Tuesday, December 26, 2006

194. LET'S HIT THE NAIL....***

*


*


Let's hit the nail....
right on its head !


No..no..

Let us hit the nailS
right on their headS



*

'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation'
-Malcolm X-


*

பார்ப்பனீயமே இன்றுள்ள சாதீயக் கொடுமைகளுக்கு அடிமைத்தளம் அமைத்துக் கொடுத்த சனாதன தர்மத்தை அன்றிலிருந்து இன்றுவரையும் கட்டிக் காத்து, நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. கல்வியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதலிடத்தைத் தங்களுக்கென்றே வைத்துக் கொண்டு அக்கல்வியால் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியா உண்மை.

சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட சமூக மாற்றங்களினாலும், ஓரளவு சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளாலும் தங்கள் வெளிப்படையான (overt) அடக்கு முறைகளை விடுத்து, புதிய வியூகம் வகுத்து தங்கள் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் எடுத்த புது முயற்சிகள் அவர்களைப் பொறுத்தவரையில் சரியானதே. அரசாங்க வேலைகள் என்பதிலிருந்து ஆசிரியர், வழக்கறிஞர்கள் என்று பெருவாரியாக இருந்த இந்த சமூகத்தினரின் அடுத்த குறி மருத்துவர்கள் என்று ஆகி, பின் ஆடிட்டிங், வங்கி வேலைகள் என்று மாறி, பெரும் வியாபரங்களில் தொடர்ந்து, ஆடல் பாடல் என்றிருந்து, இன்று மென் பொருளாளர்களாகவும் நிரந்து நிறைந்து இருப்பது அவர்களது flexibility - கால மாற்றங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி எப்போதும் தங்கள் முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் திறமைக்குச் சான்றுகளாகும். அவர்களைப் பொறுத்தவரை இதைத் தவறென்று கூற இயலாதுதான். ஏற்கெனவே கிடைத்த கல்வியறிவால் இந்த தகவமைப்பை (adaptability) பெற்று தங்கள் சமூகத் தரத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு விழுந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டும் அதி அக்கறையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மீடியாக்களின் ஆளுமையை முழுவதுமாகக் கைக்குள் வைத்துக் கொண்டு சமூக அளவு கோல்களையும், மொத்த சமூகத்திற்கான கருத்துப் படிமானங்களையும் வகுக்கும் அவர்களது திறமை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

NAIL: 1

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதே இப்போதைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகிறது. ஆனால் இது தெருவில் நடக்கும் சண்டையல்ல. இதனை எதிர்கொள்ள வேண்டிய இடமும், முறையும் முழுமையாக வேறு. பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.

ஆனால் இதை விட்டு விட்டு இன்று நடக்கும் சாதீய பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அச்சாதியினரைக் கை காண்பிப்பதும், அதற்காக அவர்களைச் சாடுவதும் எந்த அளவு சரியாக இருக்கும்? தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டியவைகள் இன்னும் அவர்களைப் போய் சேருவதில்லை. அரசு தரும் உதவிகளைப் பற்றிய அறிவும், புரிதலும் இல்லாத தலித் மக்களையே நாம் காண்கிறோம். அதோடு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளோ சொல்லி மாளாதவை.

சமீபத்தில் மகாராட்டியத்தில் கலியாஞ்சியில் நடந்த கொலைவெறியாட்டங்கள், பீகாரில் செத்த பசுவின் தோலையுரித்ததற்காகக் கொல்லப்பட்ட நான்கு தலித் இளைஞர்கள், நம்ம ஊரில் நடந்த திண்ணியம், வெண்மணி வெறியாட்டங்கள், அவ்வளவு ஏன் 10 ஆண்டுகளாக தலித்கள் என்பதாலேயே பஞ்சாயத்துத் தலைவர்களாக அவர்களை வரவிடாதிருக்க வைத்த அரசியல் விளையாட்டுக்கள் - இவை
எல்லாவற்றிற்குமா பார்ப்பனீயத்தையும், அந்த சாதிக்காரர்களையும் காரணம் காட்டிக் கொண்டிருக்கப்
போகிறோம். That will be absolutely like whipping the wrong horse.
அவர்கள் ஆதி காரண கர்த்தாக்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு அந்த வரலாற்றுக் காரணத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் ஏற்படுவது இன்னொரு மிகப்பெரிய தவறான பின் விளைவு: பார்ப்பனீயத்தைத் திட்டிக் கொண்டே, இன்று அதைவிடவும் கீழ்த்தரமாகவும், கொடூரமாகவும் தலித்துகளை சிறுமைப்படுத்துவதும், கொடுமைப் படுத்துவதும் மற்ற 'நடு' சாதியினர் என்பதே மறைந்து விடுகிறது; மறைக்கப்பட்டு விடுகிறது. முன்பே ஒரு பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.

கல்லெறியும், கண்டனமும் வேறு சாதியினர் மேல்தான் விழும் என்பதாலோ என்னவோ, இந்த நடு சாதியினர் தலித்துகளை இன்றும் மிகக் கடுமையாக நடத்தி வருவதே கண்கூடு. செய்வதைச் செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக உயர்த்திக் கொண்டவர்களைத் தாக்கி அவர்களும் எல்லோருடன் சேர்ந்து கோஷங்கள் போடுவதாகத்தான் தெரிகிறது! அதோடு நான் எனது அந்த முந்தியப் பதிவில் சொன்னது போல, எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. இந்த மனப்பான்மைதான் இந்த 'நடு' சாதியினரை தலித்துகளைப் போட்டி மனப்பான்மையோடும், அதனால் விளைந்த பொறாமைக் கண்ணோட்டத்தோடும் பார்க்க வைக்கிறது. இதன் விளைவுகளாகவே தலித்துகளின் மேல் நடக்கும் வன்முறைகளை நான் காண்கிறேன்.

உயர்த்திக் கொண்டவர்கள் 'தங்கள் வேலையைப்' பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்க,
மற்ற சாதிக்காரர்கள் தங்களுக்குள் பொறாமை கொண்டு, பொருது கொண்டு ஒவ்வொருவரும் தங்கள்
தங்கள் சமூக நிலைக்குக் கீழேயுள்ளவர்களை நோக்கி தங்கள் வன்மத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதும்தான் இன்றைய நிலை.

இந்த நிலையில் இந்தக் கீழ்த்தரச் செயல்களுக்கு மூவாயிர, நான்காயிர ஆண்டு வரலாற்றைச் சொல்லி அந்த உயர்த்திக் கொண்டவர்களையே சாடிக்கொண்டிருப்பதை விடவும், இன்றைய தேவை யார் ஒரு கொடுமையைத் தலித்துகளுக்கு எதிராகச் செய்கிறார்களோ அவர்களைப் "பெயரிட்டு", அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன. மீடியாக்களில் தலித்துகளின் மீது "caste hindus" / "ஜாதி இந்துக்களின்" வெறியாட்டம் என்றுதான் வரும். (அப்படியானால், தலித்துகள் என்ன சாதியில்லா இந்துக்களா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? இரண்டாவதுதான் சரியென்பது என் எண்ணம்.) யார் இந்த "caste hindus" / "ஜாதி இந்துக்கள்" என்று யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. இது போன்ற தவறு செய்தவர்களே இன்னொரு
இடத்தில் மனித உரிமை, தலித்துகளின் தளையறுப்பு, சாதி வெறிக்கு எதிர்ப்பு - என்று பல வெத்துக் கோஷங்களைப் போட்டுக்கொண்டு உத்தமர்களாக வேடமிட அனுமதிக்கக் கூடாது. குற்றம் செய்தவர்களின் சாதிய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு அவர்களின் நிஜ முகங்களை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.

NAIL: 2

'குற்றமே செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்ற கதை போலல்லாமல் இனியாவது குற்றம் செய்தவர்களை வெளியே சமூகத்திற்குத் தெரியும்படி கொண்டுவர வேண்டுவது அவசியம். குற்றம் செய்தவர்களைச் சமூகத்தின் முன் காண்பிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குற்றம் புரியும் சாதிக்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர மாட்டார்களா? அந்தச் சாதி அமைப்பிலே உள்ள சிலரேனும் மனசாட்சியின் உறுத்தலால் தங்கள் மற்ற சாதிக்காரர்கள் வரம்பு மீறுவதை கண்டித்து அவர்களை மாற்ற முயலமாட்டார்களா? பல ஆண்டுகளாக பாப்பாபட்டி இன்னும் மற்ற இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலே நடக்க விடாமல் செய்து வந்தும் அந்த கிராமங்களில் 'பெரும்பான்மை சாதி'யினரின் எதிர்ப்பு என்றே எழுதி வந்தனர். இப்போதுதான் ஓரிரு ஆண்டுகளாக கள்ளர் இன மக்களே இதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகப் பேசவும், எழுதப்படவும் செய்யப்பட்டது.இப்போது நடந்த மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

இப்படி சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவதால் ஒரு சில விருப்பமில்லா பின் விளைவுகளும் ஏற்படலாம். ஆயினும் இதைச் செய்தே ஆக வேண்டும்; அதுவே குற்றமிழைப்பவர்களை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரும்.

சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? ஆகவே, சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள். ஒன்றில், ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவைகளை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ விடாதபடி கண்காணிக்க வேண்டும்; இன்னொன்று, அவர்களைக் கீழ்படுத்திச் சிறுமைபடுத்தும், கொடுமை படுத்தும் மற்ற சாதியினரிடமிருந்தும் காக்க வேண்டும். இருமுனைப் போராட்டம் இது. இதில் இரண்டு பட்ட பார்வை தேவை. ஒன்றின் மீது மட்டும் "கண் வைத்து" மற்றொன்றை கண்டு கொள்ளாமல் செல்வதும் தவறாகப் போய்விடும். முதலாவதற்கு வார்த்தைகளும் வம்புகளும் தேவையில்லை; 'சத்தமில்லாமல்' நடந்தேறும் காரியங்களைக் கவனித்து எதிர்வினைகளை முறையாக ஆற்ற வேண்டிய தேவை அதிகம். இரண்டாமாவதில்தான் எழுத்துக்களுக்குப் பயன் இருக்கும்.

NAIL: 3

இதையெல்லாம் விடவும் தலித்துகள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு சொல்லி ஒற்றுமையின்றி இருக்கும் வரை அவர்களின் முயற்சிகள் எந்தப் பயனுமில்லாமல்தான் இருக்கும். அவர்கள் முதலில் தங்கள் 'வீட்டைச்' சீர்செய்து கொண்டு ஒரே முனைப்போடு தங்கள் உயர்வுக்காகப் போராடினாலே அதில் அர்த்தமும் இருக்கும்; பலனும் இருக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் போராடுவது என்ற நிலை மாறி, தாங்கள் எழ வேண்டும் என்ற தீவிரம் அவர்கள் மனத்தில் எழவேண்டும். அவர்களை ஒன்றுபட்டு எழ வைப்பதற்கு அவர்கள் மனத்தில் அந்த அக்கினிக் குஞ்சு எப்போது விழுமோ ...?


*
டிசம்பர் 26, 2006-ல் பதிவு செய்து. இன்று (08.01.2007 நேரம்: இரவு 9.40) 86 பின்னூட்டங்களுக்குப் பிறகு இப்பதிவைப் பொருத்தவரை என் ஏமாற்றத்தை ஒரு பின் குறிப்பாக சேர்க்கிறேன்.

இப்பதிவில் என் நோக்கம் நாமெல்லோருமே ஏதோ ஒரு வகையில் சாதிப்பிரச்சனைகளுக்குக் காரணமாயுள்ளோம். அதில் தீர்வு காண முதலில் நாம் செய்த, செய்யும் தவறுகளைக் கண்டு பிடித்து அவைகளை நிறுத்தும்வரை, திருத்தும் வரை விடிவில்லை என்பதால் சாதிய மூன்று படிநிலையைச் சார்ந்தவர்கள் முன்னால் உள்ளவைகளாக நான் நினைத்தவைகளை இங்கு பதிந்தேன். அதிலும் இரண்டாம் நிலை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் தரப்பட
வேண்டும் என் நினைத்தேன்.

ஆனால், முதல் பிரிவினரைப் பற்றிய என் இரு பகுதிகளில் வரலாற்று உண்மைகள் என நான் நினைக்கும் முதல் பகுதி மட்டுமே விவாதப் பொருளாகப் பார்க்கப்பட்டு அதனையொட்டிய பின்னூட்டங்களே நிறைய வந்துள்ளன. ஆச்சரியமாயிருக்கிறது.

ஏறத்தாழ இரண்டாம் மூன்றாம் ஆணிப் பகுதிகள் பற்றி பேச ஆளே காணோம். இதுவும் ஆச்சரியமும், வருத்தமுமாயிருக்கிறது.

விடியலுக்கு இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது.


*

***இப்பதிவு 01.01.2007 பூங்கா இதழில் இடம் பெற்றுள்ளது. (7)

*


*

Thursday, December 21, 2006

193. உதவிக்கு ஒரு முகவரி

*

*

ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் - செந்தழல் ரவி

தொடர்பான மற்றைய பதிவுகள்:

வெட்டிப் பயல்

பொன்ஸ்




நமது பதிவர் உலகம் நம் சமூகத்தின் மூளையாகவும், இதயமாகவும் இருக்க வேண்டுமென்ற என் ஆசையைப் பல இடங்களில் பதிந்து வருகிறேன். நாம் மூளையாக இருக்கப் போகிறோமோ இல்லையோ, இதயமாக எப்போதும் இருந்து வருகிறோம் என்பதற்குரிய நிரூபணங்கள் நித்தம் நித்தம் நம் பதிவுலகத்தில் நடந்து வருவது கண்டு மிக்க சந்தோஷம்.

செந்தழல் ரவி ஏற்றி வைத்த தழல் - ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் - கனன்று எரிவது கண்டும், அதற்கு வெட்டிப் பயலும், பொன்ஸும், செல்லாவும், ஞான வெட்டியானும் துணையாய் வந்திருப்பதும் மிக அழகு.

ரவியின் பதிவில் on-line transaction-க்குரிய தகவல்கள் I.C.I.C.I. வங்கி எண் தரப்பட்டுள்ளது. ஞானவெட்டியானின் வங்கி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காசோலை / DD அனுப்புவர்களுக்கு அவரது வீட்டு முகவரி கொடுக்கப்படவில்லையே என்று ஞானவெட்டியானையும், ரவியையும் தொடர்பு கொண்டேன். இருவருமே நாளை காலைதான் இந்த தகவலைத் தங்கள் பதிவுகளில் தரக்கூடிய நிலையில் இருந்தமையால் நான் இப்போதே அந்த தகவலைத் தருவதற்காக இப்பதிவை இப்போது இடுகிறேன். ஒரு அணிலின் வேலை பார்த்ததில் ஒரு சின்ன தனிப்பட்ட மகிழ்ச்சி.



ஞானவெட்டியானின் வீட்டு முகவரி:


N. JEYACHANDRAN,
4 / 118-1, N.S. NAGAR,
kARUR ROAD,
DINDUGAL
624 001



*


*

Monday, December 18, 2006

192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY***

*

*
ஒரு சீரியஸான கேள்வியைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

தெக்கிக்காட்டான் 'புதைக்கணுமா? எரிக்கணுமா?' அப்டின்னு கேட்டு ஒரு பதிவு போட்டார். எரிக்கணும் அப்டிங்கிறதுக்கு ஓட்டுப் போட்டாச்சு. அது எல்லாம் முடிஞ்ச பிறகு நடக்கிறதுக்கு உள்ள விஷயம். இப்போ அதுக்கு முந்தி நடக்கிற விஷயம் பத்தினது.

கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு.

வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாமா கூடாதா என்பதுதான் விவாதப் பொருள். ஒரு இளைஞர் மட்டும் என்னோடு கொஞ்சம் உடன்பட்டார். ஆக 50:50 கூட இல்லை; ஒரு 75:25 -ன்னு வச்சுக்குவோம்.


*


* உங்களைப் பெத்து, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கின பெற்றோரை கடைசிக் காலத்தில் கூடவே வைத்திருந்து காப்பாத்துறத விடவும் பிள்ளைகளுக்கு வேறு என்ன பெரிய கடமை இருக்கு?

* பெத்தவங்களை இல்லங்களுக்கு அனுப்புவது செய்நன்றி கொல்றது இல்லியா?

* அப்படி அனுப்பிச்சா அந்த வயசான காலத்தில அவங்க மனசு என்ன பாடு படும்?

* இதே மாதிரி நீங்க பொறந்ததும் உங்கள அனாதை விடுதியில் சேர்த்திருந்தா நீங்க என்ன ஆயிருப்பீங்க?

* பெத்த குழந்தைகளை நல்லா வளர்க்கிறது பெத்தவங்களோட கடமைன்னா, பெத்தவங்களை கடைசிக் காலத்தில் மனங்கோணாம நல்லா வச்சுக்கவேண்டியது பிள்ளைகள் கடமையில்லையா?

-- இப்படியெல்லாம் ஒரு கட்சி.


*


இன்னொரு கட்சியில் --

* பெத்தவங்க பிள்ளைகளை உருவாக்கணும் அப்டிங்கிறதையும், கடைசிக் காலத்தில் பெத்தவங்களை பிள்ளைகள் தங்களோடு வைத்துப் பராமரிக்கணும் அப்டிங்கிறதும் ஒன்றல்ல. வெறு செண்டிமென்ட் வச்சுக்கிட்டு இதைப் பேசக்கூடாது.

