Wednesday, October 26, 2022
1190. I SALUTE BRAHMINS ……
Thursday, October 20, 2022
1189. இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம் - 1
Tuesday, October 18, 2022
1188. ஒரு முக்கோணக் காதல் கதை
ஒரு முக்கோணக்
காதல் கதை
பல வருஷமாகவே பாஸ்போர்ட் படம் எடுத்தாலும் அதிலயும் பல்லைக்
காமிச்சிக்கிட்டே படம் எடுக்கிற பழக்கம் வந்து போச்சு. சிரிச்ச மூஞ்சுன்னு நாலு
பேரு சொல்லணுமாம். அதுக்காக அப்படி. கடவாய்ப் பல்லு போச்சா .. இருந்தாலும்
சிரிச்சிக்கிட்டே இருந்தேன். சைடில் இருந்த இரண்டு பல் கழண்டுகிட்டு எங்கேயோ
ஓடிப்போச்சு. சிரிச்சா ஓட்டைப் பல் தெரிந்தது. நான் சிரிச்சா ஓட்டைப் பல் ஓவரா
சிரிச்சிதா ... அதான் ஓரங்கட்டிட்டேன் நம்ம சிரிப்பை.
அப்படி சிரிப்புத் துறவறம் பூண்ட என்னை மீண்டும் தைரியமாக
போட்டோவுக்கு மட்டுமல்லாமல் எப்போதும் சிரிக்க வைத்த பல் வைத்தியருக்கு நன்றி.
இதுக்கும் முக்கோணக் காதலுக்கும் என்ன தொடர்புன்னு
கேக்குறீங்களா? பல் வச்ச பிறகு வந்த பிரச்சனைகள் சில இன்னும் தீராமல் இருக்கு.
இன்னும் மூன்று characters, அதாவது மூன்று கதாபாத்திரங்கள் அவர்களுக்குள் முட்டி மோதிக்
கொண்டிருக்கிறார்கள். யார் யாருன்னு கேக்குறீங்களா? என்
பற்கள், நாக்கு, மூளை ...மூன்றும்
இன்னும் ஒட்டியும், வெட்டியும் தங்களுக்குள் உறவாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
பற்கள் நல்ல
ஷேப்போடு பொருந்தியாச்சு. சிரிச்சா முழுசா பல்லு தெரிஞ்சாலும் நல்லாவே
இருக்கு. வீட்டில் பாஸ், பிள்ளைகளுக்கும் திருப்தி தான். ஆனா மூளை
இன்னும் செட்டில் ஆகலை. ஏன்னா முந்தி எப்படி கடவாய்ப் பற்கள் வேலை செய்தது என்பது
மூளைக்கு சுத்தமா மறந்தே போச்சு. இப்போவும் சோற்றைக் கடிக்கும் போது பல்லோடு பல்
மோதுவது புதுசாகத் தெரிகிறது. ஏதாவது கடலை மாதிரி கடித்துச் சாப்பிடும்போது
பல்லின் பள்ளங்களில் ஒட்டியிருப்பது போல் ஓர் உணர்வு. கண்ணாடியில் பார்த்தால்
அப்படி ஒன்றும் ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் தொட்ட குறை .. விட்ட குறை
என்று அங்கே ஏதேதோ இருப்பது போல் மூளைக்குக் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இதுபோல்
பல காட்சிப் பிழைகள். இதெல்லாம் பழக இன்னும் சில நாள் ஆகலாம் என்கிறார் நம்
மருத்துவர்.
சும்மா
இருக்கும் போது மேற்பற்களும் கீழ்ப்பற்களும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன.
இப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்பும் இருந்ததா என்று மூளை யோசிக்கிறது. அப்படித்தான்
இருந்திருக்குமாம். எனக்குத் தெரியவில்லை.மூளையைப் போய் சுரண்டிப் பார்த்தேன். பதில்
சொல்லத் தெரியவில்லை அதற்கு.
நாக்கு சும்மா
இருன்னு சொன்னாலும் கேக்கிறதில்லை. பல்லைச் சுத்தி சுத்தி வருது. அப்படியே பல்லை
ரொமான்டிக்காக மெல்லத் தடவுது.
