Saturday, April 29, 2006

156. சிவாஜி –> கமல் –> ???

Image and video hosting by TinyPic


சிவாஜி நல்ல நடிகர்தானா என்று கேள்வி கேட்போரும் உண்டு. அந்தக் கேள்வியிலும் நியாயம் உண்டு. நாம் நல்ல நடிப்பு என்று கருதும் விஷயங்களின் அளவுகோல்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை வைத்துதான். ஹாலிவுட்டில் பல நடிகர்களின் நடிப்பு சிறந்ததாகக் கருதப்பட்டாலும் மார்லன் ப்ராண்டோ தனக்கெனத் தனியிடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை. அவரது On the water front என்ற படத்தை மும்முறை பார்த்திருக்கிறேன். நாம் வழக்கமாகச் சொல்லுவோமே -’அவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்கவில்லை; அந்த்ப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டார்’ என்று, அதேபோல்தான் அந்தப் படத்தில் மார்லன் ப்ராண்டோ அந்தக் கதா பாத்திரமாகவே மாறியிருப்பார். எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும். அதேபோல் Godfather படத்தில் சிறிதே மாறுபட்ட மேக்கப்புடன், அவர் வழக்கமாக உதடுகள்கூட அசையாமல் பேசுவாரே அந்தப் பேச்சும், நடிப்பும் அவரது சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் என்றும் பேசப்படும். இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னொரு நடிகர் Antony Quinn. அவர் நடித்த Hunchback of NotreDame, La Strada மனதை விட்டு அகலாத, அவரது நடிப்புதிறனை வெளிக்கொணர்ந்த படங்கள். அதிலும் Umar Muktar என்ற படம் அச்சு அசலாக நமது கட்டபொம்மன் படம் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும் - சுதந்திரத்திற்காக ஆள வந்த அயல்நாட்டுக்காரர்களை எதிர்த்த இரு புரட்சியாளர்களின் கதை. ஆக்கப்பட்டிருந்த விதங்களில் அவைகள் எதிர் எதிர் துருவங்களில் இருந்தன. இந்த ஆங்கிலப்படங்களில் அந்த நடிகர்களைக் காணும்போது இது போல் சிவாஜியால் எளிதாக நடித்திருக்க முடியும்; ஆனால் அவரை அவ்வாறு நாம் நடிக்க விடவில்லை என்ற உண்மைதான் மனதில் தைக்கிறது. அவருக்கும் சினிமாவைப் பற்றிய ஒரு பறவைப் பார்வை இல்லை. அதுவும் சினிமாவைப் பற்றிய உலகளாவிய ஒரு பார்வையோ, அது பற்றிய ஞானமோ சுத்தமாக இல்லவே இல்லை. நமது கைதட்டல்களும், விசில்களும் அவரை நாம் ஏற்றி வைத்த பீடத்திலிருந்து அவர் இறங்கி வந்து ஏற்கெனவே நன்கு வளர்ந்திருந்த மற்ற நாட்டுப் படங்களின் போக்கைப் பற்றிய உய்த்துணர்தல் ஏதும் இன்றி அவரை ஒரு ‘தனிக்காட்டு ராஜா’வாக முழுமையாக ஆக்கி விட்டது. இப்போது அவரைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் He had all tha potential; but Tamil film world did not utislise his talents fully’ என்ற cliche -வைத் திருப்பித் திருப்பிச் சொல்லும்படியாகி விட்டது. அவராகவே முடிவெடுத்தோ அல்லது அந்தப் பட டைரக்டர் பந்துலு (?) சொன்னதின் பேரிலோ கப்பலோட்டிய தமிழன் படத்தில் ‘அடக்கி வாசித்திருந்தார்’. ஆனால், அந்தப் படம் வெளியான போதோ பெரும் தோல்வியைச் சந்தித்தது. Our taste buds never relish newer and even better tastes ! at least சினிமாவைப் பொறுத்தவரையாவது. கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதை யாரும் கேள்வி கேட்பதேயில்லை. காரணம் கமல் தன்னை ஒரு விஷயம் தெரிந்த நடிகனாக ஆக்கிக் கொண்டுள்ளார். உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம். ஆயினும் தமிழ் சினிமா உலகத்துக்கே உரித்தான பல்வீனம் அவரையும் பாதித்துள்ளது. பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். அவரது ‘தளபதி’ படத்திற்கான அந்தக் கதைக்கு அவர் யாருக்கும் royalty தராமலேயே ஒரு நல்ல கதையைப் பெற்று, அதை நல்ல திரைக்கதையாக்கி ஒரு வெற்றிப் படம் அளித்தார்! மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ. தாங்களே கதாசிரியர்களாக மாறி, தாங்களே திரைக்கதை, வசனம்…இப்படி பல பொறுப்புகளையும் தங்கள் தலைகளில் ஏற்றிக்கொண்டு நம் டைரக்டர்கள் ‘சுமை தூக்கும் கழுதை’களாக மாறி விடுகின்றனர். (பாரதி ராஜா இதில் கொஞ்சம் விதி விலக்கு)கமலுக்கு இந்த ஆசை கொஞ்சம் அதிகம். படத்தில் தன் முழு ஆளுமை வேண்டும் என்பதற்காகவோ என்னவோ அவரே பல விஷயங்களிலும் தலையிட்டு, நடிகன் என்ற தனிப் பொறுப்புக்கு செலவிட வேண்டிய தன் சக்தியை வீணடிக்கிறார். அவரது சிந்தனை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து புதுப் புது விஷயங்களைக் கதைக்களன்களாக மாற்றும் கதாசிரியர்கள் இல்லை. அதற்காக அவரே மற்ற மொழிப்படங்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு நம் ரசனை, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் என்பதற்கேற்ப அவைகளை மாற்றும் ரசாயன வித்தைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. இத்துணை வசதிக்குறைகளோடும், அவர் இன்னொரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்க வேண்டியதுள்ளது. அது ஏற்கெனவே சொன்னது போல, ‘எங்கள் ரசனைகளை மாற்றிக் கொள்ளவே மாட்டோம்’ என்ற கொள்கையில் உறுதியாக நின்று கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமுதாயம்! இங்கே கதாநாயகன் படங்களில் தனியொருவனாக நின்று பெரும்படையையே எதிர் கொண்டு அழித்தாலும், தரையிலிருந்து எம்பி எத்தனை அடி குதித்தாலும், எவ்வளவு முட்டாள்தனமான காரியங்கள் செய்தாலும் பரவாயில்லை; ஒரு ‘பஞ்ச் டயலாக்’ சொல்லணும்; கடைசியில எல்லாம் நல்ல படியா முடியணும் அவ்வளவுதான். சகிக்க முடியாத முக லாவண்யம் இருந்தாலும், அந்த நடிகனோ நடிகையோ ரெண்டு படத்தில் வெற்றிகண்டால் போதும் அவர்களுக்குப் பின்னே கூட்டம் போட்டு விசிலடிக்கத் தயார். இந்த ஃபார்முலாக்களில் இருந்து நம் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சமும் மாறுவதாயில்லை. எனவே இங்கு புத்திசாலித்தனமும் திறமையும் மதிக்கப்படுவதில்லை; அதிர்ஷ்டமும், வியாபார லாபமும்தான் நமது அளவுகோல்கள். இந்த சூழலிலும் தனித்து நிற்கும் கமலைப் பாராட்டவேண்டும்.

முன்பேகூட ஒரு பதிவில் கேட்டிருந்தேன் - ஏன் நமது தமிழ்நாட்டில் இரண்டாந்தரங்கள் எப்போதும் சுத்த அக்மார்க் முதல் தரங்களாக மக்களால் போற்றப்படுகின்றன என்று. சிவாஜி - எம்.ஜி.ஆர்.; கமல் - ரஜினி என்ற தொடரில் இன்று மக்கள் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நல்ல சில நடிகர்களைப் புறந்தள்ளி முன்னணி நடிகராக இருப்பது நம் வழக்கமான ஃபார்முலாப் படிதான். stereotyped cast, புதிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிடவும் எடுக்கவே மாட்டேன் என்று கூறுவதும் அவரின் தனித் தன்மை. இப்போது உள்ள இளம் நடிகர்களில் நல்ல நடிகர் யார் என்ற கேள்விக்கு எத்தகைய தயக்கமின்றி நான் சொல்லும் பதில் - சூர்யா. முதலில் வந்த சில படங்களில் கொஞ்சம் பாவமாகவே இருந்தது - அவரது தந்தை சிவகுமாரை உயர்ந்த மனிதன் படத்தில் பார்த்தது போல. அதன் பிறகு நல்ல பிரமிப்பு
தரும் வளர்ச்சி. முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. சடை வளர்த்து அதற்கு மேல் ஒரு போலீஸ் தொப்பியை வைத்துக் கொண்டு அந்தப் பதவியை ஒரு mockery செய்த நடிகர்களே அதிகம். ஆனாலும் அந்தப் படத்தின் நடிப்பு இயக்குனரின் ‘அடக்கு முறையால்’கூட வந்திருக்கலாம். ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான். இறுதி சீன், கதையமைப்பு, charectersation - இவைகளே அந்தக் கடைசி சீனில் விக்ரமையும் அந்த சீனில் அவர் நடிப்பையும் நம் மனதில் நிலை நிறுத்தியது. தண்ணி அடிச்சிட்டி ‘அப்டியா?’ன்னு கேக்குற இடமெல்லாம் தமிழ்ப் படத்துக்கு ரொம்பவே புதுசு. சூர்யாவின் நடிப்பு பட்த்துக்குப் படம் மெருகேறி வருவது கண்கூடு. இதுவே அவரை நம் தமிழ்த் திரை உலகத்தின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 29 2006 03:30 pm சினிமா
62 Responses
bharaniru_balraj Says:
April 29th, 2006 at 4:45 pm


bharaniru_balraj Says:
April 29th, 2006 at 4:47 pm
படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுரார்.

8 அடி = 16 அடி

Muthuraman Says:
April 29th, 2006 at 6:42 pm
Sivaji ellaa padathilum over acting pannavillai. udharanthukku mudal mariyathai, devar makan , even parasakthi. neenga sonnathu pola avarai nadikka vida villai enru thaan sollanum.

Prasanna Says:
April 29th, 2006 at 10:31 pm
நல்ல நடிகரை பயன்படுத்த தெரியாமல் விட்டுவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். உயர்ந்த மனிதன், முதல் மரியாதை, தேவர் மகன், புதிய பறவை போன்ற படங்கள் மிகச் சிறந்த நடிப்பால் மெருகேற்றப்பட்டவை. பாபு படத்தில் ரிக்ஷாகாரனாக செய்ததை பாராட்டாதவர்கள் எம்.ஜி.ஆரின் ரிக் ஷா காரன் படத்திற்கு தேசிய விருது தந்தார்கள். இன்று கமலையும் அப்படித்தானே செய்து விட்டார்கள். வசூல்ராஜா கமலின் கேரியருக்கு என்ன நன்மை செய்தது என எனக்கு தெரியவில்லை..

TheKa Says:
April 29th, 2006 at 11:02 pm
நல்லா சிந்தித்து தீர்க்கமான முறையில அருமையா எழுதியிருக்கிற கட்டுரை, தருமி. ஆனால் நாம் ஒன்றை கவனத்தில் நிறுத்த தவறக்கூடாது, மக்களின் ரசனையை பொருத்துதான், தயரிப்பாளரும், இயக்குனரும் அந்த குட்டைக்குள் இரங்குகிறார்கள் இல்லன்னா…குணா, மகாநதி, ஆளவந்தான் போன்ற விசயப் படங்கள் மாதிரி ஊத்திக்க வேண்டியதுதான்.

எனவே இது நடிகர்களின் தவறு இல்லை, நம் ரசனையில்தான் இருக்கிறது என்பேன்.

என்ன ரேடியோவில நாம நாடகம் கேட்டதெல்லாம் மறந்து போச்சா…சார் நடிடிடிடிடிக்க்க்கனும் சார்…

சூர்யா நல்ல தேர்வு.

தெகா.

வெளிகண்ட நாதர் Says:
April 29th, 2006 at 11:38 pm
//பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது.//
நல்ல நாவல்களை படமெடுக்கும் முயற்சியில் வெற்றி கொண்ட மகேந்திரன் ஏனோ அதிகம் தொடர்ந்து எடுக்கவில்லை! அதே போல R.செல்வராஜின் அழகான ஆழம் மிகுந்த கிராமியக்கதைகளை, நம் மண்வாசனை கொண்ட கதைகளுக்கு நல்ல திரைக்கதை அமைத்து வெற்றி படங்களாக ஆரம்பத்தில் எடுத்த படங்களுக்கு பிறகு, பராதிராஜா பிறகு மசாலாவிற்கு சென்றதும் வருத்தமானது! அதே போல, அந்த கால நடிகர்களில் அதீத செயற்கையில் நடித்தால் தான் நடிப்பு என்று இலக்கணம் படைத்துக்கொண்டிருந்த சிவாஜியின் காலகட்டத்தில், அதிக மசலா, மக்கள் ஈர்ப்பு ஃபார்மலாவில் தன்னை தனியாக நிலை நிறுத்தி கொண்டிருந்த எம்ஜிஆர் போன்றோர் நடித்த காலகட்டத்தில், மிதமாகவும் இயல்பாகவும் நடித்த ஜெமினி கணேசன் எவ்வளவோ மேல்!
//உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம்.// இதுவும் கொஞ்சம் அதிகம் புகழுவது. ஏனென்றால் மிதமான எதார்த்த நடிப்பை விட அதிபிரசங்கித்தனமான ஓவர் ஆக்டிங் வெளிப்பாடுகள் அதிக இடங்களில் கமலிடம் வெளிப்படுவது உண்மை. இதை நான் ஒரு நடிகன் என்று உணர்ந்து நான் நடித்த காலங்களில் இந்த அதீததை தவிர்க்க நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன்! ஆனால் இது போன்ற அதீதமான நடிப்புகளுக்கு, மக்களிடையே இருந்து வரும் ஆதரவு, கைத்தட்டல், விசில் போன்றவை தரும் போதைகள் அதிகம், அதனால் அதை முழுவதும் விட்டு விட்டு இயல்பான நடிப்புக்கு மாறுவது சற்று கடினமே! இதுவும் நான் உணர்ந்த என் அனுபவம்! ஆதாலால் நடிப்பின் பரிமாணங்களை நிறைய கற்று கொண்டு அதில் மிளர எத்தனையோ யுக்திகளை கடைபிடிக்க இன்று இருப்பது போல, அதனை பக்கத்தில் கண்டுணர்வதுகுண்டான வசதிகள் அப்பொழுதில்லை. ஆனால் அவை அனைத்தும் இருந்தும் இப்பொழுதும் நமது பெருவாரியான ஜனங்களின் ரசிப்பு தன்மையில் அதிக முன்னேற்றம் ஏதும் வரவில்லை என்றே கூறுவேன். அது என்னமோ மெத்தபடித்து, இது போன்ற வசதிகளை பெற்று, பல மடங்கு பரிணாமங்களை பெற்று நடிக்கும் நடிப்பு திறன்கள், புது கதை களங்கள், மற்றும் கதை சொல்லும் பாங்கு போன்வற்றை பார்த்தும், நம் மக்களின் ரசனை வீணாப் போன இந்த ‘திருப்பதி’ போன்ற படங்களை கண்டு ரசிக்கும் தன்மை மாறவில்லை. இதை கண்கூடாக இங்கு அமெரிக்காவிலும் நான் பார்க்கிறேன். இதை என்ன சொல்லுகிறீர்கள். நம் தமிழனக்கு இந்த அதீதமான உணர்வுகள் தம்மால் வெளிகொணற முடியாத அந்த உணர்ச்சி மற்றும் செய்கைகளை திரையில் மற்ற பிம்பங்கள் செய்யும் பொழுது அவனை அறியாமலே பொங்கும் அந்த உணர்ச்சியும் ஒரு காரணம் நீங்கள் சொல்லும் மாறாத நிலை, அதனால் உண்டான வியாபாரத்த்ன்மை! இது மாற பல காலங்கள் ஆகலாம். அது வரையில் சூரியா போன்றோர் மென்மேலும் தங்களி செதுக்கி ஒரு பண்பட்ட நடிப்பின் ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பது நல்லது. அதுவரை விஜய்யும் பேரரசு போன்றோரின் ஆளுமை தான் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்க போகிறது!

குறும்பன் Says:
April 30th, 2006 at 12:14 am
உண்மை படத்திற்கு படம் சூர்யாவின் நடிப்பு மெருகேறிவருகிறது. நல்ல நடிகர் கணக்கில் விக்ரமையும் சேர்த்துக்கொள்ளலாம். முதல் மரியாதையில் சிவாஜி நடிக்கவில்லை வாழ்ந்தார்.
எல்லா (90%) மசாலாபடங்களும் ஓடுவதில்லையே? ரசிக்கிறமாதிரி படம் எடுத்தா ஓடும் .

துளசி கோபால் Says:
April 30th, 2006 at 2:13 am
தருமி,

தமிழ்சினிமா ரசிகர்களின் ‘டேஸ்ட்’ தனிரகம்ன்றது இப்பவாவது புரிஞ்சதா? :
சிவாஜி நாடக மேடையிலே இருந்து வந்தவர். அதான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்னு சொல்லும்படி ஆயிருச்சு.
ஆனாப் பாருங்க, சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனருக்குத்தான் எதை எப்படி எதுவரை செய்யணும்றது
தெரியணும். சரியான நடிப்பு வர்றவரை திரும்ப ஷூட் செய்யலாம்தான். தயாரிப்புச் செலவு கூடிரும்.

ஆனாலும் இதுக்கு முழுப் பொறுப்பு டைரக்ட்டர்தாங்க.

எனக்கும் கமலுக்கு அடுத்தபடி சூர்யாதாங்க.
இன்னும் என்னென்னமோ சொல்லணும்தான். பார்க்கலாம். பின்னூட்டமெல்லாம் சுருக்கமா இருக்கணுமாமே.
டிபிஆர்ஜோ சொல்லி இருக்கார்.

சிட்டுகுருவி Says:
April 30th, 2006 at 10:57 am
சூர்யா வை பற்றி என்பதால் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்னும் சற்று தூரம் பயணம் செய்ய வேண்டும்.
அந்த வரிசையை அடைய.
மற்றபடி நடிகன் என்ற நிலயை தாண்டி சகலகலாவல்லவன் ஒரு கலைஞனுக்கு நிகர் (multi-skill artist) இந்தியாவில் இன்னும் யாருமில்லை.
இங்கு தமிழை தாண்டி யோசித்தால், மம்மூட்டி யை இந்த வரிசையில் வைத்துத்தான் ஆக வேண்டும்.

கதாநாயகன் என்ற அந்தஸ்து எடுத்துவிட்டால், ரகுவரன்,நாசர்,பிரகாஷ்ராஜ் இவர்களை ஒதுக்க முடியாது.

ஏன் ரஜினியையே நாம்தான் கெடுத்துவிட்டோம். அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது,16 வயதினிலே.. கமலுடன் சேர்ந்து நடிக்கும் போது,நிறைய இடங்களில் கமலைவிட நன்றாக perform செய்திருப்பார்.
நன்றி…

தருமி Says:
April 30th, 2006 at 11:14 am
bharaniru_balraj,
நான் கணக்குல ரொம்ப வீக்குங்க. நீங்க வேற கணக்கு போட்டுத்தள்றீங்க..
அதோடு ஸ்மைலிகள் வேறு.

என்ன சொல்றீங்கன்னு தெளிவா சொல்லுங்களேன்; புரிஞ்சுக்கிறேன்.

பிறகு இன்னொண்ணு - உங்க இந்தப் பதிவைப் படிக்கிறதுக்கு என்ன மாயக்கண்ணாடி போடணும்னும் சொல்லிருங்கோ.

தருமி Says:
April 30th, 2006 at 11:19 am
மன்னிச்சிக்கங்க bharaniru_balraj,
லின்க் தப்பா கொடுத்திட்டேன். நான் சொன்னது இந்தப் பதிவைத்தான். ஒரு preview option இருந்தா இதுக்குத்தான் நல்லதுன்னு தோணுது

தருமி Says:
April 30th, 2006 at 11:25 am
Muthuraman,
அவரை நன்றாக நடிக்க நாமும் விடவில்லை; அவருக்குமே நாடக ஸ்டேஜிலிருந்து திரைப்படங்களுக்கு எடுக்க வேண்டிய பரிணாமம் தெரிகிற அளவுக்கு விஷய ஞானம் இல்லாம போச்சு. அவரோட காலமும் அப்படி.
நாமும் சரி அவரும் சரி ரொம்பவே unlucky.

ஆனால் இப்பவும் ‘வளர மாட்டேன்’ அப்டின்னு அடம் பிடிக்கிற சினிமாக்காரர்களும், ரசிகப் பெருமக்களான நாமும்தான் ரொம்ப மோசம் & பாவம்

தருமி Says:
April 30th, 2006 at 11:48 am
Prasanna,
நாம் ‘வளரணும்’ அப்டிங்கிறதுதான் எனது ஆசையும், எதிர்பார்ப்பும். என்னைக்கி அது நடக்குமோ…உங்க காலத்திலேயாவது வளருங்க’ப்பா

செல்வன் Says:
April 30th, 2006 at 11:57 am
பார்ட்னர்,

இதில் முக்கால்வாசி கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை.நல்ல படம் என்றால் என்ன?ரசிகன் விரும்புவதை தருவது நல்ல படமா அல்லது பண்டிதர்கள் விரும்புவதை தருவது நல்ல படமா?திரைத்துறை கலைத்துறையா வியாபாரமா என்பதை பொறுத்தே இதற்கான பதில் அமையும்.திரைத்துறை கலைத்தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.இது முழுக்க முழுக்க கமர்சியல் சினிமா எனும்போது கலையை இங்கு கொண்டு வந்து புகுத்துவது தேவையற்றது.

வியாபாரத்தில் இப்படித்தான் மேகின்டாஷ் சிறந்த கம்புயூட்டர் என பண்டிதர்கள் அனைவரும் சொல்வார்கள்.ஆனால் அதிகம் விற்பது பி.சியாகவும் வணீக ரீதியாக அடிவாங்குவது ஆப்பிள்,மேகின்டாஷாகவும் இருக்கும்.