* பிள்ளைகளை வளர்க்கிறது, அதுவும் அவங்க சின்ன வயசுல அவங்கள சுமக்கிறதில் பெற்றோருக்கு வலியிருப்பதில்லை; சந்தோஷம்தான். படுத்துக் கொண்டு பிள்ளையை தன் நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டிருக்கும்போது பிள்ளை அசிங்கம் செய்தாலும் எந்தப் பெற்றோரும் முகம் சுளிப்பதுண்டா என்ன? அதை நினைவில் வைத்து பிள்ளை வளர்ந்த பிறகு அதை சந்தோஷமாய் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்ளாத பெற்றோர் யார்? ஆனால் வயதான தாயோ தகப்பனோ படுக்கையே எல்லாமுமாய் ஆகும்போது அதை சாதாரணமாய் - சந்தோஷமாக இல்லாவிட்டாலும் - எடுத்துக் கொள்ள முடியுமா? எடுத்துக் கொண்டாலும் எத்தனை நாளைக்கு அந்தப் பணியை முகம் சுளிக்காமல் செய்ய முடியும்?

* பிள்ளைகளைக் கூட விடுங்கள்; பேரப் பிள்ளைகளை நல்லாயிருக்கும்போது கொஞ்சி விளையாடிய தாத்தா, பாட்டி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானால் எந்த பேரப்பிள்ளை இப்போதும் தாத்தா பாட்டியைக் கொஞ்சும்?

* அதைவிடவும் அவர்கள் காலத்துக்குப் பிறகு தாத்தா பாட்டி நினைவு வந்தாலே அந்தக் கஷ்டமான காலங்கள் அதற்கு முந்திய நல்ல இனிய நினைவுகளைக் கூட அழித்து விடுமே. தாத்தா பாட்டி என்றாலே பின்னாளில் அந்தக் கஷ்டப் படுத்திய நாட்கள்தானே பேரப்பிள்ளைகளின் நினைவில் வரும்.அது தேவையா? அதைவிடவும் இனிய நினைவுகளை மட்டுமே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மனதில் தங்க வைக்கவேண்டியது பெரியவர்களின் கடமையல்லவா?

* வயதான காலத்தில் எதற்காக மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டும்? காசு கொஞ்சம் கொடுத்து இல்லங்களில் இருந்தால் நாம் பிள்ளைகளுக்குப் பாரமாக இல்லை என்ற நினைவே சந்தோஷம் கொடுக்காதா?

* பிள்ளைகள் சிறுசுகளாக இருக்கும்போது அவர்களுக்காகப் பெற்றோர்கள் பல 'தியாகங்கள்' செய்திருக்கலாம். அதற்காக இன்று பிள்ளைகளும் அதேபோல் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் வாழ்க்கையும், பாசமும் வெறும் வியாபாரமாகி விடாதா? நேற்று உனக்குக் கொடுத்தேன்; இன்று நீ எனக்குக் கொடு என்பதா வாழ்க்கை. நேற்று உன்னைத் தாங்கினேன்; இன்றும் நான் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன் என்பது தானே நல்ல உறவாக, பாசமாக இருக்க முடியும்?

* இல்லத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளோடு பாசமாக இருக்க முடியாதா, என்ன? படிக்கிற காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிள்ளைகளை விடுவதைப் போலத்தானே இதுவும்.

* ஒரு காலத்தில் நம் சமூகத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அப்போது வயதான பெற்றோரை வீட்டோடு வைத்திருப்பது எளிதாயுமிருந்திருக்கும். அப்போது அதுதான் சரியானதாயிருந்திருக்கும். ஆனால் இன்று nuclear family என்றான பிறகு, வாழக்கை ஒரு விரைந்த ஒன்றான ஆன பிறகு என்னையும் உன் தோளில் தூக்கி கொண்டே போ என்று பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் சொல்வது எந்த அளவு சரி? மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற்போல் மக்கள் மனநிலையும் மாற வேண்டாமா?

* உண்மையிலேயே பிள்ளைகள் மேல் பாசம் உள்ள பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்குவதற்கு தாங்களாகவே பிள்ளைகளக் கட்டாயப்படுத்தியாவது தயாராக வேண்டாமா?


*

இதில் நான் இரண்டாவது கட்சி..
இப்போ சொல்லுங்கள்.. நீங்கள் எந்த கட்சி?


*
***இப்பதிவு 25 Dec. 06 பூங்காவில் இடம் பெற்றுள்ளது. (6)
*

Wednesday, December 06, 2006

191. திரு. மாசிலாமணிக்கு சமர்ப்பணம்***

*


*


இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது, இதைப் பதிவேற்றியதும் அதனை திரு.மாசிலாமணி அவர்களின் பார்வைக்குக் கொண்டு வரவேண்டுமென நினைத்திருந்தேன். நிச்சயமாக ஏதாவது அதற்குப் பயனிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதிவேற்றும் முன்பே அவரது மரணச் செய்தி வந்து விட்டது. ஆராதனா,தெக்கிக்காட்டான் இவர்களது பதிவுகளின் மூலம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டது அவர்மேல் நான் வைத்த மரியாதையைக் கூட்டுவதாக இருந்தது. அவரது ஆங்கிலப் பதிவில் ஒரிரு முறை பின்னூட்டம் மூலம் சந்தித்தது மட்டுமே அவரோடு என் தொடர்பு. இருப்பினும்,"லஞ்சம் தவிர்; நெஞ்சு நிமிர்" என்ற அவரது தமிழ்ப் பதிப்பின் தலைப்பே அவர்பால் எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அவரது அகால மரணத்தால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் பதிவை அன்னாரின் நினைவுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* * * * * * *


*

*

சமீபத்தில் காஞ்சி அருகே ஆட்டோ ஒன்று ரயிலில் மோதி 15 பேர் அந்த இடத்திலேயே உயிரழந்தார்கள். அந்த சமயத்தில் எழுத நினைத்து விட்டுப் போனது இது. மிகவும் சோகமான ஒரு விஷயம். குடும்பமாகப் பலர் இறந்தது மிக்க வேதனையாக இருந்தது. எப்படி நாமெல்லோருமே ஒட்டு மொத்தமாக சட்ட திட்டங்களை மீறுவதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதே அப்போது என் நினைவுக்கு வந்தது. ரயில் வரும்போதும் தாண்டிப் போனது அந்த ஆட்டோ ட்ரைவரின் தவறு என்று மேலோட்டமாகச் சொல்லுவதை விடவும் இந்தப் புத்தி நம் எல்லோரிலும் நீக்கமற நிறைந்திருப்பதையே நினைவுபடுத்துகிறது. respecting the law of the land என்ற ஒரு மனப்போங்கு நம்மில் வெகு சிலருக்கே உள்ளது. போக்குவரத்து அடையாள விளக்குகளுக்குக் காத்திருக்கும்போது இதை நன்றாகவே பார்க்க முடியும். பச்சை விளக்கு வரும் வரை நீங்கள் நின்றால் அங்கு நிற்கும் போலீஸ்காரர் முதல் அனைவருமே உங்களை ஏதோ ஒரு அபூர்வ பிராணியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். ஆக, அந்த ஆட்டோ ட்ரைவர் விதியை மீறி தன் விதியையும், தன்னோடு இருந்த மிகப் பலரின் விதியையும் முடித்துவிட்டார். இறந்தவர்கள் பாவம்தான்; அவர்களின் உறவினர்களும் பாவமே.

ஆனால் மாநில அரசு ஐம்பதாயிரமும், ரயில்வே பத்தாயிரமும் இறந்தவர்களின் உறவினர்களுக்குக் கொடுப்பது எதற்காக? ரயில்வே கொடுத்ததைக் கூட குறை சொல்லவில்லை; மாநில அரசு எதற்காக இந்த வள்ளல் தன்மையைக் காண்பித்துள்ளது?

அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு விபத்திற்கும் - என்ன காரணத்தால் ஏற்பட்ட விபத்தானாலும் அரசு இதுபோல் நஷ்ட ஈடு தருமா? தரணுமா? மழை பெய்யும்போது காருக்குள்ளேயிருந்து இறந்து போன அந்த நான்கு மென்பொருள் துறை ஆட்களுக்கும் கொடுக்கலாமே.

இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும்போது அரசு பணம் கொடுப்பதற்குப் பதில் அந்த நேரத்திலாவது நாம் எல்லோரும் எப்படி சிறு சிறு விதிகளை, அதுவும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது போன்ற செய்திகளை மக்களினூடே பரப்புவது நல்ல சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதை விட்டு விட்டு இந்த தாராள மனப்பான்மையைக் காண்பிப்பது தேவையில்லா விஷயமாயிருக்கிறது. நிச்சயமாக அத்தகைய உதவிகள் கிடைக்க வேண்டியவர்களுக்குச் சரியாகக் கூட கிடைக்காமல் போகலாம் - நெல்லுக்குப் போவதற்கு முன் எத்தனை புற்களோ..?!

பொதுவாக இந்த respecting the law of the land என்பது நம்மிடையே இல்லாது இருப்பது குறித்து சமுதாயத்தில் எந்த நிலையினருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையென்பது என் மனக் குறை. என் சின்ன வயதிலும் நாங்கள் no entry பாதைகளில் சைக்கிளை வேக வேகமாக உருட்டிச் செல்வதுண்டு. அப்போது இரு வகை எண்ணங்கள் மனத்திலிருக்கும்: ஒன்று, தப்பு செய்கிறோமே என்ற குற்ற மனப்பான்மை; இரண்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதே யென்ற பயம். இப்போது நம் யாவருக்கும் முதல் எண்ணம் நிச்சயமாக இல்லை; இரண்டாவதற்கு ஏதாவது ஒரு வழி வச்சிருப்போம்... மாட்டிக்கிட்டா பாத்துக்குவோம் என்ற எண்ணம்.. எப்படி, யாரை பாத்துக்குவோம் என்று ஆளுக்கொரு வழி.

எனக்கு ஒரு நினைப்பு: இந்த விதிகளை மதிக்கும் புத்தியை வர வைக்க ஏற்ற இடம் ரோடுகள்தான் என்று நினைக்கிறேன். stop என்று ஒரு கோடு ரோடுகளில் போட்டிருக்குமே அங்கு யாராவது சரியாக நிற்கிறோமா? அப்படி நிற்பது ஏதோ பயந்த சுபாவம் என்பது போலவும், நான் ஒரு தைரியமான ஆள் என்றோ அல்லது ஒரு புரட்சிக்காரன் போல் காட்டிக்கொள்வது போலவுமோ எல்லோரும் அந்த கோட்டிற்கு ஓரடி அளவாவது தாண்டி நிற்பதுதான் வழமை. அதுக்கு அடுத்து, பச்சை விளக்கு விழ 5-7 வினாடிகள் இருக்கும்போதே புறப்பட்டு விடவேண்டும் என்பதும் ஒரு இன்னொரு விதி. இதில் எந்த வித்தியாசமும் இருக்காது; எல்லா வயசுக்காரர்களும், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்பது போன்ற எந்த வேற்றுமையோ இன்றி பாய்ந்து விடுகிறோம். இதில் அங்கு நிற்கும் போலீஸ்காரர்களின் பங்களிப்பு வேறு. நாம் நின்று கொண்டிருந்தாலும் அவர்களே கிளம்புங்க என்று ஒட்டு மொத்தமாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டு விஷயமுமே நம் மனத்தில் ஒரு தவறான தத்துவத்தை நம்மையும் அறியாமலேயே ஊட்டி விடுமின்றது. விதிகளை மீறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை; விதிகள் மீறுவதற்கே உள்ளன என்பன போன்ற கருத்துக்கள் மனதில் நிலை பெறத்தான் இந்த வழக்கம் வழி வகைக்கும். அதே போல காத்திருக்கும் இடங்களில் வரிசையில் நிற்பது என்பது ஒரு கேவலமான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. இது போன்று சின்னச் சின்ன விஷயங்களாக நினைப்பவைகள் மக்கள் மனத்தில் ஒரு தவறான மனப்போங்கை ஏற்படுத்தாதா? சிறு வயதிலேயே stop என்றால் stop என்பதும், பச்சை விளக்கு வந்த பிறகே புறப்படவேண்டுமென்பதும் ஒருவரின் மனத்தில் பதிந்து விட்டால் அதே நினைப்பு பெரிய விதிகளைப் பொறுத்தவரையும் வந்துவிடாதா?

எனவேதான் இந்த "படிப்பு" ரோட்டில் ஆரம்பிக்க வேண்டுமென்றேன். இதைப் பள்ளிகளில் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால் அந்த சிறு பிள்ளை ரோட்டிற்கு வந்து நம்மைப் பார்த்த பிறகு 'உண்மையை'ப் புரிந்து கொள்ளாதா? அதை விடவும் சரியான பள்ளி ரோடுகள்தான். அதை எப்படி செய்வது என்றெண்ணிப் பார்த்தேன். தண்டனை என்பது போல் நல்ல ஆசான் யார்? ஸ்டாப் கோட்டைத் தாண்டுகிறாயா?; பச்சை விளக்கைத் தாண்டுகிறாயா?; வண்டி ஓட்டும்போதே செல் பேசுகிறாயா? - spot fine என்று ஒன்று இருந்தால், அதையும் ஒழுங்காகச் செய்தால் நமக்கு ஒரு பயம் இருக்காதா? ஆனால் நம்மூரில் இதில் ஒரு பெரிய பிரச்ச்னை. பச்சை விளக்கைத் தாண்டினால் 100 ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்ளுவோம். மாட்டிக் கொண்டால் நாமெல்லாம் எப்படி ஆட்கள் .. அங்கேயே பேரம் பேச ஆரம்பித்து விட மாட்டோமா? நூறுக்குப் பதில் 25 வச்சுக்கங்கன்னு நாம் ஆசை காட்டினா, பாவம் காவல்துறை ஆட்கள் என்ன ஆவார்கள் .. ஆனானப்பட்ட விசுவாமித்திரருக்கே ஒரு வீக பாய்ண்ட் உண்டே.. ஆக பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமே என்று தோன்றியது. ஆனாலும், உண்மையில் செய்ய வேண்டுமென நினைத்தால் இதைச் சாதிக்க முடியும். 3 - 5 பேர் அடங்கிய குழுக்கள் நகரின் அங்கங்கே - எங்கே எப்போது என்று யாருக்கும் தெரியக்கூடாது; எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்ற நிலை வருமாறு இருக்க வேண்டும் - இந்த தண்ட வசூலிப்பைச் செய்ய வேண்டும். லஞ்சம் வராமலிருக்க ஒவ்வொரு குழுவிலும் ஓரிரு காவல்துறை ஆட்களும், ஒரு home guard போன்ற அமைப்புகளிலிருந்து ஒருவரும், கல்லூரிகளிலிருந்து N.S.S., N.C.C. போன்றவைகளிலிருந்து ஒரு மாணவனையும் வைத்து இக்குழுக்கள் அமைக்கப் பட்டால் ஊழல் என்று பேச்சு வராமல் நடத்த முடியும்.

விதி மீறல் தவறு என்று ரோட்டில் 'சொல்லிக் கொடுக்கப் பட்டால்' நாளாவட்டத்தில் நமக்கு இன்னும் கொஞ்சம் நல்ல புத்தி வந்துவிடாதா என்ற ஆதங்கம்தான். அப்படி ஒவ்வொன்றாக கற்றுக் கொடுக்கப்பட்டு நாம் எல்லோரும் நல்ல civic sense-உள்ளவர்களாக மாறிவிட மாட்டோமா? இது கனவோ என்னவோ... ஆனால் நடந்து விட்டால்..நடந்து விட்டால் என்பதையும் விட நடந்தே ஆகணும்..

இதோடு தொடர்புடைய பழைய பதிவொன்று இங்கே...

நடத்திக் காண்பிக்ககூடிய இடத்தில் இருப்போர் யார் கண்களுக்கேனும் இது போய் சேர்ந்துவிடாதா என்ற நம்பிக்கையில்...


.
*** இப்பதிவு இப்பதிவு 11.12.2006 தேதியிட்ட பூங்காவில் இடம் பெற்றது. (5)

Sunday, November 26, 2006

190. அம்மா இங்கே வாங்க / அம்மா இங்கே வா...

*


அம்மா இங்கே வாங்க / அம்மா இங்கே வா... இதில் எது சரி?


வலது பக்கம் ஓட்டுப் பொட்டி இருக்கு; ஒண்ணு போட்டுட்டு போங்க...

கல்யாணமான புதிதில் கட்டிய மனைவியை 'வாங்க..போங்க'ன்னு மரியாதையா பேசணும்னு பெரியார் சொன்னதாக வாசிச்சப்போ, 'அதெல்லாம் எதுக்கு..வயசு நம்மளவிட கம்மி, அதுக்குப் பிறகு வாங்க போங்கன்னு எதுக்குச் சொல்லணு'ம்னு நினைச்சேன். ஆனால் இப்போவெல்லாம் எல்லோருமே மனைவியைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும்போது மனைவிக்கு மரியாதை கொடுத்தே பேசுவதைப் பார்க்க முடிகிறது. நல்ல பழக்கம்; நானும் மாறிட்டேன். என்ன அவர் சொன்னதை நாம் ஏத்துக்கிறதுக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கு.ஆனா அத சொல்றதுக்காக இப்போ இந்தப் பதிவை எழுதவில்லை.

