awwai Says: after publication. e -->October 12th, 2005 at 6:51 am e
மனிதன் பிறந்தது 50000 ஆண்டுகள் முன்பு; விவசாயம் கற்றது 10000 ஆண்டுகள் முன்பு. ஆகவே 40000 ஆண்டுகள் சும்மா வேட்டையாடி விளையாடி விருப்பம்போல உறவாடி வீரமாக நடைபோட்டிருக்கிரான்!உணவு கிடைக்கும் இடமெ வீடு; விவசாயமே ‘வீட்டை’ ஓரிடதில் வைத்தது.அதுவரை கால் போன போக்கிலே போய் எங்கும் பரவியதில் ஆச்சரியம் என்ன?
ஒரு பேருந்தில் ஏறியவுடன் யாரும் அமராத இருக்கையில்தானே நாம் அமருவோம்! 10 இடங்கள் காலியாக இருக்கும்போது வேறொருவர் பக்கத்தில் அமரமாடோமே! When resources are available in plenty, we tend to “OWN” as much as possible. When resources are limiting, then we agree to share, because that is the only way we can assure access to that resource! Such situations leads to formation of SMALL self sufficient groups; when the group grows bigger than a critical size, it breaks and each group forms its unique niche/domain. (This trend continues in ‘modern’ society at all kinds of ‘organisations’.)For example, in a lion’s pride, the father lion chases away the son lions when they are bigger, because they will compete with the father for available ‘resources’ within the pride. The sons have to ‘migrate’ and form their own pride elsewhere. I guess the early humans too migrated in a similar fashion.Am running short of time and so switched language. Kindly bear with me.அன்புடன் அவ்வை.
Draj Says: after publication. e -->October 12th, 2005 at 7:31 am e
I find Awwai’s comments valid. It is an animal instinct to migrate eventually forming new social habitat. Most wild animals do the same. Human beings had derived it from his predecessor.
dharumi Says: after publication. e -->October 12th, 2005 at 10:54 am e
அவ்வை,இன்னுமொரு கேள்வி..ஊர்விட்டு ஊர்..நாடு விட்டு நாடு..சரி.கண்டம் விட்டு கண்டம்…?
ஒரே நாள்ல் தமிழ்ல டைப் அடிக்க எக்கச்சக்கமா முன்னேறிட்ட…என்பாடு கஷ்டம்தான்…போ!
ஒளவை Says: after publication. e -->October 12th, 2005 at 6:17 pm e
http://www.nature.com/news/2002/020304/full/020304-7.html;jsessionid=99C476337C0FDF1A773D4E1A17C3F5B7
The article at the above link is just a sample on how divided even experts are on the topic of origin and migration of homo sapiens (human beings). When that is the case with EXPERTS, we can only speculate!
Even before modern man (homo sapiens) evolved 50000 years ago, the previous versions (eg. homo erectus), had migrated to different parts of the world 2 MILLION YEARS ago. At that point of time the drifting land masses (i.e. continents) might have been closer to each other than what they are now!
Experts are still debating on two possible theories:1. The early versions like Homo erectus migrated to different parts 2 million years ago, and Homo sapiens evolved at different places about 50000 years ago.2. The Homo sapiens evolved 50000 years ago in africa and migrated to different parts gradually, and replaced the less evolved (intellect and skills in tools) Homo erectus.
Even if the second theory is true, the modern man (Homo sapiens) would have just followed the migration trails of the Homo erectus to different places, because he knows by experience that if Homo erectus can survive at a place he can survive better there!—-அது சரி, புலம்பரே/புலவரே! நான் ஒரே நாளில் தமிழில் தெளிவாக தட்டினால் உமக்கு ஏன் பொறாமை?
அன்புடன் ஒளவை
dharumi Says: after publication. e -->October 12th, 2005 at 8:04 pm e
அவ்வை,நீ கொடுத்த லின்க்-க்குப் போனால் $8 கொடு, $15கொடுங்கராங்க. அதனால நீ சொன்னத அப்படியே எடுத்துக்கிறேன். இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருக்கே. ஏன்? அந்த ஆளுக இம்மாந்தூரம் ஊர் சுத்துனாங்க?
“யாரங்கே, தனி ஒருவராக வந்து, எம் சந்தேகத்தைத் தீர்த்துவைத்த அவ்வைக்கு அவர் மதுரைக்கு வரும்போது ஒரு மூட்டை நெல்லிக்காய் கொடுக்கணும்; இப்பவே எடுத்து வச்சிருங்க அதை!!”
“உமக்கு ஏன் பொறாமை” - ஆமா, நாங்க தடவித் தடவி இன்னும்கூட சரியா வராத விதயத்தை நம்ம பையன் ஒரே நாள்ல பிடிச்சிட்டானேன்னு ஒரு சந்தோசமப்பா!
ஒளவை Says: after publication. e -->October 15th, 2005 at 10:53 pm e
“இன்னும் ஒரு கேள்வி பாக்கி இருக்கே. ஏன்?”
வேறு வழியில்லை!!தாய், விதைகளை எங்கும் பரவவிடுமே தவிர தன் வேருக்கடியில் வளரவிடாது! “தன் குஞ்சு தனக்கே போட்டியா”? முன்பு கூறிய சிங்கத்தின் உதாரணமும் அப்படித்தான்The tendency to take care of one’s youngs ones evolved very early and so it is exhibited even by ‘lower’ organisms. The tendency to take care of the elderly seems to have evolved only in the human race, that too much later (that too not widespread in all tribes/civilisations). So, the parents had to let their offsprings go away so that they don’t compete for the same resources.
ஓர் உதரணம்: ஒவ்வோரு மகனும் தன் தந்தை வாழும் இடதிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தன் குடும்பத்தை அமைக்கிறான் என்று வைத்துகொள்வோம். ஒரு தலைமுறையின் காலம் 20 ஆண்டுகள் என கொண்டால், 30 தலைமுறை காலத்தில், வெறும் 600 ஆண்டுகளில், கன்னியாகுமரியில் இருந்த ஒருவரின் சந்ததி காஷ்மீரில் வாழ்வான்! அப்படி இருக்க, 40000 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவியதில் ஆச்சரியமெதுமில்லை!
இது என் யூகமே! உண்மை என்னவென்று யார் அறிவாரோ?
அன்புடன் ஒளவை.
dharumi Says: after publication. e -->October 23rd, 2005 at 3:50 pm e
அவ்வை எனக்கு அனுப்பியி இன்னுமொரு லின்க்கை உங்களுக்கும் தருகிறேன்.
http://news.nationalgeographic.com/news/2002/12/1212_021213_journeyofman.html
Sam Ji! this link should give you some detailed information, authentic theory based on research, not just a speculation as I did! I hope you will be able to open this.
anbudan lana.
Dondu Says: after publication. e -->October 23rd, 2005 at 5:32 pm e
தருமி அவர்களே,
உங்கள் தலித் பற்றிய பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://dharumi.blogspot.com/2005/06/16_03.html
“தலித்துகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி நான் இரண்டு பதிவு போட்டுள்ளேன். முதலாவது டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறையைப் பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
இரண்டாவது காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post.html
இரண்டு பதிவுகளை மட்டும் பார்க்காமல் அவற்றில் வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். யார் யார் எப்படி எதிர்வினை செய்தார்கள் என்று பார்த்தால் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
அன்புடன்,டோண்டு ராகவன்”
Dondu Says: after publication. e -->October 23rd, 2005 at 5:34 pm e
test.