வியாபாரத்தின் பொன்விதி quality is determined by customers,not by pundits என்பதாகும்.(Quality is as perceived by customers and not determined by manufacturer’s internal standards)

மேலும் தரமான படம் என ஒன்று தமிழில் இருக்கிறது என நான் நம்பவில்லை.(ஆங்கில,மலையாள,இந்தி படம் எல்லாம் நான் பார்த்ததில்லை,so can’t compare and comment).தரமான படம் என பண்டிதர்கள் சொல்லும் படங்களை பார்த்தால் அழுவாச்சி வரும்.அதில் பெரிதாக ஒன்றும் இருக்காது.நடிப்பை பார்,மேக்கப்பை பார்,மேக்கப் போடாமல் நடித்திருக்கிறார்,போலிஸ்காரன் போல் முடிவெட்டிக்கொண்டு போலிஸ்காரனாக நடித்திருக்கிறார் ஆ ஊ என்பார்கள்.யாருக்கு வேணும் அதெல்லாம்?who cares?what difference does it make to me?Who knows it?who notices it?Not me.I am not ready to spend my cognitive resources on such pointless things.I go there to have fun,not to do a reviewer’s job.ரஜினி பரட்டைத்தலையோடு இன்ஸ்பெக்டராக வந்தா தான் நல்லாருக்கும்.அழகா இருப்பார்.போலிஸ் கட்டிங்க்ல இன்ஸ்பெக்டரா வந்தா நல்லாவே இருக்காது.

ரஜினி படம் பார்த்து விட்டு திரயரங்கை விட்டு வெளிவரும் குடும்பம் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு வரும்.ஜாலியாக கணவனும் மனைவியும் சிரித்தபடி குழந்தைகளை அருகிலுள்ள ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப்போய் டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு,ரஜினி போல் குழந்தை வசனம் பேசுவதை,சண்டை பிடிப்பதை ரசித்துக்கொண்டு சந்தோஷமாக அந்தக் குடும்பம் வீட்டுக்கு போகும்.

கமல் படத்தை பார்த்துவிட்டு அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வெளியே வந்து மூட் அவுட்டாகி வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவார்கள்.காப்பியாவது,டிபனாவது?

கமல் சீரியசாக ஒருபடம் தந்துவிட்டு,காமடியாக இன்னொரு படம் தருவார்.ஒரு படம் விட்டு இன்னொன்றை தான் பார்ப்பது என வழக்கமாக வைத்திருக்கிறேன்.

தருமி Says:
April 30th, 2006 at 12:08 pm
தெக்காட்ஸ்,
“மக்களின் ரசனையை பொருத்துதான், தயரிப்பாளரும், இயக்குனரும் அந்த குட்டைக்குள் இறங்குகிறார்கள் ..”//

இது ரொம்ப age old excuse ! இதுக்கு நான் கொடுக்கிற age old answer இதுதான்: வீணை செய்ற கலைஞனால ரொம்ப விற்குமே அப்டிங்கிறதுக்காக அகப்பைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டான். நல்ல கலைஞனால் மோசமான படைப்பைத் தர முடியாது. (அந்த உணர்வை சலங்கை ஒலியில் இயக்குனர் நன்கு காண்பித்திருப்பார்)
ஒரு ஆடூரையோ, நம்ம மகேந்திரனையோ ஒரு திருப்பதி/ திருப்பாச்சி படம் எடுக்கச் சொல்லிப்பாருங்க…பாவம் அவர்களால் அது முடியாது.

நம்ம ஆளுகளுக்கு அவ்வளவுதான் ஐவேசு..சரக்கே அவ்வளவுதான். கேட்டால் ரசிகர்கள் (வினியோகஸ்தர்கள்) அதைத்தான் கேட்கிறாங்கன்னு நம்ம தலையில போட்டுருவாங்க. அவங்க சரக்கைப் பத்தி அடுத்த பதிவு ஒண்ணு போடுறேன். அவ்வளவு எதுக்குங்க, சமீபத்திய நிகழ்வு: பாலாவின் பிதாமகனில் ஒரு டப்பா டான்ஸ் வேணும்னு வினியோகஸ்தர்கள் கேட்டதால் சிம்ரன் டான்ஸ் ஒண்ணு கடைசியில சேர்த்ததாக ஒரு செய்தி.அந்த நடனம் படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்டாகத்தான் இருந்தது - though focus was on Surya and not on simran. that is out and out becasue of Bala. making of that scene was simply great unlike - இப்படிப் போடு போடு/ வடுமாங்காய் ஊறட்டுமா?

தருமி Says:
April 30th, 2006 at 6:02 pm
வெளிகண்ட நாதர்,
நீங்கள் கூறுவதில் பலவற்றுடன் உடன்படுகிறேன் - சில விஷயங்கள் தவிர.
ஜெமினி கணேசன் - மிதமும் இயல்பும் சரி; ஆனால் variety? சந்தோஷமாக இருந்தால் கோட்டு சூட்டு; கவலையானா ஜிப்பா,பைஜாமா. கொஞ்சம் வளையாத உடல்வாகு..எப்பவும் ஒரு straight rod போன்றதொரு உடலமைப்பு. pliability totally missing …இல்ல..?

கமல்: ஓவர் ஆக்டிங்..? இதை நம் திரைப்படங்களில் சிறிது சிறிதாக ஏற்பட்டு வரும் பரிணாமம் என்றுதான் என்னால் கூற முடியும். ஹாலிவுட் படங்களில் நடிகர்களின் நடிப்பைவிடவும் உணர்ச்சிகளைக் காண்பிக்க கேமிரா கோணங்களும், இசையும் பெரிதும் பயன் படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த cliff hanger பட்த்தின் முதல் சீனில் உயிருக்குப் போராடும் ஒருவரின் நடிப்பு ஒரு சில காமிரா கோணங்களினாலும் இசையாலும் உயிர்ப்போடு இருக்கும்.நாம் இன்னாள் வரை நாம் எதிர்பார்ப்பது முகத்தின் ஒவ்வொரு தசையும் துடிக்கணும்; கண்ணுக்குக் கீழ் உள்ள சதை மட்டும் ஆடணும்….

TheKa Says:
April 30th, 2006 at 6:44 pm
தருமி, உங்க காச போட்டு இந்த ‘காட்டான’ சினமா காட்ட கூட்டிடு போனீங்கன்னா, அந்த படம் டப்பவா இல்ல தங்கமான்னு தெரிஞ்சுக்கலாம், எப்படின்னு கேளுங்க…நான் ஒரு அளுமூஞ்சி படம் பாத்துகிட்டு இருக்கும் போது கீழ குமிஞ்சு ஏதோ தேடுற மாதிரி ஆக்ட் வுட்டேன்னா, இயக்குனர் என் மனச ‘lick’ பண்ணீட்டருன்னு பொருள் அதுக்காக, கையிலா அம்மாவ தூக்கிட்டு கோயில் படில ஹீரோ “அம்மாவை வணங்காத”ன்னு பாடிக்கிட்டு ஏறப்ப அப்படி தோணுமான்னு கேக்காதீங்க…என்னமோ தோனாது…

KOZHUNDU Says:
April 30th, 2006 at 7:14 pm
உலக அளவில் பேசப்படுகிற படங்களில் இயக்குனர்தான் கடவுள். கமலோட திறமையால பல இயக்குனர்களெல்லாம் இவர்கிட்ட வேலைதான் செய்யறாங்க. சிவாஜி விசயத்திலேயும் இதேதான் நடந்தது. சிவாஜியை சரியா உபயோகித்தவர் பாரதிராஜா. நம்ம மக்கள் சினிமாவுக்கு போறது
மூணு விசயத்துக்காகன்னு நினைக்கிறேன். அன்றாடம் கவலையை மறக்கிறதுக்கு, நம்மளவிட அழகானவங்கள பாக்கிறதுக்கு, நம்மால முடியாததை மத்தவங்க செய்யறத பாக்கிறதுக்கு.
வாழ்கைத்தரம் முன்னேற முன்னேறத்தான் வேறு விதமாப் படங்கள் வரப் போகுது. ஆனா இதுல ஒரு விதி விலக்கு இருக்கு. பலரோட அனுபவங்கள திரைப்படங்களா இயல்பா காமிக்கணுன்னு வரும் போது இயக்குனருக்கு வெற்றி. அந்த காலத்தில ஒரு தலை ராகம். இந்த காலத்தில காதல், தவமாய்
தவமிருந்து. ‘hunchback of notredame’ யெல்லாம் தமிழ்ல ஒடவே ஓடாது. அன்பே சிவத்தில கமல் முகத்தை கோரப் படுத்திக்கிட்டது படம் ஓடாததற்கு ஒரு காரணம். அட அது கதைக்கு தேவைன்னு சொல்லலாம். அழகா இல்லாதவங்க
நடிச்சு படம் எதாவது வந்திருக்கா?

கமல் தானே இயக்குகிற படத்தில் இந்த தப்பைப் பண்ணுகிறார். காட்சி அமைப்புகளின் நீளம் அதிகம். சேரனும் இதையே செய்கிறார். யார் வீட்டிலயாவது சாப்பிட போகும் போது, சாப்பாடு நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை ஆரம்பத்திலேயே சொல்லிட்டா, எழுந்து போக விட மாட்டாங்க.
தட்டில அதிகமா விழுந்துகிட்டே இருக்கும். நமக்கு என்னடா செய்யறதுன்னு ஆயிடும்.

கமலோட வலிமை, காட்சி அமைப்புகள்(Details). நகைச்சுவை.

சூர்யா நல்ல தேர்வு!

அன்புடன்
சாம்

//எதிர்பார்ப்பது முகத்தின் ஒவ்வொரு தசையும் துடிக்கணும்; கண்ணுக்குக் கீழ் உள்ள சதை மட்டும் ஆடணும்….//

எனக்கு மாடு ஞாபகம் வருது )

dharumi Says:
April 30th, 2006 at 9:25 pm
partner,
better you visit this my earlier posting: 106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) - பின் குறிப்பு The very first line may question your view. you are welcome to come back after reading that…

ஜோ Says:
April 30th, 2006 at 9:31 pm
தருமி,
நான் இதைப்பற்றி பின்னூட்டமெல்லாம் தர முடியாது.பதிவு போட்டால் தான் உண்டு..அவ்வளவு சொல்ல வேண்டியிருகிறது .இப்போதைக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன் .இயல்பு நடிப்பு ,மிகை நடிப்பு ,ஸ்டைல் நடிப்பு ,கம்பீர நடிப்பு ,வீர நடிப்பு ,கோழை நடிப்பு எல்லா நடிப்புலயும் மன்னன் ஒருவர் தான் .எங்கள் நடிகர் திலகம் தான் .அவருக்கு பிறகு கமல் தான்.

செல்வன் Says:
April 30th, 2006 at 10:02 pm
பார்ட்னர்
உங்களோட அந்த பதிவை முன்னமே படிச்சிருக்கேன்.என்னை பொறுத்தவரை சினிமாங்கறது பொழுதுபோக்குத் தான்.பொழுதுபோக்குக்காக மூளையை களட்டி வைக்கணுமான்னு கேக்கறீங்க.ஆமாம்னு தான் சொல்லுவேன்.மூளையோட பொழுதுபோக்க செஸ்,புத்தகம் படித்தல்னு நிறைய இருக்கு பார்ட்னர்.மூளையை கழட்டி வச்சுட்டு எஞாய் பண்ண மாயாஜாலம்,மந்திரம்,ரகளை,ரவுசுன்னு தர்ர சினிமா வேணும்.லைட் என்டெர்டைன்மென்டை போய் சீரியசா எடுத்துக்க சொன்னா என்னங்க பண்றது?

மகாநதி பாத்துட்டு மூட் அவுட்டானது, ஏ ராம் பாத்துட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையே வீணாணது,குருதிபுனல் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்தது…எதுக்குங்க இப்படி பொழுது போக்கணும்?

சினிமாங்கறது ஒரு குடும்பத்தோட சந்தோஷமான ஞாய்யிற்றுக்கிழமையை கழிக்க உதவணும்ங்க.சிரிச்சுட்டே குழந்தைகளோட சேர்ந்து படம் பாத்துட்டு பாப்கார்ன் சாப்பிட்டுட்டு ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வர்ர மாதிரி இருந்தா தானுங்க அது படம்.எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமா?கூட வர்ர 3 வயசு குழந்தைக்கும் படம் புரிய வேண்டாமா?

சிவாஜியோட பாசமலர்,பாகப்பிரிவினை எல்லாம் கஷ்டப்பட்டு எவ்வளவோ டிரை பண்ணியும் முழுக்க பாக்க முடியமாட்டேங்குது.பலே பாண்டியா,சபாஷ் மீனா,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி எல்லாம் பாத்தா சிரிப்பே நிக்க மாட்டேங்குது.குளோசப்ல அழுகற காட்சி அவர் மாதிரி யாராலும் பண்ண முடியாதும்பாங்க.எனக்கு அது பாக்க புடிக்காதுங்கறப்ப அது தேவைங்களா?

தயாரிப்பாளர் வாழணும்ங்க.ரஜினி படம் எடுத்த தயாரிப்பாளர் எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க.சிவாஜி வாழ்க்கை முழுவதும் நடிச்சு சம்பாதிச்சு சேத்த சொத்தை விட அதிக சொத்தை பிரபுவுக்கு தந்து சந்திரமுகிங்க.
வேட்டையாடு விளையாடு எடுத்த காஜா மைதீன் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாரு,கலைப்புலி தாணு கிட்டத்தட்ட அந்த நிலைமைக்கு போயி தப்பிச்சாரு,அன்பே சிவம் எடுத்த வெங்கடேச்வரா பட கம்பனி அதோட காலி….அந்த படம் எடுத்த நஷ்டத்தை ஈடுகட்ட இலவசமா ஒரு படம் நடிச்சுதர்ரேன்னு கமல் சொல்லி கூட அவங்க ஒத்துக்கலையாம்.

இவரும் கஷ்டப்பட்டு,தயாரிப்பாளரையும் கஷ்டப்படுத்தி,படம் பாக்க வர்ரவங்களையும் அழ வெச்சு…எதுக்குங்க இதெல்லாம்?

சகலகலாவல்லவன் அடைந்த வெற்றி சரித்திர சாதனைங்க.நாயகன்,ஏ ராம் எதுவும் அது முன் நிக்க முடியாதுங்க.

தருமி Says:
April 30th, 2006 at 10:36 pm
குறும்பன்,
படங்கள் ஓடுவது மட்டுமே படங்களின் தகுதியையும் தரத்தையும் பற்றிச் சொல்லும் காரணிகளா என்ன..?

தருமி Says:
April 30th, 2006 at 10:39 pm
துளசி,
“பின்னூட்டமெல்லாம் சுருக்கமா இருக்கணுமாமே.
டிபிஆர்ஜோ சொல்லி இருக்கார்..'’//
-அதெல்லாம் அவர் பதிவுகளுக்காகச் சொல்லியிருப்பார் பாருங்களேன்..சோதனையாய் இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் பல என்ன நீளம்னு. நீங்க எழுதுங்க..எழுதிக்கிட்டே இருங்க…

தருமி Says:
April 30th, 2006 at 10:43 pm
சிட்டுக்குருவி,
“சூர்யா இன்னும் சற்று தூரம் பயணம் செய்ய வேண்டும்.”//

- அதனால்தான் தலைப்பை அப்படி வைத்தேன்.

தருமி Says:
April 30th, 2006 at 11:01 pm
பார்ட்னர்,
“முக்கால்வாசி கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை” - கால்வாசிக்கு நன்றி
உங்கள் கேள்விகளுக்கு இரு வகை பதில்கள் கொடுக்கலாம்:
1. நாம் இருவரும் இந்த விஷயத்தில் இணைய முடியா இணை கோடுகள். வேற விஷயம் பேசுவோமா..?
2. உங்களைப்போலவே நகைச்சுவைப் படங்கள் Laurel&Hardyயிலிருந்து இன்றைய நகைச்சுவைப் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவை நகைச்சுவைப்படம் என்று தெரிந்து போய், மகிழ்வது என்பது வேறு. சீரியஸான படத்துக்குப் போய் அங்கே ஒருவன் பத்துபேரை தோளில் உள்ள துண்டு அல்லது கண்ணில் போட்டிருக்கும் கண்ணாடி, அல்லது உதட்டிலிருக்கும் பீடித்துண்டு கீழே விழாமலே எல்லாரையும் புரட்டி எடுக்கும் நகைச்சுவைக் காட்சி என்னை ரசிக்க வைப்பதில்லை.அந்த மாதிரி இடங்களில் என் பேரப்பையன் அதை ரசிக்கலாம்; ஆனால் நானுமா அதை ரசிக்க முடியும்?
genre - என்ற வார்த்தையே நம் சினிமா உலகில் இல்லையே என்பதுதான் வருத்தம். அப்படி இருந்தால் உங்களுக்குப் பிடித்தது நீங்கள் பார்க்கலாம்; எனக்குப் பிடித்ததை நான் பார்க்கலாம் - ஆங்கிலப்படங்களில் இருப்பது மாதிரி. இங்கே நாம் இரண்டு பேருமே ஒரே படத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதிருக்கிறதே!

அதோடு பார்ட்னர், நீங்கள் சொல்வது போல எல்லாமே சுகம் என்கிறது மாதிரியான படங்களாக இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது சரியா? இலக்கியங்களிலே எப்போதுமே அவலச்சுவைதான் நிலைத்து நிற்கும் இலக்கியங்களாக இருக்கின்றன - சிலப்பதிகாரம் போல். ஷேக்ஸ்பியரின் as you like it போன்ற நாடகங்களைவிடவும் Macbeth, Hamlet, Othello போன்ற சோக முடிவுள்ள நாடகங்களே புகழ் பெற்றன.

அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசம் - நீங்கள் சொல்கிறீர்கள்: “சினிமாங்கறது பொழுதுபோக்குத் தான்.” எனக்கு அப்படி இல்லைங்க.

செல்வன் Says:
April 30th, 2006 at 11:41 pm
பார்ட்னர்,

நீங்கள் சொல்லுவதை புரிந்துகொள்ள முடிகிறது.உங்கள் ரசனையும் எதிர்பார்ப்புகளும் வேறு,என்னுடையது வேறு.

நீங்கள் சொன்ன மாதிரி கலைப்படம் விரும்பும் ரசிகர்களுக்காக அம்மாதிரி படங்கள் தேவைதான்.வெரைடி இல்லை என்கிறீர்கள்.உண்மைதான்.variety will come with numbers.

ஒரு கதாநாயகன் 1000 பேரை அடிப்பது உலகம் பூரா இருப்பதுதான்.First blood, fist of fury,என்டர் தெ டிராகனில் எல்லாம் அப்படித்தான் வெளிநாட்டில் எடுத்தார்கள்.கிளாடியேட்டர்,Robinhood பார்த்தால் பழைய எம்ஜிஆர் படம் மாதிரி தான் இருக்கு.இந்த படங்களை எல்லாம் ஆஸ்கார் கொடுத்து நல்ல படம் என்கிறோம்.நம்மூரில் ரஜினி,எம்ஜிஆர் செய்தால் நமக்கு பிடிப்பதில்லை.

சரி…சினிமா சீரியஸ் இல்லைன்னு சொல்லிட்டு அதை சீரியசா ஆராய்ச்சி பண்ணி கிடைப்பது என்ன?

தருமி Says:
May 1st, 2006 at 10:13 am
கொழுந்து சாம் / சாம் கொழுந்து,
* முதல் மரியாதையையும் விட தேவர் மகன்தான் எனக்குப் பிடித்தது.
* அன்பே சிவம் தோற்றதற்கு நீங்கள் கொடுத்த காரணம் சரியா என்று தெரியவில்லை. அப்படியானால், பதினாறு வயதினிலே அதில் சேராதா?
* “அழகா இல்லாதவங்க
நடிச்சு படம் எதாவது வந்திருக்கா?” இப்படியெல்லாம் ஜோக் அடிக்கக் கூடாது. நம்ம பாரதிராஜா அறிமுகம் செய்த சந்திரசேகர், பாண்டியனிலிருந்து இன்றைக்கு நம்ம தனுஷ் வரை உள்ள ‘திரு முகங்களை’ மறந்திட்டீங்களா?

தருமி Says:
May 1st, 2006 at 10:14 am
ஜோ,
ஒண்ணு சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போய்ட்டீங்க…
தேர்தல் வேலையில் பிஸியா இருக்கீங்க போலும்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 10:39 am
தேவர் மகனையும் சேர்த்திருக்கணும். இயக்குனர் மலையாளப் பட இயக்குனர் பரதன் தானே!
இவர் மலையாளப் படங்கள் நீங்கள் சொல்கிற ‘genre’ வகை. பதினாறு வயதினிலே முழுக்க முழுக்க
பாரதிராஜா படம். அவருக்காகவே அவருடைய புதிய மாறுபட்ட முயற்சிக்காக பேசப்பட்டது.
படம் முழுக்க கமலுக்கு மட்டும் முக்கியத்துவமில்லை. ரஜினிக்கு அட்டகாசமான ரோல், ஏன் sri devi, காந்திமதிக்கு கூட நினைவில் நிற்கும் கதா பாத்திரங்கள். இவர் தான் முதல் முறையா படத்தின்
இயக்கம், ஆக்கம் எல்லாத்துக்கும், தரத்துக்கும் தான் காரணம்னு காட்டியவர். நல்ல இசை, நல்ல
ஒளிப்பதிவு, முழுக்க முழுக்க கிராமம் எல்லாமே +. இன்னைக்கு இந்த ரோல்ல கமல் நடிக்க மாட்டார். அன்னைக்கு பாலசந்தர்
உருவாக்கிய அழகிய பையன் இமேஜை உடைக்க உதவியது இந்த பாத்திரம்.
பாண்டியன், சந்திர சேகர் படவுலக ஆயுள் கம்மிதானே! இவங்க படம் ஓடின மாதிரி தெரியலையே! பாலைவனச்சோலையைப் பத்தி சொல்றீங்கன்னா, அது சுகாசினி படம். பையங்க பொண்ணு பின்னாடி
போற கதை.

அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 10:46 am
தனுஷ் பத்தி சொல்லணுன்னா, தெரிந்து உருவாக்கிய ‘bad boy’இமேஜ். நிறையப் பேர் மனசில நினைக்கிறத
திரையில செய்கிறார். இவர் முதல் படம் ஆபாசம்ன்னு எதிர்ப்பு இருந்துதுன்னு நினைக்கிறேன்
அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 11:07 am
பாரதி ராஜா தன்னை ஹிரோவாப் போட்ட படம் நல்ல படம்னாலும் ஒடலையே! விஜய சாந்தி,
அருணாவின் அறிமுகப் படம்.
அன்புடன்
சாம்

Prasanna Says:
May 1st, 2006 at 3:14 pm
///ஜெமினி கணேசன் - மிதமும் இயல்பும் சரி; ஆனால் variety?
///
அப்போ ஸ்ரீகாந்த் இந்த வகைல சேர்த்துகலாமா?? வெண்ணிற ஆடைல அடக்கி வாசிச்சது. காசேதான் கடவுளடால காமெடி, ராஜ நாகம்ல வில்லன். அவர நாம மிஸ் பண்ணலயா??