பல்லின் உள்ளும் புறமும் வழு வழுன்னு இருக்கு. முந்தியெல்லாம்
இப்படியெல்லாம் பல்லு வழுவழுன்னு இல்லையேன்னு நாக்குக்கு கவலை. ஆனாலும் விடாமல்
பல்லைத் தடவிக்கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ‘தடவல் காதல்’ அவர்கள்
இருவருக்குள்ளும் நடந்து கொண்டே இருக்குமோ தெரியவில்லை. தடவித் தடவி மூளைக்குப் பலவித குழப்பங்களைத்
தொடர்ந்து நாக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
Saturday, October 08, 2022
1187. பல்லு போய் .. பல்லு வந்துச்சு ... டும்.. டும் ..
ஏறத்தாழ
ஒரு மாத காலமாக பல் மருத்துவரிடம் சென்று
வந்து கொண்டிருக்கிறேன். ஆகவே பலமுறை நினைவுகள் வாய், பல் என்று அப்பகுதிகளைப் பற்றியே சுற்றி வந்து கொண்டிருந்தன. இன்று எனக்குப்
“புதிய” பல்லும் “வளர்ந்து” விட்டது. விதியைப்
பாருங்களேன் .. நான் தான் முதலில் பிறந்தேன். பிறந்ததிலிருந்து ஒரே நிறம் தான் எனக்கு.
ஆனால் பாருங்கள் இந்தப் பற்களை! எனக்குப் பின்னால் தான் அவை பிறந்தன. வெள்ளையாக இருந்த
பல் காலங்கடந்ததும் மஞ்சள் கலருக்கு வந்தது. நான் கலர் மாறாமல் இருக்கிறேன். அது கலர்
மாறியது .. பிறகு ஏறக்குறைய அனைத்தும் பயனில்லாமல் விழுந்து தொலைத்தன. போனால் போகுது
என்றும் இருக்க முடியாமல் வைத்தியரிடம் போனேன். அவர் புதிதாக பற்களை “முளைக்க” வைத்து
விட்டார். ஆகவே என் பற்கள் மட்டும் – கிறித்துவ மொழியில் அல்லது christian parlance-ல்
சொல்வதென்றால் BORN AGAIN. இந்துத்துவத்தில் சொல்வதென்றால் த்விஜாஸ் (dvijas) - இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றேதான்!
அடேய் சாம்... பரவாயில்லைடா நீ! பல்லில் கூட மதத்தைக் கொண்டு
வந்து சேர்த்திட்டியே!! - இது என் மைண்ட் வாய்ஸ்
சொன்னது!
சரி .. எங்கே ஆரம்பித்தேன். நினைவுகள் வாயையும் பல்லையும்
சுற்றியே வந்து கொண்டிருந்ததல்லவா? பல் வேலை முடிந்ததும் பிள்ளைகளுக்கும்,
நண்பர்களுக்கும் ‘புதிய பல்’ பற்றிய செய்திகளை அனுப்பி வைத்தேன். நண்பன் வைத்தி உடனே தொலைபேசினான். பல்லைப் பற்றிக் கேட்டான். அப்போது நான் ஆச்சரியப்பட்ட
ஒரு விசயத்தை அவனிடம் சொன்னேன்: 32 பல்களுக்கிடையே ஒரு நாக்கு. எப்படித்தான் பல்லின்
கடியிலிருந்து எப்போதும் ஜாக்கிரதையாகத் தன்னைக் காத்துக் கொள்கிறது என்ற என் ஆச்சரியத்தை
அவனிடம் சொன்னேன். அதோடு ... சுற்றி அத்தனை எதிரி நாடுகள் சூழ்ந்திருந்தாலும் நடுவே
உள்ள சின்ன நாடு – இஸ்ரேல் – எப்படித் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறதல்லவா
.. அது போல் என்றேன். உடனே ஒரு பதில் வந்தது அவனிடமிருந்து:
இஸ்ரேல் பலம் மிக்க நாடு. அதனால் தான் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக்
கொள்கிறது. நாக்கும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது;, அது flexible-ஆக இருப்பதால் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக்
கொள்கிறது.
இரண்டும் சரிதான். இல்ல ?
பின்னிட்டான்ல .... !!!