அடுத்து இன்னொரு விஷயம். அந்த என் சின்ன வயதில் பல படித்த குடும்பங்களில் (படிக்காவிட்டாலும்தான்) டாடி,மம்மி என்று அப்பா அம்மாவைக் கூப்பிடுவது ஃபாஷனாக இருந்தது. எப்படியோ அதுவும் நல்லபடியாக அப்பா, அம்மாவாக மாறிப்போச்சு.

அடுத்து பார்த்த ஒன்று; இது கடந்த 10 ஆண்டுகளுக்குள்தான் - பிள்ளைகளைப் பெற்றோர்களே 'வாங்க..போங்க; என்று பேசுவது. சின்னக் குழந்தைகளைக் கூட. இதற்குக் கொடுக்கும் காரணம்;நாமே மரியாதை கொடுத்துப் பிள்ளைகளிடம் பேசுவதால் அவர்களும் அதேபோல் பெற்றோருக்கு மட்டுமல்லாமல் எல்லோரையும் மரியாதையாக பேசிப் பழகுவார்கள் என்பது. இதுவும் நன்றாக இருக்கிறது. அதுபோன்ற குழந்தைகள் மற்றவரைப் பற்றிப் பேசும்போது நாகரீகமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக எல்லா மாணவர்களும் தங்களுக்குள் பேசும்போது ஆசிரியர்களை எப்படிப் பேசுவார்கள் என்பது தெரியுமே. இந்தக் குழந்தைகள் எல்லோரையுமே நேரில் பேசும்போதும் சரி, மற்றபடியும் சரி நல்லவிதமாகப் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

இப்படி நிஜ வாழ்வில் நல்ல விஷயங்களாக சிலவைகள் மாறி வருவதை பார்க்க முடியும் அதே நேரத்தில் நம் திரையுலகில் இது அப்படியே உல்ட்டாவாக நடந்து வருகிறது ஏனென்று தெரியவில்லை. அதிலும் பெரிய திரையையும் விட சின்னத்திரையில் இது மிக அதிகமாகத் தெரிகிறது. இன்றைய நிலையில் சின்னத்திரை நம் வாழ்க்கையோடு ஒன்றி விட்ட நிலையில் சினிமாக்களை விடவும் சின்னத்திரை சீரியல்களே நம்மை, அதுவும் நம் குழந்தைகளை மிகவும் நேரடியாகப் பாதிக்கும் சூழல் உள்ளது. ஏனென்றே தெரியவில்லை - நம் சின்னத்திரை இயக்குனர்கள் தங்கள் படைப்புகளில் பலவற்றிலும் சின்னக் குழந்தைகளோ, வளர்ந்த பிள்ளைகளோ தங்கள் அப்பா, அம்மாவை ஒருமையில் அழைத்துப் பேசுவதாகவே காண்பிக்கிறார்கள். பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, 'நாங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கிறோம்; நடப்பதைத்தான் காட்டுகிறோம்' என்று சொல்லி தப்பிப்பதுதான் அவர்கள் வழக்கம். ஓரிரு சமூகங்களில் பெற்றோரை, குறிப்பாக அம்மாவை ஒருமையில் அழைப்பது பழக்கமாக இருக்கலாம். ஆனாலும் பெரும்பான்மையான சமூகங்களில் பெற்றோரை மரியாதையோடு அழைப்பதையே பார்க்கிறோம். பின் ஏன் நமது இயக்குனர்கள் இப்படிக் காண்பிக்கிறார்களோ தெரியவில்லை.

நம் சீரியல் இயக்குனர்களுக்குப் பெரிய சமூகக் கடமை இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் இல்லாத ஒன்றை ஏன் இப்படி பிரபலப்படுத்துகிறார்கள்? அப்படியே ஏதோ ஒரு சமூகத்தில் இருக்கிறது என்றாலும் பெரும்பான்மை சமூகங்களில் இருப்பதைப் பிரதிபலிக்கக் கூடாதா? ஏன் அந்த சிறுபான்மை மக்களின் வழக்கத்தை எல்லோரின் வழக்கமாக மாற்றும் முயற்சியா இது? இந்த சீரியல்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இதை கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? இரண்டு options இருக்கும்போது அவர்கள் ஏன் தவறான ஒன்றை இப்படி இறுகப் பிடித்துக்கொண்டு தொங்க வேண்டுமோ தெரியவில்லை.

யாராவது அவங்ககிட்ட இதைச் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

*
ஓட்டு போட்டுட்டீங்களா?
*

Thursday, November 23, 2006

189. சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள்..

.
.

THE HINDU தேதி: 23.11.'06



நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.

சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்...

* சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6% மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக
மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு
இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்?
(சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)

* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற
பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)

* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே
மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது
போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)

* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%;
அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த
மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?
மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா
ஜி.ரா.?

இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான்.
அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை
உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால்
கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ்
கொடுத்துட்டு போங்க)

* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்...



*

*

Monday, November 20, 2006

188. கொசுறுகளின் தோரணம்

.


.

கொசுறு: 1

இந்த கொசுறுவிற்கு கீழேயுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

ரோட்டுல நடக்க உடுங்க, சாமிகளா..

எங்க ஊரு நல்ல ஊரு...

விவேக்தான் உதவிக்கு வரணும்...



நித்தம் நித்தம் நான் அனுபவிக்கிறதை வேற எங்க போய் கொட்டித் தீர்த்துக்க முடியும், சொல்லுங்க... அதான் இங்கன வந்திட்டேன்.

எங்க ஊர்ல பாத்திமா பெண்கள் கல்லூரியிலிருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை இருக்கே அதுவரைக்கும் ஒரு ரோடு போகும். சென்னைக்கு கிருஷ்ணாம் பேட்டைன்னா என்னன்னு எல்லோருக்கும் தெரியும்; சென்னைக்கு  கண்ணம்மா பேட்டை மாதிரி எங்க ஊரு மதுரையில 'தத்தனேரி'ன்னா எல்லாருக்கும் தெரியும். அந்த தத்தனேரி இந்த ரோட்டின் நடு செண்டரில் இருக்கு. இந்த தத்தனேரியிலிருந்து தேவர் சிலை வரை உள்ள ஏரியா செல்லூர். topography புரிஞ்சிதா? இப்பகுதியில் ஒரு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். என் தலைவிதி நித்தம் 4 - 6 தடவை அந்த தத்தனேரியைக் கிராஸ் பண்ணியாகணும். (கிராஸ் பண்ணிதான போற; நேர அங்கேயேவா போய்ட்ட? - அப்டின்னெல்லாம் கேக்கப் படாது.) அடக்கமெல்லாம் நம்மள பண்ணப்படாது; இது மாதிரி எரிக்கத்தான் வேணும் அப்டின்னெல்லாம் நினைச்சுக்கிட்டு, நம்ம இங்க வரும் போது எப்படி இருக்கும் (அப்ப உயிரோடு இருக்கிறவங்களுக்குத்தான்..) யாரு யாரு வருவாங்க; என்னென்ன பேசுவாங்க; பாவம், அவங்க, நல்லதா பேசுறதுக்கு எதுனாச்சும் அவங்களுக்கு இருக்குமா; பாய்ண்ட்ஸ் கொடுத்திருக்கமா? அப்டின்னெல்லாம் சுகமா கற்பனை பண்ணிக்கிட்டு போறதுதான் வழக்கம். ஆனா, பல நாளு இந்த மாதிரியெல்லாம் சுதந்திரமா கற்பனையெல்லாம் பண்ண முடியாதபடி சில விஷயம் நடக்கும் பாருங்க..அதுவும் தத்தனேரி - செல்லூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் அந்த விஷயங்களைப் பத்தி சொல்லத்தான் வந்தேன்.

பழுத்த பழம் செத்தா கல்யாணச் சாவு அப்டின்னு நம்ம ஊர்ல அந்த மாதிரி சாவையே பல மக்கள் ஒரு விழா மாதிரி கொண்டாடுவாங்க..அதெல்லாம் சரிதான். கொண்டாட்டத்தை வீட்டுக்குள்ள - அட்லீஸ்ட், தெருவுல வச்சிக்கிட்டா நான் இங்க வந்து ஏன் பிலாக்கணம் பாடப் போறேன். சரி...பெருசா பாடையெல்லாம் ஜோரா கட்டுங்க...மேளதாளத்தோட தூக்கிட்டுப் போங்க...அட, அதுக்காக உங்க வீட்டு இழவ ரோட்டுல போற எல்லாரு மேலயும் எதுக்கு ஏத்தணும்னு தெரியலையே.சமீபத்தில நடந்த ஒண்ணு ரெண்டு விஷயம் சொல்றேன்; கேளுங்க.

இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னால..காலையில எல்லோரும் ஆபிஸ், ஸ்கூல், காலேஜ் போற நேரம். இவங்க குரூப் ஒண்ணு வருது. வழக்கம்போல பேயாட்டம் போட்டுக்கிட்டு மொதல்ல ஒரு 'வாட்டர்' கூட்டம். தடுக்கிறதுக்கோ,அடக்கி வைக்கவோ சில சமயங்களில் இந்த மாதிரி குரூப்புகளோடு நல்ல மனுசங்க நாலஞ்சு பேரு வர்ரது உண்டு. அன்னைக்கி அப்படி ஒரு புண்ணியாத்மா யாரும் வரலை. வழியில் உயிரைக் கைல பிடிச்சிக்கிட்டு மனுச சனம் ஒதுங்கி நிக்குது. பாடையில இருக்கிற பூவையெல்லாம் பிச்சி கூட்டத்தை  நோக்கி எறிஞ்சிக்கிட்டு வாராங்க. எனக்கு சைடுல ஒருத்தரு அவரு மகளை பைக்ல பின்னால உக்கார வச்சிக்கிட்டு நிக்கிறாரு..காலேஜுக்கு பொண்ண கொண்டு விடப் போறது மாதிரி இருக்கு. நம்ம ஆளுங்களுக்கு மூடாய் போச்சு..ஒரு மாலை.. பாதி பூ.. பாதி நாறு..எடுத்து அந்தப் பொண்ணு மேல எறியறான் ஒருத்தன்.. பாவம், பொண்ணு மேல போய் நச்சுன்னு மூஞ்சில விழுது...அந்த நாய் - sorry, அந்த boy - சிரிக்கிறான். இது பத்தாதுன்னு ரெண்டு பசங்க - அந்தக் கூட்டத்த சேந்த கேசுகள்தான்.. பைக்ல வித்த காமிக்க ஆரம்பிச்சிட்டான்...என் வண்டிக்கு நேர, அது என்ன.. கார்ட்டிங்கா இல்ல வீலிங்கா..அது மாதிரி ஏதோ கோணக்க மாணக்க பண்ண, வண்டி என் வண்டிக்கு நேர வர்ரது மாதிரி இருந்தது.. சரி..இன்னைக்கு நம்ம மாட்னோம்டான்னு நினச்சேன்.. நல்ல வேளை ..**** வண்டியிலிருந்து விழுந்ததுகள்.சந்தோஷமா இருந்திச்சி (இப்படியெல்லாம் அடுத்தவன் உழுறது பாத்து சிரிக்கப் படாதோ? மனுசத்தனம் இல்லாம பேசப்படாதோ..?) ஆனா ஒண்ணும் அடி படலை..கொஞ்சம் வருத்தம்தான்.

நாலஞ்சு மாசத்துக்கு முந்தி ஒரு தடவை... இந்த மாதிரி ஒரு இழவு ஊர்வலம்.. சிவனேன்னு ஓரத்தில நின்னுக்கிட்டு இருக்கேன். இவங்க போடற மாலைக்குப் பயந்து கண்ணாடிய ஏத்தி உட்ருந்தேன். எதிர்த்தாற் போல் வந்த ஊர்வலத் தலைவர்களில் ஒரு சுள்ளான்; இருவது வயசுகூட இருக்காது. நான் கண்ணாடிய ஏத்தி உட்டது பாத்துட்டான். அது அவனுக்குப் பிடிக்கலை. டேய்! கண்ணாடிய ஏத்திக்கிட்டுதான் வருவீகளோ அப்டின்னு கத்திக்கிட்டு பானட்ல ஓங்கி அடிக்க வந்தான். நம்ம வண்டிதான் சோப்பு டப்பாவாச்சே; வேகமா ஒரு வேப்பங்காய் விழுந்தாலும் 'டொக்' விழுகிற டப்பா. அவன் அடிக்கிற அடியில அப்படியே பள்ளம் விழுகப் போகுது; டிங்கரிங், பெயிண்டிங் அப்டின்னு அஞ்சு பத்து செலவாகப் போகுதுன்னு நினச்சிக்கிட்டேன். நல்ல வேளை ஒரு ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன்; அவர்தான் அந்தக் கூட்டத்துக்கு கண்ட்ரோலர் போலும். சடார்னு அவன இழுத்துட்டுப் போய்ட்டார். பெரிய மனசு பண்ணி, பொழச்சுப் போ அப்டின்னு அந்த ** சொல்லிட்டு போயிரிச்சி. அப்பாடான்னு எனக்கும் ஆச்சு. அந்த வழியே அடுத்த அரைமணி நேரத்தில திரும்பி நான் வந்துகிட்டு  இருக்கும்போது அதே குரூப் இப்ப எல்லா வேலையும் முடிச்சிட்டுத் திரும்பி வந்துகிட்டு இருந்தது. இப்போ ஒரே கூட்டமா வரலை. அஞ்சாறு பேரா வந்துகிட்டு இருந்தாங்க. அதில அந்தப் பயலும் ஒண்ணு. ஆனா இப்போ பூனக்குட்டி மாதிரி அலம்பல் இல்லாம ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தான். அரை மணி நேரத்துக்கு முந்தி இவந்தான் அப்படி ஆடினான்னு சொன்னாக்கூட நம்ப முடியாது; அப்படி ஒரு நல்ல பிள்ளையாய் அந்த **.

இன்னொரு வகை வீர திலகங்கள் இந்தக் கூட்டத்தில உண்டு. சரவெடி போடுவாங்க.. சரி, ஒழியுது.. ஓரத்தில நின்னு பொறுத்திருந்து போயிடலாம். சில நாய்ங்க -ச்சீ..பாய்ஸுங்க - லஷ்மி வெடியா, யானை வெடியா..? அத கையில வச்சிக்கிட்டு பத்த வச்சி கூட்டத்துக்குள்ள எறிஞ்சி ஒரு தடவ பாத்தேன். என்ன கெக்கலிப்பு அப்போ!

இதில அந்த ரோட்ல இருக்கிற ரயில்வே கிராஸிங்கல எப்பவும் ஒண்ணு ரெண்டு போலீஸ்காரங்க நிப்பாங்க. அவங்க ஏதாவது சொல்லணுமே! ஹு.. ஹும்.. ம்ம் ..கண்டுக்கிறதேயில்லை. ஏதோ அவங்களும் அந்தக் கூட்டத்து சொந்தபந்தம் மாதிரி எமொஷனலா இழவு காத்திருவாங்க. அவங்கள சொல்லியும் குத்தமில்ல.. நமக்கில்ல அறிவு வேணும். எல்லாத்துக்கும் போலீஸ்காரவுங்களா குச்சிய தூக்கிக் கிட்டு வருவாங்க?

நான் சொல்ற இந்த ரோட்டுல இன்னொரு விசேஷம் என்னன்னா, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் ராட்சச போஸ்டர்கள் - flex boards - இருக்கும். கல்யாணம், காது குத்து, வீடு திறப்பு, இப்படின்னு எதுக்கும் ஒரு போஸ்டர். அதிலெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. நல்லா இருக்கும்; பொம்பிளையாளெல்லாம் கழுத்து மறைய நகை நட்டு...(அதப் பார்த்ததும் கந்துவட்டின்னு மனசுல ஒரு எண்ணம் வர்ரதையும் சொல்லியாகணும். அது சரியோ தப்போ தெரியாது.) ஆம்பிளைங்க கொடுக்கிற போஸ், அந்த செல்போன் பேசிக்கிட்டே கொடுக்கிற போஸ் எல்லாம் நல்லா ரசிக்கலாம். என்ன, சில சமயம் பொண்ணு மாப்பிள்ளைய பாத்தா பெத்தவங்க மாதிரி தெரியும். அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி, பாத்து ரசிக்கலாம்.

ஆனால் என்ன, நடிகர் விவேக் இதெல்லாம் நல்லது இல்லை; இதுக்கு ஏதாவது அரசாங்கம் செய்ய முடியுமான்னு தீபாவளியப்போ சன் டி.வி.யில கலைஞரிடம் விசனப்பட்டு கேட்டார்.அதனால அவர கூப்பிட்டு, இந்த போஸ்டர் சமாச்சாரம் எல்லாம் எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். இந்த இழவு சமாச்சாரத்தை நீங்கதான் கொஞ்சம் மக்கள்ட்ட சொல்லி "அவரவர் இழவு அவரவருக்கு" என்ற ஒரு நல்ல philosophy -யைச் சொல்லி இந்த மக்களை நீங்கதான் திருத்தணும்னு கேக்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.

விவேக் சொன்னா கேப்பாங்க; என்னதான் இருந்தாலும் நம்ம சொந்தக்காரர் சொல்றார்னு ஒரு மரியாதை இருக்காதா,என்ன?


.

.