//மகாநதி பாத்துட்டு மூட் அவுட்டானது, ஏ ராம் பாத்துட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையே வீணாணது,குருதிபுனல் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்தது…எதுக்குங்க இப்படி பொழுது போக்கணும்?//
கரெக்ட் அதுக்கு பதிலா, ஊர்க்காவலன் படத்துல கால்ல கயிறு கட்டி ஜீப்ப நிறுத்துற டெக்னிக்க கத்துக்கலாம். பாபா பாத்து ஷூல தீ வர்ற மாதிரி நடக்க கத்துக்கலாம். சந்திரமுகில ரஜினி அறிமுக காட்சில கைல ஷு கட்டி இருப்பாரே அத பாத்து ரசிக்கலாம்.
அடப்போங்கய்யா! பேரரசு படம் எடுத்தா மெஸேஜ் இல்லனு சொல்றது, கமல், சேரன் படம் எடுத்தா காட்சி நீளம்னு சொல்றது. உங்கள எப்படித்தான் திருப்தி படுத்த முடியும்???

வசந்தன் Says:
May 1st, 2006 at 3:32 pm
சிவாஜி திரைக்குப்பின்னும் நடித்துக்கொண்டுதான் இருந்தார் என்று நினைக்கிறேன்.
சென்னை வானொலியில் சிவாஜியின் செவ்வி தொடராகப் போனபோது கேட்டேன். தொடக்கத்தில், இவர் நடித்த படத்திலிருந்துதான் வசனங்கள் போடுகிறார்களோ என்று ஐயுறுமளவுக்கு இருந்தது.
‘சாமி, ஆக்டர்ஸ் கிட்ட அவ்வளவுக்கு பிரிவினை வந்துடிச்சா? மலையாளி, தெலுங்கன், கர்னாடகான்னு பிரிச்சுப் பாக்கிற நெலம வந்துடிச்சா? அப்பிடியா நாம இருந்தோம்? அந்தநேரத்துல இந்தியா -சீனா வார் நடந்தப்போ….” என்று அடித்தொண்டையில் கரகரத்துக்கொண்டிருந்தார், கெளரவம் சிவாஜிபோல.
பல நாட்கள் ஒலிபரப்பான அவரின் அத்தொடர் முழுதும் நான் கவனித்தது இதைத்தான்.
அவர் வழமையிலும் அதீத நடிப்புக்காரன் என்றுதான் நான் நினைக்கிறேன். நேரில் அறிந்தவர்கள் உண்மை சொன்னால் நன்று.

கொழுந்து சொல்வதுபோல, வாழ்க்கைத்தரம் மாறினால் ரசனையும் மாறுமென்பதில் ஓரளவு நியாயமிருக்கிறது. ஆனாலும் அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது.

தருமி Says:
May 1st, 2006 at 3:51 pm
partner,
1000 பேரை அடிப்பது உலகம் பூரா இருப்பதுதான்…sylvester படம், james bond படம் அப்டின்னா எப்படியிருக்கும்னு தெரியும். நீங்க சொல்றது மாதிரி ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் படம் பார்க்க குடும்பமா போகும்போது baby’s day out, home alone அப்டின்னு போவீங்க; கொஞ்சம் வயசான பையன் ஆயிட்டா saving the ryan அல்லது james bond படத்துக்கோ கூட்டிக்கிட்டு போவீங்க. வ்யசுக்கார ஆளுகளா சேர்ந்தா basic instinct, indecent proposal அப்டின்னு போவீங்க. இங்கே எல்லா மசாலாவையும் ஒரே படத்தில் அல்லவா அள்ளித் தெளிக்கணும்னு எதிர்பார்க்கிறோம்.

bharaniru_balraj Says:
May 1st, 2006 at 3:52 pm
தருமி,

முதல் கமன்ட் “வித விதமான் தோற்றம்”
2 வது கமன்ட் ” அப்பா 16 அடி பாஞ்சா இவர் 16 அடி பாயுறார்.

அவ்வளவுதான்.

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:03 pm
//அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது//

வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!

அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:05 pm
தெக்காட்ஸ்,
“கீழ குனிஞ்சு ஏதோ தேடுற மாதிரி ஆக்ட் வுட்டேன்னா…” நம்ம டெக்னிக் வேற

தருமி Says:
May 1st, 2006 at 4:13 pm
கொழுந்து சாம்,
தனுஷ் பற்றிச் சொன்னது தமிழ்த் திரையுலகின் ‘அழகுத் திருமுகங்கள்’ என்ற முறையில். ரஜினியைக்கூட இதில் சேத்துக்கலாம். என்ன, மக்கள் அடிக்க வராமலிருந்தால் சரி

தருமி Says:
May 1st, 2006 at 4:15 pm
ப்ரசன்னா,
“உங்கள எப்படித்தான் திருப்தி படுத்த முடியும்??? “//
- அதச் சொல்லுங்க…

தருமி Says:
May 1st, 2006 at 4:17 pm
வசந்தன்,
probably the ‘actor’ in him had overgrown on his personal self

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:22 pm
தருமி சார்,
எங்க வீட்டில ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் இருக்கார்!!! நிறைய பேர்
வீட்டிலேயும் இத பார்த்திருக்கேன்!
மாமனார் சுறு சுறுப்பு மருமகனுக்கு கொஞ்சமாவது இருக்கு. மாமனார் charisma தான் இல்லை!:-)
அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:28 pm
கொழுந்து,

“ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் ..” அந்தப் பிஞ்சுக் ‘கொழுந்து’ யாருங்க?

அது எப்படிங்க? சினிமாவிலோ, சின்னத் திரையிலோ மூஞ்ச காமிச்சிட்டாலே அவங்க எவ்வளவு ‘கேவலமா’ இருந்தாலும் நம்ம ஊரு கூட்டம் கொஞ்சம் பின்னாலேயே போயிடுது? சில comperes, சின்னத்திரை நடிகர்கள் இருக்கிறார்கள் - அதுகளை smart, cute அப்டின்னு சொல்லிக்கிட்டு பின்னால போறதுகளைப் பார்த்தா வேடிக்கையாகத்தானிருக்கு.

தருமி Says:
May 1st, 2006 at 4:31 pm
bharaniru_balraj Comments:

தருமி,

முதல் கமன்ட் “வித விதமான் தோற்றம்”
2 வது கமன்ட் ” அப்பா 16 அடி பாஞ்சா இவர் 16 அடி பாயுறார்.

அவ்வளவுதான்

தருமி Says:
May 1st, 2006 at 4:34 pm
bharaniru_balraj,
உங்க பின்னூட்டத்தை அனுமதித்த பின்னும் இங்கே ‘இறங்க’ மறுத்துவிட்டதால் நானே வலுக்கட்டாயமாக இறக்கம் செய்து விட்டேன்.

உங்கள் இரண்டாம் கமண்ட் புரிந்தட்க்ஹு. முதலாவது இப்போது தான் புரிகிறது.
அப்பா எங்கே 8 அடி பாய்ந்தார்?

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:40 pm
//“ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் ..” அந்தப் பிஞ்சுக் ‘கொழுந்து’ யாருங்க?//
நிசமாலுந்தான் சொல்றேன். சின்னத்திரையில ரஜினி முகத்தைப் பார்த்தா வர சந்தோசத்த விலை கொடுத்து வாங்க முடியாது. படையப்பா திரும்ப திரும்ப பார்த்துட்டு அந்த பிறந்த நாள் பாட்ட ஹம் பண்ணப் பார்ப்பாங்க. இது கோர்வையா பேச்சு வரதுக்கு முன்னாடி!
அன்புடன்
சாம்
சின்ன திரையில ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை?
அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:45 pm
KOZHUNDU Comments:

//அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது//

வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!

அன்புடன்
சாம்

suresh - penathal Says:
May 1st, 2006 at 4:49 pm
உங்கள் பதிவு தூண்டி நானும் ஒரு திரை அரசியல் பற்றிப்பதிவிட்டிருக்கிறேன் இங்கே!

அவசியம் பாத்து திட்டிட்டுப்போங்க!

தருமி Says:
May 1st, 2006 at 4:50 pm
கொழுந்து சாம்,
உங்க பின்னூட்டத்தை அனுமதித்த பின்னும் இங்கே ‘இறங்க’ மறுத்துவிட்டதால் நானே வலுக்கட்டாயமாக இறக்கம் செய்து விட்டேன்

“வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!”//
- எனக்குப் புரிஞ்சு போச்சே! சந்திரமுகி படத்துக்கு நமது அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்கள் அடித்த ‘லூட்டி’ பத்திதானே சொல்றீங்க, வசந்தன்?

இளவஞ்சி Says:
May 2nd, 2006 at 9:13 pm
தருமி சார்,

சிவாஜி, கமல் அதுக்கப்பறம் சூர்யா.. இதெல்லாம் ஓகே!

ஆனா சிவாஜி ஓவர் ஆக்டிங்னு ஹாலிவுட் படங்களையெல்லாம் கம்பேர் செய்து சொல்வதை நான் கொஞ்சம்கூட ஒத்துக்க மாட்டேன்!

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு கலை. இயல், இசை, நாடகம்னு நமக்கு எல்லாமே இயல்பு வாழ்க்கையைவிட ஒரு படி தூக்கலா இருக்கனும்! இத்தகைய பின்புலத்தில் இருந்து வந்த ஒரு கலைஞன் அந்த காலத்தில் அத்தனை வேடங்களை ஏற்று அத்தனை வெரைட்டி காட்டியிருக்காருன்னா அது எப்பேற்பட்ட சாதனை! கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும்னு சொன்னா எந்த முகம் உங்களுக்கு ஞாபகம் வருகிறது?!

ராமாயண மகாபாரத கூத்துக்கள் பார்த்திருக்கிறீர்களா? அது வாழ்க்கையோடு ஒட்டி இயல்பாகவா இருக்கு?! அப்படி இருந்தாதான் அது ரசிக்குமா?! யோசிச்சு பாருங்க.. இயல்பா இருக்கட்டும்னு அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள் மாதிரி கூத்துல ராமன் வில்லை எடுத்துக்கிட்டு 10 நிமிசமா எதுவுமே பேசாம நிலைகுத்திய பார்வையோட நடந்து போய்க்கிட்டே இருக்காருன்னு வைங்க! மக்கா பிரிச்சுற மாட்டாங்க! கூத்து, நாடகம் என்பவை நம் மண்ணோடு பிணைந்திருந்த காலத்தில், ரசிக்கப்பட்ட காலத்தில், போற்றப்பட்ட காலத்தில், அதுவே அற்புதமான நடிப்பென நம்பப்பட்ட காலத்தில் இந்த மண்ணில் ஒரு கலைஞன் இதைவிட வேறெப்படி நடித்திருக்க முடியும்?! :

அவங்கவங்க மண்ணுக்கு அவங்கவங்க ரசனை! கதக்களிய பார்த்தா எனக்கு சிரிப்புதான் வரும்! ஏனெனில் எனக்கு அந்த மண்ணுடன் எந்த பந்தமோ, அந்த கலையைப் பற்றிய எந்த அறிவோ ரசனையோ இல்லை என்பதே உண்மை! அதற்காக அது கேரளாவின் இயல்பில்லையென ஆகிவிட முடியுமா என்ன?

மார்லன் பிராண்டோ அவர் ஊருக்கு.. சிவாஜி நம்ப ஊருக்கு…

திமிங்கிலத்துக்கு தரைல நடக்கத் தெரியலைன்னும், சிங்கத்துக்கு தண்ணிக்குள்ள தம்கட்ட தெரியலைன்னும் சொன்னா அது சரியா??

இந்த விசயத்துல நான் ஜோ கட்சி!!!

தருமி Says:
May 3rd, 2006 at 8:51 pm
ஹாய் இளவஞ்சி,
நீங்க நம்ம கட்சி / அட, நான் உங்க கட்சி –ரெண்டுல எதையாவது வச்சுக்கங்க. ந்ம்ம தமிழ்மணதின் சிவாஜி ரசிகர் மன்றத்துக்கு தலைவர் ஜோ அப்டின்னா நானதான் துணைத்தலைவர். வேணும்னா உங்கள செயலரா போட்டுருவோம். நீங்க என் பழைய பதிவைப் படிக்கலைன்னு நினைக்கிறேன். படிச்சுப் பாருங்க.

திமிங்கிலத்துக்கு தரைல நடக்கத் தெரியலைன்னும், சிங்கத்துக்கு தண்ணிக்குள்ள தம்கட்ட தெரியலைன்னும் சொன்னா அது சரியா?? // - இது நச் & இளவஞ்சி டச்

இளவஞ்சி Says:
May 3rd, 2006 at 9:06 pm
தருமிசார்,

ஹிஹி…(போற போக்கைப்பார்த்தா என் பேரே ஹிஹி ஆகிடும் போல இருக்கு )

அந்த பதிவினை படிச்சு பின்னூட்டம் வேற போட்டிருக்கேன்! சைக்கிள் கேப்புல கொஞ்சம் உணார்ச்சி வசப்பட்டு மறந்துட்டேன்!

இந்த ஒரு தபா விட்டுருங்க!

தருமி Says:
May 3rd, 2006 at 9:22 pm
போனா போகுது இந்த ஒரு தபா நம்ம இளவஞ்சியாச்சேன்னு உடுறேன்.

கமல் Says:
May 4th, 2006 at 7:21 pm
வழக்கம்போலவே, மிக அருமையான பதிவு.

//எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும். …….. இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது.//

சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன், வ.உ.சி, ராஜராஜசோழன், இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே! கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லையெனில், இது எப்படி சாத்தியமாகியிருக்கும்?

//ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். ……. மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ.//

மணிரத்னம் மட்டுமல்ல. தளபதி கமர்ஷியலாக வெற்றியடைந்திருந்தாலும், அழகி (நாவல் : கல்வெட்டு) அளவுக்கு நல்லபடம் என்று பாராட்டப்படவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள், மோகமுள், இதெல்லாம் நாவலாக வந்து வெற்றியடைந்தபின் சினிமாவாக வந்து வெற்றியடைந்தவை.

//முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. …. ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான்.//

100% சரி. ஆனால், காக்க காக்க பார்த்து முடித்தபின், குருதிப்புனல் போன்று எடுக்க முயன்று தோற்று விட்டார்களோ என்ற நினைவு வருவதுண்டு. குருதிப்புனல் கமலும் போலீஸ் வேடத்துக்கு முழுப்பொருத்தம். ஆனால் கமர்ஷியல் கலந்த காக்கிச்சட்டையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

நன்றி
கமல்

தருமி Says:
May 4th, 2006 at 9:00 pm
கமல்,
இப்படித்தான் நேரம் கழிச்சி வர்ரதா? என்ன நீங்க?

“சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன், வ.உ.சி, ராஜராஜசோழன், இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே!”//
- இதில வ.உ.சி.ய வெளியே எடுத்துடுங்க; மீதியெல்லாம் நீங்க சொன்னது மாதிரி நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தான்; ஆனால் அது சரியல்லவே. வ.உ.சி. அப்படியல்ல. இப்படித்தான் அவர் இருந்திருப்பார் என்ற நினைவே வந்தது. மிக இயல்பு. மில நேர்த்தி. வாவ்… தலைவர்னா தலைவர்தான். அப்படிப்பட்ட கலைஞனை பயன்படுத்தாம விட்டுட்டோமே.

அதே போல நீங்கள் சொல்லியுள்ள மூன்று நாவல்களில் சி.நே.சி. மனிதர்கள்,மோகமுள் இரண்டும் படங்களாகப் பரிமளிக்கவில்லையே.

குருதிப் புனலில் the technical qualities எனக்குப் பிடித்தது. நடிப்பில் கமல் நன்றாக் இருந்தாலும், என் ஓட்டு சூர்யாவிற்குத்தான்.

Prasanna Says:
May 4th, 2006 at 9:38 pm
//இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே! கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லையெனில், இது எப்படி சாத்தியமாகியிருக்கும்?//
இதப் பத்தி எனக்கு ஒரு அனுபவம் உண்டு. நான் ஒரு சின்ன சீரியல் மாதிரி (விஜய் டி.வி.ல ஞாயித்து கிழமை காலைல ஏழு மணிக்கு போடுவாங்க, கிறிஸ்டியன் ஸீரியல்) ஒரு விஷயத்துல நடிச்சேன். அதுல கும்பலோட கோவிந்தா போட்ற சீன்ல எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டேன். கிளோஸ்-அப் நு ஒண்ணு வெச்சு கொல்லுவாங்க. டைரக்டர் சொல்ற எக்ஸ்பிரஷன் சுத்தமா எனக்கு வரல.அப்போ யூனில இருந்த லைட் மேன் ஒருத்தர் சொன்னார், சிவாஜி சேர்ல உக்காந்து சிகரெட் குடிச்சுகிட்டி இருப்பாராம். டைரக்டர் பக்கத்துல வந்து “சார் நெகிழ்ச்சியா ஒரு கிளோஸ் அப் வேணும்” அப்படின்னு சொல்லுவாராம். உடனே சிகரெட்ட கீழ போட்டு “ம்! எடுத்துகுங்க”னு அசால்ட்டா எக்ஸ்பிரஷன் குடுத்திடுவாராம்.
அவர் படத்துல எல்லாம் வேல பாத்துட்டு இப்போ உனக்கு தெர்மாகோல் பிடிக்குறனே-ன்ற ரேஞ்சுக்கு பேசினார். அப்போ தான் எனக்கு அந்த நடிப்ப உணர முடிஞ்சது. அதுவரைக்கும் நானும் ஓவர் அக்ட்னு தான் சொல்லிகிட்டு இருந்தேன்.

தருமி Says:
May 4th, 2006 at 9:46 pm
அடடே நம்ம பக்கம் ஒரு நடிகர் இருக்காரா…
இனிமே ‘சின்னத் திரைப் புகழ் ப்ரஸ்’ அப்டின்னு போட்டுருவோம். சரியா?

Prasanna Says:
May 5th, 2006 at 8:05 am
என்னத்த நடிகர். அந்த விஷயம் படா கஷ்டமா இருக்கு பாஸ். அடுத்த ஒரு நிகழ்ச்சிக்கு கூப்ட்டாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த டைரக்டர் கிட்ட திட்டு வாங்கி மாளாது.

மேட்டர் எல்லாம் சரிதான். அந்த ஸ்மைலி என்ன சொல்ல வருது???

தருமி Says:
May 5th, 2006 at 11:44 pm
ப்ரஸ்,
“…திட்டு வாங்கி மாளாது. “//
பட்டை தீட்டுறதின்னா சும்மாவா?

–> ஒரு பொறாமைதான்

தருமி Says:
May 5th, 2006 at 11:53 pm
வசந்தன்,
நீங்க போட்ட பின்னூட்டத்தை எடுத்தா குண்டுஎழுத்தில இருந்து விமோசனம் கிடைக்கலாமென்றதால் எடுத்தேன். எடுத்ததை மீண்டும் இப்போது இடுகிறேன்.

தருமி, உங்களுக்கு உண்மையிலேயே ‘-/’ யாரென்று தெரியாதா? அதுவும் பாலச்சந்தருக்கு ஒரு இடி கொடுத்த பிறகும். ‘பெயரி’ல்லாமல் வநதாலும் ரெண்டு கோடு போட்டு வாறார்தானே?

குறும்பன் Says:
May 13th, 2006 at 12:16 am
// படங்கள் ஓடுவது மட்டுமே படங்களின் தகுதியையும் தரத்தையும் பற்றிச் சொல்லும் காரணிகளா என்ன..? //
ஆகாது. நல்ல தரமான படம் எடுத்தா ஓடாது மக்கள் அதை ரசிக்க மாட்டாங்க என்று கூறும் மக்களுக்காக கூறினேன்.
தரமான படத்தை ரசிக்கும் படியா எடுத்தா ஓடும் என்பது என் வாதம். குறிப்பா சொல்லனும்ன்னா ரசிக்கும் படியா இருக்கும் எல்லா படங்களும் ஓடும் அங்கு தரத்துக்கு வேலையில்லை. தரம் இருந்தா அதன் வெற்றி அதிகபடியாக இருக்கும்.

தருமி Says:
May 13th, 2006 at 12:29 pm
குறும்பன்,
“ரசிக்கிறமாதிரி படம் எடுத்தா ஓடும். “//
யாருரசிக்கிறது மாதிரி அப்டிங்கிறதுதான் அடிப்படைக் கேள்வி!
ஒரு பெங்காலி மாதிரியா?
ஆந்திரக்காரர் மாதிரியா?
இல்ல நம்ம ரஜினி ரசிகர்கள் மாதிரியா????

கோ.இராகவன் Says:
May 13th, 2006 at 1:13 pm
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் தருமி. சூர்யா மிகச் சிறந்த நடிகர். காக்க காக்க அவரது திறமையை வெளிக் கொண்டு வந்த படம். அவரை முறையாக இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிவாஜியிடம் ஒரு முறை கேட்டதற்குச் சொன்னார். “அப்பா….நான் இயக்குனர் நடிகன். ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும் என்று விரும்புவது இயக்குனரின் உரிமை. அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்கிறேன். சரியில்லை என்று அவர்கள் சொன்னால் அவர்கள் சொன்னது போல மாற்றிக் கொள்கிறேன்.”

ஆகக் கூடி அவரை வைத்தும் நல்ல படம் எடுக்க முடியாத இயக்குனர்கள் மீதுதான் குற்றம். கப்பலோட்டிய தமிழன் மட்டுமல்ல, நிறைய படங்கள் இருக்கின்றன. பரீட்ச்சைக்கு நேரமாச்சு படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? சிவாஜியே பிடிக்காத நண்பன் கூட பாராட்டிய படம். ஒரு சரிதா படம் கூட உண்டு. ரொம்ப இயல்பாக இருக்கும். முதல்மரியாதை, தேவர்மகன், பூப்பறிக்க வருகிறோம் என்று வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனாலும் தங்கத்தைக் கொண்டு ஓட்டை அடைத்த இயக்குனர்கள்தான் தமிழில் நிறைய.

மகரிஷி எழுதிய நாவல் பத்ரகாளி நாவலை ஏ.சி.திருலோகச்சந்தர் மிகவும் இயல்பாக படம் பிடித்திருந்தார்…ஆனால் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா போன்ற படங்களைத்தான் பிரதானமாக எடுத்தார். வியட்நாம் வீடு படத்தில் நன்கு பயன்படுத்திக் கொண்ட சுந்தரம் அடுத்தடுத்து வழக்கமான பாணியிலேயே போய் விட்டார்.

Tuesday, April 25, 2006

155. HAIL ‘THE HINDU’ !

Image and video hosting by TinyPic

THE HINDU பேப்பரை இன்னைக்கிக் காலையில் பார்த்ததும் அப்படி ஓர் அதிர்ச்சி; சந்தோஷமும் கூட. எப்படியாவது நாலு பேத்துக்காவது அதைப் பற்றிச் சொல்லிடணும்னு ஒரே ‘இது’! அதனாலதான் இந்த ‘இது’.

வழக்கம்போல முதல் பக்கத்தை மேஞ்சிட்டு, ஸ்போர்ட்ஸ் பக்கம் போனா ஆச்சரியம்னா அப்படி ஒரு ஆச்சரியம். வழக்கமா 20,21-ம் பக்கங்களில் கிரிக்கெட்டின் தனி ஆவர்த்தனம்தான் இருக்கும். கிரிக்கெட் செய்தி இல்லாவிட்டாலும், டெண்டுல்கர் வீட்டு நாயின் வலது காலின் இடது பக்கத்தில் உள்ள முதல் விரலின் கடைசி எலும்பு பிசகியுள்ளதற்காக எடுக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகள் பற்றியாவது இருக்கும்.

இன்றைக்கு அங்கங்கே கொஞ்சம் கிரிக்கெட் செய்தி இருந்தாலும் முக்கிய செய்திகளாகக் கால்பந்து பற்றிய செய்திகள் முதலிடம் பெற்றிருந்தன. என்ன ஆச்சு, ஹிண்டுவுக்கு? உலகக் கோப்பைக்காக இருக்குமோவென்று நினைத்தேன். அப்படியும் தெரியவில்லை. உலகக் கோப்பை என்றால் நம் திருநாட்டைப் பொருத்தவரை 8-10 நாடுகள் (அதில் 3-4 உப்புக்குச் சப்பாணி நாடுகள்!) சேர்ந்து, சட்டைகூட நனையாத விளையாட்டு ஒன்று விளையாடுவார்களே, அதானே உலகக் கோப்பை பந்தயம். என்னன்னே புரியலை. அதைவிடவும் தெண்டுல்கரின் பிறந்த நாள் விழா புகைப்படம் 19-பக்கம் வந்திருந்தது. அது எப்படி முதல் பக்கத்தில் வரவில்லையென்ற ஆச்சரியத்தில் மூழ்கியவன் இந்த நேரம் வரை (மாலை 4.23) எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

யாராவது கைதூக்கி உடுங்கப்பா, please!

வால் செய்தி: நேற்று இரவு சன் செய்திகள் 8 - 8.30 பார்த்தேன். விளையாட்டுச் செய்திகள் என்ற பகுதி வந்தது. டெண்டுல்கர் பிறந்த நாள் கேக் தானே வெட்டி (பக்கத்தில் யாருமே இல்லை ?!) தானே சாப்பிட்டதைக் காட்டி அதையே செய்தியாகச் சொல்லி முடித்தது.
அதுதான் கொள்கைப் பிடிப்பு என்பது!!Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 25 2006 04:34 pm | Uncategorized |
21 Responses
துளசி கோபால் Says:
April 25th, 2006 at 5:53 pm
தருமி,

தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரம் ‘ஜாலி’யாப் போய்க்கிட்டு இருக்கறதை கவனிக்கிற ஜோர்லே
தெண்டூல்கரை மறந்துட்டாங்க போல.

TheKa Says:
April 25th, 2006 at 8:11 pm
ஹா…ஹா…ஹா…தருமி சார், தருமி சார்…அடப் போங்க சார்…

Ganesh Says:
April 25th, 2006 at 9:12 pm
Kalakkiputtinga

Sivabalan V Says:
April 25th, 2006 at 9:17 pm
Photo is good!

To my knowledge, The Hindu gives importance to other sports/games also (I do agree they give more importance to Cricket, but it is order of the day)

But I hardly find any newspaper in India to give good coverage on Sports/games. It is the status. I do not see any major change on this in near future.

ஜெயக்குமார் Says:
April 25th, 2006 at 9:45 pm
ஹிந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு (ராம்) இலங்கை அரசு லங்காரத்னா விருது வழங்கி கவுரவித்தது எதற்கு என்று தெரியுமா?

அங்குள்ள தமிழ்மக்களின் மீது அந்த நாட்டு ரானுவம் நடத்தும் அராஜகங்களை நம்மக்களுக்கு திரித்துக்கூறுவதற்காகத்தான்.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை ரானுவத்தால் சில university மாணவர்கள் நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது அங்கு இருந்த ஹிந்து நாளேட்டின் நிருபர்கள் மாணவர்கள் வெடிகுண்டுகளை எடுத்துச்செல்லும் போது அவர்களும் அசாதாரணத்தால் வெடித்து உயிரிளந்தனர் என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.

கோ.இராகவன் Says:
April 25th, 2006 at 9:52 pm
டெண்டுல்கர் பிறந்த நாள் கொண்டாடுறது ஒங்களுக்கெல்லாம் பெரிய விஷயமா இருக்கு……ம்ம்ம்….அதுவும் தேர்தல் வந்திருக்கிறப்ப…………

ஜவஹர் Says:
April 25th, 2006 at 11:48 pm
அன்புள்ள தருமி,
இப்போதுதான் பார்த்தேன்.
மணி 11.30 காலை.
இது பசிபிக் நேரம்.
நன்றாகச் சொன்னீர்கள்.
கருவிப்பட்டையில் தலைப்பு நீங்கள் தந்ததா? படம் ஒரு கவிதை என்றால், விவரித்த விதம் ஒரு சிறுகதை.
பொருத்தம் என்றால் அப்படியொரு பொருத்தம். ஜமாயுங்கள்.
அன்புடன்,
ஜவஹர்.

தருமி Says:
April 26th, 2006 at 11:53 am
துளசி,
எங்க மறந்தாங்க…கொஞ்சம் ஓரங்கட்டியிருக்காங்க…ஆமா, வயசு ஆயிரிச்சில்ல…:???:

தருமி Says:
April 26th, 2006 at 12:40 pm
தெக்கா,
அது என்ன தெக்கிக்காட்டான்? சரியான பெயர் தெக்கத்திக்காட்டான் என்றுதான இருக்கணும்? அப்படித்தான் சிலபேரு என்ன கூப்பிட்டதுண்டு..

தருமி Says:
April 26th, 2006 at 12:53 pm
கணேஷ்,
ரொம்ப நன்றி. நீங்க முதல் தடவையா வர்ரீங்களோ? எங்க இருந்து, என்ன அப்டிங்கிறதெல்லாம் தெரியலையே!

தருமி Says:
April 26th, 2006 at 12:54 pm
சிவபாலன்,
“it is order of the day)” // -
- இல்லீங்க; இது disorder of decades !

தருமி Says:
April 26th, 2006 at 12:55 pm
ஜீரா,
கதைய மாத்துறீங்களே அய்யா!

தருமி Says:
April 26th, 2006 at 12:55 pm
ஜவஹர்,
படப் பொருத்தத்துக்குத் தந்த பாராட்டு செம ஜில்… நன்றி

பொன்ஸ் Says:
April 27th, 2006 at 5:34 pm
டெண்டுல்கர்னு சொன்னா, எனக்கு நினைவு வருவது ஒண்ணே ஒண்ணு தான்.. மெனக்கட்டு பம்பாய் போய், டெண்டுல்கர்ஸில் சாப்பிட வேண்டும் என்று ஒரு நாள் போனோம்; காலை மாலை ரெண்டு வேளையும் போனோம், எங்க கெட்ட நேரம் அவங்க அதைத் திறக்கவே இல்லை..

தருமி, இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க, உங்க படத்துக்கும் பதிவுக்கும் உள்ள சம்பந்தம் தான்…

தருமி Says:
April 27th, 2006 at 9:50 pm
பொன்ஸ்,
சரியான சாப்பாட்டு ராமி - அப்டித்தான் வேணும்

நீங்களும் இருக்கீங்களே…மேல ஜவஹர் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க

பொன்ஸ் Says:
April 28th, 2006 at 5:55 pm
//சரியான சாப்பாட்டு ராமி //

கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க.. மதுரைக்கு வந்து உங்களைப் பாக்காம, நல்ல, ஜிகிர் தண்டா என்ன, பதநீர் என்ன, பன்னீர் சோடா என்ன.. நல்ல ஊருங்க உங்க ஊரு

கமல் Says:
April 28th, 2006 at 7:40 pm
வந்து விட்டேன் ஐயா! (போன பதிவுல உங்க பின்னூட்டத்தை இப்பத்தான் படிச்சேன்!)

இந்த போட்டோவில் இருப்பது பாலாஜி கோயிலா? சின்ன வயசுல பார்த்த ஞாபகம்!

கும்பகோணம் பன்னீர்சோடாவை விட மதுரை பன்னீர்சோடா ருசியா இருக்குமா?

ஜில் ஜில் ஜிகிர்தண்டா (காதல் படத்துல) கேள்விப்பட்டிருக்கேன். சாப்பிட்டதில்லை. எப்படி இருக்கும்?

நன்றி
கமல்

தருமி Says:
April 28th, 2006 at 8:09 pm
பொன்ஸ்,
“நல்ல ஊருங்க உங்க ஊரு ..”//
- நாங்கல்லாம் இருக்கோம்லா..பெறகு எப்படி ஊரு நல்லா இல்லாம இருக்கும். அடுத்த தடவையாவது சொல்லிட்டு வாங்க…

தருமி Says:
April 28th, 2006 at 8:13 pm
கமல்,
நிச்சயமா சின்ன வயசில பார்த்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். அந்தக் கோவில் சிக்காகோவில் இருக்குது. எவ்வளவு பெரிய வளாகம்…! எவ்வளவு சுத்தம்…!!

ஜிகர்தண்டா - கமல், சில விஷயங்கள் சொல்லித் தெரிவதில்லை. மதுரை ஸ்பெஷல் ஜி.தண்டா அதில ஒண்ணு

TheKa Says:
April 28th, 2006 at 8:23 pm
அது ஒன்னுமில்ல தருமி என்கிற உருமி (ஹி…ஹி…ஹி), என்னுடைய சிறிய ஊரின் பெயர் அது, சரி முகமூடியில்லாமல் அப்படியே இங்கு வழங்கினால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு முயற்ச்சிதான், அந்த தெக்கிக்காட்டான்.

வெளி ஊருக்கு சென்று படிக்கும் பொழுது சில பேர் தனது சொந்த ஊரின் பெயர் நகைக்கும் படி இருக்கிறது என்று பக்கத்தில் உள்ள பெரிய்ய்ய்யா ஊரின் அடையளத்துடன் வாழ்ந்து சாவதை பார்த்ததுண்டு…ஒரு சிறிய விழிப்புணர்வு ஊட்டும் பெயர்தான் காட்டான். உண்மைக்குமே நான் ஒரு காட்டான் சசசார், நம்புங்க…

தெகா.

கமல் Says:
April 28th, 2006 at 8:34 pm
சிக்காகோவா? பார்த்ததில்லை. கொடைக்கானல் அருகிலிருக்கும் பாலாஜி கோயில்ன்னு நினைச்சேன்.

அடுத்தமுறை இந்தியா வரும்போது இதுக்காகவே மதுரை வர்றேன்.

நன்றி
கமல்

Saturday, April 22, 2006

154. பிள்ளையாரும் பால் குடித்தார்…

Image and video hosting by TinyPicஅது நடந்து எத்தனை வருஷம் இருக்கும்னு தெரியலை; ஆனா எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஊரென்ன உலகமே ஒரு ஆட்டம் ஆடிப்போச்சு. லண்டன் பிள்ளையார் கோவிலில் குடம் குடமா பிள்ளையார் குடிக்கிறதுக்காகப் பால் ஊத்தினதைப் படமாக எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டிருந்தார்கள்.
அன்றைக்கு நடந்தது இன்னும் நல்லா நினைவில் இருக்கு. வீட்டுக்கு வெளியே நான் என் குடும்பத்தாரோடு நின்று கொண்டிருந்தேன் - ஏதோ தெருவும் ஊரும் வித்தியாசமான கல கலப்போடு இருந்தது மாதிரி இருந்ததால். அப்போது எதிர்த்த வீட்டுப் பையன் - ஒன்பதாவது படிக்கிறவன் - அவன் அம்மாவோடும், அக்காமார்களோடும் விரைந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தான். வேகமாக எங்களிடம் வந்து ‘பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்’ என்றான். சரியாக விஷயம் புரிபடாமல் ‘என்னப்பா? ‘ என்று கேட்டேன். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் உள்ள பிள்ளையார் சிலை பால் குடிக்கிறதாம்; பார்க்கப் போகிறோம்’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான். பிள்ளையாராவது, பால் குடிக்கிறதாவது என்று சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தோம். ஆனாலும் தெருவில் சல சலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் நாங்கள் - நாங்கள்தான் கிறிஸ்துவர்கள் ஆயிற்றே - வேற சாமி பால் குடிச்சி அதிசயம் பண்ணுதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன?

கொஞ்ச நேரம் ஆச்சு; அடுத்த தெருவுக்குப் போன எதிர் வீட்டு பையன் ஓடிவந்து ‘நிஜமா அந்த வீட்டுல இருக்கிற பிள்ளையார் பால் குடிச்சார்’ அப்டின்னு சொல்லிட்டு ஓடிப் போய்ட்டான். அப்பவும் நான் கண்டுக்கவில்லை. ஆனால் அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் ஓடிவந்த பையன் பரவசத்தோடு, ‘எங்க வீட்டுப் பிள்ளையாரும் குடிக்கிறார்; அப்பா உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க’ அப்டின்னான். சரி, பிள்ளையாரத்தான் போய் பார்த்துட்டு வந்துருவோமேன்னு போனேன். அங்கே ஏற்கெனவே பிள்ளையார் பால் குடிச்சிருந்தார். பையனோட அப்பா, நம்ம நண்பர் ராமச்சந்திரன் ஒரு தட்டில் இருந்த பிள்ளையார் முன்னால் அமரிக்கையாக உட்கார்ந்து பால் குடுக்க, நல்ல பிள்ளையாக பிள்ளையார் கொடுத்த பால் முழுவதையும் குடித்துக்கொண்டிருந்தார். ஒரு ஸ்பூனில் பாலைக் கொண்டு போய், அவரது தும்பிக்கை வயிற்றிற்கு மேல் வளைந்து இருக்கும் இடத்தில் வைத்ததும், பிள்ளையார் பாலை சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சார் பாருங்க…அப்படியே நான் அசந்துட்டேன். என்னடா இது கலிகாலமா போச்சேன்னு நின்னுக்கிட்டு இருந்த போது நண்பர் என்னிடம் ஸ்பூனை நீட்டினார். நானும் பாலை ஸ்பூனில் கொடுக்க பிள்ளையார் அதே மாதிரி சர்ருன்னு உறிஞ்சிட்டார். வெலவெலத்துப் போய்ட்டேன்.

இருந்தாலும் புத்தி கேட்கலை. வேற வேற இடத்தில வச்சுப் பார்த்தேன். சில இடத்தில பால் உறிஞ்சப்பட்டது; சில இடத்தில் இல்லை. கொஞ்ச நஞ்சம் இருந்த மூளை கொஞ்சம் வேலை செய்ய, நான் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைச் சுவற்றில் இணைப்பதற்காக உள்ள கீலில் இருந்த சின்ன இடைவெளியில் ஸ்பூனை வைத்தேன்.இப்போவும் பால் சர்ரென்று உறிஞ்சப்பட்டது. நண்பர் ஐயப்பர் பக்தர். அந்த சிலை ஒன்று சிறியது இருந்தது. ஐயப்பனையும் பால் குடிக்க வைத்தேன். நண்பர் குடும்பத்தினருக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. பிள்ளையார் மட்டுமல்லாமல், ஐயப்பன் குடிச்சாகூட பரவாயில்லை; கதவின் கீல் கூட குடிக்குதேன்னு ஆச்சரியம். ‘எப்படி அங்கிள்’ என்ற பையனிடம் ‘தெரியலைப்பா; ஏதோ இயற்பியல் விஷயம் இருக்கு; ஒருவேளை capillary action ஆக இருக்கும்’ என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன். (பின்னால் அது surface tension என்று சொன்னார்கள்.)

எங்கள் வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் என்னாயிற்று என்று கேட்டார்கள். ‘கொஞ்சம் பாலும் ஒரு ஸ்பூனும் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த மேரி மாதா சிலை ஒன்றை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மாதாவின் கால் பக்கம் உள்ள வரை ஒன்றிலும், கூப்பிய கைகளுக்கு அருகிலும் ஸ்பூனை வைத்ததும் மாதாவும் பால் குடித்தார்கள்! பிள்ளைகளிடமும் கதவுக் கீல் பால் குடிப்பதையும் காண்பித்தேன்.

அடுத்த நாள் கல்லூரியிலும் பரபரப்பு. கிறித்துவ நண்பர் அகஸ்டின் நம்பிக்கையில்லாமல் ‘அதெப்படி பிள்ளையார் பால் குடிப்பார்; சுத்த ‘இதுவா’ இருக்கேன்னார். நான் ‘என் கண்ணால் பார்த்தேன்’ என்றேன். அதெப்படி என்றார். நடந்ததைச் சொன்னேன். இயற்பியல் துறை ஆட்களிடமும் கேட்டேன். அவர்களும் என் தியரி சரியாக இருக்கலாமென்று சொன்னார்கள்.

இது நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும். பிள்ளையார் கதை எல்லாம் ஆறின கேஸாக ஆகிப் போயிருந்தது. அப்போது ஒரு நாள் நண்பர் அகஸ்டின் ஒரு ஃபோட்டோ காப்பி ஒன்றுடன் என்னிடம் விரைந்து வந்தார். எத்தியோப்பாவில் அமெரிக்க சிப்பாய் ஒருவன் sand storm ஒன்றைப் படம் எடுத்து அதைப் பிரிண்ட் செய்து பார்த்த போது அந்த சூறாவளியில் ஏசுவின் முகம் தெரிந்ததாக ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் வந்திருந்த படத்தின் நகல் அது. பயங்கர பிரமிப்புடன் அதை என்னிடம் கொண்டு வந்து அதைக் காண்பித்தார் - ஒரு மத நம்பிக்கையற்றவனை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் நோக்கமாக அது எனக்குத் தோன்றியது!

‘ஏனய்யா, ஒரு வருஷத்துக்கு முன்பு வேற மதத்து சாமி பால் குடிக்கிதுன்னு சொன்னப்போ, ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அதெப்படி நடக்கும் என்று அன்று கேள்வி கேட்க முடிந்தவருக்கு, இன்று நீங்கள் நம்பும் மதம் என்றால் மட்டும் எப்படி அப்படியே நம்ப முடிகிறது?’ என்றேன். அதோடு, இதே மாதிரியாக கொடைக்கானல் மலை,மேகம் இவைகளின் ஊடே கண்ணாடி போட்ட மாணவன் ஒருவனின் முகம் தெரிவது போல விளையாட்டாக நான் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த புகைப்படம் ஒன்றையும் காண்பித்தேன். உண்மையை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியாத அரைகுறை மனதோடு சென்றார்.

இதைத்தான் நான் எனது மதங்கள் பற்றிய பதிவுகளில் நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity - யோடு பார்க்க முடிவதில்லை என்றும் முதல் பதிவின் முதல் பாயிண்டாகவே கூறியுள்ளேன். அதை இங்கே பாருங்கள்.என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்; பிறந்ததிலிருந்து ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து மனதை விடுவிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய காரியமல்லவே! Every coin has got two sides என்பது அவர்களுக்கு என்றுமே புரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள தயாராகவும் இருப்பதில்லை. அவர்கள் முயல்களுக்கு மூன்றே கால்கள்…

ŠPathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 22 2006 09:49 pm | மதங்கள் |
74 Responses
Arokyam Says:
April 22nd, 2006 at 10:01 pm
முன்பொருமுறை என் கருத்தை உங்கள் பதிவில் எழுதியபோது அதனை

நீக்கினீர்கள். அதனால், உங்கள் பதிவில் எழுதக்கூடாது என்று வைத்திருந்தேன்.

இருப்பினும், இந்த பதிவு நன்றாக இருக்கிறது. அதனால், என் பாராட்டுக்களை

தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் நீக்கினால், ஒன்றும் பிரச்னையில்லை. என் பாராட்டுக்கள் நீங்கள்

தெரிந்துகொள்ளத்தான். உலகம் தெரிந்துகொள்ள அல்ல.

ஆரோக்கியம்
ennamopo.BLOGSOME.COM
Those who forget the past are condemned to repeat it.

தருமி Says:
April 22nd, 2006 at 10:34 pm
ஆரோக்கியம்,
“உங்கள் பதிவில் எழுதக்கூடாது என்று வைத்திருந்தேன். “//
- இது தேவையற்ற ஒரு முடிவு என்று எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அது உங்கள் இஷ்டம்…

பாராட்டுக்கு நன்றி

பட்டிணத்து ராசா Says:
April 22nd, 2006 at 11:29 pm
சார் சரியா சொன்னிங்க.

http://pakkam5.blogspot.com/2006/03/patterns.html

செல்வன் Says:
April 23rd, 2006 at 12:01 am
பார்ட்னர்,

இது நடந்தப்ப நான் கல்லூரில படிச்சுட்டு இருந்தேன்.ஒரே நாள் தான் இது நடந்ததாக நினைவு.சாயந்திரம் வீட்டுக்கு வந்தப்ப பய்ங்கர பரபரப்பு.கோயில்ல எல்லாம் ஒரே கூட்டம்.எங்க வீட்டுல கிருஷ்ணர் சிலைக்கு பால் குடுத்து அவர் குடிக்கலை.அன்னைக்கு ஊர் பூரா ஒரே ரகளையா இருந்தது.அடுத்த நாள் காலைல தினத்தந்தில தலைப்பு செய்தியே இதுதான்.