கொசுறு: 2

இந்த ரோட்டின் ஒரு முனையில் பாத்திமா பெண்கள் கல்லூரி இருக்கிறது. இதன் பக்கத்தில் ஒரு traffic island - மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம். சிக்கலான போக்குவரத்து உள்ள பகுதி. கொஞ்ச வருஷத்துக்கு முந்தி எந்த ஒழுங்கு முறையும் சரிப்படுத்தாத நிலை இருந்தது. பாவம், ஒரு சின்ன வயது வாலிபர்; புதிதாக வாங்கிய பைக்கில் அந்த இடத்திலேயே விபத்தில் இறந்தார். அந்த விபத்திற்குப் பின் போலீசார் அந்த இடத்தில் போக்குவரத்தைச் ஒழுங்கு படுத்தினார்கள். அதிலிருந்து இதுவரை நன்றாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை கொஞ்சம் சீர் செய்தார்கள். islands-க்கு நடுவில் இடம் விரிவாக்கப் பட்டது. எல்லாம் செய்தார்கள். ஆனால் sign boards எதுவும் கிடையாது. போலீஸ் எதுவும் கிடையாது. இப்போது நம்ம ஊரு வழக்கமான free for all -தான். யார் யாருக்கு எந்த வழி பிடிக்குதோ அந்தப் பக்கம் போய்க்கொள்ளலாம்.எப்போது மற்றொரு விபத்து நடக்குமோ தெரியாது. போக்குவரத்து காவலர்களும் அதற்காகத்தான் காத்திருக்கிறார்களோ என்னவோ. விபத்து என்று ஒன்று நடந்தால்தான் மறுபடி ஒழுங்கான விதிமுறைகளும்,sign boards-களும் வைத்து நடைமுறைப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். எங்களில் யார் தலையில் அந்த ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறானோ; யாருக்குத் தெரியும்?



கொசுறு: 3

இந்த ரோட்டில் ஐந்தாறு இடங்களில் road divider - ஆக காலி பீப்பாய்கள் வைக்கப் பட்டுள்ளன. keep left அப்டிங்கிற அடிப்படை சாலை விதியை எல்லோரும் மதிக்கவேண்டுமென்றுதான் இந்த பீப்பாய்கள் ரோட்டின் 'நடு செண்டரில்' வைக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். ஆனால் நம் மஹா ஜனங்களில் மிகப் பெரும்பான்மையர் அப்படி நினைப்பதில்லை போலும். யாரும் - போலீஸ் வாகனங்கள் உட்பட - இதை லட்சியம் பண்ணுவதாகத் தெரியவில்லை. இதுவரை இரு முறை போலீஸ் வாகன ஓட்டிகளிடமும், பலமுறை மற்ற வாகன ஓட்டுனர்களிடமும் சண்டை போட்டிருக்கிறேன் - எந்த வித பயனுமின்றி! அதில் என்ன அவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை. keep left என்ற விதியை மீறுகிறோம் என்பதைத் தவிரவும் அவர்களுக்கு இதிலெந்த வித பயனும் இல்லை; இருந்தும் பலரும் அதை 'தவறாது' செய்வதைப் பார்க்கும்போது, விதியை மீறும் "சுகத்துக்காகவே" நம் மக்கள் அப்படி செய்வதாகத்தான் தோன்றுகிறது. Is it a sort of adventurism? விதியை மீறுகிறோம் என்பதில் நம் மக்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்து விட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.



கொசுறு: 4

சாலையை இடது, வலது என்று பிரித்து வைக்கத் தான் இந்த பீப்பாய்கள் இருக்கின்றன என்ற நினைப்பில் இன்னும் இருக்கிறேன். ஆனால் இந்த பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தான் சரியாக பஸ் ஸ்டாப்புகளும் அனேகமாக உள்ளன. அரசு பேருந்துகள் சரியாக இந்த பீப்பாய்கள் இருக்கும் இடத்தில் நின்று, முழுமையாக ஒரு பக்க சாலையை அடைத்து விடுகின்றன. எனக்குள்ள பல நாள் சந்தேகங்கள் - இந்த பேருந்துகளின் ஓட்டுனர்களுக்கு சாலையை முழுவதாக மறித்து வாகனத்தை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்குமே என்ற நினைவு எப்படி வராமல் போகும்?அவர்களூம் வழிமறித்து யாரேனும் வாகனங்களை நிறுத்தினால் எரிச்சல் படத்தானே செய்வார்கள். பின் எப்படி அவர்களுக்கு 'தங்களின் முதுகு' தெரியாமல் போகிறது? ஆச்சரியமாகததான் இருக்கிறது. அட, பீப்பாய் இருக்கும் இடத்திலிருந்து சிறிது முன்னேயோ, பின்னேயோ இந்த பஸ் நிறுத்தங்களை வைக்க வேண்டுமென்ற எண்ணம் கூட இந்த போக்கு வரத்து அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனதென்ன?

யாரைத்தான் நொந்து கொள்வது? - பஸ் நிறுத்தங்களை சரியான இடங்களில் வைக்காமல் இருக்கும் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகளா? இல்லை, இடத்திற்கு ஏற்றாற் போல் வாகனங்களை முன்னேயோ பின்னேயோ நிறுத்த மனமில்லாத அரசு போக்குவரத்து வாகன ஓட்டிகளா, இந்த பீப்பாய்கள் வைக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் இஷ்டத்திற்கு வண்டிகளை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளா - யாரைத்தான் நொந்து கொள்வது...?


.
.

Thursday, November 09, 2006

187. CATCH 22* / மதவாதம் - யெஸ்.பா.வுக்கு பதில்

.

.


* the Catch-22 is a no-win situation, much like the "damned if you do, damned if you don't" scenario.

.

// பொதுவாக குழந்தைகளின் மனதில் சிறுவயதில் விதைக்கப்படும் விஷயம் நெடு நாட்களுக்கு பதிந்தே இருக்கும். இதனை மனதில் கொண்டு வி.ஹெச்.பி/ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், இசுலாமிய, கிருஸ்துவ அமைப்புகள் சிலவும் காய் நகர்த்தி வருகின்றன.// - எஸ்.பா.

மதங்களைப் பற்றிய என் பதிவுகளின் முதல் பதிவின் முதல் பாராவிலேயே இதைப் பற்றியெழுதியுள்ளேன். ஆனால் அது உங்கள் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றான ஒரு கருத்தாக இருக்கும்.

இந்து மத தீவிரவாத அமைப்புகள் பலப்பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ள தென்னவோ உண்மைதான். நானே சின்ன வயதில் மதுரையில் சாரணர்கள் மாதிரி காக்கி உடை அணிந்து, கையில் ஒரு குச்சியுடன் physical exercises செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரிந்த பகுதியில் ஒரே ஒரு சமூகத்தினர் மட்டுமே மதுரையில் இந்த அமைப்புகளில் இருந்தனர். it was a very very low key affair. ஆனால், அவைகளின் கொள்கைகளும், தீவிரத்தன்மையும் வெளியே தெரிய ஆரம்பித்ததும் அதற்கு ஆதரவு பெருகியதும் மிகவும் சமீபத்திய விளைவுகளே.

இதை 'விளைவு' என்றே கருதுகிறேன்.கிறித்துவமும், இஸ்லாமும் அவைகளின் போதனைகளுமே இதற்குரிய காரணிகளாக நான் நினைக்கிறேன். அவர்களும் இதை நினைத்துச் செய்வதில்லை. அவர்களின் மதக் கோட்பாடுகளைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருகிறார்கள். அவ்வளவே. ஆனால் அந்த மதங்கள் ஏக இறையியல் என்ற கோட்பாடு கொண்டதாகையால் இந்தப் பிரச்சனைகள்.

இந்து மதத்தினரில் இரு வகையுண்டு; ஒரு குழு தீவிரவாதக் குழு; இரண்டாவது அப்படி இல்லாத - மதங்களின் மேல் அளவுக்கதிகமான தீவிரமோ, ஈடுபாடோ இல்லாத பெரும்பான்மையோர். நீங்கள் பலர் இதில் இரண்டாவதில் வருகிறீர்கள்; இல்லையா? ஆனால், நான் சொன்ன இரு மதங்களில் இந்த இருவேறு கூட்டம் இருக்க முடியாது. அவர்கள் எல்லோருமே மதங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான எண்ணம், செயல் கொண்டவர்கள்;(இதில் எல்லோருமே என்பதை விட மிகப்பெரும்பான்மை என்பதே சரியாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. - ஜோ.) சிறுவயது முதலே அப்படி ஆக்கப் படுகிறோம். என் சின்ன வயதில் இன்னும் இந்துக்களாக இருக்கும் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் நடக்கும் பூஜையில் வைத்துப் படைக்கப் பட்டவைகளை நான் தொடவும் மறுத்து விடுவது மட்டுமல்லாமல், 'இது பிசாசுக்கு வச்சது; சாப்பிடக் கூடாது; நான் சாப்பிட மாட்டேன்' என்று சொன்னதும் - அப்படி எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருந்தது - நினைவிலிருக்கிறது. இதில் முக்கிய அம்சம் - அந்த மதக்காரர்களைப் பொறுத்தவரை அது சரி;அதுதான் சரி. அதுவே அந்த மதங்களைப் பின்பற்றுவதற்குறிய அடிப்படை முறை. For them, it is NOT fundamentalism; instead they are the basic tenets of their respective religions.

//மத நச்சு விதைகளை எல்லா மதத்தின் அடிப்படைவாதிங்ஏளும் பிள்ளைகளுக்கு விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.- ப்ரியன்.//

இதை நீங்கள் எப்படி 'நச்சு விதை' என்று கூறலாம்?
- ஒரே கடவுள் என்று சொல்லிக் கொடுப்பது தவறா?
- எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள்; எங்கள் வேதம்தான் உண்மையான வேதம். அதைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக் கொடுப்பது எப்படி தவறாகும்'?
- இது நல்வழி என்று காண்பிக்கும்போது மற்ற வழிகள் சரியான வழிகள் மட்டுமல்ல; தவறான வழியுமாகும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டாமா?
- பிள்ளைகளுக்கு வெறும் விஞ்ஞானக் கல்வி மட்டும் போதுமா?
- அவர்கள் தங்களைப் படைத்தவர் யார்? எதற்காக நம்மைப் படைத்தார்? அவரை மகிழ்விக்க நாம் எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன செய்யலாம்; எதையெல்லாம் செய்யக் கூடாது? என்றெல்லாம் சிறு வயது முதலே சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டியது பெற்றவர்களின் முதல் கடமையில்லையா?

- இதுதான் ப்ரியனின் கூற்றுக்கு இந்த மதத்தினரால் கொடுக்கப்படும் பதிலாக நிச்சயமாக இருக்கும்

“What is sauce for the goose may be sauce for the gander, but it is not necessarily sauce for the chicken, the duck,.............!

ப்ரியனுக்கு 'நச்சு விதை'யாகத் தோன்றுவது அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக, வாழ்வின், மதத்தின் அடிப்பைடை விஷயமாகத் தெரிகிறதே. கடவுளை - எங்கள் கடவுளை - அவர் சொன்ன காரியங்களை அச்சு பிசகாமல் பின்பற்ற நாங்கள் மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் கூற முடியும்? அதுவும் கிறித்துவ மதத்தின் 10 கட்டளைகளில் -அவைகள் மதத்தின் ஆதாரமான, நல்வழிப்படுத்துதலுக்கானது - முதல் கட்டளையே 'என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை' என்பது. இதைச் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? இதேபோல் இஸ்லாமில் என்னவென்று தெரியாது; ஆனால் 'இணைவைக்காதே' என்ற தத்துவத்தை அவர்கள் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? அந்த மதத்துக்காரர்களால் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு
சமயக் கல்வி தராது இருக்க முடியாது. அவ்விதமான கல்வி தரும்போது, அடுத்த மதக் கருத்துக்கள் தவறு; நம் வழியே நல்வழி மட்டுமல்ல - ஒரே நல்வழி என்று சொல்லாமல் இருக்க முடியாது.நான் கூறுவதில் நம்பிக்கையில்லையெனில், நம்பிக்கையாளர்களைக் கேளுங்கள். நிச்சயமாக நான் சொல்வதோடு அவர்கள் ஒத்துப் போவார்கள்.
(அப்பாடா! ஒரு வழியாக நம்பிக்கையாளர்கள் இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப் போவார்கள் !)

//புத்தக மூட்டையையும், பாடச்சுமைகளையும் தூக்கி சோர்ந்து போய் இருக்கும் குழந்தைகளை மதமென்னும் மாயவலைக்குள் தள்ளுவதை பெற்றோரும் மற்றோரும் விட்டொழிக்க வேண்டும். - எஸ்.பா.//

எப்படி? ஒருவேளை, 'சமயக் கல்வியைச் சிறு வயதிலேயே கொடுக்காமல் விட்டு விட்டு, நாலையும் புரிந்து கொள்ளும் வயதில் அவர்களாகவே தங்கள் தங்கள் விருப்பம் போலும், கருத்து படியும் ஏதாவது ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியுங்களேன்' என்று யாரேனும் சொன்னாலும், அதிலும் ஒரு குறையுண்டு. ரெண்டும் கெட்டான் வயதென்று சொல்லும் அந்த பதின்ம வயதில்தான் மனிதனுக்கு மதத்தின் முக்கியம் அதிகம். மதங்கள் நல்லது சொல்லி மனிதனை நல்வழிப்படுத்துகிறதோ இல்லையோ, நிச்சயமாக நான் என் மதப் பதிவுகளில் கூறியபடி நல்லாவே பயங்காட்டும் பூச்சாண்டிகளாகப் பயன் படுகின்றன. fear of god is the beginning of wisdom என்ற ஒரு பைபிள் வாக்கியம் இங்கு நினைவுக்கு வருகிறது. இந்துக்களின் அடுத்த பிறவி கீழ் பிறவியாகி விடும் என்ற தத்துவமோ, கிறித்துவர்களின் நித்திய நரகம் என்றோ, இஸ்லாமியர்களின் gehenna என்றோ ஒன்றை வைத்துப் பயமுறுத்தி, மக்களை நல்வழிப்படுத்த முயலும் முயற்சி இந்த இளம் வயதிலேயே கொடுக்கப்பட்டால்தான் கொஞ்ச நஞ்சமாவது வயது காலத்தில் / வயதான காலத்தில் மனுஷப் பிறவிகள் மதங்கள் சொல்லும் இந்தத் தண்டனைகளை மனதில் வைத்து 'கடவுளுக்குப் பயந்து' இருப்பார்கள்.

அடுத்து -

//மக்கள் மனதில் மத சகிப்புத்தன்மை என்பது வளர்க்கப்படவேண்டிய ஒன்று.-ப்ரியன் // - என்று சொல்வதைப் பற்றி.

'மத சகிப்புத்தன்மை' என்பதே ஒரு வகையில் தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம் என்று நினைக்கிறேன். தலைவலி வந்தால் சகித்துக் கொள்ள வேண்டும். அதாவது, வேறு வழியில்லாமல் ஒன்றை நாம் accept செய்து கொள்ள வேண்டும். நமக்கு அதைப் பிடிக்காது; இருந்தும் சகித்துக் கொள்ள வேண்டும் என்றால் அது ஒரு நேரம் இல்லையென்றால் இன்னொரு நேரம் கோபமாகவோ வேறு எந்த வழியிலோ வெளிப்படும் நிலை வரும். நமக்குள் இருக்க வேண்டியது religious tolerance இல்லை; தேவை relgious acceptance. அப்படி ஒன்று நமக்குள் (நமக்குள் என்பது இந்த முழு மனித குலத்திற்கும் என்று கொள்க) ஏற்பட்டால்தான் எல்லா மதத்தினருக்கும் நடுவில் சமத்துவமும், மனித நேயமும் நன்கு மலரும்.

ஆனால்,இது நடக்கிற காரியமல்ல. ஏனெனில் (மீண்டும் மீண்டும் இப்படி கூறுவதற்கு மன்னிக்கணும்..) நான் ஏற்கெனவே என் மதப் பதிவுகளில் கூறியபடி ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே தங்கள் தங்கள் மதக் கோட்பாடே சரியென்பதும், மற்றைய மதங்கள் தவறானவை,திரிக்கப்பட்டவை என்பதுமாகும். அப்படியிருக்கும் போது ஒரு ஆபிரஹாமிய மதத்தவர் அடுத்த ஒரு மதத்தினரைச் சகித்துக் கொண்டாலும் கொள்வாரேயன்றி, அவரது மதக் கோட்பாடுகளை ஒருக்காலும் accept செய்ய முடியாது; அவர்கள் மதமும் அதற்கு அனுமதிக்காது. கிறித்துவர்கள் இந்து மத நண்பர்களுக்குத் தங்கள் கடவுளர் போட்ட காலண்டர், டாலர் போன்றவற்றைக் கொடுப்பதும், அதை எந்த வித மறுப்பின்றி இந்து நண்பர்கள் வாங்கி,கொடுத்தவரின் அன்புக்காகவேனும் அதைப் பயன்படுத்தும் பண்பை என்றாவது ஒரு கிறித்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ காண முடியுமா? It is so simple; they can never ACCEPT other religions, கொடுத்தவர்களின் அன்பை மரியாதை செய்வதற்காகக் கூட. மெக்கா, ஒரு சிலுவை, ஒரு கோயில் கோபுரம் போட்ட படங்களை எந்தக் கடைகளில் காண முடியும் சொல்லுங்கள். இதில் இஸ்லாமியரையும், கிறித்துவரையும் குற்றம் கூறுவதும் அர்த்தமில்லை;ஏனெனில் அவர்கள் மதம் தரும் கட்டளை அது. அந்த மதத்தில் இருந்தால் அவர்கள் அதைப் பின்பற்றித்தானே ஆகவேண்டும்?