சாமி பால் குடிக்குதுன்னு நம்பினவங்க இருந்தாலும் ரகளையை வேடிக்கை பார்க்க கோயிலுக்கு போனவங்க தான் அதிகம்.எங்க ஊர் திக வக்கீல் ஒருத்தர் பல வருஷம் கழிச்சு கோயிலுக்கு வந்து சாமிக்கு பால் குடுத்து அது குடிச்சது.கோயில் சுவத்துல பாலை வெச்சதும் அதுவும் மறைந்தது.ஆனா பூசாரி கோயில் முழுக்க பிள்ளையாரோட அருள் இருக்குன்னு சொல்லிட்டார். வக்கீல் நீங்க சொன்ன மாதிரி இயற்பியல்,வேதியியல்ன்னு என்னன்னமோ சொன்னாரு.எங்க ஆளுங்களுக்கு அதெல்லாம் புரியாதே.எங்க ஊரு ஆளுங்க உங்களை கோயிலுக்கு வர வைக்க தான் சாமி இந்த திருவிளையாடலை செஞ்சதுன்னு சொல்லிட்டாங்க. அவரு வாயடைச்சு போயிட்டாரு.

sankar Says:
April 23rd, 2006 at 2:29 am
did you try today, that ganesh statue drinking milk!!

try it, it happened on only that week and after that that did not happen. Even the physists are little confused over that phenomenon. Many people told that it was capillary action etc., but capillary action does not happen today did you try asking why??

sankar

TheKa Says:
April 23rd, 2006 at 8:50 am
Dharumi said…
“To me the very life itself is like pre-written script and ….”//
- are you a ‘fatalist’ then…?
இத்தனூண்டு நெத்தியில எவ்ளோ எழுதியிருக்கு…!

well..well….that was meant to be an intro. that’s all. i found your comments in suvanapiriyan’s article on Darwinism! found that probably we have some common things - like the disciplines to which both of us belong and all that…

hope to ‘meet’ quite often… btw what is your ezact field of research, if i may know.

7:58 AM

Orani said…

Dear Dharumi, thanks for leaving your comments (Playing God?! There you asked me a couple questions as to answer to it, I responded there. But I did not your re-visit there, so, here the same response–cut and pasted.

In fact, when I look around my vicinity what is going on, I do not see anything people are doing or going through unique as if it is happening just for themselves alone. It is a repeatition of the same, so I feel, though, the happennings pop up randomly here and there typically with the same story yet with different faces.

Anyway, I am growing up on my own pace. My field of specialization is in Conservation Biology, though, at time being I am off from academia for personal reasons. Hoping to go back to the field one day! Are you in the same field or some?

Love,

Orani(TheKa).

10:11 AM

கோ.இராகவன் Says:
April 23rd, 2006 at 9:01 am
தருமி சார். இதே போல யாரா கேட்டிருந்தார்கள். நீங்களா என்று நினைவில்லை. மோசஸ் கடலைப் பிரித்தார் என்று நம்புகிறவர்கள் நரியைப் பரியாக்கி மீண்டும் பரியை நரியாக்கியதைச் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று. அதுதான் நினைவிற்கு வருகிறது.

கடவுள் நம்பிக்கையை விட மதப்பற்று மேலோங்கி விட்டது என்பது என் கருத்து. என்றைக்கு மதப்பற்று தாழ்ந்து கடவுள் நம்பிக்கை மேலே வருமோ….அன்றைக்குத்தான் ஒருத்தரையொருத்தர் மதித்து நடப்பார்கள்.

நீங்கள் இப்பொழுது “சும்மா” இருக்கிறீர்கள். அதுதான் உபதேசமும் கூட. அதுவும் நல்லதே.

Rams Says:
April 23rd, 2006 at 11:20 am
நல்ல பதிவு… வாழ்த்துக்கள்

இளவஞ்சி Says:
April 23rd, 2006 at 10:23 pm
தருமி சார்! உங்க பதிவு அட்டகாசம்னா “சங்கர்” அதுக்கு ஒரு மகுடம் மாதிரி ஒரு தமாசு பின்னூட்டம் போட்டுட்டு போயிருக்காரு!!

என்னத்தை சொல்ல?! நீங்க இத்தனைபதிவுக போட்டாலும் இந்தமாதிரி கேள்வியெல்லாம் வரத்தான் செய்யும்போல!

தருமி Says:
April 23rd, 2006 at 10:29 pm
பட். ராசா,
நன்றி.
‘உங்க பக்கமும்’ போய்ட்டு வந்தேன்.

தருமி Says:
April 23rd, 2006 at 10:35 pm
தெக்காட்டு ஊரணி,
conservation biology - does it mean that your work has lot of field work. on which system and what are the aspects you have been studying? - just curiosity!!

தருமி Says:
April 23rd, 2006 at 10:40 pm
பார்ட்னர்,
ரொம்ப நாளா ஆச்சு…ஆள பாத்து..ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாச்சா..போன வேலையெல்லாம் நல்லபடியா இருந்திச்சா..?

“கிருஷ்ணர் சிலைக்கு பால் குடுத்து அவர் குடிக்கலை…” // - புல்லாங்குழலை ஊதிக்கிட்டு இருக்கிறவரைப் போய் குடிக்கச்சொன்னால் அவர் என்ன பண்ணுவார் சொல்லுங்க..

பாவம்தான் அந்த வக்கீல்

தருமி Says:
April 23rd, 2006 at 10:49 pm
கோரா,
நம்ம கைவசமும் இது மாதிரியான லிஸ்ட் உண்டு விபூதி - ராசா வயித்து வலி; கர்ணன்-ஏசு பிறந்த கதை;நிலாவை நிப்பாட்டியது - நிலாவை இரண்டாக்கியது…இப்படியாக..

என்றைக்கு மதப்பற்று தாழ்ந்து கடவுள் நம்பிக்கை மேலே வருமோ……”//
- என்றைக்கு மதப்பற்று அறுந்து மனிதப் பற்று மேலே வருமோ - அப்டின்னு மாற்ற ஆசை..

salmaan Says:
April 23rd, 2006 at 10:55 pm
Lately,

I got a chain mail that contained a picture of Tsunami waves approaching the Indonosian coast in the form of arabic letters ‘Allah’. I donot think Almighty God needs to ‘release’ His ‘Actions’ only in such calamities ‘reserved’ for Him.

Then I would question several other places where the Tsunami waves approached in the normal form.

Month back in USA, Holy Mary appeared in the form of fissures on the wall of a church after an earthquake and people thronged from all over to get the ‘blessing’

And, we need to proove that God is still busy doing something and there goes Vinayagar drinking milk!

Faith in God becomes so cheap that God Himself needs some ‘rare’ and ‘random’ event to remind people that He exists

salmaan

தருமி Says:
April 23rd, 2006 at 11:10 pm
ராம்ஸ்,
நன்றி

pot"tea"kadai Says:
April 23rd, 2006 at 11:14 pm
எத்தனை காலம் தான் ஏமா(ற்)றுவார் இந்நாட்டிலே…இந்த நாட்டிலே…
…கடவுளின் பெயரால்?!

தருமி Says:
April 23rd, 2006 at 11:14 pm
இளவஞ்சி,
பின்னூட்டம் இடுபவர்கள் யாராவது தம்பி சங்கருக்குப் பதில் சொல்லட்டுமேயென்றுதான் அவருக்குப் பதிலேதும் சொல்லாது விட்டேன். சரியாக வந்து சரியாகச் சொன்னதுக்கு - ஒரு ஸ்ட்ராங்க், ஸ்பெஷல் நன்றி
நான் கூட அவர் சீரியசா எழுதிட்டாரென்றுதான் நினைத்தேன்; நீங்க சொன்ன பிறகுதான் அவர் ‘டமாஸ்’ பண்ணியிருக்காரென்று தெரிந்தது..

தருமி Says:
April 23rd, 2006 at 11:20 pm
சல்மான்,
“Then I would question several other places…”//
- in those other places none was taking photos ..

இந்தோனேஷிய முஸ்லீம்கள் ரொம்ப மோசமான ஆளுகளா ஆயிட்டாங்க; அதனால தான் அங்க சுனாமி - நான் சொல்லலை; என்னிடம் ஒரு முஸ்லீம் நண்பர் சொன்னார்.

“we need to proove that God is still busy doing something …”//
- no, salman. it is not like that. சும்மாவே உக்காந்து நம்மள வேடிக்கை பாத்துக்கிட்டே இருந்தா அவங்களுக்கும் போர் அடிக்காதா? அதுக்காகத்தான் அப்பப்போ இப்படி…

TheKa Says:
April 23rd, 2006 at 11:49 pm
//conservation biology - does it mean that your work has lot of field work. on which system and what are the aspects you have been studying? - just curiosity!!//

yea Dharumi, I have done an extensive field work all over the Western Ghats, working with Bison for my Masters and in a fragmented landscape looking at the community structure of small mammals. Very interesting field! Right now, I am in the pursuit of a mirage to build up my vertebra so that I can stand up straight and say what I have to say. Meanwhile searching within and out.

Love,

TheKa.

துளசி கோபால் Says:
April 24th, 2006 at 2:06 am
தருமி,

அக்கா (சிட்னியிலே இருந்து வந்தவங்க) சொன்னாங்க, ‘சாமி பால் குடிக்குதும்மா’
நான் சிரிச்சேன். ‘நீ நம்ப மாட்டீல்லே. பாலைக் கொண்டா நான் குடிப்பாட்டுறேன்’னு
நம்பிக்கையாச் சொன்னாங்க. சரின்னு குங்குமப்பூ, ஏலக்காய் எல்லாம் போட்ட ஒரு கப் பாலைக்
குடுத்தேன். பாவம். அதெல்லாம் வேணாமுன்னு சொல்லிட்டார் சாமி.
அப்புறம்?
சூடு ஆறிப்போகறதுக்குள்ளே நாங்களே குடிச்சுட்டோம்.
சாமி எங்க ரூபத்துலே வந்து பாலைக் குடிச்சுட்டார்

Jawahar Says:
April 24th, 2006 at 3:00 am
அன்புள்ள தருமி,
அருமையான கட்டுரை. வருகின்ற பின்னூட்டங்களில் சிலவற்றைப் படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்,
ஜவஹர்.

சிவமுருகன் Says:
April 24th, 2006 at 5:28 pm
வித்யாசம் தான் தருமியா? இல்ல தருமி வித்யாசமானவரா?

தருமி Says:
April 24th, 2006 at 6:45 pm
ஜவஹர்,
பின்னூட்டங்களில் சிலவற்றைப் படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது.\\ தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் இரண்டு சொற்றொடர்களை ‘உடைத்து’ வாசித்தால்,தொடர்ந்து எழுதுங்கள் என்று நீங்கள் சொல்வது பின்னூட்டக்காரர்களைப் பார்த்துதானே…நானும் முதலில் என்னைத்தான் தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்கிறீர்களோ என நினைத்து உங்கள் தைரியத்தையும் மனோ திடத்தையும் பாராட்டினேன்

தருமி Says:
April 24th, 2006 at 6:49 pm
சிவமுருகன்,
வாங்க..வாங்க சிவமுருகன்.

உங்கள் கேள்விக்குரிய பதில் : இந்தப் பதிவில் உள்ள மூன்றாவது பாயிண்டைப் பாருங்களேன் - கொஞ்சம் சிரமம் பார்க்காமல்…

கோ.இராகவன் Says:
April 24th, 2006 at 8:33 pm
// கோரா, //

என்ன சார் இது…எல்லாரும் ஜீரான்னு சொல்லும் போது நீங்க மட்டும் கோரான்னு சொல்றீங்க……….

// என்றைக்கு மதப்பற்று தாழ்ந்து கடவுள் நம்பிக்கை மேலே வருமோ……”//
- என்றைக்கு மதப்பற்று அறுந்து மனிதப் பற்று மேலே வருமோ - அப்டின்னு மாற்ற ஆசை.. //

நீங்க சொல்றதும் சரிதான். என்னைப் பொறுத்த வரையில் என்றைக்கு மதப் பற்று தாழ்ந்து கடவுள் நம்பிக்கை மேலே வருகிறதோ…அன்றைக்கு மனிதப் பற்றும் மேலே வரும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா வள்ளலார். அவர் நீங்க சொல்றத விட சிலபல படிகள் மேல.

கமல் Says:
April 24th, 2006 at 8:59 pm
//Every coin has got two sides என்பது அவர்களுக்கு என்றுமே புரியாதது மட்டுமல்ல, புரிந்துகொள்ள தயாராகவும் இருப்பதில்லை. அவர்கள் முயல்களுக்கு மூன்றே கால்கள்…//

சும்மா ‘நச்’னு இருக்கு!

பிள்ளையார் பால் குடித்த விஷயம் ஜெயில்ல (காலேஜ் விடுதிதான் ) இருந்ததால அடுத்த நாள்தான் தெரிஞ்சது. ஆனா, எங்க ஊருல, வேப்ப மரத்துல இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் வடிஞ்சதை நேரில் பார்த்தேன். சுத்துப்பட்டி பதினெட்டு கிராமத்துல இருந்தும் வண்டி கட்டிட்டு வந்தாங்க. ஓட்டுப் போடக்கூட அத்தனை பேர் வர மாட்டாங்க.

அப்புறம், நாங்க திருப்பதி போயிருந்தப்ப எடுத்த ஒரு போட்டோவுல, வண்டியோட நம்பர் பிளேட் மட்டும் இடம் வலம் மாறி இருந்தது. எப்படின்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. ஊருக்கு வர்றப்போ முடிஞ்சா அந்தப் போட்டோவை அனுப்புகிறேன்.

நன்றி
கமல்

தருமி Says:
April 24th, 2006 at 9:15 pm
ஜீரா/கோரா,
ஆங்கிலத்தில ஜீரா, தமிழில் கோரான்னு வச்சுக்கலாமான்னு பார்த்தேன்; சரி வேண்டாம்…ஜீரா தான் எல்லாருக்குமே பிடிக்கும்.

“அவர் நீங்க சொல்றத விட சிலபல படிகள் மேல. “// - அதனால தான் அவர் வள்ளலார்.

ஆனாலும் கடவுள் நம்பிக்கைக்கும், மனித நேயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கா என்ன? நான் பார்த்தவரை கடவுளுக்குப் பக்கத்தில் இருப்பதாக நினைக்கும் பலர், பக்கத்தில இருக்கிற மனுஷ ஜென்மங்களைக் கண்டுக்கிறதேயில்லையே.

தருமி Says:
April 24th, 2006 at 9:25 pm
கமல்,
வேப்பமர்த்துப் பால் - இரு ஓர் அறிவியல் சமாச்சாரமென்றுதான் ஞாபகம்; எங்கோ இதைப்பற்றி வாசித்ததாக ஒரு ஞாபகம். விவரம் கிடைத்தால் த்ருகிறேன்.

“நம்பர் பிளேட் மட்டும் இடம் வலம் மாறி இருந்தது..” printing mistake?? நானே பிரிண்ட் செய்த என் பழைய கருப்பு-வெள்ளை படங்களில் இந்தக் குளறுபடி நிறைய உண்டு!!

கமல் Says:
April 24th, 2006 at 9:35 pm
//printing mistake?? நானே பிரிண்ட் செய்த என் பழைய கருப்பு-வெள்ளை படங்களில் இந்தக் குளறுபடி நிறைய உண்டு!!//

நெகட்டிவைத் திருப்பி பிரிண்ட் செய்து விட்டார்களோ எனப் பார்த்தேன். ஆனால், பேனா இடது பாக்கெட்டில்தான் இருந்தது. அதனால்தான் குழப்பமே!

நன்றி
கமல்

கோ.இராகவன் Says:
April 24th, 2006 at 9:49 pm
// ஆனாலும் கடவுள் நம்பிக்கைக்கும், மனித நேயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கா என்ன? நான் பார்த்தவரை கடவுளுக்குப் பக்கத்தில் இருப்பதாக நினைக்கும் பலர், பக்கத்தில இருக்கிற மனுஷ ஜென்மங்களைக் கண்டுக்கிறதேயில்லையே. //

தருமி, அவங்களோடது கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் பயம்.

johan Says:
April 24th, 2006 at 10:30 pm
பாகுடிபாரு! மோதகம் துன்னமாட்டாரு; அவரொருவர் துன்நீரு தருவாரு பூசினிகா தரமாட்டாரு!!!
போங்கயியா,,,!!!! யெல்லாம் தலல முளவா அரைக்கீரது தான்!!!!காசு யாஸ்தியானவங்க வில்லயாட்டு.
யோகன்
பாரிஸ்

தருமி Says:
April 24th, 2006 at 10:31 pm
கமல்,
“அதனால்தான் குழப்பமே!” //
- இன்னும் கொஞ்சம் யோசிங்க. அதோட அது திருப்பதி போனபோது என்ற தொடர்பைத் தவிர்த்தும் யோசிங்க..அதனாலேயே ஒரு டிவைன் டச் கொடுக்க வேண்டாமே…இல்ல..

தருமி Says:
April 24th, 2006 at 10:33 pm
ஜீரா,
:கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் பயம். // - இது ரொம்ப சரி - அதுவும் எங்க ஆபிரஹாமிய மதங்களில் இதை அதிகம் பார்க்கிறேன்.

ஜவஹர். Says:
April 24th, 2006 at 11:20 pm
அன்புள்ள தருமி,
தொடர்ந்து எழுதுங்கள் என்று நான் சொன்னது என்னவோ உங்களைத்தான்.
சிந்திக்க விருப்பம் உள்ளவர்கள் இது தங்களுக்கும்தான் என்று புரிந்துகொண்டு விட்டார்கள்.
அதுதான் கச்சேரி களை கட்டுகிறது.
ம்.. நடக்கட்டும்.
அதற்காக என்னைப் பற்றிய, உங்கள் பராட்டுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிடாதீர்கள்.
அன்புடன்,
ஜவஹர்.

வெளிகண்ட நாதர் Says:
April 25th, 2006 at 10:39 am
புள்ளையார் பால் குடி படலம் திரும்ப தொடங்கிடுச்சா? எப்பதான் திருந்த.. இந்த நாகரீக மேல்நாட்லயும் இந்த கூத்து எல்லாம் நடக்குது, ஆனா பால்குடி அளவு இல்லை, அதபத்தி எழுதலாமுன்னு நினச்சப்ப, அகஸ்மாத்தா உங்க பதிவு பார்க்க நேரிட்டது, அதான் சம்சாரிக்கலாமேன்னு

sankar Says:
April 25th, 2006 at 12:35 pm
நான் தமாஷ் தான் செய்தேன், சத்தியமா! என்று விக்ரம் பட சத்தியராஜ் ஸ்டைலில் எல்லாம் நான் டையலாக் அடிக்க விரும்பவில்லை, ஆனால், நான் கேட்டது போல் யாராவது ரொம்ப சீரியஸா கேட்டா என்ன பதில் சொல்வீர்கள்!!? தருமி மற்றும் இளவஞ்சி!!

உண்மை என்ன வென்றால், நான் சத்தியமாக, பிள்ளையார் பால் குடித்தார், மோஸஸ் கடலைப் பிரித்தார், முகம்மது நிலாவைப் பிளந்தார் என்றெல்லாம் நம்பவில்லை. ஆனால் அதை நம்பாதவர்களைவிட, நம்புபவர்களின் voice ஸ்ட்ராங்காக கேட்டுக் கொண்டிருக்கிறது!! அது தான் இப்போதய உண்மை நிலவரம்.

ஷங்கர்.

ஞானவெட்டியான் Says:
April 25th, 2006 at 12:52 pm
என்னப்பா இது? பெரிய தொல்லையா இருக்கு.
நான்தான் பற்று வேண்டாம்! வேண்டாம்!!ன்னும் எத்தனை தடவை சொல்றது.
எல்லோரும் சபீனாவில் இருந்து சர்ப் எக்செல்லுக்கு மாறுங்கள். அதைப் போட்டுத் தேய்த்தால் பத்து(பற்று) நல்லாப் போகுதாம். வேலைக்காரி சொல்கிறாள். கேட்டு பயன்படுத்திப் பாருங்கள்.
(இருந்தாலும் ரொம்பக் கயிட்டமடா சாமி இப்பிடி எழுதறது)

ஆப்பு Says:
April 25th, 2006 at 1:14 pm
வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
‘தமிழ் ஆப்பு’ வைக்கப்படும்.

பொன்ஸ் Says:
April 25th, 2006 at 1:21 pm
இதுக்கு நான் ஞாயிற்றுக்கிழமையே பதில் போட்டேங்க.. என் பதில் மேல பிள்ளையாருக்கு என்ன கோபமோ தெரியலை, வரக் காணோம்… இது தான் என் பதில்:
பிள்ளையார் பால் குடித்தபோது நான் பள்ளிக்கூடத்தில் இருந்தேன்.. ஏதோ ஒரு ரிவிஷன் டெஸ்ட் இருந்ததால், பிள்ளையாருக்குப் பால் கூட குடுக்காமல் நான் ரொம்ப சிரத்தையாய்ப் படித்துக் கொண்டிருந்தேன்.. capillary action பத்தி எனக்கு தெரியாது, ஆனா, அந்த ஒரு வாரம் ஏதோ gravitational pull அதிகமா இருந்ததினால தான் பிள்ளையார் சிலை எல்லாம் பால் குடிச்சுதுன்னு ஏதோ பேப்பர்ல படிச்ச நியாபகம்..

பொன்ஸ் Says:
April 25th, 2006 at 2:14 pm
http://home.no.net/rrpriddy/lim/Milk%20Miracles.htm - இங்க இன்னும் பெட்டர்(தமிழ்ல என்ன சொல்லணும்?) விளக்கம் இருக்கு.. பார்க்கலாம்.. gravitation தப்பு.. cappillary actionல இன்னும் தெளிவான விளக்கம் குடுத்துருக்காங்க

sankar Says:
April 25th, 2006 at 2:16 pm
//
அந்த ஒரு வாரம் ஏதோ gravitational pull அதிகமா இருந்ததினால தான் பிள்ளையார் சிலை எல்லாம் பால் குடிச்சுதுன்னு ஏதோ பேப்பர்ல படிச்ச நியாபகம்.
//

அது எப்படி, அந்த ஒரு வாரம் மட்டும் Gravitational pull அதிகமாக இருந்தது..? அதுவும், விநாயகர் சதுர்தி வரும் நேரத்தில்…!! ( நான் தமாஷாத்தான் கேட்டேன்…சத்தியமா!! )

நீங்கள், அந்த பேப்பரை கண்டுபிடித்து ஏதாவது லிங்க் கொடுத்து ஒரு பின்னூட்டம் போடுங்கள்… நிச்சயமாக, நல்ல information கிடைக்கும்.

பொன்ஸ் Says:
April 25th, 2006 at 2:37 pm
//நீங்கள், அந்த பேப்பரை கண்டுபிடித்து ஏதாவது லிங்க் கொடுத்து ஒரு பின்னூட்டம் போடுங்கள்… நிச்சயமாக, நல்ல information கிடைக்கும்.
//

தலைவா.. என்ன எல்லா வேலையும் நம்ம கையிலேயே தள்ளறீங்க?!! எப்படியோ.. அதான் ஒரு லிங்க் குடுத்துட்டோம் இல்ல.. பாத்துட்டு சொல்லுங்க

தருமி Says:
April 25th, 2006 at 2:56 pm
ஜவஹர்,
- கொடுத்ததத் திருப்பி வாங்கிற வழக்கமே கிடையாதுங்க…நீங்களே வச்சுக்கங்க அந்தப் பாராட்டுக்களை…

தருமி Says:
April 25th, 2006 at 2:59 pm
இளவஞ்சி,
என்னதான் சப்பாத்தி மாவு பிசைஞ்சு கொடுத்துட்டு வந்தாலும் இப்படியா ப்ளாக்கர்கள் மீட்டுக்கு ஒரு மணி நேரம் லேட்டா வர்ரது. சரி..அது போகட்டும்…இப்போ சீக்கிரம் வாங்க ..உங்க உதவி உட்னே தேவை…தம்பி சங்கர் என்னதான் சொல்றாருன்னு புரியலையே…அவர் எந்தப் பக்கம் பேசுறார்னு கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி சொல்லுங்களேன்..

சங்கர்,
வாய்ஸுகள் எல்லாம் ஸ்ட்ராங்கா கேட்டா அதெல்லாம் சத்தியமாயிடுமா? அவங்க அந்த மாதிரி சத்தம் போட்டுக்கிட்டேஏஏஏஏ இல்லாட்டி அவங்களுக்கே அவங்க நம்பிக்கைகள் இல்லாம போய்டுமே என்னவோ..?

தருமி Says:
April 25th, 2006 at 3:07 pm
ஞானவெட்டியான்,
அதென்ன நீங்களே அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? பற்றறுக்க இப்படி ஓர் எளிய வழி காண்பிக்க ஒரு வேலைக்காரம்மா இல்லாமல் போய்விட்டார்களே!
அதோடு அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்றின்றி நமக்கு நாமேதானே சோதனை செய்து அதன் மூலமே பற்றறுத்து, பிறவிகள் கடந்து, முக்தியடைய வேண்டும்?
(இப்பிடி எழுதறது மட்டும் என்னவாம், எனக்கு மூச்சு வாங்கிறது எனக்குத்தான் தெரியும்!)

தருமி Says:
April 25th, 2006 at 3:10 pm
இளவஞ்சி,
மீண்டும் ஒரு உதவி…இந்த ‘ஆப்பு’ என்னதான் சொல்றாரு? திட்டுறாரா; இல்ல நான் சொல்றது சரிங்கிறாரா? ஒண்ணுமே புரியலையே’ப்பா!

ஸ்ஸ்'’ப்பா..கண்ணக் கட்டுதே..!

தருமி Says:
April 25th, 2006 at 3:38 pm
வெளிகண்ட நாதர்,
“…பால் குடி படலம் திரும்ப தொடங்கிடுச்சா? “//
- அப்படியெல்லாம் இல்லீங்க; சும்மா நாந்தான் பழைய சங்கெடுத்து ஒரு ஊது ஊதினேன்.

அது என்ன மேல்நாட்டு கூத்து…அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

தருமி Says:
April 25th, 2006 at 3:39 pm
பொன்ஸ்,
“என் பதில் மேல பிள்ளையாருக்கு என்ன கோபமோ…”

எப்டிங்க கோபம் இல்லாம இருக்கும்? அன்னைக்கு உங்களுக்கு உங்க டெஸ்ட்தான பெருசா இருந்திச்சி; அப்புறம் கோபம் இல்லாம எப்படி இருக்கும்?

அந்த ஒரு வார g-force பற்றி ஒண்ணும் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.

நீங்க சொன்ன லின்க் பார்த்தேன். அதில ஒரு முக்கிய விஷயம் இல்லை; அந்தக் காலத்தில நானே போட்டோ பார்த்திருக்கேன்; அது என்னன்னா, லண்டன் கோவில்ல பால் தரையில் தாரையாக வழிந்து ஓடியதைப் படம் போட்டிருந்தார்கள். ஆனால், இந்த லின்க்கில் பால் அப்படியே ‘குடிக்கப்பட்டதாக’ எழுதியுள்ளது. நான் பிள்ளையாருக்கும் ஐயப்பனுக்கும், மாதாவுக்கும் கொடுத்த பால் ‘உறிஞ்சப்பட்டு’ வேறொரு பக்கம் வழிந்தது. எல்லோரும் பார்த்தது அதுதான்.
அந்த லின்க் எப்டிங்க புடிச்சீங்க; நானும் கூகுளினேன். ஆனால் கிடைக்கவில்லை! ஒருவேளை ‘அருள்’ இருந்தாதான் இந்த மாதிரி லின்க் கிடைக்குமோ?

தருமி Says:
April 25th, 2006 at 3:42 pm
யோஹான்,
அய்யா பாரிசு யோஹான்,
என்னய்ய சொல்றிங்க…எந்த மொழியில் சொல்றீங்க? தமிங்கிலீஸ் மாதிரி, இது தமிபிரஞ்ச்சா..?

பொன்ஸ் Says:
April 25th, 2006 at 3:57 pm
//எப்டிங்க கோபம் இல்லாம இருக்கும்? அன்னைக்கு உங்களுக்கு உங்க டெஸ்ட்தான பெருசா இருந்திச்சி; அப்புறம் கோபம் இல்லாம எப்படி இருக்கும்? //


//நானும் கூகுளினேன். ஆனால் கிடைக்கவில்லை! ஒருவேளை ‘அருள்’ இருந்தாதான் இந்த மாதிரி லின்க் கிடைக்குமோ? //
- தெரியலையே.. கூகிள் தான்.. வேற எங்கயும் போய் தேடலை.

பால் குடிச்சாருன்னு ஒத்துகிட்டவங்க ஆராய்ச்சி பண்ணினதைப் போட்டா தானே ஒத்துப்பாங்கன்னு போட்டேன்.. அது நடந்த காலத்துல (95) ஹிந்து எல்லாம் இணையத்துல இருந்துதா என்ன? கண்டு பிடிக்க பழைய பேப்பர் கடைக்குத் தான் சங்கர் போகணும்.. அதெல்லாம் பிள்ளையாருக்காக செய்யிறது ரொம்ப அதிகம்னு என் எண்ணம்..

பொன்ஸ் Says:
April 25th, 2006 at 4:06 pm
தருமி,
பிள்ளையார் பாருங்க எவ்வளவு அதிர்ஷ்டசாலி.. ஐம்பது பின்னூட்டம் வாங்கிட்டாரே!!!

தருமி Says:
April 25th, 2006 at 4:19 pm
பொன்ஸ்,
“பிள்ளையார் பாருங்க எவ்வளவு அதிர்ஷ்டசாலி.. ஐம்பது பின்னூட்டம் வாங்கிட்டாரே!!! “//

- அது என்னங்க பொன்ஸ், என்ன நீங்க முன்ன பின்ன பாத்ததே இல்லை; பின் எப்படி என்னை ‘பிள்ளையார்’ அப்டீங்கிறீங்க..

இப்போ 52 ஆகிப்போச்சில்ல..

sankar Says:
April 25th, 2006 at 5:15 pm
தனி வலைப் பக்கமே இருக்கு!
வீடியோ கூட இருக்கு இதுல…!!

நீங்கள் தனியாகத் தேட வேண்டியது இல்லை, அவர்களே தனி லிங்க் பக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

ஷங்கர்.

sankar Says:
April 25th, 2006 at 5:18 pm
தனி வலைப் பக்கமே இருக்கு!
வீடியோ கூட இருக்கு இதுல…!!

நீங்கள் தனியாகத் தேட வேண்டியது இல்லை, அவர்களே தனி லிங்க் பக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

ஷங்கர்.

ஏதோ பிரச்சனை காரணமாக, என் பின்னூட்டம் எற்றுக் கொள்ள மறுக்கப்படுகிறது, மறுமுறை இடுகிறேன், இறண்டு முறை இருந்தால், மட்டுறுதலில் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கமல் Says:
April 25th, 2006 at 8:27 pm
//திருப்பதி போனபோது என்ற தொடர்பைத் தவிர்த்தும் யோசிங்க..அதனாலேயே ஒரு டிவைன் டச் கொடுக்க வேண்டாமே//

இப்படித்தாங்க நானும் சொன்னேன். கூட வந்தவங்க எல்லாம் அடிக்க வந்துட்டாங்க! ‘உனக்கெல்லாம் பட்டால்தான் புத்தி வரும்’ னு திட்டு வேற! அதனாலதான் உங்க கடைசி வரியை ‘நச்’னு இருக்குன்னு சொன்னேன்.

பொன்ஸ் கொடுத்த லின்க்கைப் படித்து முடிக்கறதுக்குள் தாவு தீர்ந்திடுத்து. யப்பா! 1995லேயே எத்தனை பேர் இண்டெர்நெட்டுல போஸ்ட் பண்ணியிருக்காங்க!

சரி, பாம்பு பால் குடிக்குமா? நான் சினிமாவுலதான் பார்த்திருக்கேன். யாராவது நேரில் பார்த்திருக்கீங்களா?

நன்றி
கமல்

பி.கு:- 53 ஆகிப்போச்சு! வேணும்னா சொல்லுங்க! செஞ்சுரி அடிச்சிடுவோம்!

தருமி Says:
April 25th, 2006 at 10:28 pm
கமல்,
உருகிப்போய்ட்டேன்’யா உங்க பின்னூட்டம் கண்டு.
ஏன் நாட்ல கொஞ்சமாவது மழை பெய்யுதுங்கிறீங்க..எல்லாம் உங்கள் மாதிரி நல்ல மனசுள்ள மனுஷங்க இருக்கிறதினாலதான்…

உங்க பின்குறிப்பைப் படிச்சுட்டுதான் இப்படி உருகிப்போய்ட்டேன்.

இளவஞ்சி Says:
April 25th, 2006 at 11:37 pm
தருமி சார்! ஆப்பு எல்லா இடத்துலையும் இதே விளம்பரத்தை போடறார்! அதனால கண்டிப்பா அவர் சொல்லறது உங்களை இல்லை!

தருமி, சங்கர்! எனக்கு இந்த Surface tention, G-force இதெல்லாம் தெரியாது! படிக்கற காலத்துலையே நான் பயங்கரமா சயின்சுல மார்க்கு வாங்குனவன்!

இது நடந்த காலத்துல நான் கோவைல இருந்தேன்! எங்கம்மாவும் அரை லிட்டரு பாலை தூக்கிக்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்தாங்க! வந்தப்பறம் வீட்டுல இருந்த ஒரு டம்ளரு பாலையும் வீட்டு விநாயகருக்கே ஊத்தறதாவும் ப்ளான்! நான் என் வீட்டுல இருந்த அரையடி பிள்ளையாரை எடுத்து ஒரு தட்டுல வைச்சு பாலை குடுக்க சொன்னேன்! எங்கூட்டு பிள்ளையாரும் நல்லாத்தான் அரை டம்ளரு பாலை உருஞ்சுனாரு! எல்லாம் முடிஞ்சப்பறம் வினாயகரை தட்டுல இருந்து தூக்குனா அங்க பால்! அளந்து பார்த்தா அரை டம்ளருக்கும் கொஞ்சம் கம்மி! வாயில உரிஞ்ச பிள்ளையாரு எப்படி அதை தட்டுல விட்டாரு?! இதுதான் என் கேள்வி!

சங்கர்.. உங்க லிங்குல இருக்கற வீடியோல கொடுக்கற பால் வாய் மூலமாவே வழியறது தெரியுதா இல்லையா?! நான் உங்க நம்பிக்கைகளை கேள்வி கேக்கவில்லை! மனசு ஒன்னை நம்பனும்னு முடிவு பண்ணிருச்சுன்னா நம்பியே தீரும்! (DMK ஆளா இருந்தா வைகோ ஒரு துரோகிங்கற மாதிரி! இல்லைன்னா காலைல ஒரு தம் போட்டா நல்லா காட்டுக்கு போகும்னு நம்பிட்டா தம் இல்லாம போக முடியாதுங்கற மாதிரி!! )

இதுக்கு மேல உங்க இஸ்டம். நானும் கடவுளை நம்பறவந்தான்! ஆன இங்க ஆர்கியு செய்ய விரும்பலை!

துளசி கோபால் Says:
April 26th, 2006 at 2:31 am
//அதெல்லாம் பிள்ளையாருக்காக செய்யிறது ரொம்ப
அதிகம்னு என் எண்ணம்.. //

திஸ் ஈஸ் த்ரீ மச். உங்களுக்காக உலகம் முழுக்க ஜனங்க கொடுக்கற பாலைக் கஷ்டப்பட்டுக்
குடிச்சுருக்காருல்லெ.அளவுக்கு மிஞ்சினா……? தெரியும்தானே?
பிள்ளையாரை விடுங்க. அவரோட ‘யானை’த்தலைக்காக கொஞ்சம் மெனக்கெடக்கூடாதா? (-:

//அது என்ன மேல்நாட்டு கூத்து…அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். //

கிறைஸ்ட்சர்ச்லே பால் குடிச்சது மேல்நாடு இல்லையா?

//சரி, பாம்பு பால் குடிக்குமா? நான் சினிமாவுலதான் பார்த்திருக்கேன்.
யாராவது நேரில் பார்த்திருக்கீங்களா?//

பாம்பு மொதல்லே தண்ணி குடிக்கறதைப் பார்த்திருக்கீங்களா?

புத்துக்குப் பால் ஊத்தறேன்னு அந்த மண்ணுலே ஊத்திட்டு வர்றதுதான் மண்ணுக்குள்ளே
ஊறிப் போயிருமே. அப்புறம் பால் எங்கெ இருக்கு குடிக்க?sankar Says:
April 26th, 2006 at 12:21 pm
//
சங்கர்.. உங்க லிங்குல இருக்கற வீடியோல கொடுக்கற பால் வாய் மூலமாவே வழியறது தெரியுதா இல்லையா?! நான் உங்க நம்பிக்கைகளை கேள்வி கேக்கவில்லை! மனசு ஒன்னை நம்பனும்னு முடிவு பண்ணிருச்சுன்னா நம்பியே தீரும்! (DMK ஆளா இருந்தா வைகோ ஒரு துரோகிங்கற மாதிரி! இல்லைன்னா காலைல ஒரு தம் போட்டா நல்லா காட்டுக்கு போகும்னு நம்பிட்டா தம் இல்லாம போக முடியாதுங்கற மாதிரி!! )
//

ஐ ஐ யோ நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க… நான் புள்ளயார் பால் குடித்தார், பீர் குடித்தார்ன்னு எல்லாம் நம்பவில்லை…

லிங்குகள் கேட்கப்பட்டதினால் தான் கொடுத்தேன்…argue எல்லாம் செய்யவில்லை.

பொன்ஸ் Says:
April 26th, 2006 at 12:59 pm
//என்ன நீங்க முன்ன பின்ன பாத்ததே இல்லை; பின் எப்படி என்னை ‘பிள்ளையார்’ அப்டீங்கிறீங்க..//

தருமி.. பாருங்க நீங்க பிள்ளையாரைக் கிண்டல் பண்ணினீங்க, சங்கர் உடனே நானும் உங்க சைட் தான்னு ஒத்துகிட்டாரு.. இப்போ எப்டீங்க 100 க்கு கொண்டு போகிறது?!!!

இது தான் பிள்ளையாரோட மகிமை,.. தெரிஞ்சிதா!!

இளவஞ்சி Says:
April 26th, 2006 at 7:59 pm
சங்கர்!

//ஐ ஐ யோ நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க…// ஹிஹி… கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்!

மன்னிச்சி விட்ருங்ணா!!

தருமி Says:
April 26th, 2006 at 10:50 pm
துளசி,
பாம்பு பால் ஒண்ணும் குடிக்காதுங்க.
மேல்நாட்டுக்கதையை வெளிகண்ட நாதர் பதிவில வாசிச்சிட்டீங்களா?

தருமி Says:
April 26th, 2006 at 10:52 pm
தனியொருவராக வந்து என் ஐயங்களைத் தீர்த்துவைத்த இளவஞ்சியே,நீவீர் வாழ்க. ( நம்ம கணக்குப் பிள்ளையிடம் சொல்லி 1000 பொ. கா. வாங்கிச்செல்லவும்.)

தருமி Says:
April 26th, 2006 at 10:56 pm
பொன்ஸ்,
“நீங்க பிள்ளையாரைக் கிண்டல் பண்ணினீங்க…” //
- இதென்னங்க அனியாயமா இருக்கு? நான் எங்கங்க கேலி பண்ணினேன்; நீங்கதான் என்னை பிள்ளையார் என்று சொல்லி, பிள்ளையாரைக் கேலி பண்ணினீங்க. இப்ப என்னடானா…கதய திருப்புறீங்களே

“இப்போ எப்டீங்க 100 க்கு கொண்டு போகிறது?!!! ” // - எப்டீங்க 100 க்கு கொண்டு போகிறது

பொன்ஸ் Says:
April 27th, 2006 at 5:39 pm


பொன்ஸ் Says:
April 27th, 2006 at 5:40 pm
இப்படித்தான்

நாங்களும் முத்து (தமிழினி) ஸ்கூல் ஆப் கமெண்ட்ஸ்ல படிக்கிறோம் இல்ல

தருமி Says:
April 27th, 2006 at 9:54 pm
பொன்ஸ்,
ஒங்களச் சொல்லிக் குத்தமில்லை; அந்த ஆளு, உங்க குருநாதர் அந்த தமிழினி முத்து என் கைல அகப்படட்டும், பாத்துக்கிறேன்

கமல் Says:
April 27th, 2006 at 10:04 pm
தமிழினி முத்து மட்டுமில்லை. நம்ம குமரன் கூட ஒரு பதிவு போட்டிருக்காரே!

நன்றி
கமல்

(இன்னும் 32 கமெண்ட்ஸ் வேணுமே!)

பொன்ஸ் Says:
April 28th, 2006 at 5:53 pm
69

பொன்ஸ் Says:
April 28th, 2006 at 5:54 pm
70 - இப்படி நம்பர் போடறது, ராமனாதன் ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துப் படிச்சது

தருமி Says:
April 28th, 2006 at 7:27 pm
கமல்,
போதுமப்பா போதும்…இந்த ரேட்ல போனா எப்படி அடுத்தடுத்த பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் போடுவீங்க

தருமி Says:
April 28th, 2006 at 7:31 pm
பொன்ஸ்,
ஒவ்வொரு ஸ்கூலுக்கா போய் இந்தப் பாடங்களை மட்டும் படிச்சிட்டு வருவீங்களோ

சரி..உங்க வ.வா.ச.-த்தில உங்களுக்குப் பேரு வச்சாச்சா, இல்லியா?அல்லது ‘பிகிலு’தான் நிலச்சிருச்சா…?

பொன்ஸ் Says:
April 29th, 2006 at 11:32 am
ஆமாங்க.. இதுக்கப்புறம், துளசி ஸ்கூல் ஆப் அனிமல்ஸ், குமரன் ஸ்கூல் ஆப் ஆன்மீகம், ஜிவா ஸ்கூல் ஆப் வெண்பா, ஜிரா ஸ்கூல் ஆப் சாமியார்ஷிப் எல்லாம் படிக்க வேண்டியது தான்… நம்ம எல்லாம் எங்க தலை சொல்றா மாதிரி, இப்போ தான் அப்பரன்டீசு…

பிகிலு தான் நெலைக்கும் போலிருக்கு.. ரொம்ப கேட்ட பொன்ஸுக்கு மோனைங்கராங்க. பேசாம, பொன்ஸை மாத்திடலாமான்னு பாக்குறேன்..

தருமி Says:
April 29th, 2006 at 12:56 pm
எனக்கே கஷ்டமா இருக்குங்க..இந்தப் பதிவுக்கு எழுபதுக்கு மேலே போறது கொஞ்சமும் நியாயமா தெரியலை…நல்ல பதிவுகள், controversialபதிவுகள் என்று கொஞ்சம் இருக்குன்னு நினைக்கிறேன்; அதையெல்லாம் யாரும் கண்டுக்காதபோது இந்தப் பதிவுக்கு இவ்வளவு பின்னூட்டங்களான்னு நினச்சா, கஷ்டமாதான் இருக்கு.ஆனா ஒண்ணு இதற்காகவாவது நிறைய பின்னூட்டம் வர்ர அளவுக்கு அடுத்து ‘நல்ல′ பதிவுகள் போடணும்னு ஒரு ஆசை; பார்க்கலாம்.

153. இது ஒரு (1/4) மீள்பதிவு

*

வேற ஒண்ணுமில்லை.. பதிய ஆரம்பித்த சின்னாளில் பலநாள் கனவாக நான் ஆங்கிலத்தில் எழுதின ஒன்றை (அது எந்த category-ல் வரும்; கதையய, கட்டுரையா, fantasy-யா என்று தெரியவில்லை!) பதிவிட்டிருந்தேன். இரண்டு பேர் பார்த்திருப்பார்கள் கட்டாயம் - குழலியும், என் மாணவன் அவ்வையும். (இரண்டே பின்னூட்டம்-அதனாலேயே இந்தக் கண்டுபிடிப்பு).
ஏனோ இன்று இட்லிவடையின் பதிவினையும் (49.5%), அதற்கான எதிர்வினையாக குழலியின் பதிவும் என்னை அப்பதிவை மீண்டும் வாசிக்க வைத்தது. அப்போது அந்த ‘இரண்டாம் நாளை’ மட்டுமாவது மீண்டும் பதித்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் ஒரு எச்சரிக்கை: முதல் நாள் படிக்காவிட்டால் இரண்டாம் நாள் புரியாமல் போகலாம். ஆகவே முதல் நாள் விஷயத்திற்கு அங்கே போகவும்…
The second day begins.

Reservation policy remains with the following conditions: First generation candidates get the full extent of the advantages of the existing reservation policy. Second generation gets only one third of the benefits. Children from financially sound families - identified from their respective security numbers fall under common pool. On the other hand children form poor families irrespective of their castes get the ‘one third benefits’. The minority ‘rights’ are to be replaced by minority ‘protection’.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 14 2006 12:14 am | Uncategorized |
7 Responses
கமல் Says:
April 22nd, 2006 at 8:45 am
என்ன சார்! ரொம்ப நாளா பதிவையே காணோம்! சீக்கிரம் போடுங்க!