அப்படியானால், என்னதான் செய்வது? a zillion dollar question...!! இதற்குப் பதில் தெரிந்திருந்தால் மனித குலம் என்றோ எப்படியெல்லாமோ இருந்திருக்குமே!

* (ஆபிரஹாமிய )மதங்கள் தங்கள் கோட்பாடுகளை தங்களைக் கடைப்பிடிப்போரிடம் வலிமையோடு ஆழமாகப் பதிக்கின்றன. அக்கோட்பாடுகளை நம்பிக்கையாளர்கள் மீறுவதென்பது நம்பிக்கையாளர்களால் முடியாத ஒன்று.

* அடுத்த மதமும் கடவுளை அடைய (?) ஒரு வழியாக இருக்கக் கூடும் என்பதை இந்த மதங்கள் ஒப்புக் கொள்ளாது.

* சிறு வயதிலேயே சமயக் கல்வி போதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்களுக்கு மற்ற மதங்களை மதிக்கவும், accept செய்யவும் கற்றுக் கொடுக்கலாம்; ஆனால், அது ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது. தங்கள் மதமே சரியானது என்ற superiority complex- யோடுதான் மதக் கல்வியின் ஆரம்பமே இருக்கும்.

* இப்படி ஆபிரஹாமிய மதங்கள் தங்களின் 'சிறப்பை, உன்னதத்தை' சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டே இருந்தால், மற்ற மதத்தினரை (இந்து மதத்தவருக்கு) ஏதாவது ஒரு கட்டத்தில் எரிச்சில் மூட்டத்தான் செய்யும். அதன் ஆரம்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. R.S.S.. சங் பரிவார் இவைகளின் குரல் உயர்வது இதன் வெளிப்பாடே. Churchill இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றிக்குப் பிறகு சொன்ன வார்த்தைகள்தான் இங்கு பொருத்தம். - "This is the not the end; not even the beginning of the end; it is just the end of the beginning". அவர் நல்ல விஷயத்துக்குச் சொன்னது இங்கே கெட்ட விஷயத்துக்குச் சொல்லும்படியாகி விட்டது!

விடியும் நாட்களை நினைத்துப் பயமாக இருக்கிறது. நாளை...பொதுவாக மனித குலம், நம்மட்டில் இந்தியாவில், நம் குறுகிய சமூகத்தில் இந்த மதங்களை வைத்து நமக்குள் இருக்கும், எழப்போகும் பிரச்சனைகளை நினைத்தால்...

இளைஞர்களே...நீங்களே கேள்விகள்; நீங்களே பதில்கள்.

உங்கள் பதில் என்ன..?

*

*

Saturday, November 04, 2006

186. அமெரிக்கத் துளிகள் - II

.

.

இப்பதிவோடு தொடர்புள்ள ஏனைய பதிவுகள்:--


Don’t be nice to Desis -- ப்ரேமாலதா
Won’t Smile Back Syndrome - ஹேமந்த்.


Niceties and not so nice NRIs in US -- பாஸ்டன் பாலா

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...! -- தெக்ஸ்

பேரா. தருமி அய்யா இந்த கதை தெரியுமா? -- பால பாரதி

அமெரிக்கத் தமிழனின் அவலம்! -- செல்லா

அமெரிக்க வாழ்க்கை -- அவிட்டம்

எனது முந்திய பதிவு.


மகள் தொலைபேசியில் சொன்ன ஒரு சேதியை வைத்தும், என் நேரடி அனுபவத்தையும் வைத்து ரொம்பவும் சீரியஸாக இல்லாமல் எழுதிய முந்திய பதிவுக்கு வந்த எதிர்வினைகள் (reactions) இதைப் பற்றி சீரியஸாகவே என்னை நினைக்க வைத்துள்ளன.

ப்ரேமலதா வின் பதிவில் அவரது சொந்த அனுபவம் - மிக மிக கசப்பானவைதான் - எழுதியுள்ளது பற்றி பாஸ்டன் பாலாவின் பதிவிலிருந்தே தெரிந்தது. பிரேமலதாவின் பதிவிற்குப் பதில் ஏதும் தர முடியாதுதான். On day 1, she has met a fellow too nasty and the other guy on the second day was both cruel and stupid. She was so unlucky to have met guys of this sort. அதன் பின் வந்த பதிவுகள் அவைகளுக்கு வந்த பின்னூட்டங்கள் "இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா?" என்ற தெக்கிக்காட்டானின் கேள்வியை மிகவும் பொருளுள்ளதாக ஆக்குகின்றன.


என் முதல் பதிவிற்குக் காரணம் - நாம் பட்டிக்காட்டுத் தனம் என்று எள்ளி நகையாடியவைகள் இன்று நல்ல பண்புகளாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறதே என்பதே அது. நகரங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு ஜோக் - தியேட்டரில் யாரையும் பார்க்கும்போது 'என்ன சினிமா பார்க்க வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ, ஹோட்டலில் பார்க்கும்போது 'என்ன சாப்பிட வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ ஒரு பெரிய ஜோக்காக நமக்கு இன்று இருக்கிறது. ஆனால்,இன்னும் நம் கிராமப் பகுதிகளில் தினமும் பார்க்கும் ஒருவர், மண்வெட்டியோடு இல்லை வேறு விவசாயக் கருவிகளோடு எதிர் வரும்போது எல்லோருக்கும் தெரியும் அவர் வயல் வேலைக்குத்தான் போகிறார் என்று. ஆனாலும் 'என்ன'பா, வயல் வேலைக்கி கிளம்பியாச்சா?' என்றோ, வெள்ளையுஞ் சள்ளையுமா கிளம்பின ஆள பார்த்து 'என்ன,டவுனுக்குப் போறாப்பலையா?' என்றோ, அல்லது 'என்ன'பா, ரொம்ப தூரமா?" (எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதல்லவா?!) என்றோ கேட்பது வழக்கம். ஊர்க்காரரோடு புதிதாக யாரும் வந்தாலும், 'தம்பி, புதுசாயிருக்கே!' என்று பூடகமாகக் கேட்பதும் பல காலத்து வழக்கம். இதில் கேள்வி கேட்பதும், கேட்கப்படுவதுமே முக்கியம். தரப்படும் பதில்கள் இரண்டாம் பட்சம்தான். பட்டினத்து ஆட்கள் இதை 'சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்' என்று சொல்வதும் வழக்கம். இது போன்ற கேள்விகள் நம்ம மாடர்ன் ஸ்டைலில் 'Good morning', 'Hi!', Long time no see!, 'So long' என்று சொல்வதற்கு ஒப்பானது என்று இப்போதுதான் எனக்கும் புரிகிறது. இதுதான் எதிர்த்தாற்போல் வருபவரை நம் மக்கள் 'கண்டுகொள்ளும்'முறை.

ஆனால் இந்த நடப்புகளை முழுவதுமாக இழந்துவிட்டு இன்று "இந்தியாவில் எதிர்ப்படுவோரிடம் முகமன் கூறும் பழக்கம் இருந்ததில்லை ( பாஸ்டன் பாலா )" என்ற நகர்ப்புற வழக்கத்தை வைத்து ஒரு முடிவெடுக்கிறோமா? மேலை நாட்டுக்காரர்களின் thank you என்பதற்கு பதில் நம்மூரில் ஒரு புன்னகை இருந்தது; அனேகமாக அந்தப் பழக்கம் போயே போய்விட்டது. sorry-என்பதையும் சில body languages மூலமாகச் சொல்லி வந்தோம். யார் காலையாவது மிதித்து விட்டால், இன்னும் பலர் செய்வோமே அதுதான் நம்ம ஊர் sorry / excuse me. ஆனால் அவைகள்"'பட்டிக்காட்டுத்தனம்" என்பதாக முற்றிலும் மறக்கப்பட்டு விட்டன. சரி, புதிதாக வந்த மேலை நாட்டு பழக்கங்களையாவது பற்றிக் கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. இதனாலேயே நான் என் மாணவர்களிடம், Try to learn to say 'sorry' and 'thanks'. It would make your life happier.என்று சொல்வதுண்டு.

//நம்மவர்களின் பிரச்சினையே தானாகவே இல்லாமல் மற்றவரைப் பார்த்து காப்பியடிப்பது … கலாச்சாரம் முதல் மொழி வரை .. இது நம்மவரின் inferiority complex !?? - செல்லா. செல்லா இதை முடிவாகச் சொல்லவில்லையா என்று தெரியவில்ல; ஏனெனில் அவர் கூற்றிற்குப் பிறகு !?? போட்டு விட்டார் ??! Chella, whether we like it or not, the world is going and has gone all the way of the West - whether it is our jeans or our mental makeup. We have to accept it? Right? ஜப்பானில் எல்லோரும் அது என்ன, கிமோனாவையா அணிகிறார்கள்? நாம் என்ன நம்ம தாத்தா கட்டிய நாலு முழ அல்லது அதைவிடக் குறைந்த துணியையா கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆகவே இது தன்னிச்சையாக - நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - நடக்கும் ஒரு காரியம். no chance for any rewinding...! அதனால் இதை நீங்கள் சொல்வது போல் inferiority complex என்று கூற முடியவில்லை. We ape, of course. but who else does not?

இல்ல, செல்லா. இந்த inferiority complex என்பதெல்லாம் எங்க காலத்து விஷயம். உங்களுக்கு அந்த good old joke தெரியுமில்லையா? அமெரிக்க அம்மா தன் குழந்தையிடம் அந்தக் காலத்தில் - அதாவது எங்க காலத்தில - சொன்னது: ஒழுங்கா சாப்பிடு; இல்ல, the hungry children of India would snatch away your meal. ஆனா இப்போ உங்க காலத்தில அந்த அமெரிக்க அம்மா: ஒழுங்கா படி; இல்ல the intelligent guys from India would snatch away your jobs! - இப்படி மாறிப்போச்சு, செல்லா. அதனால உங்களுக்கெல்லாம் இன்னுமா எங்களுக்கு இருந்தது போல inferiority complex இருக்குங்றீங்க? அப்படியே இருந்துதுன்னா ரொம்ப தப்பு. We have proved what we are - at least we are not second to none. Skin colour does not matter at all. இல்லீங்களா? எங்களுக்கெல்லாம் அவங்க 'துரை மார்கள்'; உங்களுக்கு just colleagues. இல்லியா?

ஆயினும் எனக்கு விடைதெரியாத ஒரு கேள்வி: நம் ஆங்கில மோகத்திற்கு british legacy என்று ஒரு வரி விளக்கம் கூறுவதுண்டு. ஆனால் அது எப்படி நமக்கு மட்டும் இந்த மோகம்; நம் அடுத்த வீட்டு, மலையாளிகளுக்கோ, ஆந்திரர்களுக்கோ, கன்னடத்துக்காரர்களுக்கோ இல்லாதபடி நாம் மட்டும் ஏன் இந்த "மோகவலை"யில் சிக்கிக் கொண்டுள்ளோம்? என் மாணவர்களிடம் பரிட்சித்துப் பார்க்க சொன்ன ஒரு விஷயம்: ஒரு நாள் தொடர்வண்டி நிலையத்தில் சாதாரணமாக pants போட்டுக் கொண்டு தமிழில் ஒரு தொடர்வண்டி வரும் நேரத்தை அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் கேட்க வேண்டும்; அடுத்த நாள், சட்டையை tuck செஞ்சி,ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு (வேற ஆள்கிட்டதான்!) கேட்கணும்; அடுத்த நாள் அதே மாதிரி உடையோடு, eh..excuse me ...ah.. could you please tell me ..ehh.. (இவ்வளவு ஆங்கிலம் போதும்; அதன் பிறகு நம்ம தமிழ் போதும் !) இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்...? என்று கேட்கணும். - மூன்றில் எதற்கு மரியாதை கிடைக்கிறது என்று பார் என்று. நிச்சயம் இந்த மூன்றிற்கும் நம்மூரில் நல்ல வித்தியாசமான பதில்கள் வரும். ஆனால் அடுத்த ஊர் கேரளாவில் அப்படி நிச்சயமாக இல்லை; வேட்டிக்கு இன்றும் மரியாதை உண்டு; மலையாளத்துக்கும்தான். ஏன் இப்படி?

பால பாரதி, இன்னும் பலரும் சொல்லுவதை வைத்து நான் வைத்திருந்த ஒரு கருத்தை மாற்றிக் கொள்கிறென். நான் என்னவோ இது அமெரிக்காவில் உள்ள நம் மக்கள்தான் இப்படி 'பாராமுக"வித்தை பயின்றுள்ளார்கள் என்று நினைத்திருந்தேன். பாலபாரதியின் நேரடி அனுபவமும், மற்றும் வந்துள்ள பலப்பல பின்னூட்டங்களிலிருந்தும் இது தவறு; நம் ஊரிலும் அப்படித்தான் என்ற கருத்தை - கொஞ்சம் அரைகுறை மனத்துடன், அதாவது with some reservation - ஒப்புக் கொள்கிறேன். முழுமையாக ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. இன்றும் ரயில், பஸ் பயணங்களில் அடுத்து அமர்ந்திருப்பவரோடு, அவர் நம் frequency-க்கு ஒத்து வரும் ஆளாக இருக்கும் பட்சத்தில், விடை பெறும்போது ஒருவரிடம் ஒருவர் சொல்லிக்கொண்டு செல்லும் அளவுக்கு நட்பு பாராட்ட என்னால் முடிந்திருக்கிறது. ஒரு ரயில் பயண நட்பு பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலும் இன்றும் நீட்டிக்கிறது. இருப்பினும் ஒப்புக் கொள்கிறேன். ஆகவே இதை அமெரிக்கத்தனம் என்று கூறாமல் பால பாரதி சொன்னது போல, பட்டணத்து ராசா கேட்டதை ஒத்துக் கொண்டு, "தமிழ்த்தனம்" என்று அழைக்கிறேன். ஆயினும்,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எழுதியுள்ள நெல்லை கிறுக்கன், ஹரிகரன் அங்கேயெல்லாம் அப்படி இல்லை என்று கூறுவதற்கு என்ன விளக்கம் கூறுவதென்பது தெரியவில்லை. அதேபோல் ஒட்டு மொத்தமாநம் இலங்கைத் தமிழர்கள் பற்றி எல்லோரும் ஒருமித்துக் கூறும் நல்ல கருத்துக்காக அவர்களுக்கு ஒரு " ஓ " போடுவோம்!

அடுத்த கேள்வி: ஆங்கில மோகம் நமக்கு மட்டும் இவ்வளவு ஏன் என்று கேட்டேன்; அதோடு இப்போது இன்னொரு கேள்வி - மற்ற மாநிலத்தவர் போலன்றி நாம் மட்டும் ஏன் நம் 'அயலானை நேசிக்க முடியவில்லை?

//இன்று நாம் வலைப்பதிவின் மூலம் அறிமுகமாகி, முகம் பார்க்காமல் தினமும் சாட்டிங்கும் போனும் செய்து நெருக்கமான நண்பர்களாக இருக்க முடிகிறது. அது போலத்தானே நேரில் பார்க்கும் நேரங்களிலும் இருக்க வேண்டும்? //- கொத்ஸ் எல்லோரும், எல்லோருடனுமா அப்படி இருக்கிறோம்; இருக்க முடியும்? ஒத்தக் குணம், கருத்துக்கள் இவை எல்லாம் கூடி வந்தால்தானே தெரிதல் நட்பாகி அதன் பின் நெருக்கமெல்லாம் வருகிறது. ஆனால் நீங்கள் சொன்ன ஒரு கருத்தோடு நான் முழுமையாக உடன் படுகிறேன்: "அது நம் வளர்ப்பின் வெளிப்பாடு. There seems to be an inherent mistrust about others in our minds."

அப்சல் விஷயமோ, இடப் பங்கீடு போலவோ, மத விவகாரம் போலவோ இல்லாமல் நான் எழுதிய ஒரு விஷயத்தில் அதிக மன வேறுபாடின்றி நாம் இந்த சமூக நிலைப்பாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதில் நமக்கு ஒத்தக் கருத்திருப்பதாக உணர்கிறேன்! அப்பாடா...!!

ஒத்தக் கருத்து ஒரு விஷயத்தில் வந்திருச்சின்னா, அப்ப அடுத்த ஸ்டெப் - இதுக்கு நாம என்ன செய்றது? இங்க இந்த அளவு விவாதம் நடந்ததே பலருக்கும் ஒரு கண் திறப்பாக பல காரியங்கள் இருந்திருக்கும். குற்றமுள்ளவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும், குற்றம் சாட்டுவோர் வேறு ஒரு கோணத்தில் (perspective) இதைப் பார்க்கவும் முடியுமென நினைக்கிறேன். KVD சொல்வது போல '... this as a "socio psychological issue",.." என்ற அளவில் நாம் ஒவ்வொருவரும் இந்த inherent mistrust-யை விலக்க முயலமுடியாதா?


தமிழ்த் தனத்தை மாற்றுவோமா?...please.


.

.

.

Sunday, October 29, 2006

185. அமெரிக்கத் துளிகள்

இதெல்லாம் எழுதட்டா சிலர் மாதிரியெல்லாம் எப்படித்தான் நாங்கெல்லாம் அமெரிக்க போய்வந்த கதையை அரங்கேற்றுகிறது?