நன்றி
கமல்

தருமி Says:
April 22nd, 2006 at 2:29 pm
என்ன கமல்,
இந்தப் பதிவைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லையோ…
ஏனென்றே தெரியவில்லை..அடுத்த பதிவுக்கு என்று எழுத ஆரம்பித்தவைகள் இன்னும் ஆரம்பங்களாகவே உள்ளன…
“ஆதரவு”க்கு நன்றி…

பொன்ஸ் Says:
April 22nd, 2006 at 5:31 pm
தருமி சார்,
நல்ல கற்பனை.. ஆனா

“7th day will be when few of the representatives of the third generation and second generation candidates who lost their jobs due to the policy standing around me to with their rifles pointed to me.. ”

தருமி Says:
April 22nd, 2006 at 6:42 pm
பொன்ஸ்,
முதல் முறையோ வருகை தருவது. வருக.நன்றி.

7th day - உங்க கற்பனை நல்லாதான் இருக்கு…

ஆனாலும், அவர்கள் வேலைபார்த்துக் கொண்டுதானே இருப்பார்கள்; அவர்கள் பிள்ளைகளுக்குத்தானே ரிசர்வேஷன் கிடையாது…அதனால துப்பாக்கி அளவுக்குப் போக மாட்டாங்க. அப்படியே எக்குத் தப்பா ஏதாவது நடந்தாலும் ஒரு நாட்டுக்கு நல்லது செய்து, அதற்காக உயிரையே விட்ட ஆளுன்னு ரெண்டு மூணு சிலை வச்சிரமாட்டீங்க…கனவை அப்படியே extend செஞ்சுட்டா போகுது..

பொன்ஸ் Says:
April 23rd, 2006 at 3:11 pm
முதன்முறைதாங்க.. நான் படிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் உங்களோட “ஜோசியம்” ங்கற தலைப்புல எழுதினது தான் தெரியும்.. எனக்கு அவ்வளவு இன்டரஸ்ட் இல்லாத தலைப்பு.. (ஏதோ என்னப் பத்தி நல்லதா சொன்னா கேட்டுட்டு போகலாம்.. ஜோசியத்தப் பத்தி படிக்க சொன்னீங்கன்னா.. நான் இல்லைப்பா..)
கதைன்ன உடனே வந்துட்டேன்.. அடுத்த பதிவும் படிக்கப் போறேன்..

தருமி Says:
April 23rd, 2006 at 10:26 pm
கத கேக்க வந்த பொன்ஸ்,
அப்டின்னா நம்ம ‘சொந்தக்கதை’யை படிச்சிப்பாத்து சொல்லுங்க எப்படி இருந்திச்சுன்னு.

ஜவஹர் Says:
April 23rd, 2006 at 11:29 pm
அன்புள்ள தருமி
இப்போதுதான் உங்கள் பதிவை படித்தேன். அதன் முன்பதிவான ஆங்கிலப் பதிவையும் படித்தேன்.அது ஒரு கனவு என்று முடித்திருந்தாலும், உருப்படியான கனவு.எனக்கு அது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. முதல்வன் படத்தில் காட்டப்பட்ட Fantasy யை மக்கள் ரசிக்கத்தானே செய்தனர். இந்தக் கருவை மைய்யமாக வைத்து வெகுஜன பத்திரிக்கையில் ஒரு தொடர்கதை சாயலில் எழுதினால் நல்ல பயனைத் தரக்கூடும்.ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு இந்த ஐடியா எட்டிக்காயாகத்தான் இருக்கும்.
அன்புடன்,
ஜவஹர்

Thursday, April 13, 2006

152. சோதிடம் - 13…முடிவுரை

Image and video hosting by TinyPicமற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.இந்த சோதிடப் பதிவுகள் அனுமார் வால் மாதிரி நீண்டு போச்சு. ஆனாலும் ஜாதகம் பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே சிலரின் மாற்றுக்கருத்து பார்க்க முடிந்தது. வாஸ்து, எண்கணிதம் என்று பலர் முனைப்போடு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் சாதகம் மட்டுமே மக்கள் மனத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்பதையே இது காண்பிப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே சொன்னது போல வயதானவர்கள் தங்கள் மேல் நம்பிக்கையிழந்து, சுற்றி நிற்கும் பிரச்சனைகளால் மனம் கலங்கி ஏதாவது ஒரு கொழு கொம்பு கிடைக்காதா என்ற சோகச்சூழலில் இந்த “விஞ்ஞானங்களைத்” தேடிச் செல்வதையாவது ‘அய்யோ பாவம்’ என்ற முறையில் விட்டுவிடலாம். வாழ்வின் இளமைக்காலத்தில் ‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசில்’ இளைஞர்கள் எவ்வளவு மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும்; அதை விட்டு விட்டு பெயரை மாத்தினால் நல்ல வேலை கிடைக்குமா, மோதிரத்தில் கல்லை மாட்டிக் கொண்டால் எதிர்காலம் வெளிச்சமாகுமா என்று இந்த ‘விஞ்ஞானிகள்’ பின்னால் செல்வது சரியான ஒரு வயித்தெரிச்சல் சமாச்சாரமாக எனக்குத் தோன்றுகிறது. இதைப்பற்றிய பதிவுகளில் நான் சில கேள்விகள் எழுப்பியிருந்தேன் - உண்மையாகவே அவைகளுக்குப் பதில் தெரியாத காரணத்தாலயே அவைகளைக் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லாததால் இன்னும் என் பழைய நிலையிலேயேதான் இருக்கிறேன்.

இப்பதிவுகளை எழுதக்காரணமே நம் இளைஞர்களில் பலருக்கும் வாஸ்து, எண் கணிதம், பெயர் மாற்றம் போன்ற பலவற்றில் புதிதாக ஏற்பட்டுள்ள ஈர்ப்பே காரணம். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விஷயங்கள் மேல் மக்களுக்கு, அதுவும் இளைஞர்களுக்கு, ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பார்த்த பிறகே அதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து, இப்பதிவுகளை எழுதலானேன்.

வழக்கமாகவே சோதிடத்தில் நல்லது ஏதாவது சொன்னால் அதை அப்படியே யாரும் நம்புவதில்லை - people take it with a pinch of salt. ஆனால் அதுவே கெட்டது நடக்கும் என்றால் மனம் பேதலித்து நிற்பது என்பது சாதாரணமாகப் பார்க்கும் ஒரு விஷயம்தான். கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம் தன்னம்பிக்கையை பாழடிக்கும் என்று தெரிந்தும் அதில் வீழ்வது புத்திசாலித்தனமாகாது.

அடுத்து கடைசியாக சாதகத்திற்கு வருவோம். இதைப்பற்றிய பதிவுகளுக்குத்தான் நம்பிக்கையாளர்கள் சிலர் பதிலளிக்க வந்தனர். நன்றி அவர்களுக்கு. நம்பிக்கையாளர்கள் வழக்கமாகச் சொல்லும் ஒரு விஷயம்: சாதகம் ஒரு கணக்கு; ஆனால் சிலரே அதை மிகச்சரியாக கணிக்கத் தெரிந்தவர்கள். அந்தக் கணக்கு தெரியாதவர்கள் கணிக்கும்போது ஏற்படும் தவறுகளை வைத்து சாதகமே தவறு என்று சொல்வது தவறு என்பது அவர்களின் ஒரு விவாதம். இவ்விவாதத்திற்கு தொப்புளான் சொன்னதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்டி அதற்குரிய பதிலாகத் தருகிறேன்: கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு.

அடுத்து, இந்த சாதக அமைப்புகள் நம் “தலைவிதி” என்றே கொள்வோம். அப்படியாயின் அது கடவுள் கொடுத்த ஒன்றாயின் பின் எதற்கு அந்த அமைப்புகளில் காணும் ‘தோஷங்களுக்கு’ப் பரிகாரங்கள்? கடவுளுக்குக் கையூட்டு கொடுத்து, கிரஹங்களின் ‘தாக்கத்தை’ மாற்றுவதா இது? இந்தப் பரிகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது, சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சம்மட்டி சொன்னதை மீண்டும் நினைவு கூர்வது நன்றாயிருக்கும்:

“தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !. ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணிதாங்களே நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.”

இன்னொரு காரியம்: சாதகம் கணிக்க குழந்தை ‘ஜனித்த’ சரியான நேரம் தெரியவேண்டும் என்பதில் ‘சரியான நேரம் எதுவென்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகளையும் முன் பதிவில் பார்க்கலாம். கருச்சிதைவுக்கு எதிராகக் கருத்து சொல்லும் கிறித்துவ, இஸ்லாம் (மற்ற மதக்கோட்பாடுகள் பற்றி தெரியவில்லை) மதங்களிலும் தாயின் கரு சூல் (fertilization) ஆன உடனேயே அங்கே ஓர் உயிர் தோன்றி விட்டதாகவே கருதுகின்றன. அப்படியாயின் நான் ஞானவெட்டியானிடம் கேட்ட கேள்வி:
-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?

- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?

நறுக்கென்று ஞானவெட்டியான் இதற்குத் தந்த பதில்:

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை.

ஞானவெட்டியான் மேலும் சொன்னது:

எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

தருமியின் கடைசிக் கேள்வி: மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு? இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?

பின்குறிப்பு:

ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி - last but one para - வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…இதைப் பற்றி இங்கேயும்…

ŠPathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 13 2006 04:00 pm | சமூகம் |
45 Responses
muthu(tamizhini) Says:
April 13th, 2006 at 4:20 pm


//இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான//

இதுக்குத்தான் அண்ணன் ஜோஷி முயன்றார்.நீங்க விட்டீங்களா? கேள்வி கேக்கறீங்க பெரிய கேள்வி…
உடம்பு சரியில்லைன்னா டாக்டர் கிட்ட போறீங்க..அப்புறம் சோதிடம்னா இளக்காரமா? என்னய்யா நியாயம் இது?

Geetha Sambasivam Says:
April 13th, 2006 at 6:03 pm
ஜாதகம் கணிக்க சரியான பிறந்த நேரம் தான் எடுத்துக் கொள்ளப் பட வேண்டுமே அன்றிக் கருவுற்ற நேரம் அல்ல. பரிகாரம், பூஜை என்று செய்வது நம் மனச்சாந்திக்காகவும், கெட்டது நடந்தால் ஏற்கும் மனப்பக்குவம் பெறவும்தான்.கிறித்துவத்தில் கூட மெழுகுவர்த்தி ஏற்று வழிபாடு செய்வதும், முஸ்லீம்கள் Chaddar போடுவதும் உண்டு. நாங்கள் பிரார்த்தனைக்கு வேளாங்கண்ணியிலும் செய்தது உண்டு. தர்காவிலும் Chaddar போட்டிருக்கிறோம்.பிரார்த்தனை மூலம் நடக்க முடியாத விஷயங்கள் நடக்க முடியும் என்று நம்புகிறோம்.இல்லாவிட்டாலும் அதை ஏற்க வேண்டிய சக்தியை அந்த ஆண்டவன் கொடுக்கவேண்டும் என்று தான் ப்ரார்த்திப்போம்.

தருமி Says:
April 13th, 2006 at 8:44 pm
hi muthu(thamizini),
the problem with Joshi was he was putting the cart before the horse!

தருமி Says:
April 13th, 2006 at 8:45 pm
Geetha Sambasivam

“ஜாதகம் கணிக்க சரியான ….என்று தான் ப்ரார்த்திப்போம். “//

- Amen!

தருமி Says:
April 13th, 2006 at 8:46 pm
geetha s.,
i have added a post-script in this post. pl. note that too.

ஞானவெட்டியான் Says:
April 13th, 2006 at 9:05 pm
//மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு?//

நோய் வந்துவிடுகிறது. ஒரு மருத்துவரிடம் போகிறோம். உடனே, பக்கத்து வீட்டுக்காரர், “அட, போய்யா! நம்ம மருத்துவர்கிட்ட பாக்கலாம்; வா” என்கிறார். சரி; ஒரு SECOND OPINION வங்கிக் கொள்வோமே என அந்த மருத்துவரிடம் போகிறோம். அது போலத்தான். இந்தக் கடவுள்கிட்ட போயாச்சு; அந்தக் கடவுள்கிட்டயும் போவோமே ன்னுதான். அதுக்காக முதல் மருத்துவரிடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது என அருத்தமா?
கடவுள் வந்து எங்காவது நேரில் பேசியிருக்கிறதா? அதுதான் சோதிடர்களை நியமித்துள்ளது. அங்கு போனால், “இந்த சாமிக்கு இப்படிப் பரிகாரம் செய்” அப்பிடிம்பார். உடனே செய்வீர்கள். “ஆவி உனக்கு; அமுது எனக்கு” ன்னு பரிகாரம் செய்பவர் சுளையாய் கொண்டுபோய் விடுவார். அதுக்காகக் கடவுள் நம்பிக்கை இருப்பவன் சோதிடரிடம் ஏன ்போகிறாய்? ன்னு கேட்டா நியாயமா?

// இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//

நாங்கள் கேவலமென நினைக்கவில்லை; நீங்கள் நினைத்தால் அதுக்கு யார் பொறுப்பு.

அந்தக் காலத்துல சிவனுக்கும் நக்கீரனுக்கும் கேள்வி கேட்டே கலகமூட்டினீர்கள். இப்பொழுது யார் யாரெல்லாம் என்னோடு சண்டைக்கு வரப்போகிறார்களோ?

தருமி Says:
April 13th, 2006 at 10:28 pm
“அந்தக் காலத்துல சிவனுக்கும் நக்கீரனுக்கும் கேள்வி கேட்டே கலகமூட்டினீர்கள்.”//
- இதென்ன புதுக்கதை…நான் (திருவிளையாடல்)பார்த்த வரைக்கும், ‘நான்’ அறியாப்ப் பிள்ளையா வந்து, வாங்கிக் கட்டிட்டு போன பாவப்பட்ட ஜென்மம் தானேங்க!

ஆனாலும் ரொம்பவே நீங்க ‘அவங்களை’ லந்து பண்ணியிருக்கீங்க…

குறும்பன் Says:
April 14th, 2006 at 1:24 am
” எத தின்னா பித்தம் தெளியும்ன்னு அலையற” ஆளு எதை வேணும்னாலும் தின்பான், பித்தம் போகனும் அதுதான் அவனுக்கு தேவை.
சோசியம், எண்கணிதம், வாஸ்து, …. எல்லாம் இப்படிதான் வாழுது. சோசியத்தோட இரகசியம் என்னன்னா கேக்கறவங்க நம்பற மாதிரி சோசியம் சொல்லனும் இல்லைன்னா ….அடுத்த ஆளு, நம்ம ஊர்ல சோசியக்காரங்களுக்கா பஞ்சம்.

ஞானவெட்டியான் Says:
April 14th, 2006 at 7:54 am
அய்யா, தருமி,

வேண்டாமையா! வேண்டாம்!!
என்னை உட்டுறுங்க. நான் ஓடிப் போயிடரேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தருமி Says:
April 14th, 2006 at 1:16 pm
குறும்பன்,
எதையும் திங்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தாதான் பித்தம் தீரும்னு சொல்லணும் அவங்கிட்ட…

தருமி Says:
April 14th, 2006 at 1:18 pm
ஞானவெட்டியான்,
“என்னை உட்டுறுங்க. நான் ஓடிப் போயிடரேன்.”// - எங்க விடறது; அதான் உங்கள இங்கன இழுத்து விட்டாச்சே !!

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சம்மட்டி Says:
April 15th, 2006 at 10:11 am
//இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//
தருமி அவர்களே, எனது எண்ணங்களை முடிவுரையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சோதிட பதிவு நிறைவுற்றாலும், இன்னும் சில் விசயங்கள் பேசப்படவில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக சனி பிடிப்பது. சிவ பெருமானுக்கே சனி பிடிக்க சென்றதாகவும், அதனால் அவர் ஓடி ஒளிந்ததாகவும், பித்தனாக மாறியதாகவும் கதைகள் இருக்கின்றன, சனி சிவனைப் பார்த்து கெ. கெ எனச் சிரித்தாதகவும் , அதாவது நான் பிடிக்க வந்ததற்கே, நீ பல்வேறு அவதிகளையும் அடைந்தாய் ஒரு வேளை பிடித்திருந்தால் உன் கதி என்ன என்று சொன்னதாகவுன் புராணபடங்களிலும், சமீபத்திய விக்ரமாத்திதன் சீரியலிலும் காட்டப்பட்டது ( இதல்லாமா பார்கிறீர்கள் ? என்ற கின்டலை நானும் ரசிக்கிறேன்).

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், சோதிடத்தை நம்பி, சோதிட பரிகாரம் செய்பவர்கள் எண்ணிப் பார்பார்களா, தாங்கள் நம்பும் கடவுள்களே, சோதிட பலன்களிலிருந்து தப்பியவர்கள் இல்லை என்று !

எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி ?

இது ஒரு வழக்கு சொல்லோ அல்லது பழமொழியோ, எதுவாகவும் இருந்து விட்டு போகட்டம், கருத்து இது தான், இந்து தெய்வத்தில் எந்த தெய்வம் சக்தி வாய்ந்தது,

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஐயப்பனா ?
சென்ற நூற்றாண்டில் காளியாக இருந்து வெங்கடேசனாக மாறிய திருப்பதி வெங்கடாஜலபதியா ?
( ஆதாரம் , இந்து மதம் எங்கே போகிறது , நக்கீரன் - தாத்தாச்சாரியார் )
கோபத்தையும் ஆசையும் தனித்துக் கொள்ளத் தெரியாமல் கோவித்துக் கொண்டு ஆண்டியான பழனி ஆண்டவரா ?

அல்லது திடீர் புகழ் மேல்மருவத்தூர் இன்ன பிற,

பல்வேறு கடவுள்கள் எதற்கு, ஒன்றை காட்டிலும் ஒன்று சக்தி வாய்ந்ததா ? அப்படி என்றால் சக்தியற்ற ஒன்றை கட்டிக்கிட்டு அழுவானேன் ? எண்ணிப்பார்பார்களா ?

தருமி அவர்களே, நீங்கள் பில்லி சூனியத்தைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று வேண்டு கோள்வைக்கிறேன்.

இந்த பில்லி சூனியம் - சோதிடம், கடவுள் சக்தி எல்லவற்றையும் தூக்கி சாப்பிடுவதாக நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

சம்மட்டி

சம்மட்டி Says:
April 15th, 2006 at 10:15 am
//இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//
தருமி அவர்களே, எனது எண்ணங்களை முடிவுரையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சோதிட பதிவு நிறைவுற்றாலும், இன்னும் சில் விசயங்கள் பேசப்படவில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக சனி பிடிப்பது. சிவ பெருமானுக்கே சனி பிடிக்க சென்றதாகவும், அதனால் அவர் ஓடி ஒளிந்ததாகவும், பித்தனாக மாறியதாகவும் கதைகள் இருக்கின்றன, சனி சிவனைப் பார்த்து கெ. கெ எனச் சிரித்தாதகவும் , அதாவது நான் பிடிக்க வந்ததற்கே, நீ பல்வேறு அவதிகளையும் அடைந்தாய் ஒரு வேளை பிடித்திருந்தால் உன் கதி என்ன என்று சொன்னதாகவுன் புராணபடங்களிலும், சமீபத்திய விக்ரமாத்திதன் சீரியலிலும் காட்டப்பட்டது ( இதல்லாமா பார்கிறீர்கள் ? என்ற கின்டலை நானும் ரசிக்கிறேன்).

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், சோதிடத்தை நம்பி, சோதிட பரிகாரம் செய்பவர்கள் எண்ணிப் பார்பார்களா, தாங்கள் நம்பும் கடவுள்களே, சோதிட பலன்களிலிருந்து தப்பியவர்கள் இல்லை என்று !

எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி ?

இது ஒரு வழக்கு சொல்லோ அல்லது பழமொழியோ, எதுவாகவும் இருந்து விட்டு போகட்டம், கருத்து இது தான், இந்து தெய்வத்தில் எந்த தெய்வம் சக்தி வாய்ந்தது,

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஐயப்பனா ?
சென்ற நூற்றாண்டில் காளியாக இருந்து வெங்கடேசனாக மாறிய திருப்பதி வெங்கடாஜலபதியா ?
( ஆதாரம் , இந்து மதம் எங்கே போகிறது , நக்கீரன் - தாத்தாச்சாரியார் )
கோபத்தையும் ஆசையும் தனித்துக் கொள்ளத் தெரியாமல் கோவித்துக் கொண்டு ஆண்டியான பழனி ஆண்டவரா ?

அல்லது திடீர் புகழ் மேல்மருவத்தூர் இன்ன பிற,

பல் வேறு கடவுள்கள் எதற்கு, ஒன்றை காட்டிலும் ஒன்று சக்தி வாய்ந்ததா ? அப்படி என்றால் சக்தியற்ற ஒன்றை கட்டிக்கிட்டு அழுவானேன் ? எண்ணிப்பார்பார்களா ?

தருமி அவர்களே, நீங்கள் பில்லி சூனியத்தைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று வேண்டு கோள்வைக்கிறேன்.

இந்த பில்லி சூனியம் - சோதிடம், கடவுள் சக்தி எல்லவற்றையும் தூக்கி சாப்பிடுவதாக நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

சம்மட்டி

Geetha Sambasivam Says:
April 15th, 2006 at 3:48 pm
ஜோதிடம் என்பது ஒரு முழுமையான சாஸ்திரம். தன் தேவைக்காக மற்ற இடத்திலிருந்து அது எதையும் எதிபார்க்கவில்லை. அப்படி அதை நம் முன்னோர்களும் மகான்களும் உருவாக்கவில்லை.ஒருத்தருக்கு ஊரும் பேரும் தெரிந்தாலே போதும். ஜாதகம் கணிக்கலாம். அதற்கு” நஷ்ட ஜாதக கணிதம் “என்று பெயர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.பகுத்தறிவு உள்ள மனிதனுக்குத்தான் ஜாதகம் ஜோசியம் எல்லாம் தேவை. ஏனென்றால் மனிதன் தான் தப்புப் பண்ணுவான், பண்ணுகிறான்.இதை விஞ்ஞானமாகப் பார்த்தால் கூடக் கடைசியில் ஆன்மீகத்தில் தான் போய் முடியும்.விஞ் ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானம் வளரும். உதாரணம்; எல்லா விஞ்ஞானிகளுமே ஆன்மீகவாதிகளாக இருப்பதுதான்.மற்றபடி உங்கள் பதிவுகளால் என் அறிவு வளருகிறது. நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam Says:
April 15th, 2006 at 4:22 pm
வானில் ஏற்படும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் மனநிலை சரியில்லாதவர் கூட அமாவாசை, பெளர்ணமி நாட்களில் வித்தியாசமாக நடந்து கொள்வது யாராலும் மறுக்க முடியாது.அப்படி இருக்கும்போது விண்ணில் சுற்றும் கோள்கள் மனிதனின் நடத்தைக்கும் அவன் வாழ்க்கைக்கும் காரணமாக ஏன் அமைய முடியாது?