நியூயார்க் பக்கம்; நியூபோர்ட் என்ற இடத்திற்குப் பக்கத்தில பலமாடிக் குடியிருப்பில் மாணவ-நண்பன் - அவன் இன்னும் சின்னாளில் 'காட்டான்' என்ற பெயரில் பதிவுலகத்தில் நுழைவதாகத் திட்டம் - அவனது விருந்தாளியாக ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஒரு நாள் அவனது ஃப்ளாட்டில் நுழையப்போகும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்மணியும், அவரது குட்டிக் குழந்தையொன்றும் வெளியே வந்தார்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்து சிரித்து, 'டாடா'காண்பித்து என் 'அயலானை அன்பு செய்' என்ற தத்துவத்தை நிலைநாட்டினேன். காட்டான் ஒண்ணுமே கண்டுக்கவில்லை. ஏன்'பா என்று கேட்டேன். இதெல்லாம் எதுக்கு; நம்ம ஜோலிய நாம பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றான். சரி இது ஒரு அமெரிக்கத்தனம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு ஒரு நாள் மாலை ஸ்டார் பக்ஸ் போனோமா, அங்கே காஃபி குடித்துவிட்டு, அப்போதுதான் முதல் முறையாக நம்ம ஊரில் பச்சைப் பழம், மோரிஸ் பழம் என்றெல்லாம் சொல்லுவோமே அதே பழம், ஆனால் அழகு மஞ்சள் கலரில் வழுவழுன்னு இருந்தது. அதுக்கு முந்தி அந்த மாதிரி பழம் நம்ம ஊர்ல பார்த்ததில்லை. ஆனா அதுக்குப் பிறகு முதலில் பெங்களூரில் பார்த்தேன். அன்று அத வாங்கலாமான்னு நானும் காட்டானும் பேசினோம். அப்போ கவுண்டரிலிருந்து 'fresh பழம்தான் ,வாங்குங்க' அப்டின்னு தமிழில் ஒரு குரல். 'ஆ'ன்னு வாயப் பொழந்து பேசினவரைப் பார்த்தேன். தமிழ் மூஞ்சி; ரொம்ப friendly-ஆ எங்களைப் பார்த்தார். ஆனால் நம்ம காட்டானோ கண்டுக்கவேயில்லை. கடையை விட்டு வெளியே வந்ததும் 'ஏன்'பா, கண்டுக்கவேயில்லை' என்றேன். ஆமா, இவன் இன்னைக்கி இங்க; நாளைக்கி எங்கேயோ; இதில் என்ன பெரிசா கண்டுக்கிறது' அப்டின்னான். அடுத்த அமெரிக்கத்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் Midway Mall அப்டின்னு ஒரு இடம். சனி ஞாயிறுகளில் நானும் நம்ம சைனா நண்பரும் அங்கு சும்மாவாவது போவதுண்டு. அங்கே போய் ஒவ்வொரு சாமான்களாக எடுத்துப் பார்ப்போம். Made in China என்றுதான் நூத்துக்கு தொண்ணூரு பொருட்களில் இருக்கும் (இப்போ நம்ம ஊர்லயும் அப்படி ஆகிப் போச்சு; அப்போ அது ஒரு பிரமிப்பு) அவர் பெருமையாக அதை எனக்குக் காண்பிப்பார். அதன்பிறகு நம்ம ஊர் காசிலேயும், அவரது காசிலேயும் டாலரின் மதிப்புக்கு ஈடாக எவ்வளவு என்று பார்ப்போம். அதற்கு அவர் அவரது palmtop எடுத்து on செய்வதற்குள் நான் அவரது சைனா காசுக்கு (எட்டால் பெருக்க வேண்டியதிருந்தது - நமக்கு எட்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஜுஜுபியா) டக்குன்னு சொல்லிடுவேன். அவருக்கோ அப்படி ஒரு ஆச்சரியமா இருக்கும். உங்க காசில எவ்வளவு என்பார். அப்போ டாலுருக்கு 48 ரூபாய் என்று நினைக்கிறேன். 50-ஆல் பெருக்கி விட வேண்டியதுதானே; அடுத்த ஜுஜுபி வேலை.ஆனால் நண்பருக்கு பயங்கர ஆச்சரியமா இருக்கும்; இதலாலதான் இந்தியர்கள் software-ல் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பார். அது ஒரு கதை. நம்ம கதைக்கு இப்போ வருவோம். அந்த மாதிரி மால் ஒன்றுக்குள் நுழைந்து கடை கடையாய் சுற்றிக்கிட்டு இருந்தப்போ, ஒரு 45-50 வயது அம்மா ஒருவர் - சேலையில்; காரில் இறங்கி கடைக்குள் வந்தார்; என் மூஞ்சைப் பார்த்ததும் நான் அவர்கள் உடையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டோம். எனக்கு அவர்களைப் பார்த்து ஒரு பிரமிப்பு. இங்க பார்ரா, வெள்ளைக்காரன் ஊரில் நம்ம ஊர் அம்மா...கார்ல வந்து... ஒரு மாதிரியாக மூக்கின் மேல் விரல் வைக்காமல் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அவர்கள் ஒரு ராயல் லுக் விட்டார்கள். ஆனாலும் அப்பப்போ திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். ஏதாவது சிரிச்சி வச்சா பேசலாம்னு நினச்சேன். ஆனால் அம்மணி அப்படி கெத்தாக இருந்துவிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த அமெரிக்கத்தனம்...

சிக்காகோவிலும் இதே போல்தான். சிக்காக்கோவிலிருந்து நம்ம சென்னை எலக்ட்ரிக் ரயில் மாதிரி ஒன்றில் - ஆனால் கூட்டமே கிடையாது - பக்கத்து suburb-க்குச் சென்றேன் இன்னொரு நண்பரோடு. முதல் வார்னிங்காக அவர் சொன்னது - ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருக்கும்போது எந்தக் காரணம் கொண்டும் black என்ற சொல்லை ஆங்கிலத்தில் சொல்லிவிடவேண்ட்டாம் என்றார். அடுத்தது - நம்ம ஊர் ஆளுக யாரும் இருந்தாலும் கண்டுக்க வேண்டாம்; ஏன்னா அவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க என்றார். அதே போல் எங்கள் சீட்டுக்கு சில இடம் தள்ளி நம்ம தமிழ் மூஞ்சி ஒன்று ஆங்கில நாவலைக் கையில் வைத்துக்கொண்டு, சீரியஸாக வாசித்துக் கொண்டு இருந்தது. ஓரக் கண்ணால் பார்த்தேன். அந்தக் கேசு எங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ரெகுலராக ரயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார். நான் தங்கியிருந்த இடத்தில் தமிழில் பேச ஆள் கிடைக்காமல், வாடி வதங்கி இருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. ஒன்றுமில்லையென்றாலும் ஒரு மணி நேரப் பயணத்தில் பேச்சுத் துணையாகக் கூட ஒரு தமிழனை இன்னொரு தமிழன் கண்டு கொள்வதில்லையென்பது விநோதமாயிருந்தது; இருக்கிறது.

இந்த அனுபவத்திற்கு முன் தங்கை ஒருத்தி குடும்பத்தோடு இரண்டு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலிருந்து வந்த போது, எடுத்திருந்த வீடியோ, போட்டோ எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எல்லாம் அவர்கள் கம்பெனியில் இங்கிருந்து சென்று வேலை பார்க்கும் கூட்டத்தைத் தவிர ஒரு ஆள் கூட வேறு மாநிலத்து நண்பர்களாகவோ, அமெரிக்க நண்பர்களாகவோ இல்லாது இருந்ததைப் பார்த்த போதும் மிக்க ஆச்சரியமாக இருந்தது.

இப்போ 20 நாளைக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த சின்ன மகள் அப்பப்போ தொலைபேசியில் பேசுவாளா...அவள் சொன்னது: பார்க்கிலோ, கடைகளிலோ, அவ்வளவு ஏன் கிறித்துவக் கோயில்களிலோ எதிர்த்தாற்போல் அமெரிக்கர்கள் வந்தால் ஒரு ஹலோ, அல்லது ஒரு புன்சிரிப்பு. ஆனால் நம்ம ஊர் ஆட்கள் நம்மை நேருக்கு நேர் - கண்ணோடு கண் - தற்செயலாகப் பார்த்து விட்டாலும் கூட ஒரு ஜடப்பொருளைப் பார்க்கும் reaction-ஓடு கடந்து சென்று விடுகிறார்கள்; ஏன் இப்படி என்றாள். அதுதான் அமெரிக்கத்தனம் என்றுதான் சொல்ல முடிந்தது.

அமெரிக்கக்காரர்களுக்கு ஒரு வேளை பதில் தெரியலாமேவென இங்கே இதைப் பதிவு செய்கிறேன். தருமியல்லவா...அதனால் ஒரு கேள்வி. வழக்கமாக எனக்கு யாரும் மதுரைக்காரர் ஒருவர் பதிவரெனத் தெரிந்தால் ஒரு பாசம்; அட, நெல்லைக்காரர் என்றால் கூட பிறந்த மண் பாசம் பெருக்கெடுக்கிறது. அடுத்த மாநிலத்தில் நம் மாநிலத்தவரைப் பார்க்கும்போதும் ஒரு பாச ஊற்று பொங்கிவிடுகிறது; பொங்கியிருக்கிறது. அப்படியானால் அடுத்த நாட்டில் நம் நாட்டினர் என்றாலே அந்தப் பாசம் வராதா? அதுவும் தமிழ்நாட்டுக்காரன்/ர்/ரி என்று தெரிந்தாலும் எப்படி, ஏன் கண்டுக்காமல் போகி(றீ)றார்களாம்? கண்டுக்கிட்டா அத ஒரு மாதிரி தப்பாதான் எடுத்துக்கொள்கி(றீ)றார்களாமே ஏன்?


.
.

Wednesday, October 25, 2006

184. BLOGGERS' MEET AT MADURAI - 4

பலவும் பேசினோம். ஞான வெட்டியான் தன் பெயர்க்காரணம் பற்றி விளக்கினார். தான் எழுதிவரும் விஷயங்களின் lowdown ஒன்று கொடுத்தார்.பிபுரபுலிங்க லீலை, சித்தர் பாடல்கள் என்று அவர் சொன்னது என் மரமண்டைக்கு ஏறவில்லை. அந்த மாதிரி விஷயங்கள் பற்றி அக்கு வேறு ஆணி வேறு என்று பேசியவருக்கு 'உள்குத்து', 'வெளிக்குத்து', 'நேர்குத்து' போன்ற நம்முடைய bloggers' parlance பற்றி ராம் பாடம் எடுக்கும்படியாயிற்று. கற்றது கைமண் அளவு...! அதையொட்டி,வரவனையானின் ப்ளாக்கர்களுக்கான பங்களிப்பான 'சொ.செ.சூ.' க்காக ஒரு சிறப்பு நன்றி கூறப்பட்டது. வரவனையான் அந்தச் சொற்றொடரை patent / copyright எடுக்க உத்தேசித்திருப்பதாக அறிவித்தார்.

From L to R:





ராம் & ஞானவெட்டியான்



பிரபு ராஜதுரை தான் மரத்தடியில் எழுதிய 'அந்தக் காலத்தில...' நினைவுகளைத் தொகுத்தளித்தார். அவர் சொல்லச் சொல்ல நம் தமிழ் பதிவர்களின் எழுத்திலும், எண்ணங்களிலும் ஏற்பட்டு வரும் பரிணாமம் (is it retrogressive..?) கண்முன் விரிந்தது. தனிமனித சாடல், உள்குத்து வைத்து எழுதுதல், குழு மனப்பான்மை இவை எல்லாம் அப்போது இந்த அளவு இல்லை என்று தெரிந்தது. எனக்கு 'மணிக்கொடி காலம்' என்று பழைய பெரிய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசும்போது சொல்வார்களே அதேபோல இந்த 'மரத்தடி'காலம் என்று ஒன்று வலைப்பதிவுலகத்தில் இருந்ததாகத் தோன்றியது.







முத்து(தமிழினி) & ராஜதுரை



அப்சல் விவகாரம் தலைதூக்கியது. பிரபு ராஜதுரையின் அலசலை அடுத்து நீண்ட விவாதம். நண்பர் சைலஸும் சேர்ந்து தீவிரமாகப் பேசினோம். சைலஸின் 'தீவிரத்தை'ப் பார்த்து அவருக்கு வரவனையான் 'ப்ரொபசர் ரமணா' என்று ஒரு பட்டப் பெயர் வைத்ததாகக் கடைசியில் சொன்னார். முடிவு என்று எடுப்பதற்காகவா நாம் விவாதிப்போம். இப்போதும் அது போலவே, முடிவுக்கு வராத நீள் விவாதமாக நடந்து முடிந்தது.







ராஜ்வனஜ்; ராம் & ஞானவெட்டியான்



அடுத்து, இடப்பங்கீடு பற்றிய விவாதமாக அமைந்தது. நான் அங்கே சொன்னதைப் பொதுவில் வைக்க விரும்புகிறேன். reservation-க்கு ஆதரவாக இருப்பவர்களாவது இனி இட ஒதுக்கீடு என்பதற்குப் பதில் "இடப்பங்கீடு" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டுகிறேன். காரணம் தெரியவேண்டுவோர் அங்கே பார்க்கவும். மறுபடியும் ball was in the court of prabu rajadurai. அடித்து ஆடினார். புதிதாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு முடிந்தபின் அதன் முடிவு பற்றி தன் பதிவொன்றில் விளக்கம் தர இசைந்தார். இடப்பங்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பும், அவர்களது உள்மன எண்ணங்களும், காரணங்களும் பற்றி சிறிதே விவாதித்தோம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்ற ஏற்கெனவே தெரிந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.








லி.ஸ்.வித்யா, ஜிரா & மஹேஷ்


வாங்கி வைத்திருந்த மதுரை மண்ணுக்குரிய பாட்டில் பானமான Bovonto சுற்றில் வர, புத்திசாலித்தனத்தோடு முன்னேற்பாட்டோடு வந்திருந்த மஹேஷ் அதிரசம், முறுக்கு என்று அசத்திவிட்டார். அதிரசம் டாப்! அவ்ளோ soft!

வரவனையான் சுற்றி சுற்றி வந்து எங்களை எல்லாம் க்ளிக்கினார்; நீள் படமும் எடுத்தார் - அதாங்க வீடியோ. அவர் பதிவில் வரும் என்று நினைக்கிறேன். அவரையும், சுகுணாவையும் நான் எடுத்த படம் என்னவாயிற்றென்று தெரியாமல் போச்சு.அவர்கள் இருவரின் படம் வர என் பதிவுகள் கொடுப்பினை இல்லாமல் போச்சு.ஜிரா கூட்டம் ஆரம்பித்து 40-45 நிமிடங்களில் புறப்பட்டு விட்டார். விரைவில் கிளம்புவேன் என்று சொன்ன வித்யா கடைசிவரை இருந்ததே கூட்டம் சென்ற போக்கையும், சிறப்பையும் - it was so binding - உங்களுக்குச் சொல்லாதா என்ன?

ஒரு வழியாக 3 மணிக்குச் சரியாக ஆரம்பித்து 6 மணிக்கு கூட்டத்தை முடித்து, இருந்த இடத்தைவிட்டுக் கிளம்பி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். அங்கிருந்து, ஞானவெட்டியான், வித்யா, ராஜதுரை, ராம், மஹேஷ் விடைபெற்றுச் செல்ல மற்றவர்கள் இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் முத்துவின் 'மேலிடத்திலிருந்து' அவர் அன்றைய மாலை ரயிலில் செல்லவேண்டியதிருப்பது பற்றிய நினைவூட்டலும், இன்ன பிற கட்டளைகளும் வந்ததால் எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டோம். முத்துவை அவர் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, நான்,ராஜ்வனஜ்,வரவனையான், அவரது கவிஞ நண்பர் சுகுணாவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து மீண்டும் ஒரு 'மண்டகப்படி' (இது ஒரு மதுரை வார்த்தை. விளக்கம் கேட்டு பின்னூட்டமிடுபவர்களுக்குப் பதில் விளக்கம் கொடுக்கப்படும்). நிஜ டீ குடித்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் பதிவுகள், பதிவர்கள், பதிவரசியல் எல்லாமுமாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எட்டரை மணிக்கு விடைபெற்றொம்.

நான் கூட்டத்தில் சொல்ல நினைத்து வைத்திருந்ததைச் சொல்லாமலே விட்டு விட்டேன். அது என்னவென்று பொதுவில் வைத்து விடுகிறேனே. உண்மையிலேயே பதிவர்கள் நீங்கள் பலரும் இளைஞர்கள்; நல்ல சிந்தனா சக்தியும், தங்களூக்கென்று ஒரு கருத்தும், அந்தக் கருத்தைத் தாங்க நிரம்ப விஷய ஞானமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதில் வயதில் மட்டும் நம் பதிவுலகத்திலேயே மூத்த எனக்கு நிரம்ப திருப்தி. எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நிம்மதிப் பெருமூச்சு. அதனாலேயே இந்தப் பதிவருலகம் ஒரு think tank ஆக உருவெடுக்க வேண்டும். நம் தமிழ் நாட்டு அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு வழிகாட்டியாக இப்பதிவுலகம் இருக்க வேண்டுமென எனக்கொரு ஆசை. ஆனால், அப்சல் விஷயம் அலசப்படும்போது என் ஆசை நிராசையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் என்று ஒரு கருத்து இருப்பதால் நாம் எல்லோரும் எல்லா விஷயத்திலுமே பலதரப்பட்டக் கருத்துக்களோடுதான் இருப்போம்; ஒருமித்த கருத்து என்பது வருவதறிது என்ற நிஜம் புரிந்தது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி பதிவுலகம் ஒரு think tank ஆக முடியும் என்ற வினா என் மனதில் எழுந்தது. அதனால் அக்கூட்டத்தில் நான் பேச நினைத்ததை பேசாமல் விடுத்தேன்.

உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது?


ஏனைய பதிவர் கூட்ட பதிவுகள்:

*வரவனையானின் பதிவு & வீடியோ: மதுரை...மதுரை.....மதுரோய்ய்ய்ய்ய்

*முத்து(தமிழினி): மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

*ராம் : மதுரை வலைப்பதிவர் சந்திப்பு



.
.

Monday, October 23, 2006

183. BLOGGERS' MEET AT MADURAI - 3

வந்திருந்தோர்:

லிவிங் ஸ்மைல் வித்யா
பிரபு ராஜதுரை
ராம்

முத்து(தமிழினி)
மஹேஷ்

ஞானவெட்டியான்
வரவனையான்
சுகுணா திவாகர்

ராஜ்வனஜ்
ஜீரா

Dr.சைலஸ்

யார் யாரென நீங்களே கொஞ்சம் மனக்கணக்கு போட்டு வையுங்களேன்!



அமெரிக்கன் கல்லூரிக்கு நான் வந்து சேர்வதற்குள் முதல் ஆளாய் முத்து(தமிழினி) வந்து சேர்ந்திருந்தார். வெளியில் மரத்தடி பெஞ்சுகளில் கூட முடிவு செய்திருந்தும், மழை கொஞ்சம் விளையாட்டு காட்டியது - வந்தாலும் வருவேன்; வராமல் போனாலும் போயிருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று அறைச்சாவி ஒன்றும் தயாராக வைத்திருந்தோம். துணிந்து வெளியிலேயே அமரலாம் என்று முடிவு கட்டி முடிப்பதற்குள் ஒவ்வொரு பதிவராக வந்து சேர்ந்தார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னையோ, முத்துவையோ முன்பின் பார்த்திராத பதிவர்களே அதிகம் என்பதால் நாங்கள் வாயிலுக்கு அடுத்தே நின்றாலும், வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே வாயில்காப்போரைத்தாண்டி உள்ளே வந்து, கைத்தொலிபேசியில் அழைப்பார்கள். நான் தொலைபேசியை எடுத்துப் பேசினால் அவர்கள் அனேகமாக எதிர்த்தாற்போல் நிற்பார்கள்.

எங்களுக்கு அடுத்தபடியாக ஞானவெட்டியான் தன் வாடிக்கையான ஐய்யப்பனின் கால் டாக்சியில் வந்து இறங்கினார். முத்துவுக்கு அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடத்திலிருந்து அந்த இடத்தை கலகலப்பாக்கிக் கொண்டு இருந்தார் ஞானவெட்டியான்.

கூட்டம் மாலை 3 மணியென்று குறிப்பிட்டிருந்திருந்தேன்; ஆனால் காலையில் 11 மணிக்கே ஒரு போன் வீட்டுக்கு. பேசியது யாரென்றேன். "பாகு" என்று 'ஒரு சொல்'. அவ்வளவு எளிதில் மொடாக்கு எனக்குப் புரியுமா என்ன? நோட்ஸ் கேட்டேன்; பாகு அப்டிங்கிறதுக்கு ஜீரா அப்படின்னும் சொல்லலாம் என்றது மறுமுனை. பிடிபட்டது. ஆஹா! சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஆள் புதுசா சேருகிறாரென்று நினைத்து, எப்போ வந்தீங்க; மாலையில வந்துருவீங்கல்ல என்று கேட்டதும் மறுமுனைக்குத் தடுமாற்றம். பிறகுதான் தான் தற்செயலாக மதுரை வந்திருப்பதாகவும், பதிவர் கூட்டம் பற்றித் தெரியாது என்றும் சொல்ல, நான் மாலை வந்து விடுங்கள் என்றேன். தலைகாட்டுவேன் என்றார். அதேபோல் 3 மணிக்கு முன்பே ஞானவெட்டியானுக்கு அடுத்து வந்து இறங்கினார் ஜி.ராகவன்.


அடுத்து ஒரு போன். ராஜா என்று ஒரு குரல்; புரியவில்லை. பிறகு ராஜ்வனஜ் என்றதும்தான் புரிந்தது. எனக்கு நேரே நின்று கொண்டுதான் பேசிக்கொண்டிருந்தார். தில்லியில் வேலை செய்யும் இவர், ஓராண்டு கழித்து வீட்டுக்கு இருவார விடுமுறையில் வரும் இவர் அதில் ஒரு நாளை பதிவர் கூட்டத்திற்காக ஒதுக்கி கோவையிலிருந்து வந்தது எனக்கு மிகவும் பிரமிப்பாயிருந்தது. முன்பதிவில் சொன்ன the mystery of that chemistry தான் நினைவுக்கு வருகிறது. அவரை அடுத்து ஒவ்வொருவராக வர, கல்பெஞ்சுகளுக்குப் போய் சேர்ந்தோம்.அங்கே நண்பரும், உடன்வேலை பார்த்தவரும் இப்போது ஒரு விடுதி காப்பாளராகவும் இருக்கும் முனைவர் சைலஸ் எங்களோடு சேர்ந்து கொண்டார். அதைப் போலவே வரவனையானோடு அவரது நண்பர் ;மிதக்கும் வெளி' கவிஞர் சுகுணாவும் வந்திருந்தார்.

Sunday, October 22, 2006

182. BLOGGERS' MEET AT MADURAI - 2

எப்படிங்க இப்படி..? எப்படி நமக்குள் இப்படி ஒரு உறவு? புரியவேயில்லை...The chemistry of our relationship is a mystery.

பின் எப்படி இந்த கீழ்க்கண்ட நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது...நீங்களே சொல்லுங்கள்.

1. 3 மணிக்கு சந்திப்பதாகக் கூறியிருந்தோம். சரியாக 3 மணிக்கு நாங்கள் நால்வர் மட்டுமே சேர்ந்திருந்தோம். அப்போது ஒரு தொலை பேசி அழைப்பு எனக்கு. அடுத்த முனையிலிருந்து - சென்னையிலிருந்து சிவஞானம்ஜி. எங்கள் கூட்டம் இனிது நடந்தேற வாழ்த்துக்கள் கூறினார். the mysterious chemistry?!

2. 8 பேர் வந்துவிட கல்பெஞ்சுகளில் போய் உட்காருகிறோம்... அடுத்த அழைப்பு முத்து(தமிழினி)யின் கைத்தொலைபேசிக்கு. அழைத்தவர் ஓகை. முத்துவிடம் மட்டும் பேசாது, முத்துவின் தொலைபேசி வலம் வர, வந்துள்ள ஓவ்வொருவரிடமும் சில நிமிடங்கள் பேசி வாழ்த்து கூறி விடை பெற்றார் ஓகை
- the mysterious chemistry?!

3. நாங்கள் மொத்தம் 10 பதிவர்கள் சேர்ந்து கூட்டம் களை கட்டுகிறது... இன்னொரு overseas call..from Australia..பொட்டீக்கடையிடமிருந்து வரவனையானுக்கு . நானும் அவரிடம் பேசுகிறேன். வரலாறு படம் பார்த்துக்கொண்டே இந்த அழைப்பைக் கொடுத்து எங்கள் கூட்டத்திற்கு வாழ்த்து கூறுகிறார். - the mysterious chemistry works again ?!

4. இதுவரை எனக்கு மட்டுமே வெகு சில பின்னூட்டங்கள் இட்டுள்ள non-பதிவர் நாராயணசாமி என்னும் சின்னக் கடப்பரை சென்னையிலிருந்து என்னை அழைக்கிறார் - மதுரையில் இருந்திருந்தால் எப்படி தானும் கலந்து கொண்டிருக்க முடியும் என்று சொல்லி வாழ்த்து சொல்லுகிறார் - the mysterious chemistry works again and agian ?!



ஒரு பின்குறிப்பு:
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!

Saturday, October 21, 2006

181. MADURAI BLOGGERS' MEET - INVITATION

அன்புடையீர்,

தயவு செய்து இந்த belated அழைப்பிற்காக மன்னித்து தவறாது

நாளை 22.10.06 ஞாயிற்றுக் கிழமையன்று

மாலை 3 மணிக்கு

மதுரை அமெரிக்கன் கல்லூரி - canteen முன்னாலுள்ள கல்பெஞ்சுகளுக்கு


வந்துவிடுங்கள்.

மேலும் என்னையோ, முத்து(தமிழினி)யையோ தொலைபேசியில் அழைக்க:

என் எண்: 94438 31320
முத்து எண்: 98459 83065

Monday, October 16, 2006

180. (கொஞ்சம்) நேரடியாக ஒரு ELECTION REPORT***

நேற்று எங்கள் ஊர் மதுரையில் மாநகராட்சி ஓட்டுப் பதிவு. துணைவியாருக்கு PO1 பொறுப்பு ஒரு பூத்தில். கொஞ்சம் பதட்டத்தோடுதான் எல்லோருமே இருந்தார்கள் - சென்னை பற்றிய சேதி பரவியிருந்ததால். மதியம் உணவுக்கு ஏற்பாடு செய்யப் போகும்போதே பக்கத்து பூத்தில்தால் பிரச்சனை; எங்கள் பூத்தில் பிரச்சனையேதும் இதுவரை இல்லை என்றார்கள். மாலை கூப்பிடச் சென்றால் பூத் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு தேர்தல் தளவாடங்களோடு தளவாடங்களாக மக்களும் பூத்துக்குள் பத்திரமாக வைக்கப்பட்ட்டிருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் 'ரிலீசா'னார்கள். அதன்பின் அருகாமையிலிலிருந்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு இரண்டரை மணி நேரம், செய்த வேலைக்குரிய பணப் பட்டுவாடாவிற்காகத் தேவுடு காக்க வேண்டியதாப் போச்சு. அவர்களோடு நானும் அந்த அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்த ஏரியாவிலுள்ள 20 பூத்துகளில் தேர்தல் வேலை செய்தவர்கள் யாவரும் குழுமினர்.

பலரிடமும் பகல் நேரத்தில் நடந்தவைகளின் தாக்கம் என்னவோ குறையாமலிருந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் தப்பிப் பிழைத்தது பற்றியும், தங்கள் பூத்துகளில் நடந்தவை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் துணைவியார் இருந்த பூத்தில் - பெண்களுக்கான பூத் என்பதலா என்னவோ - கலாட்டா கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கும் போலும். நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து 'இப்போ ஒரு 25 பேர் வருவாங்க; எந்த கேள்வியுமில்லாமல் ஓட்டுப் போட விடுங்க 'என்ற ஒரு தெளிவான உத்தரவு தேர்தல் ஆபிசருக்கு. அந்தக் கட்டளை நல்லபடியாக நிறைவேற்றணுமே; அதுக்காக மட்டும் அங்கிருந்த நாற்காலி, மேசை எல்லாவற்றையும் கொஞ்சம் போல் உதைத்து, தள்ளி விட்டு, அடையாள மை வைத்திருந்தவரிடமிருந்து மையைக் கீழே தட்டிவிட்டு அவருக்குக் கொஞ்சம் போல அந்த மையால் அபிஷேகம் பண்ணிவிட்டுப் போனார்களாம். இதில் PO4 PO5 இருவரும் பெண்கள். முதல்வர் இவ்வளவு கலாட்டாவிலும் ஓட்டளிக்கக் கொடுக்கப்பட்டிருந்த முத்திரையைப் பாதுகாப்பாக முந்தானைக்குள் எடுத்து வைத்துக் கொள்ள, அடுத்தவரோ இந்தக் களேபர நேரத்திலும் வாக்குப் பெட்டியை அணைத்துப் பாதுகாத்தார்களாம். என் துணைவியாரிடம் 'உனக்கு என்னவாயிற்று' என்று கேட்டேன். 'என்னமோ, என்னைப் பார்த்து என்ன பரிதாபமோ, என் மேசையை தட்டி விடவில்லை; நானும் உட்கார்ந்த இடத்திலே ஆணி அடித்ததுமாதிரி இருந்திட்டேன்; பத்து நிமிஷம்னாலும் வேர்த்து விறு விறுத்துப் போச்சு' என்றார்கள். அதைச் சொல்லும்போதுவரையும் கூட அந்த ஆசுவாசம் நீடித்தது; தணிய இன்னொரு மணி நேரம் ஆச்சு.

ஏறக்குறைய அங்கு குழுமியிருந்தவர்கள் பலரும் ஆசிரியர்களே; அதுவும் இரண்டே இரண்டு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஆகவே, இப்படி காத்திருந்த போதும் எல்லோரும் ஒருவரை ஒருவர் 'நலம்' விசாரிக்கவும், பகலில் நடந்தது பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பூத்தில் PO மட்டும் - அவர் ஒரு தலைமைஆசிரியர் - ஆண்; மற்றவர்கள் அனைவரும் பெண்கள். அவர் கதைதான் இருப்பதில் பயங்கரமா இருந்தது.ஒரு பெரிய கூட்டம் உள்ளே நுழைய, எல்லா பெண் தேர்தல் ஊழியர்களும் அவருக்குப் பின்னால் பதுங்க, வந்த கூட்டத்தில் ஒருவன் அவர் கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள 50 ஓட்டுகள் போல அந்தக் கூட்டம் போட்டுவிட்டுச் சென்றதாம். இன்னொருவர் பூத்தில் கத்தியெல்லாம் ஒன்றுமில்லையாம்...! ஆனால் உள்ளே நுழைந்து அதே வேகத்தில் பூத்தில் இருந்த இரண்டு குழல் விளக்குகளை உடைக்க, அதன் சத்தமும்,தெறித்த கண்ணாடி தலையில் விழவும்...அதற்கு மேல் கூட்டத்தின் அராஜகம்தானாம்.

இந்த பூத்துகள் இருந்த தொகுதியின் தி.மு.க. ஒரு பெண் உறுப்பினர்; இம்முறை மதுரைக்குப் பெண் மேயர் என்பதால், இந்த வேட்பாளர் வென்றால் அவர்தான் எங்கள் "வணக்கத்துக்குரிய மேயராக" ஆகும் வாய்ப்புள்ளதாலேயே இப்பகுதியில் இந்த அளவு வன்முறை என்றார்கள். அதோடு இந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வின் போட்டி வேட்பாளராக இன்னொருவர் - கட்சி வேட்பாளரை விடவும் கட்சித் தொண்டர்களிடம் நல்ல பெயர் பெற்றவர் - போட்டியிட்டதும் இன்னொரு காரணமாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் 'கதை' சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு post-election commotion நடந்தது. எல்லாம் அந்தப் பெண் வேட்பாளரும் அவரது தொண்டர்கள் செய்யும் கலாட்டா என்று சேதி வந்தது.

இந்த அனுபவ பகிர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு பூத்தில் இருந்தவர்களும் சொன்ன ஒரு சேதி ஒரே மாதிரியாகவே இருந்தது: எல்லா பூத்துகளிலும் இந்தக் கலாட்டாக்கள் நடந்தேறும்போது, போலீஸ்காரர்கள் "பத்திரமாக" வெளியில் சென்று நின்று கொண்டார்களாம்.

சென்றைய ஆட்சியில் அரசு ஊழியர்களை - ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சுவர் ஏறிக்குதித்து உயிருக்குப் பயந்து ஓடிய அரசுப் பணியாளர்களைக் கூட - இதே போலீஸ் ஓடஓட விரட்டியக் காட்சிகளைக் கண்டது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. நம் காவல் துறையினரை வாட்டுவது என்ன? - a sick psychology and lousy philosophy?

முதல் நாள் பயமும்,பதட்டமும் முழுசாக விலகி, அடுத்த நாள் என் துணைவியார் என்னிடம் சொன்னது: 'நல்ல adventureதான், இல்ல? அந்தக் காலத்திலன்னு... பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லலாம்'. அதோடு இன்னும் அடுத்த தேர்தல் வருவதற்குள் ஓய்வு பெற்றுவிடலாமென - இன்னுமொரு ஆண்டுதானே - சொன்னார்கள். ஆனால் எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை; நடக்கிற நடப்பில அடுத்த தேர்தல் எப்போ வேண்ணாலும் வரலாமோ என்னவோ?!


*
*** இப்பதிவு 30.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (3)

*

Monday, October 09, 2006

179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***

நானும் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் நட்பு நிறைந்த பதிவர்கள் சிலரும் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் படித்ததும் என் பொறுமை எல்லை மீறியது. நாமும் ஜோதியில் கலந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் களத்தில் இறங்கி விட்டேன்.

எல்லாம் அப்சல் விஷயம்தான். பதிவர்கள் பலரின் மனித நேயம் இப்போதுதான் இந்த அளவு பீறிட்டு வருவதைப் பார்க்கிறேன். ஒருவனுக்கு மரண தண்டனை என்றதும் எவ்வளவு பச்சாதாபத்துடன் பரிந்து பரிந்து வரிந்து கட்டிக் கொண்டு பதிவர்கள் வரிசை கட்டி வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது ....