தருமி Says:
April 15th, 2006 at 8:37 pm
சம்மட்டி,
நன்றிக்கு நன்றி.
இந்த பில்லி சூன்ய விவகாரமெல்லாம் பற்றி அதிகமாகத் தெரியாதே. அதில நம்ம knowldege எல்லாம் நம்ம தமிழ் சினிமாக்களிலும், மெகா சீரியல்களில் இருந்து தெரிந்து கொண்டவைகள்தான்! தெரிந்தவர்கள் (உங்களுக்கு..?)எழுதினால் தெரிந்து கொள்ளலாம்.

தருமி Says:
April 15th, 2006 at 8:44 pm
Geetha Sambasivam,
வானில் ஏற்படும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில்…”// G force of moon அப்டின்னெல்லாம் என்னவோ சொல்லுவாங்களாமே…அது மாதிரி விளக்கங்கள் எல்லாத்தையும்தான் எங்கள மாதிரி ஆளுங்க விஞ்ஞானம் அப்படி என்கிறோம்.

“விண்ணில் சுற்றும் கோள்கள் மனிதனின் நடத்தைக்கும் அவன் வாழ்க்கைக்கும் காரணமாக ஏன் அமைய முடியாது? இதற்கு என் விளக்கம் என் பதிவுகளில் இருக்கிறதே. நீங்கள்தான் இப்போ பதில் சொல்லணும்.

தருமி Says:
April 15th, 2006 at 8:56 pm
Geetha Sambasivam,

விஞ் ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானம் வளரும். // - அப்டியா? (பிதாமகன் சூர்யா மாதிரி சொல்லிக்கோங்க!)

உதாரணம்; எல்லா விஞ்ஞானிகளுமே ஆன்மீகவாதிகளாக இருப்பதுதான்.// - மறுபடியும் ஒரு “அப்டியா?”

மற்றபடி உங்கள் பதிவுகளால் என் அறிவு வளருகிறது.//-கேக்கவே எவ்வளவு சந்தோஷமாயிருக்கு !

நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். // - தாமதமானாலும், எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

தருமி Says:
April 15th, 2006 at 9:00 pm
ஞானவெட்டியான்,
நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தை மட்டுறுத்தாது பதிவுக்கு அனுப்பிய பிறகும் இங்கு வரவில்லை; ஏனென்று தெரியவில்லை. வழியில் எங்கேயோ “காக்கா தூக்கிப் போச்சு”

ஞானவெட்டியான் Says:
April 15th, 2006 at 9:31 pm
அன்பு அம்மையீர், கீதா சாம்பசிவம்,

//ஜோதிடம் என்பது ஒரு முழுமையான சாஸ்திரம்.//

இரண்டாம் கருத்து இல்லை.

//தன் தேவைக்காக மற்ற இடத்திலிருந்து அது எதையும் எதிபார்க்கவில்லை. அப்படி அதை நம் முன்னோர்களும் மகான்களும் உருவாக்கவில்லை.ஒருத்தருக்கு ஊரும் பேரும் தெரிந்தாலே போதும். ஜாதகம் கணிக்கலாம். அதற்கு” நஷ்ட ஜாதக கணிதம் “என்று பெயர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.//

நட்ட சாதகம் என்பது வேறு. ஒருவன் சோதிடனிடம் வருகிறான். வந்து அந்த அறையில் எந்த இடத்தில் அமர்கிறான் எனப் பார்க்கவேண்டும். அந்த அறையைப் 12 கட்டமாக்கி, அதில் சோதிடன் அமர்ந்த இடத்தை இலக்கினமாக்கி, கோட்சாரப் பலனைக்கொண்டு அவன் எதற்க்காக வந்துள்ளான் எனக் கணித்துச் சொல்வதே “நட்ட சாதகம்”. எடுத்துக்காட்டாக, 5ம் இடத்தில் அமர்ந்தால் அவன் குழந்தைப் பேறு பற்றி வினவ வந்துள்ளான் எனவும், 6ம் இடத்தில் அமர அவன் நோய் நொடிகளையும், எதிரிகளால் தொல்லை பற்றியும் சாதகம் பார்க்க வந்துள்ளான் எனவும் கொள்வர்.

இது எவ்வளவு உண்மை என வினவ, “எனக்குத்தெரியாது” என்பதே விடை.

swamy red bull Says:
April 15th, 2006 at 10:19 pm
Arrumaiyana paathevu anbaree

ungaludaya inthaa ulaipaal konjamavadu thirunthi irrupargal endru nambuhiren

தருமி Says:
April 15th, 2006 at 11:08 pm
ஞானவெட்டியான்,
நன்றி.
ஆமா, என்ன மாதிரி ஆளு, உங்கள மாதிரி ஆளுட்ட ஐடியா கேட்டுட்டு அந்த ஜோசியரிட்ட போய் குண்டக்க மண்டக்கன்னு உக்காந்து…கன்னா பின்னான்னு கேட்டா… ரொம்ப “நட்ட” ஜோதிடமா ஆயிடாது..?

தருமி Says:
April 15th, 2006 at 11:12 pm
swamy red bull,
konjamavadu thirunthi irrupargal …”// என்னங்க நீங்க…உங்க ஜாதக அமைப்பைப் பார்த்தா, நீங்க ரொம்ப optimisticஆன ஆளுமாதிரி தெரியுதே ரொம்ப தப்பு தப்பா நம்புவீங்கன்னும் தெரியுது..

இந்த உங்க ‘செங்காளை’ பெயருக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமா..?

ஞானவெட்டியான் Says:
April 16th, 2006 at 6:57 am
அன்பு தருமி,
//ஆமா, என்ன மாதிரி ஆளு, உங்கள மாதிரி ஆளுட்ட ஐடியா கேட்டுட்டு அந்த ஜோசியரிட்ட போய் குண்டக்க மண்டக்கன்னு உக்காந்து…கன்னா பின்னான்னு கேட்டா… ரொம்ப “நட்ட” ஜோதிடமா ஆயிடாது..? //

கை காட்டுற வேலைக்கெல்லாம் போறதில்லீங்க. வம்பு வேண்டாம்.

தருமி Says:
April 16th, 2006 at 6:02 pm
ஞானவெட்டியான்,
நீங்க போக வேண்டாம்; நாங்களே உள்ள இழுத்திட மாட்டோமா..?

swamy red bull Says:
April 16th, 2006 at 7:35 pm
//இந்த உங்க ‘செங்காளை’ பெயருக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமா..?//

swamy sankara…(or) premaa..(or)sachi…(or)sandra… ippadi peyar vaithukondal eppadiyum erandu varudathil paalana party endru ullathuki poturanga

so ivangakita escapeahurathuku ippadi oru getup….

how is it ???

தருமி Says:
April 16th, 2006 at 9:51 pm
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க
பேசாம செங்காளைன்னு மட்டும் பேரை வச்சுக்கிட்டு, ‘ஸ்வாமி’யை ட்ராப் பண்ணிர்ரது நல்லதுன்னு தோணுது. எப்போ யார் எதுக்கு உள்ளே போறதுன்னு யாருக்குத் தெரியும்..சொல்லுங்க

Geetha Sambasivam Says:
April 16th, 2006 at 9:54 pm
I have to confirm about the” Nashta Jathaka Ganitham” and try to give the right answer to Mr. Gnanavettiyan. Without confirming it will not look good. Anyway I thank him for the new approach in the “Nashta Jathaka Ganitham”.Till today I did not hear about this method.

தருமி Says:
April 17th, 2006 at 8:41 am
Geetha Sambasivam,& கோபி,
உங்கள் இருவருக்குமே ஒரு கேள்வி; ஏற்கெனவே கேட்டதுதான். திரும்பவும் கேட்கிறேன்: ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி - last but one para - வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…

Sam Says:
April 17th, 2006 at 5:38 pm
தருமி சார்,

உங்கள் கேள்விக்கு விரிவான பதில் நாளை அனுப்புகிறேன். நீங்கள் கேட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்பதால் மலைத்துப் போய் பேசாமல் இருந்து
விட்டேன். கடைசி கேள்விக்கு மட்டும் நாளை பதில் அனுப்புகிறேன்.

அன்புடன்
சாம்

தருமி Says:
April 17th, 2006 at 10:23 pm
sam,
பயத்தோடு’ எதிர்பார்க்கிறேன் — விரிவான பதில் என்று சொன்னதால் வந்த பயம்

துளசி கோபால் Says:
April 18th, 2006 at 2:29 am
தருமி,

சோதிடம் சரியா, இல்லே பித்தலாட்டமான்னு இன்னும் புரியலைங்களா? 13 பதிவுகள். நல்லாதான் இருந்துச்சு.

நானும் ஒரு சமயம், மகளுடைய ஜாதகத்தைப் பார்க்கணுமுன்னு ஒரு ‘நல்ல, நம்பகமான’ ஜோசியரைப் பார்க்க
நண்பர்மூலம் ஏற்பாடு செஞ்சு நேரம் வாங்கி வச்சிருந்தேன். மொதநாள் முழுவதும் மன உளைச்சல். போறதா வேணாமான்னு.
அப்ப நெருங்கிய தோழி சொன்னாங்க, வேணாம்னு. ஏன்னு யோசனைச் செஞ்சுக்கிட்டே அதை பத்தி விவாதிச்சோம்.

நல்லதா சொல்லிட்டாருன்னா மனசுக்குச் சந்தோஷமா இருக்கும். ஒருவேளை எல்லாம் நெகட்டிவ் பாய்ண்ட்ஸ்னு
இருந்தா, அதை நினைச்சுக்கிட்டே இன்னும் மனசு கஷ்டம் ஆயிருமுல்லே?

நம்மளை இந்த பூமிக்குக் கொண்டுவந்த கடவுள் நம்மைக் காப்பாத்தட்டும். இதைவிட அவருக்கு வேற என்ன வேலை?னு
முடிவுசெஞ்சுக்கிட்டு அந்தஜோசியர் அப்பாயிண்ட்மெண்டைக் கேன்சல் செஞ்சுட்டேன்.

ஆனா ஒண்ணுங்க, கைரேகை சாஸ்த்திரம் இருக்கு பாருங்க. அதை நம்பலாம். நம்ம வாழ்க்கை நிகழ்ச்சியே இருக்கு.
நேரம் கிடைக்கறப்ப ஒரு பதிவாப் போடலாமுன்னு இருக்கேன்.

தருமி Says:
April 18th, 2006 at 8:51 am
எல்லாம் நல்லா சொல்லிட்டு கடைசியில ஒரு விஷயத்தில இப்படி சொல்லீட்டீங்களே
ஏன் அது மட்டும் exempted
தொண்ணூறுகளில் கட்டாயம் வெளிநாடு போகப் போகிறேன் என்ற ஒரு நிலையில், தவறிப்போனது. அப்போது என் ரேகை பார்த்து, ஒரு X - mark இருந்தாதான் போக முடியும்; அது உனக்கு இல்லை; அவ்வளவுதான் அப்டின்னாங்க. (நீ மட்டும் ஏன் கைரேகை பார்த்தாய் என்று கேட்பீர்களே; நானாகப் போகவில்லை. அதோடு அப்போவெல்லாம் இவ்வளவு தீர்க்கமான கருத்துக்கள் கிடையாது.) அப்படி சொன்னது பொய்த்துப் போனதே இது எப்டி இருக்கு…

Sam Says:
April 18th, 2006 at 9:00 am
• மேற்கூறிய கேள்விகள் இந்த ஜாதகமெல்லாம் கணிதம், விஞ்ஞானம் என்று கூறுவதற்கு எதிர்க் கேள்விகளாகக் கேட்கப்பட்டவைகள். அவைகளை கூட விட்டு விடுவோம். நடப்புக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும். ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்று (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்/ நெஞ்சில் கைவைத்து…!!!) கூறத்தான் முடியுமா? விஞ்ஞான முறைப்படி பெரிய, ஒழுங்கான, முறையான statistics கூட வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள நடப்புகளை வைத்தே பார்ப்போமே. என் பார்வையில் எல்லாம் ஒரே மாதிரிதான்…நல்லதும் நடக்கிறது; அல்லதும் நடக்கிறது. தனிமனித குண நலன்கள்தான் முக்கியமாய் இருக்கிறதேயொழிய எங்கேயோ உள்ள நட்சத்திரங்களும், கிரஹங்களும் உங்களையோ என்னையோ ‘கண்டுக்கிறதே இல்லை’! அது பாட்டுக்கு அது வேலைய பாத்துக்கிட்டு போகின்றன. நீங்களும் அவைகளை விட்டுவிடுங்களேன் பாவம்!!

தருமி சார்,

பெத்தவங்க எல்லாருமே தன் பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்னு தான் நினைக்கிறாங்க.நம்ம ஊர்ல இன்னும் அப்பா அம்மா பார்த்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க. காதல் கல்யாணம் பண்ணிக்கிறவங்களயோ ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு
கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பத்தி நான் பேச வரல. மாப்பிள்ளை பெண் பார்க்கும் போது இரண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கான்னு, எதிர்காலம் எப்படி இருக்கும்ன்னு தெரிங்சுக்கத்தான் சோதிடம். எந்த சாதகத்த எடுத்துப் பார்த்தாலும் ஏழாம் இடம் வாழ்க்கைத் துணையைப் பத்திச் சொல்லும். பன்னிரண்டாம் இடமும் ஆறாம் இடம் இன்னும் சில விவரங்கள் சொல்லும். செவ்வாய்தோஷம்ன்னு இன்னொன்னு சொல்வாங்க. சோதிட விதிகளின் படி இது நிறையப் பேர் சாதகத்தில இருக்கும். இத சரிப்படுத்த இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள சாதகரை திருமணம் செய்யச்
சொல்றாங்க. இது மட்டுமில்ல, நட்சத்திரப் பொருத்தம், அந்தப் பொருத்தம் இந்தப் பொருத்தம்ன்னு நிறைய பார்ப்பாங்க.

சில பேருக்கு உள்ளுணர்வு சாதகமெல்லாம் பார்க்க வேண்டாம் தேவையிலைன்னு சொல்லும். அவங்க அவங்க வழில போகட்டும். ஒரு கணவன் மனைவிக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லைன்னு வச்சுக்கிவோம். மருத்துவர் கருத்தரிக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லீட்டார். அவங்க சோதிடத்த அணுகிறாங்க. அவங்க கிட்ட நான் போய் ஏங்க சோதிடத்தயெல்லாம் ஏன் நம்புறீங்கன்னு எப்படிச் சொல்ல முடியும். கொஞ்ச நாள் தான் உலகத்தில இருக்கப் போறோம். நமக்கு நம்பிக்கை
இருக்கிறத அணுகித்தான், தீர்வு வருதான்னு பார்ப்போமே! சோதிடத்தில சில வகைப் பாவங்களுக்குத்தான் பரிகாரம் கிடையாது. நிறைய சாதகக் குறைகளுக்கு பரிகாரம் உண்டு.

ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கும் சாதகமெல்லாம் தேவையில்லை. பாடகர் யேசுதாஸ் சபரி மலைக்குப் போய் வந்த பின் தான் தனக்குப் பையன் பிறந்ததா சொல்லியிருப்பார்.

நுகர்வோர் புத்திசாலித்தனமா இருக்க வேண்டியது அவசியம். இந்த கணி காலத்தில நிறைய படிக்கக் கிடைக்குது. தெருல இறங்கி நடக்கிறதுக்கு சோதிடம் பார்க்கணும்னா பயித்தியம் தான்
பிடிக்கும். வாழ்க்கையில முக்கியமான விசயத்துக்கு மட்டும் சோதிடத்த அணுகணும்னு வைச்சிட்டு மத்த வேலய பார்க்க வேண்டியதுதான்!

அன்புடன்
சாம்

துளசி கோபால் Says:
April 18th, 2006 at 9:35 am
தருமி,

X - mark இருந்தா தப்புன்னுதானெ அர்த்தம்? நான்போய்
வாத்தியாருக்குச் சொல்லித்தரேன் பாருங்க

அதான் வெளிநாடு போகலை.

அது டிக் மார்க்கா இருந்தாத்தான் வெளிநாடு. இல்லேன்னா வெளியூர் போவீங்க.

அது சென்னையாவும் இருக்கலாம்

தருமி Says:
April 18th, 2006 at 8:47 pm
துளசி,
“அதான் வெளிநாடு போகலை…”//
- அதான் போய்ட்டு வந்துட்டம்ல (வைகைப் புயல் ஸ்டைல் போட்டுக்கங்க)

தருமி Says:
April 18th, 2006 at 8:50 pm
கொழப்புறீங்க கொழுந்து…

என் கேள்வி இன்னும் அந்தரத்தில நிக்குது…:”ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.”

கமல் Says:
April 18th, 2006 at 9:07 pm
//ஆனா ஒண்ணுங்க, கைரேகை சாஸ்த்திரம் இருக்கு பாருங்க. அதை நம்பலாம். நம்ம வாழ்க்கை நிகழ்ச்சியே இருக்கு.//

கைரேகை சாஸ்திரம்னா? நாடி ஜோசியமா? எப்படி பேர் கண்டு பிடிக்கிறாங்கங்கிற குழப்பத்தை நீங்களாவது தீர்த்து வையுங்களேன்!

நன்றி
கமல்

Sam Says:
April 18th, 2006 at 10:00 pm
//என் கேள்வி இன்னும் அந்தரத்தில நிக்குது…:”ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.” //

தருமி சார்,

இந்தியாவில இன்னும் திருமணம்ன்கிறது இரண்டு பேர்களுக்கு இடையில மட்டுமில்லாமா இரண்டு குடும்பங்களுக்கு இடையே பாலமாயிருக்கு. பின்னாடி சிக்கல் வந்தாலும் பேசாம
அனுசரிச்சுப் போங்கன்னு சும்மா சொல்லிட்டுப் போயிடுவாங்க. சாதகம் பார்த்துப் பண்ணும் போது பெண்ணையோ பிள்ளையையோ பார்க்காமலேயே இந்தத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியும். இந்த சிக்கலை தவிர்ப்பது பெத்தவங்க பிள்ளைங்களுக்கு செய்யக் கூடிய
உதவி.
வாழ்க்கை எல்லா சந்தர்ப்பத்திலும் சீரா போகும்ன்னு உறுதியா சொல்ல முடியாது. கொஞ்சமோ,அதிகமோ தடுமாற்றம் வருமான்னு தெரிஞ்சுக்கதான் சோதிடம்.
எப்படிப் பொருத்தம் பார்க்கிறாங்க என்பது பத்தி பெரிய பதிவு எழுதணும்.
எங்கிட்ட ஒருத்தர் ஒரு சாதகத்தைக் காமிச்சு, அதுல எழு, பன்னிரண்டு, ஆறு எல்லாம் பாதிக்கப்பட்டிருந்துன்னா, உங்க வாரிசுக்கு வேற வரனைப் பாருங்க, மத்த காரணங்களுக்காக
அவசரப் படாதீங்கன்னு சொல்லீடுவேன்.

அன்புடன்
சாம்

தருமி Says:
April 19th, 2006 at 2:56 pm
:headbanger:

தருமி Says:
April 19th, 2006 at 3:20 pm
ஏன் இந்த ஸ்மைலியெல்லாம் வரவே மாட்டேங்குது :headbanger:
:yahoo:
:ATTACK:

Geetha Sambasivam Says:
April 19th, 2006 at 3:53 pm
நான் உங்கள் post script and the last but one para இரண்டையும் மூன்று நாளாகத் திரும்பத் திரும்பப் படித்தேன். இளைஞர்களின் மூட நம்பிக்கைக்குக் காரணம் தெரியவில்லை. மற்றவற்றிற்குத் தகுந்த பதில் இருக்கிறது. நான் நாளை வெளிஊர் போவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். பதில் நீளமாக இருக்கும் என்பதால் வந்து தருகிறேன்.

தருமி Says:
April 19th, 2006 at 10:28 pm
கொழுந்து சாம் சொல்றது என்னன்னா,

Hi Sam,

I didn’t get your response! If you take the horoscopes of say thirty married couples,
happily or not, and give it to an astrologer ( a good one ) to analyze, he will be able to tell you which one’s are happily married, which one’s have problems, and what kind of problems.
People who choose their spouses as in a love marriage, intuitively know that their partner is the right one for them.

People who have no faith in God, and people who have full faith in God, both create their own
reality within the framework of their Horoscope. People who seek advice are the one’s who
have faith in God, but also a need a second opinion and looking for remedies. These are
the people who do NOT want to play the Russian roulette with their lives.

Unfortunately there are astrologers who exploit the weakness in an average person for their personal gain, bring bad name for the study of horoscopes.

Hope this answers your question! If not please re phrase the question and I will try one more
time. I didn’t want to leave a lengthy response in English in Tamizmanam.

Regards
Sam

தருமி Says:
April 19th, 2006 at 11:31 pm
* சாதகம் பார்த்துப் பண்ணும் போது பெண்ணையோ பிள்ளையையோ பார்க்காமலேயே இந்தத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியும்.அதத்தான் நான் மறுபடி மறுபடி கேட்கிறேன்; அப்படியெல்லாம் சொல்ல முடிந்தால் சாதகம் பார்த்து நடக்கிற கல்யாணங்கள் எல்லாமே ஓஹோன்னு இருக்கணுமே; இருக்கா?

* …தடுமாற்றம் வருமான்னு தெரிஞ்சுக்கதான் சோதிடம்.// அப்போ சாதகம் சோதிடம் பார்த்தால் தடுமாற்றங்கள் இல்லாம, ‘வண்டி’ நல்லா ஓடும் அப்டிங்கிறீங்க; இல்லையா? நடப்பில அப்படி இல்லையே, அய்யா!

* if you take the horoscopes of say thirty married couples,
happily or not, and give it to an astrologer ( a good one ) to analyze, he will be able to tell you which one’s are happily married, which one’s have problems, and what kind of problems. i may say that any good astrologer will not be able to say that. it is my word against yours; both of us say this based on our belief.

* ..bring bad name for the study of horoscopes.” just read what தொப்புளான் has said in his comment

தருமி Says:
April 19th, 2006 at 11:35 pm
கீதா சாம்பசிவம்,
இளைஞர்களின் மூட நம்பிக்கைக்குக் காரணம் தெரியவில்லை”//- நான்கூட ‘மூட’ என்று அவைகளை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

bon voyage!