சரி, இவ்வள்வு பச்சாதாபத்தோடு வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இதுவரை இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதற்கு முன்பு வங்காளத்தில் கற்பழிப்புக் குற்றத்திற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்ததும் அரற்றிய கூட்டம்தானே இது. அப்போது கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடிய பாட்டை இப்போது இன்னும் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் அரற்றுகிறார்கள். நடுவில் ஏன் பாட்டை நிப்பாட்டியிருந்தார்களோ தெரியவில்லை. நிப்பாட்டாது தொடர்ந்து அந்தப் பாட்டை நடுவிலும் பாடிக்கொண்டிய்ருந்தாலாவது அவர்கள் பாட்டில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். அதையெல்லாம விட்டு விட்டு அந்தரத்தில் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது மிக முக்கியமான ஒரு மனித ஜீவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது நம் முன் உள்ள விஷயம் என்ன? நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன்? இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்?

இப்போதைக்கு நம் கண்முன்னால் நிற்பது அப்சலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையுமே. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics. ஒவ்வொருவரின் ஜீன்களின் பட்டியல் போட்டு aggression-க்கு உரிய gene இவனுக்கு இருப்பதால்தான் இப்படி செய்தான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்; அவன் ஜீன் அப்படி; ஆகவே அவனைக்கு எந்த தண்டனையும் விதிக்கக்கூடாது என்றுகூட விவாதிக்கலாம். சமூகமே அவனை இக்குற்றம் செய்யத் தூண்டியது. நாம்தான் அவன் குற்றங்களூக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லலாம். சீரியல் கொலைகாரனைக்கூட அவன் ஜீன்கள் செய்த வேலையென்று அவனை விட்டு விடலாமா? ஜீன்கள் வேண்டாமென்றால், இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பின்னால் நடக்கக்கூடியவைகள் என்று ஒரு பட்டியலும் பல பதிவர்கள் கொடுத்துள்ளார்கள். அவனைக் கொன்றால் அவன் சாவுக்குப் பிறகு அவன் ஒரு தியாகியாகக் கருதப்பட்டு மேலும் பலரும் அவன் வழியில் செல்லக்கூடும் என்றொரு வாதம். உண்மைதான். இது வெட்ட வெட்ட வளரும் ஹைட்ரா தான். பெருமளவில் இதை எதிர் கொள்ள நம் அரசு இதுவரை முயலவில்லை. அடுத்து, ஒரு குற்றவாளியைத் திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டுமாம்.அடித்துப் பிடித்து விளையாடும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். திட்டமிட்டு இது போன்ற வன்செயல்களில் இறங்குவோருக்கு இது ஏற்றதல்ல. அவர்களைக் கொன்றாலும் தீமைதான்; உயிரோடு சிறைக்குள் வைத்திருந்தாலும் தீமைதான். இதில் முதலாவதைச் செய்தால் கொஞ்சம் கூட நன்மை; வசதி. இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் இன்னும் பலர் அந்த ஒருவனுக்காக உயிரை இழக்கவேண்டி வரும்.

நீதிபதிகளின் தீர்ப்பில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களை வைத்தும் ஒரு விவாதம். பழிவாங்குதலுக்காக தண்டனை இருக்கக்கூடாது; திருத்தும் நோக்கோடு தண்டனை தரப்பட வேண்டுமாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா? இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள்? அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா?

விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில் ஒப்புதல் வாக்குமூலம் தருவதும், பின் அதை மறுதலிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. அவன் இக்குற்றத்தில் தொடர்புள்ளவன் என்பதற்கு நான் வாசித்த வரை சான்றுகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று கோர்ட்டுகள் அவனைக் குற்றவாளியாகவே முடிவெடுத்துள்ளன.

அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். அந்தப் பதிவாளர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன். நிச்சயம் உங்களில் பலரை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனாலும் ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.

கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதுவும் தினமலரில் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது ஆச்சரியமே. சரி, நம் பதிவாளர்களில் நாம் உண்மையான அறிவு ஜீவி என்று நினைக்கும் ஒருவர் தடாலென்று பொதுப்புத்திக்காரராக மாறிவிடுகிறாரல்லவா, அது போல இருக்கும். இதோ அந்தப் பின்னூட்டம்; அப்சலை தூக்கிலிட வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய ஒரு செய்தி இது:

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html


இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------


கீழே இந்த விஷயம் தொடர்பாக நான் வாசித்த சில பதிவுகளும், அவைகளில் நானிட்ட அல்லது பின்னூட்டமிட நினைத்த பின்னூட்டங்களும்:

kumaran ennam
http://kathalregai.blogspot.com/2006/10/blog-post_07.html

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக//

இதில் என்ன 'வெற்றி/ தோல்வி'. செய்த செயலுக்குக் கொடுக்கப்படும் தண்டனை; அவ்வளவே.
---------------

muthu thamizini
http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

திருத்தமாக எழுதவில்லைபோல் தெரிகிறதே!

---------------------
selvan
http://holyox.blogspot.com/2006/10/184.html

முழுமையாக நான் ஆமோதித்த பதிவு

------------------------
சமுத்ரா -
http://vettri.blogspot.com/2006/10/blog-post_05.html

ஆர்பாட்டங்களில் மிஞ்சி போனால் ஐநூறு கஷ்மீரிகள் கலந்து
கொண்டு 'போராடி' இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் தான்.//
=====================

meena
http://www.tamiloviam.com/unicode/09280601.asp
தூக்கில் போடுங்கள் அப்சலை

=============
நல்லடியார்
http://athusari.blogspot.com/2006/10/blog-post_07.html

முதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்.
அவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்
==========
ரோசா வசந்த்
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//

உங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:

மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
=====================

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.
so sad. never expected such a post from you.
i strongly suggest that you remove this post.


=====================

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_06.html

ஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம்.
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

//தேவை//
======================

http://ravisrinivas.blogspot.com/2006/10/blog-post.html
மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.

i fully endorse this view.
========================
prapuraajadurai
http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_07.html
தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன்
இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!//

உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

if my views on this is to be known, no other case could be more appropriate than this to have the culprit hanged.

=========================
சிறில்
http://theyn.blogspot.com/2006/10/blog-post_116017075313200990.html
===================

http://abumuhai.blogspot.com/

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!
===========================


http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html
திருத்தமாக எழுதவில்லை
=============================

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! //

ஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....?

=================

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post.html
அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!
=================

http://selvanayaki.blogspot.com/2006/10/blog-post_09.html


================
http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_09.html

அந்த தளம் இப்போது தேவைதானா என்பது என் கேள்வி.
================



***இப்பதிவு 16.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (2)


*

Thursday, October 05, 2006

178. இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் !

ஆபிரஹாமிய மதங்களின்படி இந்த அண்டம் அனைத்தும் ஆறு நாட்களில் கடவுளால் படைக்கப்பட்டதாகவும், ஆறாவது நாளில் ஆதாமும் அவனின் விலா எலும்பிலிருந்து (இன்னொரு ஆணாதிக்கக் கருத்து..?) ஏவாளும் படைக்கப்பட்டாள் என்பதும் அவர்களின் நம்பிக்கையாகவுள்ளது. இதை "இன்னுமா நம்புகிறார்கள்?" என்று மிக ஆச்சரியத்துடன் பதிவர் எழில் ஒரு கேள்வி கேட்டு ஒரு பதிவும் இட்டுள்ளார். அவரது ஆச்சரியத்தைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். :) இதற்குப் பதில் சொல்லும் முகமாக அபு முஹை ஒரு பதில் பதிவிட்டுள்ளார். ஆகவே இந்தப் பதிவை "இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் ! " என்ற தலைப்பில் அங்கு கூறப்பட்டவைகளை வைத்து எழுத நினைக்கிறேன்.

லமார்க் சொன்ன use and disuse, inheritance of acquired characters என்ற தியரிகள் தோற்று விட்டன; தவறென நிரூபணமாகி நாளாகிவிட்டது. இன்னும் பல பாட நூல் ஆசிரியர்கள் மட்டும் 'பழைய நினைப்பில்' பரிணாமம் பற்றிய நூல்களில் இவருக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்து வருகிறார்கள்; அவ்வளவே.

அதே போல, டார்வின் சொன்ன பல hypotheses குறையுள்ளவை என்றும் நிரூபித்தாகி விட்டாயிற்று. உதாரணமாக, அவர் வெறுமே factors என்று மொட்டையாகச் சொன்ன விஷயம் பின்னால் ஜீன்கள் என ஆயிற்று; அவர் உயிரினங்கள் மாறக்கூடியவை என்று சொல்லிச் சென்றார்; பின்னால் mutation, அதன் விளைவுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் அவர் காலத்தில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத பல விஷயங்களையும் சேர்த்து, புதிய பரிணாமக் கொள்கையை பலரின் முயற்சிகளால் உருவாக்கி அதனை இப்போது Modern synthesis of Evolution' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

படைக்கப்பட்டதாகவும், எப்போதும் அதே படைக்கப்பட்ட நிலையில் இருந்துவருவதாகக் கருதப்பட்டு வந்த உயிரினங்கள் அவ்வாறின்றி மாறக்கூடியவை என்ற டார்வினின் முதல் கருத்தே இன்றுவரை பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்து வருகிறது. அதைத் தவிர மற்ற அவரது கருத்துக்கள் பின்னால் மறு உருவெடுத்தன. எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் survivial of the fittest என்பதுகூட பின்னாளில் மறுக்கப்பட்டு, மாற்றப் பட்டது.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நாம் கூறுவதும் எளிய புரிதலுக்காகச் சொல்லப்பட்ட ஒரு விஷயம். ஏதோ, நேற்று குரங்காக மரங்களில் ஊசலாடிக்கொண்டிருந்தது இன்று மாறி மனிதனாக நடமாடிக்கொண்டிருக்கிறான் என்றோ, குரங்கு போட்ட குட்டி மனிதக் குழந்தையாக இருந்தது போன்றோ மனப் பிம்பங்களை யாரேனும் ஏற்படுத்திக் கொண்டால் அது அவர்களின் தவறேயன்றி, பரிணாமக் கொள்கையின் தவறோ, குறைபாடோ இல்லை.

evolution என்ற சொல்லுக்கே blossoming என்பது பொருள். மாலையில் பார்க்கும் மொட்டு காலையில் பூவாக மலர்கிறது. மெல்ல மெல்ல இதழ் அவிழும் அந்த 'பூத்தலை'ப் போலவே உயிரினப் பரிமாணமும் மிக மிக மெல்ல - for millions of years - நடக்கும் ஒரு நிகழ்வு. இதில் ஆராய்ச்சிக் கூடத்தில் நடத்திக்காட்டக் கூடிய விஞ்ஞான சோதனைகளைப் போல என் கண்ணுக்கு முன்னால் செய்து காட்டு என்றால் அது கேட்பவர்களின் மன நிலையைத்தான் காண்பிக்கும்.

அதோடு, இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்ற நிலைதான் இருக்கிறதே என்பது பல விஞ்ஞான உண்மைகளைப் பொருத்தவரை முழு உண்மையே. பரிணாமம் மட்டுமல்ல பல விஞ்ஞான உண்மைகள் 'சாத்தியக் கூறுகளாகத்தான்' உள்ளன. அவைகள் மேலும் மேலும் புதிய பரிமாணங்களோடு வளரவும் செய்யலாம்; அல்லது தவறென நிரூபிக்கப்படவும் செய்யப்படலாம். அதுதான் விஞ்ஞானம். விஞ்ஞானம் எந்த ஒரு கண்டுபிடிப்பையுமே அறுதியாகச் சொல்லாது, வளர்ச்சி வேண்டி ஒரு கேள்விக்குறியுடனே முடிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள் அந்த கேள்விக் குறிகளுக்குப் பதில் கண்டு அடுத்த கேள்விக்குறியை நோக்கி நம் அறிவை முன்னெடுத்துச் செல்கின்றன. அண்டத்தின் பிறப்பு பற்றிய புதுப் புது கருத்துக்களும் வளர்ச்சிகளும் இதற்கு இன்னொரு உதாரணம். ஆனால், மத நம்பிக்கைகளோ இதற்கு நேர் எதிர்மறை. முன்னதில் கேள்விக் குறி முக்கியமென்றால் இங்கே 'முற்றுப் புள்ளிகள்'தான் உண்டு. மாற்றங்கள் முன்னதில் முக்கியமென்றால், மற்றதில் மாற்றமே இல்லை என்பதில் தான் அதன் சிறப்பு. கேள்விகள் கேட்டுக்கொண்டே இரு என்கிறது விஞ்ஞானம்; கேள்விகள் கேட்டாலே blashphemy என்கிறது வேதங்கள். இன்றைய உண்மைகள் நாளைக்கு மாறலாம்; இன்னும் சிறப்பான, சரியான பதில்கள் மனிதனுக்குக் கிடைக்கும் என்கிறது விஞ்ஞானம்; இல்லையில்லை.. "அந்த உண்மைகள்" எக்காலத்துக்கும் உரியது; எப்போதைக்கும் சரியானது என்கின்றன வேதங்கள். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு சாரார் கண்ணை இறுக மூடிக் கொள்வதுதான்.

fossils, connecting links, carbon dating, extinction of living things, mutations causing changes in species, genes and their role; mutations and their role in evolution - இவைகளெல்லாமே நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான உண்மைகள். இவைகளை வைத்தே பரிணாமக் கொள்கை விளக்கங்கள் concepts-களாக தரப் படுகின்றன. இவைகளைப் பற்றிய தேடுதல், புரிதல் ஏதுமின்றி தங்கள் மதம் சொல்வதால் அதை மட்டுமே கண்டுகொள்ளும் நிலைப்பாடு இருப்பின், அவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதே உண்மை. இவைகள் வெறும் concepts தானே என்றும், இத்தனை ஆராய்ச்சிகளுக்குப் பின்னும் இன்னும் 'இப்படி இருக்கலாம்' அல்லது 'அப்படி இருக்க சாத்தியம் இருக்கிறது' என்றுதானே சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி:
எவ்வளவோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பும் -
எந்தக் குரங்கிலிருந்து எந்த மனிதக் குழந்தை பிறக்கக் கண்டீர்கள்; 'உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது?'; அதைப் பார்த்தவர் யார்; குரங்கிலிருந்து மனிதன் வந்தானெனில் எதிலிருந்து குரங்கு வந்தது? பரிணாமக் கொள்கைகள் வெறும் தியரிதான் நிரூபிக்கப்பட்ட உண்மையில்லை; மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது?; - என்பது போன்ற கேள்விகள் வருகின்றன. தவறில்லை. ஆனால், இதற்கு மாற்றாக கேள்வியெழுப்புவர்கள் தரும் விடையென்ன?

மனிதன் களிமண்ணிலிருந்து (பைபிள்) / ரத்தத்திலிருந்து (குரான்?) கடவுளால் உண்டாக்கப்பட்டான் என்பதுதானே. இதற்கு என்ன ஆதாரம். உங்கள் வேத நூல்கள்தானே. விசுவாசம் / ஈமான் கொண்டவர்களுக்கு அந்த வேத / தேவ வார்த்தைகள் உண்மை. மற்றவர்களுக்கு...? அவர்களுக்கு நீங்கள் தரும் ஆதாரம் என்ன? வெறுமே அது ஆவியால் தரப்பட்டது என்பதோ, இறக்கப்பட்டதாக ஒருவர் சொன்னது என்பதாலோ உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள். மத மறுப்பாளனாகிய எனக்கு விஞ்ஞானம் தரும் உண்மைகளும், சான்றுகளும் ஆதாரங்கள் என்றால், உங்களிடம் (என்னையும் நம்ப வைக்க) என்ன ஆதாரங்கள்? பிறப்பால், வளர்ப்பால் ஊட்டிவிடப்பட்ட விஷயங்களை முழுமையாக நீங்கள் நம்பலாம். உங்கள் வேத புத்தகங்களின் வார்த்தைகள் உங்களுக்குக் கடவுளின் வார்த்தைகளாகவே இருக்கலாம்; இருக்கட்டும். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாத போது நீங்கள் தரும் மேற்கோள்கள் எங்களுக்குப் பொருளற்றவையே. மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டான் என்று சொன்னால் நம்பிக்கையாளர்கள் அப்படியே ஒப்புகொள்கிறீர்கள்; ஆனால், நீங்கள் பரிணாமத்திற்குரிய சான்றுகளைக் கண்முன்காண்பி என்று சொல்வது போல நானும் மனிதன் களி மண்ணிலிருந்து படைக்கப் பட்டதற்கு என்ன சான்று என்று கேட்கலாமல்லவா? கேட்டால் உங்கள் பதிலென்ன? "வார்த்தைகள்" சான்றுகளாகாது.

இதையே கிறித்துவத்தின் மேல் உள்ள கேள்விகளாக எனது முந்திய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். படைத்தலைப் பொருத்தவரை கிறித்துவ, இஸ்லாமிய நம்பிக்கைகள் ஏறத்தாழ ஒன்றாயிருப்பதால் எனது கேள்விகளும் இரண்டு மதங்களுக்கும் பொதுவானதாக இருக்குமென்பதால் அப் பதிவில் படைத்தலைப் பொருத்தவரை நான் எழுப்பியிருந்த ஐந்தாவது கேள்வியை மட்டும் மீண்டும் இங்கே தந்துள்ளேன். கொள்க:

5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஏதோ ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு ஒரு kid stuff போலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.

The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.

7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.

"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180


*

* * இப்பதிவு 09 அக். 2006 பூங்காவில் இடம் பெற்றது. (1)